கிருத்திஷ் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்து வீட்டின் காலிங் பெல்லை அடிக்க ஜனகன் வந்து கதவைத் திறந்தார்.
“கிருத்திஷ் கொஞ்சம் நேரத்துக்கு வந்திருக்கலாமே?”
“அப்பா, நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டிங்கை முடிச்சிட்டு தான் வந்தேன்.”
“சரி போய் ஃப்ரெஷாகிட்டு வா, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”
“அம்மா எங்க அப்பா?”
“உங்க அம்மா, மாமா, அன்னம் எல்லாரும் தூங்குறாங்க.”
“சரிப்பா நான் போய் ஃப்ரெஷாகிட்டு வந்துடறேன். நீங்க போங்க நான் எடுத்து சாப்பிடுறேன். நீங்க போய் தூங்குங்க அப்பா.” என்றான். “எங்கப்பா தூங்குற? அடுத்தவன் ஒருவன் ரோஹித்… ரோஹித்னு நம்ம வீட்ல இருக்கிறானே அவன் வரணுமே?”
“அவன் இப்போ எங்க இருக்கிறான்? வந்ததுமே இராவைப் பார்க்க போய்ட்டானா?”
“ஆமா கண்ணா.”
“அப்படியா சரிப்பா நீங்க போங்க ,அவன் வந்ததும் நான் வந்து பார்க்கிறேன்.”
“இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கண்ணா, நான் ஹால்ல உட்கார்ந்து அந்த வேலையை பார்ப்பேன். நான் ரோகித் வந்த பிறகு போய் தூங்குறேன்.” என்றார்.
“சரிங்கப்பா.” என்றவன்,
அறைக்குள் செல்ல, வலது கையை தலைக்கு கீழே வைத்துக் கொண்டு, அடுத்த தலையணையை அணைத்துக் கொண்டு அன்னம் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தவன், குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு வெளிவந்தான்.
“என்னப்பா அன்னம் எந்திரிச்சிட்டாளா?”
“இல்லப்பா நல்ல தூக்கம். ரொம்ப நேரத்துக்கு பயணம் இல்லையா? அதான் செம களைப்புல தூங்குறா போல.”
“அப்படியா கண்ணா, நல்லா தூங்கட்டும். சரி நீ வா சாப்பிடு.” என்று சாப்பாடு எடுத்து வைக்க சாப்பிட்டான். பின்னர் தந்தையிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான்.
கட்டிலில் ஒரு கையை தலைக்கு அடியில் வைத்து அடுத்த நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் அருகே வந்து முதலில் ஏசியை ஆன் பண்ணி வைத்தான். ஏசியைப் போட்டதும் அன்னத்திற்கு குளிர ஆரம்பித்தது. அன்னம் தூக்கத்திலேயே அவள் கட்டியிருந்த புடவையின் முந்தானையை பிடித்து உடலை இழுத்துப் போர்த்தினாள். அதைப் பார்த்தவன், பெட் சீட்டை எடுத்து வந்து போர்த்தி விட்டான்.
அவள் பிறை நெற்றி மீது புரண்ட கூந்தலை தனது ஒரு விரலால் ஒதுக்கி விட்டான். கைவிரலால் அவளுக்கு முகத்திலே கோலம் போட ஆரம்பித்தான்.
‘’ஐயோ முகத்தை தொட்டா, உதட்டை சுருட்டிட்டு இருக்க என்று கையை எடுத்தான். பின்னர் மீண்டும் அவளது முகத்தில் இவனது கைகள் கோலம் போட்டன. அவனுக்கு வெவ்வேறு எண்ணங்கள் தோன்றின.
எண்ணங்கள் மாற, அவனின் பார்வையும் அவனுக்கு அவளிடம் பிடித்தமான அந்த மச்சத்தின் மீது வந்து இறங்கியது கைவிரல்கள்.
அந்த மச்சைத்தை வருடிய கையை எடுத்தவன், அந்த உதட்டுக்கு கீழிருக்கும் மச்சம் மீது முத்தத்தை வைத்தான்.
மெல்ல அவள் இதழ்களுக்கு இதழ்மாறின அவனின் இதழ்கள். சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து விலகியவன், அவளை இழுத்து அணைத்துக் கொள்ள அவளும் அவன் நெஞ்சில் தலையை வைத்து தூங்கினாள்.
