உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.8
(8)

அத்தியாயம் 10

காரில் கரூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்…

முன் இருக்கையில்  திவ்யா மகளுடன் அமர்நதிருக்க பின் இருக்கையில் சுகுமார் மனைவியுடன் அமர்ந்தார்…

தேவகிக்கு மகன் சாப்பிடாமல் சென்றது வேறு டென்ஷனாக இருந்தது…

மகனுக்கு பல முறை கால் செய்து விட்டார்… அவனோ கால் எடுக்கவில்லை…கட் செய்து கொண்டே இருந்தான்…

இந்த மனுஷனுக்கு அவன எதாவது சொல்லி திட்டலனா பொழுதே போகாது என்று திட்ட..

ஆமா உன் பையன ஏதும் சொல்லக்கூடாது….

மருமக தான் வரப் போற இனி மேலாவது அவன ஏதும் சொல்லாம இருங்க என்று கணவனிடம் நொடித்துக்கொள்ள ..

எனக்கு மட்டும் ஆசையா அவன திட்டுறதுக்கு என்று அவரும் முணுமுணுத்துக் கொண்டே வந்தார்….

அம்மா கொஞ்சம் ரிலாக்ஸா விடுங்க, அவன் சாப்பிட்டு இருப்பான் ..சாப்பிடாம இருக்க மாட்டான் என்று  அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டு வந்தான் அபிஷேக்..

அவன் மனைவியிடம் கண்ணைக் காட்ட அவளும் புரிந்தது போல தலையாட்டினாள் ‌….

அத்தை இன்னைக்கு ஊருக்கு போயிட்டு வந்து  நாளைக்கு டெய்லர் கடைக்குப் போய் வரலாம்… நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன் மூனு நாள்ல வேணும்னு…

ஆமா திவ்யா நான் கேட்கணும்னு நெனச்சேன் நீயே சொல்லிட்ட என்றார்… கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தும் கொண்டனர்..

பிறகு அனைவரும் திருமண விஷயமாக பேசிக் கொண்டிருந்தனர்…

இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு திவ்யா வீட்டை அடைந்தனர்..‌.

திவ்யா வீட்டில் அவள் தந்தை ராமமூர்த்தி மெயின் ஏரியா ஒன்றில் ஹோட்டல் நடத்தி வருகிறார்…

தாய் பூரணி தந்தை ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்வார்கள்….

திவ்யாவிற்கு ஒரு அக்கா ரம்யா.. அவள் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறாள்….

அனைவரையும் வரவேற்றார்…

அப்பா எங்கம்மா என்று திவ்யா கேட்க?

வந்திட்டு இருக்கார் டி. போ போய் அவங்களுக்கு தண்ணீர் குடு என்று நக்ஷத்திராவை வாங்கிக்கொண்டு கூறினார்…

அம்மா நான் கெஸ்ட்.. நீங்க தான் எனக்கு தரனும் என்றாள்..

ஆமா கல்யாணம் ஆகி போயிட்டா அம்மா வீட்டுக்கு கெஸ்ட் ஆயிடுவயா டி என்று கூற..

கூல் ம்மா நான் சும்மா தான் சொன்னேன் நீ வேற ஸ்டார்ட் பண்ணா நிறுத்தவே மாட்ட

என்று கிட்சனுக்கு சென்று விட்டாள்..

அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க?

மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?

எப்ப வந்திங்க?

என்று கேட்க

அவனும் நான்  நல்லா இருக்கேன் அத்தை வந்து ரெண்டு நாள் ஆச்சு…

அனைவரும் சில பல விசாரிப்புகளுக்கு பிறகு

தேவகியே பேச்சை ஆரம்டபித்தார்..

நம்ம அரவிந்த்க்கு வர வாரம் வெள்ளிக்கிழமை நிச்சயம் இருக்கு,

நீங்களும் கண்டிப்பா முன்னாடி நின்று சிறப்பா நடத்திக் கொடுக்கணும் என்று கூற..

கண்டிப்பா வரோம் அண்ணி என்று கூறினார்….

திவ்யா  பொண்ணு ஃபோட்டோ எனக்கு நேத்து  அனுப்பி விட்டா, நாங்க பார்த்தோம்.. ஜோடியா நல்லா இருக்காங்க என்றார் ..

பொண்ணு  கொஞ்சம் அமைதி போல என்க..

