சீதளம் -50
இரவின் கருமை விரித்த பட்டுத் திரையில், நிலவு தன் வெள்ளி ஒளியை மென்மையாகப் பொழிகிறது.
அந்த நிலவை, தன் முகத்தில் ஆழ்ந்த சோகத்துடன் நோக்கினாள் மேகா. அவளது கண்கள் உள்ளத்தில் தேங்கிய கவலைகளை பிரதிபலித்தன.
அவை நிலவின் ஒளியில் மின்ன, கண்ணீரின் ஈரம் மெலிதாகத் தெரிகிறது.
அவளது முகம், புன்னகையை மறந்து, மௌனத்தின் பாரத்தை சுமக்கிறது. காற்றில் அவளது கூந்தல் மெதுவாக அசைகின்றன,
இரவின் குளிரில் அவள் தோள்களை இறுக்கி அணைத்தபடி, நிலவுடன் அமைதியான உரையாடலில் மூழ்கியிருந்தாள் அவள்.
அவளது உதடுகளில் வார்த்தைகள் இல்லை, ஆனால் அவள் இதயம் நிலவிடம் தன் கதையை மெல்லிசையாகப் பகிர்ந்து கொண்டிருந்தன.
இரவும் நிலவும் அவளது சோகத்திற்கு துணையாக, அமைதியான ஆறுதலை வழங்குகின்றன.
ஆனால் அவளுடைய மனமோ வேதனையை தத்தெடுத்துக் கொண்டது.
வேந்தன் சொன்ன அந்த வார்த்தையே அவளை இந்த நிலைக்கு தள்ள காரணம்.
“ அவங்க அவளை கொல்ல கூட தயங்க மாட்டாங்க” என்று அவன் சொன்னதையே யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு,
தற்சமயம் அறிவழகி அங்கு என்ன நிலையில் இருப்பாளோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது தன்னுடைய அறைக்கு சென்று கொண்டிருந்த வேந்தனோ அவளுடைய அறையைக் கடந்து போகும்போது ஜன்னலின் ஓரத்தில் நின்று வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மேகாவின் உருவம் தெரிய, என்ன நினைத்தானோ உள்ளே சென்றான்.
அவன் உள்ளே சென்றும் கூட அவளுடைய பார்வை அவன் பக்கம் திரும்பவே இல்லை.
அந்த நிலவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவனோ இறுமி தான் வந்ததை அவளுக்கு உணர்த்தினான்.
அவன் புறம் பார்வையை திருப்பியவள் பின்பு மீண்டும் நிலவின் மேல் பார்வையை செலுத்தினாள்.
வாடியக் கொடி போல் இருந்த அவளுடைய முகத்தை பார்த்த வேந்தனுக்கோ சற்று மனம் பிசைய தான் செய்தது.
“ இப்ப எதுக்கு நீ இப்படி மூஞ்ச தொங்க போட்டு கிட்டு இருக்க. எப்போ பாரு அழுதுகிட்டு இப்படி மூஞ்ச தொங்க போட்டுக்கிட்டு இருந்தா என் பிள்ளையும் உன்ன மாதிரி இப்படித்தான் வரும்” என்றான்.
அவன் இவ்வாறு சொல்லவும் அவளுடைய கண்களில் கண்ணீர் வழிய,
“ இப்ப என்னத்துக்கு அழுகிற நீ இப்படி அழுகிற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு. எல்லாம் நீ நினைச்ச மாதிரி தானே நடந்துகிட்டு இருக்கு” என்றான் வேந்தன்.
அவளோ அவன் புறம் திரும்பியவள் அவன் அருகில் வந்து அவன் முன் மண்டியிட்டு ஓவென்று அழுதாள்.
“ நான் வேணும்னு எதுவும் செய்யலங்க அன்னைக்கு அறிவழகியோட காதல் தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு.
நான் உங்களை காதலிச்சு கல்யாணம் பண்ணல ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நீங்க எனக்குள்ள வர ஆரம்பிச்சிட்டீங்க.
