27. வாடி ராசாத்தி

5
(5)

வாடி ராசாத்தி – 27

வாசுகி காணாமல் போன மறுநாள், கேபி நாராயணின் கடைக்கு சென்றான். கிஷோர் அங்கு தான் இருந்தான்.

“வாங்க, என்ன இந்த பக்கம்?” அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் கிஷோர்.

நாராயணன் காதில் விழாதவாறு, “உன் வீடியோ இன்னும் என்கிட்ட தான் இருக்கு” என்றான் கேபி கூர்மையான பார்வையுடன்.

“நான் நீங்க சொன்னதை மீறலையே…. அப்பறம் என்ன?”

“அப்படியா? உனக்கு எதுவுமே தெரியாது அப்போ….? நீ அப்பாவியா?” கேபி நக்கலாக கேட்க,

“நீங்க எதை பத்தி பேசுறீங்கனே புரியலை எனக்கு….” விடாமல் சாதித்தான் கிஷோர்.

கேபி கிஷோரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான், ஆனால் அவன் புலன்கள் எல்லாம் சுற்றுப்புறத்தை தான் ஸ்கேன் செய்தது. அப்போது அவன் பார்வை வட்டத்தில், ஒருவன் செய்யும் வேலையை விட்டுவிட்டு இவர்களை கவனிப்பது தெரிந்தது. அவனை பார்த்தாலே, அவன் உள்ளூர் போல தெரியவில்லை. அவன் முகத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டான் கேபி.

இவர்கள் இருவரும் ரகசியம் போல் பேச, நாராயணுக்கு கோபம் வந்துவிட்டது.

“இங்க பாருங்க, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க, என் பையனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் உண்டு, அவன் வேலை உண்டுனு இருக்கான்” என்றார் கோபமாக.

“சே, சே, என்னை தப்பா நினைக்காதீங்க சார், கிஷோர் இன்னும் ரெண்டு நாள்ல டூர் போறான்னு கேள்விப்பட்டேன், அந்த ரிசார்ட் சம்பந்தமா கேட்க வந்தேன்!” என்று அவனின் சந்தேகத்தை போட்டு விட்டான். நாராயணன் மூலம் ஏதாவது சிக்கினால் நல்லது தானே!

“ஊட்டி, கொடைக்கானல்னு பங்களா வைச்சு இருக்க நீங்க என் பையன் போற இடத்தை பத்தி விசாரிக்க வந்தீங்க? நான் நம்பணும்…! கிளம்புங்க சார்!” அதோடு முடித்து விட்டார் அப்பா என்று கிஷோர் சந்தோஷப்பட, அவனின் சந்தோஷத்திற்கு ஆயுசு கம்மி என்பது போல்,

“அவனை சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்காதீங்க, அவனே இப்போ தான் கொஞ்சம் சந்தோஷமா கிளம்புறான்! எங்களை விட்ருங்க சார்” என்றார் நாராயணன்.

அவ்வளவு தான், கேபியின் கண்கள் பிராகாசமானது! “சரி சார். சந்தோஷமா போய்ட்டு வரட்டும்! என்றவன், சேப் ஜர்னி கிஷோர்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

“யோவ்! உன்னை யார் இப்போ நான் ஊருக்கு போறேன்னு சொல்ல சொன்னது? உன்னை…. உன்னை…. அவளுக்கு முன்னாடி உன்னை முதல்ல தொலைச்சு கட்டணும், அப்போ தான் எனக்கு நிம்மதி” என்று ஆத்திரத்தில் உளறிவிட்டு, புகை பிடிக்கவும், பிளானை மாத்தவும் எழுந்து வெளியே சென்றான்.

அவன் ஆத்திரத்தில் உளறியதை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் தான் பிளானை எவ்வாறு மாற்றுவது என்ற சிந்தனைக்கு சென்று விட்டானே…. அவனுக்கு இதெல்லாம் புதிது அல்லவா, அதனால் மிகுந்த டென்ஷன் ஆனான்.

அவன் கூறியதை அவன் தான் பொருட்படுத்தவில்லையே தவிர, நாராயணன் அதை சீரியஸாக எடுத்து கொண்டார். சமீபமாக மகன் மீது கவனம் வைத்திருப்பவருக்கு, கடந்த நாலைந்து நாட்களாக அவனின் நடத்தை மீது பலத்த சந்தேகம் தான். அதோடு இவரை கேட்காமல் புதிதாக ஆட்களை வேலைக்கு கேரளாவில் இருந்து கொண்டு வந்தது மட்டுமில்லாமல், அவர்களுடன் பேசி திரிவதும் இவருக்கு பிடிக்கவில்லை. இன்று கேபி வேறு வந்ததும், அவருக்கு சந்தேகம் வலுத்தது.

