அத்தியாயம்-29
மார்ட்டின் அவள் கையை தட்டிக் கொடுத்தவன் “லுக் பேபி.. என்ன ஆனாலும் சரி இந்த காரை விட்டு நீ இறங்க கூடாது… இது புல்லட் ப்ரூப் கார் இதுல எந்த குண்டும் படாது… அதும் இல்லாம வெளில இருந்து திறக்கவும் முடியாது…” என்று கூறியவனோ தன்னுடைய போனை காட்டி…
“இதுல சிக்னல் வரும் போது கபீருக்கு போன் பண்ணி கூப்பிடு…” என்று கூறியவாறு காரில் இருந்து இறங்கினான்…
“அய்யோ ப்ளீஸ் இறங்காதீங்க…” என்று மைத்ரேயி கத்த…
அவனோ அதனை காதில் வாங்காமல் இறங்கி சென்று அந்த அடியாட்களுக்கு முன்னால் நிற்க… அங்கு இருந்த ஐந்தாறு காரில் இருந்து இன்னும் திபு திபுவென ஆட்கள் இறங்கினார்கள்… அவனுக்கு தெரிந்து போனது இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று… நிவாஸ்..
ஆம் நிவாஸ் தான் இருந்தான்… அடிபட்ட பாம்பாக தன்னை செல்லா காசாக மாற்றிய மார்ட்டினை ஆள் அருவம் இல்லாமல் செய்வதற்காகவே அவன் ஆட்களை செட் செய்து அனுப்பி இருந்தான்… அவர்களைப் பார்த்து மார்ட்டின் இளக்காரமாக சிரித்தவன் வா என்பது போல அவர்களை நோக்கி கை காட்ட.. அதில் அனைவரும் பலவிதமான ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தனர்…
இதனை காரில் உட்கார்ந்தவரை பார்த்துக் கொண்டிருந்த மைத்துவின் உள்ளம் படப்படத்தது.. அவள் கைகளோ கபீருக்கு அழைத்த வண்ணமே இருக்க… போனோ சிக்னல் இல்லாமலே இருந்தது…
இங்கு மார்ட்டின் தன்னை நோக்கி ஓடி வருபவர்களை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான்… ஒரு பத்து நிமிடம் அனைத்தும் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது ஆனால் அதற்கு மேல் மார்ட்டினால் அத்தனை பேரையும் சமாளிக்க முடியவில்லை… என்னதான் இருந்தாலும் அவனும் மனிதன் தான் அல்லவா… அதனால் கொஞ்சம் தடுமாறினான்… அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் முடியாமல் போக கொஞ்சம் தடுமாற ஆரம்பித்து விட்டான்..அந்த அடியாட்களோ அவன் உடலில் பல காயங்களை ஏற்படுத்த… இதனை காரில் உட்கார்ந்தவாறே அழுதவாறு பார்த்துக் கொண்டிருந்த மைத்துவோ அதற்கு மேல் காரின் கதவை திறக்க முற்பட்டாள்… ஆனால் கதவு லாக் செய்து இருக்க… தன்னவன் தான் தான் இறங்க கூடாது என்று கதவினை சாத்திவிட்டு சென்றுவிட்டான் என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவன் கூறியது நினைவில் வந்தது… உள்ளே இருந்து கதவினை திறக்க முடியும் என்பதனை உணர்ந்தவளோ தன்னவனை நிமிர்ந்து பார்க்க… அங்கு மார்ட்டினோ உடலில் பல காயங்களுடன் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்…
“மான்ஸ்…”என்று கத்தியவள் சட்டென்று ஓட்டுநர் இருக்கைக்கு மாறியவள் அந்த இடத்தில் இருக்கும் திறக்கும் பட்டனை அழுத்த… அப்போதுதான் கதவு திறந்து கொண்டது… உடனே மைத்து நொடியும் தாமதிக்காமல் இறங்க முயல…
