அத்தியாயம் 6

4.5
(8)

பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தான் இன்னுழவன். இங்கு இவன் பெரும் மூச்சு விட… அங்கு காலை துயில் கலைந்து இவர்களின் சம்பாஷனையை கேட்டபடி  அமர்ந்திருந்தான் நிவர்த்தனன்.

இன்னுழவனோ குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்றவன்,  “மாமா… உன்  பொண்ண கொடு… ஆமா… சொல்லிக்கொடு… இது சாமி போட்ட முடிச்சி… அது தாண்டா மூணு முடிச்சி… தானே… தன ன்னானனே…” பாடல் வரிகள் துள்ள, தன் சிகை நீரை இரு கை  விரல்களால் உதறிக் கொண்டிருக்க, அலறியது மேசையில் இருந்த அவனது அலைபேசி.

அலைபேசியில் பெயர் இல்லாது  வெறும்  இலக்கங்களே தொடு திரையில் தெரிய… நெற்றி சுருங்கியவன் அதற்கு உயிர் கொடுத்து காதில் வைத்தான்.

இலகு தன்மை காற்றில் பறக்க, குரலில் கடுமை தானாக குடிவந்தது.

“ஹலோ யார் பேசுறது…?”

மீண்டும் “ஹலோ யார் பேசுறீங்க?”

அந்த பக்கம் மௌனம்.

“ப்ச்… ஹலோ யாருங்க பேசுறீங்க காலையிலேயே போன் போட்டு இப்படி பேசாம இருக்கீங்க?” இன்னுழவன் குரல் உயர்ந்தன.

இன்னுழவன் குரலைக் கேட்டதும் மனதிற்குள் ஆயிரம் இன்பச்சாரல் வீச… விழிகளில் விழி நீர் நிறைய எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி, “இன்னு… இன்னுழவன்ங்களா?” வார்த்தைகள் திணற கேட்கப்பட்டது அலைபேசியின் எதிர்ப்புறத்திலிருந்து.

“ஹிம்… ஆமா இன்னுழவன் தான் பேசுறேன் நீங்க யாரு பேசுறீங்க?”

“ஊர் தலைவர் இன்னுழவன் ஆ… பேசுறீங்க?” என அடுத்த கேள்வியையும் கேட்க,

“ஹிம்… ஆமாங்க ஊர் தலைவன் இன்னுலவன் தான் பேசுறேன். நீங்க யாரு பேசுறீங்க உங்களுக்கு என்ன வேணும்” என்றான் இன்னுழவன் சற்று பொறுமை இழந்தவனாய்.

“நான் சென்னையில் இருந்து சோமசுந்தரம் பேசுறேன்.” என்றார் எதிர்ப்புறத்தில் இருந்து.

இன்னுழவனும் அலைபேசியை காதில் வைத்து தோளோடு முண்டு கொடுத்தபடி  கண்ணாடி பார்த்து உடை மாற்றி  தயாரானவன், “சோமசுந்தரமா! எந்த சோமசுந்தரம்? சரி உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு காலையில கூப்பிட்றீகிங்க?” என்றான் அழுத்தமாக அறையை விட்டு வெளி வந்து படி இறங்கிப்படி.

சோமசுந்தரமும் தனது உணர்வுகளை ஒரு பாட சமநிலைப்படுத்திக்  கொண்டார். மாட்டாரா என்ன! பிறந்த முதல் தூக்கி வளர்த்தவன் குரல் ஆயிற்றே. பல வருடங்களுக்கு கழித்து இன்று கேட்கும் பொழுது உயிர் வரை தீண்டிச் சென்றது அவரின் உணர்வலைகள்.

இங்கோ இன்னுழவன் அலைபேசியுடன் வர, “வாடா சாப்பிடலாம் பேராண்டி” அப்பத்தா அழைக்க… காதில் இருந்த ஃபோனை அவன் காண்பிக்க, “சரிடா  பேசிட்டு வா” என்றவர் சாப்பாட்டைத் தொடர, இன்னுழவன் ஹாலில் அமர்ந்தான் சக்திவேலின் எதிர்க்கே.

