9. சத்திரியனா? சாணக்கியனா?

5
(25)

அத்தியாயம் 9

 

அங்கே சத்தம் போட்டு கொண்டு நின்று இருந்தது என்னவோ தேவநாதன் தான்.

அவரின் மருத்துவமனைகள் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக சென்னை சிட்டியின் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று.

ஆனால் வாகினி இந்த மருத்துவமனையை துவங்கி இரண்டரை வருடங்கள் தான் ஆகி இருக்கும். ஆனாலும் அவளின் மருத்துவமனை புகழ் பெற்று அவரின் மருத்துவமனைக்கே போட்டியாக வந்து விட்டது.

அதை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

மறைமுகமாக வாகினிக்கு மிரட்டல் விடுத்து பார்த்தார், ஆனால் அதை எல்லாம் அவள் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. இதை அவள் பெரிதாகவும் எடுத்து கொள்ள வில்லை.

விக்ரம், பார்த்தீவ், பிரணவ் யாரிடமும் சொல்லவும் இல்லை.

சொல்லிருந்தால் அவர் இருந்து இருக்க மாட்டாரே!

ஆனால் இன்று தேவநாதன் நேரிலே வருவார் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அதை விட இன்று விக்ரமும் விஜயும் சேர்ந்து வருவார்கள் என்றும் அவளுக்கும் தெரியாது அல்லவா!

தேவநாதனின் கெட்ட நாள் போல இன்று இப்படி இருவேங்கைகளிடமும் மாட்டி சாக போகிறார் என்று அவருக்கு தெரியவில்லை பாவம்.

“எங்க டா உங்க ஹாஸ்பிடல் எம்டி ஒரு பொம்பளைக்கு எவளோ நெஞ்சழுத்தம் இருக்கனும் என் ஹாஸ்பிடல்க்கு அவ டாப் கொடுக்குறா? கூப்பிடு டா அவள! யாரை கேட்டு அவ சர்ஜரிக்குலாம் அவளோ கம்மி விலை பிக்ஸ் பண்ரா?”, என்று கத்தி கூப்பாடு போட்டு கொண்டு இருக்கும் போது தான் அவர்கள் ஐவரும் வெளியே வந்து விட்டனர்.

வாகினியோ போக முற்பட, அவளின் கையை பிடித்து இருந்தது ஒரு கரம்.

விஜய் தான் பிடித்து இருந்தான்.

அவளோ அவனை பார்த்து, “விடு நான் போய் பேசுறேன்”, என்றவுடன், “நாங்க பேசிக்குறோம்”, என்று விக்ரமும் விஜயும் ஒருசேர கூறி கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

“இரண்டு பேரும் சேர்ந்துலாம் ஏதாச்சு செய்வாங்களா என்ன?’, என்று மைத்திரி வர்ஷாவின் காதுகளில் ரகசியமாக வினவ, “அக்காக்கு ஒன்னுனா மட்டும் கொஞ்சமே கொஞ்சம்”, என்று அவளுக்கு பதில் அளித்து இருந்தாள்.

தேவநாதன் கத்திக்கொண்டு இருக்கையில், “உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?”, என்று விக்ரம் அவரின் முன் வந்து நிற்கவும், “யாரு டா நீ?”, என்று கேட்டவரை பார்த்து, “கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே”, என்று விஜய் சொல்லவும், “என்ன டா நீங்க இரண்டு பேரு தான் அவளுக்கு பாடி கார்ட்ஸா? அது மட்டும் தானா இல்ல உங்கள வச்சி இருக்காளா?”, என்று கேட்டு முடிக்கும் முதல் அவரின் செவிப்பறை கிழிந்து இருந்தது விஜய் விட்ட அறையில்!

அது என்னவோ ஆண்களுக்கு பெண்களை மட்டம் தட்ட வேண்டும் என்றால் அவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் அவர்களின் ஒழுக்கத்தை பற்றி குறை கூறுவது தான்.

அதே போல் ஒரு பெண் எப்போதும் அவர்களுக்கு சரிசமாக வந்து விட்டால் இன்னும் மோசம், படுக்கையை பகிர்ந்து இருப்பாள் என்று வெட்கமே இல்லாமல் எப்படி தான் பேச முடிகிறதோ!

ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இருப்பதும் இல்லை அல்லவா, ஆதலால் தானே வாகினியால் இவ்வளவு தூரம் வர முடிந்தது.

