சீதளம் -47
வேகமாக உள்ளே வந்த மேகா அங்கு ஹாலில் அன்னலட்சுமி அப்பத்தா செல்வரத்தினம் மூவரும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னாள் வந்தவள்,
“ மாமா என்னால வீராவ சரி பண்ண முடியும்” என்று சொன்னாள்.
அவர்கள் மூவரும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது வெளியே சென்றிருந்த வேந்தனோ உள்ளே வர அவள் சொன்னது அவனுக்கும் கேட்டது.
ஆனால் எதையும் கேளாதது போல அவனுடைய அப்பா அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
செல்வரத்தினமோ,
“ அம்மாடி நம்ம வேந்தன் ஏற்கனவே ரெண்டு மூணு ஃபேமஸ் டாக்டர் கிட்ட விசாரிச்சுட்டான். அவங்க வீராவ சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நீ இப்பதான் படிச்சு முடிச்சு இருக்க நீ எப்படிம்மா அவனை சரிப்படுத்த முடியும்” என்று புரியாமல் கேட்டார்.
அவளோ,
“ மாமா எனக்கு வீராவோட ட்ரீட்மென்ட் பைல் வேணும் கிடைக்குமா” என்று கேட்டாள்.
உடனே செல்வரத்தினம் அன்னலட்சுமியிடம் அதை எடுத்து வருமாறு பணித்தார்.
அவரும் வீராவினுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து வந்து மேகாவிடம் கொடுக்க அதை வாங்கி முழுவதுமாக பார்த்து ஆராய்ந்தவளோ,
“ மாமா எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க நான் இப்ப வந்துடறேன்” என்றவள் வேகமாக தன்னுடைய அறைக்குச் செல்ல போக அதை பார்த்த வேந்தனோ,
“அம்மா கொஞ்சமாவது அவளுக்கு வயித்துல குழந்தை இருக்குன்னு ஞாபகம் இருக்கா இல்லையா ஏதோ ஓட்டப்பந்தயத்தில ஓடுற மாதிரி ஓடுறா பொறுமையா போக சொல்லுங்க” என்று பற்களை கடித்தான்.
அதில் தன் நிலையை உணர்ந்தவளோ,
‘ அச்சச்சோ ஆமால்ல அவசரத்துல இதை மறந்து போயிட்டேனே’ என்று தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டவள்,
“ மன்னிச்சிடுங்க இனி கவனமா இருந்துக்குறேன்” என்று அவனிடம் கூறியவள் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
தன்னுடைய மொபைலை எடுத்து அவளுடைய ப்ரொபசருக்கு அழைப்பு எடுத்தவள் வீராவினுடைய மெடிக்கல் ரிப்போர்ட் அனைத்தையும் அவருக்கு அனுப்பினாள்.
பின்பு தனக்கு இருந்த சந்தேகங்களையும் அவரிடம் கேட்டுத் தெளிவு படுத்தியவள் முகத்தில் புன்னகையோடு மீண்டும் கீழே வந்தாள்.
அவளுடைய மலர்ந்த முகத்தை கண்டவர்களுக்கோ தங்களுடைய வீராவை சரிப்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு தேங்கி நின்றது.
அதை பொய்யாக்காது,
“ மாமா நான் சொன்னல்ல என்னால கண்டிப்பா வீராவை சரிப்படுத்த முடியும் இப்போ நான் என்னோட ப்ரொபசர் கிட்ட அதை பத்தி தான் பேசிட்டு வந்தேன். அவரும் பாசிட்டிவா தான் பேசினார் சோ கண்டிப்பா நம்ம வீரா பழைய நிலைமைக்கு திரும்ப வருவான் அதுக்கு நான் பொறுப்பு” என்று சந்தோஷமாக கூறினாள் மேகா.
அப்பத்தாவோ,
“ அம்மாடி நீ சொல்றது உண்மையா தாயி அப்போ நம்ம வீரா சரியாகி விடுவானா எனக்கு அவனை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு நீ சொன்ன மாதிரி அவன் சரி ஆயிட்டானா அந்த முத்தாரம்மனுக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்” என்றார்.
“ ஆமா அப்பத்தா நம்ம வீரா கண்டிப்பா சரியாகிடுவான்”
“ அப்பா நான் ஏற்கனவே எனக்கு தெரிந்த பேமஸான டாக்டர்ஸ் கிட்ட கேட்டு இருக்கேன் யாருமே பாசிட்டிவா சொல்லவே இல்ல வீராவால இனி நடக்க முடியாதுன்னு தான் சொன்னாங்க ஆனா இவ முடியும்னு சொல்றா.. என்ன திரும்பவும் நம்மளை நம்ப வச்சு ஏமாத்த பார்க்கிறாளா” என்று வார்த்தையால் தாக்கினான் அவளை.