அவரும் இன்னுழவன் என அறிந்தும் அவனை ஏறெடுத்து பார்க்காது தன் கவனத்தை செய்தித்தாளில் புதைத்திருந்தார்.

சோமசுந்தரமோ பேச்சை தொடர்ந்தார்…

பெருமூச்சு இழுத்து விட்டவர், “நான் சோமசுந்தரம் பேசுறேன் சென்னையிலிருந்து பேசுறேன்.”

“ஹிம்… அதான் சொன்னிங்களே…” இன்னுழவன் சாட

“ஹிம்… என்னோட சொந்த ஊர் கிருஷ்ணகிரி தான். ஆனா, நான் இப்ப கிருஷ்ணகிரியில இல்ல சென்னையில இருக்கேன். என்னோட சொந்த ஊர்ல என் பொண்ணுக்கு கல்யாணம் நடத்தணும்னு நான் விருப்பப்படுறேன்.

அதான் அத பத்தி நான் விசாரிக்கும் போது ஊர் தலைவர் கிட்ட பேசணும், அவர் அனுமதி கொடுத்ததுக்கு அப்புறம் தான் கோயில்ல அதுக்கான வேலைகள் நடக்கும் அப்படின்னு சொன்னாங்க” என அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல் முதல் முறை கேட்டு தெரிந்து கொள்ளும் விதமாக கேட்டார் சோமசுந்தரம்.

ஆம் அங்கு நல்லதோ கெட்டதோ ஊர் தலைவரிடம் முறையாக கூறி அவர் உத்தரவு கொடுத்த பின்பே அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் அரங்கேறும். இப்பொழுது உத்தரவு கொடுக்கும் இடத்தில் இருப்பது இன்னுழவன் தான். அவன் ஒப்புதல் வணங்கியபடியே அணைத்து நடந்தேறும்.

தாடை வருடியவன், “உங்களுக்கு இந்த ஊருன்னு சொல்றீங்க இந்த ஊர்ல உங்க குடும்பப் பெயர் என்ன? இங்க உங்களோட பூர்வீகம் வீடு எங்க இருக்கு? நீங்க இங்க யாரோட பையன்? உங்களுக்கு இந்த ஊர்ல சொந்த பந்தம்னு யாரும் இல்லையா? அதுமட்டுமல்லாமல் இத்தனை வருஷம் இந்த ஊருக்கு நீங்க வந்ததே இல்லையா?” என அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுத்தான் இன்னுழவன் சரமாய்.

அவன் என்னவோ சர்வசாதாரணமாக தான் கேள்வியைக் கேட்டான். ஆனால், அவன் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் இங்கு ஆடிப்போய் அமர்ந்திருந்தது என்னவோ சோமசுந்தரம் தான். எப்படி பதில் கூறுவது என்னும் தவிப்புடன்.

“அது வந்து…” சோமசுந்தரம் தயங்க

“ஹிம்… சொல்லுங்க…” என்றான் மென்மையாக அவர் தயக்கம் புரிந்து.

“என்னோட பேரு சோமசுந்தரம்.  என்னோட அப்பா பேரு ஆறுமுகம். அம்மா பேரு வள்ளியம்மாள். எங்க குடும்பப் பேரு ஆறுமுகனார் குடும்பம். எங்களோட பூர்வீக வீடு…” என்றவர் கூறி முடிக்கும் முன்

“மாமா…” என்றான் அழுத்த திருத்தமாக இன்னுழவன், குரலில் மின்னல் வெட்ட.

அவ்வளவு தான் சோமசுந்தரத்தின் விழி நீர் அவர் கன்னத்தில் பரவி இருந்தது.

இங்கு இன்னுழவன் இதழ்கள் மாமா என உச்சரித்த அடுத்த கணம்  தன் கவனத்தை திருப்பி சட்டென தன் விழிகளை உயர்த்தியிருந்தார் சக்திவேல் நெற்றி சுருங்க இன்னுழவனை பார்த்தவராய் செய்தித்தாள் மேலோடு.

புருவம்  இடுக்க இன்னுழவனோ அதை அவதானித்தவன் “ம்க்ம்…” குரலை செரும்பி “மா… மாதர் சங்கத்துல இருந்து பேசுறீங்களா” என சடுத்தியில் பேச்சை திசை மாற்றியவன் எழுந்து வெளியே சென்று தோட்டத்தை அடைந்தான்.

