தேவை எல்லாம் தேவதையே…

4.8
(24)

தேவதை 33

   தர்ஷினி காரை விட்டு இறங்கி வந்தவள், ப்ரோக்ராம் நடக்கும் இடத்தில் தன் தோழி அருகில் சென்று நின்று கொண்டாள்.. அவள் சென்று நீண்ட நேரமாகி வருவதை தேவாவும் கவனித்தான்…

     ஆனால் அவள் வருவது கூட எனக்கு தெரியாது என்பது போல் முக பாவனையை மாற்றியவன், அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..

    தர்ஷியின் கண்கள் தேவா இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்ததும், அவனை நொடிக்கொரு முறை பார்த்தவாறே இருந்தாள்.. மனம் முழுக்க எவ்வித சந்தேகமும் இன்றி தன் தேவா மட்டுமே நிறைந்து இருந்தான்..

    அவளை அறியாமல் அன்று நடந்த கனவை பற்றியும் யோசித்தாள்.. தானாக அவள் விரல்கள் தன் இதழ்களை தொட்டு நீங்க, முகத்தில் வெட்க புன்னகை பூத்தது….

     தேவா அதை பார்த்தவன், அங்கு வேறு ஏதோ நடந்ததாக நினைத்து ரணமாய் நின்றான்.. அதே நேரத்தில் தர்ஷி வசியுடன் காருக்கு சென்று நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்ததையும், தன் உதடுகளை தீண்டி வெட்கப்பட்டு நிற்ப்பதையும் கண்ட ஷில்பா ஆத்திரத்தில் கண்கள் சிவந்து அங்கிருந்து வேகமாய் செல்ல, அவளது நண்பர்களும் அவள் பின்னால் ஓடினர்…

         ஏய் ஷில்பா நில்லு டி, என அவளது நண்பர்கள் கத்திய படி பின்னால் ஓடி அவளை பிடித்தனர்…

      பாத்திங்களா? வசி எவ்ளோ மோசமா நடந்துகிறான்னு.. வசியோட அழகுக்கும் அந்தஸ்துக்கும் நா மட்டும் தான் ஷூட் ஆவேன்.. ஆனா அவன் போயும், போயும் இந்த பிச்சைக்காரிய காருக்கு அழைச்சிட்டு போய் முத்தம் குடுத்து, கட்டி புடிச்சி ச்சி நெனச்சி பாக்கவே அசிங்கமா இருக்கு…

      அவளை விட எந்த விதத்துல நா குறைஞ்சி போய்ட்டேன்? விட மாட்டேன் எந்த முகத்தை வச்சி என் வசிய மயக்குனாளோ! அந்த முகத்தை சிதைச்சி, வசி அவ முகத்தை பாத்தாலே வாமிட் பண்ற அளவுக்கு கொண்டு வருவேன் என ஆத்திரத்தில் முடிவு எடுத்திருக்க, அந்த குரூப்பில் இருந்த ஸ்டீபன் மட்டும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை…

     நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என சொல்லவும், ஷில்பாவுடன் சேர்ந்து மற்றவர்களும் அவனை கோபமாக திரும்பி பார்த்தனர்…

      எதுக்கு முறைக்கிறீங்க? நா சொல்றத முதல்ல கேட்டுட்டு முடிவு எடுங்க, அவ மேல எனக்கும் ஒரு கண்ணு இருக்கு… அ அதுனால நா அவளை முதல்ல முடிச்சிக்கிறேனே.. அதுக்கு பிறகு அவளை நீங்க நெனச்ச மாதிரி ஆசிட்ல குளிப்பட்டலாம் என அசடு வழிய ஷில்பா வில்லத்தனமாய் சிரித்தாள்..

     கிரேட் ஐடியா… நெக்ஸ்ட் வீக் வசியோட பர்த்டே வருது, அப்ப அவளை தூக்குறோம், முடிக்கிறோம் என பிளான் போட்டு கொண்டனர்…

    அம்ருதா மேடை ஏறி பாட்டு பாட அவள் குரலில் அநேகம் பேர் மெய் மறந்து நின்றனர்.. அதில் தேவாவும் ஒருவன், அவள் பாடலில் உருகி போய் நின்றிருந்தான்…

    காலைல லொட லொடன்னு பேசுன பொண்ணா இது? இவ்ளோ அழகா பாடுறா? என்றவன் அவள் பாடலை ரசித்து கேட்டு கொண்டிருக்க… தர்ஷிக்குள் தந்தூரி அடுப்பே எறிந்தது…