சற்று நேரத்தில் கிஷோர் வெளியே கிளம்ப, நாராயணன் தாமாக முன் வந்து கேபியை அழைத்தார்.

“நீங்க என் கடைக்கு வந்த உண்மையான காரணம் என்ன? சொல்லுங்க…. என் பையன் என்ன பண்றான்?”

“உங்க பையன் என்ன பண்றான்னு நீங்க தான் சார் சொல்லணும்? என்னை கேட்கிறீங்க?”

“எனக்கு தான் என் பிள்ளையை பத்தி தெரியலையே…. உங்களுக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு… சொல்லுங்க ப்ளீஸ்…. அவன் கிரிமினல் இல்லை சார்….ஏதோ ஆத்திரத்தில் இருக்கான்!”

“அவன் கிரிமினல் வேலை தான் செய்றான், நீங்களே கண்டுபிடிங்க” என்றான் கோபமாக கேபி.

“சார் சார் ப்ளீஸ், நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் எல்லாம் செய்றேன், என்கிட்ட மறைக்காம சொல்லுங்க”

“உங்களை எப்படி நான் நம்புறது?”

“இப்போ நீங்க உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன், அப்பறம் நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்!”

“சரி, இதெல்லாம் நீங்க ஏன் எனக்கு பண்றீங்க?”

“என் பையன் ஏதோ தப்பு பண்றான் தெரியுது, நாளைக்கு அவன் போலீஸ், கோர்ட், கேஸ்னு போக வேண்டாம். அதுக்கு உங்க உதவி தான் வேணும்னு எனக்கு தெரியுது! அவன் செய்றதை தடுத்து, அவனை சீக்கிரம் நான் வெளிநாட்டுக்கு அனுப்பிடுறேன் சார். அவன் வாழ்க்கை வீணா போயிடும் சார்! ப்ளீஸ் சார், ஹெல்ப் பண்ணுங்க சார்” தன் பையனின் வாழக்கையை காப்பாற்ற துடிக்கும் தவிப்பு அந்த தந்தையின் குரலில் இருந்தது. அந்த அளவு மன்றாடினார் நாராயணன்.

“போன்ல சொல்ல முடியாது, நேர்ல வாங்க சொல்றேன்” என்று அவரை ஒரு நண்பரின் அலுவலகத்திற்கு வரச் சொன்னான் கேபி.

@@@@@@@@@@@

கிஷோர், அவன் கூட்டாளிகளிடம், “இப்போதைக்கு நாம ஊருக்கு எங்கேயும் போக வேண்டாம். நான் மட்டும் என் பிரண்ட்ஸ்சோட எங்கேயாவது போய்ட்டு வரேன். உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி அந்த பொம்பிளையை அங்கேயே பத்திரமா வைச்சுக்க சொல்லுங்க. இந்த விஷயத்தில் அவசரப்பட்டா காரியமே கெட்டு போய்டும்! பொறுமையாவே இருப்போம்” என்றான்.

இந்த முறை எக்காரணம் கொண்டும் இந்த வாய்ப்பை தவற விட கிஷோர் தயாரில்லை! எனவே நாட்கள் ஆனாலும் பராவயில்லை, காரியம் கெட்டு விடக்கூடாது என்றிருந்தான்.

கிஷோர் அடுத்த நாள் நண்பர்களுடன் குன்னூர் கிளம்பி சென்றான்.

அவன் ஊருக்கு சென்று விட, தைரியமாக கேபி சொன்ன இடத்துக்கு வந்திருந்தார் நாராயணன். அவர் பேசுவதை வைத்து மேற்கொண்டு இவன் விவரம் சொல்வதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டான் கேபி.

“சொல்லுங்க சார், உங்க மகன் கிட்ட என்ன வித்தியாசம் பார்க்கிறீங்க இப்போ?” கேபி கேட்க, யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தன் மனதை உறுத்திய அனைத்தையும் கடகடவென்று கொட்டினார்.

