கனவு -18
கௌதமாதித்தன் தான் இன்று பார்த்த அமையாதேவியை நேசிப்பதாக தனது தாய் தந்தையிடம் கூற அதற்கு அவர்களோ அவள் யார் என்று விசாரித்தார்கள்.
“அமையாதேவி அவள் நமது நாட்டில் மண்பானை தொழில் செய்கின்ற பெண்”
“என்ன மண்பானை தொழில் செய்யும் பெண்ணா மகனே நீ என்ன கூறுகின்றாய் என்று தெரிந்து தான் கூறுகின்றாயா.
நீ இந்த நாட்டு அரசன் உனக்கு மனைவியாக வரப்போகும் பெண் ஒரு இளவரசியாக இருக்க வேண்டும் அல்லவா.
ஆனால் நீ கூறுவது ஒரு ஏழைப் பெண் அதுவும் மண் பானை தொழில் செய்யும் பெண் என்று அல்லவா கூறுகின்றாய்”
“தந்தையே எனக்கு எந்த நாட்டு இளவரசியும் வேண்டாம் எனக்கு அமையாதேவி மட்டும் போதும். என்னுடைய மனைவியாகும் உரிமை அவளுக்கு மட்டுமே உள்ளது நான் அவளை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்னுடைய முடிவை தங்களுக்கு கூறிவிட்டேன் தாங்கள் இங்கிருந்து செல்லலாம்”
என்று கூறி விட்டான்.
அவனுடைய இந்த முடிவில் அவனுடைய தாய் தந்தை இருவருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் இப்பொழுது அரசராக இருக்கும் அவனிடம் என்ன கூறுவது அவனுடைய விருப்பத்திற்கு விடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.
அமையாதேவி தன்னுடைய தோழிகளுடன் அங்கு குளத்தில் குளிப்பதற்காக வந்திருந்தாள்.
அனைவரும் அங்கு குளித்துக் கொண்டிருக்க அவளுடன் வந்தவர்களோ குளித்துவிட்டு தங்களுடைய குடிசைக்கு திரும்ப அவளோ,
“இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கலாமே”
என்று கூற மற்றவர்களோ,
“என்ன அமையா பிதற்றுகிறாய் நேரத்தை பார்க்கவில்லையா நீ பொழுது சாய போகிறது இன்னும் இங்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறாய்”
என்று ஒருத்தி கேட்டாள்.
அதற்கு அமையவோ,
“எனக்கு இங்கிருந்து வரவே விருப்பம் இல்லை போலிருக்கிறது இன்னும் சற்று நேரம் இருந்து விட்டு போகலாமே”
என்று கேட்க அவர்களோ,
“இல்லை அமையா நேரம் வெகுவாக கடந்து கொண்டிருக்கிறது விரைவாக எழுந்து வா நாம் இங்கிருந்து செல்லலாம்”
என்று அவளை அழைத்தார்கள்.
ஆனால் அவளோ,
“இல்லை தாங்கள் அனைவரும் இங்கிருந்து செல்ல விரும்பினால் செல்லுங்கள் நான் சற்று நேரம் இருந்து விட்டு தான் வருவேன்”
“உன்னுடைய தாய் தந்தை எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன கூறுவது”
“நான் என்ன சிறு பிள்ளையா எனக்கு குடிசைக்கு வர வழி தெரியும் தாங்கள் கவலை கொள்ளாமல் இங்கிருந்து செல்லுங்கள்”
என்றாள் அமையாதேவி.
“எவ்வாறு கூறினாலும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாயா அமையா தன்னுடைய தாய் தந்தை கேட்டால் இதை அப்படியே கூறி விடுவோம். வாருங்கள் நாம் புறப்படுவோம் இருட்டிய பிறகு இங்கு காட்டு விலங்குகள் வரும் அப்பொழுது தெரியும் இவளுக்கு ஏன் நாம் வரச் சொல்லி வற்புறுத்துகிறோம் என்று. வாருங்கள் நாம் புறப்படுவோம்”
என்று அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
அவளோ,
‘காட்டு விளங்குகளா ஒரு வேலை இவர்கள் சொல்வது போல் இங்கு வருமா இல்லை இல்லை என்னை பயமுறுத்துவதற்காக தான் அவர்கள் அப்படி கூறுகின்றார்கள் போல’
என்று அசட்டையாக நினைத்துக் கொண்டவள் அந்தத் தண்ணீரில் விளையாண்டு கொண்டிருந்தாள்.
