“ அப்புகுட்டி நான் சொல்லுறத ஒரு நிமிஷம் கேளு எதுவுமாகாது…, நீ கவலைப்படாத இதோ இப்போ நான் வரேன் .. அங்கேயே இரு ..” என்று இதுவரை அவளுக்கு இருந்த கவலை போய்.. எல்லாத்தயும் மறந்து போனில் பேசிய நபரிடம் இவள் பேசியவள் வேகமாக .., ராகினி கொடுத்த அந்த பாலை மட்டும் குடித்துவிட்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் அவனை விட்டு விலகியவள் வேகமாக கீழே இறங்கினாள்…
“ என்னாச்சு இவ போன் பேசினா .., ஆப்போசிட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியலையே …, அப்படி என்னவா இருக்கும்… இவ இந்த அளவுக்கு டென்ஷன் ஆகி பதட்டத்தோட போறாள்னா…, கண்டிப்பா அங்க ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்” என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளின் பின்னேயே சென்றான்… அவனும் வேகமாக….
நேராக தன்னுடைய அறைக்கு சென்று.., அவசர அவசரமாக உடையை எடுத்துக் கொண்டு அப்படியே அவள் மாற்றுவதற்கு.. முதலில் சேலை முழுவதுமாக கழட்டிவிட்டு அவள் கட்டி இருக்கும் அந்த பாவாடையை கலட்ட போக …, அதே நேரம் ஆடவனோ கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்….
“அவள் இப்படிஅறையும் குறையுமாக இருப்பாள்… என்று எதிர்பாராதவன் அவசரமாக மறுபக்கம் திரும்பிக் கொண்டு சாரி சாரி நான் தெரியாம வந்துட்டேன் .. நீ இந்த மாதிரி இருப்பான்னு நான் நினச்சு பார்க்கல ” என்று மன்னிப்பு கேட்டவன் அப்படியே நின்று இருக்க….
“ அவளுக்கு தான் ஒரு மாதிரியாக போய் விட்டது .., மேலும் மேலும் அவன் சொல்லும்படியாக தான் இருக்கிறோமோ என்ற எண்ணம் வர அவனிடம் மன்னிப்பு கேட்டவள் .., இல்ல என் மேல தான் தப்பு …, உங்களுக்கு இந்த ரூம்ல பங்கு இருக்கணும் தெரிஞ்சும்… நான் ஏதோ எப்பயும் போல இந்த டிரஸ்ஸ மாத்துறதுக்கு ஆரம்பிச்சிட்டேன் அப்படியே ரூம்ல … அதனால தயவு செய்து நீங்கள் தான் என்னை மன்னிக்கணும் … அப்புறம் இப்படி மாத்துறதுனால ப்ளீஸ் நீங்க என்னை தப்பா நினைச்சுக்காதீங்க …, உங்கள மயக்குறேன், உங்ககிட்ட காம உணர்வை எதிர்பாக்குறதுக்காக தான் இந்த மாதிரி என்னோட டிரஸ்ஸ கழட்டிட்டு உங்க முன்னாடி நிக்கிறேன்… அப்படின்னு மட்டும் எதிர் பார்க்காதீங்க” என்று கண்களில் கண்ணீர் வடிய சொன்னவள் வேகமாக தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிரூக்கு செல்ல….
“ அவனுக்கு தான் ஏண்டா தான் கீழே வந்தோம் … என்பது போலானது … அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனின் மனதை ரணமாய் குத்தியது…., ஏனோ அவன் பேசும்பொழுது வராத வலி பெண் அவள் சொல்லும் பொழுது வர.., இதே மாதிரி தானே அவளும் அந்த துன்பத்தை அணுபவத்திருப்பாள்” என்று நினைக்கும் பொழுது அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல் ஆனது….
பாத்ரூம்மிருக்க சென்றுவள்.. . அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு சேரில் இருந்து சுடிதாரை மாற்றிக் கொண்டு வந்தவள் அவனை கண்டுகொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியேற போக….