     இவ தான காலைல தேவா கூட வந்து இறங்குனது… இவ பாடுறத எப்டி ரசிக்கிறான் பாரு..! பல்லை கடித்தவள் இவன் அவளை பாக்கவே கூடாது, இரு டா வரேன் என்றவள் தன் இரு தோழிகளையும் அழைத்து கொண்டு அவன் முன்பு சென்று நிற்க, அந்த கூட்டத்தில் தன்னை நெருங்கி நின்றவளை துளியும் பார்க்கவில்லை தேவா… சரிதான் போடி… என்பது போல் நின்றிருக்க அது மேலும் அவளை காண்டேத்தியது…

     ஓஹ் என்ன விட அவ முக்கியமா போய்ட்டால்ல, இரு டி என்றவள் தன் தோழிகளிடம் காதில் ஏதோ ஓத…

     ஜெய் அதை பார்த்தவன், தேவாவின் காதருகில் சென்று, சரி தான் சைத்தான் ஏதோ ஓத ஆராமிச்சிட்டு என்றான்..

     சட்டென அவர்கள் முன்னால் கிடந்த சேரில் 3 பேரும் ஏறி நிற்க, தேவா, ஜெய் அமுலுவுக்கும் அம்ருதா பாடுவது தெரியவில்லை…

     மச்சான் இவளுங்களுக்கு சேட்டையை பாத்தியாடா! என்ன தான் டா தேவா பிரச்சனை இவளுக்கு, இன்னைக்கு முழுக்க சரியே இல்லையே! என்றவனை என்னடா இப்டி மறச்சிட்டாளுங்க வா என வேறு இடத்திற்கு அமுலு இழுத்து சென்றாள்…

      ஆனால் தேவா அங்கிருந்து நகரவில்லை.. காரணம் அவன் தேவதை கட்டியிருந்த அரக்கு நிற புடவை, வெளிர் நிற இடுப்பை படம் போட்டு காட்ட.. பின்னால் இருக்கும் மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ! என்ற பயத்தில் அவள் இடுப்பை மறைக்கும் படி அங்கேயே நின்று கொண்டான்…

     தர்ஷி வெற்றிகரமாய் மறைத்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் சேரில் நின்றபடி ஆட்டம் போட்டாள்.. ஆட ஆட மேலும் புடவை பின்னால் விலக, தேவா புடவையை கட்டிக்கிட்டு என்ன ஆட்டம் போடுறா பாரு? ராட்சசி மனதிற்குள் அவளை வருத்தவன், என்ன செய்வதென தெரியாமல் நின்றிருந்தான்…

      அம்ருதா பாடி முடித்து மேடையை விட்டு கீழே இறங்கிய பின் தான் இவர்களும் சேரில் இருந்து இறங்கினார்கள்… தர்ஷி கீழே இறங்கியவள் தேவா முகம் பார்த்து கோவமாய் முறைத்தவள், அவன் நெஞ்சில் தன் தோளால் ஒரு இடி இடித்து விட்டு தான் சென்றாள்…

      தேவா தன் நெஞ்சில் கை வைத்தவன், இது வேறயா!? சரியான ராட்சசி என முணுமுணுத்தவன் அவள் சென்ற பின் தான் அவனும் அங்கிருந்து நகர்ந்தான்…

      வசி சென்றது பாருக்கு தான்.. பியர் வாங்கி வந்தவன், மூச்சு முட்ட அதை குடித்து விட்டு, கண்கள் இரண்டும் சிவந்து போய் தன் செல்போனில் உள்ள அவளது போட்டோவை பார்த்து விரலால் வருடினான்…அழுகை பொத்து கொண்டு வந்தது…தர்ஷி என்ன லவ் பண்ணலயா டி? ஏண்டி லவ்வரா பாக்க முடியல? வேணாம் டி…..தப்பு தேவா தான் உனக்கு சரி, நா கிடையாது, அவனால தான் உன்ன நல்லா பாத்துக்க முடியும்….ஆனா ஒன்னு டி, நீ வேணும்னா கோவத்துல மத்தவங்கள வெறுப்பேத்த என்கிட்டே பொய்யா லவ்வ சொல்லிருக்கலாம்,, ஆனா நா அப்டி இல்லை.. உன்கிட்ட லவ்வ இது வரைக்கும் சொல்லலைனாலும், உன்ன இங்க இங்க வச்சிருக்கேன் டி என நெஞ்சை தொட்டு காட்டியவன்…இங்க டி என் இதயத்துல இருக்க…. வலிக்குது டி ரொம்ப.. மனசு முழுக்க உன்ன தேடுது, போட்டோ பாத்து அழுது புலம்பி தள்ளினான்… தர்ஷியை ஒரே நாளில் எவ்வளவு குடித்தால் மறக்க முடியுமோ! அவ்வளவு குடித்து போதை தலைக்கேறி காரிலேயே கண்கள் சொக்கி விழுந்தான்…