சக்திவேலும் இன்னுழவன் பேசியதை விடுத்து தன் கவனத்தை மீண்டும் செய்திதாளில் புதைக்க, அந்த பக்கம் பேச்சை தொடர்ந்தான் இன்னுழவன் சோம சுந்தரத்திடம்.

சோமசுந்தரம் மௌனத்தை தழுவியிருக்க… இன்னுழவனே ஆரம்பித்தான் பேச்சை.

“என்ன மாமா உங்க மருமகன் கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு இத்தனை வருஷம் ஆச்சா?”

இன்னுழவன் கேள்வியில் மொத்தமாக உருகுலைந்து  அமர்ந்து விட்டார் சோமசுந்தரம்.

“அது… இன்னு… இன்னுழவா…”

“சொல்லுங்க மாமா உங்க இன்னு தான் பேசுறேன். டேய் நான் மாமா பேசுறேன்னு சொல்றத விட்டுட்டு, இது என்ன மாமா மூணாவது மனுஷன் கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா” என நெஞ்சை நிவியவன்…

பேச்சை மேலும் அவனே தொடர்ந்து கொண்டிருக்க, அவரோ வார்த்தையற்றவராய் அமர்ந்திருந்தார்.

“இல்ல… அது வந்து… நான்… உன்கிட்ட… இத்தன… என் பொண்ணு கல்யாணம்…” என்றவர் வார்த்தைகளை உணர்வின் மிகுதியில் தேடி கோர்த்துக் கொண்டிருக்க,

“அப்பா… நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆயிடுச்சு. அப்புறம் ஈவினிங் நானே அக்காவ பிக்கப் பண்ணிட்டு வந்துறேன்” என குரல் கொடுத்து வந்தான் நிவர்த்தனன் மருத்துவமனைக்கு புறப்பட ஆயத்தமானவனாய்.

அதேநேரம் இன்னுழவனிடம் பேசிய சந்தோஷம் மற்றும் தன் மருமகன் தன்னிடம் உரிமையாய் கேட்ட கேள்விகள் என எழுந்த உணர்வின் பிடியில் இருந்தவர்,   கை தளர அலைபேசியை நழுவ விட்டிருந்தார் சோமசுந்தரம்.

நிவர்த்தனனோ சோமசுந்தரத்தை கடந்து சென்றவன் , நெற்றி சுருங்க பார்த்தான் ஒரு நொடி அவரை.

அடுத்த கணம் வேக எட்டுடன் தன் தோளில் இருந்த பையை கழட்டி பட்டென்று சோபாவில் போட்டவன்,  அருகில் இருந்த தண்ணீரை அவருக்கு புகட்டியவனாய்,  “ஏம்பா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க? என் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு? அப்பா ஆர் ஓகே?” என அவரின் முன்பு முட்டி போட்டு அமர்ந்தான்.

நிவர்த்தனன் குரலையும் அலைபேசியில் அவதானித்துக் கொண்டுதான் இருந்தான் இன்னுழவன் எதிர்புறத்தில் மௌனமாக. என்னினும் தாய்மாமன் நிலை எண்ணி மனமானது பரபரக்கத்தான் செய்தது.

தண்ணீரை குடித்த பின்வே சற்று ஆசுவாசமடைந்த சோமசுந்தரமோ நிவர்த்தனனை பார்க்க, “அப்பா நீங்க ஓகே தானே என்ன ஆச்சு உங்களுக்கு?  காலையில சாப்பிட்டு முதல்ல பிபி டேப்லட் போட்டிங்களா இல்லையா? எப்போதுமே அதிகமாக எமோஷனல் ஆகாதீங்கன்னு சொல்லி இருக்கேன் இல்ல? அம்மா எங்க போனாங்க?” என்றவன் கடுக்காய் பொறிந்து தள்ளினான்.