“ நீ தப்பா எடுத்துக்காலாட்டி நானும் உன் கூட வரட்டுமா… ? ஒருவித ஆர்வத்தோடும்.., அதே நேரம் சற்று படபடப்படும் கேட்டான்” …எங்கு இதற்கும் அவள் ஏதாவது தான் பேசியதை வைத்து தப்பாக நினைத்து விடுவாளோ , என்ற எண்ணம் அவனுக்குள் முதன்முதலாக வர …. அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவளின் பதிலுக்காக …
“அவள் எதுவும் பேசாமல் அவனின் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவள் , பின்பு ஏதோ ஒன்றை நினைத்து விட்டு சரி வாங்க” என்று சொல்லிவிட்டு முன்னாள் போக…
அவள் எதுக்கு அப்படி பார்த்தா..? என்ன ஏதாவது என் முகத்தில் தெரியுதா ..? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட விதுரனும் … அவளின் பின்னால் செல்ல…, நேராக அவள் சென்றது என்னவோ ராகினியின் அறைக்கு தான்….
“ என்ன இவ வெளியில போகணும்னு சொல்லிட்டு.., அவளோட அம்மா ரூமுக்கு போற…!!!” என்று நினைத்துக் கொண்டவன் உள்ளே செல்லாமல் அப்படியே வெளியில் நின்று கொண்டு இருக்க…
என்னங்க என்னங்க… என்று குரல் வர….
“அவன் பின்னால் திரும்பி பார்க்க யாரும் இல்லாமல் இருக்க.., தன்னை தான் அவள் அப்படி அழைக்கிறாளா..!!!” என்று ஒரு நிமிடம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்க்க…
“ உங்கள தாங்க கூப்பிட்டேன் ,அம்மா உங்களை வர சொன்னாங்க உள்ள வாங்க நீங்க” என்று சற்று அதிக மரியாதை உடனே அவனை அழைத்தவள் உள்ளே செல்ல… அவனும் வேறு வழியில்லாமல் விகிதாவின் பின்னால் ராகினியின் அறைக்கு உள்ளே சென்றான் …
“ தான் கூப்பிடும் பொழுது அவன் செய்த முகபாவனைகள் எல்லாம் பார்த்துக் கொண்டே தான் இருந்தால் விஹிதா ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை எங்கு தான் பேசினால் அவன் ஏதாவது வேறு மாதிரியான வார்த்தைகளை அள்ளி வீசி தன் மனதை இன்னும் கிழிப்பானோ” என்ற பயம் அவளுள் இருக்க எதுவும் பேசாமல் அவளின் தாயின் முன்பு கையை கட்டிக்கொண்டு பாவமாக நின்றாள்….
விதுரன் அந்த ரூமிற்குள் வந்தவுடனே ராகினியும் “ என்னப்பா இது அவதான் சின்ன பிள்ளை.., அவளுக்கு விவரம் தெரியாது நீயும் இந்த மாதிரி இருக்கேப்பா…. இந்த நேரத்துல எதுக்குப்பா வெளியில போறீங்க அதுவும் லாங் டிரைவ் வேற சொன்னா .., நீங்க கொஞ்சம் காலையில போய்க்கலாமே… எதுக்கு சொல்றேன்னா இப்போ உள்ள காலம் அந்த மாதிரி இருக்குது… உங்க ரெண்டு பேரையும் வெளில அனுப்புறதுக்கு பயமா இருக்குது …. ஆனா நீங்க என்னடான்ன நான் இப்போ வெளியில கூட்டிட்டு போறேன்னு அவளை சொல்றீங்க” என்று சற்று பயத்துடனே ராகினி சொல்ல…
“ அடிப்பாவி ராட்சசி அவளோட வேலைய காமிச்சுட்டா போல …, அவங்க அம்மா கிட்ட என்ன சொன்னான்னு தெரியலையே .., அவங்களே அட்வைஸ் பண்ற அளவுக்கு அவ பண்ணிக்கிட்டு இருக்காளே” என்று மனதினுள் நினைத்து கொண்டவனின் உள்ளமோ சற்று குளிர்ந்தது அவள் செய்யும் சேட்டையை நினைத்து….
ஆன்ட்டி அது வந்து உங்க பொண்ணு… என்று அவன் ஏதோ ஒன்றை அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இவன் பேச வர….
