சீதளம் 29
தன்னை தூக்கி வைத்திருக்கும் வேந்தனை பார்த்த மேகாவோ முதலில் அதிர்ச்சி அடைந்தவள். பின்பு அவனை முறைத்து பார்த்தாள்.
“உன்னை யார் என்னைய தூக்க சொன்னா அறிவுதான என்ன தூக்குறதா சொன்னா”
“அட என்ன பொண்டாட்டி நீ வாட்டசாட்டமா மாமக்காரன் இருக்கும்போது இப்படி நாத்தனார தூக்க சொன்னா அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு. இப்ப பாரு மாமா உன்னை எப்படி அலேக்கா தூக்கி வெச்சி இருக்கேன்னு. நீ உனக்கு இன்னும் எவ்வளவு மாங்கா வேணுமோ பறிச்சு போடு மாமா உன்னை கீழே விடாமல் நல்லா டைட்டா பிடிச்சுக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லியவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க,
“நீ ஆணியே புடுங்க வேண்டாம் மரியாதையா என்னை இறக்கி விடு” என்றாள் மேகா.
“கோவத்துல கூட என் பொண்டாட்டி கோவப்பழம் போல சும்மா செவ செவென்னு அழகா இருக்குடி” என்று அவன் சொல்ல மேகாவுக்கோ கோபத்தில் காதில் புகை வராத குறையாக தன்னுடைய ஒரு காலை தூக்கி அவனுடைய முட்டியில் ஒரு எத்து விட, அவனோ நிலை தடுமாற இருவரும் மரத்தடியில் விழுந்தார்கள்.
“ஐயோ அம்மா என் இடுப்பு போச்சு” என்று கத்தியவாறு ஒரு கையால் தன்னுடைய இடுப்பை பிடித்துக் கொண்டான் வேந்தன்.
மேதாவோ அவன் மேல் விழுந்ததால் அவளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. அதனால் சட்டென அவன் மேலிருந்து எழுந்தவள் தன் மேல் ஒட்டி இருந்த சிறு சிறு இலை தூசிகளை தட்டிவிட்டவாறு அவன் புலம்புவதை பார்த்தவளுக்கோ சிரிப்பு வந்தது.
வாயை பொத்திக்கொண்டு தன்னுடைய சிரிப்பை அவள் அடக்கிக் கொள்ள, அதை பார்த்த வேந்தனோ பற்களை கடித்தவாறு,
“என்ன பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா எல்லாம் உன்னால தான் இருடி உன்ன வச்சிக்கிறேன்” என்று எழுவதற்குள் அங்கிருந்து சிட்டாக ஓடிவிட்டாள் மேகா.
அவள் பின்னோடு இடுப்பை தேய்த்துக் கொண்டு வந்தான் வேந்தன். அங்கு அவனுடைய குடும்பத்தினர் பொங்கல் வைப்பதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்க அவனுடைய மனைவியோ அவனுடைய அம்மாவின் பின் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்து நாக்கை நீட்டி பளிப்பு காட்ட இங்கு இவனோ,
“மவளே கைல கிடச்ச கைமா பண்ணிடுவேன்” என்று கண்களாலேயே அவளை மிரட்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அப்பத்தா வேந்தனையும் மேகாவையும் அழைத்தவர், “ஐயா வேந்தா நீங்க ரெண்டு பேரும் குளத்துல பொங்கல் வைக்கிறதுக்கு இந்த பானையில தண்ணி கொண்டு வாங்க. நல்ல ஞாபகம் வச்சுக்கோங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் கொண்டு வரணும்” என்று அனுப்பி வைத்தார்.
அவர் கொடுத்த பானையை கையில் வாங்கிய மேகாவோ குளத்தை நோக்கி முன்னே நடக்க அவளுக்கு பின்னால் நடந்த வேந்தனோ, “மவளே என்கிட்ட தனியா மாட்னியா”என்று அவளிடம் வம்பு இழுக்க அவளோ,
“இங்க பாரு ஏலியன் என்கிட்ட வச்சுக்காத அப்புறம் சேதாரம் உனக்கு தான்” என்று சொல்லியவள் முன்னே வேகமாக நடந்தாள்.
