தணலின் சீதளம் 53

5
(13)

சீதளம் -53

ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஆள் நடமாட்டமே அதிகமாக இல்லாத ஒரு இடத்தில் மரங்கள் அதிகமாக இருக்க அதற்கு நடுவில் ஒரு பங்களா வீற்றிருந்தது.
அங்கு தான் சென்பகபாண்டியனும் கபிலனும் அறிவழகியை அடைத்து வைத்திருந்தனர்.
அவளை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு இருவரும் மிகுந்த ஆனந்தமாக டிவியில் சத்தமாக பாட்டை போட்டுவிட்டு சரக்கு அடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறிவழகியோ காட்டு கத்தல் கத்திக் கொண்டிருந்தாள்.
“ டேய் என்ன விடுங்கடா மரியாதையா என்னை விட்டுடுங்க” என்று விடாமல் கத்திக் கொண்டே இருந்தாள்.
ஆனால் பாவம் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாட்டின் சத்தத்தில் அவளுடைய குரல் அந்த வீட்டை விட்டு வெளியே எங்கேயும் கேட்கவில்லை.
அப்படியே கேட்டிருந்தாலும் கூட அவளைக் காப்பாற்றுவதற்கு அங்கு ஒரு ஜீவனும் வந்திருக்காது.
ஏனென்றால் அந்த வீட்டை சுற்றிலும் தான் ஆட்கள் நடமாட்டமே இல்லையே.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் நன்றாக குடித்துவிட்டு அவள் இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர,
அவளுக்கோ இதயம் தாறுமாறாக துடித்தது.
தன்னுடைய கதை அவ்வளவுதானா என்று நினைத்தாள்.
“ என்னடி ரொம்ப ஓவரா துள்ளுற இன்னையோடு நீ இருந்த இடமும் தெரியாம தடமும் தெரியாம ஆகப் போற.
உன்னை நாங்க ரெண்டு பேரும் ஆசை தீர அனுபவிச்சிட்டு இங்கையே கொன்னு புதைக்க போறேன்” என்ற சென்பகபாண்டியனோ அவள் அருகே நெருங்கி வந்து அவளுடைய தலைமுடியை கொத்தாக பிடிக்க,
அவளோ அவரிடம் இருந்து திமிறிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த கபிலனோ,
“சென்பகபாண்டியன் என்ன பண்றீங்க அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க நான் அவளை பூ மாதிரி ஹேண்டில் பண்ணனும்னு நினைக்கிறேன்.
ஏன்னா அவளை என்னைக்கு முதன்முதலா பார்த்தேனோ அன்னையிலிருந்து நான் நானாவே இல்ல. அவ கூட ஒவ்வொரு நாளும் ஆசை தீர ஒன்னா இருக்கணும்னு ஆசைப்பட்ட என்னை கல்யாணத்தப்போ முகூர்த்த நேரத்துல என்ன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டு ஏமாத்திட்டு போனவமேல எனக்கு எவ்வளவு ஆத்திரம் வரணும்.
ஆனா பாருங்க நான் எவ்வளவு கூலா இருக்கேன்.
ஏன்னா அவளுடைய இந்த உடம்பு” என்று தன்னுடைய வலதுக்கையின் ஆள்காட்டி விரலால் அவளுடைய உடலை சுட்டிக்காட்டி கூறியவன்,
“ இந்த உடம்பு என்ன அப்படியே சுண்டி இழுக்குது அதை எப்படி எல்லாம் ஆசை தீர அனுபவிக்கனும்னு மட்டும் தான் என் மனசு கிடந்து துடிக்குது” என்று சொன்னவன்,
“ சரி உன்னோட ஆசை காதலன் கூட ஒன்னா இருந்தியா இல்ல இன்னும் கைப்படாத ரோஜாவாத் தான் இருக்கியா” என்று அவளிடம் கேட்க.
அவளோ அவனுடைய இந்த கேள்வியில் அருவருத்து போனவள் அவனுடைய முகத்திலேயே காரி உமிழ்ந்தாள்.
அதை கண்ட சென்பகபாண்டியனோ,
“ ஏய் என்ன காரியம் பண்ற” என்று கோபபட்டவர் அவளுடைய கன்னத்தில் பளார் என்று வைக்க,
அவளோ தள்ளிப்போய் கீழே விழுந்தாள்.
