தேவதை 28
தர்ஷி ஒரு வாரமாக தேவாவை பார்க்கவோ பேசவோ இல்லை, அவனும் அவளை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை… காலை தனது தந்தையுடன் சேர்ந்து வேலைக்கு செல்பவன், இரவு தான் அவரோடு வீட்டிற்கு வருகிறான்..
தர்ஷி தினமும் வசியுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்… இரண்டு மணி நேரம் பேசினாலும் தேவாவை பற்றி தான் பேசுவாள்.. வசி ஹ்ம்ம் போட்டுக் கொள்வான்..
அடிக்கடி வசியுடன் வெளியில் சென்று வந்தாலும், எதையோ இழந்ததை போல் தான் இருந்தாள்…
அன்று ஜெய்யின் வாட்சப் ஸ்டேட்டஸை பார்க்க அதில் தேவா, ஜெய், தேவாவின் தந்தை செல்வம் 3 பேரும், சைட்டில் மஞ்சள் நிற தலைக்கவசத்துடன் நிற்பது போல் போட்டோ போட அதைப் பார்த்து வெறியானவள்…
நா இல்லாம நீங்க 2 பேரு மட்டும் சந்தோசமா இருக்கீங்களா?
நானும் சந்தோசமா இருக்குற மாதிரி போட்டோ போடுறேன், பாத்து நீங்களும் வெறியாகுங்க என நினைத்தவள், ஒரு நாள் பீச்சிற்கு வசியுடன் சென்றிருந்த போது எடுத்த செல்ஃபீ போட்டோவை ஆல்வேஸ் ஹாப்பி என வேண்டுமென்றே வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டு விட, ஜெய்யும், தேவாவும் அதை பார்க்காமல் இல்லை…
தேவா அந்த போட்டோவை இரவு முழுதும் பார்த்தவாறே இருந்தான்.. அவ என்ன மிஸ் பண்ணுவான்னு பாத்தா, அவன் கூட ஜாலியா தான் இருக்கா போல, என்றெண்ணியவன் பெருமூச்சி விட்டு இமைகளை மூடினான்…
வசி தர்ஷிக்கு போன் செய்தவன், என்னடி ஸ்டேட்டஸ் லாம் பலமா இருக்கு என கிண்டல் அடிக்க…
ஆமா இப்ப தான் பாக்குறிங்களா!? சீனியர் நா மதியமே போட்டுட்டேன்… எப்படியும் அவனுங்க பாத்து நா சந்தோசமா இருக்கேனு, அவனுங்க நியாபகம் துளி கூட இல்லாம இருக்கனு தெரிஞ்சிக்கட்டும்…
ஓஹ் தேவா பாக்க தான் அப்போ ஸ்டேட்டஸ் போட்டியா! அதான பாத்தேன்.
ஹ்ம்ம் எனக்கு அவனுங்களே கால் பண்ணி பேசுவானுங்க பாருங்க…
ஹ்ம்ம் பாக்குறேன் என்றான் வசி… சில நேரங்களில் அவளுடைய இந்த சிறுபிள்ளை தனத்தை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான்..
தர்ஷி தேவாவை மேலும் வெறுப்பேற்ற முடிவெடுத்தவள், தனது அப்பா மாதவனிடம் சென்றாள்,
பா, பா எனக்கு அன்னைக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தரேன்னு சொன்னீங்கள! எப்போ வாங்கி தருவீங்க? ஆர்வமாய் கேட்டாள்….
அவளை நிமிர்ந்து பார்த்தவர், ஏன் மா உனக்கும் தேவாவுக்கும் ஏதும் சண்டையா? என சரியாக கணித்து கேட்க வும் திருட்டு முழி முழித்தாள் தர்ஷி …
இ இல்லையே எதுக்கு கேட்குறீங்க?
ஹ்ம்ம் இல்ல அன்னைக்கு வாங்கி தரேன்னு சொன்னதுக்கு வேணாம் பா, என்னையும், என் பிரெண்ட் தேவாவையும் பிரிக்க பாக்குறனு டைலாக் விட்டீங்க, இப்போ வந்து ஸ்கூட்டி கேட்குற? அதான் என்னாச்சி நீ ஏதும் சண்டை போட்டுட்டியானு கேட்டேன்….
