தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மைவிழிக்கு மாற்றி எழுத நினைத்த தீரன் அதற்கு சாட்சியாக தன்னைப் பற்றி அனைத்தும் அறிந்த நண்பன் அருணைத்தான் தேர்ந்தெடுத்தான்.
பத்திரங்களில் கையொப்பம் வைப்பதற்கான இறுதி நாள் என்பதால் லாயர் தீரனுக்கு கால் செய்தும் அதை எடுக்காததால் அவனது வீட்டிற்கே அஷ்வினை அனுப்பி வைத்தார்.
அப்போது இதற்கு சாட்சியாக உள்ள அருணையும் தீரன் வீட்டுக்கு சென்று கையொப்பம் வைக்கும் படி கூற அருணும் தீரன் வீட்டுக்கு வந்தான்.
அவன் வரும் வழியில் அஷ்வினை பார்த்து அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் தீரனை காண வீட்டுக்கு வந்த நேரம் தான் மைவிழி கண்ணீருடன் அமர்ந்திருக்க அவளிடம் நடந்ததை பற்றி விசாரிக்கத் தொடங்கினான்.
எவரிடமும் இதைப் பற்றி பேசாமல் இருந்த மைவிழி தன் கவலைகளை அடக்கமுடியாமல் அருணிடம் கூறினாள்.
தீரனோ மைவிழி தன்னை வெறுக்க வேண்டும் என நினைத்து தான் இவ்வாறு செய்கின்றான் என அறிந்திருந்த அருண் அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகளை கூறினான்.
ஆனால் அவளோ தீரனை மிக்கடுமையான வார்த்தைகளால் திட்ட தன் பொறுமை இழந்தவன் அவளிடம் உண்மையை கூறத் தொடங்கினான்.
“இனாஃப் மைவிழி நீ நினைக்கிற மாதிரி தீரன் கிடையாது, அவன் வேணும்னு தான் உன்கிட்ட இப்படி நடந்துக்கிறான், ஏன்னா அவன் இன்னும் கொஞ்ச நாள்தான் நம்ம கூட இருப்பான். அவனுக்கா அன்பு காதலைப் பத்தி தெரியாது.? அவனோட காதல் புனிதமானது விழி.” என கண்கள் கலங்க இறுகிய முகத்துடன் அருண் கூற,
“வாட்…., கொஞ்ச நாளா ஏன் இப்படி பேசுறீங்க..?” என கண்களை விரித்தப்படி அதிர்ச்சியுடன் மைவிழி கேட்க,
“எஸ் இதைப் பத்தி தீரன் உன்கிட்டே சொல்ல வேணாம்னு தான் சொன்னான் பட் நீ இந்த அளவுக்கு கேவலமா நினைச்சதை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது, நான் எல்லாத்தையும் சொல்றேன்” என தீரனின் பிரச்சனை அனைத்தையும் அதற்காகவே மைவிழியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகவும் பின் அவள் வேறு எவராலும் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தாகவும் கூறினான் மேலும் அவள் மீது உள்ள பாசத்தை வெளிக்காட்டாமல் வெறுப்பை உண்டாக்கவே இவ்வாறு பண்ணினான் எனவும் கூற மங்கையோ மனமுடைந்து போனாள்.
தீரனுக்கு இவ்வாறான ஒரு நிலமை என அறிந்தவுடன் அவளுடைய இதயமோ ஒரு கணம் நின்று துடித்தது. அவளுடைய துயரம் எல்லாம் மறைந்து இப்போது புதுவிதமான வேதனை அவளுடைய நெஞ்சை அரிக்கத் தொடங்கியது
இனிமேல் அவன் தன்னுடன் இருக்க மாட்டானா…?,, தன்னை எவ்வாறு வேண்டுமென்றாலும் திட்டி கொடுமைப்படுத்தினாலும் பரவாயில்லை அவன் இருந்தாலே போதும் என அவளுடைய மனமோ ஏங்கத் தொடங்கியது.
அவளுடைய ஹிருதயமோ தன் துடிப்பை நிறத்துவது போல நிற்க உடலோ படபடக்க அவளை அறியாமலே கை, கால்கள் யாவும் நடுங்கத் தொடங்கின.
விழிகளில் பொங்கிய நீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் துவண்டு போனாள். இதழ்கள் அழுகையில் துடிக்க,
“அப்படின்னா ஏன் தீரன் இன்னும் ட்ரீட்மெண்ட் எடுக்கலை.?” என உடைந்து போன குரலில் கேட்டாள் மைவிழி.
“நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன் மைவிழி அவன் அதுக்கு ஒத்துக் கொள்ளலை ஏன்னா இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்டேன்னு சொன்னான்” என அருண் கூற அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராமல் கண்ணீர் மட்டுமே எஞ்சியது.
தனக்காகவே இவை அனைத்தையும் செய்தான் என்பது புரிய, அவனது காதல் பற்றி நினைத்து சந்தோஷப்படுவதா….? இல்லையெனில் அவன் தன்னை விட்டு பிரியப் போகின்றான் என நினைத்து கவலைப்படுவதா என அறியாமல் உயிர் வலியை அனுபவித்தாள் மைவிழி.
