அவளின் அறைக்கு சென்றவன் அந்த அறையைப் பார்த்தவுடன் முகம் சுழித்தான் .. அவள் சொன்னது போல தான் … அந்த அறை அவ்வளவு குப்பையாக இருக்கும் …,அதுவும் அவசர அவசரமாக கிளம்பி இருப்பாள் போலும் …, வரும் பொழுது அவளின் கட்டில் நிறைய துணிகள் இருக்க .., பக்கத்தில் ஜுவல்ஸ் ஐட்டங்கள் அப்படியே இருக்க…, இன்னும் கொஞ்சம் பக்கத்தில் காஸ்மெட்டிக் ஐடம்ஸ் இருக்க …,அவனுக்கோ எங்கு அங்க படுப்பது என்பது போல் ஆனது..,இதில் காலை எங்கே எடுத்து வைப்பது என்றது போல் ஆனது… எனன்றால் கீழையும் அத்துண துணிகள் பரப்பி வைத்திருக்க .., பார்த்த உடனே அவனுக்கு தலை சுற்றாத குறைதான்… இதில் இன்னும் சொல்லப்போனால் அந்த ரூமில் அலங்கார பொருள் போல் அவளின் உள்ளாடைகள் வேறு காட்டிலில் போட்டு இருந்தாள் …
“ என்ன இது சொன்ன மாதிரியே அவளோட ருமை இவ்வளவு கேவலமா வச்சிருக்க…, இவளுக்கு ரூம் எப்படி மெயின்டன் பண்ணனும் அப்படின்னு கூட தெரியலையே ..!! இந்த அளவுக்கு கேவலமா இருக்கு” என்று அவன் மனதினுள் நினைத்துக் கொண்டு அவளை வசை பாடி கொண்டிருக்க …,
அதே நேரம் மூச்சு வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக அந்த ரூமின் கதவை திறந்து கொண்டு வந்து நின்றால் விகிதா…
அவளை ஏற்று இறக்கமாக அவன் பார்த்துக்கொண்டு அவள் வைத்திருக்கும் அந்த ரூமை கேவலமாக பார்க்க…
அவன் பார்வை போகும் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் கண்டு கொள்ளாமல் … அவனையே பார்த்து கொண்டு நின்றவள் .., அடுத்த நிமிடமே அவனின் அருகில் வந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டவள்… அமைதியாக மூச்சு வாங்கிக் கொண்டிருக்க…
தன் அனுமதி இல்லாமல் தன்னை கட்டிக்கொண்டது.., தன் இஷ்டம் இல்லாமல் அவள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது .. தன்னுடைய ஆண்மையில் அவளின் கை பட்டது .., தன்னுடைய சட்டடையுள் முகம் துடைத்தது … எல்லாம் அவனின் மனக்கண் முன் வந்து போக .., அவள் இந்த மாதிரி செய்வது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை …,என்னதான் அவளின் மேல் ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும் ஏனோ அவள் தன்னை மயக்குகிறாள்..,ஒரு ஆம்பலையின் வீக்னஸ் என புரிந்து கொண்டாளா என்று நினைத்துக் கொண்டவனோ தன்னிடமிருந்து அவளை பிரிந்து கன்னத்தில் பளார் என்று மாற்றி மாற்றி அறைந்து கொண்டே “ என்னடி இவ்வளவு அலஞ்சி போய்.., காஞ்சி போய் கிடக்கிற” என்று அவளிடம் கேட்க…
அவன் பேசியதை அர்த்தம் புரியாமல் அவனைப் பார்க்க…
“ என்ன உனக்கு அரிப்பு எடுக்குதா ..!!! அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட செஞ்சுகிட்டு இருக்கியா … உன்னோட பசியை தீர்க்க தான் உங்க அம்மா அப்பா அவசர அவசரமா கிடைச்சுட்டா மாப்பிள ஒருத்தன் இளிச்சவாய கிடச்சிட்டான் அப்படின்னு என்னைய கல்யாணம் பண்ணியா .., சொல்லு அப்போ எல்லாம் ஒட்டுமொத்தமா பிளான் பண்ணி தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க … ஆக்சுவலி நியாயப்படி பார்த்த போனா போகுதுன்னு நீ கல்யாணம் பண்ணல… உன்னோட காம பசியை தீர்க்க தானே நீ என்னை கல்யாணம் பண்ணி இருக்க…, சரிதானே இப்போது என்ன உனக்கு நான் வேணும்..? அவ்வளவு