மான்ஸ்டர்-28

4.9
(14)

அத்தியாயம்-28

அதில் அவளுக்கு கோவமோ அழுகையோ வரவில்லை.. மாறாக சிரிப்பு தான் வந்தது… “அப்போ என் மேல உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது எதுக்காக தாலி கட்ட மாட்டேன்றீங்க…என்று பரிதவிப்பாக கேட்க…

ம்ச் உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கும்போது எதுக்கு பேபி தாலி எல்லாம்….” என்று கேட்டவனை பார்த்து மறுப்பாக தலையாட்டியவளோ..

தாலி இல்லனா இந்த சொசைட்டியில வாழ முடியாது தாஸ்…” என்றாள் கலக்கத்துடன்…

கண்டிப்பா வாழ முடியும் பேபி.. உன்ன என் கூட இருக்கும்போது எவன் என்ன கேள்வி கேட்பான்..யாருக்காச்சும் அதுக்கு தைரியமிருக்கா…” என்று மார்ட்டின் மிரட்டலாக கேட்க…

அதில் சலித்தவளோ… ம்ச் கண்டிப்பா நீங்க இருக்கும்போது யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க தான்… ஆனா அதுக்காக…” என்று அவள் இழுக்க…

மார்ட்டினோ அவளை தன் கைக்குள் வைத்துக் கொண்டவனும் என்னோட வாழ்க்கையை பற்றி உனக்கே நல்லாவே தெரியும் பேபி.. நான் ஒரு கேங்ஸ்டர் இந்த மும்பையில பல எதிரிகளை சம்பாதிச்சு இருக்கேன்.. எனக்கு இன்னைக்கு நாளைக்கு எப்ப வேணாலும் சாவு வரலாம்ஆனால் அதுக்காக உன்னையும் என் கூட சேர்த்து சாவடிக்க கூடாதுனு தான் நான் உன்ன என் கூட சேர்க்கவே தயங்குனேன்ஆனா இன்னைக்கு நீ அந்த நிலைமையில் இருக்கிறதை பார்த்து நீ என் கூட இருந்தாலும் சரி என்னோட செத்தாலும் சரின்ற நிலைமைக்கு நானும் வந்துட்டேன்.. உன்னை விட்டு கொடுக்க எனக்கு மனசு வரல பேபி.. ஆனா அதுக்காக என்னோட கோட்பாடுகளை தாண்டி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கவே முடியல.. எனக்கு கல்யாணத்து மேல விருப்பம் இல்ல பேபி.. என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா…” என்று அவனும் பேச.

அதில் அவளுக்கோ வேறு என்ன பேசுவது என்றே தெரியவில்லைஅப்படியே அமைதியாக இருந்தவளை பார்த்து மார்ட்டினுக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது… அவளது தலையை மெல்ல வருடியவனோ இன்னிக்கி ஈவினிங் நம்ம தாத்தாவ பாக்க போலாம்…” என்று கூற.

அதற்கு மைத்துவோ சரி என்று தலையாட்டினாள்ஆனால் அதற்கு முன்பு அவனை தயங்கியவாறே பார்த்தவளை என்ன பேபி என்கிட்ட என்ன தயக்கம் என்ன வேணுமோ கேளு…” என்று கேட்டவனை பார்த்து…

ம்ம் எனக்கு எங்க அம்மாவோட இடம் வேணும் தாஸ்அதுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது…” என்று கூற.

அதற்கு சரி என்று தலையாட்டியவனோ… “அதுக்கு முன்னாடியே நான் எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டேன் பேபிஉங்க அம்மாவோட இடத்தை யாராலயும் டச் கூட பண்ண முடியாது..” என்று கூறியவனின் முகமோ வஞ்சத்தில் பளபளத்தது

அம்மா அம்மா…” என்று ராகவ் வேகமாக காஞ்சனாவையும் மணி வாசகத்தையும் கூப்பிட்டவாறே உள்ளே ஓடி வர.. காஞ்சனாவும் ஏற்கனவே மும்பையில் மார்ட்டினிடம் வாங்கிய அடியில் கை, கால்களில் கொஞ்சம் அடிபட்டு இருந்தது.. அதனால் இப்போது எல்லாம் வேகமாக எழ முடியவில்லை..

ம்ம் சொல்லுடா…” என்று அழுத்தவாறு கேட்டவரை பார்த்து.