“நோ… நோ மைத்து… இறங்காத…” என்று அங்கிருந்து கத்திய மார்ட்டினோ அவளை கண்டிக்கும் பார்வை பார்த்தவாறு அதிலிருந்து இறங்கக்கூடாது என்று மறுப்பாக கண்காட்டியவனோ அவர்களுடன் மறுபடியும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க மைத்துவோ திறந்த கதவின் வழியாக சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்தவாறு கபீருக்கு அழைத்து விட்டாள்…
ஆனால் அதற்குள் மார்ட்டினிடம் வேகமாக வந்த ஒருவன் கத்தியால் குத்த ஓங்க… அதனை தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டவனோ மற்றோரு கையால் மற்றவர்களை அடிக்க ஆரம்பித்துவிட்டான்… ஆனால் அதுவும் மார்ட்டினுக்கு ரொம்பவும் உதவி செய்யவில்லை.. சிறிது நேரத்திலையே அவன் தள்ளாட… அதனை பயன்படுத்திக்கொண்ட அந்த ஆளோ கத்தியால் மார்ட்டினை குத்தி இருந்தான்…
“ஆஆஅக்…”என்று மார்ட்டின் கத்த…
அதில் மைத்து அவனை பார்த்து “மான்ஸ்…”என்று அந்த இடமே அதிர கத்திவிட்டாள்… இப்போது முழுதாகவே மார்ட்டின் மயக்க நிலைக்கு சென்றவன் அப்பொழுதும் தன்னவளின் நிலையை நினைத்து வருத்தப்பட்டவன் போல…
“மைத்து… அந்த கார்ல ஏறி கார லாக் பண்ணிக்கோ…” என்று அந்த நிலையிலும் கத்தியவன் கொஞ்சம் தடுமாற…
மைத்துவிற்கோ இதற்கு மேலும் அந்த காரிலேயே இருக்க விருப்பமில்லை …அதனால் இறங்கி அவனை நோக்கி ஓட…
“நோ நோ…” என்று கத்திய மார்ட்டின் தன்னவளை பார்த்து மயக்கம் போட்டு கீழே விழ…
“அய்யோ என்னங்க…” என்று கத்தியவாறே ஓடியவளோ அவனை தன் மடியில் தாங்கிக் கொண்டாள்…
அப்போது மார்ட்டினை கொலை செய்ய முயன்ற அந்த ஆட்கள் இப்போது அவளை சுற்றியவர்கள் அவளையும் கொல்வதற்காக கத்தியை ஓங்கிய நேரம் பார்த்து சரியாக கபீர் ஆட்களை கூப்பிட்டுக்கொண்டு அங்கு சரியாக ஆஜர் ஆகிவிட்டான்.. மார்ட்டினின் ஆட்கள் அங்கிருந்த அனைவரையும் சரமாரியாக வெட்ட…. கபீரோ உடனே தன்னுடைய பாஸை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து விட்டான்…
மைத்து அந்த மருத்துவமனையின் ஐசியுவின் வாசலில் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்க… ஆனால் வாய் விட்டு மட்டும் கதறவே இல்லை… அதற்கு பதில் அவள் உள்ளமோ கதறிக் கொண்டிருந்தது… உள்ளே சேர்க்கப்பட்ட தன்னுடைய தாஸின் உடலிலோ வழிந்த ரத்தங்கள் எல்லாம் அவளது உடையில் திட்டுத்திட்டாக படிந்திருக்க அதனை பார்க்க பார்க்க அவளுக்கு உள்ளம் குமுறியது… ஆனாலும் அவனை பார்க்காமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கதறாமல் வேறு எங்கும் தான் கதறக்கூடாது என்று நினைப்பிலேயே கல் நெஞ்சமாக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்..
