“ஏய் பெரிய பையா.., நான் உன்ன தான் கூப்பிடுறேன் நீ யாரு இந்த இடத்துக்கு புதுசா இருக்கிற..? உன்னுடைய பெயர் என்ன ..?” என்று வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டு இடுப்பில் கைவைத்து போகும் விதுரனை பார்த்து கேட்டுக்கொண்டே முறைத்து நின்று கொண்டிருந்தான் அவன்…
குரல் வந்த திசையை நோக்கி விதுரனின் பார்வை இருக்க.., பார்த்தவன் கண்களோ அதிர .., அதே நேரம் மின்னியது அந்த நபரை பார்த்து…
விதுரனின் முழங்கால் அளவு கூட இல்லை அவன்…, அந்த அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்க ஆனால் அவனின் குரலும் சற்று கனிரென்று ஒலித்தது…
“ என்னோட பேர் விதுரன்.., அப்புறம் இங்க என்னோட அம்மு தான் என்ன கூட்டிட்டு வந்துச்சு … அந்த அம்முவோட புருஷன் நான் ஓகேவா.. இவ்வளவு போதுமா உங்களுக்கு டீடைல் இல்லாட்டி இன்னும் கொஞ்சம் வேணுமா..?” என்று விதுரன் அந்த சிறு பையனிடம் கேட்க….
“ஓஹோ இந்த நேரத்துக்கு வருதுன்னா கண்டிப்பா அது என்னோட வவிஹி குட்டியா தான் இருக்கும்… அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சா..? ஆனால் அவள் என்கிட்ட சொல்லவே இல்லையே…? என்னதான கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா… அவள் … ஆனா இப்போ என்னடான்னா நீங்க புருஷன் சொல்லிட்டு வர”என விதுரனை பார்த்து முறைத்துக் கொண்டு அந்த சிறுவன் சோகமான குரலில் விதுரனிடம் சொல்ல….
“ஓஹோ அப்படியா உன்னுடைய விஹி குட்டி உனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்தாளா..? உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு” என்று அவனும் சிறு குழந்தை போல் அவனுக்கு வராத குரலில் அந்த குழந்தையிடம்சிறிதாக உட்க்கார்ந்து கொண்டு கேட்க … ….
“இல்லை இல்லை என்னுடைய விஹி குட்டி எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுக்கல ஆனா நான் தான் என்னோட விஹி குட்டி கிட்ட ப்ராமிஸ் பண்ணுனேன் கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிடுவேன் ஆனா பாரு இப்போ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட … இப்போ நான் என்ன பண்ணுவேன்” என்று சோகமான குரலில் சொல்ல…
“ ஓகே ஓகே ஒன்னும் பிரச்சனை கிடையாது … நான் விஹி குட்டிய மாதிரி உனக்கு க்யூட்டா அழகா ஒரு பாப்பா தரேன்… அந்த பாப்பாவ நீ வச்சுக்கோ சரியா…” என்று குழந்தையை சமாதானம் செய்வதில் அவன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அந்த சிறுவனிடம் பேச…
“ உண்மையாவே நீ எனக்கு குட்டி பாப்பா தருவியா..? அனா அந்த குழந்தை என்னோட விஹி குட்டி மாதிரி இருக்காதே நான் என்ன பண்ணுவேன் ..” என்று அந்த குழந்தையும் அவனிடம் கேட்க …
“ அவனும் ஆமா … ஆனா இப்போ இருக்குற விஹி குட்டிய விட இன்னும் வர போற விஹி குட்டி கியூட்டா அழகா இருக்கும்…” என்று தலையசைக்க வேகமாக அந்த சிறுவனும் விதுரனை கட்டிக் கொண்டான்… .
‘யாருக்கும் அடங்காமல் கட்டிடம் காளையாக அந்த கிராமத்தையே சுற்றி வந்தவன்…, இன்று ஏனோ சிறு குழந்தை போல் அந்த குழந்தையின் கவலையை போக்கும் விதமாக .. அவனின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க …, அவனுக்கு நிகராக குனிந்து அந்த குழந்தை இடம் என்ன வேண்டும்” என்று கேட்டு தெரிந்து கொண்டவன் என்று அந்த குழந்தை அவனை அழைக்கும் பொழுது ஏனோ ஆயிரம் முறை அந்த நெற்கதிர்களை விளைச்சல் செய்து அதை அறுவடை செய்து வந்த சந்தோசம் போல் அவன் உணர …, அவனும் அந்த குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டான் ….