“அவன் அழைச்சிட்டு வந்த ஆளுங்க எல்லாரும் எங்க தங்கி இருக்காங்க? எல்லாரும் இருக்காங்களா? இல்லை யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் ஊருக்கு போய் இருக்காங்களா?”

“போன வாரமே, மூணு பேர் ஊருக்கு போறேன்னு போய்ட்டாங்க. இப்போ மீதி அஞ்சு பேர் தான் இருக்காங்க. கிஷோர் பிரண்டோட வீட்டு மாடி போர்ஷன்ல தங்கி இருக்காங்க.”

“நல்லா தெரியுமா? வீட்டை அடையாளம் காட்ட முடியுமா?”

“அவன் அந்த ஆளுங்களுக்கு வீடு, சாமான் எல்லாம் அரேஞ் செய்யும் போது, எதுக்குடா புதுசா வெளியூர்ல இருந்து எல்லாம் ஆள் கொண்டு வர வேலைக்கு, இப்போ பாரு தேவையில்லாத வேலை உனக்குனு சொன்னேன். அதனால் நல்லா தெரியும். ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க?

பெரிசா எதுவும் தப்பு செய்றானா….?” பரிதவிக்கும் அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது கேபிக்கு. நாராயணன் அடாவடியாக தொழில் செய்யும் ஆள் தான், ஆனால் கிரிமினல் இல்லை.

“நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும்! ஆனா அது தான் உண்மை” என்று அனைத்தையும் கூறினான் கேபி. அந்த வீடியோவை காட்டுங்கள் என்று அவரும் கேட்கவில்லை, இவனும் பாருங்கள் என்று சொல்லவில்லை! கேபி சொன்னதையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை….உள்ளம் அதிர்ந்து கிடந்தது. கிஷோரா இப்படி? எப்படி இப்படி தவறி போனான்? எங்கு இருந்து மனதில் இவ்வளவு வக்கிரம் வந்தது? தவித்து போனது பெற்ற உள்ளம்.

“நான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்றேன் சார், ஆனா என் பையனை சட்டத்துக்கு கிட்ட மட்டும் மாட்டிவிட கூடாது நீங்க! எனக்கு உறுதி தரணும். அதே மாதிரி இதுக்கு அப்பறம் அவன் இருக்கிற இடமே தெரியாது, அவனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுனு நான் உங்களுக்கு உறுதி தரேன்” என்றார். மிகவும் வேண்டி கேட்பது போல் தான் கேட்டார் நாராயணன்.

“தப்பு செஞ்ச உங்க பையனுக்கு தண்டனையே இல்லைனா எப்படி சார்? நீங்களே சொல்லுங்க நியாயமா? ஆனாலும் இப்போ எங்க அத்தையோட நலன் தான் முக்கியம், நீங்க உதவி பண்ணலைனா எங்களால் ஈஸி யா கண்டுபிடிக்க முடியாதுனு தெரியுது…. எதிர்பாராம கிடைச்ச உங்க உதவிக்காக நீங்க கேட்டதுக்கு ஒத்துக்கிறேன் நான்.”

இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இவர்களின் இந்த ஒப்பந்தம் தெரியாமல், கிஷோர் வேறு பிளான் போட்டு கொண்டு இருந்தான்.
இதோடு வாசுகி காணாமல் போய் மூன்று நாட்கள் ஆகி இருந்தது. செல்வராஜ் மிகவும் ஓய்ந்து போய் இருந்தார். போலீசிலும் கம்ப்ளெயின் செய்து இருந்தனர். ஆனால் தடயமே இன்றி காணாமல் போனவரை தேடுவது என்பது நாட்கள் எடுத்துகொள்ளும் அல்லவா? அம்மு, கேபியின் மீது இருந்த நம்பிக்கையில் இருந்தாள். சம்பத் வாசுகி காணாமல் போன அடுத்த நாளே ஊருக்கு வந்துவிட்டான். தாத்தாவும், பாட்டியும் சோதனை காலம் எப்பொழுது முடியும் என்று தவிப்புடன் காத்திருந்தனர்.

