காதலே- 12
வெளியே காத்திருந்த தர்ஷனுடன் ராயல் ஹோட்டலிற்குச் சென்றாள். அவள் உள்ளே செல்லும்போது பார்ட்டி ஆரம்பமாகியிருந்தது. தம்பியிடம் சைகையில் எட்டு மணி போல் வர சொல்ல அவனும் “ஓகே” என்றவன் அங்கிருந்து சென்றான்.
அவள் உள்ளே நுழைந்த நொடி ராமு பேச்சை முடித்துக் கொண்டு “என்ஜாய் ஹாய்ஸ்” என்றபடி மேடையை விட்டு கீழிறங்கி வந்தான். அவரவர் தங்களுக்கு பிடித்த உணவுகளை தட்டுகளில் எடுத்துக்கொண்டு ஆங்காங்கு அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.
“மோனி எங்க இருக்க” என கனி மோனாகாக்கு மெசேஜ் அனுப்ப “ரைட் சைடுல பாரு” என அவளது பதிலில் அவளைக் கண்டு கொண்டவள் அவளை நோக்கி சென்றாள்.
நிதிஸுன் பார்வை அவளை கண்டுகொள்ள. இந்த பொண்ணு தான் கனிமலர் என்றான் ராம் தரங்கினியிடம். கனியும் அழகாக புன்னகைத்தபடி மோனிகாவுடன் சென்று அவளோடு அமர்ந்து கொண்டாள். “ராம் இவளை நான் இங்கேயோ பார்த்திருக்கேன் , ஆனா எங்கன்னு தான் ஞாபகம் வர மாட்டேங்குது” என்றாள் தரங்கினி. நிதிஸும் அவளையே கவனத்திருக்க அவள் முகத்திலோ ஒரு அறியாமை அவள் உதடுகள் சிரித்தாலும் கண்களில் ஒருவித சோகம்.
“கனி வா சாப்பிடலாம்” என இருவரும் உணவை எடுத்துக் கொண்டு அமர்ந்தனர்.” கனி ராம் சார் அவர்ட ஃபேமிலியோட வந்திருக்கார்,ராம் சாரோட அண்ணா யார்னு தெரியுமா? கனியும் அவளை கேள்வியாய் நோக்க “அங்க பாரு என்றாள்.
அவள் காட்டிய திசையில் நிதிஸும்,ராமும் நின்றிருநத்னர் அவர்களும் இவர்களைத் தான் பார்த்துக் தான் பேசிக் கொண்டிருந்த்னர்.நிதிஸை டாக் ப்ளு சேர்ட் வைட் கோர்ட் சூட்டில் கண்டவளோ மூச்செடுக்க மறந்து அவனையே பார்த்திருக்க, இங்க எல்லாரும் தெரியும் நம்மளத் தவிர என்றாள்.
ஒரு பெருமூச்சுடன் நிதிஸுடம் இருத்து பார்வையை திருப்பியவள் சாப்பிட்டாள்.” “கனி ஆட்டோகிராப் வாங்குவம் வா” என்றாள் மோனாக்கா.நிதிஸ் மற்றும் ராம் இருக்கும் இடம் வந்தவர்கள்.”எக்ஸ்கியூஸ் மீ சார் ஆட்டோ கிராப்” என்றாள் மோனிகா.நிதிஸும் அவள் காட்டிய நோட் புக்கிலி தனது கையொப்பத்தை இட்டுக் கொடுத்தாள்.நிநிஸ் கனியைப் பார்த்து “உங்களுக்கு வேணாமா” எனக் கேட்க,” கனியோ தன்இடமா பேசுகிறான் என உறை நிலைக்கே சென்று விட்டாள்.அவள் முன் சொடக்கிட தன்னுனர்விற்கு வந்ததவள் “இல்லை” என தலையாட்டினாள். அவனும் சிரித்தபடி யோனியின் நோட் புக்கில் மீண்டும் கையொப்பம் இட்டு அதனை கிழித்து அவளிடம் கொடுக்க அவளும் அதனை வாங்கிக் கொண்டவள் தலையாட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.
