போகம் – 3
வெய்யோன் மறைந்து சந்திர தேவதை வான் உலா வர தொடங்கிய நேரம் அது…!!!
அங்கே செல்ல நேரம் வந்துவிடத்தான் ருத்ரனின் பிறை நிலாவானவள் சொப்பனமாக மறைந்துவிட்டாளோ…?!
அல்லது அவனின் நிரந்தரமான நிலையான முழுமதி அவனின் சரிபாதியாக போகிறவள் அவ்வூர் எல்லையை தொட்டுவிட்டதாலா…??!!
மொபைல் கத்தும் சத்ததில் தன் கனவுலகம் தெளிந்து பூவுலகம் வந்தான் மன்னவன்.
தன் சொப்பனக் காதல் தேவதை மறைந்ததை எண்ணி வருந்த… வருத்தம் கோபமாக மாற…
கோபம் மூர்க்கம் கொள்ள…
தன் தொடையை வேகமாக மீண்டும் குத்தி கொண்டவன், இத்தடைக்கு காரணமாக அலறிக் கொண்டிருந்த தன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தான் அதன்பின் உள்ள காரணகர்தாவை கொத்துக்கறி போட…
“மச்சா…ன்”, என்று ஒருவன் இழுத்தான் இழுவையாய் நெளிந்துக் கொண்டே…
ஏனெனில் அவனுக்கு தெரியுமே அறையினுள் வந்த ருத்ரனுக்கு ஃபோன் போட்டால் நன்றாக கத்தை கத்தையாக அவன் வாயிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதனை…
அவனாக வெளியே வரும் வரை யாரும் தன்னை நோண்டக்கூடாது ருத்ரனுக்கு…!
“___ஆ டேய் ___ ____ , பச்சை பச்சையா கேட்பேன்டா…
எதுக்குடா இப்போ ஃபோன் போட்டுட்டு இழுக்குற…
ஒழுங்கா விஷயத்தைச் சொல்லுடா தயிருஉஉஉ ____…”, என்று கிழிகிழியென கிழித்து தொங்கவிட்டுவிட்டு அவனை வறுக்க தொடங்கிவிட்டான்…
வேறு யார் நம்ம விஜயன்தான் லைனில் வந்து வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பது.
‘ஆமா மச்சான்… இவ்ளோ நேரம் என்னை ரோஸ்ல பாராட்டுனது போதாதில்ல உனக்கு…இன்னும் அடுத்து பச்சையாவா…?
நல்லாருக்குடா உன்ற அக்கறை…’, என்று மைண்ட் வாய்ஸில் பேசியவனுக்கு நன்றாக தெரியும் அதை அப்போது வாய்விட்டுக் கூறியிருந்தால் அங்கே வீட்டில் மாடியில் படு காண்டில் வீறுக் கொண்டு இருப்பவன்
படியில் நடந்து வராமல் பறந்து வந்து கும்மு கும்மு என கும்மிவிடுவான் என்று.
அதனால் ஆல் அமுக்கிவிட்டது சொல்லை சொல்லவில்லை…!
(ஜாக்கி சான் ஒன்று விட்டவனோட நாலுவிட்ட ஃபேமலியா இருக்குமோ…)
“ஹிஹிஹி…அது…இல்லை மச்சா…ன்…அது…”, என்று திக்கி தின்ற.
“_____ எதுவும் இல்லைனா வைடா _____ மண்ணாங்கட்டி ம____ ____…”, என்று விஜயனுக்கு காதுகிழிய பல டேஷ்களில் கத்தினான் ருத்ரன்…
(வாங்கு மேன் நல்லா…கிகிகி…பின்ன ரோம் சீன் போச்சல்லோ…)
“தங்கச்சிஇஇ வந்துடுச்சாம்…
மேலூர் தாண்டி வற்ரதா பசங்ககிட்ட இருந்து தகவல் மச்சா..ன்…
அதான்…நானுஉஉ பொறுப்புள்ள நண்பனாஆஆ உன்கிட்ட சொல்லிபுடலாம்னு… அதான் ஃபோன் போட்டேன் மச்சான்… ஹிஹிஹி…” , என்று சொல்லி முடித்தாலும்…
சைடில் விஜயன் தெருவில் அவன் ப்புல்லட்டின் மீது அமர்ந்து இருந்தவன் அங்கே வீட்டின் முன்னால் கோலமிடும் தாவணிப் பெண்ணை பார்த்து கண்ணடித்தவாறு அவளிடம் ‘பூவாங்கி தரவா…?’ என்று சைகையில் கேட்டுக் கொண்டிருந்தானே பார்க்கலாம்…!
