வாடி ராசாத்தி – 21
வீட்டினரின் பிரச்சனை தீர்ந்தது என்று அன்று காலை உற்சாகமாக இருந்தான் கேபி. அலுவலக அறையில், துள்ளலுடன் இருந்தவனை கண்ட சற்குணம்,
“என்ன மாப்பிள்ளை, காத்து உங்க பக்கம் வீசுது போல, எல்லாம் சரியாக போகுது….” அவன் சொல்லி முடிக்கவில்லை, கேபியை பார்க்க அம்மு வந்து இருப்பதாக ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்தது.
மீட்டிங் அறையில் அமர வைக்குமாறு சொன்னவன், சற்குணத்திடம்,
“எங்க, இப்போ புயல் மையம் கொண்டு இருக்காம்…. இரு என்னனு பார்த்திட்டு வரேன்….” என்றான் பொங்கி வந்த சிரிப்புடன்.
“அடப்பாவி, காதலிக்கற பொண்ணை புயல்னு சொல்ற…. அந்த தென்றல் புயலானதே உன்னால தாண்டா….”
“உன்னை அவளோ பேசுற அவளை தென்றல்னு சொல்றியே….நியாயமா….”
“டேய், அம்மு டா, பாப்பா டா….” அவளின் மேல் பாசம் வைத்திருக்கும் இருவரும் அவளை கலாய்த்து சிரித்தனர்.
@@@@@@@@@@
“என்ன மேடம், இந்த பக்கம்?”
“நேத்து கணக்கு தீர்க்க தான்…. என்னை பார்த்து வாயை மூடிட்டு போன்னு ஆக்ஷன் பண்ற, அவ்ளோ ஏத்தமா உனக்கு?”
“நமக்குள்ள இருக்கிறது எல்லாம் தீர்க்க முடியாது கணக்கு சில்மிஷம்….கொடுத்து வாங்கி, கொடுத்து வாங்கின்னு இருந்தா தான் சுகம்.” அவன் பேச்சும், பார்வையும் வேறு சேதி சொல்ல,
“டேய்….” அவன் பார்வையின் வீரியத்தில் பேச்சு வராமல், ஒற்றை விரலால் பத்திரம் காட்டினாள் அம்மு.
அவள் அருகில் நெருங்கியவன், “உன்கிட்ட கிடைக்கிற ஒரு பீல், வைப்(vibe) வேற எங்கேயும் கிடைக்காதுடி, நீ ஒரு வித்தியாசமான பீஸ்…..”
“பீஸ் கீஸ்ன்னே பிச்சுடுவான்…. அதென்ன பார்க்கிற அப்போ எல்லாம் மட்டம் தட்ட ட்ரை பண்றே…. நான் உனக்கு அவ்ளோ இளக்காரமா? அதை கேட்க தான் முக்கியமா வந்தேன்….”
“உனக்கு அப்படியா தோணுது? இளக்காரமா நினைச்சா, உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைப்பேனா?”
“கட்டி கூட்டிட்டு போய் காலமெல்லாம் நக்கல் அடிப்பே போல….சாடிஸ்ட்….”
“இது கூட நல்ல ஐடியா தான், இதுக்கு எல்லாம் செம ஒர்த் ஆன ஆளு தாண்டி நீ….”
“ஆனா நீ நான் கட்டிக்கிற அளவு ஒர்த் இல்லை”
“தெரியும் தெரியும், உன் லெவலே வேற தான்….” சொல்லி விட்டு அவன் சிரிக்க,
“பார்த்தியா மறுபடி நக்கல் அடிக்கிற, சே! உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்….”
“பேசாத, இனி ஒன்லி ஆக்ஷன் தான், சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்கு ரெடி ஆகு….”
“மாட்டேன், உன்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்…. எனக்கு சரியான காரணம் சொல்லு…. ஏன் என்னை தான் கட்டிக்கணும்னு பிடிவாதம் பண்ற….?”
“எனக்கு மாமா பொண்ணு, அதனால தான், வேறென்ன….”
“நானும் என் மாமா பையனை தான் கட்டுவேன், எனக்கு அத்தை பையன் வேண்டாம்….”
“இந்த உலகத்தில உன்னை கட்டிக்க பிறந்தவன் நான் மட்டும் தான்…” உட்கார்ந்து இருந்த சுழல் நாற்காலியில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்து அவளையும் எழுப்பி அவள் கண்களை நேரே பார்த்து சொன்னான் கேபி.