ரோஹித் நேரமானதால் இராவை வீட்டில் விட்டுவிட்டு இங்கு வந்தான். ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜனகன், ரோஹித் வந்ததும் கதவைத் திறந்தார்.
“டாடி மம்மி எங்க?”
“அவ தூங்குறா சின்னு.”
“ஓகேபா எனக்கும் செம்ம டயர்டா இருக்கு. அப்பா நானும் போய் தூங்குறேன்.”
“சாப்பிட்டியா சின்னு?, இல்லை சாப்பாடு எடுத்து வைக்கவா?”
“இல்லப்பா வேணாம். நான் அங்க பார்ட்டியில் நல்லா சாப்பிட்டுட்டு தான் வந்தேன். ப்ரோ வந்துட்டானா?”
“வந்துட்டான். ஓகே அப்பா நானும் போய் தூங்குறேன். குட் நைட்.”
“குட் நைட் ரோஹித். நீங்க வேலைய பாத்துட்டு இருக்காமல் நீங்களும் போய் டைமுக்கு தூங்குங்க.” என்று சென்றான்.
அடுத்த நாள் காலையில் கிருத்திஷ் வைத்திருந்த அலாரம் நன்றாக சத்தமாக அடித்தது. அந்த சத்தத்தில் அன்னதிற்கே விழிப்பு வந்துவிட்டது. மெல்ல கண்ணை விழித்தாள் அன்னம். கண்ணை விழித்தவளுக்கு இங்கு ஒரு பஞ்சு மெத்தையில் தூங்குவதைப் போல இருந்தது.
‘என்ன வித்தியாசமா இருக்கு? என்னால எந்திரிங்கவும் முடியவில்லை.’ என நினைத்தவள், மெல்ல தலையை உயர்த்திப் பார்க்க, அவளோ கிருத்திஷின் அணைப்பில் இருப்பது தெரிந்தது. முதல் தடவை இதே போலவே இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஆனால் முதல் தடவை போல் அவள் இந்த தடவை எந்திரிக்கவில்லை. இம்முறை அவனின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.
‘மாமா நான் உங்களை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? நான் ரொம்ப ஆசையாக உங்களை ஏர்போர்ட்ல எதிர்பார்த்தேன். ஆனா நீங்க வரவே இல்ல. வீட்லயாவது இருப்பீங்கன்னு பார்த்தேன் வீட்லேயுமே இல்ல. அப்புறம் ஆபீஸ் போயிட்டு சீக்கிரமா வருவீங்கன்னு பார்த்தேன். நான் தூங்கின அப்புறம் வந்து இருக்கீங்க. ஏன் மாமா நான் தூரமா இருக்கும்போது ரொம்ப பக்கத்துல இருக்குற மாதிரி இருக்கீங்க. பக்கத்துல இருந்தா தூரமா இருக்கிற மாதிரி இருக்கு மாமா.” என்றவளை தன் மீது இருந்து கீழே கட்டிலில் கொண்டு வந்தவன், அவள் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டான்.
அவனது திடீர் செயலில் பயந்தவன், “ஐயோ மாமா நீங்க தூங்கலையா?”
“நான் அலாரம் அடிச்சதுமே எந்திரிச்சிட்டேன். நீ என்ன பண்றன்னு பாக்குறதுக்கு தான் தூங்கின மாதிரி இருந்தேன். அன்னம் நான் ஏன் ஏர்போர்ட்டுக்கு வரலைன்னா ரொம்ப முக்கியமான மீட்டிங். அதான் வர முடியல இந்த மீட்டிங்கல நான் இருந்தே ஆகணும்.”
“ஆனா முதன் முதலில் வீட்டுக்கு வர்றேன். அதுவும் கல்யாணம் ஆகி வரேன். அப்போ நீங்க இங்க இருக்கணும்ல?”
“அதனால்தான் நான் அந்த முக்கியமான மீட்டிங்ல கூட சொல்லிட்டு நான் இடையில வந்துட்டு போனேன். அப்புறம் அந்த மீட்டிங்கை எவ்வளவு வேகமா முடிக்கலாமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு நான் வந்தா, மேடம் தான் நல்லா தூங்குறீங்க. சரி பாவம் பிளைட்ல வந்தா களைப்பா இருக்கும் தூங்கட்டும்ன்னு உன்ன எழுப்பாமல் விட்டுட்டேன். ஆனா நீ என்னை எப்பிடி எல்லாம் பேசுற?” என்றவனைப் பார்க்க முடியாது மறுபக்கம் திரும்பினாள். குனிந்து அவள் தோளைத்தொட்டு தன் பக்கம் திரும்பியவன்,
“இங்க பாரு அன்னம், நீ நான் பேசும்போது என்னைத் தான் பாக்கணும். போன்ல எல்லாம் ரொம்ப நல்லா பேசுவ. இப்போ பேசுறதுக்கு என்ன உனக்கு?”