பீதி உள்ள இருந்தாலும் தெருவீதில காட்டாம நடக்கும் பம்பர்ஸ்டார் நாங்க அப்படிங்குற பாலிசி ஃபாலோ செய்றவர் நம்ம விஜயனாக்கும்…
(பலே பாலிடே பைய்யா…)
“ஒஹோஓ… ஹோ ஹோ ஹோஓஓ…
அப்படி அப்படி…
கதை அப்படி போகுதோ…
எப்படி எப்படி தங்கச்சிஇஇயோஓஓ…?!
எப்போடா அவ உனக்கு தங்கச்சிஇஇ தொங்கச்சிஇஇனு ஆனா புதுசா… பல்ல பேத்துபுடுவேன் பார்த்துக்க…
உனக்கு என்னைக்கும் நான் மட்டும்தான் மச்சான் அம்புட்டுதேன்…
கட்சி தாவூறியோ முஹரையையும் சேர்த்து சட்னியாக்கி புடுவேன் விளங்குதாம்லே… !? விளங்கும்.
அங்கன எங்கையாச்சும் வழிஞ்சிட்டிருக்காம ஒழுங்கா ஒரு நிமிஷத்துல இங்க இருக்கனும்…”, ருத்ரன் அவனை கடிகடியென கடித்து துப்பி விட்டிருந்தான்.
“டே..ய் மச்சான்… மச்சான்… இருடாஆஆஆ…”, என்று கூற விஜயன் ஏதோ கூற முற்பட…
‘பீங்…பீங்…பீங்…’
எங்கே…ம்ஹும்?!? நோ ரிப்ளை…
பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு நேரம் ஆகிவிட்டதே…!
“இனி திருப்பி அழைத்தால் அதற்கும் கழுவிக் கழுவி கொட்டுவானே…
அது எப்புட்றா ஒரு நிமிஷத்துல வர…?!
சரிதேன் அடுத்த ஆப்பு ரெடி அப்போ….!
ஹிஹிஹி…எப்படிதான் மச்சானுக்கு இவ்ளோ மூளையோ வழியுது வெள்ளம் அங்கவே போகிட்டு போல …
வயித்துக்குள்ள இருக்கும் போதே ஜேம்ஸ் பாண்டுகிட்ட ட்ரெயினிங் போயிறுப்பான் போல டோய்…”, என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், அந்த பெண்ணுக்கு சைகையில் ‘பை செல்லம்…’சொல்ல…
அந்த தாவணிப் பெண்ணோ, தனியாக இவன் பேசுவதைக் கண்டு “பைத்தியமே…” ,என்று கூறி வாயை கோணிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“அவ்வ் கிரேட் இன்ஸல்ட்….
விட்றா விட்றா விஜயா…
இதுலாம் நம்ம வாலிப வயசுஉஉஉல ஜகஜம்…
ஸோ கண்டுக்குற கூடாது…
சொல்ல போன இதுலாம் பெருமைடா விஜயா…”, என்று காலரைத் தூக்கி விட்டவன் தன் சிகையை ஸ்டைலாக கலைத்த வண்ணம் விசில் அடித்துக் கொண்டு,ருத்ரனை நோக்கி வண்டியை விட்டான்.
*******
ருத்ரன் தன் மொபைலை கட்டிலில் மீது பொத்தென போட்டுவிட்டு எழுந்து குளியலறைப் பக்கம் சென்றான்.
அங்கே கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைக் கண்டவன்,
“எடேய் ருத்ராஆஆ… அவ்ளோதானாடே உன்ற லவ்ஸு…?!
உன்ற முத்துமயில உன்னால கண்டுபிடிக்க முடியலைல… ?!
அந்த மேனா மினுக்கிஇஇய கட்டிக்க போறீயா அப்போ… ?!
பண்ணு பண்ணு…
எப்படி முத்துமயில மறக்கறேனு நானும் பார்க்கறேன் …
ஏடே ருத்ரா நல்லாஆஆ கேட்டுக்கோவே…
நீ அந்த மேனா மினுக்கிய கட்டிகிட்ட பின்னால மயில மறந்தே ஆகனும்…!