“ சரி ஓகே உன்னோட விஹி குட்டி எந்த ரூம்ல இருக்கும் .. இப்ப கரெக்டா சொல்லு பாப்போம்” என்று அந்த சிறுவனிடம். கேட்க…
“ அதுவா என்னோட விஹி குட்டி எதிரியோட ரூம்ல இருக்கும் … வா உனக்கு காட்டுறேன் … ஆனா அந்த எதிரியோட ரூமுக்குள்ள நான் வரமாட்டேன். நீ மட்டும் தான் உள்ள போகணும்… சரியா விஹி குட்டி கிட்ட எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவே மாட்ட …, அந்த ரூமுக்குள்ள போகாத அப்படின்னு சொன்னா என்கிட்ட சரின்னு சொல்லிட்டு.., இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ரூமுக்குள்ள போய் என்னுடைய எதிரி கிட்ட பேசுவா தெரியுமா அதனால எனக்கும் விஹி குட்டிக்கும் சண்டை வரும்… அப்போல்லாம் இதோ இந்த கன்னத்துல முத்தம் குடுத்தே சமாளிச்சுரும் தெரியுமா ?”என்று சிறுவனாக சொல்லி கொண்டு விஹிதா இருக்கும் அறையினை காண்பிக்க
அடிப்பாவி .., கன்னத்துல முத்தம் குடுக்குற பழக்கம் உனக்கு அப்போ இருந்தே இருக்குதா ..!!! நான் கூட எனக்கு மட்டும் தான் முத்தம் குடுக்குறேன்னு நினைச்சுட்டு இருந்த , இங்கயும் அப்படி தான ..!! போடி பையன் உனக்கே இங்க எதிரி இருக்கும்ன்னா …, அப்போ இன்னும் என்னோட அம்மு குட்டிக்கு எத்தனை பேர் ஃபேன்ஸ் இருப்பாங்களோ !!!! எத்தனை பேர் எதிரி இருப்பாங்களோ தெரியலையே!!!!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அந்த அறைக்குள் லைட்டாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டு கதவை தட்டினான்… அந்த போடி பையன் சொன்ன எதிரி அறைக்கு வந்து ….
என்ன இறக்கி விடு .., என்னால வர முடியாது .. என சொல்லி கொண்டு அந்த சிறுவன் இறங்க …
டாய் ஏன்டா ..? என அவன் கேட்க …
“ நான் அப்போ சொன்னது தான் … இந்த ரூமுக்குள்ள எல்லாம் என்னால வர முடியாது …, அதனால நீ மட்டும் போயிட்டு வா பாய்” என்று சொல்லியவன் விதுரனின் கன்னத்தில் முத்தமிட்டு அவன் இறங்கி வேறு பக்கம் சென்று விட…
ஹே குட்டி பையா என்று… இவன் கூப்பிட …
‘அவன் எல்லாம் என்னோட ரூமுக்கு வரமாட்டான்.. அப்புறம் நீங்க யாரு? எதுக்காக என்னோட ரூம தேடி வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று அவனைப் போலவே இவனும் இடுப்பில் கை வைத்து விதுரனை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க….
