- அத்தியாயம்-02
ஊர் பஞ்சாயத்தில் இளவேலனை குற்றம் சாட்ட அவனோ அசராமல் ஆமாம் என்று சொல்ல அந்த தலைவர்கள் அனைவரும் ஆ வென்று வாயை பிளந்தார்கள். இதற்கு காரணம் அவன் தான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எப்படியும் ஏதாவது சொல்லி மழுப்புவான் என்று எதிர்பார்த்து இருக்க அவனோ நீங்கள் எதிர்பார்த்ததுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா என்பது போல் பட்டென்று ஆமாம் என்று ஒத்துக் கொண்டான். “அப்போ நீங்க தான் அதுக்கு காரணம்ன்னு ஒத்துக்கிறீங்களா தம்பி..?” என்று மீண்டும் ஒரு என்றா மிசை கேட்க, அவனோ “என்னையா வளவள கொளகொளன்னு கேட்டுகிட்டே இருக்கீங்க.. அதான் சொல்றேன் இல்ல.. ஆமா நான் தான் பண்ணேன் இப்ப என்ன பண்ணனும் அதுக்கு..?” என்று கேட்க, இன்னொரு கடா மீசையோ, “என்னப்பா தம்பி வயசுல பெரியவர இப்படி மரியாதை இல்லாம பேசுற.. அதுலயும் ஒரு தலைவர் பதவியில வேற இருக்காரு.. கொஞ்சமாவது மரியாதையா பேசுப்பா..” என்று சொல்ல, சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அவர் அருகே வர, அதற்குள் அவனுடைய அல்லக்கை அவனுடைய கையை பிடித்துக் கொண்டவன் “அண்ணே கொஞ்சம் பொறுமையா இருங்க.. ஏதோ சின்ன பையன் தெரியாம பேசிட்டான்..” என்று சொல்ல, அதற்கு அவனோ “என்னை எதிர்த்து பேசுறதுக்கு எவனுக்கும் இங்கு அருகதை கிடையாது.. மீறி எவனாவது பேசுனீங்க வகுந்துருவன் வகுந்து..” என்று தனது நாக்கை மடித்து சுட்டு விரலால் எச்சரிக்க, இன்னொரு பெரியவரோ அவனிடம் “தம்பி புகார் கொடுத்தது உங்க மேல அதனாலதான் நாங்க பெரியவங்க கேள்வி கேட்டுட்டு இருக்கோம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கீங்க..” என்க. அதற்கு வேலனோ தன்னுடைய அருகில் இருந்த நண்டுவின் கழுத்தில் இருந்து துண்டை எடுத்தவன் அங்கே நட்ட நடுவீதியில் விரித்து அங்குள்ள அனைவரையும் தன்னுடைய இடது கையால் மூன்று முறை சொடக்கு போட்டவன் “இங்கே இருக்கிற எவனாவது அவன் பொண்டாட்டிய தவிர மத்த பொண்ணுங்கள தொடவே இல்லை என்கிறவங்க மட்டும் இந்த துண்டை தாண்டுங்க.. அதுக்கப்புறம் என்ன கேள்வி கேளுங்க..” என்றவன் தன்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். அங்கு உள்ள அனைத்து ஆண்களுமே தங்களுடைய தலையை தொங்க போட்டு குனிந்து இருந்தனர். அதை பார்க்க பெண்களுக்கு ச்சை என்று ஆகிப்போனது. இவனோ தன்னுடைய மீசையை முறுக்கிக் கொண்டு சிரித்தவன் தன் மேல் புகார் கொடுத்த பெண்ணின் அருகே நெருங்கி “இங்க பாரு ஆனது ஆகிப்போச்சு இடத்தை காலி பண்ணு..” என்று சொல்ல, அதற்கு அந்த பெண்ணோ அங்கு உள்ள ஊர் தலைவர்கள் அருகே சென்றவள் “ஐயா என்னோட மானம் போனதுக்கு அவர்தான் காரணம் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க..” என்று சொல்ல, சட்டென அந்த இடம் அதிரும் அளவிற்கு சிரித்தவன் அனைவருக்கும் முன் வந்து “இந்தா பாரு புள்ள உன்ன தொட்டதுக்கெல்லாம் தாலி கட்டணும்னா இந்த ஊர்ல பக்கத்து ஊர்ல இருக்கிற எல்லார் வீட்டிலும் என் பொண்டாட்டி தான் இருப்பாங்க.. ஒழுங்கா நான் கொடுக்கிற அஞ்சு பத்து வாங்கிட்டு இடத்தை காலி பண்ணினா உசுரு மிஞ்சும்.. இல்லைன்னு வச்சுக்கோயேன் காணாப் பொணமா ஆகிருவ எப்படி வசதி..?” என்று கேட்க, அவன் பேச்சில் திடுக்கிட்டவள் சரி