ஆமாங்க அண்ணி ஒரே பொண்ணு தான் ஆனா  நல்ல குணம், நல்ல அமைதி என்றார் பெருமையாக…

ராமமூர்த்தியும் அவசரமாக உணவு பார்சலை மனைவியிடம் கொடுத்து விட்டு “வாங்க சம்பந்தி நல்லா இருக்கீங்களா? கொஞ்சம் லேட் ஆகிடுச்சு….

மாப்பிள்ளை எங்க மா ? நீ நல்ல இருக்கியா? பேத்தியை மடியில் அமர்த்திக் கொண்டார்…”

அப்பா அவர் ஆபிஸ்  கால் பேசிட்டு இருக்காரு..‌

சரி மா அம்மா கூட போய் சாப்பிட எடுத்து வை என்று கூற அவளும் சென்று விட்டாள்…உ

சுகுமாரும் ராமமூர்த்தியும் அரவிந்த் திருமணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்..  அபிஷேக்கும்  இடையில் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டான்…

சிறிது நேரம் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்து கிளம்ப தயாரான போது

திவ்யா பாப்பா கூட ரெண்டு நாள் இருந்திட்டு போ வந்து ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா?

அம்மா நான் ஃபங்ஷன் முடிச்சு வரேன்‌.நிறைய வேலை இருக்கும் அத்தை தனியா செய்ய முடியாது ல என்று கூற..

என்னமோ போ ரம்யாவும் வரது இல்லை, நீயும் வரது இல்லை என்று வருத்தமாக கூற..‌

அண்ணி கண்டிப்பா அவள அனுப்பி வைக்கறேன் என்று சொல்லி அவரை சமாதானம் செய்து விட்டு கிளம்பினார்கள்….

திவ்யாவிற்கு அவள் அம்மா கூறியது நினைத்து வருத்தமாக இருந்தது…

அபிஷேக் அவள் கையை ஆறுதலாக பிடித்து … ஃபங்ஷன் முடியட்டும் ஊருக்கு போலாம் என்றான்…

ம்ம்ம்ம் சரி என்றாள்…

ம்மா திவ்யா இனிமேல் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்திடு …

நாங்க மறந்தாலும் நீ என்கிட்ட சொல்லிட்டு போய்ட்டு வந்துடுமா.. உங்க அம்மா பேசியது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.. நாங்களும் ஏதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்போம்…

நீயாவது சொல்லி இருக்கலாம் இல்ல?

வருத்தப்படாத வீட்டுக்கு போனதும் அம்மாக்கு போன் செஞ்சு சமாதானப்படுத்து என்று சுகுமார் கூறினார்..

அவளும் சரிங்க மாமா என்றதுடன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்..

டேய் அபிஷேக் எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு இல்லாம கொஞ்சம் உன் குடும்பத்துக்கு கூட டைம் ஸ்பென்ட் பண்ணு.. உன் குழந்தைக்கு லவரும் தெரிய ஆரம்பிச்சுருச்சு அப்பா அப்பான்னு கேட்டுட்டு இருக்கா? ஒன்னு அவங்கள உன் கூட கூட்டிட்டு போ இல்லன்னா நீ சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துரு புரிஞ்சுதா என்று காட்டமாக தேவகி கூறினார்…

அவனும் வாழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சரி மா நான் யோசிக்கிறேன்?

அங்க இவளுக்கு குழந்தையை விட்டு தனியா இருக்கணும் அதனால தான் நான் எங்க விட்டுட்டு போனேன்..

பாப்பாவும் ஸ்கூல் போடும்போது அங்க கூட்டிட்டு போயிரலாம்..

அப்பதான் திவ்யாவுக்கும் ஜாப் கண்டினியூ பண்ண ஈசியா இருக்கும் என்றான் அபிஷேக்..

இது செய்றதுனாலும் நல்லா யோசிச்சு முடிவு எடுங்க நாங்க ஐடியா தான் சொல்ல முடியும் பைனல் டெசிஷன் நீங்க தான் எடுக்கணும்… அதனால கரெக்டா முடிவு எடுங்கள் என்று சுகுமார் கூறி முடித்தார்…

அவனும் சரிங்கப்பா நன்றி தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்…

பெரியவர்கள் இருவரும் உறங்கிவிட

அவர்களே ரியர் வியூ வழியாக பார்த்துவிட்டு.. திவ்யா கையை ஆதரவாக பற்றிக்கொள்ள; அவளும் அவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டாள்..

