மைவிழி – 14

4.6
(14)

அனைவரது பேச்சும் மைவிழி மற்றும் ருத்திரதீரன் பற்றியே  இருந்தது.

எங்கிருந்தோ வந்த புதுமுக கதாநாயகியை கொண்டு எடுத்த படமோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் ருத்ரதீரனுக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தன் படத்தின் வெற்றியை கொண்டாட நினைத்த ருத்ரதீரன் தன் திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அழைத்தான்.

அந்த நிகழ்வுக்கு மைவிழியும் ருத்ரதீரனும் ஒன்றாக சென்று ஹோட்டலில் இறங்கியதும் கேமராக்கள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டது.

அங்கே இருவரும் அமர நிகழ்வும் தொடங்கியது. ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள். ருத்ரதீரனும் பேசும் போது தனது அடுத்தப் படம் பற்றியும் அனைவருக்கும் நன்றியும் கூற பின் மைவிழியும் பேசினாள்.

அவள் பேசி முடிய அங்குள்ள ஒரு பத்திரிகையாளர் சில கேள்விகளை கேட்டார்.

“விழி மேடம் நீங்க அடுத்த படம் எந்த நடிகரோட பண்ணப் போறீங்க” எனக் கேட்க சிரித்துக் கொண்டே,

“நோ… ஐடியா…, நான் இனி படம் பண்ண மாட்டேன்” என்று கூற அங்குள்ளவர்கள் அதிர்ச்சியோடு ஒரு படத்தோடு இவள் ஏன் இப்படி கூறுகின்றாள் என தங்களுக்குள் பேச,

“ நீங்க வெடிங் பண்ணப்போறதால தானா இனி அக்ட் பண்ண மாட்டேன்னு சொல்றீங்க” என இன்னொருவர் கேட்க,

“எஸ்…., அதுக்காக தான் நான் இனி நடிக்க மாட்டேன்” என்றாள்.

“அப்படின்னா எப்போ மேடம் உங்களோட வெடிங்…?” மற்றொருவர் கேட்க,

“நெக்ஸ்ட் நாங்க எல்லோரும் வெடிங்ல தான் மீட் பண்ணுவோம்” என ருத்ரதீரனை பார்க்க அவனும் சிறு புன்னகையுடன் அனைவரையும் பார்த்தான்.

மைவிழி தன் ஆசைத் திருமணத்தை எதிர்பார்த்து இருப்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி தெரிவித்தாள் மைவிழி.

தன் ஆசைக் காதலனின் அருகே சிரிப்புடன் வந்து அமர்ந்தாள் மைவிழி. தமது நிகழ்வு முடிந்து வீட்டுக்கு இருவரும் ஒன்றாக சென்றார்கள்.

வீட்டில் சென்று தான் இருக்கும் அறைக்குள் செல்லுகையில் மைவிழியை அழைத்தான் ருத்ரதீரன்.

அவன் அழைக்க “எஸ் சார்…,” என அருகில் வர,

“அம்மு இந்தப் பெட்டியை எடுத்துக்கோ” என அவனது மேஜை மீது இருந்த ஓர் கறுப்பு நிற பெட்டியை காட்டினான்.

“என்ன பாக்ஸ் சார் இது…?”

“இதை எடுத்துக்கோ அம்மு” எனக் கூற மைவிழியோ அந்த பெட்டியை திறந்து பார்க்கையில் பணம் இருந்தது.

“என்ன சார் இதுலாம்.?? எதுக்காக இந்தப் பணம்” எனக் கேட்டாள் மைவிழி.

“அம்மு இது உனக்கான பணம், உன்னோட உழைப்புக்கு நான் கொடுக்குற சம்பளம்” என அவன் கூற,

“எனக்கு ஏன் சார் இதுலாம்….?” என அவள் கூறுகையில் வீட்டின் பெல் சத்தம் கேட்க உள்ளே வந்தாள் ரேஷ்மா.

ரேஷ்மா உள்ளே வருவதைப பார்த்து பேசுவதை நிறுத்தினாள் மைவிழி.

“ஹாய் சார்…” என உள்ளே வந்த ரேஷ்மா சாதரணமாக கட்டியணைத்து அமர மறுபக்கம் மைவிழிக்கு உடல் எரிவது போல இருந்தது.

கட்டியணைத்து அறிமுகப்படுத்துவது சாதாரணமாக இருந்தாலும் கூட தன் நாயகனை அவள் நெருங்கியதில் கோபம் உண்டாகி மனதினுள் திட்டிக் கொண்டே இருந்தாள்.