தாலிக் கட்டிட்டப் பொறவு இன்னொருத்தியை மனசால நினைக்கிறது கூட மகாபாவம்டே ருத்ராஆஆ… !
அப்படி செய்தாக்க அது ரெண்டு பொண்ணுக்குமே செய்ற துரோகம் … !
அதுனால இப்போவே முத்துமயில மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிடனும்…!
அது முடியுமாஆஆ டே உன்னால…?!
அவ தந்த காதலை…?!
அந்த பிறைநிலா பச்சை மச்சத்தை…?!
அந்த குயிலின் குரலை மறக்க முடியுமாஆ உன்னால…?????” , என்று மனசாட்சியாய் மாறி தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தான் தன் தேவதைப் பெண்ணை மறக்க முடியாமல் பித்துபிடிக்கும் நிலையில்.
ருத்ரனுக்கு கருத்து தெரிந்த நாள் முதல் அவன் கனவில் வலம் வந்து கொண்டிருக்கிறாள் அவ்வழகி.
அவன் பத்து வயதில் அவள் ஐந்து வயது சிறுமியாக…!
அவன் பதின் பருவத்தில் அவள் பத்து வயது சிறுமியாக…!
அவன் வாலிபனாக மாறும் வயதில், அவள் ‘அத்தா…ன் வயிறு வலிக்குது காலெல்லாம் ரத்தம்…பயமா இருக்குஉஉ…’ என்று விழிகளில் நீர் ததும்ப உதடுகள் துடித்தபடி பதின் பருவக்குழந்தையாக வந்து நின்றாளே…!
அவன் காளையனாக ஆகிவிட்ட பொழுது அவள் ‘அத்தா…ன் இந்த தாவணி எப்படி இருக்குஉஉ… ?!’ என்று வெட்கப்பூ கன்னத்தில் பூசிக்கொண்டு உலக அழகியாக வந்து கேட்டுவிட்டு ருதரனை இரசிகனாக்கிவிட்டு வைத்துவிட்டு செல்வாளே…!
இதோ இப்போதும் கூட…
சீறும் அரிமாவாக ருத்ரன் மாறியிருக்கும் பொழுதினில்,
தேவலோக கன்னியாக…
ரம்பையாக…
ரதியாக வந்து இரவில் ‘அத்..தா..ன்…’ என தேனொழுக காதலோடு அழைத்து மன்னவனை மன்மதனாக மாற்றிவிட்டு மனம் கொய்ய செய்து பாதியில் ‘என்னை கண்டுபிடிங்க அத்தா…ன் ஹாஹா ஹாஹா…’ என்று வெண் முத்து சிதறளாக நகைத்து ஒளிந்து கொண்டு தவிக்கவிட்டு விளையாடுவாளே…!
காதலனாக ஆகும் வேலையில் காமதனாக மாற்ற எண்ணி,
“அத்தா…ன் இங்க முத்தாஆஆ தாங்க … இங்க… இங்க…
ஆஆஆ ஸ்ஸ் அத்தான்…’ என்று இவன் இளமையை சீண்டிவிட்டு ருத்ரவேலனை காதல் பித்து பிடித்து அலைய விடுவாளே அக்காதல் அரக்கி… !
இந்த கனவுத் தேவதை இப்படி ருத்ரனின் உயிருடன் கலந்துவிட்டதற்கு சாட்சியாக அந்த பிறைநிலா வெண்பச்சை மச்சமும்…
அவள் ஜாதிமல்லி வைத்து வரும் வேலை பூவின் வாசத்துடன் அவளின் பிரத்யேக வாசமும் கலந்து இவனை போதையாக்கி பித்தனாக்கும் அம்மனமும்…
காதலோடு கசிந்துருகி தேனொழுகும் குரலில் அவள் விளிக்கும் அந்த ‘அத்தா…ன்’ என்னும் சொல்லன்றி வேறில்லையே…!
ருத்ரன் தேடுகிறான்… தேடுகிறான்…
எங்கேனும் தன்னால் தன் நிழல் கனவுப் பெண்ணை தன் நிஜ வாழ்வில் கண்டுபிடித்து தனக்குள்ளேயே அடைக்காத்து கொள்ள முடியுமா என்று தேடுகிறான்…!
ஆனால் பாவம் அந்த சீண்டல்க்காரி கிட்டினாள் இல்லை இந்த உயிர்நேச கனாக்காதலனுக்கு…!