“ அம்மா என்னது இது …, அவங்க என்னைய நைட் வெளில லாங் டிரைவ் கூட்டிட்டு போகணும்னு ஆசைப்பட்டாங்க … நீ என்னடான்னா அவங்களையே கேள்வி கேட்கிற.. உனக்கு மரியாதை கொடுத்து தான் அவங்க உன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாங்க … அத விட்டுட்டு நீ இப்படி பேசுற , ஒரு மருமகன் கிட்ட பேசுற மாறிய பேசுற ..” , எங்கு அவன் வேறு ஏதாவது சொல்லி விடுவானோ தன்னை பற்றி என அவசர அவசரமாக தன் தாயை திட்டிக் கொண்டிருந்தாள் விகிதா…
சரிமா சரிமா நான் எதுவும் பேசல என்று சொல்லிய ராகினியோ விதுரன் பக்கமாக திரும்பி “ தம்பி இவ பேசுறத பாத்தா எனக்கு என்னமோ கொஞ்சம் சந்தேகமா இருக்குது …, நீங்க உண்மையாவே வெளியில போகணும்னு சொன்னீங்களா..?? மறுபடியும் விகிதா சொல்வதை நம்ப முடியாமல் ஏனோ ராகினி விதுரன் பக்கமாக திரும்பி கேட்க…
அது வந்து ஆன்ட்டி என்று அவன் முழித்துக் கொண்டு இருக்க…
வேகமாக அவனின் கையைப் பிடித்த விகிதா சற்று அவனின் கைவிரல்களை அழுத்தி ஆம் சொல் என்று சொல்வது போல் கண்களால் ஜாடையாக காட்டியவள் அவனைப் பார்க்க …….
“ அவளின் கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்… அவள் பிடித்து இருக்கும் கைகள் எவ்வளவு பஞ்சு போல் சாப்ட்டாக இருக்கிறது, அவளின் கைகளோ பஞ்சு போல் இருக்க … அப்பொழுது அவளின் கண்ணம் இன்னும் எவ்வளவு சாப்டா இருக்கும்… ஆனால் அந்த கன்னங்களையே தான் அறைந்து விட்டேனே” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவன் அமைதியாக இருக்க….
அதே நேரம் என்னங்க என்று விகிதா குரல் கொடுக்க….
ஹான் என்று விழித்தவன் என்னவென்று அவளை பார்க்க….
“உங்களை தான் அம்மா கேட்டாங்க நீங்க பதில் சொல்லாமல் என்னை போய் ரசித்து பார்த்துகிட்டு இருக்கீங்க “என்று வெட்கப்படுவது போல் பேசியவள் அவனைப் பார்த்து ப்ளீஸ் என்று கண்களால் ஜாடை செய்ய ராகினி பார்க்காத பொழுது….
“யார்கிட்டயும் பொய் சொல்லாதவன் எல்லோர்கிட்டயும் திமிரா நடந்துக்கிறவன் ஆனால் என்னையவே என்னுடய ராட்சசி பொய் சொல்ல வைக்கிறாள்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் உதடு புன்னகை செய்ய…, ராகினியை பார்த்து
“ ஆமா அத்தை நான் தான் அவளை வெளியில கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்… அழுதுகிட்டே ரூம்ல இருக்கிறது எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு… அதனால இந்த குளிரான காற்றாக உடம்புல பட்டு அவ கொஞ்சம் நார்மலா ஆனா பெட்டரா இருக்கும் , அப்படின்னு பீல் ஆச்சு அத்தை… அதனால் தான் நீங்க தப்பா எடுத்துக்கலட்டி .., நான் என்னோட அம்முவை வெளியில் கூட்டிட்டு போகட்டுமா…?”என்று அவன் சற்று மரியாதையுடனே ராகினியிடம் கேட்க….
ராகினியின் மனது ஏதோ ஒன்றில் அமைதியாக இருக்க இப்பொழுது அவனும் தன்னுடைய பொண்ணை அம்மு என்று அழைத்தது அதுவும் பொறுமையாக என்னுடைய அம்மு என்று தன்னிடமே சொன்னது ராகினிக்கு சற்று பெருமையாகவும் மனது அதிக அளவில் குளிரச் செய்ய வேகமாக சந்தோஷமாக சரிங்கப்பா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க என்று சொல்லிய ராகினி அப்பொழுதுதான் தன்னுடைய மகளின் கன்னத்தை பார்த்தாள்…
என்னம்மா இது கன்னத்துல யாரும் அடிச்ச தடம் மாதிரி இருக்குது..? என்று சற்று பதறிக்கொண்டு ராகினி கேட்க….