“மைவிழி ப்ளீஸ் நீ அழ வேணாம் அன்ட் நான் உன்கிட்டே சொன்ன விஷயம் தெரியாத மாதிரியே பார்த்துக்கோ, நீ எப்படியாவது அவனை ட்ரீட்மெண்ட்க்கு கூட்டிட்டு வந்தாலே போதும் ஏன்னா ட்ரீட்மெண்ட் எடுத்தா அவன் எங்கக்கூட….” என அவன் கூறி முடிப்பதற்குள்,
“ப்ளீஸ், நீங்க இப்படி பேச வேணாம் நான் எப்படியாவது தீரனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு வர்றேன்” எனக் கூறினாள் அவள்.
தீரன் இல்லாமல் போய் விடுவான் என்ற வார்த்தைகளையே தாங்கிக் கொள்ளாத மைவிழி அவனைப் பிரிந்து எவ்வாறு வாழப்போகின்றாள் என அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.
தனக்கு தீரனைப் பற்றி தெரிந்ததை வெளிக்காட்டாமல் அவன் நினைப்பது போலவே இருக்க வேண்டும் என முடிவெடுத்த மைவிழி அருண் அங்கிருந்து சென்றதும் தன் கண்ணீருக்கு பூட்டிட்டு விட்டு தீரனின் அறைக்குள் சென்றாள்.
இன்று தான் வற்புறுத்தி அழைக்காமலேயே உள்ளே வந்த மைவிழியை விழிகள் விரிய பார்த்தான் ருத்ரதீரன்.
“என்ன மேடம் கீழே பெரிய சாபம்லாம் விட்டீங்க இப்போ என்னன்னா நேரத்துக்கே மேலே வந்துட்டீங்க, ஏன் மாமனை விட்டு இருக்க முடியலையா..?” எனக் கேட்டான் தீரன்.
அவன் தன்னை வேண்டுமென்று சீண்டத்தான் இவ்வாறு செய்கின்றான் என தெரிந்த மைவிழி தன்னுள்ளே இருந்த துன்பத்தை மறைத்து, தன்னை திடப்படுத்திக் கொண்டு தன் வலி மறைத்து பேசத் தொடங்கினாள்.
“ஆமா ஆமா இவர் பெரிய மன்மதன் அதான் விட்டுட்டு இருக்க முடியாம ஓடி வந்துட்டேன்” என மைவிழி கூறினாள்.
தீரனுக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி ஏனெனில் அவன் அத்தனை செய்தும் இவளோ சாதாரணமாக அவனோடு பேச, இவளிடம் எவ்வாறு இப்படி ஒரு திடீர் மாற்றம் வந்தது என சித்தித்த தீரன் அவளை மீண்டும் காயப்படுத்த வேண்டும் என, எண்ணிக் கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“நான் மன்மதன் தான், என்னை மன்மதனா மாத்தினது உன்னோட அழகுதான், அப்பப்பா என்னா ஒரு ஷேப் எத்தனை வாட்டி அனுபவிச்சாலும் அடங்காது” என உதடுகளை கடித்தப்படி வேண்டுமென்றே அவன் கூறினான்.
அவள் தன்னை வெறுக்க வேண்டுமே என்ற எண்ணம் அவனுள் வியாபித்திருந்தது.
இதை கேட்டவுடன் கண்களை கசக்கிக் கொண்டு இங்கிருந்து செல்வாள் என நினைத்தான் தீரன் ஆனால் அங்கு நடந்ததே வேறு,
“எஸ் இப்படித் தான் என்னோட முறைப்பையனும் அடிக்கடி சொல்வான் நான் அழகான பொண்ணுன்னு” என்று வெட்கப்படுவது போல அவள் நிற்க,
‘இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு நான் என்ன பேசினாலும் அதற்கு வித்தியாசமா பதில் சொல்றாளே.’ என நினைத்து மீண்டும் அவளை காயப்படுத்த நினைத்தவன்.
“அம்மு யார் என்னவேணும்னாலும் சொல்லலாம் ஆனா உன்னோட இருந்த முதலாவது நாள் மறக்கவே முடியாது, நீயும் என்னோட என்ஜாய் பண்ணத்தானே வேணும்னே பாத்ரூம்க்குள்ளே வர சொன்ன.?” என கேட்டான் அவன்.
அவளோ அவனுடைய விழிகளை பார்த்தவள் “எனக்கு உங்களை பிடிக்கும் தீரன். அதனாலதான் அன்னைக்கு நானும் அமைதியா இருந்தேன்.” என்க, அவனுக்கோ புருவங்கள் சுருங்கின.
“ஓஹ்… இன்ட்ரஸ்டிங்.” என்றவன் அவளை இழுத்து தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.
“ஆரம்பிக்கலாமா டார்லிங்.” எனக் கேட்டவாறு அவளைப் படுக்கையில் கிடத்தியவனின் கழுத்தில் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டவள் அவனுடைய விழிகளை இமைக்காது பார்த்தாள்.
அவளுடைய பார்வையில் தடுமாறிப் போனான் ருத்ரதீரன்.
“வாட் அம்மு.?” என்றவாறு அவளுடைய இதழ்களை தன் பெரு விரலால் வருடினான் அவன்.
“ஐ லவ் யு தீரா…” என கலங்கிய குரலில் கூறினாள் அவள்.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அவனுடைய உடலோ வரம் பெற்றதைப் போல சிலிர்த்துப் போனது.
“நா… நான் உன்னைக் காதலிக்கலையே அம்மு.” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
“பட் நான் உங்களை காதலிக்குறேனே.” என்றாள் அவள்.
“ஸ்டுப்பிட்…” என்றவாறு விலக முயன்றவனை இழுத்தவள் அவனுடைய இதழ்களில் தன் இதழ்களைப் பொருத்திக் கொண்டாள்.