அத்தியாயம் 02

5
(2)

கணவனின் நெருக்கத்தில் சற்று மயங்கினாள் கன்னிமா… அவள் திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பு இல்லாதவள்!… ஆனாலும் திருமணத்தின் மகத்துவத்தையும் வாழ்க்கையின் வரம்பையும் சற்று வாகாய் அறிந்தவள்…

அவளின் ஆடையை அவசரமாக களைந்தான் ரகுவரன்…

“ஏங்க?… லைட்” என்றவாறு மெல்லிய குரலில் கூறினாள் கன்னிமா…

சட்டென எழுந்து அமர்ந்த ரகுவரன்… “அச்சோ?… நான் பாரு அவசரப்பட்டுட்டேன்… என்னை பத்தி சொன்னேன்… உன்னை பத்தி கேட்கவேயில்லையே?… சரி நீ உன்னை பத்தி முதல்ல சொல்லு மத்ததையெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்றான்…

புடவையை சரிசெய்து கொண்டு தவிப்பாக அவனை பார்த்தாள் கன்னிமா…

“ஏன் அப்படி பாக்குறவ!… தயங்காம சொல்லு… நம்ம மனசு விட்டு பேசிட்டா தான் பிறவு வாழ்க்கையை வாழ வாகா இருக்கும்” என்றான் ரகுவரன்…

“என்னை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாதாப்பா?” என்று கன்னிமா கேட்க…

அவளின் ப்பா என்ற அழைப்பில் புன்னகைத்த ரகுவரன்… “தெரியும்- டி!… அக்கா சொன்னுச்சி… இருந்தாலும் நீ உன் சூழ்நிலையிலருந்து சொல்லு… அக்கா சொன்னதுக்கும் நீ சொல்லுறதுக்கும் என்ன வித்தியாசம்னு நான் சொல்லுறேன்” என்றவன் அவளின் கையை பிடித்துக்கொண்டான்…

கூச்சமாக உணர்ந்த கன்னிமா… “அது வந்து நான் படிக்கல!… பத்தாப்பு பெயிலாகிட்டேன் அதனால ஆயா கூட கரும்பு வெட்ட போனேன்… காடுக்காடா போய் கரும்பு வெட்டுவோம்… அதுவும் ரெண்டு வருஷம் தான் பண்ணினேன்… ஆயாவால முடியலைன்னு ஊட்டோட இருந்துகிச்சி… நானும் ஆயாவோட இருந்துட்டேன்… அண்ணனுங்க வேலைக்கு போவாங்க… நாங்க வேலையை பாத்துட்டு ஊட்டோட இருப்போம்… அப்படியே நாலு வருஷம் போணுச்சி!… அப்பறம் அண்ணனுங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆயா முடிவு பண்ணுச்சி… அதான் முன்ன என்னைய கட்டிக்கொடுத்தது… அடுத்து அண்ணனுங்களுக்கு பண்ணுவாங்க” என்றாள் மெல்லிய குரலில்…

“நீ இவ்வளவு மெல்லமா தான் பேசுவியா?… இல்லை முதமுறை பேசுறதால கூச்சமா” என்று ரகுவரன் கேட்க…

“இல்லை- ப்பா! இவ்வளவு தான் வரும்” என்றாள் கன்னிமா… 

“சரி!… உன் வயசென்ன?”

“இருபத்தி ரெண்டு!… முந்தாநாள் தான் பொறந்த நாள் போனுச்சி” என்றாள் கன்னிமா…

“அப்படியா?… சொல்லவே இல்லை!… முன்னமே தெரிஞ்சிருந்தா எதனா வாங்கியாந்திருப்பேன்- ல்ல” என்றான் ரகுவரன்…

“அது… அது”… என்று கன்னிமா தயங்க… அவளின் கன்னத்தை இருக்கையால் தாங்கிய ரகுவரன்… “கன்னிமா எனக்கு உன்னை விட வயசு கூட!… நான் படிக்காததால பெருசா யாரும் எனக்கு பொண்ணுக்கொடுக்க முன் வரலை… அதையும் தாண்டி எங்க குடும்ப சூழ்நிலை சரியில்லை… ஏதோ இப்போ கொஞ்சம் பரவாயில்லை… என்ன கஷ்டம் வந்தாலும் என்னை விட்டு போவமாட்ட தானே” என்று கேட்டவன் தான் கட்டுவிரியானின் விஷம் போல கஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகிறான்…

