கனவு -04
தான் கண்ட கனவினால் பதறி அடித்து எழுந்தாள் துவாரகா.
தன்னுடைய அணைப்பில் இருந்து சட்டென அவள் விலகியதும் கௌதம் தூக்கம் கலைந்து எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன் கண்களை கசக்கியவாறு,
“என்ன துவாரகா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற”
என்று கேட்டான்.
அவளோ,
“என்னங்க நேத்து வந்த அதே கனவு இன்னிக்கும் வந்தது. நீங்க நேத்து மாதிரி இன்னைக்கும் என்ன கொன்னீங்க அவளோட பேச்ச கேட்டு நேத்தே மாதிரி இன்னைக்கும் என்ன நீங்க கொன்னீங்க.
ஏன் நேத்து வந்த அதே கனவு இன்னிக்கும் வந்திருக்கு.
அதிகாலையில் கண்ட கனவு பளிக்கும்ன்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு ஒரே கனவு திரும்பத் திரும்ப வருது.
அதுவும் அதிகாலையிலேயே வருது.
ஒருவேளை இந்த கனவு பளிச்சிருமோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு கௌதம்”
என்று அவள் படபடப்போடு கூற கௌதமோ சலித்தவாறு,
“என்ன துவாரகா நீ கனவு கண்டு இப்படி பயந்து போய் இருக்க.
இங்க பாரு அது ஜஸ்ட் ஒரு கனவு அவ்வளவுதான் அதுக்காக நீ இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
நீ சொல்ற மாதிரி பகல் கனவெல்லாம் பழுக்காதடி.
அப்படி பார்த்தா எத்தனையோ பேரோட கனவு இன் நேரம் பளிச்சு அவங்க எல்லாம் எப்படியோ இருந்து இருக்கணும்.
இங்க பாரு என் பொண்டாட்டி ஒருவேளை நேத்து கண்ட கனவை நினைச்சுக்கிட்டே தூங்கி இருப்பியா இருந்திருக்கும் அதனாலதான் இன்னைக்கும் அதோட தொடர்ச்சியா உனக்கு வந்திருக்கு இதை மனசுல போட்டு குழப்பிக்கொள்ளாதே.
அப்புறம் இன்னொரு விஷயம் அது உன்னோட கணவா இருக்கட்டும் இல்ல நினைவா இருக்கட்டும் இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கௌதமுக்கு இந்த துவாரகா மேல மட்டும் தான் காதல் வரும் வேற எந்த பொண்ணு மேலயும் வராது புரிஞ்சதா.
உன்னோட இந்த குட்டி மண்டையில நல்லா ஏத்திக்கோ”
என்றவன் அப்பொழுதுதான் அவளுடைய முகத்தில் இருந்து பார்வையை கீழே விளக்கினான்.
இரவு இருவருடைய கூடல் முடிந்து அப்படியே தூங்கி இருக்க இருவருடைய உடலிலும் சிறிய ஆடை கூட இல்லாமல் இருக்க ஒரு வெண்ணிற போர்வை மட்டுமே இருவருடைய பாதி உடலையும் மறைந்திருந்தது.
தன் அருகில் அழகிய சிலை போல் அமர்ந்திருக்கும் தன்னுடைய மனைவியின் உடலில் பார்வையை பதித்தவனுக்கோ இரவு நடந்த கூடல் நினைவு வர அதே ரசனையோடு தன்னுடைய மனைவியை நெருங்கினான் கௌதம்.
அவளோ அப்பொழுதும் தாங்கள் இருக்கும் நிலையை உணராமல் தற்பொழுது கண்ட கனவினையை நினைத்துக் கொண்டிருந்தாள் அருகில் ஒரு கள்வன் தன்னை மீண்டும் சூறையாட வருவதை பார்க்காமல்.
அவளுடைய மன ஓட்டத்தை தன் மேல் திருப்பும் பொருட்டாக மனைவியின் வெற்று கழுத்தில் மீசை முடி கொண்டு உரசினான் கௌதம்.
அதில் கூச்சம் எடுக்க திடுகிட்ட துவாரகாவோ,
“என்ன செய்றீங்க கௌதம் கூசுது”
என்று சினிங்கினாள்.