ம்ம்மா அந்த தாசில்தார் ஆபீஸ்ல ஒருத்தன் மைத்துவோட இடத்தை வாங்குறதுக்கு ரெடியா இருக்கான்அவங்கிட்ட நான் பேரம் எல்லாம் பேசிட்டேன் அவன் கிட்ட அந்த இடத்தை வித்துட்டா அவன் நம்மள தொந்தரவு பண்ண மாட்டான்.,” என்று கூற…

காஞ்சனாவிற்கு இப்போதைக்கு அந்த நிவாஸிடம் இருந்து தப்பித்தாலே தேவலை என்று தான் தோன்றியது.. ஏனென்றால் நிவாஸ் அவர்களுடனே இரண்டு அடியாட்களையும் அனுப்பி இருக்க அவர்களோ அந்த வீட்டினை விட்டு வெளியேறுவதாக தெரியவில்லைஎப்படியாவது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மைத்துவின் கையெழுத்தை போட்டு அந்த இடத்தை அபகரிக்கவே நினைத்தார்கள்…

ம்ம்ம் சரிடா வீட்ல கொஞ்சம் பணம் இருக்கு இல்ல அதையும் இந்த இடத்தை வித்த காசையும் எப்படியாவது அந்த நிவாஸுக்கு அனுப்பிவிட்டுட்டா போதும்… இல்லனா அவன் நம்மள உயிரோடவே விடமாட்டான் போல இருக்கு,,,” என்று காஞ்சனா பதறியவாறே கூட..

இதனை எல்லாம் பார்த்தவாறே அப்படியே சிலையாக உட்கார்ந்திருந்தார் மாணிக்கவாசகம்.. முன்பு இருந்த நிலைக்கு இப்போது அவரின் நிலை இன்னும் பரிதாபமாக ஆகிவிட்டதுஅவரை காஞ்சனாவோ ராகவ்வோ மதிப்பதாக தெரியவில்லை.. மும்பையில் இருந்து வந்த வேகத்திற்கு..

அப்படியே கல்லு கணக்கா இருங்க கொஞ்சமாச்சும் உங்க பொண்ணு கிட்ட பேசி அவளை இந்த ஊருக்கு அழைச்சிட்டு வருவோம்னு நினைச்சீங்களாஇல்லன்னா அந்த கிழவன் நிவாஸ்க்கிடையாவது கொண்டு போய் அவள தள்ளிவிட்டு வருவோம்னு நினைச்சிங்களாஅதுவும் இல்ல அப்படியே கள்ளுலி மங்கன் மாதிரி உட்கார்ந்த இடத்திலையே அசையாமா உட்கார்ந்து இருங்க…”என்று காஞ்சனா அவரை கத்திக் கொண்டிருக்க…

ம்ச் அவர்கிட்ட என்னமா பேசுற அவரால நம்மளுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லைஇந்நேரம் அவர் பொண்ணு மேல ஏதோ கொஞ்சம் பொய்யா பாசத்தை காட்டி இருந்தா அவ மயங்கி இந்நேரம் அந்த இடத்தை நம்ம பேரு எழுதி கொடுத்திருப்பாஇப்ப பாரு நம்மளோட நிலைமைய்…” என்று ராகவ்வும் தன்னுடைய தந்தையை வெறுப்பாக பார்த்தவாறே… ம்ச் சீக்கிரம் கிளம்பும்மா தாசில்தார் ஆபீஸ்க்கு போயிட்டு வந்துருவோம்…” என்று கூற.

ம்ம்ம் சரி..” என்று தலையாட்டியவர் வேக வேகமாக கிளம்பி இருவரும் தாசில்தார் ஆபீஸிற்க்கு கிளம்பி சென்றனர்ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களுக்கு ஆப்படிப்பது போல மார்ட்டின் அந்த இடத்தை சுற்றி வளைத்து இருந்தான்…

தாசில்தார் ஆபீஸிற்கு இடத்தை தாண்டி தான் செல்ல வேண்டுமாக இருந்தது… எனவே ராகவ்வும் காஞ்சனாவும் தங்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது அந்த இடத்தை சுற்றி ஒரே கூட்டமாக இருக்க…

ம்மா அம்மா என்னம்மா அவளோட இடத்துல ஒரே கூட்டமா இருக்கு…” என்று பதற…

அட ஆமா என்னடா ஆச்சு…” என்று காஞ்சனாவோ நெஞ்சில் கை வைத்தவாறு அந்த இடத்தினை நோக்கி செல்ல.. அங்கோ மைத்துவின் இடத்தை சுற்றி சுற்றி கரண்ட் வேலி போடப்பட்டிருந்தது…

அதனை பார்த்த ராகவ்விற்கோ முகம் இருண்டு போனது… “என்னாச்சு எதுக்காக கரண்ட் கம்பி போட்டுட்டு இருக்காங்க…” என்று காஞ்சனா பதற…

ராகவ் அதனை கண்டு வேகமாக அங்கு நின்றிருந்த கபீரை நோக்கி ஓடினான்… “ஹலோ சார் இது எங்களோட இடம்எங்களுடைய இடத்துல எதுக்கு சார் நீங்க வேலி போட்டுட்டு இருக்கீங்க..” என்று அவனும் கத்த..