இன்னும் அவளது வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படிப்பட்ட ஒரு விபத்து நடக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை… அவளுக்கு பக்கத்தில் கபீரும் வந்து ஐசியூ வாசலிலேயே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
இடையில் திரும்பி தன்னுடைய பாஸின் மனைவியை பார்த்தவனோ… பாஸின் மனைவிக்கும் மேல் தன்னை அண்ணா என்று வாயாற கூப்பிட்ட பெண்ணவளின் அழுகை பிடிக்காமல்… “பயப்படாதம்மா பாஸுக்கு ஒன்னும் ஆகாது…” என்று கூற…
அதில் அழுகை வர பார்க்க முயன்று அதை தடுத்தவள்… சரி என்று தலையாட்டியவளோ திடீரென்று அவளின் கண்களில் அப்படி ஒரு தீவிரம்… சடார் என்று திரும்பி கபீரை பார்த்தவளோ… “அண்ணா அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்குன யாரும் நிம்மதியா இருக்கக்கூடாது அண்ணா.. அதை நீங்கதான் செய்யணும்…” என்று கபீரிடம் அழுத்தமாக கூற.
கபீரோ சரி என்ற தலை ஆட்டியவனுக்கு இதற்கு காரணம் யார் என்று அவனுக்கு தெரிந்து போனது… அடிபட்ட பாம்பாக அந்த நிவாஸ் தான் இதனை செய்து இருக்கிறான் என்று உறுதி செய்த கபீரோ நிவாஸை எப்போதோ தன் ஆட்களை விட்டு தூக்க வைத்திருந்தான்…
“ம்ம்ம் கண்டிப்பாம்மா.. பாஸோட இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவங்கள கண்டிப்பா நா விடமாட்டேன்.,” என்றவனின் கண்களில் அவ்வளவு வெறியேறி இருந்தது..
மைத்துவின் கண்களில் இன்னுமே அவ்வளவு உறுதி இருந்தது… அந்த நேரத்தில் கபீர் அவளின் கண்களில் மார்ட்டினை தான் பார்த்தான்… இப்படியே ஒரு இரண்டு மணி நேரம் செல்ல அதற்குப்பிறகு மார்ட்டினை அனுமதித்திருந்த அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்த மருத்துவர்களை பார்த்து மைத்து பதட்டத்துடன் ஓட.. கூடவே கபீரும் ஓடினான்…
மருத்துவரோ… “இப்போதைக்கு சார் க்ரிட்டிக்கல் கண்டிஷன்ன விட்டு தாண்டிட்டாரு.. ஆல் ஓகேவா இருக்கு நிறைய பிளட் லாஸ் ஆயிடுச்சு… நீங்க பிளட் கொடுத்ததினால் அவர் இப்போ ஓகே ஆயிட்டாரு.. காலுல நாலு இடத்துல பயங்கரமான வெட்டு விழுந்திருக்கு.. இப்ப அது முக்கியமான நரம்பு டச் பண்ணாம இருந்ததுனால எந்த பாதிப்பும் இல்லை… அதே மாதிரி நெஞ்சிலயும் நல்ல பலமான காயங்கள் பட்டிருக்கு… காயங்கள் ஆறுவதற்கு எப்படியும் பல நாட்கள் ஆகும் அதுவரைக்கும் சேஃப்பா பாத்துக்கோங்க… இப்போதைக்கு அவர் அபாய கட்டத்துல தாண்டிட்டாரு. இப்போதைக்கு அவரை போய் பார்க்க வேண்டாம்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா போங்க…” என்று மருத்துவர்கள் கூற…
