16 – உள்நெஞ்சே உறவாடுதே!

4.6
(13)

உனக்காய் சிந்திக்கும்
என்னுள்ளத்திடம் என்னவென்று
விளக்குவேன் அன்பே…

என்னுள்ளே தான்
உன்னுயிரும் வீற்றிருப்பதை…

உனக்காக உன்னைப் பிரியவா?
அல்லது
எனக்காக என்னையே பிடுங்கிடவா?
உயிர்வதை
உணர்கிறேன் என்னுயிரே!

———————

இதழ் முத்தத்தில் இருவரும் திணறும் நேரம் இடைவெளிகள் இன்னும் குறைந்து போனது.

மூச்சிரைக்க அவனிடம் இருந்து விடுபட்டவளுக்கு, அவனது தீண்டல்கள் மட்டும் புது பரவசம் தந்தது.

“உனக்கு ஃபைவ் மினிட்ஸ் வேணுமா?” ஷக்தி மகிழவன் வினவ, “ஹான் எதுக்கு?” எனக் கேட்டாள் அவனைப் பாராமல்.

“எப்பவும் கிஸ் பண்ணா டைம் கேட்பியே ருதிடா” என்றபடி அவனால் கசங்கிய அவளது உடையை சரி செய்தான்.

“உங்களால எப்படி டக்குன்னு இதுல இருந்த வெளில வர முடியுது. எனக்கு இந்த ஃபீல் போகவே ரொம்ப நேரம் ஆகுது” பிரகிருதி வியப்பாக கேட்க,

“இதெல்லாம் நான் எக்ஸ்பிரஸ் மட்டும் தான் பண்ண முடியும் ருதி. உள்ளுக்குள்ள ஃபீல் பண்ண முடியாது. ஃபீல் பண்ணுனாலும் புரியாது” என்றவனின் விரல்கள் அவளது விரல்களோடு கைகோர்த்து கொண்டது.

“அப்போ இது உங்களுக்கு சந்தோஷத்தை குடுக்கலையா?” பிரகிருதி லேசான வாட்டத்துடன் கேட்டதும்,

“அப்படி இல்ல. உன்கூட இந்த மாதிரி நெருக்கமா இருக்குறது என்னவோ மாதிரி… ம்ம்… எனக்கு கம்ஃபர்ட்டா… ம்ம்ம்ம்ம்…” என யோசிக்கத் தொடங்க, “பிடிச்சிருக்கா?” என்றாள் அவன் மீசையை திருகியபடி.

“ம்ம் எஸ். பிடிச்சுருக்கு… ஐ திங்க் சோ! இப்படி நெருக்கமா இருக்கும்போது உன்னோட ஹீட், உன் முகத்துல வர்ற ரெட், என் முடியை இறுக்கமா பிடிச்சிருக்குற உன் கை…” இன்னும் என்ன என்ன சொல்வானோ என்ற பதற்றத்தில் வேகமாக வாயை மூடினாள்.

“போதும் போதும் எனக்குப் புரியுது. உங்களால இந்த மொமெண்ட்டை ஃபீல் பண்ண முடியலைன்னாலும் என்னோட எக்ஸ்பிரெஷன், என்னோட சிரிப்புக்காக இப்படி எக்ஸ்பிரஸ் பண்றீங்க அப்படி தான?” என்றாள் வேகமாக.

“ம்ம்… ஏன் நான் தப்பா சொல்லிட்டேனா ருதிடா?” ஷக்தி பாவமாகக் கேட்டதும், மெல்லச் சிவந்தவள் “இல்ல… ரொம்ப வெளிப்படையா சொல்றீங்க. எனக்கு வெட்கமா வருது” என்றபடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“எங்க காட்டு…” அவசரமாக அவள் முகத்தை நிமிர்த்தியவனின் இதழ்கள் மெல்லப் புன்னகைத்தது.