ருத்ரன் இப்படி கனவு தேவதையை காதல் கொண்டு உயிராக தேடி அலைவதை அறிந்த ஒரே ஜீவன் உயிர்நண்பனான விஜயன் மட்டும்தான்…!
இதைதான் விஜயன் அறிந்திருந்தும் பாட்டி தாத்தாவிடம் மறைத்திருந்தான். ஏனெனில் விஜயனுக்கு தன் நேசத்தோழன் நன்றாக நிறைவாக இன்பமாக வாழ வேண்டும்.
நிழல் என்றும் நிஜமாகாது அல்லவா…!
ருத்ரனுக்குமே அது தெரிந்திருந்தாலும் கூட அவனாக அதை ஒரு போதும் மனம் உணரமாட்டான். தன் சொப்பனக்காரிகை தவிர்த்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இந்த ஜென்மத்தில் எந்நாளும் முழுமனதாக சம்மதிக்கமாட்டான் என்று விஜயனுக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் தாத்தா பாட்டி அவனை கட்டாயப்படுத்துவது தவறல்ல என்று நினைத்ததும்… நல்வாழ்வுக்கு பெரியவர்களின் வழி எப்போதும் நன்மைக்கே என்றும் விஜயன் தெளிவாக யோசித்து முடிவு செய்த பின்னரே இவ்விடயத்தை மறைத்தது…!
‘எப்படி மறவேன் பெண்ணே உன்னை…?!
உயிராய் கசிந்துருகி காதல் செய்த உன்னை…!
உயிர் நீங்கிய பின்னும் மறவேனே…!
அடி சகியே ஏன் இந்த தண்டனை எனக்கு…?!’
மனம் கேட்க இம்முறை கண்ணாடிக்குப் பக்கத்தில் சுவற்றில் குத்திய ருத்ரன்…
“ஏன்டிஇஇஇ… என் வாழ்க்கைல வந்த… என்னை கூறுபோடலம் இந்த இருதலை ஆட்டத்துக்கு பதிலாக…ஆஆஆஆஆஆஆஆஆஆ…” என்று காதல் வலியில் தாங்கொனாமல் விட்டம் பார்த்து கத்திவிட்டான்.
தன் முகத்தை நீரால் அடித்து…
தலைவழியாக ஜலத்தை இட்டு….
ஒருநிலை படுத்த எண்ணி குளித்து முடித்து…
எதையோ நினைத்து உறுதி கொண்டவன் கூடவே பிறந்த கம்பீரத்துடன் வெளியே வந்தான்…
கரும்பச்சை நிற சட்டை மற்றும் வெண்ப்பட்டில் தங்க ஜரிகை நெய்த வேஷ்டியில்…
கழுத்தில் ‘ரு’ என தமிழ் எழுத்து வடிவமைக்கப்பட்ட டாலர் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்டிருந்த ப்ளாட்டின செயின் கழுத்திலிருந்து கேடய மார்பு வரை ஆலமர விழுதாய் தொங்க…
முறுக்கேறிய நரம்போடும் கடோத்கஜ கைகளில் அவன் சற்று மேலே ஏற்றிய ஐம்பொன் தங்க காப்புடன்…
உலகாண்ட ராஜேந்திர சோழனாய் படியில் திடமாகி தாவித்தாவி இறங்கியவனை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவன் பாட்டிக்கும் தாத்தாவிற்கும்…!
(நமக்கும்ல ஈஈஈ…)
பாட்டியோ திருஷ்டி எடுக்க தன் பேரனை கலுக் என்ற சத்ததுடன் நெட்டி முறித்துக் கொண்டே,
“என்ற சாமிஇஇ… சீம ராஜா…கொள்ளி கண்ணு கள்ளி கண்ணு ஊரு கண்ணெல்லாம் மண்ணுக்குள்ள மண்ணாஹி போகஹஹஹ…”, என்ற அவனை உச்சி முகர்ந்துவிட்டார்….
தாத்தா தன் முறுக்கு மீசையை முறுக்கி நீவிக்கொண்டார்,
‘ என்ற பேரன்டா ‘ என்ற பெருமை அவரது விழிகளில்…
அவரின் தவப்பேரனோ அச்செயலைக் கண்டு ஜாடையால், ‘போயா…இதுக்கு ஒன்னும் குறைச்ச இல்லை…’ ,என்று விழிவழி கூறிவிட்டு அப்படியே பாட்டியின் பக்கம் திரும்பி கொண்டான்.