எக்ஸாமுக்காக உங்களை விட்டு பிரிஞ்சு இருந்த நேரத்துல ஒவ்வொரு நிமிஷமும் உங்களோட நினைவு என்ன அதிகமாக பாதிச்சது.
உங்க மேல உண்டான காதலை கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சேன்.
எப்போ உங்கள பார்ப்போம், எப்போ உங்க கூட பேசுவோம், எப்போ உங்க கைய புடிச்சுகிட்டு நடப்போம், எப்ப உங்க மார்பில் சாய்வோம்னு ஒவ்வொரு நிமிஷமும் ஏங்க ஆரம்பிச்சேன். அப்பதான் காதல்னா என்ன அது எப்படி இருக்கும் எல்லாமே எனக்கு புரிந்தது. அப்படி இருக்கும்போது அந்த நேரத்துல எனக்கு அவளோட காதல் தாங்க பெருசா தெரிஞ்சது.
அவ விரும்பினது கதிரன்னு சொல்லும்போது எனக்குமே கொஞ்சம் பயமா தான் இருந்தது.
ஆனால் எனக்குள்ள வந்த காதல் எப்படி என்னை மாத்திச்சோ அதே மாதிரி அவரையும் அந்த காதல் மாத்தும்னு நான் நினைச்சேன்.
ஒருத்தர காதலிச்சிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்றது எல்லாம் ரொம்ப பெரிய வலிங்க.
அந்த வலியை நம்ம அறிவு அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சு தான் அன்னைக்கு அவளுக்கு உதவி பண்ணேன்.
வேற எந்த பழி வாங்கற என்னமோ எனக்கு இல்லங்க.
என்னை நம்புங்க ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை நம்புங்க.
ஆனா இப்போ அவள கொல்லக்கூட தயங்க மாட்டாங்கன்னு நீங்க சொன்னதை கேட்டதுல இருந்து எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி.
தப்பு செஞ்சிட்டோமோனு ரொம்ப பயமா இருக்கு.
அவளுக்கு எதுவும் ஆயிரோமோன்னு மனசு கெடந்து தவிக்குது.
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நான் தப்பு பண்ணி இருந்தா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க” என்று அவனுடைய காலில் விழுந்து கதறியவளை பார்க்கும் பொழுது அந்த ஆண்மகனும் முற்றிலுமாக கரைந்து போனான்.
சட்டெனக் குனிந்து அவளை தூக்கியவன் மார்போடு அனைத்து அவளுடைய முதுகை வருடியவாறு,
“ என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமாடி” என்று அவன் ஆசையாக கேட்க.
“ அவளோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதை வார்த்தையால சொல்ல முடியாது. ஆனா நீங்க இல்லாத ஒரு நிமிஷத்த கூட என்னால தாங்க முடியாது.
நீங்க என் மேல வெறுப்பை காட்டினாலும் கூட பரவாயில்லை நான் உங்க பக்கத்துல மட்டும் இருந்தா போதும்னு தான் தோணுது” என்றாள் அவள்.
அவளை அணைத்தவாறே அவளுடைய நெற்றியில் முத்தத்தை பதித்தவன்,
“ சாரி உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல”
“ இல்லங்க பரவால்ல நீங்க தானே உங்களுக்காக நான் இதை கூட தாங்கிக்க மாட்டேனா.
ஆனா எனக்கு இப்போ நம்ம அறிவ நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு”
“ இங்க பாரு அவளுக்கு எதுவும் ஆகாது அப்படி ஏதாவது ஆச்சுன்னா அந்த குடும்பத்தை உயிரோட கொளுத்திடுவேன்” என்று வாக்கு கொடுத்தான் வேந்தன்.
****
இங்கு கையில் மருந்துடன் அறிவழகியின் அறைக்குள் வந்த கதிரவனோ கட்டிலில் முழுவதுமாக போர்வையை போர்த்தியவாறு முனங்கிக் கொண்டு படுத்திருந்த அறிவழகியை கண்டவனுக்கோ மிகுந்த கவலையாக இருந்தது.