ஆனால் வெளியில் ரேஷ்மாவை பார்த்து சிரித்தபடி உள்ளே சென்று அமர்ந்திருக்க அரை மணி நேரம் கழித்து ரேஷ்மா வெளியே போக ருத்ரதீரனின் அருகே வந்தாள் மைவிழி.

“என்னதுக்காக சார் அவங்க வந்தாங்க” என கேட்டாள்.

“என்னோட அடுத்த படத்துக்கு அவள் தான் ஹூரோயின், அதைப் பத்தி பேச தான் வந்தாள் அம்மு” என்றான் அவன்,

“அப்படியா சார் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க” எனக் கேட்க,

“எல்லாம் ஓகே ஆகிருச்சு அம்மு எப்படியும் நெக்ஸ்ட் மந்த்க்குள்ள ஸ்டார்ட் பண்ணுவேன்” எனக் கூறினான்.

ம்ம்ம் சார் இந்தப் பணம் எனக்கு வேணாம்” என அவள் கூற,

“இல்லை அம்மு இது உன்னோட சம்பளம் நான் உங்க அப்பாகிட்ட பேசின சம்பளத்தை விட இது அதிகமா இருக்கு சோ எடுத்துக்கோ” என்றான்,

“நோ சார் நமக்குள்ள ஏன் இப்படி பிரிச்சு பார்க்குறீங்க…?, இதுலாம் எனக்கு வேணாம்”.

“நோ அம்மு எப்படியும் நீ வேற நான் வேறதானே சோ இந்தப் பணம் உனக்கு யூஸ் ஆகும்” என அவன் கூற புரியாமல் நின்றாள் மைவிழி.

“என்ன சார் சொல்றீங்க…, நான் வேறையா….?” அவளுடைய விழிகள் நொடியில் கலங்கிப் போயின.

“எஸ் அம்மு நீ எப்படியும் வேறதானே, அதான் நான் அப்படி சொன்னேன்” என்றான்.

“ஏன் சார் இப்படி பேசுறீங்க…?, நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ல.?”

“கல்யாணமா யாரு உன்னை நான் கல்யாணம் பண்ணணுமா…?, வாட் த ஹெல்?

எங்கேயோ இருந்த பட்டிக்காட்டு பொண்ணு உன்னை நான் வெடிங் பண்ணுவேனா….?” என்ற அவனது பதிலில் உடைந்தது மங்கையின் மனம்.

தன் ஆசை நாயகன் தன்னிடம் எதைப் பார்த்து இரசித்து காதல் செய்வதாக கூறினானோ அதையே இன்று கேவலமாக பேசி விட அவளோ சிலை போல உறைந்து போனாள்.

அவளுடைய மனமோ பதறத் தொடங்கியது.

“அம்மு நீ இப்படி ஒரு எண்ணத்தை மனசுல வைச்சிக்கிட்டு என்கூட இருக்காத” என சாதாரணமாக கூறினான் அவன்.

“என்ன சார் இப்படிலாம் பேசுறீங்க அப்படின்னா நீங்க என்னை லவ் பண்ணலையா…?” எனக் கேட்டாள் அவள்.

அவளுக்கோ நடக்கும் எதையும் நம்ப முடியாது போனது.

“நோ நான் உன்னை லவ் பண்ணல, என்னோட தேவைக்காக உன்னை மாத்தினேன் அவ்வளவும் தான்” என்றான் அவன்.

“என்ன சார் பேசுறீங்க, நீங்க என்மேலே வைச்ச பாசம் எல்லாம் பொய் தானா..?” உடைந்து போய் கேட்டாள் மைவிழி.

“எஸ் நான் உன்னை நடிக்க வைக்குறதுக்காக தான் அப்படிலாம் பண்ணினேன் மத்தபடி உன்னை நான் லவ் பண்ணலை அம்மு. புரிஞ்சிக்கோ  ப்ளீஸ்” என்றான்.

தன்னை காதல் செய்வதாகக் கூறி இவ்வளவு காலமும் தன்னோடு கூடிக் களித்த தன் ஆசைக்காதலன் காதலே வெறும் நடிப்பு தான் எனக் கூறியதில் தன் நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்துப் போய்  தன்னைச் சூழ உள்ள அனைத்தும் சுழல்வது போல் இருக்க அருகில் இருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தாள் மைவிழி.