“ஆமா ஷையாகுற!” என ரசனையுடன் கூறி விட்டு, சிவந்த நிறங்களில் எல்லாம் முத்தமிட எத்தனித்தான். அவளது ஒத்துழைப்பும் கிடைக்க, முகம் தாண்டி கழுத்திற்கு பயணம் செய்தது அவன் இதழ்கள்.

இதழீரம் படர்ந்த இடங்களெல்லாம் இன்பமாய் துவண்டது. கழுத்தினுள் அவனது மீசை உராய்ந்து உறையச் செய்தாலும், அவனைத் தள்ளி விட துளியும் பிரியமில்லை அவளுக்கு.

அடுத்து என்ன செய்வது எனக் குழம்பி நின்றது அவன் தான். ஆணுக்கும் பெண்ணுக்குமான கூடல் இப்படி தான் படிப்படியாக நிகழும் என்பது வரை அவனுக்குத் தெரியும் தான். உணர்ந்து செயல்படவில்லை என்றாலும், அந்த இதம் அவனை நிச்சயம் அடைந்தே தீரும். ஆனால், அவளுக்கு முத்தம் மட்டும் தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தாண்டிச் சென்றால், அவளால் நிச்சயம் தாள இயலாது எனப் புரிந்தவனாக மெதுவாக விலகினான்.

பட்டென விலகினாலோ, அவன் உடனே அடுத்த வேலையைப் பார்த்து சென்றாலோ அது அவளைக் காயப்படுத்துகிறது என்பதை அவ்வப்பொழுது அவளது முகமாற்றம் கண்டு, அவள் பேசுவதை வைத்து கணக்கிட்டிருந்தான்.

அதனாலேயே அவளை நெஞ்சில் போட்டு தட்டிக்கொடுத்து சில நிமிடங்கள் தான் உணராத உணர்வுகளை அவள் உணர்ந்திட நேரம் கொடுத்திட்டான்.

அது அவளை அதிகமாக நெகிழ வைக்க, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு “மகிழ்…” என அழைத்தாள்.

“ம்ம் ருதிடா!”

“நமக்கு பேபி பிறக்குமா?”

லேசாய் புருவம் சுருக்கியவன், “வை நாட். ரெண்டு பேருமே ஃபிசிக்கலி நார்மல் தான. ப்ராப்பரா இன்டிமேஷன் நடக்கும்போது சான்சஸ் ஆர் தேர்…” என்றான்.

அதில் சிரித்து விட்டவள், “ரொமான்டிக்கா சொல்ல வேண்டிய டயலாக ஏதோ செமினார் நடந்தா மார்க் கிடைக்கும்ன்ற மாதிரி சொல்றீங்க மகிழ்…” எனக் கிண்டல் செய்தாள்.

இதை எவ்வாறு ‘ரொமாண்டிசைஸ்’ செய்வது எனப் புரியாதவனாக அவன் விழிக்கத் தொடங்க, அதில் வாய்விட்டே சிரித்து விட்டாள்.

“எதுக்கு சிரிக்கிற?” ஷக்தி புரியாது வினவ,

“சிரிப்பு வந்துச்சு உங்களைப் பார்த்து… அதை விடுங்க. நேத்து ஒரு ஸ்கேன்க்கே பயமா இருந்துச்சு. பேபி பிறக்குறப்ப ஹேண்டில் பண்ண முடியுமா? அதுக்கு அப்பறம்…” என ஆரம்பிக்க, ஷக்தி புன்னகைத்தான்.

“என்னவாம்?” இடுப்பில் கை வைத்து அவள் முறைக்க,

“சிரிப்பு வந்துச்சு உன்னைப் பார்த்து” அவனும் அவளை போலவே வாரினான்.

“பாருடா ஜோக்கெல்லாம் வருது!” பிரகிருதி சிலுப்பிக்கொள்ள,

“முதல்ல நமக்குள்ள ப்ராப்பர் இண்டர்கோர்ஸ் நடக்கணும் பேபி. நீ டைரக்டா டெலிவெரி போய்ட்டியே” என்றதும் சிவந்து போனாள்.

