சீதளம் -44
இங்க ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருந்து கண்களைத் திறந்தாள் மேகா. அப்பொழுது அவள் அருகில் அமர்ந்திருந்த அப்பத்தாவும் அன்னலட்சுமியும் அவள் கண் விழித்ததும்,
“ அம்மாடி இப்போ எப்படிம்மா இருக்க நீ மயக்கம் போட்டு விலுகவும் நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம் தாயி நீ மாசமா இருக்க. உன் வயித்துல எங்க வீட்டு வாரிசு உருவாகி இருக்கு. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்றார் அப்பத்தா.
அவளோ தன்னுடைய வயிற்றை தொட்டு பார்த்துக் கொண்டு சந்தோஷப்பட்டவள்,
“ அப்பத்தா அவர் எங்க நான் அவரை பார்க்கணும்” என்றாள்.
அப்பத்தாவோ,
“ இல்ல தாயி வேண்டாம் அவன் ரொம்ப கோவமா இருக்கான் நீ கவலைப்படாத போக போக எல்லாம் சரியாயிடும்”
“ அப்பதா என்ன மன்னிச்சிடுங்க விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நம்ம அறிவு எப்படி சந்தோஷமா இருப்பா..
அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல அப்பத்தா அதனாலதான் நான் அவளுக்கு உதவி செஞ்சேன்”
என்றாள்.
“ புரியுது தாயி எல்லாம் அந்த சின்ன கழுதை பண்ண வேலை.
ஓடிப்போன அவன் தங்கச்சியை விட்டுட்டு உன்னை போட்டு அவன் பாடா படுத்துறான் சரி விடு பார்த்துக்கலாம் நீ அழுகாத தாயி வயித்துல புள்ள இருக்கும்போது அழக்கூடாது” என்றார் அவர்.
அங்கு வெளியே சேரில் அமர்ந்திருந்த வேந்தனுடைய முகமோ சற்றும் தன்னுடைய இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.
அவன் அருகில் அமர்ந்திருந்த செல்வரத்தினமோ அவனுடைய தோளைத் தொட்டார்.
அப்பொழுது அவனுடைய ஃபோனுக்கு அழைப்பு வர அதை எடுத்து காதில் வைத்தவனுக்கோ அதில் வந்த செய்தியை கேட்டு முற்றிலுமாக உடைந்து போனான்.
கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வர அவனுடைய நிலைமையை கண்ட செல்வரத்தினமோ,
“ ஐயா வேந்தா என்ன ஆச்சு ஏன் இப்படி அழற” என்று அவர் கேட்க.
இரவு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.
அவன் இரவு வீட்டிற்கு வந்தது முதல் வயலில் தீப்பிடித்து வீரா காயம் அடைந்தது அனைத்தையும் கூற செல்வரத்தினத்திற்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ என்னய்யா சொல்ற அந்த சென்பகபாண்டியன் நேரம் பார்த்து வயல்ல தீய வச்சிருக்கான். இப்போ வீராவுக்கு எப்படி இருக்கு” என்று அவர் உடைந்து போய் கேட்க.
வேந்தனோ அழுகையினூடே,
“அப்பா அவன் உடம்புல முக்காவாசி தீக்காயம் பட்டு இருக்கு.. அதுல அவனோட நாலு கால்கள் தான் ரொம்ப தீக்காயம். அதனால அவன் கால் நரம்பு எல்லாம் அதிகமா சேதம் அடஞ்சு இருக்காம் அதனால இனி வீரவால நடக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு.
நானும் கேட்டேன் இதுக்கு வேற வழியே இல்லையான்னு ஆனா எந்த வழியும் இல்லைன்னு சொல்லிட்டாருப்பா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நம்ம வீராவுக்கா இப்படி ஒரு நிலைமை வரணும்” என்றவன்,
“வீராவுக்கு அடிபட்டு இருக்குன்னு பொய் சொல்லி என்னை வீட்டுக்கு அனுப்பினா ஆனால் உண்மையா வீரா இப்போ எந்த நிலைமையில இருக்கான்னு பாருங்க. அவ பொய்யா சொன்னது இப்போ உண்மை ஆயிட்டு பா” என்று கதறினான்.