என்று தலையாட்ட, “லேய் நண்டு..” என்று குரல் கொடுத்தவன் கையில் நண்டு ஒரு லட்சம் ரூபாய் பணக்கட்டை அவன் கையில் வைத்தான். அதை அந்த பெண்ணின் கையில் தூக்கி போட்டவன் “உடனே இந்த இடத்தை காலி பண்ற.. இனிமே உன் முகரையை நான் பார்த்தேன்னு வச்சிக்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஓடிரு..” என்றவன் திரும்பி அந்த கூட்டத்தை பார்த்து “இங்க பாருங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் சும்மா ஆவூன்னா பிராது கொடுத்து இருக்கேன் புகார் கொடுத்து இருக்கேன்னு தெரிந்தது ஜமட்டிபுடுவேன்.. அப்படி உங்களுக்கு எதுவும் வேணும்னா நேரா என்ற ஊட்டுக்கு வந்து உங்களுக்கு தேவையானதை வாங்கிட்டு போங்க.. அதை விட்டுட்டு சும்மா என் நேரத்தை வீணடிக்க கூடாது புரியுதா..?” என்றவன் “லேய் நண்டு வண்டிய எடுடா..” என்று அங்கு உள்ள யாரையும் மதிக்காது அங்கிருந்து தன்னுடைய பெண்கள் படையுடன் கிளம்பி விட்டான். அதன்பிறகு அங்கு கூடியிருக்க அவர்களுக்கு என்ன வேண்டுதலா..? அனைவரும் தலையில் அடித்துக் கொண்டு தங்களது வேலையை பார்க்க சென்று விட்டார்கள். *** “மாமா உன்ன தேடி வந்துகிட்டே இருக்கேன்..” என்று தன் கையில் உள்ள போட்டோவை பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தாள் ஒரு மங்கை. “இந்தாம்மா முதல்ல டிக்கெட் எடு அப்புறமா அந்த போட்டோ பார்த்து பேசு..” என்று அவள் அமர்ந்திருக்கும் அந்த பேருந்தின் கண்டெக்டர் அவளிடம் கேட்க, அவருடைய குரலில் சட்டென நிமிர்ந்து பார்த்தவள் அசடு வழிய “அண்ண வடுகப்பட்டிக்கு ஒரு டிக்கெட் குடுங்க..” என்று வாங்கிக் கொண்டாள். அவள் வினிதா. மதுரையைச் சேர்ந்த பெண். இந்த ஊரில் தான் தன் மாமன் இருக்கிறான் என தெரிந்து அவனை காண்பதற்காக வந்திருக்கிறாள். அவள் கையில் உள்ள போட்டோவோ அவளுடைய மாமனின் சிறு வயது போட்டோ. அதை வைத்துக்கொண்டு இந்தப் பெண் இப்பொழுது இருக்கும் மாமனை எப்படி கண்டுபிடிப்பாலோ..? அவள் ஊரு வந்து சேர இரவு ஆகிவிட்டது. “வடுகப்பட்டி பஸ் ஸ்டாப் வந்துருச்சு இறங்குறவங்க இறங்குங்க..” என்று கண்டெக்டர் கூற அதைக் கேட்டவள் அந்த பஸ்ஸிலிருந்து இறங்கி கொண்டாள். பஸ் ஸ்டாப்புக்கும் ஊருக்கும் சற்று இடைவெளி இருக்கும். ஒரு அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி இருக்க இறங்கியவள் தன்னுடன் மற்றவர்களும் வருவார்கள் என்று திரும்பி பார்க்க அய்யோ பாவம் அவள் வந்த பஸ்ஸில் அவள் இறங்கும் இடத்தில் அவள் மட்டுமே இறங்கினாள். வேறு யாரும் வரவில்லை. பின்பு பெருமூச்சு விட்டு திரும்பிக் கொண்டவள் அங்கிருந்து ஊருக்கு நடக்கத் தொடங்கினாள். இருட்டு சற்று பயத்தை உண்டாக்கினாலும் எப்படியோ மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னுடைய மாமனை காண சென்று கொண்டிருந்தாள். சுற்றி எங்கும் இருட்டாக இருக்க அந்த ஒத்தையடி பாதையில் நடந்து சென்றவளுக்கோ பயம் பிடித்துக் கொண்டது. மனதில் கடவுளை வேண்டிக் கொண்டே எங்கும் திரும்பாமல் நடந்து கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு போலீஸ் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றாள். அந்த வாகனம் அவள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து