“ஏன் நடக்காதாக்கும்…” நாணம் சூழ அவள் கூற,

“நடக்கும் ஆனா எப்படினு எனக்குப் புரியல ருதிடா. நீ மெண்டலி ஃபிசிக்கலி ப்ரிப்பேர் ஆகணும். முதல்ல உன்னைப் புருஞ்சு நான் எக்ஸ்பிரஸ் பண்ணனும். நீயோ ஷையானா என்னைப் பார்க்கவே மாட்டுற. உன் கண்ணைப் பார்க்காம, நீ வாய் வார்த்தையா உனக்கு கம்ஃபர்ட்டா இருக்குனு சொல்லாம, என்னால அடுத்தடுத்து எக்ஸ்பிரஸ் பண்றது கஷ்டம்டா…” என்றான் வருத்தமாக.

அவனது மனநிலை புரிந்தவளாக, “நானும் உங்க கண்ணைப் பார்க்கணும்னு தான் நினைக்கிறேன் மகிழ். நீங்க குறுகுறுன்னு பாக்குறீங்களா அது என்னை கண்ணை மூட வச்சுடுதே” என உதட்டைப் பிதுக்கினாள்.

“நான் நார்மலா தான் பாக்குறேன்” மகிழுக்கு அவளது பாவனை குறுநகையைக் கொடுத்தது.

“ம்ம்க்கும் உங்களை ஃபேஸ் பண்ற எனக்கு தான தெரியும். உங்க கண்ணுல வர்ற ஒட்டு மொத்த ஃபீலிங்க்ஸும் என் நெஞ்சை உடைச்சு உள்ள போய் உக்காந்து என்னை நடுங்க வைக்கிறத…” என சிலுப்பினாள் பிரகிருதி.

“ரியலி? என் கண்ல ஃபீலிங்ஸ் தெரியுதா என்ன…?” அவன் வியப்புடன் கேட்க,

“எனக்கு மட்டும் தெரியும்” என்றாள் தலைசாய்த்து.

இதயம் மெல்ல நழுவி கரைந்தது ஷக்தி மகிழவனுக்கு.

அதில் தனது லேசர் பார்வையால் மீண்டும் அவளை ஆட்டுவிக்க, அந்தப் பார்வை தரும் இதத்தை அனுபவித்தபடியே மெல்ல முகம் மாறினாள் பிரகிருதி.

“சரி இதெல்லாம் விடுங்க. பேபி பிறந்தப்பறம் நம்மளால தனியா மேனேஜ் பண்ண முடியுமா மகிழ். எனக்குத் தெரிஞ்சு நம்ம ரெண்டு வீட்டு ஆளுங்களும் நம்மளை சேரவே விட மாட்டாங்க. குழந்தையெல்லாம் பாத்துக்குவாங்களான்னு தெரியல…”

“அவங்க ஏன் பாத்துக்கணும்?”

“பேபிக்கு குறிப்பிட்ட வயசு வந்தப்பறம் நம்ம ஈஸியா மேனேஜ் பண்ணிடலாம் மகிழ். ஆனா பார்ன் பேபிக்கு நம்மளோட அட்டென்சன் ரொம்ப தேவைப்படும். நைட்டெல்லாம் முழிச்சு இருக்கணும். உங்க ரொட்டின் மாறும். என் மைண்ட்செட் மாறும். போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் எல்லாம் இருக்காமே. நார்மலாவே நான் டிப்ரெஷன்ல தான் சுத்துவேன். அந்த நேரத்துல உங்களுக்கும் எனக்கும் புரிதல் இல்லாம போய்ட்டா? பேபியை நான் மட்டுமே பாத்துக்க முடியாது. நீங்களும் உங்க ரொட்டினை விட்டு வர முடியாது. அதான் ஒரே குழப்பமா இருக்கு மகிழ். அதுனால தான் அத்தை உங்களுக்கு நார்மல் பொண்ணை மேரேஜ் பண்ண நினைச்சுருப்பாங்களோ. அப்படின்னா அந்தப் பொண்ணே பேபியை பார்த்துக்கும். இப்ப என்னால அது தனியா முடியாதுல” கிட்டத்தட்ட அழுகும் நிலைக்குச் சென்றாள்.