சரி என்று தலை ஆட்டியவளோ அப்படியே நிம்மதியுடன் அந்த இருக்கையில் அப்படியே உட்கார்ந்து விட்டாள்… அவளுக்கு காலையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவள் கண் முன் வந்து விரிந்தது…
என்னதான் மார்ட்டின் அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள சம்மதித்திருந்தாலும் ஏனோ அவளிடம் நெருங்க அவனுக்கு ஒரு வித தடை இருக்கத்தான் செய்தது… அது எதனால் என்று அவன் யோசிக்கவும் முயலவில்லை… தாத்தாவை பார்ப்பதற்காக இருவரும் குளித்து முடித்து உடை அணிந்து கிளம்பி கொண்டிருக்க… மைத்துவோ ஏதோ யோசனை செய்தவாறே கண்ணாடியில் தன்னை பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தாள்…
அதனை எல்லாம் மார்ட்டின் கட்டிலில் உட்கார்ந்தவாறே அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் முகத்தில் தெரிந்த கலக்கம் ஏனோ ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது…
“ம்ச் ஆர் யூ ஓகே கேப்பச்சினோ…” என்றவாரே மார்ட்டின் அவள் பின்னால் வந்து அணைத்தவாறே கேட்க… இதுதான் அவளை முதல் முறையாக உரிமையாக அணைத்துக் கொண்டு நிற்பது… அவர்கள் இருவருக்குமான நெருக்கமே இதுதான் முதல் முறை… அவன் உதடுகளோ அவளது கழுத்தில் ஒரு முத்தத்தை பதித்தவாறே அங்கேயே குடிகொண்டிருக்க… மைத்துவோ அவனை நெருக்கத்தில் பார்க்க கொஞ்சம் படபடத்துப் போனாள்…
ஆனாலும் அந்த நேரத்தில் தன்னவனின் நெருக்கத்தை அவளால் முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதோ சிந்தனையிலேயே இருக்க.. “உனக்கு என் முடிவுல சம்மதம் இல்லையா கேப்பச்சினோ…” என்று கேட்க..
அதில் அவனை திரும்பி பார்த்தவள் இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவள்… “அதுக்காக இல்ல….” என்று அவள் தயங்க..
“ஷீ இங்கே யாரும் உன்னை பற்றி எதுவும் பேச மாட்டாங்க மைத்து… நீயும் நானும் இங்க பல வருஷம் இப்படியே ஒன்னா கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்தாலும் யாரும் எதுவும் பேச மாட்டாங்க…” என்று அவன் உறுதியாக கூற..
ஆனாலும் பெண்ணவளுக்கு கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது… ஆனாலும் அவனை அப்படியே விடுவதற்கு அவளுக்கு மனம் இல்லை… அதனால் தன்னை சமாளித்தவாறே சரி என்று அவனை நோக்கி தலையாட்ட…
“அட இப்படியா சரி சொல்லுவாங்க..” என்று குறும்பாக கூறியவனோ அவள் இடையை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டவன்.. அவளது மென்மை தன்னுடைய நெஞ்சில் மோதுமாறு இறுக்கியவன் அவளது கழுத்துக்கடியில் தன்னுடைய முகத்தை புதைத்து ஆழ்ந்த சுவாசித்துக் கொண்டிருந்தான்… அவளது நறுமணம் அவனை இன்னும் பித்துக்கொள்ள வைக்க….