தானே இந்த நேரத்தில் உனக்கு எவனாவது வேணும் … அதுக்கு நானா இருந்துட்டா பெட்டர்ன்னு நீ நினைக்கிற… என் உடம்பை வைத்து தானே நான் அப்படி இப்படின்னு செய்யறதுக்கு சரியா இருப்பேன்.. அப்படின்னு நீ நெனச்சுக்கிட்டு இருக்குற ..? நீ எல்லாம் எதுக்குடி இங்க இருக்க..? ரெட் லைட் ஏரியாக்கு போக வேண்டியது தானே …, ஓகோ குடும்பமா இருந்தா போலீஸ்காரங்க பிடிக்க மாட்டாங்க… அப்படின்னு இந்த இடத்துல நீ இருக்கிறாயா? என்ன உனக்கு உங்க அப்பா மாமா வேலை பார்க்கிறானா..?” என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவனின் சட்டையை கழற்ற…
போதும் ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க தயவு செய்து பேசாதீங்க என்று சொல்லியவள் தன்னுடைய இரு காதையும் மூடிக்கொண்டு அப்படியே அந்த இடத்தில் உட்கார்ந்து ஓவென்று அழுக ஆரம்பித்தாள்…
அதே நேரம் அம்மாடி அழதம்மா என்று சொல்லிக் கொண்டே ராஜகுமார் வந்து கொண்டிருக்க… ராஜகுமார் வருவதைப் பார்த்து விதுரனும் வேகமாக அவன் சட்டை பட்டனை மாட்டி அமைதியாக கோபத்தில் நின்று கொண்டிருக்க…
மாப்பிள தம்பி உள்ள வரலாமா..? என்று தயக்கத்தோடு ராஜ்குமார் கேட்க…
என்னவென்று புரியாமல் சற்று தயங்கிக் கொண்டு வாங்க மாமா என்று அவன் சற்று குரலில் அமைதியை காட்டிக் கொண்டு அவரிடம் சொல்ல…
என்னதான் தன்னுடைய மகள் அறையாக இருந்தாலும் இப்பொழுது தன்னுடைய மருமகனும் அந்த அறையில் தான் இருக்கிறான் .., அவர்கள் இருவரும் இருக்கும் பொழுது தான் அனுமதி கேட்டு தான் வர வேண்டும்… என்று ராஜ்குமார் அனுமதி கேட்டுக்கொண்டு ரூமினுள் வந்த மறுநிமிடமே வேகமாக விகிதாவை பக்கத்தில் சென்று அவளுக்கு ஈடாக உட்கார்ந்தவர் அம்மடியே அழாதம்மா… எப்படி நடந்துச்சுனு தெரியலம்மா …, அழாதம்மா இது இல்லாட்டி உனக்கு இன்னொன்னு கிடைக்கப் போகுது… அதுக்கு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க..? நீ அழுதா அப்பாவோட மனசு தாங்காதும்மா அழாதமா..? என்று அவர் அவளை சமாதானப்படுத்த…
குனிந்த தலையை நிமிராமலே அவள் அவள் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு மேலும் அழுக ஆரம்பித்தாள் …
ஆனால் அவள் கண்ணீர் மட்டும் வற்றாமல் வந்து கொண்டே இருக்க.., அவள் அப்பாவை ஏறெடுத்து பார்க்காமல் தலையை குனிந்து கொண்டே அப்பாவின் தோழில் சாய்ந்து கொண்டே பெண்ணவள் ஏங்கி ஏங்கி அழுக…
அவள் அப்பாவும் விதுரனை ஒரு கேள்வி கூட கேட்காமல் அவளை சமாதானம் செய்வதில் முனைப்பாக இருக்க ஒன்றுமே புரியாமல் மெதுவாக என்னாச்சு மாமா..? என்று தயங்கிக் கொண்டே கேட்டான்…
அது ஒன்னும் இல்ல மாப்ள… அது வந்து எப்படி ..? என்று அவர் சற்று தயங்கிக் கொண்டே இருக்க…
பரவால்ல மாமா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க..? என்று அவன் சொன்னவுடன்
‘ அது வந்து வீட்ல அவ பப்பின்னு ஒரு நாய் வளர்த்தாள் … அது இப்போ இறந்து கிடக்கு.., எப்படி இறந்துச்சுன்னு தெரியல… ஆனா இறந்து இருக்குது .. வீட்டுக்கு வந்த உடனே சவுண்ட் எதுவுமே கேட்கல அப்படின்னு அவன தேடுனதுல தான் அவன் இறந்து கிடந்தான் .. அதை நினைச்சு தான் பாப்பா அந்த இடத்தை விட்டு பயந்து வந்துருச்சு ரூமுக்குள்ள” என்று ராஜ்குமார் சொல்ல..
