“ஏம்பல உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதால்ல..,இன்னைக்கு தான்ல்ல உனக்கு கல்யாணம்… ஆனா நீ என்னடான்னா வயக்காட்டுக்கு வந்திருக்கிற” என தனக்கு எதிரில் வந்து கொண்டிற்கும் விதுரணை பார்த்து கொண்டே, தன்னுடைய தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் ராமு…
“எனக்கு கல்யாணம் தான்…, அதுவும் இன்னைக்கு தான்…அதுக்குன்னு நான் இந்த வயக்காட்டுல தண்ணி பாச்சாம என்னால இருக்க முடியுமா..? எனக்கு கல்யாணம் அப்படிங்கறதுக்காக இந்த விவசாய நிலம் எல்லாமே அக்செப்ட் பண்ணிக்குமா..?”என்று ராமை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தவன்..,அந்த வாய்க்காவரப்பை தன் கையில் உள்ள மம்பட்டியால் வெட்டிக் கொண்டிருந்தான்..
“என்ன மாப்ள கல்யாணம் ஆனாலே அதிகமா எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க.., ஆனா நீ என்னடா இவ்வளவு வருத்தப்பட்டுட்டு இருக்க” என்று ராமு கேட்டுக் கொண்டே விதுரன் பக்கத்தில் போக…
“அதுக்குன்னு முகத்துல எல்லா சந்தோஷத்தையும் காமிச்சுக்கிட்டு.., எப்ப பார்த்தாலும் ஈனு இளிச்சுட்டு இருக்க சொல்றியா ராமு” என்று சற்று கடுப்புடன் கேட்டான்…
சரி சரி கோவிச்சுக்காதம்மல… எனக்கு எல்லாம் தெரியும்….உன்னோட கல்யாண நின்னுச்சுன்னும், அதே நேரத்துல உடனே ஏதோ உன்னோட உறவுக்கார பொண்ணாமுல அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு தெரியும்,என்னால தான்ம்பள வர முடியல .., ஆத்தாவுக்கு உடம்பு சரியில்ல இப்ப கூட ஆத்தாவை பாத்துட்டு தான் இந்த பக்கம் வாரேன்.”. என சற்று வருத்தப்பட்டு கொண்டு ராம் பேச …
“இப்ப நீ வரலன்னு யாருமுல்ல அழுதா? … அம்மாவுக்கு எப்படி இருக்கு உடம்பு..?ஆஸ்பத்திரி கூட்டு போனியா இல்லையா .?., இல்ல மறந்து மாத்திரை வாங்கி இங்கேயே இருக்க வச்சுட்டியே அம்மாவ” என்று நிமிர்ந்து ராமை ஒரு பார்வை கோபத்துடனே பார்த்தவன் கேட்டுக்கொண்டே மறுபடியும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து கொண்டிருக்க….
“டவுனு ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிட்டு போயிட்டு ஆத்தாவை வீட்டுல விட்டு வாரேன் நானு.., இந்த நேரத்துல உனக்கு ஆத்தாவோட புராணம் எதுக்கு..??? நீ வீட்டுக்கு போ வெரசா.., இது எல்லாமே நான் பார்த்துக்கிறேன்… வாய்க்கா வரப்பு தானே தண்ணி பாய்ச்சணும்.. நான் பாட்சிக்கிறேன் … நீ போ புது மாப்பிள்ளை .. இங்கனக்குள்ள நிக்காத” என அவனை பார்த்துக்கொண்டே ராமு அவன் கைகளில் இருக்கும் மம்பட்டியை வாங்குவதற்கு அவன் கிட்ட நெருங்க…
“ எனக்கு எப்ப என்ன பண்ணனும் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ சொல்லணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது” என்று ராமை பார்த்து முறைத்துக் கொண்டு அவன் கையில் இருக்கும் மம்பட்டியை இறுக்கமாக பிடித்து நிமிர்ந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து அந்தப் பக்கம் உள்ள வாய்க்காவரப்பிள் உள்ள மண்ணை சரி செய்து கொண்டிருந்தான்…
“ யாம்ல நீ இப்படி சொன்னா கொஞ்சம் கூட சரிப்பட்டு வரமாட்டோமில்ல… அதனால நான் வீட்ல இருக்க ஆத்தா கிட்டையே சொல்லுறேன், நீ எப்படி அப்புறம் கேக்காம இருக்குன்னு நானும் பாக்குறேன்” என்று வீம்பாக ராம் போக அவனின் முதுகில் பளார் என்று அடித்த விதுரன் “அடங்கவே மாட்டியா நீ..? என்னை எங்க ஆத்தா கிட்ட போட்டுக் கொடுக்கிறதுயே பொழப்ப வச்சுக்கிட்டு இருக்கியா” என்று கேட்டுக் கொண்டே அவன் தோள்பட்டையில் கையை போட்டுக்கொண்டு ராம் நடக்க பின்னாலே விதுரனும் நடக்க ஆரம்பித்தான்…
