நயமொடு காதல் : 23

4.8
(13)

காதல் : 23

தனது கிராமத்தை விட்டு இதுவரை எங்கேயும் செல்லாதே அன்னமும் வேலுச்சாமியும் அந்த ஏர்போர்ட்டை சுத்திச் சுத்திப் பார்த்தார்கள். ஏர்போர்ட்டில் விமானம் வந்திரங்குவதுமாக இருப்பதை பார்த்த வண்ணம் பார்வதியின் கையப் பிடித்துக் கொண்டு, “அத்தை பாத்தீங்களா எவ்வளவு பெரிய பிளைட்.” என்றவள், “அப்பா.. அப்பா நம்ம இதெல்லாம் அங்க ஊர்ல பார்க்கும்போது எவ்வளவு சின்னதா வானத்துல போகும். இப்படி இவ்ளோ பெருசா இருக்குல்ல.” என்று சிறு குழந்தை போல பேசும் அவளைப் பார்த்து புன்னகைத்த ரோஹித், “அம்மா எனக்கு இப்பதான் ஒரு விஷயம் தெரியுதும்மா. அண்ணா ஏன் அண்ணிய கொஞ்ச நாள்ல விரும்பி இருக்கிறாங்கனு. இந்த காலத்துலயும் அண்ணி இப்படி இருக்காங்களா?”

“அவ குழந்தை மாதிரி சின்னு, நம்மள போல மெசின் வாழ்க்கை வாழறவ இல்ல. அவங்க இயற்கையோடு வாழ்றவங்க இதெல்லாம் பார்த்தா அவளுக்கு ஆச்சரியமாதான் இருக்கும் அதுல தப்பே இல்ல சின்னு.”

அந்த நேரத்தில் இவர்களின் விமானத்திற்கான அழைப்பு வர, “அண்ணா வாங்க, அன்னம் நீயும் வா.” என்று அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, ரோஹித் பார்வதியிடம், “அம்மா நீங்க அண்ணியை பாத்துக்கோங்க. நான் மாமாவ பாத்துக்கறேன்.”

“அத்தை நான் ஜன்னல் பக்கம் உட்காந்துக்கவா?” என்று அன்னம் கேட்க, அவளின் ஆர்வத்தைப் பார்த்த பார்வதி, “அதுக்கென்ன அன்னம், தாராளமா உக்காந்துக்கோ.” என்றார். 

இங்கே வேலுச்சாமியிடம் ரோஹித்தே, “மாமா நீங்க ஜன்னல் ஓரமா இருங்க.” என்றான். 

விமானம் புறப்படத் தயாரானதும் அன்னத்திற்கு ஒரு மாதிரி தலைசுற்றி வந்தது. “அத்தை எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு.” என்றாள். 

“அது ஒன்னும் இல்லடா. கொஞ்ச நேரத்துல சரியாயிடும். வேணும்னா இந்த மாத்திரையை போட்டுக்க.” என்று ஒரு மாத்திரையை அவளிடம் கொடுத்தார். 

வேலுச்சாமிக்கும் ரோஹித் அதே மாத்திரையைக் கொடுத்தான். சிறிது நேரத்தில், இருவருக்கும் அந்த விமானம் பறக்கும் தன்மை பிடிபட்டுவிட்டது. தலை சுற்றும் காணாமல் போக, இருவரும் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் காடுகள், மலைகள், கடல்கள் என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வந்தார்கள். 

அன்னம் அதையெல்லாம் ரசித்துக்கொண்டு தன்னவனைக் காணும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். விமானம் தரையிறங்க போவதற்கான அறிவிப்பு வந்ததும் பழையபடி சீட் பெல்ட்டை அன்னத்திற்கு மாட்டிவிட்டார் பார்வதி. 

“என்ன அத்தை?” என்று அன்னம் கேட்க, “ஃப்ளைட் இப்ப கீழே இறங்க போகுதுமா. அப்புறம் நம்மளும் ப்ளைட்ல இருந்து இறங்கலாம்.” என்றார். 

