அத்தியாயம்-10
இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு ஆசை வந்துருமா என்ன..? முதல்ல ஒரு பொண்ணு மேல காதல் வரணும் டா அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்.. சும்மா தான் ஒரு ஆம்பளனு நிரூபிக்கறதுக்காக ஒரு பொண்ணு கிட்ட போனா.. உடனே எல்லாம் நடந்துருமா..? நீங்க ரெண்டு பேரும் என்ன மூளையை கழட்டி வச்சுட்டா இவ்ளோ நாளா இருந்தீங்க..? சரியான ஒரு மொக்க பிளாஷ்பேக் சொல்லி என் கழுத்தை அறுத்துட்டீங்க..” என்று அவள் அவனை திட்டிக் கொண்டிருக்க, அவனோ “இங்க பாரு உனக்கு என்ன தெரியும்..? நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. பட் எதுவுமே முடியல.. அதுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு பிளான் பண்ணினோம்.. இப்ப லாஸ்ட்டா கூட ஒரு பொண்ண ஏற்பாடு பண்ணி அண்ணன் தான் அவளை கற்பழிச்சார்ன்னு பஞ்சாயத்து எல்லாம் பண்ணி அதுக்கு எவ்வளவு செலவு பண்ணோம் தெரியுமா..?” என்று சொல்ல, அதைக்கேட்ட வினியோ அதிர்ந்து போய் “என்னடா சொல்ற..? இப்படி எல்லாமா பண்ணிங்க..?” என்று அவனை அடிக்கப் போக, அவளிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டவன், “இங்க பாரு ஆஊனா நீ அடிக்க அடிக்க வர.. நீ தள்ளி நின்னே பேசு..” என்றான் நண்டு.
“நீங்க ரெண்டு பேரும் பண்ணி வச்சிருக்க வேலைக்கு உங்களை கொஞ்சுவாங்க.. ஏன்டா நாலு பேரு மத்தியில கெட்ட பெயர் எடுக்கறது ரொம்ப ஈஸி.. ஒரு நல்ல பெயர் எடுக்கறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா.. ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணி வச்சிருக்கீங்க..?” என்று மேலும் மேலும் அவனை திட்ட,
அவனோ “சரி அதெல்லாம் விடு அண்ணாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு நாங்களும் டாக்டர்கிட்ட போய் பாத்துட்டோம்.. ஆனா எதுக்குமே அண்ணாவுக்கு சரியா வரல.. நீ எங்க அண்ணனை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்ப தானே..?” என்று கேட்க, அவளோ “டேய் நான் முதல்ல சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. என் மாமா தப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறாருன்னு தெரிஞ்சும் அவர கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ அவர் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவரை விட்டு இனி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது..” என்று சொல்ல, அதன்பிறகே நண்டுவின் முகம் மலர்ந்தது.
“சரி ஆனா உன்ன அண்ணா ஏத்துக்கணுமே.. அவர் என்னடா அவருக்கு உணர்ச்சியே வராதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.. இந்த நிலைமையில உன்னை எப்படி அவர் ஏத்துக்குவாரு..?” என்றான். அவளோ சற்று யோசித்தவள்,
“நான் சொல்ற மாதிரி நீ செய் அதுக்கப்புறம் உங்க அண்ணன நான் பாத்துக்கிறேன்..” என்றவள் அவன் காதில் ஏதோ சொன்னாள். அவள் சொல்வதைக் கேட்டு “நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் அண்ணாவுக்கு இதுக்கு நானும் உடந்தைன்னு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான் என்ன கொண்ணு போட்டுடும்..” என்றான்.
“உங்க அண்ணனோட வாழ்க்கை நல்லா இருக்கனுமா வேண்டாமா..? நீயே முடிவு பண்ணு..” என்றாள். “என்ன நீ இப்படி சொல்லிட்ட.. என் அண்ணன் சந்தோஷமா இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.. அவரு சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்..” என்றவன் அவள் சொல்படி கேட்டு நடந்தான்.
“சரி ஓகே இன்னைக்கு ராத்திரி நான் சொன்னத அப்படியே செய்..” என்றாள்.
அவனும் சரியென்று தலையாட்டி சென்றான்.
இங்கே வெளியே சென்றவன் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு என்றுமே மதியம் வீடு வராதவன் அன்று வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்த நேரமோ இவள் குளித்துவிட்டு வெறும் துவாலையை மட்டும் கட்டிக் கொண்டவள் அறைக்குள் வந்து ஆடை மாற்ற எத்தனிக்க, சட்டென அவளுக்கு விக்கல் எடுத்தது.
பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை பார்த்தவள் அதில் தண்ணீர் இல்லை என்றதும், வீட்டில் இந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றதால் போத்தலை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த இளவேலனும் தன்னுடைய அறைக்குச் செல்ல மாடி ஏறினான். அப்பொழுது கீழே வந்தவள் இவனை எதிர்பாராதவள் அவனைப் பார்த்த அதிர்ச்சியில் சட்டென்று நிற்க முற்பட்டவள் கால்கள் தடுமாறி அவன் மேல் அப்படியே விழுந்தாள். அவனோ தன் மேல் அவள் விழுந்ததும் அவளை தன்னோடு இறுக்கிப்பிடித்தவன் பிடிமானம் இன்றி கீழே விழுந்தான்.
இருவரும் அந்த மாடிப்படிகளில் கட்டிப்பிடித்தவாறே உருண்டு வந்தார்கள்.