“ம்ம் ஆமா… உன்னால முடியாது. அதனால தான் உன் வீட்லயும் உனக்கு நார்மல் பையனா பார்த்து மேரேஜ் பண்ண நினைச்சுருக்காங்க. இப்போ என்ன பேபியை நம்மளால பார்த்துக்க முடியாதுன்னு ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டலாமா?” அமைதியாய் நிதானமாய் தனது கோபத்தை வெளிக்காட்டினான் ஷக்தி.

முணுக்கென கண்ணில் நீர்கோர்க்க, “மகிழ்…” என்றாள் பரிதாபமாக.

அவன் மட்டுமே போதுமென வாழ்நாள் முழுக்க இருந்து விட இயலும் அவளுக்கு. ஆனால், தங்களுக்கென ஒரு குடும்பம் வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. அதை விட, தங்களுக்கென குழந்தை பிறந்து விட்டால், இரு வீட்டுப் பெரியவர்களும் அமைதியாகி விடுவார்கள் என்ற நட்பாசையும் ஏற்பட்டது.

அவனுடன் உயிர் உருக வாழ ஆசை. அந்த ஆசைக்குப் பின்னால் அவளும் அவனும் தடையாக இருப்பது இருவருக்குமே புரிந்தது.

அதற்காக இருவரும் பிரிந்து வாழ்ந்திட துளியும் விரும்பவில்லை.

ஷக்தி ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட, “ஆர் யூ ஓகே மகிழ்?” எனக் கேட்டாள்.

“ஐ ஆம் ஓகே” ஷக்தியின் இந்தக் கூற்றிலேயே அவனது கோபம் புரிந்திட,

“என்மேல கோபமா இருக்கீங்க மகிழ். ப்ளீஸ்… சாரி” என்றாள் அவனை இறுக்கி அணைத்து.

அவனுக்கும் அவள் மீது இருக்கும் கோபம் புரிபட, “நமக்குன்னு ஒரு லைஃப் வேணும்னா ஸ்ட்ரகிள் இருக்க தான் செய்யும் ருதிடா. நம்ம வீட்ல யாரும் ஹெல்ப் பண்ணலைன்னாலும் பரவாயில்ல. நீ சொன்ன மாதிரி பேபிக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வர்ற வரை ஹெல்ப்புக்கு ஆள் வச்சுக்கலாம். நம்மளும் மெண்டலி ஃபிசிக்கலி ரெடியாகிக்கலாம். டாக்டர்ட்ட ஆஃப்டர் பேபி, நம்ம ஸ்ட்ரெஸ் ஏத்திக்காத மாதிரி கவுன்சிலிங் போய்க்கலாம். இதுல என்னை விட அதிகம் ரெடி ஆக வேண்டியது நீ தான். எனக்கு இது மெண்டலி ப்ரிபெரேஷன் மட்டும் தான். உனக்கு அப்படி இல்ல. உன்னால முதல்ல செக்ஸ், ப்ரெக்னன்சி, டெலிவரி இதெல்லாம் ஹேண்டில் பண்ண முடியுமா? அதுவும் என்னை வச்சுக்கிட்டு…” இறுதி வரியில் அவனிடம் சிறு வலி.

அதில் விருட்டென அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், “அதென்ன உங்களை வச்சுக்கிட்டு? இப்ப நான் உங்க மேல கோபமா இருக்கேன்…” என்று கையைக் கட்டிக்கொண்டு மறுபுறம் திரும்பினாள்.

அவளை சமாதானம் செய்ய தெரியாதவனாக, அவளைப் பின்னிருந்து அணைத்து கழுத்து வளைவில் முத்தமிட்டான்.