“வாவ் வாட் எ ஸ்மெல்…” என்று கூறியவாறே அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்க அவள் முகமோ செங்கொழுந்தாக சிவந்து போயிருந்தது… அவளது இதழ்களை ஆழ்ந்து பார்த்தவன் தன்னை சமாளிக்க முடியாதவனாக பட்டென்று அதில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைக்க… மைத்துவோ அந்த முத்தத்தில் உடல் நடுங்க படபடத்துப் போயிருந்தாள்… அவள் கண்களோ இறுக்க மூடிக்கொள்ள… அதனை கண்டவனுக்கும் சிரிப்புதான் வந்தது…
“இதுக்கே என்ன தாங்க முடியலையே இதுக்கப்புறம் நடக்க போறதெல்லாம்…” என்று ஆடவன் இழுக்க… அதில் பட்டென்று கண் திறந்தவளோ அவனது இதழ்களை தன் கைக்கொண்டு இறுக்க மூடியவாறு நிற்க… அதனை கண்ட மார்ட்டினோ கண்களால் சிரித்தவாறே அவளது கைகளில் ஒரு முத்தமிட்டான்… அதில் பெண்ணவளின் உடல் உருகிப் போனது…
“இதுவரைக்கும் நான் இதை உன்கிட்ட சொன்னதே இல்ல பேபி… ஆனா இப்ப சொல்றேன் ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ சோ மச்;..” என்று அவளது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை இட… அவளோ அவனது காதலில் கரைந்து போனாள் பெண்ணவள்…
அதனை எல்லாம் எப்போது நினைத்தவாறே இருந்தவளை நர்ஸ் அவளை உள்ளே சென்று மார்ட்டினை பார்க்க அனுமதிக்க… உள்ளே சென்றவளுக்கோ… நெஞ்சிலும், கால் கைகளிலும் கட்டுடன் படித்திருந்த தன்னவனை பார்க்க பார்க்க மனம் கேட்கவே இல்லை… அவ்வளவு கம்பீரமாக, ஆளுமையுடன், ஆண்மையுடனும் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்போது அடிப்பட்டு கட்டுடன் சோர்ந்து போய் படுத்திருந்த அவனைப் பார்க்க அவள் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது…
ஆனாலும் அவளுக்கு அவனை விட்டு நகராமல் அவன் அருகிலேயே உட்கார்ந்து விட்டாள்… இப்படியே நாட்கள் நேரங்கள் ஓட.. சரியாக ஏழு மணி நேரத்திற்கு பிறகு அவளை பாடாய்படுத்துவிட்டு தான் கண்விழித்தான் மார்ட்டின்.. கண்விழித்தவனோ முதலில் கண்டது தனது அறையில் சோர்ந்த விழிகளுடன், சிவந்த விழிகளுடன் இருந்த தன்னவளை தான்… அவளை பார்த்த மார்ட்டினுக்கோ அந்த இடத்திலும் அந்த நேரத்திலும் உதடுகள் சிரிப்பில் விரிய… அப்படியே காந்தவிழிகளால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மைத்ரேயியோ அவன் கண்விழித்ததை கூட பார்க்காமல் தன்னவனின் வாடி வதக்கிய வதனத்தையே தன் கைக்கொண்டு வருடியவாறே இருக்க.. மார்ட்டினுக்கோ அவளது மனம் பாடும் பாடல் புரியத்தான் செய்தது… அதில் ஒரு உறுதியான ஒரு முடிவை எடுத்தவனோ… “ஆர் யூ ஓகே பேபி…”என்று கரகரப்பான குரலில் கேட்க…
அதில் பட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கோ இவ்வளவு நேரம் அடக்கிய அழுகை ஆறாக ஊற்றியது… “ம்கூம்… உயிரே போயிடுச்சு…” என்றவாறே அவளை இறுக்க அனைத்துக் கொண்டாள்…
மார்ட்டினும் அவளை இறுக்கி அணைத்தது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது… ஆனாலும் அதனை பல்லை கடித்துக் கொண்டு அடக்கிக் கொண்டவன் அவளை மென்மையாக வருடியவாறே “எனக்கு ஒன்னும் இல்ல.. ஐ ம் ஓகே மைத்து…”என்று கூறினாலும் அவனை நிமிர்ந்து பார்த்து…
“ம்ச் நீங்க இந்த தொழில விட்டுடுங்கன்னுலாம் நான் சொல்ல மாட்டேன்… இப்படி அடிபட்டதுனால எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. எனக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும்தான்… உங்களுக்கும் ஏதாவது ஆயிடுச்சுனா…” என்று அவள் ஆரம்பிக்க அதில் மார்ட்டினோ “ஒன்னும் ஆகாதுமா…” என்று கூறியவாறே அவளது தலையை வெண்மையாக வருடிவிட்டவனின் கண்களிலோ அவ்வளவு தீவிரம்….
அதிலேயே அவன் ஏதோ செய்ய திட்டம் போட்டுவிட்டான் என்பது விளங்கியது…
(கேப்பச்சினோ…)