கீழே அவள் தலை அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அவளை தனக்குள் ஆக்டோபஸ் போல சுருட்டி கொண்டவன் அவன் கீழே விழுந்து அவன் மேல் அவளை விழும் படி விழுந்தான்.
கீழே விழுந்ததும் அவள் கண்ணை திறந்து பார்க்க எதிரில் அவனும் அவளைப் பார்த்து “உனக்கு ஏதும் அடி படலையே..?” என்று கேட்க, அவளோ இல்லையென்று தலையாட்டியவள் அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள்.
தன் உடலில் துவாலை மட்டும் சுற்றியிருக்க அவன் மேல் இருப்பதை எண்ணி முகம் சிவந்தவள், சட்டென எழுந்திருக்க முற்பட, அவனுடைய புலிப்பல் டாலர் அவள் துவாலையின் முடிச்சில் மாட்டிக்கொண்டது.
இவள் எழுந்திருக்கும் போது அந்த தவாலையின் முடிச்சி அவிழப்போக சட்டென அதைப் பிடித்துக் கொண்டவள்,
“அச்சச்சோ உங்க டாலர் துண்டுல மாட்டிக்கிச்சு.. இப்ப நான் எழுந்தா துண்டு அவுந்துடும்.. ஏதாவது பண்ணுங்க..” என்று மெதுவாக சொன்னாள்.
அவனோ அவள் துவாலையில் மாட்டியுள்ள அவனுடைய டாலரை பிரித்து எடுக்க ஆரம்பித்தான். ஆனால் அந்த டாலரோ நான் அவள் மேனியில் உள்ள அந்த துண்டில் இருந்து வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் தன்னுடைய கழுத்தில் இருந்த அவனுடையச் செயினை கழட்டி அவளுடைய கழுத்தில் போட்டு விட்டான்.
“இப்ப எழுந்திரு..” என்றான். அவளும் எழுந்து நின்றவள் கூச்சத்துடனே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள்.
என்னதான் அவன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் திடீரென அவன் முன்னால் தான் இப்படி இருக்க வெட்கம் பிடுங்கி தின்றது.
அவள் பக்கம் நெருங்கியவன் “ஏன்டி வெள்ளத் தக்காளி வீட்டுக்குள்ள இப்படியா வெறும் துண்டு மட்டும் கட்டுகிட்டு சுத்துவ..?” என்று கடிந்து கொண்டான்.
அவளோ “இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் டிரஸ் மாத்தலாம்னு போகும்போது விக்கல் எடுத்தது.. பக்கத்துல தண்ணீர் போத்தலை பார்த்தேன்.. தண்ணி இல்ல சரி வீட்ல தான் யாரும் இல்லையே அப்படின்னு கீழே வந்தேன்.. நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல..” என்றாள் தலை குனிந்து கொண்டே, “சரி சரி போய்த் தொல.. எப்ப பாரு என் முன்னாடி இப்படி அரைகுறையாவே சுத்துற.. இது எங்க போய் முடியப் போகுதோ எனக்கே தெரியல.. போய் முதல்ல டிரஸை போடு..” என்க, அவளோ விட்டால் போதும் என்று தன்னுடைய அறை நோக்கி ஓடிவிட்டாள். இவனுக்கோ அவளை அங்கிருந்து அனுப்பியதும் அவள் தன் மேல் விழுந்து உருண்டதை நினைத்து பார்த்தவன் உடல் சிலிர்த்தது.
“என்ன இப்ப எல்லாம் எனக்கு என்னென்னமோ தோணுது.. இதெல்லாம் தப்பு.. இப்படி எல்லாம் தோனக் கூடாது..” என்றவன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான். இரவில் வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட, அவன் பின்னையே வந்த நண்டு வினிதாவின் அறை நோக்கிச் சென்றான்.
அவளைப் பார்த்ததும் தன்னுடைய வலது கையை தம்சப் என்ற வகையில் சைகைச் செய்ய, அவளும் அவனைப் போலவே சைகை செய்து புன்னகைத்தாள். இங்கு வேலனோ வழக்கம்போல் குளித்துவிட்டு வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக் கொண்டு எப்போதும் போலவே அறைக்குள் நுழைந்தவன் கட்டில் ஒரு பெண் பாலை குடித்து விட்டு போர்வையைத் தலைவரை மூடி படித்து இருப்பதை கண்டவன்,
“இது என்னடா போர்வையை இழுத்து மூடி படுத்து இருக்கா.. சரி எப்படியோ ஒன்னு நமக்கு என்ன..” என்றவன் அங்கு டேபில் மேல் அவனுக்காக ஒரு பால் டம்லர் இருக்க, ‘இது என்ன புதுசா இன்னொரு டம்லர் இருக்கு..’ என்று யோசித்தவன் நண்டுக்கு போன் செய்து விசாரிக்க, அவனோ “அண்ணே அது சத்துப்பால் குடிங்க நல்லா தூக்கம் வரும்..” என்று சொல்ல, அவனும் அவன் சொன்னதை நம்பி குடித்துவிட்டு படுத்து விட்டான்.
காலையில் அவன் அருகே ஒரு பெண் ஆடைகள் கிழிந்தவாறு முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவள் அழுகையில் துயில் கலைந்து எழுந்தவன் யார் என்று கேட்க, தன்னுடைய முகத்தை மெல்ல உயர்த்தினாள் அவனின் வெள்ளத் தக்காளி வினி.
அவளுடைய முகத்தை பார்த்தவன் அதிர்ந்து எழுந்து விட்டான்.
இவள் எப்படி இங்கே என்று.