உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

5
(14)

ஏண்டி முகத்தை இப்படி வெச்சிருக்க?

ஏன் நான் லவ் பண்ணிருக்க கூடாதா?

ச்சே அப்படி எல்லாம் இல்லைங்க..

வேற எப்படி மா?

நான் ஒன்னும் பொறமை படலங்க .. சும்மா தான் முகம் அப்படி இருக்கு என்றாள்..

அவனோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான்..

இவ என்ன எத சொன்னாலும் நம்பிடுவா போல.. இன்னும் கொஞ்ச நேரம் இத மெயின்டெய்ன் பண்ணு டா அரவிந்த் என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்…

அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களா?

ஆமா டி நல்ல அழகு.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்….

அப்படியா!. 

ஆமா டி.. அந்த கேரக்டர் தான் எனக்கு ரொம்ப பிடிச்சுது..

யாருங்க லவ் சொன்னது..

நான் தான் டி சொன்னேன்..

அவங்க ஓகே சொன்னாங்களா?

ம்ம் பேசியே கரெக்ட் பண்ணிட்டேன் தெரியுமா! என்றான்..

அவன் சொல்ல சொல்ல அவளுக்கு முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது..

உணர்வுகளை முகத்தில் காட்டாமல் இருக்க கஷ்டப்பட்டாள்…

போதும் அப்புறம் சொல்லுங்க உங்க ஸ்டோரிய… இப்ப கிளம்பலாம் என்றாள்..

அதெல்லாம் முடியாது ஒரு ஃப்ளோவா போகுது டி.. நான் சொல்றேன் கேளு என்று அவளை அமர வைத்தான்…

ஏண்டி டென்ஷனா இருக்க?

இல்லைங்க நார்மலா தான் இருக்கேன் என்று பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தாள்…

இப்ப கன்டின்யூ பண்றேன் என்றான்..

வேறு வழியின்றி சரி என்று தலையாட்டினாள்..

அவனுக்கு சிரிப்பு தான் இருந்தாலும் அவளை செல்லமாக வெறுப்பேற்ற அவனுக்கு பிடித்து தான் இருந்தது..

அப்புறம்  கொஞ்ச நாள் அப்புறம் அவள ஒரு மேரேஜ் ஃபங்ஷன்ல பார்த்தேன் என்றான்..

அத்தை மாமாவுக்கு உங்க லவ் தெரியுமா என்றாள்?

ம்ம் தெரியும் டி..

நான் லவ் பண்றேன்னு தெரியாது ஆனா அந்த பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னேன் ஓகே சொல்லிட்டாங்க தெரியுமா என்றான்..

உங்க வீட்ல ஒன்னும் திட்டலயா?

என் ஃப்ரெண்ட் யாராவது லவ் ன்னு சொன்னாலே என் அம்மா பயங்கரமா திட்டுவாங்க …

அத்தை மாமா ரொம்ப நல்லவங்க தான் என்றாள்..

உனக்கு ஒன்னு தெரியுமா? அண்ணா அண்ணி கூட லவ் மேரேஜ் தான் என்றான்..

அப்படியா? என்றாள் விழி விரித்து..

அதனால தான் ரொம்ப 

ஆண்டர்ஸ்டேட்டிங்கா இருக்காங்களா?

ம்ம் ஆமா!… அந்த ஸ்டோரி இன்னொரு நாள் சொல்றேன் என்றான்..

ஓகே.. ஆனா உங்க வீட்ல தான் சம்மதம் சொல்லிட்டாங்களே அப்புறம் பிரேக் அப் ஆகிடுச்சா என்று கேட்டாள்..

இரு டி நான் ஃபுல்லா சொல்லிக்கறேன்.. அப்புறம் உன் டவுட் கேளு என்றான்..

ரொம்ப காவிய காதலோ..

இவ்வளோ ரசிச்சு சொல்றீங்க என்று கேட்டாள்?

ஆமா டி.. ரொம்ப இல்லை ரொம்ப ரொம்ப காவிய காதல் என்றான்…

அதான் உங்க முகத்திலயே தெரியுதே என்றாள் உதட்டை சுழித்துகொண்டு…

என்ன டி டென்ஷனா?

அதெல்லாம் இல்லைங்க.. வேண்டாம் ன்னு சொன்னா கேக்கவா போறிங்க என்றாள்‌.

நீ கேட்டு தான் ஆகனும் ..

இப்பவே சொல்லிட்டா ஃப்யூச்சர்ல எந்த பிரச்சினையும் வராது தான என்றான்..

சரி சரி சொல்லுங்க என்றாள்…

அப்போ நான் வொர்க் ஜாயின் பண்ண புதுசு..

புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் போது நான் இங்க வருவேன்..

அப்போ ஒரு நாள் க்ரூப்பா காலேஜ் பொண்ணுங்க வந்திருந்தாங்க..

அப்போ அந்த கூட்டத்தில ஒரு சலசலப்பு..

யாரோ ஒருத்தன் அதுல ஒரு பொண்ணு கிட்ட வம்பு இழுத்தான்..

நான் போய் பாக்குறதுக்குள்ள ;

அதுல ஒரு பொண்ணு செக்யூரிட்டி கிட்ட சொல்லி அவன விரட்டி விட்டாங்க…

அந்த பொண்ண பார்த்து கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு..

நானும் ஃபாலோ பண்ணிட்டு போனேன்.. 

போற வழியில அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சமாதானம் செய்தாங்க..

