சீதளம் 30
“என்னடி இப்படி சொல்ற அப்போ உனக்கு அந்த அண்ணாவ பிடிக்கலையா”
என்று பூங்கொடி கேட்க.
அதற்கு அவளோ,
“புல்லா அவனை புடிக்கலைன்னும் சொல்ல முடியாது புடிச்சிருக்குன்னும் சொல்ல முடியாது” என்று இழுத்தவள்,
“எனக்கே தெரியலடி அவன புடிச்சிருக்கா புடிக்கலையான்னு ஆனா அந்த ஏலியன் கூட இருக்கும்போது நான் நானா இருக்கேன்.
சந்தோஷமாக இருக்கிறேன் என்கிட்ட அன்பா பேசி நான் பார்க்கல என்கிட்ட எப்பவும் ரூடா தான் நடந்துக்குவான் ஆனா இங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் அவனை ரொம்பவே மிஸ் பண்ணேன்.
ஆனா அவன் அப்பப்போ இங்க வந்து என்ன பாக்கும்போது எனக்குள்ள அவ்ளோ சந்தோஷமா இருக்கும் ஆனா அதை அவங்கிட்ட காட்டிக்க தான் எனக்கு மனசு வரல” என்று மேகா சொல்ல.
பூங்கொடியோ,
“அட போடி லூசு கிறுக்கி இதுல இருந்தே உனக்கு தெரியலையா? அந்த அண்ணா உனக்குள்ள எப்பவோ வந்துட்டாரு. ஆனா நீதான் வீம்பு புடிச்சுகிட்டு எனக்கு பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டு அவரையும் கலாச்சிக்கிட்டு திரியுற. இதுவும் ஒரு வகையில காதல் வந்ததற்கான அறிகுறி தான்” என்றவள் அவளைக் கடந்து சென்று விட்டாள்.
இங்கு மேகாவோ பூங்கொடி சொன்னதை யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஒருவேளை இருக்குமோ! டேய் ஏலியன் கொஞ்சம் கொஞ்சமா நீ என் மனசுக்குள்ள வந்துட்டியா.
இப்படி ஒருத்தி கவனிச்சு பார்க்குற அளவுக்கு நான் உன் நெனப்புல சுத்திகிட்டு இருந்து இருக்கேன் பாத்தியா சரியான பிராடு பையன்.
அச்சச்சோ நாளைக்கு எக்ஸாம் இருக்கு பஸ்ட் அதை முடிப்போம் அதுக்கப்புறம் இந்த ஃப்ராடு ஏலியன பத்தி யோசிப்போம்.
போய் தூங்கணும் இப்பவே லேட் ஆகிட்டு காலையில அப்புறம் சீக்கிரம் எந்திரிக்க முடியாது.
அடியே பூங்கொடி கதவைத் திறடி சீக்கிரமா வெளிய வா”
என்று பாத்ரூமில் இருந்த பூங்கொடியை அழைத்தாள்.
அவள் வந்த பிறகு உள்ளே சென்றவளும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து துயில் கொள்ள ஆரம்பித்தாள்.
மறுநாள் அவர்களுடைய கடைசி எக்ஸாம் நல்லபடியாக எழுதி முடித்தவர்கள் காலேஜ் விட்டு வெளியே வர மேகாவுடைய தந்தையோ அவளிடம் பேசுவதற்காக எத்தனையோ முறை வந்து விட்டார்.
ஆனால் அவளோ அவரிடம் பேசவே இல்லை.
அவளுக்கோ தன்னை பெண் கேட்டு வந்த வேந்தனின் குடும்பத்தை அவளுடைய அப்பா அசிங்கப்படுத்தியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அதனால் தன் தந்தையிடம் சண்டையிட்டு ‘இனி என் முகத்தில் முழிக்காதீர்கள்’ என்று ஒரேடியாக வந்துவிட்டாள்.
ஆனால் சத்யராஜிகோ ஒற்றை மகளான மேகா தன்னுடைய உறவை முறித்துக் கொண்டு சென்றதில் மிகவும் வருந்தினார்.
மகள் இங்கு வந்ததை அறிந்தது முதல் அவளிடம் மன்னிப்பையும் யாசித்து பழையபடி தன்னுடன் உரையாடுமாறு எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டார்.
ஆனால் அவர் பெற்ற மகளோ தன்னுடைய வீம்பை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.