“அட்ரா சக்கை…தோ பாருடே…
எண்ணி ஒரு மாசத்துல என் வாழ்க்கைல காதல் விளக்கேத்தி வச்சுட்டியே என்ற பெரிசுனு, என்னை வந்து நீவிரு கட்டிபிடிக்கல…
இல்ல கட்டிக்குவ பாரு…
அப்ப இருக்குடே வோய் உமக்குஉஉஉ…
கோவம்மாம்ல எம்பட ராஜனுக்கு…
பொடிப்பையா… ஹாஹாஹா…”, என்ற கலகலத்து அகம் மகிழ கூறிச் சிரித்தார் சக்ரவர்த்தி தாத்தா.
“அப்படி ஒன்னு நடக்கலனு வையும்… நான் இதோ சொல்றதான்…
சந்நியாசம் போறோம்…
நீவிரும் வருரீரு பாட்டிய விட்டுட்டு…
இதோ அவனும் வருவான்… என்னடா விஜயா வர்றதான…ஆஹ்ன்…?!”, சரியாக இந்நேரம் உள்ளே வந்த விஜயனை பார்த்து ருத்ரன் கேட்க…
அவன் ஏதோ அஜால் குஜால் பேச்சுலர் பார்ட்டி என நினைத்து…
“என்னா மச்சான் இப்படி கேட்டுபுட்ட…
நீ போனா தனியா இருப்பேனா…?!
ராமன் இதயம்தான் டா அனுமன்கு ரோடு…
ச்சை ச்சை வீடுஉஉஉஉஉ…”,என்று கூறியவனை சிக்கிட்டானே சில்வண்டு என்பதாய் பாவமாக பார்த்தார் பாட்டி.
“என்னா பெருசு பாத்திருல்ல இவன் வாரானாம்ம்…
உமக்கு டீல் ஓகேவா…?,
நீவீர் சொல்ற போல நடக்காட்டி சந்நியாசம் போறோம்…
போயே ஆகுறோம் சரிதான…?!
இல்லாட்டி இந்த கல்யாணம் இல்லைஐஐ…!
எப்படி மாப்பி நம்ம டீலிங்குஉ…?!”, என்று விஜயனின் தோளில் கை போட்டு கேட்க…
“அடப்பாவிங்களா… சந்நியாசமா… ?!
இல்லை என்ற காதுல தப்பா கேட்டுச்சா ….
அதுக்காடா வர சொல்ற மச்சாஆஆன்…???”, என்று கண்ணில் கண்ணீர் விடாத குறையாக ருத்ரனையும், ‘என்னா தாத்தாஆஆஆ இது…?!’ என்று பாவமுகத்துடன் தாத்தாவையும் மாறிமாறிப் பார்த்தான் விஜயன்.
“நீ வர மாப்பிஇஇஇ அம்புட்டுதேன்….
விளங்கிருக்கும்ல…ஆஹ்ன்…” , என தன் கைகளை மேல் நோக்கி சோம்பல் முறித்துக் கொண்டேகையை பலமாக முறுக்கி சொடுக்குகள் சத்தம் கேட்ட வண்ணம் ருத்ரன் செய்ய….
“ஆமா… ஆமாஆஆஆ…ஆமாஆஆ மட்டும்தேன் மச்சா.ஆஆ..ன்…”, என்று பம்மினான்.
(ஜோகத்தை…)
“சரிடா ராஜாஆ…நீவிர் சொல்ற போலவே செய்வோம்… டீல்கு சம்மதம்டே..!” என்று தாத்தா பாட்டியை விழியால் தின்ற வண்ணம் கூற…
“அய்ய… போக்கத்த மனுஷன்…
ஆறுபது கடந்து வருஷங்க ஆனாலும் ஆசை குறைல பாரு கிழவனுக்கு…ம்க்கும்…!”,பாட்டி தாத்தாவுக்கு மட்டும் கேட்குமாறு முறைத்தபடி கூறி விட்டு கழுத்தை நொடித்து திருப்பிக் கொண்டார்.
ருத்ரனோ , “அப்படி வாரும் வோய் வழிக்கு…”, என்று மிடுக்காக கூறிவிட்டு இடக்கை ஆட்காட்டி விரல்கொண்டு கொண்டு மீசையை நீவிக் கொண்டான் ரதியின் பாதத்தில் அடுத்த நாளே சரணடைய போவது அறியாமல்…
(மீசைல மண்ணு ஒட்டுமா…? ஒட்டாதா…?