“என்ன- ப்பா இதெல்லாம்… இன்னைக்கு தானே கண்ணலமாகி இருக்குது… அதுக்குள்ள விட்டுப்போறதை பத்தி பேசிட்டு… எனக்கு நீங்கன்னு ஆயிடுச்சி… நான் எப்படி உங்களை விட்டுட்டு போவேன்”… 

“அப்போ நான் உனக்கு சரிதானா?” என்று தலையை சரித்து ரகுவரன் கேட்டதும்… “ம்!… நீங்க எனக்கு சரியான ஜோடிதான்… ஆனா சரியான துணையான்னு வாழ்க்கை போற வேகத்தை கண்டுதான் கணிக்கணும்” என்றாள் புன்னகையுடன்…

“நான் உன்னை கண்கலங்காம வச்சிப்பேன்- டி!… என்னை நீ முழுசா நம்பலாம்” என்ற ரகுவரன் தான் அவளை நட்டாத்தில் தத்தளிக்க வைக்கப்போகிறான்…

“ம்… நம்புரன்- ப்பா!”

“அக்கா நீ படிக்கலன்னு மட்டும் தான் சொன்னுச்சி… உனக்கு வயசு கம்மின்னு தெரியும் ஆனா எத்தனை வயசுண்ணு சரியா தெரியாது… அதான் உன்கிட்ட ஒருக்கா கேட்டேன்”…

“ஓ!… ஆமா உங்கக்கா படிச்சிருக்காங்களா- ப்பா?”

“கவர்மென்ட் டீச்சரு- டி!… நான்தான் அவளை படிக்க வச்சேன் தெரியுமா?” என்று புன்னகையுடன் கூறினான் ரகுவரன்… 

“எனக்கு தெரியாதுங்க”…

“அவசரவசரமா கண்ணாலம் பண்ணினதால தான் அடிப்படையான விசியமெல்லாம் தெரியலை… சரி விடு போவப்போவ தெரிஞ்சிப்ப… இப்போ லைட்டை அணைக்கவா?” என்று ரகுவரன் கேட்க…

“ம்”… என்று தலையை ஆட்டிய கன்னிமா குனிந்து மெல்லமாக சிரித்தாள்…

லைட்டை அணைத்த நொடியே அவளை அணைத்தான் ரகுவரன்… கன்னிமாவிற்கு சற்று உடல் நடுங்கியது… அதை உணர்ந்த கணவணவன் மனைவியின் தலையை மென்மையாக கோதிவாரு கட்டிலில் சாய்ந்தான்..

கன்னிமா அவனின் மீது சாய்ந்தாள்… கன்னியவளை கன்னிக்கழிக்க காளையவன் அவளை களவாட ஆயத்தமானான்… 

அவளின் ஆடைகளை மென்மையாக நீக்கியவன், வன்மையாக அவனின் ஆடைகளை அகற்றி விட்டு புதுமனைவியோடு இணைந்தான்…

பெண்ணவளின் உதட்டை மென்மையாக கொய்தவன் செல்ல கொடுமை செய்து தாம்பத்தியத்தின் மகத்துவத்தை மனைவியிடம் நிலைநாட்டி சமபங்காய் சுகத்தை பகிர்ந்தான்…

கடந்த காலத்தின் வெறுமையான நிலையை விரட்டி அடித்து கட்டிலில் ஆடைகள் அற்று ஆதாம் ஏவாழாய் இணைந்து வாழ்க்கையை வாழ்வதற்கான துடிப்பை துணையுடன் தூர்வாரி அறிந்துகொண்டனர்…

இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்க.. இல்லறம் நல்லறமாக முடியுமா? என்பது கன்னிமாவின் செய்கையில் தான் தெரியும்…

மேகங்களுக்கு தங்க முலாம் பூசி அந்த அழகை பார்க்க ஆசைப்படுபவர்களை அலட்சியம் செய்துவிட்டு தன் பொன்னான கதிர்களால் ஜீவராசிகளின் கண்களை கூச வைத்து விளையாட்டுக்காட்டிக்கொண்டுந்தான் கதிரவன்… 

காலை பொழுது புலர்ந்தது கூட அறியாமல் ஒருவரை ஒருவர் அணைத்தவாரு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர் புதுமணத்தம்பதிகள்…

கந்தசாமி கதவை தட்டினார்… அவருக்கு சங்கோஜமாக இருந்தாலும் ரகுவரணை எழுப்ப வேறு வழி தெரியாமல் கதவை தட்டியபடியே… “அடேய் ரகுவரா எழுந்திருடா” என்று குரல் கொடுத்தார்…