அவளின் தந்தை, தமையன்கள், கணவன் என்று அவளுடன் என்றும் துணையாய் இருக்கும் ஆண்கள் பட்டாளமும் உள்ளது தானே!

தேவநாதனுக்கோ தலையே சுற்றி விட்டது.

அவர் சமநிலைக்கு வந்து அவர் விஜயின் கோளறை பிடிக்க வரும்முன் அவரை எட்டி உதைத்து இருந்தான் விக்ரம்.

அவரோ இரண்டடி பின்னே சென்று விழ, அவருடன் வந்த கையாள்களும் அவர்களை அடிக்க வர, ஒரே போர்க்களம் ஆகி போனது.

இதே சமயம் தேவநாதனோ வாகினியை நெருங்க முற்பட்டார். விஜயும் விக்ரமும் விட்டால் தானே!

இருவரும் மாறி மாறி அவர்களை அடிக்க, அவர் கூட்டிக்கொண்டு வந்த ஒருவனோ, வாகினியை நெருங்கி விட, விஜயோ அவளின் கையை பிடித்து இழுக்க, அவனோ வந்த வேகத்தில் வர்ஷாவின் கையை இழுத்து அவளது கழுத்தில் கத்தி வைத்து இருந்தான்.

அரண்டு விட்டார்கள் அனைவரும்.

மைத்திரியும் கூட, “வர்ஷா”, என்று கத்த, அதற்குள் அவளின் கழுத்தில் கத்தியை வைத்தவன், “இவ கழுத்த அறுத்தருவேன்”, என்று மிரட்ட துவங்க, இதயமே ஒரு நொடி நின்று விட்டது.

தேவநாதனோ, “சபாஷ், டாக்டர் வாகினி இப்போ நீ இந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ணலைனா அந்த பாப்பா கதையை முடிச்சிருவோம்”, என்று சொல்லவும், “வேண்டா அக்கா சைன் பண்ணாதீங்க”, என்று கத்தி இருந்தாள் வர்ஷா.

“இப்போ நீ சைன் பண்ணனும், இந்த மருத்துவமனை இதோட எனக்கு சொந்தம்னு நீ எழுதி தரணும்”, என்று சொல்லவும், “சைன் பண்ணாதீங்க அக்..”, என்று நிறுத்தி இருந்தான் விஜய்.

“நம்ப ஏன் இன்னோரு விளையாட்டு விளையாட கூடாது… பாப்பா ரொம்ப அழகா வேற இருக்கா… நீ வேணா அவளுக்கு முத்தம் கொடு டா”, என்று தேவநாதன் சொல்லவும், விக்ரம் ஓங்கி அவரின் கன்னத்தில் விட்டு இருந்தான்.

“சாவடிச்சிருவேன்”, என்று அவன் பற்களை கடித்து கொண்டு சொல்லவும், “நீ முத்தம் கொடு டா”, என்று சொன்னதும் அந்த கயவன் வர்ஷாவை நெருங்க, “சைன் பண்றேன்”, என்று வந்து இருந்தது வாகினியின் குரல்.

வர்ஷாவின் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது.

வாகினி அருகில் வந்து அந்த பத்திரங்களை வாங்க, அவளின் கண்களோ வர்ஷாவை தான் பார்த்து கொண்டு இருந்தது.

அவள் பேனாவை வாங்கிய சமயம், துப்பாக்கி சுடும் சத்தத்தில் அப்படியே பேனாவை தவற விட்டு இருந்தாள்.

“அம்மா”, என்று வர்ஷாவை பிடித்து இருந்தவனை சுட்டு இருந்தது வேறு யாரும் அல்ல, பிரணவ் தான்.

காக்கி உடையில் போலிஸிற்கே உரிய கம்பீரத்தில் சிங்கமாக நின்று இருந்தான்.

“ட்ரோப் யுவர் வெப்பன்ஸ்”, என்று அவன் சொல்லவும், அனைவரும் அவனை பார்த்து அதிர்ந்து விட்டனர்.

வர்ஷாவோ ஓடிச்சென்று விக்ரமை கட்டி கொள்ள, “அர்ரெஸ்ட் தேம்”, என்று பிரணவ் சொன்னதும், அவனுடன் வந்த நான்கு காவல் அதிகாரிகளும் அனைவரையும் கைது செய்யத்துவங்கினர்.