ச்ச ச்ச அதெல்லாம் இல்லை பா, எவ்ளோ நாளைக்கு தான் அவனே என்ன கூப்டு போக முடியும், நானும் தனியா போக கத்துக்கணும்ல….
ஓஹ் அப்ப கன்பார்ம், தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டார்.
அப்பா எப்ப வாங்கி தருவ?
நாளைக்கு கூப்டு போய் வாங்கி தரேன் மா…
சரி பா என்றவள், தேவா நீயா வழியாக்க வந்து கெஞ்சுவ பாரு, என மனதில் தப்பு கணக்கு போட்டு விட்டாள்..
இன்னும் 2 நாளுல காலேஜ் திறக்க போறாங்க டா, அவகிட்ட பேசுறதே இல்ல, இன்னும் என்ன பிளாக் லிஸ்ட்லேந்து எடுக்கவே இல்லை டா… காலேஜ் போனா என்ன திரும்பியே பாக்க மாட்டா பாரு, எல்லாம் இந்த வண்டால வந்துச்சி, எங்கள பிரிச்சிட்டு, அவ மட்டும் அந்த வசிக்கூட ஜாலியா இருக்கா பாரேன்,
தேவா ஏற்கனவே நொந்து போயிருந்தவன், தன் நண்பன் ஜெய்க்கு ஆறுதல் சொல்ல தெரியாமல் தவித்தான்…
மறுநாள் தர்ஷி தனது தந்தையுடன் ஷோ ரூம் சென்றவள், தனக்கு பிடித்த பர்பில் கலரில் ஸ்கூட்டி வாங்கியவளுக்கு சிறு வருத்தம் தான் தேவா இல்லாமல், அவள் வாங்கும் முதல் பொருள் அது.. ஒரு ட்ரெஸ் வாங்கினாலே இது நல்லாருக்கா? அது நல்லாருக்கா? என கேட்டு கேட்டு அவனை நச்சரிக்க கூடியவள், இன்று அவன் இல்லாமல் ஸ்கூட்டி வாங்கி விட்டாள்..
ஸ்கூட்டி வாங்கிவிட்டு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தவர்கள்,, அதன் பின் வீட்டிற்குள் சென்றதும், இவள் மட்டும் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு ரவுண்ட் அடிக்க சென்று விட்டாள்…
போன் சத்தம் கேட்டதும், ஓரமாக வண்டியை நிறுத்தியவள் யாரென பார்க்க, வசி தான் கால் செய்திருந்தான்…
ஹாய் டி எங்க இருக்க?
சீனியர் இப்ப தான் அப்பா நியூ ஸ்கூட்டி வாங்கி குடுத்தாங்க, அத எடுத்துக்கிட்டு ரவுண்ட் அடிக்க போறேன் என உற்சாகமாய் சொல்ல…
கங்கிராட்ஸ் டி, நீ எங்க இருக்கனு லோக்கேஷன் ஷேர் பண்ணு, நானும் வரேன்….
ஓகே சீனியர் என போனை வைத்தவள், லோக்கேஷன் ஷேர் செய்து விட்டு, ஓரிடத்தில் நின்றிருக்க.. அடுத்த 15 நிமிடத்தில் அங்கு வசி வந்திருந்தான்..
காரில் இருந்து இறங்கியவன், அவளை கண்டதும், ஹாய் டி தர்ஷி… வாவ் சூப்பரா இருக்கு டி எனக்கும் பிடிச்ச கலர் வா ஒரு ரவுண்ட் போகலாம் என கூப்பிட, தர்ஷி முகம் மாறியது…
இன்னும் நா தேவாவயே கூப்டு போகலயே! எப்படி இவன? என தயங்கி நின்றாள்…
ஹலோ மேடம் என்ன யோசனை, ஸ்கூட்டி ஓட்ட தெரியும் தான! பிறகென்ன வாங்க வண்டிய எடுங்க என ஸ்கூட்டியில் ஏறி சட்டென அமர, தர்ஷி வேறு வழி இல்லாமல் வண்டியை எடுத்திருந்தாள்..
