கனவு -05
அமையாதேவி தனக்கு இருந்த கடும் கோபத்தில் சேனபதி சாயராவின் பிடரி முடியை கொத்தாக பிடித்து அவளை அடிக்க போக அச்சமயம் அங்கு வந்தான் கௌதமாதித்தன்.
“அமையா என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ முதலில் சாயரா மேலிருந்து கையை எடு இல்லை என்றால் இப்பொழுதே சேனபதி சாயரா மேல் அத்துமீறி நடந்து கொண்டதற்கா உன்னுடைய கையை வெட்டி விடுவேன்”
என்றான் கௌதமாதித்தன்.
“தாங்கள் என்ன கூறினீர்கள் மன்னா இந்த வேசி பெண்ணிற்காக தங்களுடைய மனைவியான என்னுடைய கையை வெட்டி விடுவேன் என்று கூறுகிறீர்களா”
என்று அதிர்ச்சியில் கேட்டாள் அமையாதேவி.
“நாவை அடக்கு அமையா சேனபதி சாயரா வேசி கிடையாது அவள் இப்பொழுது எனக்கு சொந்தமானவள்.
இன்னொரு முறை தாம் இவ்வாறு நடந்து கொண்டால் தங்களுடைய உயிர் உடலில் இருக்காது யார் அங்கே”
என்று காவலாளியை அழைத்த கௌதமாதித்தனோ,
“அமையாதேவியை சிறையில் இடுங்கள் நான் சொல்லும் வரை இவர் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது”
என்று அந்த காவலாளிக்கு உத்தரவிட்டு விட்டு சேனபதி சாயராவை தன்னுடன் அழைத்துச் சென்றான் கௌதமாதித்தன்.
காவலாளியின் பிடியில் சிக்கிய அமையாதேவியோ,
“என்னை விடுங்கள், மன்னா தாங்கள் செய்வது அநியாயம் தாங்கள் எமக்கு பெரும் அநியாயம் செய்கிறீர்கள் இவர்களை விட சொல்லுங்கள் விட சொல்லுங்கள்”
என்று கத்தினாள் அமையாதேவி.
ஆனால் அதை காதில் வாங்காதது போல் முன்னே நடந்து சென்றான் கௌதமாதித்தன்.
அவனுடன் நடந்து சென்ற சேனபதி சாயரா பின்னே திரும்பிப் பார்த்தாள்.
அமையாதேவியை ஏளனமாக பார்த்து சிரித்தாள்.
“உன்னை கொல்லாம விட மாட்டேன்”
என்று அமையாதேவி கூறினார்.
“ஏய் யாரடி கொல்ல போற..?
என்ன தூக்கத்துல இப்ப உளர எல்லாம் ஆரம்பிச்சுட்டியா”
என்றவாறு அவளுடைய தோளைப் பிடித்து எழுப்பினான் கௌதம்.
பதறி எழுந்த துவாரகாவோ சுற்றிமுற்றி பார்த்தாள்.
தான் கனவில் கண்ட இடம் அல்ல தான் வீட்டில் இருப்பது நினைவிற்கு வர தன் முன்னால் நிற்கும் கணவனை பார்த்தவள்,
“உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்ன சிறையில வைக்க சொல்லுவீங்க நீங்களும் எல்லா ஆம்பளைங்களை போல தான் உங்களை நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் எவளோ ஒருத்திக்காக என்ன கைய வெட்டுவேன்னு சொல்றீங்க என்னை சிறையில் வைக்க சொல்றீங்க தயவு செஞ்சு என் மூஞ்சிலேயே முழிக்காதீங்க போங்க இங்க இருந்து”
என்று கௌதமிடம் கத்தினாள் துவாரகா.
அவனுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய மனைவி தூக்கத்தில் ஏதோ புலம்புகிறாளே என்று அவளை எழுப்பியதற்காக தன்னிடம் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளா என்று நினைத்தான்.