“அப்பா ஏதோ தெரியாம தப்பு செஞ்சுட்டேன் மன்னிச்சிருமா எனக்கு இருக்கிறது நீ ஒரே ஒரு பொண்ணு
நீயும் இப்படி என்கிட்ட பேசாம போனா அப்பா என்னமா செய்வேன்.
நீ பேசாம போனதுல இருந்து உங்க அம்மாவும் என்கிட்ட பேசுவதே கிடையாது.
அவ்ளோ பெரிய வீட்டுல தனிமரமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.
இப்பதாமா புரியுது.
எவ்வளவுதான் கோடி கோடியா பணம் சம்பாதித்து வைத்திருந்தாலும் நம்ம மேல பாசம் காட்ட ஒரு ஜீவனாவது இருந்தாதான் அதுக்கு உயிர்ப்பு இருக்குன்னு இப்ப நான் புரிஞ்சுகிட்டேன்.
இந்த அப்பாவை மன்னிச்சிடுமா” சென்று அவளிடம் கேட்டார்.
அவளோ,
“ஏம்பா என் பிரண்டு இந்த பூங்கொடி இவளும் ஒரு ஏழை பொண்ணு அப்படின்னு தானே
அவ நம்ம வீட்டுக்கு வர்றது கூட நீங்க விரும்பல.
ஆனா எனக்கு அப்போ புரியல பூங்கொடிதான் கூச்சப்பட்டுக்கிட்டு வராம இருக்கான்னு நினைச்சேன்.
ஆனா அதுக்கு பின்னாடியும் உங்களுடைய பணக்கார புத்தி தான் இருந்திருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்.
அந்த பணத்துக் கூடயே நீங்க வாழுங்க. உங்களுக்கு மனுஷங்க எல்லாம் தேவையே இல்லை”
“அம்மா அப்படியெல்லாம் சொல்லாதம்மா என்ன மன்னிச்சிடு
நான் என் தப்பா உணர்ந்துட்டேன்
ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன்மா.
அம்மாடி பூங்கொடி நீ என்னை மன்னிச்சிடுமா”
என்று அருகில் நின்ற பூங்கொடியிடமும் சத்யராஜ் மன்னிப்பை வேண்ட
அவளோ,
“அய்யோ அங்கிள் என்ன இது என்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு
அதெல்லாம் வேண்டாம்
சும்மா இருங்க.
பாவமா இருக்கு டி சும்மா இருடி போதும்டி
அதான் அங்கிள் வருத்தப்பட்டு பேசுறாரே
இன்னும் பழச சொல்லி அவர் மனச காயப்படுத்தாத”
என்று பூங்கொடி சொல்ல
அவளோ ஒரு நமட்டு சிரிப்போடு அவளைப் பார்த்துவிட்டு தன் தந்தையை பார்த்தவள்,
“பார்த்தீங்களா அப்பா இது தான் ஒரு ஏழையோட குணம்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருந்தாலும்
அவங்ககிட்ட கண் கலங்கி மன்னித்துவிடுங்கள் என்று அந்த ஒரு வார்த்தை சொன்னதும்
அவங்க மனசு இறங்கி வந்துருவாங்க.
ஆனா உங்கள மாதிரி பணக்காரங்க கல்நெஞ்சகாரங்க.
அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கிற ரகமா.
அதே பணக்கார வரிசையில் வந்த உங்க பொண்ணு
அதான் நான்
எனக்கும் கொஞ்சம் கல்நெஞ்சம் இருக்கு
அதனால உங்கள அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டேன்.
நான் உங்க கிட்ட பழையபடி சகஜமா பேசனும்னா
எந்த குடும்பத்தை நீங்க அவமானப்படுத்தி அனுப்புனீங்களோ
அந்த குடும்பத்துக்கிட்ட வந்து நீங்க மன்னிப்பு கேளுங்க.
அவங்க உங்களை மன்னிச்சா
நான் உங்களை மன்னிக்கிறேன்
இப்ப போங்க”
என்றவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
எக்ஸாம் முடிந்ததும் தன்னுடைய தோழி பூங்கொடியுடன் வேந்தனின் ஊருக்கு வருகை தந்தாள் மேகா.
இந்த ஒரு மாத கால இடைவெளியில் அவன் மேல் உண்டான நேசம் சற்று அதிகரித்தது என்று கூறலாம்.
அவளிடம் அத்து மீறும் அவள் கணவனான அந்த ஆண்மகனை அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
ஆனால் அவனுடன் இருக்கும்போது கோபத்தை முகமூடியாக அணிந்து கொண்டு வலம் வருபவள்
இன்று அவன் இல்லாத இந்த தனிமையில் அதை வெகுவாகவே உணர்ந்து கொண்டாள்.