மீண்டும் அவளை அடிக்க போன சென்பகபாண்டியனை தடுத்து நிறுத்திய கபிலனோ,
“ ஹேய் சென்பகபாண்டியன் விடுங்க இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நான் பாத்துக்குறேன் அவளை” என்று அவளை பார்த்தவாறே கபிலன் சொல்ல,
சென்பகபாண்டியனோ,
“ இந்த கழுதைக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கனும் உங்க மூஞ்சிலேயே எப்படி காரி துப்புறா இவளை என்கிட்ட விடுங்க நான் கிழிச்சு தொங்க விடுறேன்” என்ற சென்பகபாண்டியனை தடுத்து வெளியே அனுப்பிய கபிலனோ மெதுவாக அறிவழகியை நெருங்கினான்.
அவளோ கொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்தாள்.
“ இங்க பாரு என்கிட்ட வராத என்கிட்ட வந்த உன்னை என் கையாலேயே கொன்னுடுவேன்டா” என்று சொல்லியவாறு பின்னே நகர்ந்தாள்.
“அட என்ன அறிவழகி நீ என்னை இவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தியும் எனக்கு உன் மேல கோபமே வரல பாரு உன் கூட ஒன்னா இருக்க போற அந்த நிமிஷம் தான் என் கண்ணுக்குள்ள ஓடுது.
அதை நினைச்சாலே உடம்பெல்லாம் ஜிவ்வுனு இருக்கு.
இங்க பாரு நரம்பு எல்லாம் புடைக்குது” என்று அவனுடைய மேனியை காட்ட,
அவளும் தன்னுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
பின்பு அவளை நெருங்கியவன் அவளுடைய புடவையில் கையை வைக்க,
அவளோ அதை தன் மார்போடு இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“ இங்க பாரு ரொம்ப முரண்டு பிடிக்காத இங்க உன்னை யாரும் காப்பாத்த வரப்போறது கிடையாது.
எப்படி இருந்தாலும் என்னோட பேச்சை நீ கேட்டு தான் ஆகணும்.
அதுக்கு முரண்டு பிடிக்காம நீ இன்னைக்கு ஒரு நாளைக்கு என்னை உன்னோட காதல் புருஷனா நினைச்சுக்கோ.
அப்புறம் பாரு உனக்கு சுகம் எனக்கும் பரம சுகம்” என்றவன் அவளை தன் கையில் தூக்கினான்.
“ ச்சை அசிங்கமா பேசாதே என் உயிரே போனாலும் என்னோட தீராவ தவிர வேற யாரையும் மனசுல கூட நினைக்க மாட்டேன் டா அப்படி இருக்கும்போது உன்னை எப்படி தொட விடுவேன்.
என் உயிரை கூட விடுவேனே தவிர எந்த சூழ்நிலையிலும் நீ சொல்ற மாதிரி நடக்கவே நடக்காது” என்றாள் அவள்.
“ அதையும் பார்க்கலாம்” என்றவன் அவளை அங்கு உள்ள கட்டில் பொத்து என்று போட்டு அவள் மேலே படர்ந்தான். அவளுடைய கண்களோ கண்ணீரை கசிந்த வண்ணம் இருந்தன.
கடைசி நொடியிலாவது தன்னவன் வந்து தன்னை காப்பாற்ற மாட்டானா என்று அவளுடைய விழிகள் அவனை காண ஏங்கின.
ஆனால் அவன் வரும் வரை கபிலன் காத்திருப்பானா என்ன.
அவனுடைய காரியத்தில் சரியாக இருந்தான்.
அவள் மேல் படர்ந்தவன் அவளுடைய புடவையை முழுவதும் உருவி அவளுடைய பிளவுஸில் கையை வைக்க அவளுக்கோ அந்த நொடியே தன்னுடைய உயிர் தன் உடலை விட்டு பிரிந்து விடாதா என்று நினைத்தவள் அவனை தன்னால் முடிந்த மட்டும் தன்னிடம் இருந்து விலக்கப் போராடினாள்.
அவளுடைய பிளவுஸில் கையை வைத்தவன் அதை அவள் உடலில் இருந்து அகற்ற முற்பட அப்பொழுது அவர்கள் இருந்த அறை கதவு படார் என்று மூலைக்கு ஒரு பக்கம் தெறிக்க உள்ளே வந்த கதிரோ அவனுடைய முதுகில் எட்டி ஒரு மிதி மிதித்தான்.
அவன் மிதித்த மிதியில் கபிலன் அந்தக் கட்டிலை விட்டு பாய்ந்து கீழே விழ,
தன் மேல் இருந்து அவன் அகன்று விழுந்ததும் தன்னுடைய பார்வையை அங்கு வந்து நின்ற கதிரின் மேல் பதித்தவள் சட்டென அங்கிருந்து எழுந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளுடைய உடல் ஏகத்துக்கும் நடுங்கியது.
