98. ஜீவனின் ஜனனம் நீ

5
(3)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம்‌ 98

 

வினிதாவின் வீட்டு வாயிலில் நின்றிருந்தான் தேவன். அப்பாவிடம் பேசி விட்டதாகவும், அவளது வீட்டிற்கு அவர் அழைப்பதாகவும் சற்று முன்னர் தெரிவித்தாள்.

 

உடனடியாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தான். உள்ளே என்ன நடக்கும் என்று ஒரு புறம் குழப்பமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளது குரலில் இருந்தது சந்தோஷமா, பயமா என்று அறிய முடியவில்லை.

 

ஒரு வேளை வினியை விட்டு விடு என்று அவளது தந்தை நேருக்கு நேர் சொல்லி விட்டால்? அதற்கு என்ன செய்வது? என்னவென்று பதிலளிப்பான் அவன்? நின்ற கண நேரத்தில் கோடி எண்ணங்கள் வந்தன.

 

“ப்ச்! உள்ளே போய் பார்த்துக்கலாம்” என தலையை உலுக்கிக் கொண்டு கதவைத் தட்ட, “வா தேவா” தலையசைத்து அழைத்தார் அவனது வருங்கால மாமனார்.

 

அவரது அழைப்பை ஏற்று எதிரில் அமர்ந்தவனது பார்வை வினிதாவைத் தேடியது. அவள் இல்லை என்றதும் சோர்வடைய, “என் பொண்ணைத் தேடுறியா?” எனக் கேட்டார்.

 

“ம்ம்” ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தான்.

 

“அவ வர மாட்டா. ஏன்னா அவளைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அதுக்காக ரெடியாகிட்டு இருக்கா” என்று பதிலளிக்க, அவன் பார்வை அவரைப் பலமாகத் தாக்கியது.

 

“அப்பறம் எதுக்கு உன்னைக் கூப்பிட்டேன்னு யோசிக்கிறியா? சொல்லிக்க தான். அப்போ அவ வழில இருந்து விலகி இருப்பியே. எனக்கு என் பொண்ணு வேணும். அவ வாழ்க்கை நல்லா இருக்கனும். அதை நீயும் விரும்புற தானே?” அவனைக் கூர்ந்து நோக்கினார்.

 

“எஸ் கண்டிப்பா. வினி நல்லா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஆனால் அவ நல்லா இருக்கனும்னா என் கூட இருக்கனும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா மட்டுமே அவ வாழ்க்கை நல்லா இருக்கும். என்னால அவளை விட்டுக் கொடுக்க முடியாது” என்றவன் கண்களில் அத்தனை உறுதி.

 

“ஏன் விட்டுக் கொடுக்க முடியாது? அவளும் அதையே தான் சொல்லுறா. அவ அப்படி என்ன உறவு உனக்கு?” அவருக்குப் பதில் அறிய வேண்டி இருந்தது.

 

“அவ எனக்கு ஒரு அம்மா! என் அம்மாவை நான் விட்டுக் கொடுப்பேனா? விலகுவேனா? இப்படி ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களால வினி அம்மாவை விட்டு விலக முடியுமா?” என்று கேட்டான்.

 

“முடியாது. அவ என் பொண்டாட்டி” அவசரமாகப் பதில் வந்தது.

 

“அதே தான். வினி எனக்குப் பொண்டாட்டி. கல்யாணம் நடக்கல, தாலி கட்டல. இருந்தாலும் நாங்க மனசார ஒன்னு சேர்ந்துட்டோம். வாழ்ந்துட்டோம். அப்படிப்பட்ட எங்களால உங்க விருப்பம் இல்லாமலும் கல்யாணம் பண்ணிக்க முடியும். ஆனால் வினியோட சந்தோஷமே நீங்க தான். நீங்களா விரும்பி எங்களை ஏத்துக்கனும். அதுக்காக நாங்க எவ்ளோ காலம் வேணாலும் காத்துட்டு இருப்போம். அவ என்னிக்குமே என்னைத் தவிர யாரையும் பக்கத்தில் வெச்சும் பார்க்க மாட்டா” என்று சொன்னான் தேவன்.