“அப்படிங்களா அத்தை? அப்போ கொஞ்ச நேரத்துல வீட்டிற்கு போயிடலாம்ல அத்தை.”

“ஆமாடா.” என்றார் சிரித்துக் கொண்டு. 

கண்களை இறுக மூடிக்கொண்டாள் அன்னம். பார்வதிக்கு அவளது நிலமை புரிந்தது. தனது கையால் அவளது கையைத் தட்டி சமாதானப்படுத்தினார். 

விமானம் மெல்ல மெல்ல தரை இறங்கியது. அதில் இருந்து வெளியே வந்தவர்கள் விமான நிலையத்தை அடைந்தார்கள். பின் அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வெளியே அன்னத்தையும் வேலுச்சாமியையும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். 

அன்னம் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு வந்தாள். அதைப் பார்த்து பார்வதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். 

“என்ன அன்னம் அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துட்டு வர்ற?”

“இல்லத்த மாமா வந்துருப்பாரானு நினைச்சிப் பார்த்தேன். ஆமா மாமா வரலையா?” என்று பார்த்தேன். 

அதற்குப் பார்வதியும், “இல்லமா அவனுக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்குன்னு சொன்னான். அதனால நம்மளையே வீட்டுக்குப் போகச் சொல்லிட்டான்.”

“சரிங்க அத்தை.” என்று தனது ஏமாற்றத்தை முகத்தில் மறைத்துக் கொண்டாள் அன்னம். ஆனால் அவளது உணர்வுகள் மறைக்கப்படாத முகம் என்ற படியால் அவளின் ஏமாற்றம் பார்வதிக்கு நன்றாக விளங்கியது. 

“சரி அன்னம் கவலைப்படாதே. வா போகலாம்.” என்றார். 

நால்வரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாசலிலே நின்று வரவேற்றார் ஜனகன். 

“பாரு நல்லா இருக்கியா?”

“ஆமா நல்லா இருக்கேன்ங்க.” என்றார் பார்வதி.  

“வாங்க மச்சான்.. வாம்மா அன்னம்.” என்று இருவரையும் அழைத்தார். “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.” என்று 

அன்னம் ஜனகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஜனகனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. “ரொம்ப வருஷத்துக்கு சந்தோஷமா. தீர்க்க சுமங்கலியாக இருமா.” என்று வாழ்த்தினார். 

“என்னங்க கண்ணா ஏர்போர்ட்டுக்கும் வரல. வேலைன்னு சொன்னான். அன்னம் முதல் முறையா நம்ம வீட்டுக்கு வர்றா. இப்போ கிருத்திஷ் இல்லாம எப்படி அன்னத்தை மட்டும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறது?” என்று பார்வதி கேட்டார். 

“அதுக்கு என்ன பண்றது பார்வதி? அவன் ஏர்ப்போர்ட் வர்றதாதான் இருந்தான். ஆனால் ரொம்ப முக்கியமான மீட்டிங் உள்ள மாட்டிக்கிட்டான்.”

“அப்படியா? ஒரு தடவை கால் பண்ணி பாருங்க.” என்று பார்வதி சொல்ல, 

“சரி.” என்று போன எடுத்தார் ஜனகன். 

சிறிது நேரத்தில் அழைப்பை எடுத்த கிருத்திஷ், “சொல்லுங்க டாட்..”

“கிருத்திஷ், அம்மா அன்னம், மச்சான் எல்லாரும் வந்துட்டாங்க. நீ வரியா? உங்க ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து ஆர்த்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போகணும்னு உங்க அம்மா ஆசைப்படுறா.” என்றார். 

“சரிப்பா ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.” என்று ஃபோனை வைத்தான். 

“என்ன சொன்னாங்க? பத்து நிமிஷத்துல வர்றானாம்.” என்றார். 

“சரி, அப்போ அண்ணா நீங்க உள்ள வாங்க.” என்று அழைத்துச் சென்றார். அன்னத்திடம், “அன்னம் கிருத்திஷ் வரும் வரைக்கும் வெளியிலேயே இரும்மா. தப்பா எடுத்துக்காத.” என்றார். 