அப்பொழுதும் அவள் தன்னைக் குனிந்து பார்க்கவில்லை.
“ஏன்டி காலையிலேயே இப்படி உறிச்சி வச்ச கோழி மாதிரி இவ்வளவு நெருக்கமா உக்காந்துகிட்டு மாமா மனசை கெடுக்கிறியேடி.
கிட்ட வந்தா கூசுதுன்னு சொல்ற என்ன பாத்தா உனக்கு பாவமா தெரியலையா”
என்று கிறங்கியவாறு கூறினான் கௌதம்.
“என்ன உளறீங்க” என்று அவனை முறைத்தவள் தன்னைக் குனிந்து பார்த்தாள்.
“அச்சோ கடவுளே என்னங்க நீங்க”
என்று சொன்னவள் வேக வேகமாக அந்தப் போர்வைக்குள் முழுவதுமாக தன்னை புகுத்தி கொண்டாள்.
அதைக் கண்ட கௌதமோ கலகலவென்று சிரிக்கத் தொடங்கினான்.
“சிரிக்காதீங்க எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு எல்லாம் இந்த பாலா போன கனவால வந்தது.
இவ்வளவு நேரமா அப்படியே உட்கார்ந்து இருக்கேன் இவரு வேற இதை வச்சு இன்னைக்கு ஃபுல்லா ஓட்டுவாரு ஐயோ ராமா ராமா”
என்று போர்வைக்குள்ளே கிடந்து புலம்பிக் கொண்டிருந்தாள் துவாரகா.
அவளை போர்வையோடு தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்த கௌதமோ,
“ரொம்ப புலம்பாதடி என் பொண்டாட்டி நான் தானே பார்த்தேன் எனக்கு சொந்தமான பொருளை நான் பார்த்தா உனக்கு என்னடி”
“ஹான் சொல்லுவிங்க சொல்லுவீங்க இதே மாதிரி நான் சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களா”
என்று அவசரப்பட்டு வார்த்தையை விட கௌதமோ,
“அப்படி வாடி என் செல்லா குட்டி நானா காட்ட மாட்டேன்னு சொல்றேன் நான் ரெடி நீ தான் பார்க்க மாட்டேங்குற” என்றவன் அவளுடைய போர்வையை விளக்க போக,
“ஐயோ வேண்டாம் வேண்டாம் ஏதோ தெரியாம சொல்லிட்டேன் ஆள விடுங்க” என்று அவனிடமிருந்து விலக போராடினாள் துவாரகா.
“அடியே மல்கோவா மாமி ஒரே ஒரு ரவுண்டு மட்டும் போயிட்டு போலாம் டி காலையிலேயே உன்னை இப்படி பார்த்து மூடு வேற மாதிரி போகுது கொஞ்சம் கருணை காட்டுடி”
என்று அவளை தன் பக்கம் இழுக்க அவளோ,
“என்ன விளையாடுறீங்களா மணி இப்பவே ஆற தாண்டிட்ட உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணனும் நீங்க வேலைக்கு கிளம்பனும் எல்லாத்தையும் விட்டுட்டு காலையிலேயே ஒரு ரவுண்டு போலாமான்னு கேக்குறீங்களா முடியவே முடியாது.
ஒரு ரவுண்டு என்ன எத்தனை ரவுண்டு வேணாலும் போகலாம் ஆனா இப்ப கிடையாது ராத்திரிக்கு தான் நல்ல பிள்ளையா எழுந்துருச்சு போய் ரெடியாகுங்க நான் போய் உங்களுக்கு சமைக்கிறேன்”
என்றவள் அவனிடமிருந்து நழுவி குளியல் அறைக்கு சென்று விட்டாள்.
“ச்சை தப்பிச்சுட்டா கள்ளி எத்தனை ரவுண்டு வேணாலும் போகலாமா மவளே இன்னைக்கு ராத்திரி சொன்ன மாதிரியே எத்தனை ரவுண்டு போக போறேன் பாரு நீ தான் முடியாம கத்த போற”
என்று பெட்டில் அமர்ந்தவாறே குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியிடம் கத்தினான் கௌதம்.