‘எப்படி இருந்த பெண் தான் ஒருவனுக்காக தன் வீட்டில் வந்து இவ்வாறு கஷ்டங்களை அனுபவிக்கிறாளே.
தான் அப்படி என்ன இவளுக்கு செய்துவிட்டோம் தன் மேல் ஏன் இவளுக்கு இவ்வளவு காதல்’ என்று யோசித்தவன் அவள் அருகில் வந்து அவளைத் தொட அவள் உடலோ நெருப்பாய் தகித்தது.
தன்னுடைய கையை சட்டென எடுத்துக் கொண்டவன்,
“ என்னது இது இப்படி கொதிக்குது. ஏய் இங்க பாருடி எழுந்திரு வா ஹாஸ்பிடல் போகலாம் காய்ச்சல் அதிகமா காயுது” என்று அவளை எழுப்பினான் கதிரவன்.
அவளோ அரை மயக்கத்தில் இருப்பவள் போல முனங்கிக் கொண்டு மட்டுமே இருந்தாள்.
தன்னுடைய கையில் வைத்திருந்த மருந்தை அங்கு உள்ள டேபிளில் வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தவன் அவளுடைய இரு தோள்பட்டையும் பிடித்து கட்டிலில் சாய்ந்து அமர வைத்தவன்,
கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டான்.
அரை மயக்கத்தில் இருந்தவளோ விழித்துக் கொண்டாள்.
மெதுவாக இமைகளை திறந்து பார்த்தவளுக்கு அவளுடைய ஆசை காதலனே கண்களுக்கு தென்பட்டான்.
இவ்வளவு நேரம் சென்பகபாண்டியன் அடித்தும் அவள் கண்கள் சிறிது கூட கலங்க வில்லை.
இப்பொழுது கதிரவனை பார்த்ததும் பொலபொலவென அவளுடைய கண்கள் கண்ணீர் உகுத்தன.
உதடுகள் துடித்தன.
வார்த்தைகள் வர மறுத்தன.
அவனுக்கோ அவளுடைய இந்த நிலையைக் கண்டு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரியவில்லை.
கண் இமைகளை மூடி திறந்தவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,
“ உனக்கு காய்ச்சல் காயுது வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று அழைத்தான் அவன்.
அவளோ வேண்டாம் என தன்னுடைய தலையை இடவலமாக ஆட்டினாள்.
“ பைத்தியமா உனக்கு உடம்பு எவ்வளவு கொதிக்குது இப்படியே விட்டா காய்ச்சல் அதிகமாகிறும் சொன்னா கேளு வா போலாம்” என்று அவளுடைய கையைப் பிடித்தான்.
அவளோ வலியில் ஆ என்று லேசாக முனகினாள்.
சட்டென அவளுடைய கையை விட்டவன்,
“ என்னாச்சு” என்று பதறியவாறு அவளுடைய கையை பார்க்க அவளுடைய சிவந்த கையிலோ இரத்த நிறத்தில் கோடு கோடாக சாட்டையடியின் தடங்கள் கிடந்தன.
அதை கண்டவனுக்கோ நெஞ்சம் பிசைந்தது.
“ என்னடி இப்படி செவந்து போய் இருக்கு இது மட்டும் தானா இல்ல வேற எங்கேயும் இருக்கா” என்று தயங்கியவாறு அவளிடம் கேட்க.
அவளோ தன்னுடைய மற்றுமொரு கையையும் காட்டினாள்.
பின்பு ஜன்னலின் ஊடாக வந்த காற்றினால் அவளுடைய புடவை லேசாக விலக அந்த இடத்திலும் காயத்தை கண்டவனோ அவளுடைய சேலையை அவன் கைகளை கொண்டு விளக்க,
அவன் விலக்கிய ஒவ்வொரு இடத்திலும் காயங்கள் தென்பட்டன.
அதை பார்க்க பார்க்க அவனுடைய கண்களோ கலங்கியது.