 

“சரிப்பா. அவளை சந்தோஷமா வாழ விடு. இப்போ நின்னு அவளை ஒரு தடவை பார்த்துட்டு போ” என்றவர், “வினி” என்று அழைத்தார்.

 

மஞ்சள் நிற சாரி அணிந்து, நகைகள் பளபளக்க அழகோவியமாய் வந்து நின்றாள் வினிதா. அவளது அழகு அவனுள் மன்மதக் கணைகளை கணக்கின்றிப் பாய்ச்சின.

 

“இதோ பார்த்துக்க. இனிமே அவ உன் காதலி கிடையாது” என்று அவளது தந்தை கூற, தேவனோ சற்றும் அசராமல் நின்றான்.

 

அவனுக்குத் தானே அவள் மீது மலையளவு நம்பிக்கை? அவள் வேறு எவனையும் நினைக்காத போது, தான் எதற்குக் கலங்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.

 

வினிதாவோ அவனைத் தலை தூக்கிப் பார்க்கவில்லை. அப்படியே மௌனித்து நிலம் நோக்கி நிற்க, கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

 

“மாப்பிள்ளை வீட்டாட்கள் வந்துட்டாங்க. இனி நீ கிளம்பலாம்” என்ற சொல் கேட்டு அவனுள் மெல்லிய அதிர்வலை.

 

தலை தூக்கி அப்பக்கம் பார்வையை வீச, முதலில் வந்து நின்றான் அஷோக். மீண்டும் அவனா என சலித்தவனின் கண்கள் அஷோக்கின் பின்னால் நின்றவனைக் கண்டு அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.

 

“ஹாய் ப்ரோ” தலை நீட்டி எட்டிப் பார்த்து சல்யூட் வைத்தது அவனது அருமை உடன்பிறப்பு ரூபன் அல்லவா?

 

“டேய் நீயா?” வாயில் கை வைத்துப் பார்க்க, “நான் மட்டும் இல்ல. அம்மா, அண்ணா, அண்ணி, குட்டீஸ்னு எல்லாரும் இருக்காங்க” பின்னால் கை காண்பிக்க, அவனது மொத்தக் குடும்பமும் நின்றது.

 

சட்டென்று தலை திருப்பி வினிதாவைப் பார்க்க, இம்முறை அவனை நேருக்கு நேர் நோக்கி கண்ணடித்தாள்.

 

“என்ன பார்க்கிறீங்க? இது தான் என் பொண்ணு வாழப் போற குடும்பம். இப்போ சொல்லு. அவ நல்லா வாழ்வா தானே?” வினிதாவின் அப்பா கேட்ட கேள்வியில் தேவனுக்கு தலை கால் புரியவில்லை.

 

“எ..என்ன நடக்குது இங்கே? வினி அப்பா என்னமோ சொன்னார். மாப்பிள்ளை வீட்டு ஆட்கள்னு” இன்னும் ஸ்திரமாக அறிய வேண்டி இருந்தது அவனுக்கு.

 

“வினி அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டார். எங்களுக்கு கால் பண்ணி பொண்ணு பார்க்க வரச் சொன்னார் டா” என்று மேகலை சொல்ல, “அம்மா நெஜமாவா” அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் மைந்தன்.

 

“வினி என் கிட்ட பேசினா. அவ என் கிட்ட எதையும் நேரடியா கேட்டதில்ல. உனக்காக அவ்ளோ அழுது கெஞ்சி கேட்டா. என் தன்மானம், வறட்டுப் பிடிவாதம் எல்லாம் அவ ஆசைக்கு முன்னால உடைஞ்சு போயிடுச்சு.

