காளையன் மலர்னிக்காவிற்கு கசாயத்தையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றதும், அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். காமாட்சியும் நிஷாவும் வீட்டிற்கு வெளியே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அப்போது கதிர் அந்த தெருவால் சென்றான். அப்போது அவனை பார்த்த இருவரும் அழைத்தனர்
அவர்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தான் கதிர்.
உள்ளே கூடத்தில் எல்லோரும் சபாபதி பற்றியும் காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர். சபாபதி கம்பனி ஆரம்பிக்க ஒத்துழைக்க கூடாது என்று பெருந்தேவனார் சொன்னார். அதற்கு மற்றவர்களும் சரி என்று ஆமோதித்தனர். அந்த வேளையில் அங்கிருந்த அனைவரின் போனும் மெசேஜ் வந்த ஒலியை எழுப்பியது. அதைக் கேட்டவர்கள் குழப்பத்துடன் தங்களது போனை எடுத்துக் கொண்டனர்.
முதலில் பெருந்தேவனார் அவரது போனை எடுத்து அதில் வந்திருந்த வாய்ஸை கேட்டார்.”இங்க பாருங்க உங்க எல்லோருக்கும் ஒரு வீடியோ அனுப்பியிருக்கிறேன். அந்த வீடியோவை பார்த்துட்டு நீங்க அந்த வீடியோல இருக்கிறவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும் என்ற முடிவு எடுக்கிறீங்கனு பார்க்கலாம். அப்படி அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பல,உங்களுக்கு அனுப்பின அந்த வீடியோவை டீவில போட்டு இந்த உலகத்துக்கே காட்டுவேன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
இதைக் கேட்டவர்களுக்கு எதுவும் புரியவில்லை. துர்க்காவிற்கும் அவனது குரல் தெளிவாக விளங்கவில்லை. “யாருப்பா இது? ஒரே நேரத்தில எல்லோருக்கும் என்ன வீடியோ அனுப்பியிருக்கிறான்னு முதல்ல பார்க்கலாம்.. ” என்று தேவச்சந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போது குணவதி, “ஐயோ, யாரும் அந்த வீடியோவை பார்க்காதீங்க” என்றவர் போனை தவற விட்டார்.
“என்னாச்சி குணவதி? அந்த வீடியோல என்ன இருக்கு? “என்று பதட்டத்துடன் கேட்டார் விசாகம். குணவதி எதுவும் சொல்லாமல் துர்க்காவைப் பார்த்தார். பின்னர் மேலை பார்த்தார். “அத்தை, அந்த வீடியோல…வீடியோல…மலர்… மலர்.. உடம்புல ஒட்டுத்து…துணி இல்லாமல் இருக்கிறா.” என்றார்.
“ஐயோ.. மலரு…என்னடி இது?” என்று நிலத்தில் விழுந்து அழுதார் துர்க்கா. அவரது அழுகுரல் கேட்டு உள்ளே ஓடி வந்தனர் வெளியே இருந்தவர்கள். நிஷா அவரின் அருகில் இருந்தார்.” நிஷா.. நிஷா.. நம்ம மலரை.. மலரை யாரோ தப்பா வீடியோ எடுத்து இந்த வீட்டில உள்ளவங்களுக்குஅனுப்பியிருக்கிறான்டி.. இதை ஊர்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சா எப்படி உயிரோட இருக்கிற? ஐயோ இதை அவ பார்த்தா தாங்க மாட்டாளே..” என்று ஒப்பாரி வைத்தார்.
நடப்பதை பார்த்துக் கொண்டு நின்ற காமாட்சி மெதுவாக மேலே போய் மலர்னிகாவின் அறைக் கதவைத் தட்டினாள். மலர்னிகாவை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்து விட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தான் காளையன். காமாட்சியின் முகத்தில் இருந்த பதட்டமே அவனுக்கு சொன்னது, தனக்குத் தெரிந்த விசயம் இப்போ எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்று. “அண்ணி கூடவே இரு…” என்று சொல்லிவிட்டு கீழே போனான்.
கீழே துர்க்கா அழுது கொண்டு இருக்க, நிஷா அவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள். கீழே போட்ட சத்தத்தில் சபாபதியும் வந்து நின்றிருந்தான். காளையன் கீழே வந்ததும் பெருந்தேவனார் நேரடியாக , “காளையா எங்க எல்லோருக்கும் ஒரு வீடியோ வந்திருக்கு. நான் அதைப் பார்த்து ஒரு முடிவு எடுத்திருக்கிறன்” என்றார். அதற்கு காளையன் எதுவும் சொல்லவில்லை. கீழே இருந்த துர்க்காவை எழுப்பி, சோபாவில் இருக்க வைத்தவன் நிஷாவிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்ல, அவளும் எடுத்து வந்து குடுத்தாள்.
அதை துர்க்காவிற்கு குடிக்கக் குடுத்தான். பின்னர் தனது தாத்தாவைப் பார்த்து,” தாத்தா எனக்கு இந்த வீடியோவை, உங்களுக்கு அனுப்ப முதல்லே அனுப்பிட்டான். நான் கோயில்ல இருக்கும் போதுதான் இந்த வீடியோவை பார்த்தன்.” என்றான். இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுடன் காளையைப் பார்த்தனர்.
