கனவு -28
கௌதமின் பாராமுகம் சாயராவை மிகவும் பாதித்திருந்தது.
மருத்துவமனையில் இருந்து விரைந்து வந்த சாயரா தன்னுடைய அறைக்குள் பாய்ந்து சென்று கதவை சத்தமாக அடைத்தாள்.
அவளுடைய மார்பு துடித்துக் கொண்டிருந்தது, மூச்சுகள் வேகமாக எரியும் போல பாய்ந்தன.
“கௌதம் என்னை எத்தனைமுறை தள்ளிப் போட போற முன் ஜென்மத்தில் எனக்கு கிடைக்காத நீ இந்த ஜென்மத்துல எனக்கு நீ கிடைச்சே தீரணும் அதுக்கு தடையா யாரு வந்தாலும் உயிரோட விடமாட்டேன்”
அவளது கண்கள் சிவந்து எரிந்தன. மேசையின் மேல் இருந்த கண்ணாடி குவளை ஒன்றை அவள் தன் கோபத்தில் எடுத்து சுவரில் அடித்தாள்.
சிதறிய கண்ணாடித் துண்டுகள் தரையில் பறந்து விழுந்தன.
“நான் உன்னோட பக்கத்தில் வர முயற்சி பண்ணா நீ என்னைத் தள்ளுறியா”
அவள் சத்தமாக கத்தியது அறைக்குள் முழங்கியது.
அவள் தன்னுடைய கைகளைக் குத்தி வைத்துக் கொண்டு நடுங்கியபடி சொன்னாள்:
“கௌதம் உனக்கு துவாரகான்னா உயிர்னு நினைச்சிக்கோ… ஆனா எனக்கு நீயே உயிர் என்னைத் தள்ளிவிட்டாலே நான் சும்மா இருக்க மாட்டேன். என் காதலைத் தடுக்கிற யாரையும், யாரையும் நான் சகிக்க மாட்டேன்”
அந்தக் கோபக் குரல் அறையை அதிர வைத்தது.
கண்ணாடி சிதறல்கள் அவளது பாதத்தின் கீழ் சிணுங்க, அவள் தீக்கனலான பார்வையுடன் கதவை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கு கௌதமோ துவாரகாவிடம் அவன் பேச பேச அவளுடைய ஆழ்மனதில் அவனுடைய குரல் தெளிவாக கேட்க ஆரம்பித்தன.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய விழிகளை திறக்க முயற்சித்தால் துவாரகா.
“ப்ளீஸ் துவாரகா தயவு செஞ்சு கண்ணை திறந்து பாரு நீ இல்லாம என்னால நிம்மதியாக இருக்க முடியல.
என்னோட ஒட்டுமொத்த சந்தோஷமே நீ தான் துவாரகா.
தப்புதான் என்னோட தப்பு தான் அந்த ஒரு வாரமும் உன்னை நான் கவனிக்க தவறுனது என்னோட தப்பு தான் துவாரகா நான் உன் பக்கத்துல இல்லாம அந்த கனவோட நினைப்புல நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க.
என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமடி அவ்வளத்தியும் தூக்கிப்போட்டு ஓடி வந்து இருப்பேன் என்கிட்ட மறைச்சிட்டியே நானும் அதை முட்டாள் மாதிரி நம்பிட்டேன் இல்லனா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது நான் பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை கொடுக்கணும் துவாரகா
(“எப்படி இதுக்கு முன்னாடி தண்டனைன்னு சொன்னியே கௌதம் அப்படியா அப்போ சீன் இருக்கா”
“யோவ் ரைட்டர் நானே செம்ம கடுப்புல இருக்கேன் ஒழுங்கா வந்த வழியே ஓடிரு”
“அய்யய்யோ ஆத்தி நமக்கு எதுக்கு வம்பு ஓடிருவோம்”)
அது நீ தான் கொடுக்கணும் உன் கையால கொடுக்கணும் எழுந்து வா இதுக்கு மேலயும் என்னை நோகடிக்காம என்கிட்ட வந்துருடி”
என்றவன் அவளுடைய வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.
அவனுடைய விழி நீரோ அவளுடைய வயிற்றை நனைத்தது.
தன்னுடைய இமைகளை மெதுவாகத் திறந்தாள் துவாரகா.
தான் எங்கே இருக்கிறோம் என்று தன்னுடைய விழிகளை அந்த அறை முழுவதும் சுழல விட்டாள்.
பின்பு தன்னுடைய வயிற்றில் ஈரமுணர்ந்து விழிகளை தாழ்த்தி பார்க்க அங்கு அவளுடைய கணவன் சிறு குழந்தை போல் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதை கண்டவளோ தன்னுடைய கையை உயர்த்தி அவனுடைய தலையை வருடியவாறு மெதுவாக,
“க க கௌதம்”
என்று அழைத்தாள்.