 

உன்னை மறுத்தேன் தான். என் இஷ்டப்படி அவளுக்கு மாப்பிள்ளை அமைச்சுக் கெடுக்க நெனச்சேன். எல்லாமே அவ நல்லதுக்காக தான். ஆனால் அவ சந்தோஷமே நீ தான்னு சொன்னப்போ என்னால எதுவும் பண்ண முடியல. ஒத்துக்கிட்டேன்” என்று சொல்ல, தந்தையின் தோள் சாய்ந்தாள் வினி.

 

இதைத் தானே அவள் எதிர்பார்த்தாள்? தந்தையின் விருப்பம் கிடைத்ததில் அவளுக்கு முழு உலகையும் வென்று விட்டதாய் உணர்வு.

 

“அப்பறம், இனியா விஷயம் கூட இடிச்சது. அவ பண்ணுன காரியத்தினால என் பொண்ணு மேல உங்களுக்கு தப்பான அபிப்பிராயம் உருவாகி அதனால அவ வாழ்க்கையில் பிரச்சினை வருமோ என்றது எனக்கு பெரிய யோசனையா இருந்தது.

 

அதை சத்யா வந்து மாத்திட்டான். இனியாவுக்கும் வினிக்கும் சம்பந்தம் இல்லை. இனியா மேல வன்மம் வெச்சுக்கிட்டதும் இல்ல, அவளை தூசு மாதிரி தட்டிட்டோம். அதனால வினி வாழ்க்கை பாதிக்கப்படாதுனு சொன்னான். அதோட தேவனுக்காக நிறைய பேசினான். வினி இல்லாம அவன் கஷ்டப்பட்டதை எல்லாம் சொன்னான்” என்று சொல்ல, சத்யாவை அணைத்துக் கொண்டான் தேவன்.

 

தனக்காக அவன் இங்கு பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவனை எவ்வளவு காயப்படுத்தி உள்ளோம். இருந்தும் தன் காதலுக்காக வந்து பேசி இருக்கிறான் என்று நெகிழ்ந்து போனான்.

 

“என் பொண்ணு காதலிக்கிற பையன், அவளை உசுரா நெனக்கிறவன், அவளோட சந்தோஷம் இதெல்லாம் தேவன் தான் என்றப்போ நான் மறுக்க முடியாதுல்ல. அவ நல்லா வாழனும். என் பொண்ணு உன்னை நம்பிட்டா. அதை நானும் உன் மேல வெச்சுட்டேன். அந்த நம்பிக்கையை நீ காப்பாத்திடுப்பா” என்று அவர் கூற,

 

“கண்டிப்பா அங்கிள்! வினியை நீங்களே ஒப்படைச்சுட்டீங்கள்ல. நான் பார்த்துக்கிறேன். எவ்வளவு தான் சொன்னாலும் அப்பாவோட இடத்திற்கு யாரும் வர முடியாது. ஆனால் நான் என்னால முடிஞ்ச அளவு அவளை சந்தோஷமா வெச்சுப்பேன். நான் வாக்கு தர்றேன்” அவரது கையைப் பற்றிக் கொள்ள, வினிதாவின் கண்கள் கலங்கின.

 

“அப்பா” என்று வினிதா அவர் கையைப் பிடிக்க, இருவரது கையையும் இணைத்து வைத்தார்.

 

தேவனின் குடும்பத்தினருக்கு அளவில்லாத சந்தோஷம். மேகலை இன்னும் ஒருபடி மேலாக மகிழ்ந்தார். வினியின் பிரிவால் அவன் தன் மடி சாய்ந்து அழுத பொழுதுகளை நினைத்தார். அனைத்தும் மாற்றமுற்றதில் திருப்தியடைந்தது அவருள்ளம்.

 

வினிதாவின் தந்தை அவர்களை வரவேற்று உபசரித்தார். தேவனுக்கோ அவளைத் தனிமையில் சந்திக்க வேண்டும் போல் இருந்தது. இருக்கின்ற மகிழ்வை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமே.

