அன்னத்துடன் பேசிவிட்டு போனை சார்ஜில் போட்டு விட்டு வெளியே வந்தான் கிருத்திஷ். ஜனகனும் சமைத்து முடித்ததும், ரோஹித் சாப்பாட்டை எல்லாம் எடுத்து வந்து மேசையில் வைத்தான். மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
அப்போது ரோஹித், “ப்ரோ எப்படி இந்தியாவில் இருந்த டைம்ல லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு?”கேட்டான்.
ரோஹித்தை பார்த்த கிருத்திஷ், “என்ன சொல்றது அன்னத்துக்கு கால்ல சுளுக்குனு அவளைத் தூக்கிட்டு போனேன். அது ஒரு தப்புன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.” என்றான். “மனிதாபிமானத்தில் கூட அங்கு உதவி செய்ய முடியாது போல இருக்கு..” என்று மேலும் கிருத்திஷ் சொல்ல, அதைக் கேட்ட ஜனகன், “அப்போ நீ அன்னத்தை இன்னும் ஏத்துக்கலையா?” என்றார்.
“டேட் மம்மி உங்க கிட்ட சொல்லலையா? இல்லை என்கிட்ட போட்டு வாங்க பாக்குறீங்களா? எதுவா இருந்தாலும் பரவால்ல நான் பதில் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கவே இல்லை. ஆனா அப்படி ஒன்று நடந்துடுச்சு. சோ அதுக்கு ஏத்த மாதிரி நம்ம லைஃபை நம்ம மாத்திக்கிறது தானே சரி. அதுவும் அன்னம் ரொம்ப வெகுளியான ஒரு பொண்ணு. கள்ளம் கபடமே இல்லாம இருக்கிறவ.”
“இல்ல அண்ணா எனக்கு இராவ பார்த்து பேசணும் போல இருந்துச்சு.. அதான் நாங்க லவ் பண்றது ரெண்டு வீட்டுக்குமே தெரியும்ல்ல. அதுதான் நைட் டின்னர் போயிட்டு வந்தோம்.” என்று சொன்னான். அதுக்கு கிருத்திஷ், “இங்க பாரு நீ போனது தப்புனு நான் சொல்லல. பட் நைட் டைம் அவ சேஃபா போகணும். இனிமே அந்த மாதிரி நைட் டைம்ல ஹோட்டல் போகாத. யாரும் தப்பா பேசுற மாதிரி இருக்க கூடாதுல்ல.” என்றான்.
ரோகித்தும், “ஓகே அண்ணா இனிமேல் இந்த மாதிரி நடக்காது.” என்றான்.
“சரி உனக்கு நாளைக்கு என்ன டைம் பிளைட்?”
“மார்னிங் நைன்கு அண்ணா.”
“ஓகே அப்போ நான் உன்னை ஏர்போர்ட்டில விட்டுடுறன்.” என்றார் ஜனகன்.
“டாட் நானே அவனை விட்டுடுறன். ரோகித் நீ இரா ஏர்ப்போட் வரணும்னா வரச்சொல்லு நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் அவளை வீட்டில ட்ராப் பண்ணிட்டு அதுக்கப்புறம் ஆபீஸ்க்கு போறேன்.”
“ஆமா ரோஹித் நீ கிருத்திஷ் கூட போ.” என்றார்.
“ஓகே டாடி.” என்ற ரோஹித் அறைக்கு வந்ததுமே ஃபோனை எடுத்து இராவுக்கு அழைத்தான்.
அவனது அழைப்பிற்காகவே காத்திருந்தது போல இரா ஒரே ரிங்கில் போனை எடுத்தாள்.
“ஏய் டார்லிங் என்ன ஒரே ரிங்ல எடுத்துட்ட?”
“அதுவா சீனியர் போனை கையில வச்சுட்டு உங்களுக்கு கால் பண்ணலாமா இல்லையான்னு யோசிச்சிட்டு இருந்தனா நீங்க கால் பண்ணினதும் உடனே எடுத்துட்டேன்.”
“அது சரி இங்க பாரு எங்க அண்ணன் வந்துட்டான். வந்ததுமே எங்க அப்பா நேத்து நைட் டின்னர் போனதை எங்க அண்ணன்ட்ட மாட்டி விட்டுட்டாரு.”
“என்ன சொல்றீங்க அப்போ உங்க அண்ணன் திட்டினாங்களா?”
