கனவு -15
“இதனால அவங்க கோமாவுக்கு போக கூட வாய்ப்பு அதிகமா இருக்கு கௌதம்”
என்று டாக்டர் சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்தான் கௌதம்.
“டாக்டர் என்ன சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் கேட்கும்போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர் இப்ப என்ன செய்றது”
என்று படபடப்போடு கேட்டான் அவன்.
“நிரந்தரமா கோமாவுக்கு போயிடுவாங்கன்னு சொல்ல முடியாது கௌதம் ஆனா குறுகிய கால கோவமாவுக்கு போக வாய்ப்பு அதிகமா இருக்கு”
“டாக்டர் நீங்க சொல்றது எனக்கு புரியல”
“அதாவது கௌதம் அவங்களுக்கு சீரான தூக்கம் இல்லாம அவங்களோட அதிகமான மன அழுத்தத்துனால உருவாகிறது தான்.
இப்ப தூங்குறவங்க எழும்பிட்டாங்கன்னா சரி சம்டைம் எழும்பாம அப்படியே அவங்க கோமாவுக்கு போகவும் வாய்ப்பு இருக்கு. ஒரு நாள் ரெண்டு நாள் ஒரு வாரம் இப்படி சொல்ல முடியாது.
அவங்களோட மூளை எந்த அளவுக்கு அவங்களோட அந்தக் கனவுல இருந்து வெளிவருதோ அதை பொறுத்துதான் இந்த குறுகிய கால கோமாவில் இருந்து துவாரகா வெளிய வருவாங்க.
சரி ஓகே இதுக்கு ஒரு வழி இருக்கு அவங்களுக்கு திரும்ப அந்த கனவு வராம இருக்கணும் அது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியலை கௌதம்.
ஏன்னா அவங்களோட நினைவு முழுவதுமே அந்த கனவை தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்படி இருக்கும்போது 99 சதவிகிதம் அவங்களுக்கு அந்த கனவு வர அதிகமான வாய்ப்பு இருக்கு.
நீங்க என்ன பண்ணுங்க அவங்கள ரொம்ப நேரம் தூங்க விடாதீங்க அவங்களை எழுப்புங்க அவங்களோட சிந்தனையை வேற ஒரு விஷயத்துல கான்சன்ட்ரேட் பண்ற மாதிரி செய்யுங்க அண்ட் அவங்க எழும்பினதுக்கு அப்புறம் உடனே என்கிட்ட கூட்டிட்டு வாங்க”
என்றார் டாக்டர் அமராந்தி.
அவரிடம் சரி என்றவனுக்கு உள்ளுக்குள் பூகம்பமே வந்தது போல் இருந்தது.
டாக்டர் சொல்வது போல் ஒரு வேலை தன்னுடைய மனைவி கோமாவுக்கு சென்று விட்டாள் தான் என்ன செய்வது. ஏன்? ஏன் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.
ஏன் அந்த கனவு துவாரகாவுக்கு வரணும் அவள் ஏன் இப்படி கஷ்டப்படணும் என்னால அவ நிலைமைய இப்படி பார்க்கவே முடியல இதுக்கெல்லாம் என்ன காரணமா இருக்கும் என்றவன் துவாரகாவை எழுப்பச் சென்றான்.
அதேபோல் சாயரா தன்னுடைய தந்தையுடன் அடுத்த நாளே இங்கு சென்னைக்கு வந்துவிட்டாள்.
அவளுடைய தந்தை அவளுடைய படிப்பை பற்றி கேட்க அவளோ,
“டேட் உங்க பொண்ணு எப்பவுமே டாப் தான் நான் இனி உங்க கூட இருந்தே ஆன்லைன் மூலமா என்னோட படிப்ப கன்டினியூ பண்ண போறேன்.
எனக்கு அங்க இன்னொரு வேலை இருக்கு டேட் அதை பஸ்ட் நான் நல்லபடியா முடிக்கணும் அதுக்கு அப்புறம் தான் எனக்கு மத்ததெல்லாம்”
என்று சொன்னாள்.
“அப்படி என்னம்மா உனக்கு அங்க வேலை”
“அதை உங்களுக்கு இப்ப சொல்ல மாட்டேன் டேட் அது நடக்கும்போது நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க லெட்ஸ் கோ வாங்க நம்ம இப்போ போகலாம்”
என்றவள் தன்னுடைய கையில் உள்ள ஒரு தங்க நாணயத்தை வருடிக் கொண்டிருந்தாள்.
அது 200 ஆண்டுகள் பழமையான நாணயம்.
ஒரு பக்கம் சூரிய கதிர்கள் இருந்தது. இன்னொரு பக்கம் அமையாதேவியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.
அந்த நாணயத்தை தன்னுடைய கையில் வைத்து உருட்டி கொண்டிருந்தாள் சாயரா.