வசியின் விரல் கூட அவள் மேல் படவில்லை…தர்ஷி ஸ்கூட்டியை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த படியே அதை வீடியோ எடுத்தான் வசி..
சிறிது தூரத்தில் வண்டியை நிறுத்தவும் என்ன ஆச்சு எதுக்கு ஸ்டாப் பண்ணிட்ட? என கேட்டான் வசி
அ அது சீனியர் நா இன்னும் வீட்டுக்கு போகல, ரொம்ப நேரமா வெளில சுத்திட்டு இருக்கேன்.. அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க…நா வீட்டுக்கு போகட்டுமா? என கேட்டவளை கேள்வி முடிச்சிகளுடன் புருவம் சுருக்கி பார்த்தான் வசி..
என்ன சீனியர்? அப்டி பாக்குறீங்க?
நத்திங், சரி வா என்ன கார்கிட்ட ட்ராப் பண்ணிட்டு நீ கிளம்பு என சொல்லி மீண்டும் வண்டியில் ஏறிக் கொண்டான்..
தர்ஷி அவனை கார் அருகில் விட்டவள், பை சீனியர் என செல்லவும்.. செல்லும் அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்…
வீட்டிற்கு செல்லும் வழி முழுதும் தேவா நியாபகம் கொன்றது.. என்னமோ தெரியவில்லை முதல் முறை வேறு ஒரு ஆணுடன் பைக்கில் ஏறி செல்வது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… அதும் தான் காதலிப்பதாக கூறும் ஆண் மகனுடன் செல்வது எப்படி பிடிக்காமல் போகும்…?
பெண்களுக்கு எப்போதும் தான் விரும்பும் ஆணுடன் பைக்கில் செல்வதை தானே பலர் கனவாகவே வைத்துள்ளனர்… எனக்கு மட்டும் ஏன் இப்படி? தேவாவுடன் செல்லும் போது உள்ள நெருக்கம் என்றைக்கும் எனக்கு பிடிக்காமல் போனது இல்லையே! ஒரு வேளை இத்தனை வருடம் அவனுடன் மட்டுமே வண்டியில் சென்றதால், தற்போது வசியுடன் செல்வது இப்படி ஒரு பிடிக்கா உணர்வை தருகிறதோ! இருக்கும்…
இனி முடியாது முதலில் அவனுக்கு கால் செய்து பேசிவிட வேண்டும்.. சண்டை போட்டாலும் பரவாயில்லை.. என்ற தீர்க்கமான முடிவெடுத்தவள், வீட்டிற்கு நுழைந்ததும் முதல் வேலையாக அவனுக்கு கால் செய்ய… தேவா போனை எடுப்பதாய் தெரியவில்லை..
நகத்தை கடித்தவள், இரு டா வீட்டுக்கு வரேன் என குளியலறைக்குள் சென்று புகுந்தவள், குளித்து விட்டு உடை மாற்றி மீண்டும் கிளம்பி செல்ல, மஞ்சுளா அவளை வாயில் விரல் வைத்து பார்த்து கொண்டிருந்தாள்…
தனது கணவரிடம் ஏங்க உங்க பொண்ணு கொஞ்சம் கூட அடங்க மாட்டாளா?? இப்ப தான் ஊர சுத்திட்டு வந்தா, அதுக்குள்ள குளிச்சிட்டு திரும்ப வேற ட்ரெஸ் போட்டுட்டு எங்க போறா? ஆச்சரியமாய் கேட்க…
விடு டி அவ தேவா, இல்லனா ஜெய் அவங்கள பாக்க தான போறா, அவனுங்க இருக்குற வரைக்கும் இவள நல்லா பாத்துப்பானுங்க என சொல்லவும்…
ஹ்ம்ம் என்ற மஞ்சுளா தனது வேலையை பார்க்க சென்று விட்டார்….