எப்போதடா தன்னவனை பார்க்கலாம் என்றும் அவள் ஆசையாக வந்து கொண்டிருந்தாள்.
இங்கே வேந்தனோ அவளைப் போலவே அவளைப் பார்க்க முடியாமல் ஏங்கிப் போயிருந்தவனும்
இன்று தன் மனைவி வருகிறாள் என்று அழகாக கிளம்பியவன்
அவளை அழைத்து வருவதற்காக தன்னுடைய ஜிப்பில் ஏறியவன்
அங்கிருந்து கிளம்பும்போது அவனுடைய காதல் கொண்ட மனமோ சற்று நிதானித்தது.
‘ஜீப்ல வேண்டாம் பைக்ல போவோம்
அப்பதான் வரும்போது இன்னும் நல்லா இருக்கும்’
என்று நினைத்து சிரித்துக்கொண்டவன்
ஒற்றைக் கையால் தன்னுடைய தலைமுடியை கோதி கொண்டவன்
பைக்கை எடுத்துக்கொண்டு தன்னுடைய மனைவியை அழைக்க புறப்பட்டான்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கினார்கள் மேகாவும் பூங்கொடியும்.
மேகாவின் கண்களோ அந்த பஸ் ஸ்டாண்ட் முழுவதும்
தன்னுடைய ஏலியன் அங்கு வந்திருக்கிறானா என்று அலைபாய்ந்து தேடிக் கொண்டிருந்தது.
பக்கத்தில் நின்ற அவளுடைய தோழி பூங்கொடியோ
அவளுடைய அலைப்புருதலைக் கண்டதும் மௌனமாக சிரித்துக்கொண்டாள்.
‘என்ன இவர் எங்கு தேடியும் ஆளையே காணோம்
இன்னைக்குத் தான் நான் வருவேன்னு தெரியும்ல.
சூரியவம்சம் படத்துல வர்ற சரத்குமார் மாதிரி காத்துக்கிட்டு இருக்காம
நான் வந்து அவருக்காக காத்துகிட்டு இருக்கனுமா.
இந்த ஆளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல’
என்று தன்னுடைய மனதிற்குள் வேந்தனை அவள் திட்டிக் கொண்டிருக்க,
அவளுடைய பின்புற தோளில் யாரோ கை வைக்க,
பட்டென திரும்பி பார்த்தவள்
அங்கு அவளுடைய ஏலியனைக் கண்டதும் சட்டென அவள் முகம் மலர்ந்தாலும்
தன்னை காக்க வைத்த அவனை முறைத்தபடியே பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்ன யாரையோ ரொம்ப நேரமா தேடுற மாதிரி இருக்கு”
என்று தன்னுடைய மீசையை ஒரு கையால் முறுக்கியவாறு
அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தான் வேந்தன்.
உடனே மேகாவும் அதே திமிரோடு,
“நான் இங்க யாரை தேட போறேன்.
நான் ஒன்னும் யாரையும் தேடலை
இவரு பெரிய சீஐடி கண்டுபிடிக்க வந்துட்டாரு”
என்று முறுக்கிக் கொள்ள.
அதில் லேசாக புன்னகைத்து விட்டு,
“ஓ அப்படியா வா போலாம்”
என்று அவளுடைய கை பிடிக்க.
அவளோ அவனுடைய கையை உதறிவிட்டு,
“எங்க?
நான் ஏன் உங்க கூட வரணும்
எனக்கு வீட்டுக்கு போக வழி தெரியும்
நான் என் பிரண்டு கூட போயிருக்கிறேன்”
என்று தன் அருகே அவள் பூங்கொடியை திரும்பி பார்க்க.
அவளோ அங்கு இல்லை.
“இவள் எங்க போனா”
என்று இப்பொழுது அவளைத் தேட
தூரத்தில் அவளுடைய தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பூங்கொடியோ
மேகா அவளை பார்க்கவும் அவளுக்கு tata காட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
“அடிப்பாவி இப்படி பண்ணிட்டாலே”
என்று சொல்லிக் கொண்டாள் மேகா.
“சரி சரி வா போகலாம்
நம்மளோட சண்டையை வீட்ல போய் வச்சுக்கலாம் வா”
என்று அவளுடைய லக்கேஜை ஒரு கையில் தூக்கிக் கொண்டவன்
மற்றொரு கையால் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான் வேந்தன்.