“ அச்சோ அம்மா அதுவா பப்பி குட்டி இறந்ததற்கு நான் தான் ஒரு காரணம் … அப்படின்னு மாத்தி மாத்தி கன்னத்தில் அறைஞ்சு பைத்தியமானதுக்கு தான் , உன்னோட மருமகன் நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேனு … என்னை வெளியில் கூட்டிட்டு வரணும்னு முடிவு பண்ணாங்க… அதனால தான் வேற ஒன்னும் கிடையாது” என்று சொல்லியவள் சரிம்மா நான் போயிட்டு வரேன்… என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினால் .. எங்கு அங்கேயே இருந்தால் ராகினிக்கு சந்தேகம் வந்து விடுமோ என நினைத்து கொண்டே அவள் வெளியேற ….
“ராகினி கேட்டவுடன் ஏனோ விதுரனின் மனது சற்று படபடப்பு உடனே இருந்தது … ஏதாவது நினைத்து விடுவார்களோ தன் கோபத்தில் செய்தது.. இப்பொழுது எவ்வளவு பெரிய தவறு… இவர்களிடம் உண்மையை சொல்லலாம் தான் , அதில் அவர்கள் தன்னை எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்று அவனின் மனம் ஒரு பக்கம் நினைத்தாலும் மறுபக்கமும் அச்சம் அதிகமாக வர … இருந்தும் ராகினியிடம் உண்மையை சொல்லலாம்” என்று பேசப்படும் பொழுதுதான் விகிதாவோ வேறு ஏதோ பேசியவள் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியில் கூட்டிட்டு வந்தாள்….
“ஏன் என்னோட கைய புடிச்சு இப்படி கூட்டிட்டு வந்த..? நான் அவங்க கிட்ட உண்மைய சொல்லி இருப்பேன்… உன்னோட கன்னத்தில் இருக்கிற காயத்துக்கு நான்தான் காரணம் அப்படின்னு” என்று அவன் சற்று ஆற்றாமையால் அவளிடம் கேட்க…
“உங்களை கல்யாணம் பண்ண சொன்னதிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அவங்களோட மனசு எவ்வளவு கவலை அடைந்தது அப்படின்னு எனக்கு தான் தெரியும்… தெரியாம தன்னுடைய பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம்.., மாப்பிள்ளை ரொம்ப கோபக்காரரோ அப்படின்னு நீங்க நடந்துகிட்ட முறைகள் வச்சு அவங்க ரொம்பவே பயந்திருங்க … ஆனா இப்பதான் கொஞ்சம் தெளிவா இருக்காங்க அதை மாற்றானும் அப்படின்னு முயற்சி செய்யாதீங்க…, அப்புறம் அவங்களோட மனசு தாங்காது… அதனாலதான் அவங்களுக்கு எதுவும் தெரியக்கூடாது அப்படிங்கறதுக்காக உங்கள் இப்படி கூட்டிட்டு வந்தேன்… என்னை மன்னிச்சுக்கோங்க உங்களோட கையை அம்மா முன்னாடி புடிச்சதுக்கு மன்னிச்சுக்கோங்க…”என்று சொல்லியவள் வேகமாக அவன் கைகளைப் பிடித்து இருக்கும் அந்த கை விரல்கள்களுக்கு விடுதலை கொடுத்தவள், தன்னுடைய ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக ஸ்கூட்டியில் உட்கார்ந்து கொள்ள…
“ என்கிட்ட சாவிய கொடு …, நான் வண்டி ஓட்டறேன் நீ என்னோட பின்னாடி உட்கார்ந்துக்கோ” என்றவன் சொல்லிக்கொண்டே அவள் கைகளில் இருக்கும் அந்த சாவியை வாங்க போக….
‘இல்ல வேண்டாம் இருக்கட்டும் … ஸ்கூட்டி நல்லா தான் ஓட்டுவேன் அப்புறம் உங்களோட உசுருக்கு எந்த ஆபத்தும் வராது அதுக்கு நான் கேரண்டி தரேன்” என்றவள் சொல்லிவிட்டு அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்ய….