அவளுடைய நினைப்பிலேயே இருந்த கௌதமாதித்தனோ அவளைக் காண்பதற்காகவே அங்கு வருகை தந்திருந்தான்.
அமையாதேவி அங்கு குளத்தில் அவளுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருப்பதை இங்கு மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த கௌதமாதித்தனோ தனக்குள் சிரித்துக் கொண்டான் அவளுடைய குடும்பத்தனத்தை நினைத்து.
பின்பு அவளுடைய தோழிகள் அங்கிருந்து சென்ற பிறகு மெதுவாக அங்கு வந்தான் அவன்.
அமையாதேவி திரும்பி நின்று அங்கு குளித்துக் கொண்டிருக்க இவனோ மெதுவாக அந்த தண்ணீரில் இறங்கினான்.
தனக்கு பின்னே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நினைத்த அமையாதேவிக்கு சற்று பயம் கொள்ள ஆரம்பித்தது.
தன்னுடைய தோழிகள் சொன்னது போல் காட்டு விலங்கு தான் ஏதேனும் வந்துவிட்டதோ என்று பயந்து போனவள் திரும்பிப் பார்க்க துணிவில்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அந்த சத்தம் இருக்க இருக்க அவளுக்கு மிக அருகில் கேட்கவே அவளுக்கோ இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கும் போல இருந்தது.
“அச்சச்சோ அவர்கள் கூறும் போதே நானும் அவர்களுடன் சென்றிருக்க வேண்டுமோ பிடிவாதம் பிடித்து இங்கு இருந்தது தவறாக போய்விட்டது போல் இருக்கிறது. இப்பொழுது எந்த மிருகம் வந்தது என்று கூட தெரியவில்லை தான் இங்கிருந்து அசைந்தால் அந்த மிருகம் தன்னை உணவாக உன்றுவிடுமா? இப்பொழுது நான் என்ன செய்வேன் யாரிடம் உதவி கேட்பேன்”
என்று நடுங்கிக் கொண்டிருந்தாள் அமையாதேவி.
அப்பொழுது அவளுக்கு மிக அருகில் வந்த கௌதமாதித்தனோ தண்ணிக்குள்ளையே அவளுடைய வெற்றிடையை வருடியவாறு தன்னுடைய கைகளை அவளுடைய மேனியில் உலாவ விட,
ஏற்கனவே பயத்தில் இருந்த அமையாதேவியோ தன்னுடைய உடலில் ஏதோ ஊர்வதைப் போல இருக்க பாம்பு என்று நினைத்தவள்,
“ஆஆஆஆ பாம்பு”
என்று கத்தியவாறு திரும்பினாள்.
அவள் திரும்பும் சமயம் கௌதமாதித்தனோ அவளுடைய கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தை பதிக்கலாம் என்று நினைத்து தன்னுடைய சிரசை சற்றே கீழே தாழ்த்த திரும்பிய அவளுடைய இதழ்களும் கௌதமாதித்தனின் இதழ்களோடு பொருந்த,
அவளுடைய கழுத்தின் வளைவை ருசியை பார்க்க வந்த அவனுடைய இதழ்களோ இப்பொழுது வரப்பிரசாதமாக கிடைத்த அவளுடைய பிஞ்சு இதழ்களை ருசி பார்க்க ஆரம்பித்தன.
‘ஆஹா அது இதழ்களா அல்ல அமிர்தமா இவ்வாறு இருக்கிறது’
என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன் வலிய கிடைத்த அவளுடைய இதழ்களை முழுவதுமாக தன் வசமாக்கி கொண்டான் கௌதமாதித்தன்.
அவனுடைய கரங்களோ அவளை தன் உடலோடு அந்த பஞ்சு தேகம் அழுந்த பதிகம் அளவுக்கு இறுக்கமாக பிடித்திருந்தன.