ஆனால் மேகாவோ சற்றும் தடுமாறாமல்,
“ மாமா முயற்சி பண்ணா முடியாததுன்னு எதுவுமே இல்லை. வீராவுக்கு வந்திருக்கிறது பெரிய பிரச்சனைதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா என்னால முடிஞ்ச வரைக்கும் நான் முயற்சி பண்ணி பார்க்குறேன் முதல்ல இந்த மாதிரியான தீக்காயங்களுக்கு மல்டி ஸ்டேஜ் ட்ரீட்மென்ட் தான் பண்ணனும்.
அதுக்கு அப்புறமா அவனுக்கு ஒவ்வொரு ஸ்டேஜ்ஜா ட்ரீட்மென்ட் கொண்டு போனும். தினமும் உடற்பயிற்சி மாதிரி அவனுடைய கால்களுக்கு அழுத்தம் கொடுக்கணும். இரண்டு மாசம் தொடர்ந்து அவனுக்கு டிரீட்மென்ட் செஞ்சா கண்டிப்பா என்னால வீராவ பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்னை நம்புங்க மாமா” என்றவளோ ஏக்கமாக செல்வரத்தினத்தையும் வேந்தனையும் பார்த்தாள்.
வேந்தனோ அவள் புறம் திரும்பவே இல்லை.
செல்வரத்தினமோ,
“ சரி மா நீ உன்னோட ட்ரீட்மென்ட் செய் உனக்கு என்னனென்ன தேவையோ என்கிட்ட சொல்லு நான் ஏற்பாடு பண்ணி தரேன்” என்றார்.
புன்னகையோடு அவருக்கு நன்றி உரைத்தாள் மேகா.
சிறிது நேரத்தில் அவர்களுடைய வீட்டிற்கு பூங்கொடியின் தந்தையும் தாயும் வருகை தந்திருந்தனர்.
“ஐயா வர வெள்ளிக்கிழமை என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் கண்டிப்பா நீங்க குடும்பத்தோட எல்லாரும் வரணும்” என்று அவர் கேட்க.
செல்வரத்தினமோ,
“ அதுக்கு என்ன சின்னசாமி கண்டிப்பா நாங்க எல்லாரும் வர்றோம்” என்று வாக்குறுதி கொடுக்க பூங்கொடியின் தந்தையோ,
“ ஐயா ஏற்கனவே நிச்சயதார்த்தத்தில சொன்ன மாதிரி உங்க கையால என் பொண்ணுக்கு தாலி எடுத்து கொடுக்கணும்” என்று அவர் கூறினார்.
அதைக் கேட்டதும் செல்வரத்தினத்தின் முகம் நொடியில் வாடியது.
அதை அனைவருமே கண்டு கொண்டனர்.
உடனே பூங்கொடியின் தந்தையோ,
“ என்னய்யா சட்டுனு உங்க முகம் வாடிட்டு என்ன யோசிக்கிறீங்க” என்று பாவமாக கேட்டார்.
அதற்கு செல்வரத்தினமோ,
“ இல்ல சின்னசாமி என்ன சொல்றதுன்னு தெரியல உனக்கு தெரியாததுன்னு ஒன்னும் இல்ல என் பொண்ணு கல்யாணத்துல கொஞ்சம் பிரச்சனையாச்சு ஊர்க்காரங்க முன்னாடி கொஞ்சம் அவமானமாவும் போயிட்டு இப்போ திரும்ப உன் பொண்ணுக்கு தாலி எடுத்துக் கொடுக்க நீ சொல்ற அதான் என்ன பண்றதுன்னு தெரியல.
நான் கல்யாணத்துக்கு வரேன் ஆனா என்னால தாலி எடுத்து கொடுக்க முடியுமான்னு தோணலப்பா தப்பா எடுத்துக்காத” என்றார்.
அதற்கு பூங்கொடியின் தந்தையோ,
“ ஐயா என்னை நீங்க என்னென்னமோ பேசுறீங்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல உங்க பொண்ணு பண்ண தப்புக்காக நீங்க ஏன் இப்படி வருத்தப்படுறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என் பொண்ணுக்கு உங்க கையால நீங்க தாலி எடுத்து கொடுக்கணும் எனக்கு அதுதான் ஐயா வேணும்.
ஊர்க்காரங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காதீங்க நான் சொல்றேன் என் பொண்ணு கழுத்துல ஏற போற காலி உங்க கையால நீங்க தொட்டுக் கொடுப்பதாக தான் இருக்கனும் தயவு செஞ்சு இதை மறுக்காதீங்க. உங்கள எதிர்பார்த்து காத்திருப்போம் வந்துருங்க”
என்றவர் வந்த வேலை முடிய அங்கிருந்து கிளம்பினார்.
இங்கு சென்பகபாண்டியனின் வீட்டிலோ சமையலறையில் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் அறிவழகி.