ஒவ்வொரு முறையும் அவனிடம் பேசக்கூடாது, அவனை நினைக்க கூடாது என்ற எண்ணம் தோன்ற தோன்ற, இவளுக்கு தேவாவின் எண்ணங்கள் அதிகமானது,. இவளாய் வழியாக்க சென்று பேச போகிறாள்…
தேவா வீட்டிற்குள் நுழைந்தவள், அத்தை அத்தை, அத்தை கத்திய படியே உள்ளே வர,
வந்துட்டேன் மா என்னாச்சி எதுக்கு இப்டி இவ்ளோ அவசரமா ஓடிவர? என அடுப்படிக்குள் இருந்து வெளியே வந்த கலா கேட்க…
அத்தை எங்க அவன்?
அவனும், ஜெய்யும் போட்டிங் போயிருக்கானுங்க, ஏன் மா நீ போகலையா?
என்னது போட்டிங்கா? என விழி விரித்தவள்…அவனுங்கள பல்லை கடித்தவள், நா வரேன் அத்தை பை என வேகமாக வாசலுக்கு ஓடினாள்..
என்னாச்சி இந்த பொண்ணுக்கு! காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரி இப்டி ஓடுறா… அவன் எப்படி இவ இல்லாம போட்டிங் போனான்!? ஹ்ம்ம் என்னவோ இதுங்கள புரிஞ்சிக்கவே முடியல! என புலம்பியவர் தன் வேலையை பார்க்க சென்று விட்டார்…
அட பாவிங்களா! என்ன கழட்டி விட்டு போட்டிங் போற அளவுக்கு வந்தாச்சா? சும்மா விட மாட்டேன் டா வரேன் இருங்க டா, வாய் விட்டே திட்டியப்படி வண்டியை ஒட்டினாள்..
20 நிமிடத்தில் கடற்கரையை அடைந்தவள், ஜெய்யின் அப்பாவை தேட, மைக்கேல் அங்கு அமர்ந்து மீன் விற்று கொண்டிருந்தார்..
அவர் அருகில் ஓடியவர், பா பா எங்கப்பா அவனுங்க ரெண்டு பேரும்.. இடுப்பில் கை வைத்து கேட்டவளை பார்த்து சிரித்தவர்., எம்மொய் அவனுங்க சுருக்காவே உள்ளக்க போய்ட்டானுங்களே! ஏன் கண்ணு நீ போகல? என கேட்க…
அ அது வந்து நா தூங்கிட்டேன் பா, என சம்மந்தம் இல்லாமல் பேசியவளை மைக்கேல் ஒரு மாதிரியாக பார்க்க.. சரி பா வரேன் என அங்கிருந்து நகர்ந்தாள் தர்ஷி..
யாரும் பார்க்காத படி, கடலில் கால் நனைத்து நின்றவள், கண்களில் கண்ணீர் சுரந்து, அன்று அவளுக்காய் தேவா சரணடைந்த கடல் அன்னையிடம் இவள் கண்ணீரை சமர்ப்பித்தாள்..
முதல் முறை அவர்கள் இருவரும் இவளை தனித்து விட்டு சென்றனர்.. தேவாவின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. மூக்கு சிவந்து கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள்…. தேவா இனி என் லைஃப்ல நீ இல்லடா என முனுமுனுத்தவள் அங்கிருந்து கோவத்துடன் செல்ல…
கடலின் நடுவில் போட்டில் படுத்திருந்த தேவா, சட்டென எழுந்து சுற்றி பார்த்தான்….
ஜெய் என்னடா? என கேட்க…
இல்லடா தர்ஷினி குரல் டா….
டேய் சரியா போச்சி போ, 10 கிலோ மீட்டர் தாண்டி இருக்கோம் டா.. இந்த லவ் பண்றவனுங்க அலப்பறை தாங்க முடியாது போலயே என்றதும் தேவா அவனை பாவமாய் பார்க்க….
ஜெய் சரி சரி விடு, முதல் தடவ அவ இல்லாம வந்திருக்கோம்ல அதான் அவ குரல் கேட்ட மாதிரி உனக்கு தோணுது.. வேற ஒன்னும் இல்ல பேசாம படு டா என அவனை சமாதானப் படுத்தினான்…
.
தொடரும்…..
டியர்ஸ் படிக்குறவங்க மறக்காம stars குடுங்க 🙏🙏🙏🥰🥰🥰