“நீங்க பண்றது சரியில்ல ஏசிபி… நான் யாருனு தெரியுமா?”, என்று தேவநாதன் பேச, “தெரியுமே! பொம்பள பொறுக்கி, கேடு கெட்டவன், பொண்ண வெறும் உடம்பு சுகத்துக்கும் படுக்கைக்கும் தாணு நினைக்கிற கீழ்த்தரமான ஜென்மம்… இன்னும் ஏதாச்சு மிஸ் பண்ணிருந்தா சொல்லு…”, என்றவுடன், “ஏய்”, என்று கத்தியவரின் முன் சென்று, “ஷ்ஷ்”, என்று ஒற்றை விரலை வாயில் வைத்தான்.

“சும்மா கத்தாதே… ஒரு ஹாஸ்பிடல்க்கு வந்து வேணும்னே பிரச்சனை பண்ணிருக்கீங்க… அதுவும் உங்க தொழில் பகைக்காக… உன் மேல எவளோ கேஸ் போடலாம் தெரியுமா? வந்து ஜீப்ல ஏறு… இல்ல ஜட்டியோட ரோடுல இழுத்துட்டு போவேன்”, என்று சொல்லவும், அவன் சொன்னதிலேயே அவருக்கு பயம் வந்து விட்டது.

செய்தால் மானம் போய் விடுமே! ஆகையால் அமைதியாக இருக்க வேண்டிய நிலை!

அவனிடம் வாகினி வர, “நான் பாத்துக்குறேன் அண்ணி! எங்க கிட்ட இந்த மாறி பிரச்சனைனு சொல்லிற்காலமே”, என்று அவன் சொல்லவும், “சொல்ல வேணான்னு இல்ல பிரணவ், இவளோ பெருசா இந்த ஆளு கலாட்டா பண்ணுவான்னு நான் நினைக்கல”, என்று அவள் சொல்லவும், “உங்க புருஷ் கிட்ட போய் சொல்லுங்க”, என்று சொல்லிவிட்டு விக்ரமிற்கு ஒரு தலையசைப்பை கொடுத்து விட்டு சென்று விட்டான்.

விக்ரமும் தலையசைக்க, வர்ஷாவோ விக்ரமின் நெஞ்சில் இருந்தவள் அப்படியே பிரணவை பார்க்க, அவனோ அவளை பார்த்து கண்சிமிட்டி விட்டு சென்று விட்டான்.

இதே சமயம் வர்ஷாவோ வெதும்பி கொண்டு இருக்க, “சும்மா அழாத அதான் ஒன்னும் ஆகலல?”, என்று விக்ரம் அதட்டவும், நிமிர்ந்து பார்த்து கண்களை துடைத்து கொண்டாள்.

வாகினியோ வர்ஷாவிடம் வந்து, “நீ ஓகே தான?”, என்று கேட்க, அவளும் தலையசைக்க, “உள்ள வாங்க”, என்று அவள் சொல்லவும், விஜய், விக்ரம் மற்றும் வர்ஷா செல்ல, அப்படியே திரும்பி மைத்திரியை ஒரு பார்வை அவள் பார்க்க, அவளும் உள்ளே நுழைந்தாள்.

வாகினியோ அவளின் இருக்கையில் அமர, “சரி அப்போ எல்லாரும் மெடிசின்ஸ் எடுத்துட்டு கிளம்புங்க…ஹெல்த் பார்த்துக்கோங்க…”, என்று சொன்னவள் ஒரு கணம் மைத்திரியை பார்த்து, “இது நான் சொல்ல கூடாது தான்… ஆனாலும் மனசு கேட்கல, மிஸ்ஸஸ் கலாவதி ஸ்ரீதர் என்னைக்கும் உங்க ரிலேஷன்ஷிப்க்கு பச்சை கொடிலாம் காட்ட மாட்டாங்க… அவங்களுக்கு பணம் தான் முக்கியம்.. உன் வாழ்க்கைய பத்திரமா நீ தான் பார்த்துக்கணும்”, என்று சொன்னவுடன், மைத்திரி அதிர்ந்து விட்டாள்.

“இத சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க… டைம் வேஸ்ட் பண்ணாதீங்க”, என்று வர்ஷா சொல்லவும், விஜயோ அவளை பார்த்து முறைத்தான்.

வாகினியோ இரண்டு சொடக்கிட்டு அவனை அவளை பார்க்க வைக்க, “என்ன பார்த்து முறைங்க சார்… நானும் இதையே தானே சொன்னேன்”, என்று அவள் சொல்லவும், அவன் பதில் பேசவில்லை.