எட்டு மணி போல் தன்னிடமிருந்து அழைப்பு வர மோனிகாவிடம் சைகையில் சொல்லி விட்டு ராயல் ஹோட்டலில் இருந்து வெளியேறியவளையே பின் தொடர்ந்த நிதிஸீன் பார்வை ‘ எங்க போறா’ ? என யாரும் அறியாது, அவளைப் பின் தொடர அவளும் தம்பியுடன் பைக்கில் புறப்பட்டிருந்தாள். ‘ ஓ இதான் தம்பியா!’ மீண்டும் பார்ட்டியில் கலந்து கொண்டான்.
தேவ் பிரதாப் அங்கு வந்த தொழில்துறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.மதுப் பிரியர்களுக்கான மதுவும் ஒரு புறம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆடல் பாடல் ஒருபுறம் களை கட்டியது.
ஹாஸ்டலுக்கு வந்த கனி நிதிஸுன் ஆட்டோகிராபினை பத்திரப்படுத்தியவள் அவனை நேரில் கண்ட மகிழ்ச்சியில் கவிதையோடு இணைந்த பாடல் இசையையும் பதிவேற்றியவள் களைப்பினால் தூங்கிப் போனாள் நிதிஸை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் மேலான காதல் மேலெழுந்ததென்னவோ உண்மை.
பார்ட்டி முடிய ராம் நிதிஸ் வீட்டுக்கு வரவே இரவு ஒரு மணி ஆகியது நாளை வெள்ளிக்கிழமை அனைவரும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது அவர்களும் களைப்பின் மிகுதியால் உறங்கி விட்டனர்.
மறுநாள் காலை சுதர்சனுடன் வீட்டுக்கு கிளம்பினாள் கனி சில நிமிட பயணத்தின் பின் வீட்டை அடைந்தனர் இருவரும் மகளையும் மகனையும் கண்டவர் “வாங்க சாப்பிடலாம்” என்றார் “அப்பா எங்க ?”என சைகையில் கனி கேட்க “ஸ்கூல் போயிட்டார்” என்றார் வாணி எப்படி அழகாக பேசும் மகள் இன்று அவள் குரல் கேட்கவே ஏங்கினர்,எங்கணம் குரல் கேட்பது.
பெருமூச்சுடன் மகனுக்கு மகளுக்கும் தோசை வார்த்துக் கொடுக்க இருவரும் உண்டனர் “இன்னைக்கு காலேஜ் போகலையாடா?,” ” இல்லமா ஒரு லெக்சர் தான் அதான் வந்துட்டேன்” …..”சரி சரி ஹாஸ்பிடல் போகணும் புக் பண்ணு”…..” சரிமா” என்றான் சுதர்சன்.
கனி டிவி பார்த்துக் கொண்டிருக்க சுதர்சன் வெளியே சென்று இருந்தான். கனியின் முன் வந்தமந்தார் வாணி.” கனி தாயைப் பார்க்க “கல்யாணம் ஒண்ணு பேசி வந்திருக்கு” என்றார் . அவள் தாயை முறைக்க கொஞ்சம் பெரிய இடம்தான் தரகர் மூலம் தான் பார்த்து வந்திருக்காங்க என்றார்.”இல்ல இப்ப வேணா” என்றாள் சைய்கையில் ,”அந்த கதிராலையா வேணாம்னு சொல்ற” என தாய் கேட்க தனது அலைபேசியை எடுத்தவள் அதில் “அப்படி இல்லமா கொஞ்சம் டைம் வேணும்” என அலைபேசியில் டைப் செய்து காட்டியவள் தான் சொல்வதைப் புரிந்து கொண்டாரா என அவரையே தவிப்பாக பார்க்க,
“அப்பா ரொம்ப கவலைப்பட்டாருமா, முதல்ல பார்த்த கதிரால நீ மனசு கஷ்டப்பட்டு இருப்ப சும்மா வேலைக்கு போயிட்டு இருந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண சொல்லி அவ மனசு கலைஞ்சுட்டேனு என்று கவலைப்பட்டார்டா என்ற வாணி மதிய உணவை தயாரிக்க தொடங்கினாள்.கனியும் தனது அறையினுள் நுழைந்து கொண்டாள்.