அந்த நடுக்கத்தை உணர்ந்து கொண்டவனோ சிறிது நேரம் கூட தான் தாமதித்து இருந்தால் அவளுடைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தவனுக்கோ அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஒற்றை கையால் அவளை தன் உடலோடு இறுக்கமாக அணைத்தவன்,
“ என்னை மன்னிச்சுடு அறிவு” என்றவன் அந்தக் கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து அவளுடைய மேனியை போர்த்தி விட்டவன்,
“ இங்கேயே இரு உன் மேல கைய வச்ச இந்த நாய புதைச்சுட்டு வரேன்” என்றவன் கபிலனை நெருங்கினான். அவனை அடி பின்னி எடுத்து விட்டான். குத்துயிரும் குல உயிருமாக கிடந்த கபிலனின் மீது அவனுக்கு இரக்கம் தான் வந்தப்பாடு இல்லை.
இங்கு வெளியே சென்பகபாண்டியனின் நிலையோ அதைவிட பயங்கர மோசமாக இருந்தது.
வேந்தன் அவரை புரட்டி எடுத்து விட்டான்.
சென்பகபாண்டியன் தன்னுடைய குடும்பத்திற்கு எவ்வளவோ செய்தும் அவன் பொறுமையாக இருந்ததற்கு ஒரே காரணம் செல்வரத்தினம் தான்.
அவருடைய பேச்சிற்கு கட்டுப்பட்டு தான் அவன் அமைதியாக இருந்தது.
ஆனால் இன்று தன் தங்கைக்கு அவன் இழைத்த செயலினால் அவனுடைய பொறுமையோ காற்றில் மறைந்து போனது.
“பொறுக்கி நாயே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா பெத்த பொண்ணு ஸ்தானத்துல பார்க்க வேண்டிய பொண்ண இப்படி கேவலப்படுத்த நினைச்சிருப்ப.
நீ எல்லாம் உயிரோட இருக்க உனக்கு எந்த தகுதியுமே இல்லை” என்று சொன்னதோடு நிறுத்தாமல் சென்பகபாண்டியனின் உயிரை பறித்திருந்தான் வேந்தன்.
சென்பகபாண்டியனின் உயிரை வேந்தன் பறித்திருக்க அங்கு உள்ளே கபிலனின் உயிரை கதிரவன் பறித்திருந்தான்.
இருவருக்கும் அவர்கள் இருவரையும் கொன்ற பிறகும் கூட ஆத்திரம் அடங்கவே இல்லை.
பிறகு அவர்கள் இருவரையும் அந்த பங்களாவிலேயே குழி தோண்டி தடையமே இல்லாமல் புதைத்தார்கள் கதிரவனும் வேந்தனும்.
பின்பு இருவரும் உள்ளே வர அறிவழகியோ பித்து பிடித்தவள் போல போர்வையை போர்த்திக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் அருகில் வந்த இரு ஆண்மகன்களும் தங்கள் தோளோடு அவளை அணைத்துக் கொண்டனர்.
தமையனும் கணவனும்.
அவளுடைய நிலையை கண்ட வேந்தனோ,
“ அறிவு உனக்கு ஒன்னும் ஆகலலடா” என்று அவளுடைய தலையை வருடியவாறு கேட்க.
அவனுடைய முகத்தை ஏறிட்டு பார்த்தவளோ,
“ அண்ணாஆஆ” என்ற கதறலோடு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“ ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல உனக்கு ஒன்னும் ஆகாது அண்ணன் வந்துட்டேன் தானே” என்று அவளை ஆறுதல் படுத்தினான்.
பின்பு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தான் வேந்தன்.
அறிவழகியை அந்தக் கோலத்தில் பார்த்த அவள் வீட்டினர்களோ சற்று பயந்து தான் போனார்கள்.
உடனே வேந்தனிடம் விசாரிக்க அவனோ நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
“ ஆத்தி என் புள்ள எவ்வளவு பெரிய ஆபத்த கடந்து வந்திருக்கா. அந்த நாய்ங்க ரெண்டு பேரும் என் புள்ளையை நாசமாக்க பார்த்திருக்காங்களே எப்படியோ நம்ம கும்பிடுற குலதெய்வம் தான் காப்பாத்தி இருக்கு” என்று அப்பத்தா அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டார்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!