“அம்மா தாயே தெரியாமல் உன்னை தூக்கத்திலிருந்து எழுப்பிட்டேன் ஏதோ தூக்கத்துல புலம்புறியேன்னு உன்ன எழுப்புனதுக்காகவா என்னை இப்படி திட்டுற”
என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டான் கௌதம்.
அவளுக்கோ அந்த கனவின் தாக்கமே அவளை ஆட்கொண்டிருந்தது.
“ப்ளீஸ் கௌதம் தயவுசெஞ்சு என் முன்னாடி நிக்காதீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நின்னீங்கனா கூட நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது உங்கள பார்த்தாலே அருவருப்பா இருக்கு தயவு செஞ்சு இங்க இருந்து போங்க”
என்று கத்தினாள்.
“இங்க பாரு துவாரகா ஏதோ கனவு கண்டுட்டு என் மேல நீ எரிஞ்சு விழற நான் இப்ப தாண்டி ஆபீஸ்ல இருந்து வர்றேன்.
நானே அங்க எவ்வளவு டென்ஷனோட எவ்வளவு பிரச்சனையை சமாளிச்சிட்டு இங்க வீட்டுக்கு வரேன் சிரிச்ச முகமா என்ன வரவேர்களைனா கூட பரவால்ல ஆனா இப்படி எரிஞ்சு விழுந்தா நான் என்னடி செய்வேன்”
“ஆமா இப்ப அது ஒன்னு தான் ரொம்ப முக்கியம் உங்க ஆபீஸ் டென்ஷன உங்க ஆபீஸோட நிப்பாட்டிக்கோங்க என்கிட்ட காட்டாதீங்க தயவு செஞ்சு இங்க இருந்து போங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க”
என்று கத்தினாள் விடாமல் அவளும்.
“சரி தான் போடி நீயா வந்து பேசாம இனி உன்கிட்ட வந்து பேசமாட்டேன் எனக்கும் ரோஷம் இருக்கு போ”
என்றவன் தான் அணிந்திருந்த பேக்கை தூக்கி அங்கு சோபாவில் வீசி எறிந்து விட்டு அவளைக் கடந்து தங்களுடைய அறைக்குள் சென்று விட்டான்.
அவன் அங்கிருந்து அகன்றதும் சோபாவில் பொத்தென அமர்ந்தாள் துவாரகா.
அவளுடைய நினைவு முழுவதும் தன்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தக் கனவிலே சுழன்று கொண்டிருந்தது.
“யார் அந்த பொண்ணு எங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்றது.
அதுவும் போக இது ராஜாக்கள் காலத்துல வர்ற மாதிரி காட்சிகள் எல்லாம் இருக்கு.
ஒரு வேளை நிறைய பேர் சொல்ற மாதிரி இது என்னோட முன் ஜென்ம கதையா”
என்னடி லூசு மாதிரி யோசிக்கிற இப்ப நாம இருக்கிறது 2020 செஞ்சுரி இப்ப போய் முன் ஜென்மம் அது இதுன்னு யோசிக்கிற
அப்படி எதுவும் இல்லைன்னா இது ஏன் இப்ப ரெண்டு நாளா எனக்கு தொடர்ந்து வருது வரும்போது எல்லாம் என்னையும் அவரையும் பிரிக்கிறது மட்டும்தான் குறிக்கோளா இருக்கு அந்த பொண்ணுக்கு என்ன சொல்ல வர்ற இதனால”
என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அவளுடைய தோளை யாரோ ஒருவர் தொடுவது போன்று இருந்தது.
யார் என்று திரும்பிப் பார்க்க அவளுடைய உருவமே அவளை அங்கு கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தது.
“என்ன பார்க்கிற ஆபீஸ்ல இருந்து வந்த புருஷனை உனக்கு வந்த கனவை வச்சி அவரைத் திட்டி சண்டை போட்டு அனுப்பிட்ட அவர் என்ன ஆனார்னு ஏதாவது பார்த்தியா அது எல்லாம் விட்டுட்டு நீ என்னடான்னா ஜஸ்ட் ஒரு கனவு பத்தி யோசிச்சிட்டு இருக்க.