“உன் ஆள அவன் அம்மா கிட்ட போய் அவன் லவ் பண்ரான்னு சொல்ல சொல்லு முதல்ல… நீ தான் பொண்ணுன்னு கூட சொல்ல வேண்டாம்… வெறும் லவ்னு சொன்னா போதும்… மைத்திரின்னு ஒரு ஆளு இருந்த தடையமே இல்லமா பண்ணிருவாங்க… உன் விருப்பம் தான்”, என்று முடித்து கொண்டாள்.

மைத்திரிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நேத்து வர்ஷா இன்று வாகினி, என்ன செய்வாள் அவளும்!

“அவள விடு, அவ லவ் பண்றவன் முதல்ல எந்த அளவு உண்மையா இருக்கானு கேளு”, என்று விக்ரம் கேட்க, “அதெல்லாம் உண்மையா தான் இருக்கேன்”, என்று பற்களை கடித்து கொண்டு பதில் அளித்தான் விஜய்.

“உண்மையா இருக்கறவன் தான் லவர்ர வேற ஒருத்தரோட வச்சி பேசும் போது மூடிக்கிட்டு இருக்கானா?”, என்று விக்ரம் புருவம் உயர்த்தி கேட்கவும், விஜயால் என்ன கூறிவிட முடியும்?

உண்மைதானே மைத்திரியை விக்ரமுடன் இணைத்து பேசும்போதெல்லாம் அவன் மௌன சாமியாராக அல்லவா இருந்து இருக்கிறான்.

மைத்திரியோ சட்டென விஜயை பார்க்க, அவனோ பார்வையாலேயே இறைஞ்சினான்.

“விஜய்”, என்ற வாகினியின் குரலில் அவன் திரும்பி பார்க்க, “டோன்ட் பிலே வித் ஹேர் பீலிங்ஸ்! நீ எதுக்காக அவள லவ் பண்ண ஆரம்பிச்சனு எனக்கு தெரியும்”, என்று வாகினி சொல்லவும், அவனோ தலை தாழ்ந்து இருந்தான்.

“வாட்ஏவர் உன் வாழ்க்கை நீ தான் பார்த்துக்கணும்…”, என்று சொன்னவள் அப்படியே விக்ரமின் புறம் திரும்பி, “ஆத்விக் ஸ்கூலுக்கு போனா அவனை மட்டும் கூட்டிட்டு வா, தேவ இல்லாத விஷயத்தை எல்லாம் பண்ணாத”, என்று சொல்லவும், “நான் ஏதும் பண்ணல அக்கா”, என்று சொன்னவுடன், “பார்க்கிங்ல நீ என்ன பண்ணணு எனக்கு தெரியும்… ஆத்விக் ரேர் வியூ மிரர்ல பார்த்து இருக்கான்”, என்று சொல்லவும், விக்ரமின் கண்கள் விரிந்தன.

வர்ஷாவோ சிரித்து விட்டாள். விஜய் எதுவும் பேசவில்லை.

மைத்திரியும் அவளின் சிரிப்பை அடக்கி கொண்டாள்.

“எனக்குன்னு வந்து சேறுரீங்க பாரு”, என்று வெளிப்படையாகவே சொல்லி விட, விக்ரமும் விஜயும் அமைதியாக இருந்தனர்.

“சரி கிளம்புங்க”, என்று சொன்னவள், “வர்ஷா விஜயோட போ, மைத்திரியை கூட்டிட்டு ஆபீஸ் போ”, என்று விக்ரமை பார்த்து கூறினால் வாகினி.

அவர்கள் சென்று விட, கதவை பார்த்தவள், இதழ்களை குவித்து ஊதிக்கொண்டாள்.

இன்னும் அஞ்சு நாள்ல அந்த ரிசெப்ஷன் அன்னைக்கு என்னவெல்லாம் ஆக போகுதோ? என்று நினைத்து கொண்டாள்.

இதே சமயம் விஜய் வர்ஷாவை வீட்டிற்கு வர, அங்கு அவர்களுக்காக காத்துகொண்டு இருந்தார் கலாவதி.

“எங்க போய்ட்டு வர?”, என்று வர்ஷாவை பார்த்து கேட்க, அவளோ, “ஹாஸ்பிடல்”, என்று சொல்லி நகர முற்பட, “அவளோட ஹாஸ்பிடல்க்கு தான போய்ட்டு வர”, என்று சொல்லி மீண்டும் கையை உயர்த்தி இருந்தார் கலாவதி.

ஆனால் உயர்த்த மட்டும் தான் முடிந்தது.

அவரின் கையை பிடித்து இருந்தான் சாணக்கியன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

1 thought on “9. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!