கௌதம் டாக்டர் சொன்னது போல் அவர்களுடைய அறைக்கு வந்தவன் துவாரகாவை எழுப்ப முயற்சித்தான்.
அவளுடைய கண்களை தண்ணீர் வைத்து துடைத்து பார்த்தான்
ஆனால் அவள் அசையவில்லை.
பின்பு அவளுடைய கன்னத்தை லேசாக தட்டி பார்த்தான் அதற்கும் அவள் விழித்தாள் இல்லை.
பின்பு அவளுடைய இரு தோள்களையும் பிடித்து ஆட்டினான்.
“எலும்பு கண்ணை திறந்து பாரு துவாரகா”
என்று எவ்வளவோ முயற்சித்துப் பார்த்து விட்டான்.
ஆனால் அவள் தான் தன்னுடைய கண்களை திறந்த பாடு இல்லை.
டாக்டர் சொன்னது போல் நடந்து விடுமோ என்று கௌதமின் இதயம் வேகவேகமாக துடித்தது.
படபடக்கும் தன்னுடைய மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டவன் அவளை அப்படியே தன்னுடைய கைகளில் தூக்கியவன் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக டாக்டர் அமராந்தியிடம் கொண்டு சென்றான்.
இங்கு சாயரா அந்த நாணயத்தை உருட்ட உருட்ட அங்கு துவாரகாவுகோ அவளுடைய நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தன.
****
200 ஆண்டுகளுக்கு முன்பு இளவாய் நாட்டின் மன்னன் கௌதமாதித்தன் அரசனாக அரியணை ஏறினான்.
தன்னுடைய 16 வயதிலேயே மிகப்பெரிய போரை தன்னுடைய வழிகாட்டுதலின் மூலமாக சிறப்பாக நடத்தினான் கௌதமாதித்தன்.
இப்பொழுது அவனுடைய 20 வயது இளவாய் நாட்டின் அரசனாக பதவி ஏற்க்கிறான்.
அரண்மனையின் மையக் கூடத்தில்,
பொன்மணிகள் பதிக்கப்பட்ட சிங்காசனத்தில்
உற்சாகத்தோடு பூரணத் தங்கலாக அமர்ந்திருந்தான் கௌதமாதித்தன்.
அவனது உடல் வலிமைமிகு வடிவில் இருந்தது.
போரில் பழகியதால், தோள்களில் நரம்புகளின் உருண்ட சுழற்சி.
தோள் தொடையிலும், மார்பளவும், அவனது அவயவங்களில்
ஒரு சாதுர்யமும் வீரத்துவம் கலந்து ஒரு கர்வமும் பளிச்சென்று மின்னின.
கடல் நிறத்தைக் கொஞ்சும் தென்னவன் தோல்நிறம்,தோன்றவே அவன் ஒரு மண்ணின் உரிமையாளன் என்பதுபோல் தெரிந்தான் கௌதமாதித்தன்.
அவனுடைய ஆடையோ
மேலே, சிவப்பு மற்றும் தங்கத்தோடு கூடிய பட்டு அங்கவஸ்திரம்,
பின்புறம் மெல்ல வந்து சாய்ந்தது.
கீழ் உடையோ வெண்மையாக பளபளக்கும் பட்டு சிகப்பு,
தங்க முத்திரை பதிக்கப்பட்ட பட்டையோடு கட்டப்பட்டது.
சிரசில் ஒரு பொன் சிரஸ்திரம் (அரசர்கள் அணியும் பட்டமுடி),
அதன் நடுவில் மாணிக்கக்கல், சுற்றிலும் வைரக்கற்கள்,
சூரியனும் சந்திரனும் பிரதிபலித்தன.
மார்பில் எடை மிக்க, வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ்,
அதில் ஒரு சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
கைகளில் பழமையான தங்க காப்புகள் சிலவற்றில் ராச சின்னங்கள்.
முனைவோடும் அமைதியோடும் கூடிய முகம்.
அவனது கண்கள் ஆழமான கருத்துக்கள் கலந்த,
காலத்தையும் காட்சியையும் வெல்லும் போல ஜொலித்தன.
அவனோடு கூடவே, கூடத்தில் ஒரு அழுத்தம், ஒரு அரச நம்பிக்கை,
அவனது பார்வை மட்டுமே, பணிவும் பயமும் ஏற்படுத்தக் கூடியது.
அவன் பேசும் வார்த்தைகள்,
பேச்சாளர் மடங்க, ஒரே வார்த்தையில் தீர்வு தரும் தன்மை கொண்டவை.
கௌதமாதித்தனை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால்,
அவன் சிங்கம் போல சீரானவனாகவும், சந்திரனை போல சாந்தமானவனாகவும் இருந்தான்.