“ ஸ்பா இன்னும் எத்தனை பேருக்கு தான் நான் பதில் சொல்லணும் அப்படின்னு தெரியவே இல்லை.., போற சின்னஞ்சிறுசு எல்லாமே என்ன கேள்வி கேட்குது , நேத்து பிறந்த காளானுக்கு இன்னைக்கு கொம்பு முளைச்சது போல இடுப்புல கைவைத்து என்னை முறைச்சு பார்த்துகிட்டு கேள்வி கேட்குதுடா.., உன்னோட நிலைமை போயும் போயும் இந்த அளவுக்கு போகும் அப்படின்னு நான் நினைச்சு கூட பாக்கல டா”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அந்த சிறுவனின் உசரத்திற்கு குனிந்து கொண்டே என்னோட அம்மு இந்த ரூமுக்கு தான் வந்திருக்கான் அப்படின்னு அந்த பொடிசு சொல்லுச்சு … அதனாலதான் நானும் இங்க வந்தேன்” என்று விதுரன் அவனைப் போலவே இவனும் சொல்ல…
ஓஹோ என்னோட விகிதா மேல கைய வச்சது நீதானா…, அவளோட கண்ணத்துல அடிச்சது நீதானா ..!!! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா , நீ இந்த மாதிரி எல்லாம் தெரியாம அடிச்சுருப்பா ..???” என்று விதுரன் எதிர்பார்க்காத முன்பே விதுரனின் கன்னத்தில் அந்த சிறுவன் பிஞ்சு கைகளால் அடித்துக் கொண்டிருக்க அதையே சந்தோசமாக ஏற்றுக் கொண்டான் விது….
என்னதான் அவளை அடித்து காயப்படுத்தினாலும் அவளின் மனதை குத்தி கிழிப்பதை நன்றாக உணர முடிந்தது… ஒருவனாவது தனக்கு தண்டனை கொடுக்கிறானே..!!! என்ற மனதிற்குள் சற்று இதமாக தான் இருந்தது அதற்குள் டேய் என்ன பண்ணுற ..?? என்று குரல் வர அந்த குரலைக் கேட்டு அந்த சிறுவனும் விதுரனை அடிப்பதை நிப்பாட்டி விட்டு பாவம்போல் நின்று கொண்டு இருக்க விதாரனும் நிமிர்ந்து பார்க்க அங்கு விகிதா தான் நின்று கொண்டு இருந்தாள்…
அவள் பார்க்கும் பொழுது இப்பொழுது ஏனோ அவன் கண்களுக்கு சிறிய பெண்ணாக தெரிந்தால்…, புடவையில் எப்பொழுதும் போல் பருவமங்கையாக தெரிய சுடிதாரில் ஏனோ சிறிய பெண்ணாகப் பெரிய தன் கண்களுக்கு தான் அவள் அப்படி தெரிகிறாளா …!!! என்று யோசனையுடனே அவளையே பார்த்துக் கொண்டு இருக்க….
விகிதா பார்க்காத சமயம் அவன் கைகளில் அந்த சிறுவனோ கிள்ளி வைக்க….
ஸ்ஸ்ஸ் என்று சொல்லிக் கொண்டு அந்த சிறுவனை பார்க்க …, அவனும் விகிதாவின் பின்புறமாக நின்று கொண்டு அவனின் தலையை மட்டும் லைட்டாக எட்டிப் பார்த்துக் முறைத்துக் கொண்டு இருக்க….
“ அவன் உங்க கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.., அவன் ப்ராமிஸ் பண்ணி கேட்டதனால் தான் அவன்கிட்ட உண்மையை சொல்ல வேண்டியதா போயிருச்சு …, என்னை மன்னிச்சுக்கோங்க “என்று அமைதியாக சொல்லியவள் உள்ள வாங்க என்று அவனை கூப்பிட…
“ இந்த பொடியன் கிட்ட தான் நீ போன் பேசிக்கிட்டு இருந்தியா…!!!” என்று அவன் கேட்க அவளும் ஆம் என்று தலையசைத்தாள்….
“ இப்ப நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோமா.., ? இவளுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல ஜுரம் வேறு அதிகமா இருக்குது” என்று அந்த ரூமில் தூங்கிக் கொண்டு இருக்கும் ஒரு சிறு பெண் குழந்தையை பார்த்து விகிதா சொல்ல…
“ ஏன் என்னாச்சு இந்த குழந்தைக்கு “…. என்று சொல்லிக் கொண்டு வேகமாக அந்த குழந்தையின் அருகில் வந்தவன்… அந்த குழந்தையின் கண்ண திணையும் நெற்றியையும் தொட்டுப் பார்க்க அதுவோ . அதிக அளவு சூடாக இருக்க வேகமாக குழந்தையை தூக்கிக் கொண்டான்….