சட்டென எழுந்தான் ரகுவரன்… கன்னிமாவிற்கும் முழிப்பு தட்டியது… 

“என்னப்பா! மாமா குரல் மாறி இருக்குது… விடிஞ்சி ரொம்ப நேரமாகிடுச்சா?” என்று கன்னிமா கேட்க…

“இல்லடி!.. மணியை பாரு ஆறுத்தான் ஆவுது… இன்னைக்கு வேலைக்கு போகனும்… அதான் அப்பா கதவை தட்டுறாருன்னு நினைக்கிறேன்” என்றவன் எழுந்து ஆடையை மாற்றினான்…

கன்னிமாவும் ஆடைகளை அணிய… அறைக்கதவை தாளிட்டு விட்டு வந்து வாசல் கதவை திறந்தான் ரகுவரன்…

“ஏண்டா வேலைக்கு போவனும்னு எண்ணம் இல்லையா?… அந்த மேனேஜர் எனக்கு ஃபோனை போட்டு ஊழியத்தை வாங்கரான்… சீக்கிரம் வேலைக்கு கிளம்பு… சாயங்காலம் கந்துக்காரன் வந்துடுவான்… சாக்கு போக்கு சொல்ல முடியாது… பணத்தை கொடுத்தா தான் குதர்க்கமா பேசமாட்டான்” என்றார் கந்தசாமி… 

“கிளம்புரன் அப்பா” என்றான் ரகுவரன்… 

“சரி நான் செத்த நடந்துட்டு வரன்… மருமவளை சோராக்கி வைக்க சொல்லு… இனியாவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம்” என்றுவிட்டு கிளம்பினார் கந்தசாமி…

ரகுவரன் உள்ளே வந்தான்…

கந்தசாமி பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள் கன்னிமா…

“கன்னி!… நான் வேலைக்கு போவணும்… பீரோ- வுலருக்குற லுங்கியும் பச்சை கலர் பனியனையும் எடுத்து வை மேலாப்புல தண்ணியை ஊத்திட்டு வந்துடறேன்” என்ற ரகுவரன் துண்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…

வலப்புற வீட்டு வாசற்படியை ஒட்டியவாறு பாத்ரூம் இருந்தது… அவசரமென்றால் வெளியில் தான் வரவேண்டும்… இதில் பெரிய பிரச்சனை குளிக்க அத்தியாவசியத்திற்கு மட்டுமே அந்த பாத்ரூம்… மற்றவைக்கு தெருவில் இருக்கும் பொது கழிப்பிடத்திற்கு தான் செல்லவேண்டும்…

‘என்ன இன்னைக்கே வேலைக்கு கிளம்பிட்டாரு!… மதியமா மருவீட்டுக்கு அழைக்க வரண்ணு ஆயா சொன்னதே?… இவர் வேலைக்கு போயிட்டா என்ன பண்ணுறது’ என்று யோசித்தவாரு பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள் கன்னிமா…

இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த ரகுவரன் மனைவியை கண்டு… “அடியே கன்னி!… என்ன அப்படியே நின்னுட்டு இருக்கவ… எதாவது செய்- டி பசிக்குது” என்றான்…

“என்னப்பா இன்னைக்கு வேலைக்கு போயாகனுமா?” என்று கன்னிமா கேட்க…

“ஆமா கன்னி!… நாளு நாளா கந்துப்பணம் கொடுக்கல… நேத்து கண்ணாலமானதால அந்த கந்துவட்டி கஜா கண்டுக்கல… இன்னைக்கும் பணம் தரலைன்னா சும்மா இருக்க மாட்டான்… அக்கம் பக்கம் இருக்காங்கன்னு கூட யோசிக்காம வார்த்தையை விடுவான்… முன்ன எப்படியோ?… இனிமே ஊட்டு முன்னால கடங்காரன் வந்து கத்துற அளவுக்கு வச்சிக்க கூடாதுல்ல” என்றவன் ஆடையை மாற்ற ஆரம்பித்தான்… 

“சரிப்பா நான் குளிச்சிட்டு வந்து எதாவது பண்ணுறேன்” என்ற கன்னிமா மருவீட்டிற்கு அழைக்க வரும் விசியத்தை மறைத்துவிட்டு பையிலிருந்து ஆடையை எடுத்துக்கொண்டு சென்றாள்…

டீவி ஸ்டாண்டின் மீதிருந்த டப்பாவில் இரண்டு ரூபாய் சில்லறையை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்னாலிருந்த பொதுக்கழிவறையை நோக்கி நடந்தான் ரகுவரன்… 

தொடரும்…!

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!