ஓர் முறை சிலிர்த்து அடங்கிய மேனியை உணர்ந்து அவனுக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு.

“இதென்ன சாரி சொல்லி சமாதானம் செய்யாம ஈஸியா எஸ்கேப் ஆகுற ட்ரிக்கா?” அவனது அணைப்பு பிடித்திருந்தாலும் வீம்பாய் சண்டை இட்டாள்.

“இப்படி பண்ணா நீ என்கிட்ட நார்மலா பேசிடுவன்னு நினைச்சேன் ருதிடா. உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா?”

அவளிடம் சிறு அமைதி.

மீண்டும் அவளது பின்னங்கழுத்தில் முத்தமிட, உருகி கரைந்தவள், “என்னை கொஞ்ச நேரம் கோபமா இருக்க விடுங்களேன்…” எனப் பொய் கோபம் காட்டினாள்.

அவளது இதழ்கள் புன்னகைக்க துடிப்பதிலேயே புரிந்தது அவள் தன்னிடம் விளையாடுகிறாளென.

“ஓகே… நீ சைலண்டாவே இரு. நான் முத்தம் குடுத்து உன்னை ரிலாக்ஸ் ஆக்குறேன்…” அவனும் சின்ன நகையுடன் அவளை நெருங்க, அவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தவள்,

“நம்ம ரெண்டு பேருக்கும் பேசிக் புரிதலுக்கு வந்தா தான், நமக்குன்னு ஒரு பேமிலியை உருவாக்க முடியும். என்னால உங்களை தவிர யார்கூடவும் வாழ முடியாது. உங்களாலயும் முடியாது. சோ, மாறி மாறி ஃபீல் பண்ணிக்காம, முடிஞ்ச அளவு ஃபேஸ் பண்ணலாம். ஓகே வா?” எனக் கட்டை விரலைத் தூக்கிக் காட்ட, அவனும் “டீல்” என்றான்.

“அப்போ ஃபேஸ் பண்ணலாமா?” என்றபடி அவளது இடையைச் சுற்றி வளைத்த ஷக்தியின் கரங்களில் விரும்பியே விழுந்தாள் பிரகிருதி.

இருவரின் கொஞ்சல்களிலும் சிறு எதிர்பார்ப்பு இருந்தது. ஆகினும் எல்லை மீறும் தயக்கம் இருவருக்கும் நிறைந்திருக்க, பார்வையாலேயே கண்ணாமூச்சி விளையாடினர்.

—-

“இதெல்லாம் சரிப்படாதுங்க. முடிச்சு வச்சுடலாம்!” லேகா கூறியதும் பிரகாசம் திகைத்தார்.

“என்ன லேகா இது. ஷக்திக்கு பிரகாவைப் பிடிச்சுருக்கு. இவ்ளோ சீக்கிரம் அவன் அவளோட அட்டாச் ஆனது பெரிய விஷயம் . வேற யாரைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் இந்த அளவு பிரச்சினை வராம இருந்துருக்காது!” பிரகாசம் புரிய வைக்க முயல லேகாவினால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை.

“என்னங்க பேசுறீங்க. நம்மகிட்ட பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணிருக்காங்க. இதுக்கே நியாயமா நம்ம கேஸ் போடனும்!”

“அதே கேசை அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம மேல போட்டா?”

“போடுவாங்க போடுவாங்க… நம்ம பையனுக்கு ஒன்னும் பெரிய குறை எதுவும் இல்ல. சைலன்ட் டைப். அறிவு அதிகம். அதனால தான இவ்ளோ பெரிய பிசினஸ்மேனா இருக்கான். அந்தப் பொண்ணு ஆஃப்டரால் ஒரு ஆர். ஜே” என்றார் இளக்காரமாக.

பின், “நம்ம வக்கீல்ட்ட பேசுங்க” எனத் தீர்மானமாக கூற, பிரகாசம் பெருமூச்சுடன் வக்கீலிடம் பேசினார்.