அவனை தன் தோளோடு அணைத்துக் கொண்ட செல்வரத்தினமோ,
“ கவலைப்படாத வேந்தா கண்டிப்பா ஏதாவது ஒரு வழி இருக்கும் நம்ம வீரா சரியாக. இங்கே என்ன அந்த ஒரு டாக்டரா இருக்காரு நம்ம வேற டாக்டர் கிட்ட விசாரிச்சு பார்க்கலாம். ஏதாவது வழி கிடைக்கும்.
நீ இப்படி சோர்ந்து போகாத” என்று ஆறுதல் சொல்ல,
“ இல்லப்பா நான் கேட்டுட்டேன் வீரவால இனி நடக்கவே முடியாதுன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க” என்றான்.
நீங்க டிசார்ஜ் பண்றதுக்கான எல்லா வேலையும் பார்த்துக்கோங்கப்பா நான் அங்க ஹாஸ்பிடல் போய் வீராவ பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். எனக்கு இவ மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கல” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“ கடவுளே நான் என்ன பாவம் பண்ணேன் ஏன் என் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை.
என் பொண்ணு ஊர் முன்னாடி எங்களை அசிங்கப்படுத்திட்டு போனாள்னு கவலைப்படுறதா, இல்ல வயலு எரிஞ்சு போச்சுன்னு கவலைப்படுறதா, இல்ல எங்க வீட்டுப் பிள்ளையா வளர்ந்த எங்க வீராவுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படறதா, இல்ல எங்க வீட்டு வாரிசு வரப்போகுதுன்னு சந்தோஷப்படுறதா எந்த ஒரு நிலையிலும் நிக்க விடாம இப்படி தள்ளாடும் நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே” என்று கடவுளிடம் முறையிட்டவர் ஒரு செவிலியர் வந்து,
“ சார் டிசார்ஜ் ஃபார்ம் எல்லாம் ரெடி பண்ணியாச்சு நீங்க பில் கட்டிட்டு சைன் பண்ணீங்கன்னா இப்பவே நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்றார்.
தன்னுடைய துக்கங்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த செல்வரத்தினமோ எழுந்து அவருடன் சென்றவர் அனைத்து ஃபார்மாலிட்டிசும் முடிந்துவிட்டு மேகா இருந்த அறைக்குள் வந்தவர்,
“ அன்னம் எல்லாம் முடிஞ்சது வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார்.
வேந்தன் எங்கே என்று அவர் கேட்க.
“ அவன் ஒரு வேலையா வெளிய போயிருக்கான் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்”
“ என்னங்க இந்த நேரத்துல அவனுக்கு வேலை தான் முக்கியமா” என்று அவர் கேட்க.
“ இங்கு பாரு அன்னம் வீட்டுக்கு போய் நான் சொல்றேன் வாங்க போகலாம்” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
***
இங்கு சென்பகபாண்டியனின் வீட்டுக்கு தன்னுடைய புது மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான் கதிரவன்.
அறிவழகியை அங்கு பார்த்த சென்பகபாண்டியனுக்கோ ஆத்திரமாக வந்தது.
அதை தன்னுடைய மகனிடமே காட்ட ஆரம்பித்தார் எப்பொழுதும் போல.
“ டேய் அறிவு கெட்டவனே உன்னை யாரு வீட்டுக்குள்ள விட்டா அதுவும் போக இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த” என்று அவர் ஆக்ரோஷமாக கேட்டார்.
அவனோ சற்று பவ்வியமாக,
“ அப்பா இவளை நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்” என்று அவன் சொல்ல, அவ்வளவுதான் சென்பகபாண்டியனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.
