ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

5
(10)

ஆரல் – 06

 

இரவு வெகு நேரமாக ஆரோனை திட்டிக் கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. மறுநாள் காலையில் மாயாவின் போன் அழைப்பில் கண் விழித்தாள் யாரா.

“ஹலோ சொல்லுடி..”

“என்ன சொல்லுடி.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு சீக்கிரம் கிளம்பி வா நான் வெளியே வெயிட் பண்றேன்..” என்றாள் மாயா.

“அச்சச்சோ ஆமால்ல.. மறந்தே போயிட்டேன் சாரிடி.. சாரிடி. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ வந்துடுறேன்..” என்று போனை வைத்தவள், பெட்டை விட்டு அவசரமாக எழுந்து கொண்டு மீண்டும் ஆரோனைத் திட்டியபடியே குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து வந்தவள், ஒரு அழகான சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு வேகமாக மாயாவை நோக்கி ஓடினாள்.

தோழிகள் இருவரும் காலேஜ் நோக்கிச் சென்றார்கள்.

இங்கு ஆரோனோ நேற்று நடந்த விடயங்கள் அனைத்தையும் ஷாமிடம் கூறினான்.

அதைக் கேட்ட ஷாமோ அதிர்ச்சி அடைந்தான்.

“ என்னடா சொல்ற ரீனாவோட ஆர்கன்ஸ் இன்னொரு பொண்ணுக்கு வச்சிருக்காங்களா..? எப்படிடா.. நமக்கு எப்படி இது தெரியாம போச்சு.. சரி என்ன விடு.. உனக்கு எப்படிடா தெரியாம போச்சு..” என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஷாம்.

“ஆமாடா எனக்கும் தெரியல.. உனக்கு தான் தெரியுமே ரீனா என்ன விட்டு போன சமயத்தில நான் எந்த நிலைமையில இருந்தேன்னு.. அதனால என்னால இதெல்லாம் யோசிச்சிப் பார்க்க முடியல டா.. ஆனா அவளோட அந்த கண்களை பார்க்கும்போது எனக்கு அப்படியே ரீனா தெரிஞ்சா டா ..அதே மாதிரி நேத்து அவளை அவளோட வீட்ல அதுவும் ரீனாவோட ரூம்ல பார்த்ததும் எனக்கு அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சதுடா.. உண்மையிலேயே அது ரீனாதான்னு நான் நினைச்சேன். ஆனா, அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது ரீனாவோட ஆர்கன்ஸ் அந்த பொண்ணுக்கு வச்சிருக்காங்கன்னு அதை கேட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் ஏமாற்றமா இருந்தாலும் உண்மையை புரிஞ்சிக்கிட்டு நான். என்ன சாந்தப்படுத்திக் கிட்டேன்.. அவளப் பார்க்கும் போது என் மனசு தடுமாறுதடா இனி அவளை நான் பார்க்கவே கூடாது..” என்று கூறிக் கொண்டிருந்தான்.

ஷாமுக்கோ வேறு ஒரு சிந்தனை தோன்றியது.

‘வாறே வா இது நல்ல ஐடியாவா இருக்கே இவனை எப்படியாவது அந்த கெட்டப் பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வரதுக்கு எவ்வளவோ போராடி பார்த்துட்டோம்.. இவன் வழிக்கு வர்ற மாதிரியே இல்லை இப்ப என்னடான்னா இவனாவே சொல்றான் அந்த பொண்ண பார்த்தா இவன் மனசு தடுமாறுதுன்னு பேசாம இரண்டு பேத்தையும் கோர்த்து விட்டுவிடுவோமா..?’ என்று அவனுடைய மூளை யோசிக்க அவனுடைய மனமோ,

“ஏன்டா அறிவு கெட்டவனே.. இவன் கேரக்டர் எப்படின்னு தெரிஞ்சும் ஒண்ணுமே தெரியாத ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்குறியா..? இதுவே உன் தங்கச்சியா இருந்தா நீ இவனுக்கு கட்டிக் கொடுக்க சம்மதிப்பியா..” என்று சரமாரியாக இவனை கேள்வி கேட்க, கொஞ்ச நேரத்தில் பிரகாசித்த அவனுடைய முகமோ சட்டென கூம்பியது.