“ உடம்பு இவ்வளவு சூடா இருக்குது இந்த ஜுரம் எதனால வந்ததுன்னு தெரியுமா ..?”என்று அவளிடம் கேட்க…
“ அது என்னோட டார்லிங் மழையில நல்ல நினைச்சுருச்சு… நான் சொல்ல சொல்ல அவ கேட்கவே இல்லை ..,அதனாலதான் அவளுக்கு இவ்வளவு ஜுரமா இருக்குது … நான்தான் அப்புறம் விஹி குட்டிக்கு போன் பண்ணி வர சொன்னேன்” என்று அந்த சிறுவனும் விதுரன் கேட்டதற்கு வேகமாக பதில் சொல்ல….
அதை எல்லாம் கேட்டுக் கொண்டவன் விகிதாவின் பக்கமாக திரும்பி காட்டன் துணி இருந்தா எடுத்து கொடு … என கேட்க …
வேகமாக அவள் இல்லை என்று தலையசைத்தவுடன் கர்ச்சீப் இருக்குதா என்று கேட்க ,,?
ஹ்ம் அங்கிள் என்கிட்ட இருங்க …. என சொல்லி கொண்டே அந்த சிறுவன் கொடுக்க …
“அதை வாங்கி கொண்டவன் தண்ணீரில் நனைத்து விட்டு , இங்க கிட்சன் ஏதாவது இருக்கிறதா ..?”என்று அவளிடம் கேட்க…
ஹான் இருக்குது என்று அவள் சொல்லியவள் எங்கே இருக்கிறது என்று அவன் கேட்டதற்கு.., அதையும் அவள் சொல்ல வேகமாக அவள் சொன்ன இடத்தை நோக்கி சென்றான்….
“ இப்போ எதுக்கு இவன் கிச்சனை பற்றி கேட்கிறான்..? என்று ஒன்றுமே புரியாமல் டேய் இவளை பார்த்துக்கொள் நானும் அவர் கூட போய் என்னன்னு பாத்துட்டு வந்தரேன்” என்று சொல்லியவள் அவன்னின் பின்னாலே போக.., அங்கு அவனும் அங்கு உள்ளவர்களிடம் சில பொருட்களைக் கேட்டுக் கொண்டு அவன் ஏதோ ஒரு கசாயத்தை ரெடி செய்து கொண்டிருக்க.., அவனின் பின்னால் போனவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்….
நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க..? என்று அவனிடம் கேட்க…
அவனும் அவளிடம் எதுவும் பேசாமல் ஒரு நிமிடம் அமைதியாக இரு… என்பது போல் கைகளால் ஜாடை காட்டியவன்… அவன் அந்த கசாயத்தை முழுவதுமாக ரெடி செய்து விட்டு அவளின் பக்கமாக வந்து அந்த கிளாஸ்யினை அவளிடம் கொடுத்தான்…
“இந்த கசாயத்தை இப்படியே வச்சிருந்து மூன்று வேலை அந்த குழந்தைக்கு கொடுத்த கண்டிப்பா அந்த குழந்தைக்கு இருக்கிற சளி காய்ச்சல் இருமல் எல்லாமே போயிரும்” என்று சொல்லிக்கொண்டே வா போகலாம் என்று அவளையும் கூட்டிட்டு அந்த சிறு குழந்தையின் ரூமிற்கு சென்றான்…
இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா ..!!! என்று ஆச்சரியமாக நினைத்துக் கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் அவனின் பின்னாலே செல்ல ..,அங்கு அவனும் குழந்தையை மடியில் வைத்து இன்னொரு கிளாசில் கொஞ்சமாக கசாயத்தை கொடுத்து அந்த குழந்தையிடம் கொடுக்க அதுவோ வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தது அழுது கொண்டே…
உனக்கு ஊசி வேணுமா வேண்டாமா ..? என்று அந்த குழந்தையிடம் மழலையாக அவன் பேச…
அச்சச்சோ எனக்கு ஊசி வேண்டாம்.. அது ரொம்ப வலிக்கும் .. நான் ஊசி போட மாட்டேன்… எனக்கு வேண்டாம் மாத்திரையும் வேண்டாம் அதுவும் ரொம்ப கசக்கும் என்று அந்த சிறு குழந்தை கண்களில் கண்ணீர் வடிய சொல்லிக் கொண்டு இருந்தது அவனிடம்….