“போங்க மாமா எனக்கு வெக்கமா இருக்கு.” என்றாள்.
“வெட்கப்படுற அந்த கன்னத்தை.” என்று அவளின் கன்னத்தை நெருங்கினான்.
“மாமா நீங்க ரொம்ப மோசம்.” என்று அவன் நெஞ்சிலே தனது முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“இங்க பாருடி உன்கிட்ட நான் சொல்றது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான். நம்ம கல்யாணம் வேணா திடீர்னு நடந்திருக்கலாம். ஆனா நமக்குள்ள எப்பவுமே பிரிவு வரக்கூடாது. அதுமட்டும் இல்ல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்.” என்றான்.
“அதற்கு என்ன மாமா கண்டிப்பா நான் உங்களை விட்டு போகவே மாட்டேன். என்ன நடந்தாலும் போக மாட்டேன் மாமா.”
“அது எப்படி நான் நம்புறது? நீ தான் எனக்கு பொருத்தம் இல்ல பொருத்தம் இல்லை என்று சொல்லிட்டு இருக்க இல்ல.”
“மாமா நான் போக மாட்டேன். எனக்கு நீங்க வேணும். உங்களோட பாசம் வேணும். நீங்க எப்பவும் என்கூட இருக்கணும் மாமா. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”
“தாராளமா கேட்கலாம் அதுக்கு என்ன தயக்கம் அன்னம்?”
“இதே மாதிரி எப்பவும் என் கூட பாசமா இருப்பீங்க தானே?”
“உன்மீதான என்னோட பாசம் அதிகரிக்குமே தவிர கொஞ்சம் கூட குறையாது அன்னம்.”
“அது எப்படி மாமா இவ்வளவு பேர் இருக்கும் போது, அவங்களை எல்லாம் விட்டுட்டு என்னை ஏன் உங்களுக்கு பிடித்தது?”
“என்னவோ தெரியலடி. உன்னோட குழந்தை மனச காட்டி என்னை நீ உன் பக்கம் இழுத்துட்ட.” என்றவன் நெற்றியில் முதல் முத்தத்தை வைத்தாள் அவள்.
அவளுக்கு அது முதல் முத்தம். ஆனால் அவனுக்குத் தானே தெரியும் அவளுக்கு அவன் எத்தனையோ தடவைகள் கணவனாக முத்தம் கொடுத்திருக்கிறான் என்று.
“ஏய் கண்ண தொறடி.”
“போங்க மாமா பேசிட்டு இருக்கும்போது முத்தம் வெச்சிட்டீங்க. எனக்கு உங்க முகத்தை பார்த்த வெட்கமா இருக்கு.”
“அதெல்லாம் ஒண்ணுமாகாது மாமா.” என்றவள் குளித்துவிட்டு வந்தாள். “சொல்லச் சொல்ல கேட்டியா பாரு.” என்றவன் கட்டில் இருந்து எழுந்து வந்து ஒரு டவலை எடுத்து, அவளது தலையை துவட்டி விட ஆரம்பித்தான்.
“நீங்க விடுங்க மாமா நான் பாத்துக்குறேன்.”
“கொஞ்ச நேரம் அமைதியா இரு. சொல்ற சொல்லு கேக்குறது இல்ல. தலையையாவது நல்லா காய வைக்கணும். இல்லன்னா சளி பிடிக்கும்.” என்றவன் அவனது ஹேர் டிரையர் எடுத்து வந்த அவளது தலை முடியை காயவைத்தான்.
“சரி மாமா நான் கீழ போய் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று அங்கிருந்து செல்ல, “இரு நானும் வரேன். நான் வந்து எப்படி போடணும்னு சொல்லி தரேன்.”
“சரி மாமா.” என்றாள்.
அவள் பெட்டை தட்டி விட்டு தலையணையை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். அவன் குளித்துவிட்டு வர, இருவரும் ஒன்றாக சமையல் அறைக்குச் சென்றார்கள்.