அதற்காக அவனுடைய நண்பனையும் அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

ரீனா இறந்த விரக்தியில் அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாமல் செய்த தவறுகளில் அதுவும் ஒன்று.

சரி இந்த வழியில் சென்றாலாவது அவன் அவளை மறந்து நார்மலாக இருப்பான் என்று நினைத்தான்.

அவனோ அதை பொழுதுபோக்காகவே மாற்றிக் கொண்டான்.

‘சரி பார்ப்போம் அவனோட வாழ்க்கையில ஏதாவது ஒரு நல்லது நடந்தா சந்தோஷம் தான்.

அது அந்த பொண்ணாவே இருந்தா ரொம்ப சந்தோஷம்..’ என்று நினைத்துக் கொண்டான் ஷாம்.

பிறகு இருவருமே தங்களுடைய வேலையில் மூழ்கி விட அன்றைய நாள் நன்றாகவே சென்றது.

மாலை நேரத்தில் ஷாமும் ஆரோனும் ஒரு மீட்டிங்கிற்காக வேறொரு கம்பெனிக்கு சென்றவர்கள் மீட்டிங் நல்லபடியாக முடியத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அவர்களது கார் சந்தியா படிக்கும் கல்லூரி வழியாகச் சென்றது.

அங்கு ஒரு சில மாணவர்கள் வாயிலில் நின்று கொண்டிருந்தார்கள்.

அதில் சந்தியாவும் ஒருத்தி.

சந்தியா அங்கு நிற்பதைப் பார்த்தவன் ஷாமிடம்,

“டேய் மணி என்னடா..?” என்று கேட்க,

அவனோ “ஐந்து..” என்று சொல்ல அதிர்ச்சியானான்.

“இந்நேரம் வரைக்கும் இவளுக்கு இங்கே என்ன வேலை காலேஜ் முடிஞ்சு ஒரு மணி நேரம் ஆகுது இவ இன்னும் வீட்டுக்கு போகாம இங்க ஏன் நிற்கிறா..” என்று சொல்லிக் கொண்டே காரை சந்தியாவின் முன்னால் நிப்பாட்டினான்.

சந்தியா தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள், தன் முன்னே ஒரு கார் பிரேக் போட்டு நிற்கவும் யார் என்று பார்க்க அதிலிருந்து இறங்கினான் ஆரோன்.

“அண்ணா நீங்க எங்க இங்க..” என்று கேட்டாள் சந்தியா.

“காலேஜ் நாலு மணிக்கு முடிஞ்சிடும்.. மணி இப்ப அஞ்சாவது இவ்வளவு நேரம் வரைக்கும் இங்க நீ என்ன பண்ற சந்தியா..” என்று கேட்டான் ஆரோன்.

“இல்ல அண்ணா காலேஜ் பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு.. அதான் ஏதாவது வண்டி வருமான்னு வெயிட் பண்ணி பார்த்தோம். ஆனா, இன்னைக்குன்னுபாத்து எந்த வண்டியுமே வரல.. அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் அண்ணா..” என்றாள்.

“என்ன சந்தியா இது..? பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சுன்னா கொஞ்ச நேரம் வெயிட் பண்றது சரிதான்.. அதுக்காக ஒரு மணி நேரமாவா வெயிட் பண்ணிட்டு இருப்ப..? அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்கலாம். இல்லனா எனக்கு போன் பண்ணி இருக்கலாம். நான் வந்திருப்பேன் தானே.. அதை விட்டுட்டு இவ்வளவு நேரமா நீ இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தா.. என்ன அர்த்தம் வீட்ல தேடுவாங்க தான..” என்றான்.

“இல்லண்ணா யாரா கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும் வெயிட் பண்ணுன்னு சொன்னா.. சரி பஸ் வேற பிரேக் டவுன் ஆயிடுச்சு அதான் அவ வந்ததும் போலாம்னு அப்படியே பேசிக்கிட்டு இருந்தோம்..” என்று சொன்னாள்.

“என்ன யாராவா யாரது..?” என்று புருவ முடிச்சுடன் கேட்டான்.

“அண்ணா நேத்து நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாளே என் பிரண்டு யாரா அவதான்..” என்றாள் சந்தியா.

