மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற…
அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான். ஷோல பேசுவாரு தட் சிட். மற்றபடி அவரு யாரு, எங்க இருக்காரு, அவரு கேரக்டர் என்ன, இன்னுழவன் அப்பிடிங்கிற பெயரே ரியல் நேம் தான. இப்பிடி ஏதுமே தெரியாத அவர நான் ஏன்டா காதலிக்கணும். நீயா கற்பனை பண்ணிக்காத. அப்படி இருந்தா நான் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா” பதில் வினவினாள் ஆவேசமாக.
“அதே மாதிரி தான் அந்த பொண்ணு என்னோட கிரஷ். பட் அவள பாக்கும்போது எனக்குள்ள ஏதோ தோணுது. அது லவ்வான்னு எனக்கு தெரியல. அப்படி இருந்தா என் செல்ல அக்கா உன் கிட்ட சொல்லாம இருப்பேனா” என்றவன் அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.
“நீ சொல்லறத வச்சு பார்த்தா சீக்கிரமே அப்ப அந்த பொண்ண நீ லவ் பண்ணிட்டு வந்து நிக்க தான்டா போற” என்றாள் மேக விருஷ்டி ஒரக்கண்ணில் நகைக்க.
“பார்க்காலாம் சிசி, மேபி என்ன மாதிரி நீயும் நிக்கலாம்ல” அவன் புதிராயாய் பேச…
“டேய் கொஞ்ச நாள்ல கலயாணத்த வச்சிகிட்டு, நான் லவ்ன்னு வந்து நின்னா மைதிலி என்ன ஓட விட்டே அடிக்கும் டா…” குலுங்கியவள் நகைத்தாள் மனம் முழுதும் வெறுமையாக.
“டேய் அத நானே நியாபக படுத்திக்க மாட்டேன். இதுல உனக்கு வேற நியாபக படுத்தனுமா போடா…” என அவன் மண்டையை ஆட்டி விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டி.
நடக்க விருக்கும் கல்யாணத்தில் துளியும் நாட்டம் இல்லாத செல்லும் தன் சகோதரியினை நினைத்து விரக்தியாய் சிரிக்க மட்டும் தான் முடிந்தது நிவர்த்தனனால்.
இன்னுழவன் தவிர்த்து அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பாட்டிற்காக அமர்ந்திருக்க பரிமாறிக் கொண்டிருந்தார் கோதாவரி.
சக்திவேல் குரலை செருமியவர், “என்ன இன்னும் உன் பையன் வீட்டுக்கு வரலையா?” கேட்டார் சாப்பிட்டவராய்.
“இல்லங்க இப்ப வரக்கூடிய டைம் தான் இப்ப வந்துருவான்” கோத்தாவரி கூற…
“அவ பையன்ன நீ எதுக்குடா விசாரிக்கிற. ஏண்டி இவள என்ன பார்த்துகிட்டு இருக்க கொஞ்சம் சட்னி வை. எப்ப பார்த்தாலும் நைட் இந்த இட்லியை மட்டுமே எனக்கு தா…” என்றவாரு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அம்பிகாமா.
அவரை ஏற இறங்க முறைத்த சக்திவேலோ, “அவ பையனா…! ஏன் அவனப் பத்தி கேட்க எனக்கு உரிமை இல்லையா?” காரமாக வந்தது அவர் வார்த்தை.
இம்முறை சக்திவேல் நேர் கொண்டு பார்த்த அம்பிகாமாவோ,
“நான் அவன உன் பையன் இல்லைன்னு சொல்லலப்பா, நீ தான் அவகிட்ட உன் மகன் இன்னும் வரலையான்னு கேட்ட. நீ கேட்ட தோரணைய வச்சு தான் நான் அவன அவ மகன்னு சொன்னேன்,
நீ அவகிட்ட நம்ம பையன் வந்துட்டானா கேட்கலையே… அப்படி கேட்டிருந்தன்னா நான் உன் பையனும் சொல்லி இருப்பேன்” என்றார்.
