அனைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் இனிதே விடிந்தது.
அவ்வூரின் பெரிய அந்தஸ்தை உடைய குடும்ப வாரிசுகளின் திருமணம் என்றால் சும்மாவா என்ன? திருமணத்தை கோயிலில் வைத்துக் கொண்டாலுமே மிக மிக ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் குறை என்ற ஒன்றை கூட கூற முடியாதளவு பிரம்மாண்டமாக அலங்கரித்து இருந்தனர்.
நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, அவ்விடமே களைகட்டிக் கொண்டிருக்க, ஒரே மணமேடையில் கிழக்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டிருந்த மணவறையில் ஜெய்ஆனந்த்தும் விபீஷனும் வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் தத்தமது துணைக்காக காத்துக்கொண்டிருந்த தருணம் அது.
இதோ அதற்காகவே காத்திருந்தவன் போல அபார அழகுடன் தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தன்னவளை விழி விரித்து பார்த்த ஜெய் ஆனந்த்திற்கோ மூச்சு முட்டியது என்றால் ஆஹித்யாவின் அழகுக்கு சற்றும் குறையாத அழகுடன் வந்த பவ்யாவைப் பார்த்த விபீஷனின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
சகோதரர்கள் இருவருமே புரோகிதர் கூறிய மந்திரங்களை உச்சரிக்க மறந்தே போயினர்.
அவர்களின் தீவிர காதல் பார்வையில் திருமணத்திற்கு வந்திருந்த சில பெண்களின் மனமோ அப்பட்டமாக புகைந்து கொண்டிருந்தது.
குனிந்த தலை நிமிராமல் தத்தமது துணைகளுக்கு அருகே வந்தமர்ந்த பெண்களோ, புரோகிதரின் அழைப்பில் ஒருங்கே திரும்பி சற்று நேரத்தில் தன்மை உடைமையாக்கிக் கொள்ளப் போகின்றவர்களை முகம் சிவக்க நாணத்துடன் ஏறிட்டு பார்க்க, அவர்களோ தத்தமது துணையை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டல்லவா இருந்தனர்.
நால்வரையும் விழிகளை நிறைத்த ஆனந்த கண்ணீருடன் பார்த்த சித்ராவை திரும்பி அதே மாற புன்னகையுடன் பார்த்த பிரதாபனோ “ நல்ல விஷயம் நடந்திட்டு இருக்கப்போ என்னடி கண்ணை கசக்கிட்டு இருக்க?” என்றவரின் குரல் கூட கரகரத்து தான் ஒலித்தது.
“சும்மா திட்டிட்டே இருக்காதீங்க என்று கண்ணீரை துடைத்துக் கொண்டவரோ, நான் அழல” என்று விட்டு வித்யாவையும் தன்னருகில் பிடித்து வைத்துக் கொள்ள,
“அண்ணி நான் எப்படி மேடைல” என்றவர் மேடையை விட்டு கீழிறங்க எத்தனிக்க, “அத்த” என்று அழைத்த ஜெய் ஆனந்த்தோ போக வேண்டாம் என்பதைப்போல தலையசைக்க, சங்கடமாக நின்றவருக்கு தான் அமங்கலமாக இங்கு நின்கின்றோமோ என தவிப்பாக இருந்தது.
அவனது பார்வையில் என்ன கண்டாரோ அப்படியே நின்றிருக்க, ஆசீர்வதிக்கப்பட்ட மாங்கல்யம் புரோகிதரிடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
புரோகிதரோ “ இனிமேல் ஆசைத்தீர பார்த்துக்கோங்க” என இருவரையும் பார்த்து சொல்ல அங்கு கூடி நின்ற அனைவரின் இதழ்களும் புன்னகையில் விரிந்த அதேநேரம், ‘மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்’ என்ற மந்திரம் கோயில் முழுதும் எதிரொலிக்க மேளதாளங்கள் முழங்க மங்கலநாணை தனக்குரியவள் கழுத்தில் கட்டி தனதாக்கிக் கொண்டனர்.
ஜெய் ஆனந்த், தாலி கட்டும் வரை மனதில் படபடப்புடன் அமர்ந்திருந்த ஆஹித்யாவுக்கோ தன்னவன் தன் நெற்றி வகிட்டில் குங்குமத்தை சூட்டவும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து நடப்பவை யாவும் கனவல்ல நிஜம் என எடுத்துரைத்து அவளின் படபடப்பை முற்றிலுமாக நீங்கச் செய்திருந்தது.