உங்க ரெண்டு பேரோட காதல் என்ன அவ்வளவு பலவீனமானதா நீ இவ்வளவு யோசிக்கிறதுக்கு”
என்று அவளுடைய மனசாட்சி அவளை கேள்வி கேட்டது.
“உனக்கு என்ன தெரியும் நானும் அவரும் பத்து வருஷமா லவ் பண்ணி எங்க குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணவங்க அப்படி இருக்கும்போது எங்களுடைய காதல் எப்படி பலவீனமாக இருக்கும்”
என்று அதனிடம் சண்டையிட்டாள் துவாரகா.
“அவ்வளவுதான் அப்புறம் ஏன் நீ கௌதம் கிட்ட சண்டை போட்ட ஜஸ்ட் அது ஒரு கனவு கனவை கனவா நினைச்சுட்டு கடந்து போறத விட அதை வாழ்க்கையில் கொண்டு வந்தா அதோட விளைவுகள் வேற மாதிரி இருக்கும் நல்லா போய்க்கிட்டு இருக்க உங்களோட காதல் வாழ்க்கை கூட கசப்புல முடிகிறதுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கு”
“என்ன சொல்ற நீ அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்னோட கௌதம் எனக்கு மட்டும் தான் சொந்தம் கௌதமுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை எனக்கும் என் கௌதம விட்டால் யாரும் இல்லை நீ சொல்றதும் சரிதான் இது வெறும் ஒரு கனவு இதை யோசிச்சுகிட்டு என்னோட கௌதம நான் கஷ்டப்படுத்தக் கூடாது”
என்றாள் துவாரகா.
“என்கிட்ட நல்லா பேசு ஆனா கௌதம நீ எப்படி எல்லாம் திட்டுன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாவம் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அங்க பாரு உள்ள ரூமுக்குள்ள போனவர் தான் ஆளையே காணோம்.
வீட்டுக்குள்ளேயே இருக்க உனக்கு இப்படி இருக்குன்னா ஆபீஸ்ல அங்க அவரு எத்தனை பேரை சந்திக்கணும் எவ்வளவு ஒரு பிரஷர் இருக்கும் அது எல்லாம் அவரு உன்கிட்ட இதுக்கு முன்னாடி காட்டி இருக்காரா ஆனா நீ இந்த ரெண்டு நாள் வந்த ஒரு சாதாரண கனவை வச்சு அவர்கிட்ட பெரிய சண்டையே போட்டு இருக்க”
“அச்சோ ஆமால்ல நான் இடியட் மாதிரி நடந்துக்கிட்டேன்ல்ல ச்ச என்னோட கௌதம் பாவம் இப்போ நான் எப்படி அவரை சமாதானப்படுத்துவது”
என்று மனசாட்சியிடம் அவள் கேட்க அதுவோ அவளுடைய தலையில் கொட்டி விட்டு,
“இங்க பாரு கௌதமுக்கு உன் மேல இருக்க கோபத்தை விட பாசம் தான் ரொம்ப அதிகம்.
உன் மேல ரொம்ப நேரம் கோபத்தை இழுத்து பிடிச்சு கிட்டு எல்லாம் இருக்க மாட்டாரு நீ என்ன பண்ற அவருக்கு பிடிச்ச ஸ்வீட் ஏதாவது செஞ்சு சமாதானப்படுத்து”
என்றது அவளுடைய மனசாட்சி.
அதற்கு துவாரகாவும்,
“அப்படியா சொல்ற இது சரியா வருமா”
“கண்டிப்பா சரியா வரும் தைரியமா போ உன் கூட நான் இருக்கேன்”
என்று சொல்லிவிட்டு காற்றோடு மறைந்து போனது.
இவ்வளவு நேரமும் மன அமைதி இல்லாமல் இறந்தவள் இப்பொழுது தன்னுடைய கணவனை சமாதானப்படுத்தும் பொருட்டு அவனுக்காக அவனுக்கு பிடித்த குலாப் ஜாமுன் செய்வதற்காக துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் சமையல் அறைக்குள்.