“பதட்டத்தில் இருக்கிற … அதுனால வண்டியை சரியா ஓட்ட மாட்ட.., நீ என்கிட்ட கொடு … நான் வண்டி ஓட்டுறேன்… நீ என்னோட பின்னாடி உட்கார்ந்துக்கோ” என்று சொல்லியவன் அவளிடம் ஸ்கூட்டியை கொடுக்க சொல்ல…
“இல்ல ப்ளீஸ் வேண்டாமே நானே வண்டி ஓட்டுறேன்… எதுக்கு சொல்றேன்னா வண்டி நீங்க ஓட்டி.., உங்க பின்னாடி நான் உட்கார்ந்து பிரேக் வரும் பொழுது சப்போஸ் தெரியாம உங்க மேல கை பட்டா கூட உங்கள மயக்குறதுக்கு தான் கைய வச்சேன் … அப்படின்னு சொல்லுவீங்க இல்லாட்டி வேற ஏதாவது நீங்க பள்ளத்துல விட்டா கூட உங்களை அட்ராக்ஷன் பண்ணுறதுக்கு தான் என்னோட உடம்ப அங்கங்க டச் பண்ணி காம உணர்வு வரவழைத்து என்னோட காமப் பசியை தீர்த்துக்கறதுக்காக தான் இந்த மாதிரி நடந்துக்கிறேன்… அப்படின்னு நீங்க சொல்லுவீங்க , அதனாலதான் இனிமே அப்படி ஒரு வார்த்தை கேக்குறதுக்கு நான் மனசளவுல தயாராக இல்லை …,ஏற்கனவே கேட்டதில் வந்து நொந்து போயிட்டேன்” என்று அவனின் முகத்தை பார்க்காமல் குனிந்து கொண்டே கலங்கியவரே அவனிடம் சொல்ல….
“அவளை உற்றுப் பார்த்தவன் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நான் பேசியதே வைத்து என்ன இப்படியே குத்தி காட்ட போற” என்றவன் ஆற்றான்மையால் அவளிடம் கேட்க….
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க .., அவளின் மௌனத்தை புரிந்து கொண்டவனும்.., நான் உன் பின்னாடி உட்காரப்போ நீ ஸ்பீடு பிரேக் போட்டு என்னோட கை அங்கங்க டச் பண்ணா தப்பு இல்லையா !!! என்று அவளிடம் அவளை பார்த்து கொண்டே கேட்க…
“அவனை பார்க்காமலே எனக்கு நிதர்சனம் என்ன அப்படிங்கறது நன்றாகவே தெரியும் .., ஒருத்தவங்களோட கை .., அது படுற இடம் குட் டச் அண்ட் பேட் டச் இது எல்லாமே எனக்கு நல்லாவே தெரியும்….. அதனால நீங்க பயப்படாம பின்னாடி உட்காருங்க” என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே சொன்னவள் மறுநிமிடம் வேறுபக்கம் பார்வையை திருப்பி கொள்ள …
“ராட்சசி ராட்சசி சொல்லிக் காட்டுறா பாரு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்” இதுக்கு மேல உன்னோட இஷ்டம் …ஆனா உண்மையாவே நீ நார்மலான கண்டிஷன்ல கிடையாது …. அதனால கண்டிப்பா நான் தான் வண்டியை ஓட்டுவேன்…. அப்புறம் உன்னோட கை அங்கங்க டச் பண்ணாலும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது… நீ என்னோட மனைவி என்னோட மனைவி கை படுவதில்லை எனக்கு சந்தோசம் தானே தவிர வேற எந்த எண்ணமும் கிடையாது சரியா …, அத பஸ்ட் இந்த மரமண்டைல ஏத்தி வச்சுக்கோ… ஏதோ நான் அறியாமல் தெரியாமல் செஞ்ச தப்ப போய் சொல்லி சொல்லி காட்டாத எப்படி வார்த்தையால ஒருத்தன குத்தி கிழிக்கணும் அப்படிங்கறது உன்கிட்ட தான் நான் கத்துக்கிட்டேன் போல” என்று அவளிடம் சொல்லியவன் முன்னாள் உட்கார போக…
“உங்களை விட நான் கொஞ்சம் கம்மியா தான் பேசுறேன்னு நினைக்கிறேன்’ என்று மறுபக்கம் முகத்தை திருப்பி உர் என்று வைத்துக் கொண்டு சொல்லியவள் சற்று பின்னால் நகர்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டால் அவன் உட்காருவதற்கு இடத்தை விட்டு….