 

“என்ன ப்ரதர்? வினி கூட பேசனுமா?” சத்தமாகவே கேட்டு வைத்தான் ரூபன்.

 

அவனோ சகோதரனை முறைக்க, “அதுக்கென்ன பேசட்டுமே. இன்னிக்கு நேற்று பேசுற மாதிரில்ல இவங்க நிற்கிறாங்க” என்று மேகலை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

அறையினுள் நுழைந்த கணம் வினியின் கைப்பிடித்து இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டான் தேவன். அவளுக்கோ அழுகையில் மூச்சு வாங்கியது.

 

“தேவ்” என்று அவள் அழ, “அழாத வினி. இனிமே நீ சிரிக்கனும். சிரிச்சிட்டு மட்டுமே இருக்கனும். லவ் யூ வினி. லவ் யூ சோ மச். அவ்ளோ ஹேப்பியா இருக்கு” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

 

“நான் அப்பா கிட்ட பேசினேன் தேவ். அவர் என்னைப் புரிஞ்சுக்கிட்டார். அவர் திட்ட மனசு திறந்து பேச வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது நீ தான். தாங்க் யூ டா. எப்படியோ அவர் ஓகே சொல்லிட்டார். என்னால இப்போ வரை நம்ப முடியல” என்றவளும் அவனை மேலும் மேலும் இறுக அணைத்தாள்.

 

“உன் வீட்டுக்கு வர சொன்னப்போ கூட ரொம்ப பயந்துட்டேன். என்னாச்சோனு தெரியாம வந்தேன். உன்னை பொண்ணு பார்க்க வர்றதா சொன்னதும், நீ எனக்கு தான்னு உறுதியா நின்னேன். இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம். நீ அதை மறுத்து அப்பாவோட கோபத்துக்கு ஆளாகி அழுவியோனு. ஆனால் இதை சத்தியமா எதிர்பார்க்கல” அந்தத் தருணத்தை நினைக்க நினைக்க உணர்ச்சி வசப்பட்டுப் போனான்.

 

“அப்போ ஓகே சொன்னதை ஃபோன்ல சொல்ல தோணல. உன் முகத்தில் தெரியுற சந்தோஷத்தை நேரில் பார்க்கனும் போல இருந்துச்சு. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் அண்ணிக்கு கால் பண்ணி கூட்டிட்டு வர சொன்னேன். பிடிச்சு இருக்கா?” என்று கேட்டாள் அவள்.

 

“எப்படி பிடிக்காம இருக்கும்? எனக்காக ஒவ்வொன்னையும் பண்ணுற உன்னை நாளுக்கு நாள் பிடிக்குது டி. உனக்காக நான் கூட இவ்ளோ பண்ணதில்ல. எத்தனை கஷ்டம் வந்தும் நீ ஸ்ட்ராங்கா இருந்த வினி. உன்னை நான் உசுருக்குள்ள வெச்சு பார்த்துப்பேன்” அவளது கன்னங்களைக் கையில் ஏந்தினான்.

 

“லவ் யூ தேவ்! இந்த நிமிஷம் நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வார்த்தையே இல்ல. பெருசா ஜெயிச்சுட்ட மாதிரி ஃபீல் பண்ணுறேன்” என்றவளைப் பார்த்து, “உனக்கு பாக்ஸிங் அவ்ளோ பிடிக்காதுல்ல. எனக்காக தானே கத்துக்கிட்ட” என்று கேட்டான்.

 

“எஸ்! உனக்காக தான். இதை சாக்கா வெச்சு தானே நான் திரும்ப இங்கே வந்தேன். அதுக்காக கத்துக்கிட்டேன். நமக்குப் பிடிச்சதை அடைய, பிடிக்காத விஷயங்களைக் கூட பண்ணலாம்ல?” என்று சொன்னவளைப் பார்த்து அவனது காதல் அதிகரித்தது.

 

“யூ ஆர் மை கேர்ள்! என் உசுரு” அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான் காதலன்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!