முகத்தில் தேங்கிய நாணத்துடன் மெல்லத் திரும்பி தன்னவன் முகம் பார்த்தாள் ஆஹித்யா.
தன்னவள் தன்னை பார்க்கும் வரை காத்திருந்திருப்பான் போலும், அவள் பார்வை தன் மீது பதியவும் மெல்ல கண்களை சிமிட்டிக் கொண்டவனின் ஆளுமையான தோற்றத்திலும் கம்பீரத்திலும் தன்னை தொலைத்தாள் பெண்ணவள்.
சட்டென சுற்றம் உணர்ந்து தலையை தாழ்த்துக் கொண்டவள் மிக மிக மென்மையாக அவனுக்கு கேட்கும் படி “மாமா என்னையே இப்படி பார்த்திட்டு இருக்காதீங்க. எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க” என்க,
“ஐ டோண்ட் கேர், யார் பார்த்தா எனக்கென்ன? நவ் யூஆர் மை பெட்டர் ஹாஃப்” என்று சொன்னவனோ அதோடு நிறுத்தாமல் சற்றே சரிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்திருந்தான்.
அவனின் செயலில் சுற்றி நின்ற அனைவரும் ஆரவாரத்துடன் ஆர்பரிக்க, நவீனோ சற்றே சத்தமாக “கொடுத்ததை திருப்பி கொடுத்துடுமா என் ஃப்ரெண்ட் பாவம்ல” என்று சொல்ல, பதில் சொல்லும் நிலைமையிலா அவள் இருக்கின்றாள்? அவளுக்கு தான் நிலத்திற்குள் புதைந்து விடலாமா என்கின்ற அளவுக்கு கூச்சம் நெட்டித் தள்ளியது.
நெற்றியை நீவிக் கொண்டே புன்னகைத்த ஜெய் ஆனந்த்தோ, “லீவ் ஹேர்டா” என்றான் மென்மையாக,
“டேய் இப்பவே சப்போர்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிடியா?” என்றவனின் தோரணையில் சுத்தி நின்ற அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
இவர்கள் இப்படி இருக்க, அதற்கு முற்றிலும் மாறாக தன்னவன் தன்னை பார்க்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் கடைக்கண் பார்வையை விபீஷனில் படிய விட்டிருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அறியாத வயதில் அதுவும் அவன் மீது காதல் இல்லாத போது தான் ஶ்ரீநவிக்கு கொடுத்த வாக்கு, தன்னவனை இவ்வளவு பாதிக்கும் அளவுக்கா தான் மீது அவ்வளவு காதல் அவனுக்கு?
உள்ளூர மனம் உற்சாகம் அடைந்தாலும் அவன் தன்னை இன்னுமே பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் நெஞ்சை அரித்துக் கொண்டு தான் இருந்தது.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் “நான் அழகா இல்லையா?” என்று அவனுக்கு கேட்டுக்குமாறு குரல் தாழ்த்தி கேட்க.
அவளின் ஆளை அசரடிக்கும் அழகில் சற்று முன் தன்னவன் ஏற்கனவே மயங்கி விட்டான் என தலை தாழ்த்தி வந்தவளுக்கு தெரிய வாய்ப்பிலையே !
அவனிடமிருந்து பதில் இல்லாது போக “நீங்க பேசலனா ஜெய் மாமா போல நான் அதிரடியா உங்களுக்கு கிஸ் பண்ணுவேன் ஓகேவா புருஷா” என அவள் கிசுகிசுக்க,
அதிர்ந்து சட்டென திரும்பி அவளைப் பார்த்தவன் அவளின் கண் சிமிட்டலில், ஏற்கனவே அவளில் தொலைந்தவன் மீண்டும் அவளில் சுகமாக தன்னைத் தொலைத்தான்.