“ஹான் ஹான் பார்க்கலாம் பார்க்கலாம் நான் முடியலைன்னு கத்துறனா இல்ல ஒரு ரவுண்டுக்கு மேல முடியலன்னு நீங்க கத்துறீங்களான்னு பார்க்கலாம்”
என்றவாறு உள்ளே இருந்து சிரித்தாள் துவாரகா.
“அடியே என்னைய பார்த்தா இப்படி சொல்ற மவளே இதுக்காகவே இன்னைக்கு உன்னை வச்சு செய்றேன் பார்த்துக்கிட்டே இரு”
என்றான் கௌதம்
பிறகு சிறிது நேரத்தில் அவனுக்கான உணவை தயாரித்து இருவரும் மாறி மாறி ஊட்டிவிட்டு கொஞ்சி என்று காலைய பொழுது இருவருக்கும் அழகாகவே நகர்ந்து சென்றது.
தன்னுடைய ஆசை மனைவிக்கு அவன் தினமும் வேலைக்கு புறப்படும் முன் வாசலில் வைத்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு அதன் பிறகு தான் கிளம்புவான்.
அதே போல இப்பொழுதும் துவாரகாவின் நெற்றியில் இதழ் பதித்து அவளிடம் இருந்து விடைபெற்றான் கௌதம்.
அவன் அங்கிருந்து சென்றதும் புன்னகை முகமாக உள்ளே வந்தவளுக்கோ அன்றைய நாள் வேலை வரிசை கட்டி இருந்தது.
அனைத்தையும் செய்து முடித்தவள் மாலைப்பொழுது தன்னுடைய கணவனுக்காக காத்திருக்க தொடங்கினாள் துவாரகா.
அந்த மாலை நேர இதமான காற்று அவளை வருட அந்த இடத்தில் தன்னை மறந்து அவளுடைய கண்கள் தூக்கத்தை தழுவின.
மிகுந்த பழமையான இடம் அது.
என்ன இடம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் ஒரு குகை போல் காட்சி அளித்தது.
அவளுடைய முகமோ பதட்டமாக காணப்பட்டது.
யாரையோ தேடிக் கொண்டு இருப்பது போல அந்த குகையில் ஒரு ஆள் செல்லும் அளவே வழி இருக்க அந்தப் பாதையில் கையில் ஒரு தீப்பந்தத்தோடு யாரையோ தேடி சென்று கொண்டிருந்தாள் அமையாதேவி.
அவள் தேடிக் கொண்டிருந்த அந்த நபரை அவள் அடையும் சிறிது இடைவெளியில் அவளுடைய கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் சேனபதி சாயரா.
தன்னுடைய இலக்கை அடையும் சமயம் அதற்கு முன் தடையாக வந்து நிற்கும் சாயராவை பார்த்ததும் அமையாதேவிக்கோ ஆத்திரம் அதிகரித்தது.
“எதற்காக என்னை தடுத்தாய் சேனபதி சாயரா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்”
என்றாள் அமையாதேவி.
அதற்கு ஏளனமாக புன்னகை புரிந்த சேனபதி சாயரா நளினமாக தன்னுடைய உடலை வளைத்து அவள் முன் நடந்து வந்தவள்,
“என்ன அரிசியாரே என்னிடம் தாங்கள் குரலை உயர்த்தி பேசுகிறீர்களா இதற்கான தண்டனை தங்களுக்கு கிடைக்கும் என்று அறியவில்லையா தாங்கள்.
அரசர் தங்களை விட்டுவிட்டு எப்பொழுதோ என்னிடம் தஞ்சம் புகுந்து விட்டார்.
இவ்வாறு இருக்கும் பொழுது தாங்கள் என்னிடம் இப்படி குரலை உயர்த்தி பேசினால் தங்களுக்கு இதற்கான தண்டனை கடுமையாக இருக்கும் அரசியாரே”
என்றாள் நளினமாக.
ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அமையாதேவியோ அவளுடைய இந்த கூற்றைக் கேட்டு மீண்டும் ஆத்திரம் அதிகரிக்க,
அவளுடைய பிடரி முடியை கொத்தாக பிடித்தவளோ அவளை அடிக்க போக அச்சமயம் அங்கு வந்து சேர்ந்தான் கௌதமாதித்தன்.