“ஹான்…. இது நல்ல கதையா இருக்கே….”
“சரி இப்படி வைச்சுகலாம், நீ பொறந்ததே என்னை கட்டிக்க தான்…”
“அடேங்கப்பா….”
“தூங்குறவங்களை எழுப்பலாம், நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது…. நான் இப்போ உன்கிட்ட நேரா கேட்கிறேன், என்னை கல்யாணம் பண்ணிப்பியா மாட்டியா? மாமாவை காரணம் காட்டாம உன் மனசை மட்டும் சொல்லு.”
“அதெப்படி, நான் ஏன் எங்க அப்பாவை எதிர்த்துகிட்டு வரணும்? நீங்க தான் ஆசைப்பட்டீங்க, எங்க அப்பாவை சம்மதிக்க வைங்க,நான் போய் எங்க அப்பா கிட்ட கேட்கமாட்டேன்…. என் சின்ன வயசிலே இருந்தே அவருக்கு உங்க கூட நாங்க பழகிறதில விருப்பம் இல்லைன்னு எனக்கு தெரியும்…. தெரிஞ்சே எப்படி….”
“அப்போ உனக்கு வேற யாரோட கல்யாணம்னாலும் ஓகே? அப்படியா? என்னை நீ விரும்பலையா?” அவன் குரலில் மிகுந்த ஆற்றாமை இருந்தது.
“நீங்களா ஆரம்பிக்கிற வரை எனக்கு எந்த எண்ணமும் இல்லை, ஆனா இப்போ முடியாது…. அதே சமயம் எங்க அப்பா சம்மதமும் வேணும்….”
“ஒ… வேற வழியில்லாம….” கண்டனமாக கேட்டான்.
“இல்லை, இல்லை, அப்படி இல்லை அத்தான்…. வேகமாக மறுத்தாள் அம்மு. அவளின் அத்தானில் கொஞ்சம் குளிர்ந்து தான் போனான் கேபி.
“அப்புறம் எப்படிங்க….?”
“உங்களால் தான்…” தான் வந்தது எதற்கு, இப்போ பேசிக்கொண்டு இருப்பது என்ன… என்று சுதாரித்தவள்,
“இங்க பாருங்க, கல்யாணம் எங்க அப்பா சம்மதத்தோட ஏற்பாடு பண்ணுங்க, எனக்கு சம்மதம்! இதுக்கு மேல் கேட்காதீங்க…. நான் கிளம்புறேன்….”
“அப்படி எல்லாம் நீங்க போனா போகுதுனு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம், எனக்கு கல்யாணமா இல்லை கருமாதியானு நான் முடிவு பண்ணிக்கிறேன். நான் உன்கிட்ட இருந்து எனக்கு சாதகமான பேச்சு எதிர்பார்த்து இருக்க கூடாது தான்….” என்றான் கேபி மரத்த போன குரலில்.
அவனுக்கு, அவள் அவனை போல அவனுக்காக, அவர்கள் திருமணத்திற்காக பேசவில்லை என்ற கோபம். ஆனால் அவள் நிலைமையில் இருந்து யோசிக்க தவறி போனான்.
சட்டென்று அழுது விட்டாள் அம்மு. கண்களை இறுக மூடி திறந்தவன்
“நீயும் என்னை மாதிரியே இருக்கணும்…. உறுதியா, நம்பிக்கையா, முடிவா…. இல்லைனா எதுவும் முடியாது…. இதுக்கு மேல் நான் சொல்லமாட்டேன்….ஒன்னு ஒத்துகிட்டு என்கூட நில்லு, இல்லை எல்லாத்தையும் மொத்தமா குழி தோண்டி மூடிடுவோம்” என்றான்.
எப்படி ரத்தம் தெறிப்பது போல் பேசுகிறான் பாரு என்று வருந்தினாள்.
“நான் ஒன்னும் பாண்டியன் இல்லை….” தேம்பலுடன் சொன்னாள்.
“ஆமா, அதை விட ஒசத்தி…. மிசஸ் பாண்டியன்னா சும்மா வா…. சும்மா அதிர விடணும்…”
“ரொமாண்டிக் டயலாக் பேசுற மூஞ்சியை பாரு….” திட்டியவள்,
“நான் முயற்சி பண்றேன்….” என்றாள்.