      மணி 8.30ஐ தாண்டி செல்ல…ப்ரோக்ராம் முடிந்ததும், மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்…ஜெய் தேவாவிடம் சொல்லிவிட்டு அமுலுவை அழைத்து கொண்டு சென்று விட… தர்ஷி தன் ஸ்கூட்டியின் முன்பு நின்றிருந்தாள்…இன்னைக்கு தேவாகிட்ட எப்படியும் பேசிரனும், என்னால முடியல அவன்கிட்ட நா அவனை லவ் பண்ற விஷயத்தை சொல்லிரனும், அவன் ஏத்துக்கிறான், ஏத்துக்கல! அது அடுத்தது பாத்துக்கலாம் என காத்து கொண்டு நிற்க…

     ஆனால் தேவாவோ, அம்ருதாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்… ப்ரோ நா எப்படி பாடுனேன்?

      உண்மையாவே சூப்பர் மா, ஆமா உன் நேம் அமுருதாவா?

     எஸ் ப்ரோ உங்க நேம்?

      நான் தேவா….சரி உங்க வீடு எங்க இருக்கு மா? சொல்லு நானே வந்து விடுறேன்…

       வேணாம் ப்ரோ வண்டிய மட்டும் எடுத்து குடுங்க.. நா போய்க்கிறேன்..

       சரி பாத்து பத்திரமா போனும்… இது என் நம்பர் வீட்டுக்கு போயிட்டு மறக்காம கால் பண்ணி எனக்கு இன்பார்ம் பண்ணனும் என்ன புரிஞ்சிதா?

        தேவா நம்பர் கொடுக்க, அம்ருதா அதை வாங்கி கொண்டாள்… சரி ப்ரோ என அதன் பிறகு இருவரும் பேசிய படி நடந்து வந்து கொண்டிருக்க… தர்ஷி அதை பார்த்து விட்டாள்…

      பார்க்கிங்கில் தன் பைக்கை எடுக்க வந்தவன், தர்ஷி தன் ஸ்கூட்டி முன்பு நிற்பதையும் கண்டு வசிக்காக நிற்கிறாள் போல என சட்டை செய்யாமல் வண்டியை எடுக்க, அம்ருதா அவன் தோளில் கை வைத்து ஏறி, இரு கால்களையும் போட்டு அமர்ந்து கொள்ளவும்,, தேவா வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்….

       தேவாவின் உதாசினம் தர்ஷியை வெகுவாக பாதித்து, முகம் வாடி, உதடு பிதுக்கி அழும் நிலைக்கே சென்றாள்… பொறிக்கி நா உட்கார வேண்டிய இடம் டா, அவளை உட்கார வச்சி கூப்டு போற.. எப்படி மனசு வந்துச்சி!? உன்மேல கை வைக்குற உரிமை எனக்கு மட்டும் தான இருக்கு! ஆனா அந்த நாய் கை வச்சிட்டு எவ்ளோ உரிமையா உட்காருது? யாரு டா அந்த பிசாசு? எவ்ளோ மாறிட்ட டா, தேவா என்ன விட்டுட்டு அவளை கூப்டு போறல..! போடா நா எப்படி போனா உனக்கென்ன? சிறிது நேரம் அப்படியே நின்றவள் கண்களை துடைத்து விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்திருந்தாள்…

      தேவாவுக்கு மனம் ஏதோ சரியில்லை.. லூசு தினமும் அவன்கூட தான் பேசுறா, அவனை ஒரு நாளைக்கு அத்தனை முறை பாக்குறா, பத்தாதா? லேட் நைட்டுல தனியா அவனுக்காக பயமே இல்லாம நிக்கிறா, ரொம்ப மாறிட்ட டி வண்டு… சரியில்ல ஹ்ம்ம் என எண்ணியவன் அம்ருதா வண்டியை காலையில் சரி செய்ய சொல்லி குடுத்த கடைக்கு சென்று அவள் ஸ்கூட்டியை வாங்கி குடுத்து விட்டு, அம்ருதாவை வீட்டிற்கு அனுப்பிய பின்… மீண்டும் திரும்பி வந்த வழியிலேயே சென்றான்…

    வேற எதுக்கு தர்ஷியை பார்க்க தான்.. தர்ஷி செல்லும் வழியில் மறைந்து நின்றவன் அவள் வருகிறாளா? என நோட்டம் விட்டிருக்க…

   சிறிது நேரம் கழித்து அவள் வருவதை பார்த்தவன், அவள் பின்னாலேயே மறைந்து சென்று அவள் வீட்டிற்குள் சென்ற பின் தான் தேவா தன் வீட்டிற்கே சென்றான்…

டியர்ஸ் படிச்சிட்டு மறக்காம stars குடுங்க 🥰🙏🙏

தொடரும்ம்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!