திடீரென நடந்த இந்த தாக்குதலை எதிர்பார்க்காத அமையாதேவியோ என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன்னமே அனைத்தும் நடந்து முடிந்திருந்தன.
கௌதமாதித்தனோ அவளை இன்னும் இன்னும் தனக்குள் அழுத்தமாக அவளை அணைக்க இதழின் முத்தத்தினால் மூச்சு முட்டவும் அந்த உடும்பு பிடியின் இறுக்கத்தை தாளாமலும் தொய்ந்து சரிந்தவளை மெதுவாக தன்னுடைய பிடிகளை தளர்த்தியவாறு இதழ்களையும் பிரித்தவாறு அவளை தன்னிடம் இருந்து சற்றே விலக்கினான் கௌதமாதித்தன்.
அதில் தண்ணீரிலிருந்து தரையில் விழுந்த மீன் குஞ்சு போல தவித்தவள் பின்பு மூச்சுக்காற்றை உள்ளெழுத்தவள் உயிர்பெற்றவளாக அவனிடம் இருந்து விலகி தன்னுடைய கண்களை திறந்து பார்க்க,
அங்கு மன்னனை அவள் சற்றும் கூட எதிர்பார்க்கவே இல்லை.
அவளுடைய விழிகள் அதிர்ச்சியை அப்பட்டமாகவே காட்டியது.
“தாங்கள மன்னா தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள்”
என்றாள் அவள்.
“இங்கு பாரு அமையா எனக்கு சுற்றி வளைத்து பேச விருப்பம் இல்லை எனக்கு உன்னை பிடித்திருக்கிறது நேற்று உன்னை பார்த்ததிலிருந்து என்னுடைய மனது எப்பொழுதுமே உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது.
நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்”
என்றான்.
அதைக் கேட்டவளுக்கோ மீண்டும் அதிர்ச்சி.
“மன்னா தங்களை எதிர்த்து பேசுகிறேன் என்று தாங்கள் என்ன வேண்டாம் தாங்கள் இந்த இளவாய் நாட்டின் அரசர் நானோ உங்கள் நாட்டில் ஒரு ஏழைப் பெண் தாங்கள் எவ்வாறு என்னை திருமணம் செய்து கொள்ள முடியும்”
“அதைப்பற்றி நீ பயம் கொள்ளாதே நீ சொன்னது போலவே நான் இந்த இளவாய் நாட்டோட அரசன் என்னுடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன் என்றால் எடுத்தது தான் எனக்கு நீ வேண்டும் என்னுடைய மனைவியாக உனக்கு சம்மதமா”
என்று அவளிடம் அவளுடைய சம்மதத்தை பற்றி வினவினான் கௌதமாதித்தன்.
அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டு நிற்க,
“இங்கு பாரு அமையா நீ எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்னை உனக்கு பிடிக்கவில்லையா உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை என்னிடம் சொல்லிவிடு உன்னை கட்டாயப்படுத்தி நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் உனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நம் இருவருக்கும் திருமணம் நடக்கும்”
என்றான் அவன்.
அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது அரசனாக.
ஆனால் இப்பொழுது அவள் உடலில் அத்துமீறிய அவனுடைய தொடுகைகளும் அவள் இதழில் பதித்த ஒரு ஆண்மகனின் முதல் முத்தமும் அவளை வெகுவாகவே அவன் பால் ஈர்த்திருந்தன.
அவனுடை அந்த நெருக்கத்தில் அவனுக்கே உரித்தான ஆண்மையின் வாசம் அவளுடைய நாசியை தீண்டியது.
அப்படி இருக்கையில் அவள் வேண்டாம் என்று சொல்வாளா.
தன்னுடைய சம்மதத்தை அவனுடைய காலில் விழுந்து தெரிவித்தாள் பாவை அவள்.
தன்னுடைய காலில் விழுந்த அந்த மங்கையை தூக்கியவன் தன் விரிந்த மார்போடு அணைத்துக் கொண்டான் கௌதமாதித்தன்.