நிதிஸை நேரில் பார்த்ததிலிருந்து அகம் மகிழ்ந்து போனவள் தான் எடுத்த தீர்மானங்களில் இருந்து தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள் எங்கே வெளியே சத்தம் கேட்டு அன்னை வந்து விடுவாரோ எனப் பயம் வேறு வாயை மூடி அழுதவள் அழுதவாறு தூங்கியும் போனாள்.
” மலர் சாப்பிடலாம் வா என அன்னை தன்னை உசுப்பவே கண் விழித்தவள தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர தந்தையும், தம்பியும் மதிய உணவைஉண்டு கொண்டிருந்தனர். அவளும் தனக்கான உணவுடன் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள் “தந்தையிடம் ஏதும் பேசுவாரோ எனும் படபடப்பு வேறு ” உணவு உண்டதும் தாயும் மகளும் மேசையை சுத்தப்படுத்தினர்.
” தர்சா ஹாஸ்பிட்டலுக்கு புக் பண்ணிட்டியா?” “ஆமாம்மா ஹாஸ்பிட்டல் போயிட்டு பேர சொன்னா சரி” என்றான் அவன்.
தூங்கி எழுந்ததால் சோர்வாக உணர்ந்தவள் காதில் ஹெட்போனை போட்டுக்கொண்டு வெளியே ஊஞ்சலில் அமர்ந்தாள். இசை அனைத்துமே மருந்து, அவளும் அவ்வைசையிலே லயித்திருக்க, மேகநாதனும் வாணியும் சிறிது நேரத்தில் அவள் இருக்குமிடம் வந்தவர்கள் சற்று தள்ளி இருந்த கற் திட்டிடில் அமர்ந்தனர்.
மலர் என அழைத்த வாணி அவள் காதில் இருந்த ஹெட் போனை அகற்ற பதறி அவள் எழுந்தவள் தாய் தந்தை எதிரில் காண தன்னோடு பேசத்தான் வந்துள்ளனர் எனப் புரிந்தவர் தாயை முறைத்தபடி தந்தையை பார்க்க
அவரு தொண்டையைச் செருமியர் “உங்க அம்மா சொன்னா, இப்பவே கல்யாணம் வேணாம் என்ற, இது தொடர்ச்சியா இருந்தா இந்த சமூகம் தப்பா பேசும்… முதல் கேட்ட கல்யாணத்த பத்தி உன்கிட்ட விருப்பம் கூட கேட்கல, வாழப்போற நீ இப்போ கூட அதே தப்ப நான் திரும்ப செய்ய விரும்பல, “பாடகி சத்திய தேவியம்மா தான் அவங்களோட பேரனுக்கு உன் கேட்டிருக்காங்க” என்றார். அவளோ தந்ததையை அதிர்ச்சியாய் நோக்க, “தரகர்ட ஃபோர்ட்டோ பார்த்து தான் கேட்டிருக்காங்க, என்றார்.” அவளோ சைகையில் ஏதோ சொல்ல,”புரியலமா” என்றார்.
தனது ஃபோனில் ” என்னால பேச முடியாதேபா,அவங்க பெரியவங்க, இதெல்லாம் குறையாத் தானே பார்ப்பாங்க என டைப் செய்து காட்ட” அதில் வேதனையடைந்த இருவரும் ” எல்லாமே சொல்லிடன்மா ,உன் விருப்பம் இல்லாம கதிரப் பேசினன்,நல்ல காலம் அது நடக்காம போயிட்டு என்றவர் உனக்குப் புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்க வரச் சொல்றன் என்றார்.
“யோசிச்சுச் சொல்லுமா” என அவள் தலையைத் தடவியவர்.”ரெடியாகு ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாம்” என்றார்.
அவளும் தலையாட்டி விட்டு வீட்டினுள் நுழைந்து கொள்ள,”வாணியோ ஏங்க பெரிய இடமென்டு சொல்லறீங்க,சீதனம் அப்படி பிரச்சினை வந்தா”, “ஏன் வாணி நெகடிவ்வா பேசுற நல்லதா நினை , அவங்களா தான் கேட்டாங்க ,மலர் சொல்லறானு பார்த்து முடிவெடுப்பம்”.