தேவச்சந்திரன் உடனே, “அதைப் பார்த்த பிறகுதான் மலர்னிகாவிற்கு தாலி கட்டினயா? ” என்று கேட்க, அவனும், “ஆமா அப்பா, நான் அந்த வீடியோவை பார்த்த பிறகுதான் அந்த தாலியை மலர் கழுத்தில கட்டினேன்.” என்றான்.
பெருந்தேவனாருக்கு வந்த கோபத்தில் காளையனை அறைந்திருந்தார். இதுவரை அவனை எதற்கும் அவர் அடித்ததில்லை. “என்ன காரியம் பண்ணியிருக்க நீ? இங்க பெரியவங்கனு நாங்க எதுக்கு இருக்கிறம்? எங்ககிட்ட நடந்ததை சொல்லியிருக்கலாம்தானே.” என்றார்.
“தாத்தா பேசாமல் அந்த பொண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுங்க தாத்தா. இல்லனா நம்மளோட குடும்ப மானமே போயிடும்.” என்று சபாபதி சொல்ல, ராமச்சந்திரனுக்கும் அதுவே சரி என்று பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பேசினார் விசாகம்.
” ஆமா சபா, நீ சொல்றதுதான் சரி. நாளை பின்னே இந்த வீடியோவை போன்ல அவன் சொன்ன மாதிரி டிவில போட்டா, இத்தனை நாள் கட்டிக் காப்பாத்தி வந்த நம்ம குடும்ப மானம் என்னாகிறது? நம்ம வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்கு, நாளைக்கு அவளுக்கு என்று கல்யாணம் காட்சி வரும்போது இது பிரச்சனையாக வரக்கூடாதுல” என்று சொன்னார்.
இதைக் கேட்ட துர்க்காவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. அவரது மகளின் எதிர்காலம் குறித்த பயம் ஏற்பட்டது. தனது அம்மாவா இப்படி சொல்றது? என்று பார்த்தார். பெருந்தேவனார்,” நீ சொல்றதும் சரிதான் விசாகம். மலர்னிகாவை இங்க இருந்து அனுப்பிடலாம். அதுதான் நம்ம எல்லோருக்கும் நல்லது.” என்று மனைவியை போலவே பேசினார்.
தனது அப்பாவும் அம்மாவும் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என்று துர்க்கா சிறிதும் நினைக்கவில்லை. ” அம்மா அப்போ என்னோட பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது? அவளை வீட்டை விட்டு அனுப்ப சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது?” என்று அழுதவாறு கேட்டார்.
விசாகம், “உன்னோட பொண்ணு இங்க அமைதியா இருக்கிற மாதிரி நடிக்கிறா போல, நீங்க இருந்த இடத்தில எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கிறானு பாரேன். ஏன் துர்க்கா உன் பொண்ணை ஒழுங்கா உனக்கு வளர்க்க தெரியாதா? ” என்று அவரிடம் சத்தம் போட்டார்.
அப்போது பெருந்தேவனார், “இங்க பாரு துர்க்கா,நீ எங்களோட பொண்ணு அதனால நீ இங்க இருக்கலாம் ஆனால் அவ இங்க இருக்க கூடாது. பத்து நிமிசத்துல அவ வீட்டை விட்டு போயிடணும்.” என்றார்.
காளையன் எதுவும் பேசவில்லை. அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றான். துர்க்காவிற்கு கோபம் வந்தது. “என்ன சொன்னீங்க? உங்க பொண்ணு நான் உங்ககூட இருக்கணும். ஆனால் நான் என்னோட பொண்ணை விட்டுட்டு உங்ககூட இருக்கணும். நீங்க அந்த வீடியோல இருந்தது உண்மையானு கூட ஒரு வார்த்தை கேட்கலை. அவளுக்கு காய்ச்சல்னு தெரியும். ஆனாலும் இப்பவே வீட்டை விட்டு போகணும்னு நிற்கிறீங்க.
ரொம்ப ரொம்ப சந்தோஷம். என்னோட கஷ்டத்துல நீங்க என்கூட இருப்பீங்கனு நினைச்சு இங்க வந்தேன். ஆனால் நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நினைக்கவே இல்லை. இதுக்கு மேல நாங்க இங்க இருக்கிறது சரியில்லை. எங்களால உங்களோட மானம் மரியாதை போகக் கூடாது. நாங்க போயிடுறம். நிஷா நீ போய் எல்லாத்தையும் எடுத்துட்டு சீக்கிரம் வா” என்றார்.
துர்க்காவும் அவரது அறைக்குச் சென்று அவரது உடமைகளை எடுத்து வந்து வெளியே வைத்து விட்டு, மேலே சென்று மலர்னிகாவின் உடமைகளையும் எடுத்துக் கொண்டு காய்ச்சலினால் வாடியவாறு படுத்திருக்கும் மலர்னிகாவை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு வர, நிஷாவும் ஒரு பக்கம் வந்து மலர்னிகாவைப் பிடித்தாள்.
மூவரும் தமது பைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு செல்லும் போது அவர்களை நிறுத்திய விசாகம் சொன்னதைக் கேட்ட துர்க்கா பதற்றத்துடன் மலர்னிகாவைப் பார்த்தார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Ayyayo pavam malar