“குட், சீக்கிரமா செய்….” என்றதோடு அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தான் கேபி. அதற்கு மேல் அவனிடம் பேசவே பயமாக இருந்தது அவளுக்கு. ஏன் இப்படி இருக்கிறான்…. நான் தான் சம்மதித்து விட்டேனே…. இவனை போல் என்னால் செயல்பட முடியுமா? மனதில் இருப்பதை பகிர கூடாதா….? தவித்தாள் அம்மு. அந்த கடுப்பில்,
“மனசாட்சியே இல்லை டா உனக்கு….”
“உனக்கு தெரியுமா?”
“ஊருக்கே தெரியும்…. மொத்த ஊரையே உன் இஷ்டத்துக்கு வளைக்கிற…. உன் மனசாட்சிகிட்ட கேளு, அதுவே சொல்லும்….”
“இப்போ என் மனசாட்சி, உன்னை தான் வளைக்க சொல்லுது…. கொஞ்ச நேரத்தில என்னை ஏன் அவ்ளோ டென்ஷன் பண்ணே….?” என்றவன், அவள் சுதாரிக்கும் முன்பு அவளை இழுத்து அணைத்து அவள் இதழை கொய்தான்.
ஏற்கனவே அவனின் ஸ்பரிசம் அவளுக்கு பழக்கம் தான் என்றாலும், இன்றைய அவனின் அரவணைப்பு வித்தியாசமாக இருந்தது. நீ இல்லையேல் நான் இல்லையடி, உன்னை தான் நித்தமும் தேடுகிறேன் என்று அவளுக்கு உணர்த்தினான். அவள் அவனுக்கு எவ்வளவு வேண்டும் என்பதையும்.
அவள் மனம் தவித்து, தடுமாறி, இறுதியில் அவனுடன் தன் மனத்தடையை எல்லாம் உடைத்து ஒன்றினாள். அவளுக்கான அவனின் அன்பை பரிபூரணமாக அக்கணத்தில் ஏற்று கொண்டாள் அவள். அவன் சொன்ன விதம் சரியில்லை என்றாலும் அவள் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற தானே சொன்னான்…. அவனை எப்படி இனி தவிக்க விடுவது….?
அவனின் இறுக்கமான அணைப்பும், ஆழ்ந்த முத்தமும், கனவா நினைவா என்று புரியாத இடத்திற்கு அழைத்து சென்றது அவளை. ஆனால் அவளுக்கு அவள் அத்தான் தான் வேண்டுமென்ற மனதை ஒத்துகொண்டாள் அவள். முதலில் அவளிடம், பின் அவனிடம்.
பூவும் திறக்கும்
நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான்
என் அழகை ரசிக்கின்றான்
என் இளமை ருசிக்கின்றான்
வரையரை இன்றி எனை அவன் சிறை பிடித்தான்….
சிறையினுள்ளே சிறகுகள் தந்து பறக்க செய்தானே….
இதற்கு மேல் வேண்டாம் என்று முயன்று ஒரு கட்டத்தில் அவளை வெறுமனே அணைத்து கொண்டான் கேபி.
“ஸாரி டா அம்மு….” கொஞ்சம் அதிகம் எல்லை மீறி விட்டதில் சொன்னான் கேபி.
“என் அத்தான், எனக்கும் வேணும் தான்!!!” ஆசையாய் அவள் மனதை மெல்லிய வெட்கத்துடன் அவள் உரைக்க,
“ஹேய்…. அம்மு….” மீண்டும் இறுக்கி அணைத்தவனுக்கு கண்கள் கலங்கியது. என்ன தான் அவளுக்கு அவன் மேல் விருப்பம் இருக்கு என்று தெரிந்தாலும் ஒரு சில நாள் சோர்ந்து போய் இருக்கிறான் அவளின் தொடர் மறுப்பில்.
“மாமாவோட சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம், அதில் எந்த மாற்றமும் இல்லை. நீ எனக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்…. அதுக்கு தான் உன் கூட போராட்டம்…”
“இம்ம்….காரியக்கார ஆளு நீங்கனு எனக்கு தெரியுமே, ஒன்னும் ஆச்சர்யம் இல்லை எனக்கு….”
“நீயும் லேசுபட்ட ஆளு இல்லை ஆத்தா….என்னை எப்படி சுத்தவிட்ட…. இனி சீக்கிரம் டும் டும் டும் தான்….அப்பறம் இருக்குடி உனக்கு பொண்டாட்டி….!” உற்சாகமாக அறிவித்தான்.
அவ்வளவு சுலபமாக நடந்து விடுமா இந்த திருமணம்?