தலையை உலுக்கி சமன் செய்தவன் ‘ஃப்பாஹ் என்ன கண்ணுடா. இட்ஸ் கில்லிங்’ என மனதில் சொல்லிக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் என அனைத்தையும்
மணமக்கள் செய்து முடித்திருக்க, அதிலேயே களைத்து போன ஆஹித்யா, “மாமா டயர்டா இருக்கு சோ கொஞ்சம்” என்று தயங்கியவளை ஆழ்ந்து பார்த்தவன் “ இப்பவே ரெஸ்ட் எடுத்துக்கோ நைட் டயர்ட் ரெட்யூஸ் பண்ண ட்ரீட்மெண்ட் பண்றேன்” என்றவன் வார்த்தையில் உடலின் மொத்த ரத்தமும் முகத்தில் வந்து குடி கொண்டத்தை போல சிவந்து போனவள் அவனின் வெளிப்படையான பேச்சில் அதிர்ச்சியில் வலக் கரமோ உயர்ந்து அவளின் வாயை மூட செய்திருந்தது.
“ஓஹ் கோட் என்று சொன்னவனோ கைய எடுடி நான் பண்ற வேலையெல்லாம் உன் கை பார்த்திட்டு இருக்கு” என்றவன் பேச்சில் “ஹையோ! மாமா” என்று சிணுங்கிவளோ திரும்பியும் பாராமல் மெதுவாக நடந்து கோயிலுக்கு வெளியே சற்றே தள்ளி அமைக்கப்பட்டிருந்த குடிலில் ஏற்கனவே களைப்பாக வந்தமர்ந்திருந்த பவ்யாவின் அருகில் வந்தமர்ந்து கொண்டாள்.
எதிலிருந்தோ தப்பித்து வருவதை போல் மூச்சு வாங்க வந்தமர்ந்து கொண்டவளுக்கு அவனின் எல்லை தாண்டிய உரிமையான பேச்சிலேயே தெரிந்து விட்டது. அவன் இன்று தன்னை ஆட்கொள்ளாமல் விட மாட்டான் என்று,
என்னவோ ஜென்மங்கள் கடந்து காதலிக்கும் உணர்வு.
அவளுக்கும் அவன் தேவை. மொத்தமாகவும், உரிமையாகாவும், இன்றிரவை நினைக்கும் போது, இப்போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து குறுகுறுப்பதைப் போலிருந்தது.
தன்னருகில் வந்தமர்ந்து தானாக வெட்கதிலில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு குரலை செருமிய பவ்யா, “என்னடி இப்பவே மாமா கூட ரொமான்ஸ்ஸா” என்று கேட்டவள் குரலில் தூக்கிவாரிப்போட திரும்பியவள் “நீ வேற சும்மா இருடி” என்க.
“அக்கா” என்று திடீரென மென்மையாக அழைத்தாள்.
“வாட்? என்ன சொன்ன? சரியா கேட்கல” என கேட்டுக் கொண்டே முழுதாக திரும்பி பவ்யாவைப் பார்த்த படி அமர்ந்தாள் ஆஹித்யா.
“அக்கா” என்றாள் மீண்டும்,
“கேக்கல சத்தமா” என்று சொல்ல, அவள் கிண்டல் செய்கின்றாள் என தெரிந்தும் தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டே பற்கள் தெரிய புன்னகைத்தவள் “அக்காகாகா…” என அழுத்தம் திருத்தமாக அழைத்தவளிடம் “மரியாத எல்லாம் பலமாதான் இருக்கு ம்ம்…” என்று சொல்லிக் கொண்டே அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் “என்னால உன் ஃபர்ஸ்ட் நைட்டலாம் ஸ்டாப் பண்ற அளவுக்கு ஏதும் பண்ண முடியாது சோ வேற ஏதாவது கேளு” என அவளை கணித்த படி அவள் கூற,
“அடிங்க அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் அடிச்சு சாவடிச்சுடுவேன் பார்த்துக்கோ” என்று சீற, “என்னடி இவ்ளோ காண்டாகுற நான் இன்னுமே கன்னிகழியல மா அதுக்குள்ள என்னை கொண்ணுடாத என் சாபம் சும்மா விடாது” என்று அவள் சீற,
“இப்போ இது ரொம்ப முக்கியம் என சலித்துக் கொண்டவள் முதல் என் ரூட்டை க்ளியர் பண்ணு” என்க.
“ப்ப்ச்ச, நான் என்ன பண்ணட்டும்? பாவம் டி விபீஷன கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு”
“அந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கு தெரியும். நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்டு தொல” என்றாள் சீறலாக,
“ என்ன விஷயம்?” என்றாள் வேண்டா வெறுப்பாக மனதில் பயத்தை தேக்கி,
“எனக்கு இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் நடந்தாகனும்”
“வாட்? என்னடி உளறிட்டு இருக்க?”