இங்கு இவனோ நாலே எட்டில் அவளை நெருங்கியவன் அவளுடைய தோளைப் பிடிக்க அவளும் சட்டென அவன் தோளைப் பிடிக்கவும் திரும்பியவளுக்கோ குளத்தின் அருகே நெருங்கியதால் அந்த ஈரத்தன்மையில் கால் வழுக்கியது.
அதில் அவனுடைய சட்டை காலரை இவள் பிடிக்க நிலை தடுமாறிய இருவரும் அந்த குளத்தில் உருண்டு விழுந்தார்கள்.
தண்ணீருக்கு அடியில் செல்லப்போன மேகாவை அவளுடைய இடுப்பை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன் மேல் எழும்ப அவளோ, லொக்கு லொக்கு என இறுமிக் கொண்டே வேந்தனை பேயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
ஆம் அவள் தண்ணீருக்குள் விழுவதற்கு முழுமுதற் காரணமே வேந்தன் தான். முன்னே சென்று கொண்டிருந்த அவளுடைய புடவையை அவளோடே வந்து கொண்டிருந்த வேந்தன் மிதிக்கவும் அந்த குளத்தின் ஈரத்தன்மையும் அவள் கால் வழுக்கவும் தன்னிலை தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தாள்.
அவளுடைய கையைப் பிடித்து தடுக்க நினைத்த வேந்தனும் அவள் அவனுடைய காலரை பிடித்திருந்ததால் அவனும் அவளுடன் சேர்ந்தே விழுந்தான்.
“லூசு ஏலியன் அறிவு இருக்கா இப்படியா புடவைல மிதிப்பா எனக்கு வேற நீச்சல் தெரியாது” என்று அவனை திட்டிக் கொண்டிருக்க அவனோ, தண்ணிரில் நனைந்ததனால் அவளுடைய ஆடை உடலோடு ஒட்டி இருக்க அதில் அவளுடைய மாராப்பு வேறு எந்த ஒரு பக்கமும் செல்லாமல் நடுவில் சுருட்டி கிடக்க ஆடவனின் பார்வையோ எல்லை இல்லாமல் அவள் உடலை மேய ஆரம்பித்தது.
“நான் இங்க என்ன பேசிகிட்டு இருக்கேன்
நீ எங்க பார்த்துட்டு இருக்க” என்று
சட்டென தன்னை குனிந்து பார்த்தவளுக்கோ
மினி ஹார்ட் அட்டக்கே வந்து விடும் போல் இருந்தது.
“யோவ் ஏலியன் ஒரு பொண்ணை எங்கெல்லாம் பார்க்க கூடாதோ
அங்கு எல்லாம் தான் உன் கண்ணு பார்க்கிறது” என்ற
தீயாக முறைத்துக் கொண்டு அவள் கேட்க
அவனோ, சற்றும் தன்னுடைய பார்வையை
அவளுடைய மேனியில் இருந்து விளக்காமல்,
“மத்த பொண்ணுங்கள பார்த்தா தான் தப்பு
ஆனா உரிமையுள்ள பொண்டாட்டிய உத்து உத்தும் பார்க்கலாம்
தேவைப்பட்டா உரிச்சிம் பார்க்கலாம்” என்று சொன்னவன்
அவளுடைய கண்களை பார்த்து கண்ணடிக்க
அவளோ அவனுடைய இந்த பதிலில் செவ்வானமாக சிவந்தாள்
கன்னங்கள் சிவப்பேரி.
அதைக் கண்டு கொண்ட வேந்தனும்
தன்னுடைய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு
அவளுடைய மாராப்பை சரி செய்தவன்
அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க
அப்படியே அவளுடைய இடையோடு கைகொடுத்து பிடித்துக் கொண்டவன்
மற்றுமொரு கையால் குடத்தில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு
அவளுடன் வெளியே வந்தான்.
பின்பு அவர்கள் வரவும்
பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போட்டு
அனைவரும் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டார்கள்.
அன்றைய இரவு மேகாவிடம் சில சில சில்மிஷம் செய்தே
அவளிடம் காதல் களியாட்டத்தை விளையாண்டான்.
அவளுமே என்னதான் அவனை முறைத்துக் கொண்டும்
திட்டிக் கொண்டும் இருந்தாலும்
அவனுடைய இந்த நெருக்கம் அவளுக்கு பிடித்தே இருந்தது.