அதைக் கேட்டவனின் உள்ளமும் அதிர்ந்து போய் நின்றது… அப்பொழுது அவள் இதற்காக தான் தன்னை அணைத்துக் கொண்டாலோ .., அந்த பயத்தை போக்குவதற்காக தான் தன் நெஞ்சினையை தேடினால்.., அந்த பாதுகாப்பை உணர்ந்தாலும்… அவளை தான் காயப்படுத்தி இருக்கோமே” என்று அவன் மனது என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்க …
ஆனா எப்படி மாமா திடீர்னு …?வீட்டுக்குள்ள தானே இருந்திருக்க… என்று அவன் தயங்கிக் கொண்டே கேட்க…
‘ அது வந்து ரெண்டு நாளா பப்பிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு தான் வந்தோம் இருந்தாலும் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துருவோம் அப்படின்னு மருந்து எல்லாமே கொடுத்து அதை தூங்க வச்சதுக்கு அப்புறம் தான் நாங்க வந்தோம்… ஆனா இப்ப வந்து பார்த்தா அதோட உசுர விட்டு இருக்குது … எங்களுக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல” என்று அவரும் கண்கலங்கிய வாரே … தான் சொன்னார்… என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்கினம் … மனித உயிர் இல்லை என்றாலும் அதுவும் தன்னுடைய குழந்தை போல் தான் ராஜ்குமார் வளர்த்துக் கொண்டிருந்தார்…அதிலும் விகிதா சொல்லவே வேண்டாம்… மொத்த பாசத்தையும் கொட்டி அந்த பப்பி என்ற நாய்க்குட்டியை வளர்த்திருக்க… விகிதா சொன்னால்… அது எந்த எல்லைக்கும் போய் சென்றுவிட்டு மறுபடியும் விகிதா விடமே வந்துவிடும்…,அந்த அளவிற்கு விகிதாவும் அந்த பப்பி குட்டியும் நெருங்கிய உறவாய் இருக்க…, இப்பொழுது பப்பி குட்டி இறந்தவுடன் அந்த இறப்பை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்தாள் …,அதிர்ச்சியை விட அவன் பேசிய வார்த்தைகள் அப்படியே நேரடியாக இதயத்தில் பல ஆயிரம் ஊசியைக் கொண்டு குத்தியது போல் அவளுக்கு வலிக்க… அதை நினைத்து மேலும் மேலும் அழுது கொண்டிருந்தாள்…
“ அவள் எவ்வளவு உயிர் வைத்திருந்தால்.. இந்த அளவிற்கு அது இறந்தவுடன் அதிர்ச்சியாகி தன்னைத் தேடி வந்திருப்பாள்…தன்னிடம் அடைக்கலம் தானே தேடினால் … அவளை போய் அந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் சொல்லிவிட்டேனே…!! அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றவன் நினைத்துக் கொண்டு மெதுவாக அவளின் பக்கத்தில் போக…
அதை உணர்ந்தவளோ தன் தந்தையின் நெஞ்சினில் இன்னும் அழுத்தமாக சாய்ந்து கொண்டு.., உடம்பை குறுக்கி அழுது கொண்டிருந்தவள் …, திடீரென்று தன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு… அவள் அப்பாவை கூட பார்க்காமல் அப்பா நான் நார்மல் ஆயிட்டேன்..,அவனை எப்படி அடக்கம் பண்ணனும் வீட்டுக்கு பின்னாடியே” என்று தெளிவான குரலில் அவள் தந்தையிடம் பேசுவதற்கும் முயற்சி செய்து கொண்டு அதில் வெற்றியும் அடைந்தால்…