“என்கிட்ட மட்டும் இப்படி கூட கூட பேசுங்க, ஆனா உங்க பேரன் பண்றது எதையுமே கேட்காதீங்க” சக்திவேல் கோவமாய் சாட…
“என் பேரன் உன்ன விட எல்லா இடத்துலயும் எல்லா விதத்துலயும் சரியா தான் நடந்துகுவான் டா…” என்றவர் பதிலுக்கு விடாது சாடிக் கொண்டிருக்க, இனிதுழனியோ கோத்தாவரியை பார்த்தாள் இருவரையும் சமாளிக்கும் பொருட்டு.
“நீ சும்மா இருடி… நீ கேட்க வேண்டிய கேள்வி தான் நான் கேட்டுட்டு இருக்கேன். அது என்ன எப்ப பாத்தாலும் உன்மகன் உன்மகன். அப்போ இவனுக்கு பிறக்கலையா அவன். இல்ல அவன் வேற யாருக்கும்…”
“அம்மா என்ன பேசுறீங்க நீங்க” என அம்பிகா வார்த்தைக்கு இடை மறித்து கத்தி இருந்தார் சக்திவேல் ஆக்ரோஷமாக.
சரியாக அந்நேரம் வீட்டை அடைந்திருந்தான் இன்னுழவனும். போனில் அகரனுடன் பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு சக்திவேலின் சத்தம் வாசல்படியிலேயே காதை கிழித்தது.
“டேய் நான் அப்புறம் பேசுறேன். அப்பத்தாவும் அப்பாவும் ஏதோ உள்ள காமெடி பொங்கல் கிண்டிகிட்டு இருக்காங்க நான் அதை எங்கன்னு பார்த்துட்டு கூப்பிடுறேன்” என அலைபேசி ஊடு கூறியவன், வேகமா உள்ளே நுழைந்திருந்தான்.
“என்னாச்சு அப்பத்தா ஏன் சத்தம் வாசல் வர கேக்குது?” அவ்வளவு நேரம் இலகுவாக பேசிக்கொண்டு வந்தவன் முகமது சக்திவேலை கண்டவுடன் விறைத்தது.
சக்திவேலும் எழுந்து நின்றவர் இன்னுழவனை கண்டு மேலும் ஏதும் பேசாது அமைதியாய் அமர்ந்து கொள்ள, “அந்த பயம் இருக்கட்டும்” என கிளுக்கி சிரித்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்ட அம்பிகாமாவோ,
“அது ஒன்னும் இல்லடா பேராண்டி சும்மா நானும், உன் அப்பனும் யார் குரல் ஒசத்தின்னு குரல் கொடுத்து விளையாடிகிட்டு இருந்தோம். நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் சக்திவேலை நக்கலாய் பார்த்த தன் பார்வையை மீட்டு புன்முறுவலுடன் இன்னுழவனிடம்.
அதை கேட்டு அவனும் பெருமூச்சு விட்டவன், “சரி இந்தா… அகரன் உனக்கு மோமோஸ் வாங்கி கொடுத்து விட்டான்” தன் கையில் இருந்த பார்சலை அம்பிகாமா அருகில் வந்து நீட்டி இருந்தான் இன்னுழவன்.
பற்கள் தெரிய வேகமாக அதைப் பெற்றுக் கொண்டவர், “வெஜ் மோமோஸா? இல்ல சிக்கன் மோமோஸாடா?” என்ன கேட்டபடி ஆர்வமாக அதை பிரித்தவர், இந்தாடி இவளே இந்த கல்ல உன் புருஷன் தலையிலேயே சக்திவேல் ஏறெடுத்து முறைக்க…
“சாரி… உன் புருஷன் தட்டுலையே கொட்டு” என அதை எடுத்து வாயில் வைத்தவர் ஒரு கடி கடித்தவாறு, “என்னடா வெஜ் வாங்கி கொடுத்து விட்டு இருக்கான்” என்ற போதும் அதை ருசித்து சாப்பிட தான் செய்தார்.