அங்கே சமையல் அறைக்கு வந்தவன் அன்னத்திற்கு ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக் கொடுத்தான். அவளும் அக்கறையோடு கேட்டுக் கொண்டாள்.
“சரி இப்போ எனக்கு ஒரு காபி போடு பார்ப்போம்.” என்றான். அவளும், “சரிங்க மாமா.” என்று உடனே ஒரு காபி போட்டு கொடுத்தாள். “பரவாயில்லையே ஒருதடவை சொன்னதும் நீ புரிஞ்சிகிட்ட. வெரி குட்.” என்று மனதார பாராட்டினேன்.
“ஏன் கண்ணா, இது வாங்கின புதுசில எனக்கு கூட நீ இதெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று முன்னாடி சொல்லி தரல.”
“அம்மா உங்களுக்கு தான் டாடி சொல்லித்தந்தாங்கல்ல. நான் என் பொண்டாட்டிக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.”
“அன்னம் பாத்தியா எப்படி இருந்த என் பையனை நீ எப்படி மாத்திட்டனு?”
“அத்தை நான் ஒண்ணுமே பண்ணல.”
“யாரு நீ ஒன்னும் பண்ணல. இத நான் நம்பனும்.”
“ஐயோ நிஜமா அத்தை நான் எதுவுமே பண்ணல அத்தை.” என்றாள். அன்னம் விட்டால் அழுது விடும் நிலைமைக்கு போய் விட்டாள்.
அதைப் பார்த்து கிருத்திஷ், “அம்மா அவ நீங்க விளையாட்டுக்கு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டா போல.”
“அன்னம் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா?”
“ஐயோ போங்க அத்தை. நான் வேற பயந்துட்டேன்.”
“கிருத்திஷ் இன்னைக்கு அன்னத்தைக் கூட்டிட்டு வெளியே போயிட்டு வா.”
“சரிமா இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு அப்புறமா வந்து கூட்டிட்டு போறேன்.”
“எப்படி நடுராத்திரி வந்த மாதிரியா?”
“நோ நோ இன்னைக்கு சீக்கிரமாவே வந்துருவேன்.”
“சரிம்மா நான் போய் ரெடியாகிறேன்.” என்றவன், “ஆமா மாமா எங்க எந்திரிக்கலையா?”
“இல்லப்பா அண்ணனுக்கு ரொம்ப டயட் போல இருக்கு.”
“மாமா நான் போய் அப்பாவைப் பாத்துட்டு வரேன்.” என்று வேலுச்சாமி இருக்கு அறைக்குள் வந்தாள். அங்கே வேலுச்சாமி அசைவின்றி படுத்திருப்பதை பார்த்த அன்னத்துக்கு பயம் வந்துவிட, “மாமா… மாமா…” என்று அங்கேயே நின்று அழ ஆரம்பித்தாள். அன்னத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்தனர் பார்வதியும் கிருத்திஷூம். கிருத்திஷிற்கு நிலைமை புரிய சட்டென்று வேலுச்சாமியின் அருகில் வந்து, “மாமா எந்திரிங்க மாமா..” என்றான். ஆனால் ஒரு அசைவும் இல்லாமல் போக, “ரோஹித்.” என்று கத்தினான்.
தூக்கத்திலிருந்து அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்தான். அந்த சத்தத்தில் ஜனகனும் வேகமாக வந்தார்., “சின்னு போய் காரை எடு.” என்றவன், “அம்மா என்னோட ஆபீஸ் பேக்கில் ஒரு ப்ளூ கலர் ஃபைல் இருக்கு, சீக்கிரம் எடுத்துட்டு வாங்க.” என்றான் பார்வதியும் வேகமாக சென்று அந்த பைல் எடுத்து வர, அதற்குள் வேலுச்சாமியை காரில் ஏற்றி இருந்தான் கிருத்தீஷ்.
அன்னம் அழுது கொண்டிருந்த, “அன்னம் சீக்கிரமா வா.” என்றவன் காருக்குள் வந்து ஏறினாள். ரோஹித்திடம் அவன் செல்ல வேண்டிய ஹாஸ்பிடல்லை சொன்னான்.
காரில் வழி நெடுகிலும் அழுது கொண்டு வந்தாள் அன்னம். கிருத்திஷிற்கும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. ‘எல்லாம் சரியாய் நடக்கும் போது இப்படியாகிவிட வேண்டுமா? கடவுளே எதுவும் தவறாக நடக்க கூடாது.” என்று முதன் முதலில் கடவுளிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான்.