“நீங்க என்ன லவ் பண்றேன்னு சொல்லி செய்த எல்லாமே பொய்ன்னா அப்போ என்னோட வாழ்ந்த வாழ்க்கையும் பொய்யா நோ நீங்க என்கிட்ட பொய்யா இருக்கலை. எனக்கு தெரியும். என்னை பொண்டாட்டி மாதிரிதானே பார்த்துக்கிட்டீங்க, ப்ளீஸ் விளையாடாதீங்க சார்.  உண்மையை சொல்லுங்க” என்று அவன் தன்னோடு வழமையாக கேலி செய்வது போல பண்ணுகிறான் என நினைத்துக் கேட்டாள் மைவிழி.

“நோ அம்மு…, நான் உன்கிட்ட உண்மையா ஒரு நிமிஷம் கூட இருக்கலை. இப்போ நான் சொல்றதுதான் உண்மை”

“உங்களை என்னோட புருஷனா நினைச்சு தானே பழகினேன், இப்போ இப்படி பேசுறீங்களே, நீங்க என்னை தொடும் போதுலாம் நமக்கு கல்யாணம் நடக்கும் சோ நான் மொத்தமா உங்களுக்கு தான்னு நினைச்சுதானே இப்படிலாம் பண்ணினேன் நீங்க என்னை வெடிங் பண்ண மாட்டேன்னு சொல்லியிருந்தா தொட விட்டிருக்க மாட்டனே” என அவள் கதறத் தொடங்க,

“நோ அம்மு இதுல நான் தப்பு பண்ணது உண்மைதான் பட் நான் உன்னை இப்போ எப்படி மாத்திட்டேன்னு நினைச்சு சந்தோஷப் படு,

நீயே யோசி எங்கேயோ கிராமத்தில ஆடு மேய்ச்சுக் கொண்டிருந்த நீ இப்போ எல்லாருக்கும் பிடிச்ச நடிகையா மாறிட்ட,” என்றான் அவன்.

“எனக்கு இந்த பணம் பகட்டு எல்லாம் முக்கியமே இல்ல சார். என்னை ஏன் பொய் சொல்லி ஏமாத்தினீங்க.? நீங்கதானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க.?”

“ப்ச் நீ என்கூட க்ளோஸா நடிக்க தயங்கின அப்படி நீ நடிக்கலைன்னா படம் இப்படி ரீச் ஆகியிருக்காது அதனாலதான் உன்னோட இடுப்பை தொட்டு அதை பழக்கப்படுத்தினேன்.

அன்ட் கிஸ் பண்ணுற மாதிரி பண்ண முடியாதுன்னு சொன்ன, அதுக்காக தான் உனக்கு அதையும் பழக்கப்படுத்தினேன். இதை எல்லாம் மைன்ட்ல வைச்சு தான் உன்னை லவ் பண்றேன்னு ஒரு சின்ன பொய்யை சொன்னேன்” என கிராமத்து கிளியின் வாழ்க்கையை கிழித்தெறிந்தான் தீரன்.

ஆடவர்களின் தீண்டல் தவறானது என நினைத்திருந்த மங்கையின் மனதில் புகுந்து அவளது மனம் மானம் என அனைத்தையும் காதல் எனும் பெயரில் வேட்டையாடப்பட்டதே இங்கு உண்மையாக இருந்தது.  அவளின் கண்களில் நீரோடை பெருக்கெடுக்க,

“இல்லை நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது, கல்யாணம் பண்றேன்னு நீங்க சொன்னதாலே தானே நான் உங்க கூட அப்படி இருந்தேன்” என மீண்டும் மீண்டும் கணவன் மனைவி போல வாழ்ந்ததை ஞாபகப்படுத்தும் வகையில் அவள் கதறலோடு பேச,

“இனாஃப் அம்மு திரும்பத் திரும்ப எதுக்கு அதையே பேசிக்கிட்டு இருக்க, எஸ் நான் உன்கூட படு…..தான். பட் நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தி பண்ணலையே,

சும்மா இருந்த என்னை வேணும்னு பாத்ரூம்க்குள்ள கூப்பிட்டது நீ, உன்னோட மனசுல ஆசை இருந்ததால தான் நான் உன்னை தொடும் போது ஒன்னும் சொல்லாம இருந்த,

உனக்கும் என்னோட இருக்க ஆசை எனக்கு உன்னோட இருக்க பிடிச்சிருந்துச்சு அவ்வளவும் தான் ரெண்டு பேரும் என்ஜாய் பண்ணினோம் அதோட எல்லாம் முடிஞ்சு போச்சு” என பெண்ணவளின் வாழ்வில் தான் செய்தது சாதரண ஒரு விடயம்தான் என அவன் கூறினான்.

அவன் கூறிய வார்த்தைகளில் அவன் தொட்ட இடம் அனைத்தும் எறிவது போல கூனிக் குறுகினாள் மாது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!