இல்லமா நம்ம வேற எங்கேயாவது அவனை கொண்டு போய்… என்று ராஜ்குமார் சற்று தயங்கிக் கொண்டே கேட்க…
அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… நம்ம வீட்டுக்கு பின்னாடியே அவனை புதைச்சிடலாம் .., அப்பதான் சாமி கும்பிடுவதற்கு வசதியா இருக்கும்.. அவனை வேற இடத்தில் பொதச்சா கண்டிப்பா என்னோட மனசு தேடிட்டே இருக்கும்.., இதனால் என் கூடவே என் பக்கத்துல எனக்கு பாதுகாப்பா இருப்பான்…. அப்படிங்குற ஒரு எண்ணம்…எனக்கு வேணும்ப்பா… ப்ளீஸ்ப்பா என்று தன் தந்தையிடம் கெஞ்ச…
அவள் அப்படி சொன்னவுடன் மறுநிமிடமே சரி என்று சொல்ல அங்கு ராகினியோ கலங்கி போய் தான் இருந்தாள் … ஏனென்றால் “ இன்று தான் தன் மகளுக்கு கல்யாணம் . ஆனால் அதே நேரத்தில் இப்படி தன் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் நாய் இறந்தவுடன் இது அபசகுனமா.., இல்லை ஏதாவது ஒரு ஆபத்தை இந்த நாய் வாங்கிக் கொண்டதா ..?” என்று ஒன்றுமே புரியாமல் ராகினியோ கலங்கிப் போய் இருந்தார்….
அதேநேரம் அந்தப் பப்பிக்குட்டி… புதைப்பதற்கு தேவையான அளவு குழியை ராஜ்குமாரிடம் கேட்டு.., எங்கு என்னவென்று கேட்டுக்கொண்டே ….அவன் அந்த இடத்தில் குழியை தோண்டி இருக்க…, அதில் பப்பிக்குட்டியை தூக்கி வந்து போட்டு.., பால் ,மஞ்சள் எல்லாம் அவனின் குழியிலே அவன் கூடவே போட்டு நன்றாக மண்ணை மொத்தி அதில் விளக்கு ஏற்றி அதில் மேல் மாலை இட்டு முறைப்படியாக செய்திருந்தார்கள் .. இதற்க்கு எல்லாம் கூடவே இருந்து விதுரன்பார்த்து கொண்டான் …
விஹிதா இதில் பிரம்மை பிடித்தது போல் அப்படியே அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தால் .. அவள் எந்த வார்த்தையும் யாரிடமும் பேசவில்லை.., அதே நேரத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீரும் வரவில்லை…, அந்த அளவிற்கு அவளின் முகத்தை யாரிடமும் காட்டவில்லை.., ஏனென்றால் அவன் மாறி மாறி அடுத்த தடம் அப்படியே பதிந்து போயிருக்க.., கண்களோ விறுவிறுவென்று எரிந்து கொண்டிருக்க…, இந்த நேரத்தில் கண்டிப்பாக தன்னுடைய தந்தை தன்னை பார்த்தால் எப்படியும் தெரிந்து விடும்… ஏதாவது என்று நினைத்துக் கொண்டவளோ , அந்த அளவிற்கு யாருக்கும் சந்தேகம் வராத வராத அளவிற்கு தன்னுடைய ஷாலை வைத்துக் கொண்டு மறைத்தவள் . அந்த பப்பி குட்டியை புதைத்திருக்கும் அந்த இடத்தை பார்த்து தொட்டு கும்பிட்டு.., அந்த புதைத்த மண்ணில் மேல் தலையை வைத்துக் கொண்டு..,எழுந்தவள் யாரையும் பார்க்காமல் நேராக அறைக்கு சென்றாள் …
மான்விழியாள் வருவாள் …