அவள் சொன்ன இடத்திற்கு சென்று நின்றவன் அவளை பார்க்க அவளோ , அவனின் முதுகினில் சாய்ந்து கொண்டு நன்றாக தூங்கிக் கொண்டு இருக்க .., அவளின் முகம் மட்டும் தான் அவன் முதுகினில் பதிந்து இருந்தது ஆனால் அவள் கைகளோ அப்படியே அவனை தொடாமல் தான் இருந்தால் ….
“சாரதா குழந்தைகள் அடைக்கல இல்லம்” என்று பெயர் பலகை போட்டு இருக்க அவனின் புருவங்கள் சுருங்க …, இங்கு தான் இவள் அட்ரஸ சொன்னாலா …? இவள் சொன்ன இடம் இது தான் … ஆனா அனாதை ஆஸ்ரமம் மாதிரி இருக்கு… என்று நினைத்து கொண்டவன் …, ஒருவேளை போன்ல பேசின நபர் இங்க தான் இருப்பாங்களா ஆனா அவங்க ரொம்ப பெரிய பையன் மாதிரி தெரிஞ்சாங்களே …!!!இந்த இரவு நேரம் எதுக்கு வர சொல்லி இருகாங்க !”என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அம்மு அம்மு என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான்…
“ஹான்” என்று சொல்லிக் கொண்டே விழித்தவள் அவன் முதுகினில் சாய்ந்து தூங்கி இருப்பதை பார்த்தவளுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை …,அதனை நினைத்து பார்த்தவள் தன்னுடைய தூக்கத்தினை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு அது வந்து சாரி என்று சொல்லியவள் அந்த இடத்தை பார்த்து இறங்கிவிட்டு …, அடுத்த நிமிடம் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து வேகமாக உள்ளே சென்றாள்….
கேட்டில் வாட்ச்மேன் அவளைக் கண்டவுடன் எதுவும் பேசாமல் உள்ளே அனுமதி கொடுக்க ஆனால் பின்னால் வந்த விதுரனை தடுத்து நிப்பாட்டினார்…
யாரு தம்பி…? உங்களுக்கு யார் வேணும்..? என்று கேட்க…
அது வந்து நான் அம்மு கூட வந்தேன் என்று முன்னால் போகும் விஹிதாவை கை காண்பிக்க ….
“ஓஹோ விகிதா பாப்பா கூட வந்தீங்களா ,,,? சரிப்பா சரிப்பா இதுல மட்டும் நீங்க கையெழுத்து போட்டு நீங்க உள்ள போகலாம் … விஹிதா பாப்பா நேரா ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல உள்ள ரைட் சைடு கட் பண்ணா இருக்கிற ரூம்ல இருக்கும்” என்று அந்த வாட்ச்மேன் சொல்ல….
“அவள் எப்பொழுதும் இங்கு ரெகுலராக வருவாள் போலும்” என்று அந்த வாட்ச்மென் சொன்னதை வைத்து புரிந்து கொண்டவன் அவர் சொன்னது போலவே அந்த பதிவேடு நோட்டில் கையெழுத்து இட்டு போக…
அவன் பாதி தூரம் தான் கடந்து இருப்பான்… அதற்குள் ஓய் பெரிய பைய்ய … நீ யாரு… கொஞ்சம் புதுசா இருக்கிற … உனக்கு இங்க என்ன வேலை ..? என்று இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஒருவன் கேட்க …
திடீரென்று ஒரு குரல் வர.., அந்த குரளின் சொந்தக்காரர் யார்..? என்று அறிந்து கொள்வதற்காக விதுரனும் அந்த குரல் வரும் திசையை நோக்கி பார்த்தான்…. பார்த்தவனின் கண்களும் மின்னியது….
மான்விழியாள் வருவாள் …