“பின்ன என்னால இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு, நீ என்னடான்னா வாய்க்காக்கு வந்துட்ட.., பாவம்ல்ல அந்த பொண்ணு.., உன்ன நம்பி வந்திருக்குல்ல….இந்த நேரத்துல நீ கூட இல்லாட்டி எப்படி இருக்கும்..? உனக்கு எப்படி இது புதுசா கல்யாணமோ… எதிர்பார்க்காத, அந்த பொண்ணும் அதே மாதிரி தான்….. அந்த பொண்ணுக்கும்…. நீயும் எதிர்பார்க்காத ஒரு ஆள் தான்….இன்னும் நெனச்சு பாரு,அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு இன்னைக்கு தெரிஞ்சு இருக்காது…திடீர்னு கல்யாணம்னு சொல்லிட்டா அந்த பொண்ணோட நிலைமை என்னன்னு நினைச்சு பாரு…. அப்படி இருக்கும்போது நம்ம தான் ஆழ்ந்து அமர்ந்து அந்த பொண்ணு பக்கத்துல போயிட்டு கொஞ்சம் பேசி சமாதானம் பண்ணனும்…. ஆனா உன்னோட கோபத்துல நீ இங்க வந்துட்ட அந்த பொண்ணு தனியா தானே இருக்கும் அந்த பொண்ணு கிட்ட முன்ன பின்ன பேசி பார்த்தா தானே எப்படின்னு புரியும்” என்று பொறுமையாக தன் நண்பனுக்கு எடுத்துரைக்க….
ராமு பேசவும் அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் விதுரன் அமைதியாக இருக்க….அவனின் அமைதியை பார்த்துக் கொண்டே இருந்த ராமு தலையில் அடித்துக் கொண்டு…
“இதோ பாருல்லா விதூர நான் சொல்லுறது சொல்லிப்புட்டேன்,அப்புறம் அதுக்கு மேல உன்னோட இஷ்டம்…. எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு கிட்ட நீ பேசி பார்த்தா தான் புரியும்,அப்படிங்கறது என்னோட அபிப்பிராயம்…. போ இது எல்லாமே நான் பாத்துக்குறேன்…. உனக்கு என்ன தண்ணி பாய்ச்சி முடிச்ச உடனே அதை அடைச்சு இது பண்ணனும்… அவ்வளவு தானே நான் பாத்துட்டு இருக்கேன்…. வீட்டுக்கு போ இப்ப மட்டும் நீ போகலாட்டி” என்று அவன் ஏதோ பேச வர அவனின் வாயை மூடிய விதுரன்
“அடங்கவே மாட்டியா நான் போறேன்…உன் வாய மூடு” என்று கடுப்பாக சொல்லியவன் தன் கையையும் காலையும் கழுவிட்டு முகத்தில் சிறிதாக தண்ணீர் தெளித்து கழுவியவன் ராமு கழுத்தில் இருக்கும் துண்டை உருவி அவன் முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, அந்த துண்டை ராமின் முகத்திலே திரும்பியும் விசிறி எடுத்து விட்டு, வீட்டுக்கு நான் போறேன் என்று ராமை பார்த்து சொல்லியவன் முன்னாள் நடக்க ஆரம்பிக்க…. இங்கு போகும் விதுரனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் ராம்…
ராம் மட்டும் எடுத்துப் பேசவில்லை…இங்கு தண்ணி பாய்ச்சும் வேலை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லவில்லை என்றால் அவன் இங்கேயே தான் உலா வந்து கொண்டிருப்பான்…. வீட்டிற்கு கண்டிப்பாக போகமாட்டான்… ஏனென்றால் ஆரம்பத்தில் அந்த பெண்ணை எவ்வளவு விரும்பி இருக்கிறான் என்று நன்றாகவே தெரியும் ராமுக்கு…. இப்பொழுது அந்த பெண் வேண்டாம் என்று சொல்லவும் திடீரென ஒரு பெண் வரவும் அவனால் அந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க…. அங்க இருந்து தப்பிப்பாதற்காகவே தண்ணீர் பாய்ச்சணும் என்று இந்த பக்கம் வந்து இருக்க.., இப்பொழுது மறுபடியும் அந்த பெண்ணின் சூழ்நிலையை விதுரனுக்கு எடுத்துரைக்க.., அதை புரிந்து கொண்டவனும் வீட்டிற்க்கே போகிறேன் என்று சொல்லி விட்டு விதுரன் போக, அவனைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் ராம்.