“அப்போ ஓகே நீ இந்த கசாயத்தை கொஞ்சம் கொடுக்கிறேன் ஆனால் த்ரீ டைம்ஸ் இந்த கசாயத்தை குடிச்சிடனும் …. அப்பதான் உனக்கு ஊசி போட மாட்டாங்க … எந்த கசப்பான மருந்து .., இனி எதையும் கொடுக்க மாட்டாங்க ..அப்புறம் என்னோட ஃபேவரிட் என்னன்னு தெரியுமா… இனி இந்த கசாயத்தை குடிச்சா மட்டும் தான் நான் உன்னை வெளியில் கூட்டிட்டு போவேன்….. பெரிய பெரிய அனிமல்ஸ் எல்லாமே காமிப்பேன். உனக்கு அனிமல்ஸ்னா ரொம்ப இஷ்டமாமே… நான் உனக்கு காமிக்கட்டா வெளியில் கூட்டிட்டு போகட்டுமா நீ பாக்குறியா..? ஆனால் அதுக்கு முன்னாடி இந்த கசாயத்தை குடிக்கணும் எப்படி..?” என்று அந்த குழந்தையிடம் அவன் குழந்தை தனம் மாறாமல் பாவனையுடன் அந்த குழந்தை இடம் பேச….
“ஓகே மாமா… என்று அந்த சொல்லிய அந்த குழந்தையும் வேகமாக விகிதாவின் பக்கமாக திரும்பி…, எனக்கு அந்த கசாயத்தை கொடுங்கள்” என்று சொல்லிய விகிதா வேகமாக அந்த சிறு குழந்தையுடம் கொடுக்க …,, அதை வாங்கிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தது … எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பண்ணாமல்….
“டேய் பொடி பையா இந்த கசாயத்தை உன்னோட டார்லிங்க்கு இன்னும் ரெண்டு வேலை கொடு .. மறக்காம சரியா.., காலையில எந்திரிச்ச உடனே கொடுக்கணும் …,அப்புறம் மதியமா கூட எப்படி இருக்குன்னு எனக்கு போன் பண்ணி சொல்லு… இந்தா என்னோட நம்பர்” என்று சொல்லிக் கொண்டு அங்கு ஒரு பென்சில் இருக்க அந்த பென்சிலில் சுவற்றில் அவன் நம்பரை எழுதியவன் அதே நேரம் அதற்கு மேலே விதுரன் என்ற பெயரையும் எழுதியிருக்க அதையெல்லாம் பார்த்துக் கொண்டவளின் மனக்கண்ணில் அவனின் போன் நம்பரை பதித்துக் கொண்டாள்…
அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே தான் அந்த போன் நம்பரை எழுதினான் …எங்கு அவள் பார்க்கிறாளா ..? என நினைத்து கொண்டே அவன் எழுதி இருக்க … ஆனால் அவன் பார்க்காத பொழுது பார்த்த அவளின் எண்ணங்களோ அந்த போன் நம்பரில் பதிந்து போயிருக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் … விதுரன் – விஹிதா … வாவ் எனக்கும் அவருக்கும் எவ்வளோ ஓற்றுமை இருக்குது … நினைக்கும் போதே செமயா இருக்குது … அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது முரட்டுத்தனமாக எல்லோரிடமும் திமிராக கோபத்தை காட்டிக் கொண்டிருக்கும் ஆண் மகனோ இன்று குழந்தையாக மாறிப் போய் இருந்ததை நினைத்து சற்று ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாக இருந்து …, இவனை மட்டும் தான் இப்பொழுது இந்த இடத்திற்கு கூட்டிட்டு வராவிட்டால் …, இப்பொழுது பார்க்கும் இந்த குழந்தைத்தனமான முகத்தை தான் பாத்திருக்க மாட்டோமோ என்ற எண்ணமும் அவளுள் வர அவனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் அறியாமலே…
மான்விழியால் வருவாள்….