அப்ப தான் அந்த பொண்ணு முகத்தை தெளிவா பார்த்தேன்…

அவ பேரு கூட ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினாங்க…

அப்போ யாருக்கும் தெரியாம ஃபோட்டோ கூட எடுத்தேன் தெரியுமா என்று கண் அடித்தான்…

அப்படியா! எனக்கு காட்டுங்க என்றாள் ஆர்வத்துடன்…

ம்ம் வீட்டுக்கு போய் காட்டறேன்…

அங்க பேர் என்ன என்று கேட்டாள் ?

அது வந்து அவ பேர் என்று இழுத்தவன்..

உனக்கு வருத்தமா இல்லையா டி? 

அதெல்லாம் இல்லைங்க.. நீங்க பேர் சொல்லுங்க என்றாள்…

அவ பேர் வந்து பிரகதி என்றான் புன்னகையோடு …

அவளோ , ஓஹோ பிரகதி யா நைஸ் நேம் என்றாள்….

அவளுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை…

நீங்க ஏதோ சொன்னிங்க. எனக்கு தப்பா கேட்டுச்சு என்றாள்..

அடியே திருத் திருன்னு முழிக்காத டி..

உனக்கு கரெக்டா தான் கேட்டுச்சு என்றான்…

நீங்க என்ன பத்தி தான் சொன்னீங்களா? என்று வினவினாள்…

ஆமா டி நான் உன்ன தான் சொல்றேன் என்றான்..

அவளால் நம்பவே முடியவில்லை…

மாமு நிஜமாவே நீங்க என்ன தான் சொல்றீங்களா? என்று கேட்டவளுக்கு கண்ணீர் அடக்க முடியாமல் வந்தது…

எனக்கு உன் ‌நியாபகம் அடிக்கடி வரும்..

அப்போ எல்லாம் நான் இங்க வருவேன் தெரியுமா?

உன் ஃபோட்டோ எடுத்து அடிக்கடி பார்ப்பேன்…

அப்போ நிஜமாவே எனக்கு தெரியாது டி நான் உன்ன கல்யாணம் செய்வேன் என்று கூறினான்…

அவளுக்கு ஆச்சரியமா இல்லை சந்தோஷமா என்று பிரித்து அறிய முடியா வகையில் கண்ணீர்…

அவன் தோளில் சாய்ந்து அழுதாள்..‌

அப்புஹம் உன்னை ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த மேரேஜ்ல பார்த்தேன் தெரியுமா?

அப்போ எனக்கு ஒரு மாதிரி பயம்…

சப்போஸ் உனக்கு மேரேஜ் ஆகி இருந்ததா என்ன செய்யறது ன்னு ஒரு தவிப்பு‌…

 

புடவை எல்லாம் கட்டி இருந்தா? எனக்கு கொஞ்சம் பயம்..

அப்புறம் எப்படியோ உனக்கு கல்யாணம் ஆகலன்னு தெரிஞ்சு தான் எனக்கு ரிலாக்ஸா இருந்துச்சு…

இதுக்கு மேல உன்ன மிஸ் பண்ண கூடாதுன்னு, அப்பவே அம்மா கிட்ட சொல்லிட்டேன்..

உன்னை‌ காமிச்சு இந்த பொண்ணு தான் வேணும்னு சொல்லி அடம் பிடிச்சு‌‌ …

அப்போவே உங்க. ரிலேட்டிவ் மூலமா பேசி ; ஜாதகம் வாங்கி இப்போ என் பொண்டாட்டியா இருக்க என்றான்…

எப்படி இருக்கு என்னோட லவ் ஸ்டோரி என்றான்?

அவளுக்கு சந்தோஷத்தில் பேசவே முடியவில்லை…

 பிரகதி ஏதாவது பேசு டி என்றான்…

இல்லை என்று தலையாட்டினாள்…

வீட்டுக்கு போலாமா என்று அழுதபடியே கேட்க?

ஆர் யூ ஓகே ரதி?

யெஸ், என்றாள்…

அவளுக்கு தண்ணீர் குடிக்க வைத்து; அவள் கண்களை துடைத்து விட்டவன், வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று அழைத்துச் சென்றான்..

வீட்டுக்கு போகும் வழியில் கூட எதுவும் பேசவில்லை…

அவள் போக்கிற்கே விட்டான்…

அவளுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது…

கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோசத்தில் கூட அழுகை வருவது இயல்பு தானே…

அவளை இந்த அளவுக்கு நேசிக்கும் ஒருவனா? என்று அவளால் ஆச்சரிய பட மட்டுமே முடிந்தது…

இவ்ளோ நாள் நான் காத்திருந்ததுக்கான அர்த்தம் இது தானோ என்று மனதிற்குள் பல விதமாக யோசனை‌வேறு… 

காரில் பாடல் ஒலித்தது..

“உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல 

                ஒன்னும் இல்ல ”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்..

அவன் அவளை பார்த்து கண் அடித்தான்…

அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து போய் விட்டாள்…

ஏண்டி கண் அடிச்சதுக்கே இப்படி வெட்கம் வருதே ; அப்புறம் என்று அவள் காதில் ஏதோ ரகசியம் சொல்ல வீடு வரும் வரை குனிந்த தலை நிமிரவே இல்லை பிரகதி..

அடுத்த எபில என்ன நடக்கும் ன்னு எனக்கே ஆர்வமா இருக்கு..

நம்ம பிரகதி மேடம் எந்த ட்விஸ்டும் வைக்காம இருந்தாவே போதும் 🤣🤣

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!