இங்கு வீட்டில் விஹிதா…
அவனின் ரூமிற்கு போனவள் கதவை லைட்டாக சாத்தி விட்டு,அந்த ரூமை முழுவதுமாக சுத்தி பார்த்தால்..
மிகவும் அழகாக நேர்த்தியாக இருந்தது… எந்த ஒரு பொருளும் கீழே கிடக்காமல் அதனுடைய இடத்தில் இருக்க.., கட்டிலில் பெட்ஷீட் தலையணை எல்லாம் நாளாக மடிக்கப்பட்டு நீட்டாக இருக்க… அதனை எல்லாம் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தால் விகிதா…
அவனின் பெட்டின் ஓரத்தில் மறுபக்கம் டேபிள் இருக்க அந்த டேபிளின் மேல் டெடிபியர்கள் நிறைந்து போயிருந்தது எப்படியும் பத்து டெடி பியர்களாவது இருக்கும் அதை பார்த்தவரின் கண்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் அழகாக விரிந்தது….
“ஹைய் எனக்கு புடிச்ச டெடிபியர் எல்லாமே இங்கதான் இருக்குது, வாவ் சூப்பரா இருக்குது….பாக்க மூஞ்சிய சிஞ்சர் மாறி வச்சுருக்கான்…ஆனா இவ்வளவு டெடி பியர் வாங்கி வச்சிருக்கான்…. வாவ் உண்மையாவே இந்த டெடி எவ்வளவு அழகா க்யூட்டா இருக்குது….எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…. இந்த டெடி பியர் எல்லாமே” என்று அதை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கையில் வைத்து அதை ஹக் பண்ணியும், அதற்கு முத்தம் கொடுத்தும் அதை ரசித்துக்கொண்டவள் மாறி மாறி அவர்களின் போனில் அவளையும் அந்த டெடி பியரையும் போட்டோ எடுத்துக் கொண்டவள்…. அப்படியே மொத்தமாக வைத்துக் கொண்டு மறுபடியும் அந்த ரூமினை சுற்றிப் பார்த்தால்…
“ ஒரு பையனோட ரூம் இவ்வளவு நீட்டா இருக்குதா..!!!! ஒருவேளை நான் இந்த ரூம்ல இருந்தேன்ன, கண்டிப்பா இந்த மாதிரி அழகா நீட்ட இருக்காது” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்தவள்…அந்த தலையணையை எடுத்துக்கொண்டு மடியில் வைத்தவள்…மறுபடியும் அந்த தலையணையை வேறு எங்கோ வைத்து விட்டு, டேபில் மீது இருக்கும் அந்த நியூஸ்பேப்பாரை எடுத்து பிரித்து படித்தவள்.., அதை அப்படியே வைத்து விட்டு கட்டிலின் மீது உட்கார்ந்தவள்.., அப்படியே அதனின் மேலே குறுக்காக படுத்து கொண்டு தன்னுடைய போனை பார்த்து கொண்டு அப்படியே தூங்கி விட்டாள்….