ஒரு கட்டத்தில் அவனிடம் மொத்தமாக சாய்ந்து போனாள்.
இவ்வராக நாட்கள் சென்று கொண்டிருக்க
மேகாவுக்கோ கடைசி எக்ஸாம் ஆரம்பமானது.
அதற்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே
வேந்தனுடைய வீட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு விட்டாள்.
தன் தோழி பூங்கொடியுடன் ஹாஸ்டலில் தங்கி கொண்டவள்
தன்னுடைய எக்ஸாமையும் நல்ல முறையில் எழுதி முடித்தாள்.
அவ்வப்பொழுது வேந்தனோ அவளை பார்க்க வருவான்.
ஆனால் அவளோ அவனை கிண்டல் செய்து வம்பு இழுப்பாள்.
வேந்தனோ தான் அவளைப் பார்க்க வரவில்லை என்பது போல்
அவளிடம் நாடகம் ஆடுவான்.
“இங்க பாரு
நான் ஒன்னும் உனக்காக இங்க சென்னைக்கு வரல.
நானும் இங்க சென்னைல தான் படிச்சேன்.
இங்க ஒரு வேலையா வந்தேன்
சரி அப்படியே நம்ம தாலி கட்டுன பொண்டாட்டி இருக்காளே
பார்த்துட்டு போகலாம்னு வந்தா ரொம்ப ஓவரா தான் பண்ற”
“இதோட நம்பிட்டேன் நம்பிட்டேன்
நீங்க சொல்றத.
அதான் உங்க மூஞ்சிலேயே எழுதி ஒட்டி இருக்கே
என்ன பார்க்காம ரொம்ப ஏங்கி போய் இருக்கீங்கன்னு
எனக்காக தான் வந்தேன்னு சொன்னா குறைஞ்சா போவீங்க”
என்று மேகா கேட்க.
அவனும்
‘அப்படியா நம்ம மூஞ்சில பச்சையா தெரியுது.
இந்த குள்ளகத்திரிக்கா ஏதோ நம்மகிட்ட போட்டு வாங்குறா’
என்று மனதில் நினைத்தவன்,
“இங்க பாரு
அப்படி எல்லாம் உன் நினைப்புல இங்க யாரும் திரியல
போனா போகுதுன்னு வந்து பார்த்தேன்
ரொம்ப ஓவரா பண்ணாத
போடி போய் ஒழுங்கா எக்ஸாம் எழுதுற வேலைய பாரு
நான் கிளம்புறேன்” என்றவன் கிளம்பி விடுவான்.
அவள் இங்கு சென்னைக்கு வந்ததிலிருந்து
மூன்று முறையாவது அவளை வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.
வேந்தன் வரும்போதெல்லாம் இவர்களிடம் இந்த வாக்குவாதங்கள் நடைபெறும்.
அதைப் பார்த்த பூங்கொடியோ
தன் தலையில் நடித்துக் கொண்டு உள்ளே சென்று விடுவாள்.
இப்பொழுதும் அதேபோல
வேந்தனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு
உள்ளே வந்த தன் தோழியைப் பிடித்துக் கொண்டாள் பூங்கொடி.
“ஏண்டி அந்த அண்ணா ஆசையா உன்ன பார்க்க வந்தா
இப்படியா கிண்டல் பண்ணுவ” என்று பூங்கொடி கேட்க.
அவளோ மாறா சிரிப்போடு,
“அது என்னமோ தெரியலடி
அந்த ஏலியனை பார்த்தாலே கலாய்க்கணும்னு தோணுது” என்றாள் மேகா.
“தோணும் தோணும்
உனக்காக அவர் எவ்வளவு ஆசையா உன்ன பார்க்க வர்றாரு
ஆனால் உனக்கு அவர கலாய்க்கணும்னு தோணுது
இதை எங்க போய் சொல்ல.
சரி மேகா
உனக்கு வேந்தன் அண்ணாவை புடிச்சிருக்கு தானே” என்று பூங்கொடி கேட்க
அதற்கு மேகாவோ,
“யாருக்கு
எனக்கு அந்த ஏலியன புடிச்சிருக்கு
நீ பார்த்த” என்றாள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு மேகா.