வக்கீலோ, “மியூச்சுவலா பிரியணும்னா அது பண்ணிக்கலாம்ங்க. ஆனா, ஒத்துமையா இருக்குறவங்களை எப்படி டைவர்ஸ் வாங்க வைக்கிறது?” என்றார் தயக்கமாக.

பிரகாசம் இதனை லேகாவிடம் கூற, “என்னங்க பேசுறீங்க. ரெண்டு பேருமே மூளை வளர்ச்சி இல்லாதவங்க. இவங்க எப்படி ஒண்ணா வாழ முடியும்? என் பையனுக்கு நல்லாருக்குற பொண்ணைக் கட்டி வச்சு பேரன் பேத்தி பாக்கலாம்ன்னா, இவளும் அரைகுறை அறிவோட இருந்தா குழந்தை எப்படிங்க நல்லபடியா பிறக்கும்?” என எரிச்சலாய் மொழிந்தார்.

“நம்ம மகனுக்கும் மருமகளுக்கும் மூளை வளர்ச்சி இல்லாம இல்ல. அதுல சில குறைபாடு அவ்ளோ தான். ரெண்டு பேரும் பாக்கவும் பழகவும் நார்மலா தான இருக்காங்க. சின்ன சின்ன குறைகளை நம்ம பெருசு படுத்த வேணாம் லேகா” பிரகாசம் மனையாளிடம் கெஞ்சினார்.

“சின்ன சின்ன குறையா? பெத்த அம்மா உக்காந்து ஒரு மணி நேரத்துக்கு அழுதாலும் என்னன்னு கேட்க மாட்டான் உங்க பிள்ள. இவன் வயசு பசங்கள்லாம் சிரிச்சு சிரிச்சு பேசுறதுலாம் பாக்குறப்ப வயிறு எரியுது. எந்த உணர்ச்சியும் காட்டாம அவன் இருந்துட்டுப் போயிடுவான். வலிக்கிறது எனக்கு தான. அவனுக்குன்னு வர்ற வாரிசாவது அவனை மாதிரி ஆட்டிசம் இல்லாததா இருக்கணும்னு ஆசைப்படுறது தப்பா.

அந்த மாதிரி வலை வீசி பொண்ணு தேடுனா, உங்க மருமக என் தலைல வந்து விழுந்துருக்கா. யாராச்சு திடீர்னு இறந்தா கூட உங்க மருமகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லி அவளை மெண்டலி தயார் படுத்தணுமாமே. இவங்களுக்குள்ள முதல்ல எப்படி வாழ முடியும்னு நினைக்கிறீங்க. உணர்வே வராதவனுக்கும், தொட்டாலே பதறுறவளுக்கும் எப்படிங்க குழந்தை பிறக்கும்? கொஞ்சமாவது யோசிச்சுப் பேசுங்க…” எனக் குமுறும் போதே,

“ரொம்ப நல்லாருக்கு” என்ற ரவிதரனின் குரல் கேட்டது.

லேகாவை சமாதானம் செய்யும் பொருட்டு ஆர்த்தியும் ரவிதரனும் அங்கு வந்திருக்க, வந்தவர்கள் ஷக்தியும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்து கொந்தளித்தனர்.

“எங்களை ஏமாத்தி காசு பணத்தைக் காட்டி உங்க பையனை எங்க தலைல கட்டி வச்சுட்டு, இப்ப என்னமோ நாங்க ஏமாத்துன மாதிரி துள்ளிட்டு இருக்கீங்க?” ரவிதரன் எகிறிட,

ஆர்த்தியோ, “மறுவீட்டுக்கு வந்தப்பவே அந்தப் பையன் நடவடிக்கை எதுவும் சரி இல்ல. என்னடின்னு கேட்டதுக்கு பிரகா நல்லா சமாளிச்சா. அப்பவே எனக்கு சந்தேகம் வந்துருக்கணும். இப்படி என் பொண்ணு வாழ்க்கையை அழிச்சுட்டீங்களே” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

பிரகாசம் அவர்களையும் சமாதானம் செய்ய எத்தனிக்க, லேகாவுடன் சண்டை வெடித்தது தான் மிச்சம்.