கபீரோ அவனை அலட்சியமாக பார்த்தவன் இது உங்களோட இடம் இல்ல இது எங்க பாஸ் ஓட வைஃப் மிஸ்ஸஸ் மைத்ரேயி மார்ட்டின் லுதாஸ் ஓட இடம்…” என்று கூற..

அதில் காஞ்சனாவும், ராகவ்வும் ஒருசேர நெஞ்சில் கை வைத்துக் கொண்டனர்… “என்னது மிஸ்ஸஸா…” என்று ராகவ் அதிர்ந்து கத்தகபீரோ ஆம் என்று தலையாட்டினான்

ஆமா உங்களுக்கு தெரியாதா உங்க சிஸ்டரும் எங்க பாஸும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…” என்று கூற

அடிப்பாவி…” என்று காஞ்சனாவும் வாயில் கையை வைத்துக் கொண்டார்…

ம்ச் சரி சார் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஓகே அதுக்கு எதுக்கு இந்த இடத்தை சுத்தி எதுக்கு கம்பி வேலி கட்டுறீங்க…” என்று ராகவ் எகிறிக் கொண்டு வர,,,

கபீரோ இது எங்க பாஸ் ஓட இடம்அவரு அவரு வைஃப் மேல இருக்கிற இந்த இடத்தை சுத்தி கம்பி வேலி போட சொல்லி இருக்காரு.. இனி இந்த இடத்தை யாரும் ஃபோர்ஜரி பண்ணியோ இல்ல பொய் கையெழுத்து போட்டோ யாருக்கு விக்க முடியாதுஏன் இந்த இடத்தை தொட கூட முடியாதுஇந்த வேலி ஃபுல்லா கரண்ட் கொடுத்திருக்கோம் சோ இத தொட்டா ஆபத்து அவங்களுக்கு தான்…” என்று கூற

காஞ்சனாவிற்கும், ராகவ்விற்கும் மொத்தமும் போய்விட்டதா என்ற நிலைதான்ராகவ்விற்கும் காஞ்சனாவிற்கும் மைத்து இப்படி நெஞ்சில் நெருப்பள்ளி போடுவாள் என்று நினைக்கவே இல்லை… காஞ்சனா அப்படியே தாலையில் கை வைத்து உட்கார்ந்து இருக்க.. ராகுவ்வுக்கு மொத்தமும் போனது போல ஒரு எண்ணம்…

நாங்க எங்க அக்கா கிட்ட பேச முடியுமா…” என்று கபீரிடம் கேட்ககபீரோ இல்லை என்று வேகமாக தலையாட்டியவன்

இல்ல முடியாது… அவங்க உங்க யார்கிட்டையும் பேசுறதுக்கு விருப்பப்படல…” என்று கூறியவன் தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டான்

ராகவ்விற்கும் மைத்துவை நினைத்து வெறுப்பாக தான் இருந்தது… “என்னடா இவ இப்படி பண்ணிட்டா… எப்படிடா அந்த நிவாஸ் கிட்ட இருந்து நம்ம தப்பிக்கிறது…” என்று காஞ்சனா தலையில் கை வைத்து உட்கார்ந்து இருக்கஅதற்குள் ராகவ் வேறு ஒரு திட்டத்தினை மனதில் போட்டு விட்டான்..

இங்கு மைதிலி தன்னுடைய மனம் மயங்கிய மான்ஸ்டருடன் அவனின் தாத்தாவை பார்ப்பதற்காக செல்லமார்ட்டினோ அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டு வந்தான்.