மகனின் கண்டிப்பிலும் பதட்டத்திலும்  மனதை ஒரு நிலை படுத்தியவர், “இல்லடா ஒன்னும் இல்லடா கண்ணா… ஐ அம் ஆல்ரைட்” என்றவர் புன்முறுவல் அளிக்க…

“அப்புறம் எதுக்கு இந்த மாதிரி ஆனீங்க? என்ன ஆச்சு? ” என தனது கைக்குட்டை எடுத்து அவர் முகமதில் திடீர் பூத்த வியர்வை துளிகளை அவன் துடைக்க…

“ஒன்னும் இல்லடா சும்மா அப்படியே உங்களை பத்தி யோசிச்சிட்டு இருந்தேனா அதனால பிபி லோ ஆயிடுச்சு” என்றார் இன்னுழவனிடம் வினவியத்தை மறைத்து.

நிவர்த்தனனோ இடுப்பில் கை வைத்து எழுந்து நின்றவன், “ஓ… காட்… டாட் எங்களுக்கு என்ன நாங்க நல்லா தான் இருக்கோம். எங்கள நல்லா படிக்க வச்சி இன்னைக்கு நாங்க உங்க பேர காப்பாத்துற அளவுக்கு நல்ல வேலைலயும் இருக்கோம்.

அப்புறம் உங்களுக்கு என்ன தேவை இல்லாத யோசனை ஹெலத்த ஸ்பாய்ல் பண்ற அளவுக்கு. ஜீல் பா…” என்றவன் தனது பேக்கை மீண்டும் கழுத்தோடு போட்டு கிளம்பினான்.

“இதை எல்லாம் கேட்டு மௌனமாய் நகைத்து கொண்டு இருந்தான் இன்னுழவன். தாய்மாமனின் இல்லறம் நல்முறையில் செழுமையாய் இருக்கிறது என மன நிம்மத்தியில்.

சோமசுந்தரமும்  மகன் கூறியதை இதழ் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவர் குனிந்து நழுவி விழுந்த அலைபேசியை எடுக்க,  நிவர்த்தனனோ வாசலை நோக்கி சென்றவன் ஒரு நிமிடம் நின்று மீண்டும் அவரைப் பார்த்து திரும்பியவன்,

“அப்பா…”

“சொல்லு பா… ஐம் ஓகே…” அவர் அவனை ஏறெடுத்து பார்க்க

“பட் நான் ஓகே இல்லப்பா… முக்கியமா அக்கா சுத்தமா ஓகே இல்ல பா…” வலி நிறைந்த குரலில் கூறினான்.

இப்பொழுது மென்மையை தழுவியிருந்த இன்னுழவன் முகமோ யோசனையை தழுவியது புருவம் முடிச்சிட.

“கண்ணா…” சோமசுந்தரம் அதிர

அவனோ, “எங்கள பத்தி யோசிக்க வேண்டிய டைம்ல யோசிச்சி இருக்கணும். முக்கியமா அக்காவ பத்தி. தெரியாம தான் கேட்கிறேன் இத்தனை வருஷமா வராத பிரச்சனையா இனிமே வந்துற போகுது. அப்படி வந்தாலும் நான் பாத்துட்டு சும்மாவா இருந்துருவேனாபா?”

சோமசுந்தரம் கலங்க…

நிவர்த்தனோ பெருமூச்சு விட்டவன், “சரி அதெல்லாம் விடுங்க. எதை பத்தியும் யோசிக்காதீங்க. அடுத்த நொடி சொந்தம் இல்லாதது வாழ்க்கை. யாருக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும். நம்ம யோசிச்சு வச்சது நடக்கவும் செய்யலாம்,  நடக்காமலும்  போகலாம். எதபத்தியும் யோசிச்சு ஓர்ரி பண்ணி உங்க ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்கத்திங்க. நான் வரேன்” என அங்கிருந்து நகர்ந்தான் அவன் ஆத்தங்கத்தை மென்மையாய் அவரிடம் தூவிவிட்டு.

இங்கு லைனில் இன்னுழவன் இருக்கின்றான் என்று அறியாது நிவர்த்தனன் பேசி செல்ல, அதை அனைத்தையும் கவனமாக கேட்டு கொண்டிருந்த் இன்னுழவன் மனமோ  யோசனையில் தறிகெட்டு ஓட ஆரம்பித்திருந்தது.

செங்கோதை மணம் வீசும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!