“அவளுக்காக நீ ஏன் வெயிட் பண்ற டைம் ஆச்சு வா.. நான் உன்னை கொண்டு போய் வீட்டில விடுறேன்..” என்று அழைத்தான்.

அதற்குள் யாரா தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே சந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்க, சந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்த ஆரோனின் காதுகளில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்க, சட்டென சிரிக்கும் திசை பக்கம் பார்வையைத் திருப்பினான்.

பார்த்தவனுக்கோ பிபி ஏகத்துக்கும் ஏரியது.

யாரா இன்னொரு மாணவனுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கோ கை முஷ்டி இறுகியது.

அவளோ இவனைப் பார்க்காமல் அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே அவன் தோளில் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

“ ஓகே கௌதம் நாளைக்கு பாக்கலாம்..”

“சரி யாரா.. நான் கிளம்புறேன்.. சரி பஸ் தான் பிரேக்டவுன் ஆயிடுச்சே நான் வேணா உன்ன ட்ராப் பண்ணட்டுமா..? “

“இல்லை இல்லை வேண்டாம் கௌதம் நான் என் பிரண்டு கூட போய்டுவேன். நம்ம நாளைக்கு பாக்கலாம்..” என்று அவர்கள் இருவரும் தங்களைச் சுற்றி இருப்பவர்களை மறந்து பேசிக் கொண்டிருக்க, இங்கு அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆரோனுக்கோ காதில் புகை வராத குறை தான்.

ஒரு வழியாக கௌதம் அவளிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப, யாரா சந்தியாவின் பக்கம் திரும்பியவள், அப்பொழுதுதான் அங்கு ஆறடியில் அய்யனார் போல் இவளை முறைத்துக் கொண்டிருந்த ஆரோனைக் கண்டாள்‌.

‘அடி ஆத்தி.. இவரா இவர் எங்கே இங்கே.. அதுவும் நம்மளை எதுக்கு இப்படி முறைச்சு பார்க்கிறாரு..’ என்று உள்ளுக்குள் நினைத்து சற்று நடுங்கியவள், வெளியே எதுவும் காட்டாமல் சந்தியாவின் புறம் திரும்பி,

“சாரி சந்தியா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. போலாமா..?” என்று கேட்க,

சந்தியாவும், “போலாம் யாரா.. வா நாங்க உன்ன ஆசிரமத்துல ட்ராப் பண்ணிட்டு நாங்க போறோம்..” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு யாரா குழம்பினாள்.

“ என்ன டிராப் பண்ணிட்டு நீங்க போறீங்களா..?” என்று கேட்க,

“ஆமா யாரா.. அண்ணா நான் இங்க நிக்கிறத பார்த்துட்டு அண்ணாவே வீட்டில டிராப் பண்றதா சொன்னாங்க.. நீயும் வா உன்ன ஆசிரமத்தில ட்ராப் பண்ணிட்டு நாங்க கிளம்புறோம்..” என்றாள்.

அவள் இவ்வாறு கூறவும் யாராவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

‘என்னது இவனுடன் செல்ல வேண்டுமா..?’ என்று நினைத்தவள், “இல்லை சந்தியா நான் போய்க்கிறேன் நீங்க போங்க..” என்று மறுத்துக் கூற,

ஆரோனோ சந்தியாவிடம் “சந்தியா வர சொல்லு அவளை டிராப் பண்ணிட்டு நாம கிளம்பலாம் தட்ஸ் ஆல்‌..” என்றான்.

‘அவர் கூப்பிட்டதும் நான் உடனே போயிடனுமா.. நான் போக மாட்டேன்..’ என்று மனதில் நினைத்துக் கொண்டு சந்தியாவிடம் தான் வரவில்லை என்று கூறும் முன்னறே, ஆரோனோ அவளுடையக் கையைப் பிடித்து கார் கதவைத் திறந்து அவளை உள்ளே அமர்த்தியவன், சந்தியாவின் புறம் திரும்பி,

“சந்தியா ஏறுமா கிளம்பலாம்..” என்று சொன்னவன் சந்தியா காரில் ஏறியதும் டிரைவர் சீட்டில் ஏறி அம

ர்ந்தவன் காரைச் செலுத்த தொடங்கினான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!