இளம் பச்சை நிறத்தில் ஒரு சுடிதாரை அணிந்துக் கொண்டு சிவந்த கன்னத்துடன் தன்னுடைய விரித்த பார்வையுடன் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தவளைபார்க்க பார்க்க மார்ட்டினுக்கு கொள்ளை ஆசையாக இருந்தது…

பேபியூ ஆர் பியூட்டிஃபுல் பேபி யூ ஆர் வெரி காட்ஜியஸ்…” என்று முணுமுணுக்கஅது அப்பட்டமாக அவள் காதிலும் விழத்தான் செய்ததுஅதில் புன்னகைத்தவளும் அவனை பார்க்க வெட்கம் தடை செய்ய அதனால் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல தலையை திருப்பிக் கொண்டாள்இப்போது இல்லை இரண்டு நாட்களாகவே மைத்துவை விட்டு கொஞ்சவும் மார்ட்டின் நகரவில்லை…

அவன் தன்னை திருமணம் செய்து கொள்ள மட்டும் தடை விதிப்பதையும் அவனின் காதலில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க துவங்கிவிட்டாள்… “ஆமா இப்போ கல்யாணம் பண்ணா என்ன ஆகப்போகுது ஆகலனா தான் என்ன ஆகப்போகுதுஎப்படி ஆனாலும் இவரு நம்மள விட மாட்டாரு… அவரு என்னை அவ்வளவு உருக்கி உருக்கி காதலிக்கிறாருஇந்த நாலு நாளா பார்த்துகிட்டு தானே இருக்கோம்..” என்று நினைத்த மைத்ரேயிக்கு இந்த நான்கு நாட்களும் அவன் தன்னை எப்படி எல்லாம் கவனித்துக் கொண்டான் என்று நினைக்க நினைக்க உள்ளம் பூரித்து போனது.

உடல் காய்ச்சலில் விழும்பொழுது அவளை தூக்கிக்கொண்டு கழிவறைக்கு அழைத்து சென்று வருவதிலிருந்து அவள் உடலை டவலால் ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுப்பதிலிருந்து அவளுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதில் இருந்து அனைத்தும் பரிவாக பார்த்துக் கொண்ட மார்ட்டினின் கண்களிலோ கரை காணாத காதலை பார்த்து மயங்கியே போனாள் பெண்ணவள்… அவனின் இந்த கரிசனைக்காக இல்லை இல்லை காதலுக்காக கழுத்தில் தாலி இல்லாமல் அவன் உடன் வாழவே அவள் ஒத்துக் கொண்டாள்…

அவள் மனம் கொஞ்சம் பிராண்டியதுதான்ஆனாலும் அவனின் காதலில் கரைய ஆசைப்பட்ட பெண்ணவளோ கண்டிப்பாக அவன் தன்னை எவ்விதத்திலும் ஏமாற்ற மாட்டான் என்று நினைத்தவள் அவனுடன் வாழ மனதை உறுதியாக்கிக் கொண்டாள்.. அதன் முதல் விளைவாக இன்று போய் மார்ட்டினின் தாத்தாவை பார்த்துவிட்டு ஆசிர்வாதம் வாங்கி வருவதற்காக இருவரும் கிளம்பி சென்று கொண்டிருக்கின்றனர்…

அங்கு சென்றவர்கள் தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க… அவரோ மனதார ஆசீர்வதித்தவர்… ம்ம் எப்பம்மா கல்யாணம்…” என்று சார்லஸ் பரிவாக மைத்ரேயியை பார்த்து கேட்கமைத்ரேயியின் கண்களோ அதிர்ச்சியாக மார்ட்டினை பார்த்துக் கொண்டிருந்தது…

தாத்தாவை பார்த்து முறைத்தவனை கண்ட சார்லஸிற்கு தன் பேரனின் முடிவு அனைத்துமே புரிந்து போனதுஅவருக்கு தான் அவரது பேரனை பற்றி அனைத்துமே தெரியுமே.. மைத்துவை பார்த்த வேகத்திற்கு சார்லஸிற்கு அவளை மிகவும் பிடித்து போனது…

ரொம்ப அழகா இருக்காப்பா என் பேத்தி…” என்று மார்ட்டினிடம் கூறியவனை பார்த்த மார்ட்டின் பட்டென்று அவளை மயக்கும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…

அட இவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கலையாமா…” என்று மைத்துவிடம் அவர் கேட்க…

மைத்ரேயோ அவரை பார்த்து தயங்கியவாரே ஆம் என்று தலையாட்டினாள்… “சரிம்மா நீ கொஞ்சம் வெளியில இருக்கியாநான் அவங்கிட்ட பேசிட்டு வரேன்…” என்று சார்லஸ் கூற…

சரி என்று தலையாட்டியவளோ அந்த அறையில் இருந்து வெளியில் செல்லமார்ட்டினோ தன்னிடம் தாத்தா என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொண்டவனோ.. “தாத்தா ஆல்ரெடி நாங்க கல்யாணத்தை பத்தி பேசிட்டு வந்ததுட்டோம்அவளுக்கும் கல்யாணம் இல்லாம என்னோட வாழ்றது எல்லாம் விருப்பம் தான்…” என்று கூற