“திட்டல ஆனா நைட் டைம்ல இப்படி ஹோட்டலுக்கு போறது எங்களுக்கு சேஃபா இருக்கும்னு தெரியாது இல்ல அதனாலதான் அப்படி சொன்னாங்க.”
“ஓகே ஓகே அது பரவால்ல. ஆமா சீனியர் நீங்க நாளைக்கு மார்னிங் தானே போறீங்க?”
“ஆமா டா மார்னிங் தான் போறேன்.. ப்ரோ வந்து டிராப் பண்றேன்னு சொன்னாங்க.”
“அச்சச்சோ அப்படினா என்னால வர முடியாதா?”
“நீ வரதுக்கு என்ன? வா என் அண்ணனை இன்ரோ பண்ணி வைக்கிறேன்.”
“இல்ல வேணாம் .உங்க அண்ணனை காலேஜ் ஃபங்ஷன்லயே பார்த்திருக்கேன். எனக்கு அவரைப் பார்த்தாலே பயம்.”
“ஓகே சரி நான் வரேன்.” இப்படியாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அறைக்குள் வந்த கிருத்திஷ் தனது வேலையை ஆரம்பித்தான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணி நாளைய ப்ரொஜெக்ட்டுக்கான மீட்டிங்கிற்கு தேவையான விடயங்களை எடுத்து பிரசன்டேஷனை செய்து கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனுக்கு அவனது டி-ஷர்ட் இழுத்துப் பிடித்திருப்பது போன்று பிரம்மை ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தான் அங்கே யாரும் இல்லை. தலையில் அடித்துக் கொண்டான். ‘இந்த அன்னம் மூணு நாள்தான் என்கூட இருந்தா, ஆனா ஏதோ பலநாட்களாக கூடவே இருக்கிற மாதிரி இருக்கு. கிருத்திஷ் அவ உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறா பாரு.’ என்றது அவனின் மனசாட்சி.
வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏனோ அவனுக்கு அன்னத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. போனை எடுத்து தாய் காலையில் அனுப்பி இருந்த போட்டோவை பார்த்தான். அதில் அவனின் ரெட் கலர் டி-ஷர்ட்டை இறுக்கி அணைத்தபடி படுத்திருக்கும் அன்னத்தின் முகம் நன்றாக தெரிந்தது.
‘பாரேன் பக்கத்துல இருக்கும்போது பயந்திட்டு இருந்தா. தூரம் வந்ததும் தேட ஆரம்பிச்சிட்டா. அது எப்படி கல்யாணம் பண்ணினதும் இந்த பொண்ணுங்க இப்படி மாறிடுவாங்களோ.’
“ஏன் பொண்ணு மட்டுமா மாறிடுச்சு, நீ மாறல?” என்றது அவனின் மனசாட்சி.
“நானா? நான் அப்படியே தான் இருக்கேன்.”
“அப்படியா நீ முன்னாடி எப்படி இருந்த இப்ப எப்படி இருக்கிறன் நல்லாவே தெரியுது. நீ என்கிட்ட எதையும் மறைக்க முடியாது.”
“சரி சரி நீ ஓவரா பேசாம போயிரு.” என்று மனசாட்சியை ஓரங்கட்டி விட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
…………………………………………………
அடுத்த நாள் காலையில் அன்னம் பார்வதிக்கு முன்பாகவே எழுந்து இருந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஏனோ இன்று அவள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள். சமையலுக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது பார்வதி எழுந்து வந்தார். “நீ எதுக்கு அன்னம் அத்தனை வேலையையும் பார்த்த? நான் வந்ததும் பண்ணியிருப்பேனே.”
“அதற்கு என்ன அத்தை. நீங்கதானே நேற்று வேலை பார்த்தீங்க. இன்னைக்கு நான் பாக்குறேன். நீ கொஞ்ச நேரம் தூங்கட்டும்னுதான் நான் உங்களை எழுப்பல.” என்றாள்.
“ஏன் அன்னம் அண்ணா எங்க? இந்த நேரத்துக்கு எந்திரிச்சிப்பாரே.” என்றார்.
“ஆமா அத்தை அப்பாவுக்கும் அசதியா இருக்கும் போல அதுதான் தூங்குறாரு. மெல்ல எந்திரிச்சு வரட்டும்.” என்றவள் தனது வேலையில் மூழ்கிவிட்டாள்.
சிறிது நேரத்தில் வேலுச்சாமி எழுந்தவர் பார்வதியிடம் வந்து “பார்வதி மாப்ள என்னையும் அங்க வர சொல்றாரு. எனக்கு அங்க வர்றதுக்கு இஷ்டம் இல்ல.”