இங்கு சமையலறையில்….,
ஒரு பெண் புதிதாக வந்து சமையலறையில் மதியத்திற்கான சமையல் செய்து கொண்டிருக்க.., வெளியில் காதம்பரி பாட்டியோ வெற்றிலையை வைத்து இடுக்கி கொண்டு காலை நீட்டி உட்கார்ந்து மரகதத்திடம் எதோ கதை பேசிக் கொண்டிருக்க…. அதே நேரம் அந்த இடத்திற்கு ராஜ்குமார் வந்தார்…
“என்னப்பா ராசா நீ போய் செத்த நேரம் உறங்க வேண்டி தானே..”என்று ராஜசேகர் இடம் சொல்ல…
“இல்ல சின்னம்மா அடுத்து என்ன பண்ணனும்.., ஏது பண்ணனும்னு ஒன்னும் தெரியாது…. அதனால தான் கேட்கலாம்னு வந்தேன்…அப்புறம் பகல் நேரத்துல அந்த அளவுக்கு தூங்குற பழக்கம் இல்ல, வேலைக்கு போனா வேலை சரியா இருக்கும்” என்று ராஜசேகர் சொல்லிக்கொண்டு காதம்பரி பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்தார்…
“ஆமா நீ சொல்லுறது சரிதான்..,அடுத்து என்னன்னு பாக்கணும்.. நாலு மணிக்கு நேரம் நல்லா இருக்குது….அதனால இங்க இருந்து நாலு மணிக்கு கிளம்புனா சரியா இருக்கும்,அப்புறம் அங்க போய் என்னென்ன பண்ணனும்னு நான் மருமகள்ட சொல்லிக்கிறேன்” என்று காதம்பரி பாட்டி சொல்ல…
சரிங்க சின்னம்மா என்று சொல்லிய ராஜ்குமாரின் போன் சிணுங்க…
“ போன் வருவதை பார்த்தவர் இருங்க சின்னம்மா போன் பேசிட்டு வந்துறேன்” என்று சொல்லிவிட்டு அந்த போனை எடுத்துக்கொண்டு சற்று தனியாக வந்து பேச ஆரம்பித்தார்….
“அதை பார்த்த காதம்பரி பாட்டியோ…, நான் பார்க்கும் போது ரொம்ப சின்ன பையன்னா இருந்தான்..,இப்போ என்னடானா இவ்வளவு பெரிய பையனா ஆயிட்டான்…,அதுவும் பொறுப்பாவும் ஆயிட்டான்…” என்று மரகதத்திடம் போன் பேசி கொண்டிருக்கும் ராஜ்குமாரை பார்த்து சொல்லி கொண்டு இருக்க…,அதே நேரம் அந்த வீட்டிற்குள் வந்தான் விதுரன்.
வீட்டிற்குள் விதுரன் வருவதை பார்த்த காதம்பரி பாட்டியோ, “ என்ன பேராண்டி வரதுக்கு நேரம் ஆகும்னு நினைச்சா சீக்கிரமா வந்துட்ட அவ்வளவு சீக்கிரத்தில் முடிஞ்சிடுச்சா வேலை…!!!” என்று தன்னுடைய பேரன் விதுரனிடம் கேட்க…
“ இல்ல பாட்டிமா அங்க ராமு இருந்தான் …,அதனால அவனே எல்லாம் பாத்துட்டுகிறான். நீ வீட்டுக்கு போ அப்படின்னு சொல்லிட்டான் ஆத்தா….அதனாலதான் நானும் சரின்னு வந்துட்டேன்…. எவ்வளவு சொல்லியும் கேட்கல.., வேண்டாம்னு சொன்னாலும் இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் அவன் கேட்கிற நிலைமை இல்லை…அதனால எக்கேடும் கெட்டுப் போன்னு நான் பாட்டுக்கு வந்துட்டேன் ஆத்தா…” என்று சொல்லிக்கொண்டு இருந்த விதுரன் அதேநேரம் ராஜசேகர் வரவும் அவரை பார்த்து சிறு தலையசைப்பு செய்து விட்டு…,சரி ஆத்தா நான் ரூம்ல போயிட்டு செத்த நேரம் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு அவனின் ரூமை நோக்கி போக….
அவன் போனவுடன் விட்ட கதையை மரகதத்திடம் பேச ஆரம்பிக்க,இங்கு ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு போன விதுரன் ரூமை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்க….. அதுவும் ரூமில் அவள் படுத்து இருக்கும் கோலம் இன்னும் அதிர்ச்சியாக இருக்க… வேகமாக மறுபடியும் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மூச்சு வாங்கிக் கொண்டு நின்றான்…
மான் விழியாள் வருவாள்…