உடனே உள்ளே சென்று தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வந்தவர் சற்றும் சிந்திக்காமல் கதிரவனின் நெற்றியில் வைத்து அழுத்த போக,
திடுக்கிட்ட கதிரோ,
“ அப்பா நீங்க நினைக்கிற மாதிரி இவளை நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணல உங்களுக்காக தான் இவளை காதலிக்கிற மாதிரி நடிச்சு அவளே அவ வீட்டை விட்டு ஓடி வர்ற மாதிரி செஞ்சு இப்ப கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன்.
உங்க பையனுக்காக இவ அவங்க ஒட்டு மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்திட்டு என் கூட ஓடி வந்து இருக்கா” என்று படபடவென்று கூறி முடித்தான்.
சற்று யோசித்த சென்பகபாண்டியனோ,
“நீ சொல்றது உண்மையா” என்று அவர் கேட்க அவனோ ஆமாம் என்று தலையசைத்தான்.
உடனே கலகலவென்று சிரித்த சென்பகபாண்டியனோ,
தன்னுடைய மகனை தோளைத் தட்டி பாராட்டியவர்,
“ பரவாயில்லடா மகனே இப்பவாவது என் புள்ளைன்னு நிரூபிச்சு இருக்கியே. அந்த செல்வரத்தினம் என்ன ஆட்டம் ஆடுனான்.
இப்ப பாரு பல்லு புடுங்குன பாம்பாட்டம் கிடப்பான். அதுவும் அவனுடைய ஒரே பொண்ணு என் பையனுக்காக அவனை அசிங்கப்படுத்திட்டு ஓடி வந்து இருக்கா. அதுவும் யாரால உன்னால இதைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குடா மகனே” என்று அவனை பாராட்டியவர் அறிவழகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளுடைய பிடரி முடியை கொத்தாக பிடிக்க திடுக்கிட்டு போயின அறிவழகியும் கதிரவனும்.
அவருடைய அந்த அழுத்தமான பிடியை தாங்காமல் அவருடைய கையை பிடித்தவாறு இவள் கத்த அதை சற்றும் பொருட்படுத்தாத சென்பகபாண்டியனோ,
“ என்னடி வலிக்குதா வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும் உன் அப்பனால எத்தனை இடத்துல நான் அசிங்கப்பட்டு இருப்பேன். அந்த வலியெல்லாம் இப்போ நீ அனுபவிக்க போற. அந்த செல்வரத்தினத்துக்கு மகளா பிறந்ததுனால”
“ அப்பா” என்று கதிர் அவரை தடுத்து நிறுத்த பார்க்க அவரோ ஒற்றைப் பார்வையால் தன்னுடைய மகனை அடக்கியவர்,
“ என்னடா உனக்காக இவ அவங்க வீட்ட அசிங்கப்படுத்திட்டு ஓடி வந்தா வீட்டுக்குள்ள வாமான்னு ஆரத்தி எடுத்து வரவேற்பேன்னு நினைச்சியா அது எந்த ஜென்மத்திலும் நடக்காது.
இவளை வச்சு இனி அந்த செல்வரத்தினத்தை என்ன பண்ண போறேன் பாரு.
இவளை வச்சு இனி அவனை ஒவ்வொரு இடத்திலும் அசிங்கப்படுத்தி நான் சந்தோஷப்பட போறேன்டா.
இவளை இங்க கூட்டிட்டு வந்து நீ ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்க” என்றவர் அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் அங்கு மாட்டு கொட்டையில் தள்ளிவிட்டார்.
அவளோ கதிரவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் தனக்கு அவன் உதவ மாட்டானா என்று. கதிரவனுக்கும் அவளை பார்க்க பாவமாக இருந்தது.
ஆனாலும் தன் தந்தை முன்னால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் போனது.
அறிவழகியின் இந்த முடிவு அவளை சென்று கொண்டு செல்லும் பார்ப்போம்.