நாராயணன் கேபியை சந்தித்த அன்று மாலையே, கிஷோரின் கடையில் பார்த்த அந்த ஒருவனையும் அவன் கூட இருந்த மற்றொரு ஆளையும், நாராயணனின் உதவியோடு எந்த பிரச்சனையும் இன்றி கேபியின் இடத்திற்கு கொண்டு வந்தனர் அவனின் ஆட்கள். நாராயணன் அன்று அவர்கள் மூவரையும் லோட் இறக்க என்று ஜெயராஜிற்கு தெரிந்த, நம்பிக்கையான ஒருவரின் சைட் ஒன்றிற்கு அனுப்பி வைத்தார். கிஷோர் இவர்களுக்கு என்ன வேலை என்பதை எல்லாம் எப்பொழுதும் கேட்பான். அவனுக்கு சந்தேகம் வராதவாறு ஒரு இடத்தை தேர்வு செய்தனர். அங்கிருந்து அவர்களை கேபியின் ஆட்கள் அப்படியே அள்ளி அமுக்கி போட்டு கொண்டனர். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

அவர்களிடம் வாசுகியை பற்றி விசாரிக்க நல்லவிதமாக பேசிய கேபியிடம், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்தவன், திமிர் பேசினான்.

“சரி, சம்பந்தமே இல்லாத உன்னை ஏன் போட்டு அடிப்பானே? காசுக்காக வேலை பார்க்க வந்தவன் தானேனு நினைச்சேன்…. உனக்கு நல்ல சுழி இல்லை போல்…. இரு என் நண்பன் ஒருத்தன் வரான்” என்றான்.

கேபியின் போலீஸ் நண்பன் வந்து, அவன் மொத்தம் குடும்ப விவரமும் சொல்லி, அவனை எப்படி எல்லாம் வைத்து செய்வார்கள் அதன் பின் என்னென்ன கேசில் உள்ளே போட்டு வெளியே வர முடியாமல் செய்வார்கள் என்று சொல்ல, கொஞ்சம் மிரண்டு போனான் அவன். எதற்கும் இருக்கட்டும் என்று நாலு தட்டு, போலீஸ் ஸ்டைலில் தட்ட, கடகடவென்று அனைத்தையும் ஒப்பித்தான் அவன். இடையில் கிஷோர் அவனை அழைத்த போது, எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனை கிஷோரிடம் பேச வைத்தனர்.

திருப்பூரிலிருந்து அவினாசி செல்லும் வழியில், ஒரு பாழாகிய பழைய டெக்ஸ்டைல் மில் கட்டடத்தில் வாசுகியை அடைத்து வைத்து இருப்பதாக சொல்லிவிட்டான் அவன். அவரோடு இவன் நண்பர்கள் மூன்று பேர் இருப்பதாக கூறினான்.

உடனே இரவோடு இரவாக இவர்கள் அனைவரும் அங்கே விரைந்தனர். நாராயணனிடம் இதை தெரிவிக்க, அவரும் அவர்களுடன் வருவதாக கூறினார். அங்கே சென்று அவர்கள் மூவரையும் வளைத்து வாசுகியையும் மீட்டனர். அவர் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்ததால் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றான் கேபி. ஆனால் அவனின் போலீஸ் நண்பன், இப்போது இந்த இடத்திற்கு உடனடியாக கிஷோரை வரவழைக்கலாம், இதை விட அவனை கையும் களவுமாக பிடிக்க நல்ல வாய்ப்பு ஏதுமில்லை என்றான். அதுவும் நல்ல யோசனை என்பதால், வாசுகியிடம் சற்று நேரம் பொறுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்க, அவர் முடியும் என்றார்.

வாசுகியுடன் இருந்த மூவரில் ஒருவனை, கிஷோருக்கு போன் செய்து, வாசுகிக்கு உடம்பு சரியில்லை, ரொம்ப ஜூரமாகவும், மூச்சு விட முடியாமல் இருக்கிறார் என்று சொல்ல சொன்னார்கள். அவனும் வாசுகியை வீடியோ காலில் காட்ட சொல்ல, வாசுகி நன்றாக நடித்தார். கொஞ்ச நேரம் பாருங்க, இல்லை அப்படியே செத்து போயிட்டா அப்படியே விட்டுட்டு அங்கிருந்து கிளம்புங்க டா என்றான் மனசாட்சி இன்றி. சொல்லிவிட்டு அழைப்பையும் துண்டித்தான்.

என்ன டா இப்படி பேசுறான்? அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போனார்கள் அனைவரும்.

வலையில் சிக்குவானா….? இல்லை வலையை பிய்த்து எறிந்து விட்டு தப்பிப்பானா?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!