நைட் பேசிக்கலாம் இன்று அவன் கூற, ம்ம்ம்ம் என்று கண் சிமிட்டி சிரித்துக் கொண்டாள்…

ஒரு வழியாக உறவினர்களை நிச்சயத்திற்கு அழைத்து வீடு வந்து சேர்ந்தனர் ‌..

வரும் வழியிலேயே உணவை முடித்துக் கொண்டு வந்தனர்….

இவர்கள் வீடு வருவதற்கு மணி பத்து ஆகிவிட்டது.. இன்னும் அரவிந்த் வந்திருக்கவில்லை…

இவன் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?

காலைல இருந்து கால் பண்ணா கட் பண்ணி விட்டுட்டே இருக்கான்…

நாளைக்கு அவன ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கடைக்கு வந்துட்டு போக சொல்லு.. எனக்கு டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன் என்று தேவதையை பார்த்து கூறிவிட்டு அதுக்கு சென்று விட்டார் சுகுமார்..

உங்க அப்பா கோபப்படுறதுக்கு தகுந்த மாதிரி தான் இவனும் நடந்துக்கிறான்..‌ அவனுக்கு போன் பண்ணி பாருடா அபிஷேக் எந்த தேவகி கூற ” மா நான் அவன் பிரண்டு கிட்ட பேசிட்டேன், கொஞ்ச நேரத்துல வந்துருவோம் நீங்க போய் தூங்குங்க என்று கூறினான்..

திவ்யா பாப்பா தூங்கிட்டா  எங்க ரூம்ல  தூங்கவச்சுட்டேன் மா என்று கூற” ஓகே அத்தை  சென்று விட்டாள்..

அவள் குளித்து முடித்து கீழே வர அண்ணன் தம்பி இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்…

கொழுந்தனாரே நீ எனக்கு எல்லாரையும் டென்ஷன் படுத்திட்டீங்க மாமா அது ரொம்ப டென்ஷனா இருக்காங்க..

நாங்க எவ்வளவு தடவை கால் பண்ண ஒரு டைம் ஆவது அட்டென்ட் பண்ணி பேசி இருக்கலாம் இல்ல என்று கூற.

சாரி அண்ணி.. இன்னைக்கு கொஞ்சம் ஒர்க் பிஸி..

அதுக்காக போன் எடுத்து பேசாம இருக்கலாமா; நாளைக்கு மாமா உங்களை கடைக்கு வர சொன்னாரு என்று கூற..

ம்ம் அபி சொன்னான்..

ஓகே ஓகே! சாப்டீங்களா ?

சாப்பிட்டேன் என்கிட்ட இருக்கு நான் ரூமுக்கு போறேன்  கொஞ்சம் டயர்டா இருக்குசென்று விட்டான்…

டோர் லாக் செய்து விட்டு வந்ததும் டயர்டா இருக்கு டி என்று சொல்லி திவ்யா கை பிடித்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை லாக் செய்தான்..

திவ்யாவை பின் இருந்து அணைத்து அவளுக்கு முத்தம் கொடுத்து”சாரி டி

நான் உன்னையும் பாப்பாவும் சரியா பாத்துக்குறது இல்லையா என்று அவன் கேட்க”

அபி அப்படி எல்லாம் இல்லை .. கொஞ்ச நாள் தான் அப்புறம் நாங்க உங்க கூட வந்திடரோம்.. பாப்பா இப்ப உங்களுக்கு தேட ஆரம்பிச்சிட்டா.. எனக்கும் உங்கள விட்டு தனியாக இருக்க கஷ்டமா இருக்கு என்று சொல்லி அவன் நெத்தியில் முத்தமிட்டாள்..

“ரொம்ப தேங்க்ஸ் டி எனக்கு புரிஞ்சுகிட்டதுக்கு” ..

இது உனக்குத்தான் என்று ஒரு பெரிய சாக்லேட்டை அவளுக்கு கொடுத்தான்.‌‌..

வாவ் சூப்பர் இது எப்ப வாங்குனீங்க?

அவளைப் பேச விடவே இல்லை…

ஒரு அழகான கூடல் நடந்தது..

பிறகு இருவரும் அனைத்துக் கொண்டே உறங்கிப் போனார்கள்…

வழக்கம்போல நம்ம ஹீரோவும் பிரகதியோட எடுத்த போட்டோஸ் பாத்துட்டு லவ் ஃபீலிங் தூங்கிட்டாரு… அடுத்த எபில பிரகதி வீட்ல என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!