“அம்மா அம்மாஆஆ பசிக்குது சாப்பிட ஏதாவது தாயேன்” என்றவாறு தன்னுடைய வேஷ்டியை தூக்கி இடுப்பில் கட்டியவாறு உள்ளே வந்த கதிரவனோ தன் தாயை தேடினான்.
ஆனால் அங்கு நின்றதோ அவனுடைய புது மனைவி அறிவழகி.
அவளை அங்கு பார்த்தவனோ சட்டென திரும்ப போக அவனை கைப்பிடித்து தன் பக்கம் திரும்பினாள் அறிவழகி.
அதில் திடுக்கிட்ட கதிரவனோ,
“ ஏய் என்ன கையெல்லாம் பிடிக்கிற” என்று பதறி விலகப் போக,
“ ஹலோ நீங்க என் புருஷன் தானே இந்த தாலி நீங்க தானே கட்டுனிங்க”
“ கையை விட்டுட்டு பேசு முதல்ல நீ”
“ அதெல்லாம் அப்புறம் விடுறேன் முதல்ல சொல்லுங்க” என்று அவனுக்கு மிக நெருக்கமாக நின்றவள் தன்னுடைய இரு புருவத்தையும் தூக்கியவாறு கேட்டாள்.
அவனோ அவளுடைய இந்த திடீர் நெருக்கத்தில் தடுமாறியவன் அங்கிருந்து விலகப் போக அவளோ அவனை விலக விடாது சுவற்றோடு சாய்த்து நிறுத்தியவள் தன்னுடைய முன் உடல் அவன் முன் உடலோடு படுமாறு அழுத்தி நின்றாள்.
“ என்னடி பண்ற உன்னோட நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை தள்ளு நீ முதல்ல” என்று கதிரவன் சொல்ல அவளோ அவனுடன் உண்டான இந்த முதல் நெருக்கத்தை நழுவ விடக்கூடாது என்று முடிவு எடுத்தவள் போல, அவனுடைய சட்டையின் முதல் இரண்டு பட்டனை கழட்டிவிட்டவள், இடது பக்க மார்பில் தன்னுடைய வலது கையால் கோலம் போட்டவாறு தன்னுடைய விழிகளை அவனுடைய விழிகளோடு கலக்க விட்டாள் பெண் அவள்.
அவனுக்கோ அவளுடைய நெருக்கத்தில் திணறியவன் அவளுடைய விழிகளை பார்க்கவே அவனால் முடியவில்லை.
தன்னுடைய இத்தனை வருட காதலை விழிகளில் தேக்கி அவள் காட்ட அந்த விழிகளோ அவனிடம் ஆயிரம் கதைகள் சொல்வது போல இருந்தது.
“ இங்க பாரு ஒழுங்கா இங்க இருந்து தள்ளிப்போ” என்று அவன் மீண்டும் சொல்ல.
அவளோ,
“ நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே” என்று கிறங்கிய குரலில் கேட்டாள் அவள்.
அவனோ,
“ என்ன கேட்ட நீ” என்று கேட்க.
“ அதுக்குள்ள மறந்துட்டீங்களா இந்த தாலி நீங்க தானே எனக்கு கட்டுனீங்க” என்று அவன் முகத்திற்கு முன்னால் தாலியை தூக்கி காட்ட.
அவனோ அவள் தன்னுடைய புடவைக்குள் இருந்து தாலியை வெளியே எடுப்பதை பார்த்தவனுடைய விழிகளோ அவளுடைய அங்க வளைவுகளை லட்ஜையின்றி பார்த்தது.
தான் கட்டிய தாலி தஞ்சம் புகுந்த இடத்திலிருந்து மெதுவாக வெளிவந்த இடத்தில் தான் தஞ்சம் புகுந்தால் எவ்வாறு இருக்கும் என்றும் அவனுடைய மனம் ஒரு நொடி ஆசை கொண்டது.
அடுத்த நொடியே தன்னுடைய மனமும் தன் பார்வை போகும் போக்கை தடுத்து நிறுத்தியவன் அவளுடைய முகத்தைப் பார்த்து,
“ ஆமா இது நான் கட்டினது தான் அதுக்கு என்ன இப்போ முதல்ல தள்ளி போடி நீ” என்றான்.
“ அப்போ இப்படி நிக்கிறதுக்கு, உங்கள கையை பிடிக்கிறதுக்கு, இப்படி உங்க நெஞ்சில் விளையாடுவதற்கு, அப்புறம் இப்படி முத்தம் கொடுக்கிறதுக்கு” என்று சொல்லியவள் சட்டென அவனுடைய உயரத்திற்கு எக்கியவள்,
அவனுடைய இதழ்களில் பட்டம் பாடாமல் ஒரு முத்தத்தை வைத்து விட்டால் அவனுடைய இந்த அதிரடியான புது மனைவி.