கனிக்கோ ராம் ,நிதிஸ் இருவரில் யாரென்ற குழப்பம் ஒரு வித படபடப்புடன்,சகானாவிற்கு வாட்ஸ் அப்பில் “ஹேய் புதுப் பொண்ணு எப்படி இருக்க? நிதிஸ் சாருக்கு கேர்ள் ப்ரண்ட் இருக்கா? ஏதும் நியூஸ் கேள்விப்பட்டதா? என மெசேஜ் அனுப்பியவள் சகானா ஆன்லைனில் இல்லாது இருக்கவே, ஹாஸ்பிடல் போக தயாராகி வெளியே வந்தவள் தாய் தந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டாள்.
ஹாஸ்பிடலில் வைத்தியரும் அவளின் தொண்டையையை பரிசோதித்து விட்டு “இப்ப பெயின் ஏதும் இருக்கா?” அவளும் சைகையில் “முதல் இருந்ததுக்கு குறைஞ்சிடுச்சு என்றாள், சைன் லேங்குவேஜ் தெரியுமா அவளும் “ஆமெனத்” தலையாட்ட “குட் பட்” சைன் லாங்குவேஜ் இன் தேவைப்படாது கூடிய சீக்கிரமே பேசுவீங்க என்றவர் மூவருக்கும் விடை கொடுத்தார். மருந்துகளுடன் வீட்டுக்கு வர இருளும் சூழ்ந்து கொண்டது.
இரவுணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றனர்.கனியும் அலைபேசியை பார்க்க,சகானாவிடம் இருந்து சில அழைப்புக்களும் வாய்ஸ் மெசேஜும் வந்திருந்தது. ” சாரிடி ஃபோன் சைலண்ட்ல இருந்ததுல பார்கல” என பதிலனுப்ப மறுபுறம் சகானவிடம் இருந்து பதில் வந்தது. நான் நல்லா இருக்கன்டி உன் ஆளுக்கு லவ் பெயிலியர் ஆம் அதான் சோகமான சாங்ஸ் செலக்ட் பண்றாராம்” நியூஸ் பாக்கலையா???
“நீ….. எப்படி இருக்க…?”
“ஓ அப்படியா …. நான் நல்லா இருக்கன்…”
” கன்வகேஷன் இன்விடேஷன் வந்துட்டா?”
” ஆமா அடுத்த மாதம் தானே” என இருவரும் சிறிது நேரம் வாட்சப்பில் சாட் செய்த பின் குட் நைட் உடன் முடித்துக் கொண்டனர்.
கனிக்கோ மனதெல்லாம் ஏதோ அழுத்துவதைப் போல் வலி ‘லவ் ஃபெயிலியரா? என எண்ணி வருந்தியவள் அப்போ லவ் ஃபெயிலியர்ல இருக்கிறவர் கல்யாணம் பண்ணிப்பாரா? ஒருவேளை அவங்க வீட்ட பேசுறாங்களோ என்னமோ’ என்ன பலவாறு யோசித்தவள் இறுதியாக மோனிகாவிற்கு மெசேஜ் அனுப்பினாள்”ஹாய் மோனி பார்ட்டி எத்தனை மணிக்கு முடிஞ்சது?” “ஹாய் மா பார்ட்டி ஒரு மணி ஆயிடுச்சு நான் பத்து மணி போல வந்துட்டேன் செமையா என்ஜாய் பண்ணாங்க என்றாள் அவள்
“ராம் சார் கூட இருந்த பொண்ணு யாரு ஓ அதுவா தரங்கிணி அவங்க டாக்டர் ராம் சாரும் அவங்களும் லவ்வர்ஸ் ஜோடி பொருத்தம் நல்லா இருக்குல” என்றாள் மோனிகா
அவளின் மெசேஜ் பார்த்த கனிக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை சத்தமாக கத்தனும் போல இருந்தது கத்தினால் காத்துதான் வந்தது அப்போது தான் தன்னிலை உரைத்தது.
தான் நிதிஸுக்கு பொருத்தமில்லை என தாழ்வு மனப்பான்மை கொண்டவள் மறு நிமிடமே, நமக்கு சரியாயிடும் டாக்டரே சொல்லி இருக்காரு தானே என தன்னையே தேற்றிக் கொண்டாள்.