அவளுடைய கையின் ஸ்பரிசத்திலும் அவளுடைய வார்த்தையின் ஒளியிலும் சட்டென தன்னுடைய தலையை உயர்த்தி பார்த்தவனோ இன்பமாக அதிர்ந்தான்.
“துவாரகா துவாரகா நீ கண் முழிச்சிட்டியா டாக்டர் டாக்டர் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் அப்படியே இரு நான் டாக்டரை கூப்பிட்டு வந்துடுறேன்”
என்றவன் கதவை திறந்து,
“டாக்டர்ர்ர்ர்”
என்று அங்கிருந்தே கத்தினான்.
பின்பு மீண்டும் துவாரகாவிடம் வந்தவன்,
“இங்க பாரு துவாரகா என்ன ரொம்ப பயமுறுத்திட்ட துவாரகா நீ.
நான் எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்னடி செய்வேன்”
என்றவன் அவளுடைய கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
உள்ளே வந்த டாக்டரோ,
“கௌதம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க”
என்றவர் அவளை முழுவதுமாக பரிசோதித்து விட்டு,
“துவாரகா ஆர் யூ ஆல்ரைட் என்ன தெரியுதா உங்களுக்கு”
என்று கேட்டார்.
அவளும் ஆம் என்று தலையாட்ட,
“குட் மிஸ்டர் கௌதம் உங்க வைப் ஷீ சால் ரைட்”
என்று புன்னகைத்தார்.
“நெஜமாவா டாக்டர் சொல்றீங்க துவாரகா உனக்கு ஒன்னும் இல்லையே என்ன உனக்கு யாருன்னு தெரியுதா”
என்று விழிகளில் ஆர்வத்தை தேக்கிக்கொண்டு கேட்டான் கௌதம்.
அவளோ மெதுவாக தன்னுடைய இமைகளை மூடி திறந்து ஆம் என்பது போல சைகை செய்தாள்.
கௌதம் நொடியும் தாமதியாமல் அவளுடைய முகம் முழுவதும் தன்னுடைய இதழால் முத்தமழை பொழிந்தான்.
பக்கத்தில் இருந்த டாக்டர் அமராந்தியோ சற்று சங்கோஜமாக நின்றவர்,
“மிஸ்டர் கௌதம் நானும் இங்க தான் இருக்கேன் உங்க ரொமான்ஸ் வீட்ல போய் வச்சுக்கோங்க இது ஹாஸ்பிடல்”
என்று அவர் சொல்ல அவனோ,
“நீங்க கண்ண மூடிக்கோங்க டாக்டர் இல்ல இந்த ரூம விட்டு நீங்க வெளியே போனாலும் எனக்கு ஓகே தான்”
அவனுடைய கூற்றில் அதிர்ந்த டாக்டரோ,
“கௌதம்”
என்று கத்த அவனோ,
“சாரி சாரி டாக்டர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் நான் அப்போ இப்பவே என் பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா”
என்று ஆர்வமாக கேட்க டாக்டரோ,
“கூட்டிட்டு போகலாம் கூட்டிட்டு போகலாம் நீங்க போயி டிஸ்டார்ஜ் ஆகுவதற்கான ஃபார்மாலிட்டிஸ் பாருங்க நான் துவாரகா கிட்ட கொஞ்சம் பேசணும்”
என்றார் அவர்.
“ஓகே டாக்டர்”
என்றவன் வேகமாக சென்று அனைத்து வேலையும் வெகு விரைவாக முடிக்க இங்கு டாக்டர் அமராந்தியோ அவளிடம் சில பல கேள்விகளை கேட்டார்.
அதற்கு அவள் சரியாக பதிலையும் சொல்ல,
“வெரி குட் துவாரகா கம்ப்ளிட்டா நீங்க ரெக்கவர் ஆயிட்டீங்க அண்ட் கௌதம் தான் பாவம் உங்களை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டார்.
இப்பவும் கௌதம் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்கா அவரு உங்களை விட்டு போய்விடுவார்னு”
என்று அவர் கேட்க,
“இல்ல டாக்டர் என்னோட கௌதம் எனக்காகவே பிறந்தவர் இந்த கனவு ஏன் வந்துச்சுன்னு எனக்கு இப்ப புரியுது டாக்டர் எல்லாமே எனக்கு புரியுது.
என்னோட கௌதம் எப்பவுமே என்ன விட்டுட்டு போக மாட்டார் இனி நான் பாத்துக்குறேன்”
என்று கூறினாள்.