அப்படியே கோதாவரியையும், இனிதுழனியையும் பார்த்தவர், “அடியேய் ஆளுக்கு ஒன்னு ஒன்னு எடுத்துக்கோங்க. உங்கள பாக்க வச்சு தின்ன அப்பறம் என் வகுத்துக்கு ஏதாவது ஆயிட போகுது” என ஆர்வமாய் சாப்பிட கோதாவரியும், இனிதுழனியும் மென்புன்னகையுடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
“இந்த நேரம் சிக்கன்” இன்னுழவன் பேச… குறுக்கிட்ட சக்திவேலோ, “ஏன் மா இந்த நேரம் இந்த மாதிரி உணவெல்லாம் சாப்பிட்டா உன் உடம்புக்கு ஏத்துக்குமா. இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?” அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தான் இன்னுழவன்.
“கொடுக்குறத திண்ணட்டு இருக்க வேண்டியது தான இதுல சிக்கனா… ஜொக்கன்னு சொல்லிக்கிட்டு, கண்டவன் எல்லாம் வாங்கி…” என்றவர் பொறிந்து தள்ள…
படியேறி சென்று கொண்டிருந்த இன்னுழவனோ அதைக் கேட்டு விட்டான். “அப்பா…” சட்டென்று திரும்பியன் குரலில் கடுமை நிறைந்திருக்க, அவன் கூர்பார்வையால் அவர் மீது நெருப்பை உமிழ்ந்திருந்தான் ஏகத்திற்கு.
அதில் தடுமாறிய சக்திவேலோ சட்டென்று கையை கழுவி எழுந்து கொள்ள கால்கள் சற்று தடுமாறி விட்டது.
வேகமா இனிதுழனி விழாது தாங்கி பிடிக்க, “பார்த்துடா வயசாகிட்டுப் போகுது இல்ல. பொறுமையா போ. ஏதுக்கும் சுகர், பிபி இருக்கான்னு சோதிச்சிக்கோ. ஒரு தடி வாங்கி பிடிச்சுக்கோ. சக்திவேல் புரியாது பார்க்க, ஏன்னா எப்போதும் பிடிச்சிக்கிட்டு இருக்க முடியாதுல. கோதாவரியை பார்த்தவர் உன் புருஷனுக்கு இனி பத்திய சாப்பாடு போடு” என்றார் எள்ளலாக மோமோஸை ரசித்து சாப்பிட்ட வண்ணம் அம்பிகாமா.
பெருமூச்சு இழுத்து விட்டு சக்திவேல் கடுப்புடன், “என்னமா நான் உன்ன சொன்னா… நீ என்ன சொல்றியா…” என்றவரிடம், “டேய் நிதர்சனத்த சொன்னேன் டா…” என்றார் வாயில் மோமோஸை மென்றவாரு புன்னகை தவழ.
சக்தி வேல் மேலும் ஏதும் பேசாது அனைவரையும் பார்த்து முறைத்து வைத்துவிட்டு நகர, அப்பத்தாவின் பேச்சில் அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த கடுமை தன்மை மறைய, “ஆனா அப்பத்தா நீ இருக்கியே…” என இதழ்கள் மெல்ல விரிந்து கொள்ள அறைக்குள் சென்று கொண்டான் இன்னுழவன்.
இங்கு எப்படி இருக்க அங்கோ…
சோமசுந்தரம்,மைதிலி, மேக விருஷ்டி, நிவர்த்தனன் உட்பட நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“மாப்பிள்ளை வீட்ல பேசியாச்சு நெக்ஸ்ட் வீக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சொல்லிட்டாங்க. அதுக்கு அடுத்த வாரம் ஷாம் லண்டன் கிளம்புறானாமா… அதனால மேகாவையும் ரெடியா இருக்க சொன்னான்.” என ஆரம்பித்தார் சோமசுந்தரம்.
“ரெடியா இருக்க சொன்னானா…” இல்ல சொன்னாங்களாப்பா…?” என கேட்டான் அவரைப் பார்த்து நிவர்த்தனன்.
“ப்ச்… நிவர்த்தனா என்ன இது மரியாதை இல்லாம பேச்சு. அவன், இவன்னு…” எனக் கடிந்து கொண்டாள் மேக விருஷ்டி.