“ஹையோ! என நெற்றியை நீவிக் கொண்டே இழுத்து ஓர் ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே ஓகே ஸ்ட்ரெய்டாவே சொல்றேன் எஸ், நான் விபீஷன லவ் பண்றேன் பட் என்றவள் ஆஹித்யாவின் முகத்தில் தோன்றிய கலவரத்தை பார்த்து என்ன நினைத்தாளோ கூல் பெருசா ஒன்னும் இல்ல ப்ராப்ளம் சோல்வ்ட் தான்” என்றவள் ஶ்ரீநவியின் விடயத்தில் தான் செய்த குளறுபடியை கூற, “ நீ பண்ண வேலைக்கு ஒருவேளை நான் விபீஷனா இருந்திருந்தேனா சரி தான் போடின்னு வேற பொண்ணை கரெக்ட் பண்ணிட்டு போயிட்டே இருந்திருப்பேன்” என்றவளை தீயாக முறைத்தவளோ “ஷிட் நீயெல்லாம் அக்காவா?”
“அதனால தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள் சளைக்காமல்,
“இப்போ அவரோட கோபத்தை கம்மி பண்ண ஐடியா தர முடியுமா? முடியாதா?”
“ஓகே ஓகே தரேன் என புன்னகைத்தவள் பட் எனக்கொரு டவுட்? உனக்கு ஆன்டி ஹீரோ போல தானே ஆள் வேணும்னு கேட்ட பட் விபீ” என்று இழுவையாக சொன்னவளை முறைத்தவள் “ இப்போ எனக்கு இந்த இன்னசென்ட் ஹீரோவை தான் பிடிச்சிருக்கு” என்று சொன்னவள் முகம் செம்மை பூசிக் கொண்டது.
“இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு” என்றவளை ஆர்வமாக பார்த்தவள் “ என்னடி சொல்லு” என நெருங்கியவளை விலக்கி விட்டு எழுந்து நின்றவளோ “பெருசாலாம் இல்ல சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு ப்ரொபோஸ் பண்ணிடு மொத்தமா உன் ப்ராப்ளம் சோல்வ்ட் ஆகிடும்” என்று விட்டு நிமிர்ந்தவள் அவளை காணாது திகைத்து விழிகளை சுழல விட்டாள்.
“ஹலோ மேடம் இங்க” என்ற பவ்யா, சொடக்கிட்டு அழைக்க,
தன் பின்னால் கேட்ட அவளின் குரலில் திரும்பியவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
“ஹேய் என்னடி பப்ளிக்ல அதுவும் கோவிலுக்கு வெளிய நின்னுட்டு செருப்பை தூக்கிட்டு நிக்கிற யாரும் பார்த்திட போறாங்க” என்று பதறியவளை “பார்க்கட்டுமே உன்ன என்ன பண்ண போறேன்னு இந்த ஊரே பார்க்கட்டும்” என்று சொன்னவளோ, கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் நகர்ந்து கொண்டிருந்தவளை குறி பார்த்து செருப்பை வீசி இருக்க, அதுவோ அவளின் நேரத்திற்கு சரியாக கோயிலின் உள்ளிருந்து அலைபேசியை பார்த்த படியே பவ்யாவைத் தேடிக் கொண்டு அங்கே வந்த விபீஷனின் மார்பின் மீது பட்டு கீழே வீழ்ந்திருந்தது.
அவள் என்னவோ விளையாட்டுக்காக தான் எறிந்தாள். ஆனால் விளைவு இப்படியாகும் என்று அவள் கிஞ்சித்தும் எதிர் பார்க்கவில்லையே!
“நாசமாபோச்சு” என நெற்றியில் கையை வைத்துக் கொண்ட ஆஹித்யா, விபீஷன் பின்னால் நின்று சற்றே சரிந்து எட்டி பார்க்க, அங்கோ விழிகள் இரண்டும் தெறித்து கீழே விழுந்து விடும் என்பதைப் போலவே விழிகளை அகல விரித்து அகழிகை சிலை போல நின்றிருந்தாள் பவ்யா.