டாக்டர் அங்கிருந்து சென்றுவிட துவாரகாவோ,
“என்னோட கௌதம் பாவம் சாரி கௌதம் நான் அந்த கனவு வந்த போது என்னென்னமோ நெனச்சு உங்கள சந்தேகப்பட்டு வார்த்தைகளால் நிறைய காயப்படுத்தி இருக்கேன் ஆனா இப்ப புரியுது கௌதம் என்னோட கௌதமாதத்தின் எப்பவும் என்ன மட்டும் தான் நேசிப்பார்.
அதை நான் தெளிவா புரிஞ்சுகிட்டேன் இந்த ஜென்மம் எடுத்ததற்கான பயனையும் நான் புரிஞ்சுகிட்டேன்.
ஆனா நம்ம ரெண்டு பேர் மாதிரியும் அந்த சேனபதி சாயராவும் மறுபிறவி எடுத்து இருக்கா.
ஆனா இந்த ஜென்மத்துல அவளால உங்களை நெருங்கவே முடியாது அதுக்கு ஒரு காலமும் நான் அனுமதிக்கவே மாட்டேன் என்னோட கௌதம் எனக்கு மட்டும் தான்.
என்னோட கௌதமாதித்தன் எனக்கு மட்டும் தான் சொந்தம் ஆகணும்”
“அந்த அமையாதேவி எத்தனை பிறவி எடுத்தாலும் என் கையாலேயே அவளைக் கொல்லுவேன்.
இந்த சேனபதி சாயரா கெளதமாதித்தனை அடைஞ்சே தீரவா” என்றவாறு தனக்குள் சூல் உரைத்துக் கொண்டா சாயரா அவளுடைய கையில் அந்த நாணயத்தை சுழற்றிக்கொண்டு இருந்தாள்.
துவாரகாவுக்கு இந்த கனவுகள் வருவதற்கு முந்தைய நாள் தான் அவர்கள் இருவரும் சென்னைகள் இருக்கும் அரசாங்க அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார்கள்.
சென்னையில் அவர்கள் இருவரும் சுற்றாத இடமில்லை.
வார விடுமுறை என்றால் எங்காவது சென்று விடுவார்கள்.
அப்படி இருக்கையில் தான் இந்த அருங்காட்சியத்திற்கும் அவர்கள் இருவரும் சென்றது.
அந்த அருங்காட்சியத்தில் சங்க காலம் முதல் சோழர் காலம், விஜயநகர், மொகாலயர், ஆங்கிலேயர் வரைக்கும் பல அரசர்களின் நாணயங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அப்பொழுது அங்கு சாயராவும் அவர்களுடைய காலேஜிலிருந்து நிறைய ஸ்டூடண்ட்ஸ் உடன் தன்னுடைய ஸ்டடிஸ்காக அந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்திருந்தாள்.
ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
அப்படி இருக்கையில் துவாரகா தன்னுடைய கணவனுடன் சேர்ந்து அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது தெரியாமல் அவளுடைய கை அந்த நாணயத்தில் பட்டுவிட அவளோ அதை உணரவே இல்லை.
அவள் அங்கிருந்து அகன்றதும் அந்த நாணயம் கீழே உருண்டோடி சாயராவின் காலடியில் விழுந்தது.
அவளோ குனிந்து பார்த்தவள் என்ன என்று தன்னுடைய கையில் எடுத்துப் பார்க்க அந்த கனமே அவளுக்கு முன் ஜென்ம ஞாபகங்கள் வர ஆரம்பித்தன.
ஆனால் துவாரகாவிற்கோ சிறு சிறு காட்சிப் பிழைகளாகவே கனவுகளில் வந்தது.
“இந்த நாணயம் என் கையில இருக்கிற வரைக்கும் கௌதமுக்கு எதுவும் ஞாபகம் வராது அப்படி அவனுக்கு மட்டும் ஞாபகம் வந்துட்டா என்ன பத்தின ஞாபகம் அனைத்தும் சேர்ந்து வரும்.
அப்புறம் என்னால அவன்கிட்ட நெருங்கவே முடியாது அதுக்குள்ள நான் அவனோட ஒன்னு சேர்ந்தே ஆகணும் எப்படி எப்படி நடக்க வைக்கிறது”
என்றவளுக்கோ சட்டென ஒரு யோசனை வந்தது.
“ஹான் அதுதான் சரியா இருக்கும் கௌதம் என்னோட கௌதமாதித்தன் அடுத்து வர்ற பௌர்ணமிக்கு நீ எனக்கு சொந்தமாய் இருப்ப தயாரா இரு கௌதம்”