ம்ச் லூசு தனமா பேசாதடா அவ தமிழ்நாட்டுல இருந்து வந்த பொண்ணு அவகிட்ட போய் தாலி இல்லாம என் கூட வாழுன்னு சொல்லி இருக்கியே நீ லூசா டா…” என்று சார்லஸ் திக்கி திணறியவாறே அவனை திட்டியவரோ… “ஒரு கல்யாண தோத்து போனா எல்லா கல்யாணமும் தோத்து போனதா அர்த்தம் இல்லடாநீ கொஞ்சம் உன்னோட மனச அனலைஸ் பண்ணுஉங்க அம்மா அப்பாக்கு நடந்த அதே உனக்கும் நடக்கும்னு எந்தவிதத்தில் நீ நம்புற…”என்று கேட்க…

அவனால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அவர் சொல்வது உண்மைதானே தனது தாய், தந்தையர்கள் திருமணத்திலிருந்து பிரிந்தார்கள் என்றால் அதே திருமணத்திலேயே மற்றவர்களும் அதே போல பிரிவார்கள் என்று திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது அவனாலே கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

ஆனாலும் அவனுக்கு ஏதோ தயக்கமாகவே இருந்ததுஏதோ திருமணம் செய்யாமல் அவளுடன் ஒன்றாக வாழ்ந்தால் அவள் தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்று அவன் நினைத்துக் கொண்டான்ஆதலால் அவன் பிடியில் அவன் உறுதியாக இருக்கசார்லஸ் அவர்கள் இருவருக்கும் விடைக்கொடுத்தவர்…

நான் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாரு மார்ட்டின்அவளுக்கு உண்மையான அதிகாரத்தை உரிமையை கொடுக்கனும்னா அதுக்கு தாலி கண்டிப்பா அவசியம்…” என்று கூற மார்ட்டினோ அதனை பற்றி யோசித்தவாறே வீட்டினை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

தாத்தா சொன்னதைப் பத்தி நினைச்சுட்டு இருக்கீங்களா…” என்று மைத்ரேயி அவனை பார்த்து கேட்க

மார்ட்டினோ அதில் அவளை திரும்பி பார்த்தவாறு காரினை ஓட்டிக்கொண்டே ஆம் என்று தலையாட்ட….

ம்ச் தாத்தா ஏதோ என்னோட நன்மைக்காக யோசிச்சு சொல்றாங்கன்னு நினைக்கிறேன்நீங்க அத போட்டு குழப்பிக்காதீங்க… நீங்க தான் எனக்கு இந்த ஜென்மத்துல எனக்கு புருஷன்னு நான் முடிவு பண்ணிட்டேன்… அதனால உங்க கூடவே நான் வாழ்றதுக்கு தயாரா இருக்கேன்… அதுக்கு தாலி அவசியமில்ல…” என்று மைத்ரேயி கூற..அதில் மார்ட்டினோ அவளை இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்

அப்போது பார்த்து மார்ட்டினின் காரிற்கு முன்னால் ஒரு நான்கு கார்கள் சர் சரென்று வந்து நிற்க… அதில் மார்ட்டினோ காரை வேகமாக ப்ரேக்கினை போட்டு நிறுத்தினான்அந்த நான்கு காரிலிருந்து இறங்கியவர்களை பார்த்தவனுக்கோ அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து போனது…

உடனே தன்னுடைய போனை எடுத்து பார்க்கஅதிலோ சிக்னல் இல்லாமல் இருந்ததுசட்டென்று அந்த போனை மைத்துவின் கையில் திணித்தவனோ… கேப்பச்சினோஎன்ன பிரச்சனையா இருந்தாலும் சரி நீ இந்த கார விட்டு இருந்து இறங்கக்கூடாது…” என்று கூறியவனோ காரில் இருந்து குதித்து இறங்க பிற்பட… மைத்துவோ ஏற்கனவே பயங்கர பயத்தில் இருந்தவள் அவன் கையை இறுக்க பிடித்துக் கொண்டு..

ப்ளீஸ் போகாதீங்க…” என்று கூறினாள்… அவளுக்கும் மார்ட்டினை பற்றி அனைத்துமே தெரியும்… மார்ட்டின் அவனே அவனை பற்றியும்அவனுக்குப் பின்னால் எவ்வளவு எதிரிகள் இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தான்ஆனால் அதற்காக அவனை விட்டுவிட்டு செல்ல மட்டும் அவள் நினைக்கவில்லை…

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!