“இனி என் பொண்ணை இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம். இப்பவே கூட்டிட்டுப் போறோம்” என ஆர்த்தி வெடிக்க,

“தயவு செஞ்சு அவளைக் கூட்டிட்டுப் போய்டுங்க. அவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு” என லேகா கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார்.

பிரகிருதி ரேடியோ ஸ்டேஷனில் இருப்பது அறிந்து ஆர்த்தியும் ரவிதரனும் ஒரு முடிவோடு அவளைப் பார்க்கச் செல்ல, இங்கு லேகா வரக்கூறியதில் ஷக்தி மகிழவன் தாய் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவன் முன்னே விவாகரத்து பத்திரத்தை நீட்டிய லேகா, “இதுல சைன் பண்ணு ஷக்தி” என்றார்.

அவனோ அமைதியாக நிற்க, “இதை உனக்காக நான் சொல்லல. பிரகாவுக்காக சொல்றேன்” என சாமர்த்தியமாக மகனிடம் மாற்றி பேசியதில் அவன் புருவம் சுருக்கினான்.

“நீயே யோசிச்சு பாரு. உன்னைப் புருஞ்சுக்குற அளவு அவளுக்கு மெச்சூரிட்டி இல்ல. பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு ரொம்ப பெருசு ஷக்தி. அவள் சிரிச்சா கூட சேர்ந்து நீ சிரிக்கணும், அழுதா ஆறுதல் சொல்லணும், அவளுக்கு கஷ்டம்னா நீ வார்த்தையால அவளை சரி செய்யணும், அவளுக்கு ஒரு வலின்னா அதை நீ புரிஞ்சுக்கணும். இது எதையும் உன்னால செய்ய முடியாது. வாழ்நாள் முழுக்க சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவளை ஏங்க வைக்கப் போறியா ஷக்தி…” எனத் தனது வாதத்தை அவன் முன் வைக்க, ஷக்தி மகிழவனின் வதனம் இறுகிப் போனது.

பெற்றவர்களை எதிர்பாராத பிரகிருதி முதலில் திகைத்துப் பின் அவர்களின் வற்புறுத்துதலின் பெயரில் விடுமுறை கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

காரை கிளப்பாத ரவிதரன் மகளிடம் வெகு வருடம் கழித்து முகம் கொடுத்துப் பேசினார்,

“அவன் உனக்கு வேணாம் பிரகா!” என்று.

பிரகிருதி பதில் பேசாது அமைதியாய் இருக்க, ஆர்த்திக்கோ ஏற்கனவே ஒருமுறை அவனுக்காக அவள் கோபம் கொண்டது நினைவில் ஆடியது.

அதில் சட்டென பேச்சை மாற்றி, “ஷக்திக்காக தான் உங்கிட்ட நாங்க பேசிட்டு இருக்கோம் பிரகா. உன்னால ஷக்திக்கு என்ன சந்தோஷத்தை குடுத்துட முடியும்னு நினைக்கிற. உன்னோட ப்ராப்ளமே ரொம்ப பெருசு. இதுல அவனோட அம்மாவோட எதிர்ப்பை மீறி அவன் கூட வாழ நினைச்சா உனக்கு ஒன்னும் பெரிய லாஸ் இல்ல. ஆனா அவனுக்கு தான் பெத்தவங்க சப்போர்ட்டும் போய், அவனை ப்ராப்பரா புரிஞ்சுக்கிட்டு வாழத் தெரியாத ஒரு பொண்ணோட வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணும். இந்த விஷயத்துல செல்ஃபிஷா யோசிக்காத பிரகா! கிளம்பி வா. நம்ம போகலாம்” என நாசுக்காக மகளின் மனதில் காயம் ஏற்ற, பிரகிருதியின் விழிகளில் குளம் கட்டி நின்றது.

உறவு தொடரும்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!