“அத்தை பரவால்ல. முதன் முதல்லா வர்றேன்ல மாமா கூடவே சேர்ந்து வரேன் அத்தை.” என்றாள்.

அன்னத்தை அழைத்துச் சென்று தோட்டத்தில் இருந்த சிமெண்டினால் செய்யப்பட்ட சேரில் உட்கார வைத்தார் பார்வதி. 

“அத்தை நீங்க வீட்டுக்கு போங்க அத்தை. நான் மாமா வந்தும் உள்ளே வரேன்.”

“இல்லம்மா பரவாயில்ல அன்னம். நான் உன்கூட இருக்கிறன்.” என்றார். பார்வதி அங்கே இருந்து அன்னத்துடன் பேசிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் அங்கே பிஎம் டபிள்யூ அந்த வீட்டின் போர்ட்டிக்கோ முன்னால் வந்து நின்றது. காரைப் பார்த்ததும், “அன்னம் இங்க பாரு கிருத்திஷ் வந்துட்டான். வா அங்க போகலாம்.” என்று அன்னத்தை அழைத்துக் கொண்டு கிருத்திஷிடம் வந்தார். 

காரிலிருந்து இறங்கிய கிருத்திஷைக் கண்டதும் அன்னத்தின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு படபடப்பு. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறியவாறு நின்றிருந்தாள். அவளைப் பார்த்து கிருத்திஷ் தனது உள்ளத்து உணர்வுகளை முகத்தில் காட்டாது மறைத்துக் கொண்டான். 

“மாமா வாங்க மாமா..” என்ற அன்னத்தின் பக்கம் திரும்பிய அன்னத்திடம், “பயணம் எப்படி இருந்தது அன்னம்?” என்று கேட்டான். அவளும், “ரொம்ப நல்லா இருந்துச்சு மாமா.” என்றாள். 

“சரி ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. நான் போய் ஆர்த்தி எடுத்துட்டு வரேன்.” என்ற பார்வதி இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்து ஆரத்தி எடுத்தார்.  

“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க.” என்று சொல்ல, அன்னமும் கிருத்திஷீம் சேர்ந்து வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் சென்றனர். 

வேலுச்சாமியிடம் வந்த கிருத்திஷ், “மாமா உங்களுக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே?” என்று கேட்க அவரும், “இல்ல மாப்ள. எந்த பிரச்சனையும் இல்ல.” என்றார். 

“சரி மாமா நீங்க போய் குளிச்சிட்டு சாப்பிட்டு, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.” என்றான். 

“அன்னம் நீயும் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு.”

“சரிங்க மாமா.”

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தனான். நான் ஆபிஸ்க்கு போயிட்டு வந்துடறேன்.” என்றான். 

“கண்ணா எங்கப்பா போற? அன்னம் இப்பதான் வந்திருக்கிறா.”

“அம்மா அது எனக்கு புரியுதும்மா. ஆனா இந்த மீட்டிங் நான் கண்டிப்பா இருந்தாகணும். நான் போயிட்டு சீக்கிரமாக வேலையை முடிச்சிட்டு வந்திடுறன். நீங்க அன்னத்தை பாத்துக்கோங்க அம்மா.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். 

அன்னம் பார்வதியைப் பார்க்க பார்வதி, “வா அன்னம், நான் ரூமைக் காட்றேன். நீ அங்க போய் குளிச்சிட்டு வா.” என்றவர் அன்னத்தை அழைத்துக் கொண்டு சென்றார். 

ஜனகன் வேலுச்சாமிக்கு ஒரு அறையை காட்டினார். “மச்சான் நீங்க இந்த அறையில் தாங்கிக்கொள்ளுங்க.” என்றவர், அவர் குளிப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு வந்தார். 

இங்கே பார்வதியும் அன்னத்திற்கு குளியலறை மற்றும் அனைத்தையும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!