ஆனால் அவனுடைய பார்வையில் யாராலும் எதிர்க்க முடியாத ஒரு ஆணை இருந்தது.
அரசவையில் உள்ள மூத்த மந்திரியான ஒருவர் எழுந்து,
“இன்று, இளவாய் நாட்டு மண்ணில், புதிய இரவின் ஆரம்பம்!
நம் இளவரசர் கௌதமாதித்தன், இப்போது முழுமையான நம் அரசராக, தங்களது சிங்காசனத்தை ஏற்று விட்டார்.
வீரமும், மெய்யுணர்வும், மக்கள் மீதான அன்பும் கொண்ட இளவரசர் இப்பொழுது நம் நாட்டு நலனுக்காக முழுமையாய் தன்னை அர்ப்பணிக்கிறார்”
அவர் அறிக்கை அறிவித்த பிறகு அங்கு அமர்ந்திருந்த மொத்த கூட்டமும் எழுந்து சந்தோஷத்தில் எழுந்து,
“மண்டலத்தின் இளவாய் தேவனுக்கு வாழ்த்துக்கள்
நம் மன்னர் கௌதமாதித்தன் வாழ்க..
பல்லாண்டு வாழ்க”
மத்தளங்கள் முழங்க
நாதஸ்வர சத்தம்
மலர் தூவல்கள் மழைபோல் விழுந்தன.
கௌதமாதித்தன் சிங்காசனத்தில் ராஜா தோரணையோடு அமர்ந்தான்.
அவனது தோளில் புதிய இரும்பு பட்டை, நடுவில் இளவாய் நாட்டின் கொடி முத்திரை.
முகத்தில் தன்னம்பிக்கை.
பார்வையில் ஒரு கர்வம் முழுமையாக ஒரு நாட்டை ஆளும் மன்னனாக காட்சி அளித்தான் கௌதமாதித்தன்.
அரண்மனையின் வாயலில் மீன் பிடிக்கும் தொழிலாளிகள் ஒரு பத்து நபர்கள் அரசரை பார்க்க வேண்டும் என்று அரச காவலாளியிடம் அனுமதி கேட்டார்கள்.
அவரோ தற்பொழுது அரசரை காண முடியாதென்று மறுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த தொழிலாளிகளோ எப்படியாவது அரசரை பார்க்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டிருந்தனர்.
கூச்சல் சத்தம் அதிகமாக கேட்க தன்னுடைய பார்வையை வாயிலின் பக்கம் செலுத்திய மன்னன் கௌதமாதித்தனோ அங்கு சிறு சலசலப்பு நடந்து கொண்டிருக்க,
அவர்களை உள்ளே வருமாறு அழைத்தான்.
“தாங்கள் யார் எதற்காக வாயில் காவலாளியிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள்”
என்று மன்னன் வினவினான்.
அதற்கு அவர்களோ,
“மன்னா நாங்கள் மீன்படி தொழில் செய்கின்றவர்கள் கடலில் சென்று மீன்களை பிடித்துக் கொண்டு வந்து கரையில் வைத்துவிட்டு திரும்பும் பொழுது நாங்கள் கொண்டு வந்த மீன்கள் எதுவும் அங்கு இருக்க வில்லை அனைத்தும் காணாமல் போய்விடுகிறது மன்னா கடந்த சில நாட்களாக இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது.
எங்களுடைய பிழைப்பு முற்றிலுமாக பாதித்துவிட்டது மன்னா தாங்கள் தான் இதற்கு ஏதேனும் வழி கூற வேண்டும்”
என்றார்கள் அவர்கள்.
“ஆகட்டும் தங்களுடைய பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கின்றேன்”
என்றவன் தன் அருகில் இருந்த அமைச்சரை அழைத்து அவரிடம் வினவினான்.
“என்னவாக இருக்கும் அமைச்சரே அந்த கள்வன் யார் என்று கூடிய விரைவில் கண்டறிகிறேன் இதை நானே செய்கிறேன்”
என்றான் மன்னன்.
அதற்கு அமைச்சரோ,
“மன்னா தாங்கள் எதற்காக இந்த சிறு விஷயத்திற்கு.
நம் பணியாட்களை அனுப்பி வைப்போம்”
என்ற அமைச்சரை தடுத்த மன்னனோ,
“வேண்டாம் அமைச்சரே அந்தக் கள்வன் யார் என்று நானே கண்டுபிடிக்கிறேன் கண்டுபிடித்து அவனுக்கு தக்க தண்டனை என்னுடைய கைகளால் கொடுக்கிறேன்”
என்ற மன்னனோ அந்த கள்வனை பிடிக்க ஆயத்தமானான்.
அரசன் பிடியில் சிக்குவானா அந்த மாயக் கள்வன்.