“ஏன் அத நீங்க பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளையால சொல்ல முடியாதா…” என அடுத்த கேள்வியைத் அவன் தொடுக்க,
“ப்ச்… நிவர்த்தனா நீ என்ன கூட கூட பேசிக்கிட்டு இருக்க. அவன் ரொம்ப பிசியா இருக்கதால வீட்ல சொல்லி சொல்ல சொல்லி இருக்கான், இதுல என்ன தப்பு இருக்கு” என்று குரல் நுழைத்தார் மைதிலி.
“ஓ… அவளுக்கு நிச்சயதார்த்தம் பண்ணி வச்சி ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட அந்த ஷாம்பு பாட்டிலால… நிவர்த்தனா…” மைதிலி கத்த, மேக விருஷ்டி சிரிப்பை அடக்க,
பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிமா… அந்த ஷாமுக்கு இவகிட்ட ஒரு ஹாய் சொல்ல கூட டைம் இல்லையா. ஹாய் சொல்ல கூட டைம் இல்லாதவன் நாளைக்கு கல்யாணம் முடிச்சுட்டு போயி என் அக்காவ எப்படி பார்த்துப்பான்” என்றான் தாடை இறுகியவனாய்.
“அதெல்லாம் நல்லா பாத்துப்பான் நீ கொஞ்ச நேரம் வாய மூடு. கல்யாணம் பண்ணிக்க போற அவளே அமைதியா இருக்கா நீ என்னடா கூட கூட பேசிக்கிட்டு இருக்க” என அவன் வாயை அடைத்தார் மைதிலி.
அவனோ மேக விருஷ்டியை முறைத்து சாப்பாட்டை தொடர…
மேலும் பேசிய மைதிலி, “இந்த கல்யாணம் அப்பா ஊர்ல வச்சி நடத்தணும்னு அப்பா ஆசைப்படுறாரு. இதை மாப்பிள்ள வீட்டிலும் பேசியாச்சு அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. அதனால அடுத்த வாரம் எல்லாரும் ஊருக்கு கிளம்பற மாதிரி இருக்கும். உங்க ரெண்டு பேரோட வேலைய எப்பிடி ஷெட்யூல் பண்ணனுமோ பாத்துக்கோங்க” என்றார்.
“வாவ்… வாவ்… உங்க விருப்பப்படி மாப்பிள்ளை பார்த்துட்டீங்க. அவர் விருப்பப்படி கல்யாணத்த அவர் ஊர்ல பிக்ஸ் பண்ணிட்டீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்க போறவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை நீங்க கேட்டீங்களா” என சாப்பாட்டை இடையில் முறித்து ஆதங்கமாக எழுந்துவிட்டான் நிவர்த்தனன்.
“டேய் நிவர்த்தனா…” என மேக விருஷ்டி அவனை அடக்கியவள், “என்னடா இது அப்பா, அம்மாவ எதிர்த்து பேசிட்டு இருக்க. இப்படித்தான் நான் உன்ன வளர்த்தேனா…?” என சகோதரியானவள் தாயாய் மாறி கண்டிக்க…
“ப்ச்…” என முகம் கோண சலித்துக் கொண்டு பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிக்கா”
“சாரி என்கிட்ட இல்ல அப்பா அம்மாகிட்ட” அவள் திருத்த,
“சாரிப்பா… சாரிமா… அண்ட் நீங்க எல்லாரும் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு கிளம்புங்க. என்னோட டீன் டாட்டர்க்கு சர்ஜரி இருக்கு. அதனால நான் ஆஸ்திரேலியா போக வேண்டி இருக்கும். அதை முடிச்சிட்டு நான் டைரக்ட்டா ஊருக்கு வந்துடறேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
செல்லும் அவனை வெறித்து பார்த்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டியும். பின் சோமசுந்தரமும், மைதிலியும் பார்த்துக் கொண்டனர் ஆழ்ந்து ஒருவரை ஒருவர்.
செங்கோதை மணம் வீசும்…
Don’t miss it your Golden comments and likes friend’s