“அது எப்படி அண்ணேன். அவன் கிட்ட வரேன்னு சொல்லிட்டீங்க தானே. நீங்க வரலைனா விட்ருவான்னு நினைச்சீங்களா? நீங்க இங்க தனியா இருந்து என்ன செய்ய போறீங்க? அங்க வந்தா எங்க கூட இருக்கலாம்ல.”
“இல்ல பார்வதி அப்போ ஏதோ வரேன்னு சொல்லிட்டேன் மாப்பிள்ளை கேட்டதும். ஆனா இப்ப வர்றதுக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு.”
“ஏன் அப்பா இப்படி சொல்றீங்க? உங்களை இங்க தனியா விட்டுட்டு போய்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியுமா? என் கூடவே வந்துருங்க அப்பா.” என்றாள் அன்னம்.
ஊர்ல இருக்கிற யாராவது எதுவும் பேசுறாங்களா?” என்று கேட்டார்.
வேலுச்சாமியும், “ஆமா பார்வதி. இரவு நான் தோட்டத்துக்கு போயிட்டு வரும்போது பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். மாப்பிள்ளை வந்ததும் அவரை என் பொண்ணு மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டானு தப்பா பேசுறாங்க.”
“யாரு அண்ணேன் அப்படி பேசறது? இந்த ஊரு தானே சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சது. அப்புறம் எப்படி இப்படி பேசுது?”
“அதான் உலகம் பார்வதி. இந்த நரம்பில்லாத நாக்கால என்ன வேணா பேசுவாங்க. எப்பிடி வேணா பேசுவாங்க.” என்றார்.
அன்னதுக்கு இதை கேட்டதும் அழுகை வந்துவிட்டது.
“ஏன் அப்பா இப்படி பேசுறாங்க?” என்று அவள் கேட்கும் போதே, பதட்டம் அடைந்து மூச்சு எடுக்க சிரமப்பட்டாள். அப்படியே அவளுக்கு வலிப்பு வர ஆரம்பித்தது.
“ஐயோ அன்னம்.” என்றவாறு பார்வதி வந்து அவளை பிடித்தார். வேலுச்சாமி வேகமாக சென்று சாவிக்கொத்தை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தார். சிறிது நேரத்தில் அப்படியே மயங்கி விட்டாள் அன்னம்.
பார்வதியும் வேலுச்சாமியும் அவளை இருபக்கம் பிடித்துக் கொண்டு வந்து கட்டிலில் அவளைப் படுக்க வைத்தனர்.
“அண்ணே அன்னத்துக்கு பதட்டப்பட இப்படி நடக்கும்னு தெரியும்தானே. ஏன் அன்னம் இருக்கும்போது சொன்னீங்க?”
“நான் அன்னத்தை கவனிக்கலம்மா. என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. இப்படி தப்பா பேசறதை நினைக்கும் போது வருத்தமா இருக்கு. நானும் அங்க வந்துட்டேனா இன்னும் என்ன என்னை தப்பா பேசுவார்களே?” என்ற வேலுச்சாமியைப் பார்த்தவர்,
“அண்ணே அதுக்காக என்ன பண்றது? பேசுறவன் பேசிட்டுதான் இருப்பான். அதை இங்க இருந்து கேக்க போறீங்களா? அங்க போயிட்டா இவங்க பேசுற எதுவும் கேக்காது. இவங்களுக்காக நம்ம வாழனும்னு இல்ல அண்ணா. நமக்காக நம்ம வாழனும். நீங்க அங்க வர்றது தான் உங்க பொண்ணுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் அதான் சந்தோஷம். அதனால அவங்க பேசுறது பத்தி எதுவும் நீங்க எடுத்துக்காதீங்க அண்ணா. என்னோட ரெண்டாவது பையன் வந்ததும் உங்களோட பாஸ்போர்ட்டுக்கான வேலையை ஆரம்பிக்கலாம் அண்ணா.” என்றார்.
“சரிண்ணே வாங்க நான் உங்களுக்கு காபி தரேன்.” என்றார்.
சமையல் அறைக்கு வந்தவர், அன்னம் செய்து வைத்திருந்த இட்லிக்கு சட்னி அரைக்க ஆரம்பித்தார் பார்வதி. அதே நேரம் அவரின் போன் அடித்தது. எடுத்துப் பார்க்க கிருத்திஷ் தான் அழைத்திருந்தான்.