“ இதுக்கு தான் சொன்னேன் இப்படியே நான் எப்படி டாக்டர்கிட்ட வர முடியும். இரண்டு நாள்ல அதுவே சரியா போயிரும் நீங்க கவலைப்படாதீங்க” என்று மெதுவான குரலில் கூறினாள் அறிவழகி.
“ அதுக்காக இப்படியே விட முடியுமா இந்த காயத்துக்கு மருந்து போட்டு விடுறேன். அதுக்கப்புறம் உனக்கு மெடிக்கல்ல காய்ச்சல் குறையறதுக்கு மாத்திரை வாங்கிட்டு வந்து தரேன்” என்றான்.
அவளோ சரி என தலையாட்டினாள்.
பின்பு டேபிளில் இருந்த மருந்தை கையில் எடுத்தவன் அதில் இருந்த மயில் இறகால் அவளுடைய காயங்களுக்கு மெதுவாக வருடிவிட்டான்.
இவ்வளவு நேரமும் அந்த காயங்கள் அவளுக்கு பயங்கர எரிச்சலை தந்தது.
இப்பொழுது அவன் மயிலிறகால் வருடுவது அவளுக்கு மிகுந்த நிம்மதியை தந்தது.
“ வேற எங்கேயும் காயம் இருக்கா” என்று கேட்டான் அவன்.
அவளோ தலையைக் குனிந்தவாறு,
“ ஆமா காயம் இருக்கு நீங்க மருந்து கொடுங்க நானே போட்டுக்கிறேன்” என்றாள்.
“ என்ன நீ போட்டுக்கிறியா பார்த்தல்ல உன் கைல எவ்வளவு காயம் இருக்குன்னு இதுக்கெல்லாம் நான் தானே போட்டேன்.
அந்த காயங்களுக்கும் நானே போட்டு விடுறேன் நீ காட்டு” என்று அவன் கேட்க.
அவளுக்கோ கை கால் கழுத்தில் இருந்த காயத்தை அவனுக்கு காட்டியவளுக்கு உள்ளே மறைவான இடத்தில் இருக்கும் காயத்தை அவனிடம் எப்படி காட்டுவது என்று தயக்கம் கொண்டது அந்த பெண் மனது.
“ என்ன அமைதியா இருக்க சீக்கிரம் காட்டு மருந்து போடுறேன் இல்லைன்னா உனக்கு காயம் எரியும்” என்று அவன் அவசரப்படுத்த,
“ இல்லா அதை எப்படி உங்ககிட்ட காட்டுறதுன்னு தான் தயக்கமா இருக்கு” என்றாள்.
“ என்கிட்ட காட்ட உனக்கு என்ன தயக்கம் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ காட்டு நான் மருந்து போடுறேன்” என்று மருந்து போடுவதற்கு ரெடியாக அமர்ந்திருந்த அவனை பார்த்தவள் தன்னுடைய பார்வையை கீழே தாழ்த்தினாள்.
அவன் கட்டிய தாலி அவளுடைய மார்பில் உரிமையாய் தொங்கிக் கொண்டிருந்தது.
அதை பார்த்தவளுக்கோ ஒரு தைரியம் வந்தது.
அவன் இப்பொழுது தான் ஆசையாக காதலித்த காதலன் மட்டுமல்ல தன்னை திருமணம் செய்து கொண்ட உரிமையான கணவனும் கூட,
எப்பொழுது இருந்தாலும் அவனிடம் காட்டும் உடல் தானே என்று முடிவெடுத்தவள் தன்னுடைய முந்தானையில் குத்தி இருந்த பின்னை கழற்றி புடவையை விளக்க,
அவனுடைய விழிகளோ அதிர்ச்சியை காட்டியது.
பின்பு பிளவுஸின் கொக்கியை ஒவ்வொன்றாக அவள் கலட்ட அவளுடைய மேனியை பார்த்தவனோ தன்னுடைய பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
அவளுடைய மேனியை பார்க்க முடியாமல் அல்ல அதில் உண்டான காயங்களை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.