நல்ல வாட்டசாட்டமாக காக்கி யூனிஃபார்ம் உடன் இறங்கினான் ஒருவன். உயரமோ நெடு நெடுவென வளர்ந்திருந்தான். கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான். இவள் அருகில் வந்து “இந்தா பொண்ணு யார் நீ இந்த ராத்திரி நேரத்துல தனியா போய்கிட்டு இருக்க..?” என்று அவளை மேலும் கீழும் பார்த்தபடி கேட்க, அவளோ ஏற்கனவே இருட்டை கண்டு அஞ்சி இருந்தவள் இப்பொழுது தன் அருகே போலீஸ் வந்து அவளிடம் விசாரிக்கவும் ஆடித்தான் போனாள். “இந்தா பொண்ணு உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன்.. யார் நீ இந்த இருட்டு நேரத்தில இங்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” என்று அந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் கேட்க, இவளோ நாக்கு தந்தி அடிக்க அவரிடம் “சார் நான் இந்த ஊருக்கு புதுசு என் மாமன தேடி இங்க வந்து இருக்கேன்.. அவரு இங்க இருக்கிறதா தான் செய்தி வந்துச்சு அதான் வந்தேன்..” என்று தட்டு தடுமாறி சொல்ல, அவனோ தன்னுடைய கூலிங் கிளாசை கழட்டியவன் “ஓ அப்படியா சரி வா வண்டியில ஏறு நானே உன்னை கூட்டிட்டு போறேன்.. இந்த இருட்டுல தனியா வேற போற.. போலீஸ் மக்களுக்கு உதவி செய்யணும் இல்ல வா..” என்று அவள் கையை பிடிக்க அவளோ அவ்வளவு நேரம் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தவள் அந்த இன்ஸ்பெக்டர் அவளுடைய கையை பிடிக்கவும் அவரிடம் இருந்து கையை சட்டென உருவியவள் அங்கிருந்து ஊரை நோக்கி ஓடத் தொடங்கினாள். அந்த இன்ஸ்பெக்டரோ அவள் தன்னிடமிருந்து ஓடவும் அவள் பின்னையே ஓடினார். அவனிடமிருந்து தப்பித்து அந்த ஒத்தையடி பாதையில் ஓடிக்கொண்டிருந்தவள் பின்னே அவன் துரத்தி வருகிறானா என்று பார்த்துக் கொண்டே முன்னே வந்த வண்டியை கவனிக்காமல் அதன் மீது மோதி கீழே விழுந்தாள். அவள் மோதவும் சட்டென பிரேக் போட்டவன் “அறிவு கெட்டவளே இப்படியா வந்து வண்டி மேல மோதுவ.. கண்ணு தெரியல..?” என்று அவளை திட்டிக் கொண்டே இறங்கினான் இளவேலன். கீழே விழுந்தவளோ தன்னுடைய கையில் ஒட்டிக்கொண்ட மண்ணை துடைத்துவிட்டு இவன் அருகே வந்தவள் “எனக்கு உதவி பண்ணுங்க சார் அந்த போலீஸ்காரரு என்ன துரத்திட்டு வராரு சார் தயவுசெய்து எனக்கு உதவி பண்ணுங்க..” என்று கேட்க, அவனோ கண்கள் இடுங்க அவளை பார்த்தவன் “போலீஸ் துரத்தி வருதுன்னா நீ ஏதாவது தப்பு செஞ்சுருப்ப அதான் உன்னை துரத்தி வருது ஆள விடு..” என்று அவளை கண்டுக்காமல் தன்னுடைய வண்டியை எடுத்து கிளம்பினான். அப்போது அவளை துரத்தி வந்த அந்த போலீஸ் அதிகாரி அவளுடைய கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு அவளிடம் மள்ளுக்கெட்ட, அவளோ கண்களில் கண்ணீரோடு அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து போராடிக் கொண்டிருந்தாள். அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் தன்னுடைய வண்டியின் மிரர் வழியாக அந்த பெண்ணிடம் அந்த போலிஸ் அதிகாரி தவறாக நடந்து கொண்டிருப்பதை கண்டவன் தன்னுடைய வண்டியை அங்கேயே நிப்பாட்டி விட்டு அவர்களை நோக்கி வந்தான். வந்தவன் அந்த இன்ஸ்பெக்டரின் சட்டையை கொத்தாக பிடித்தவன் சப் என்று அவருடைய கன்னத்தில் அடிக்க, அந்த இன்ஸ்பெக்டரோ பல்டி அடித்து அங்கே உருண்டு விழுந்தார்.