விவாத மேடையில் பரபரப்பு வாதம்…!! ஹிஹிஹி)
விஜயனோ ,”குடும்பமாடா நீங்களாம்…
கன்னிப் பையனை கண்ணாலம் பண்ண விடாத பாவிஸ்…
அவ்வ்வ்… ” என்று மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியில் மெதுவாக முணுமுணுத்துவிட
“ஆஹ்ன்…ஆஹ்ன்.. ஆஹ்ன்…
என்னாஆஆ மாப்பிஇஇ… கேட்கல… சத்தம்மாஆஆ…” என ருத்ரன் சுண்டு விரலில் காதை குடைந்து கொண்டு கேட்கவும் …
“ஒன்னுமில்லையே… ஒன்னுமேயில்லையே…
கொசு கொசுஉஉ பறக்குது மச்சாஆஆன்…
ஹேய்… ஷு… ஷு… ஷு….
நாம ஒன்னா ஜாலியா போகலாம்… ஹிஹிஹி…”,வேறு வழியின்றி அனைத்து பற்களும் தெரிய இளித்து வைத்தான் விஜயன்.
“அப்றம் ராஜாஆஆ… என்ற பேத்திக்….” என தாத்தா ஆரம்பிக்க….
“உம்ம பேத்திக்கு நாமல்லாம் யாருனு தெரியக்கூடாது அதான…
ஆயிரம் முறை சொல்லிட்ட பெரிசு…
என் வழியா போகாது…
நீங்க ரெண்டு பேரும் அந்த மேனா மினுக்கிகிட்ட ஒளராட்டி சரிதான்…”, என்று தலைவன் கூறவும், தலைவியின் கார் அவர்கள் அரண்மனை வாசலில் நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
“இந்தா வந்துட்டா உங்க பேத்தி சின்ன சிறுக்கி…
அப்படியே தூக்கி வச்சி கொஞ்சிடுங்களேன் பார்க்கலாம் …
அவ அப்படியேஏஏ உங்கள மதிச்சிட்டாஆஆஆலும் …
பாசத்தை பொழிஞ்சிட்டாலுஉஉஉம்….
திமிரு பிடிச்சு சும்மாவே ஆடுவாஆஆஆ…
இப்ப சலங்கைய வேற கட்டியாச்சுனு தைய தக்கானு குதிப்பா…
இப்போ கொஞ்ச நேரத்துக்கு நீங்க ரெண்டு பேரும் அவ கண்ணுல பட வேண்டாம்.
கெரோசின மேல ஊத்திகிட்டவ போல எப்போ ஃபயரா மாறலாம்னு செம கடுப்புல இருப்பா இப்போ…
அதுனால ஃபயர கொஞ்சம் ஃப்ரீஸ் பண்ணிட்டு நான் சொல்றேன் அதுக்கு அப்புறமா நீங்க பார்த்து கொஞ்சி கொளாவுங்க உங்க பேத்தியை…
இப்போ உள்ளாற போய் இருங்க… “, என்று அவளை கழுவி கொட்டிவிட்டு அவர்களை அனுப்பினான்.
தாத்தாவும் அவளை பற்றி ஓரளவு தெரிந்தவராயிற்றே ஆதலால் கூடத்தை விட்டு பாட்டியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்..!
ஸோஃபாவில் சென்று காலை தூக்கி டீபாயின் மீது போட்டுக் கொண்டு, தன் மொபைலை எடுத்தவன் ‘காணா…’ ஆப்பில் ஒரு பாட்டைப் போட்டு விட்டு பின்னால் சாய்ந்து தாளம் போட்டுக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டான் ருத்ரன்.
ரகசியாவோ வரும் வழி எங்கிலும் யோசனையோ யோசனையாய் வந்தாள்.
எப்பொழுதும் பயணங்களை ரசிப்பவளால்… மனதை இன்று அதில் செலுத்த முடியாமல் போயிற்று.
ஏனெனில் அவள் யோசனை அலைகளைத்தான் மொத்தமாய் களவாடி தன்னைப் பற்றிய எண்ணத்தின் திசைக்கு ஆளுகை படுத்தியிருந்தானே கள்வன் ருத்ரவேலன்.
எப்பொழுதும் பாடிகார்ட்ஸ் வைத்து கொள்பவளும் இன்று அவர்கள் இல்லாமல் வந்தாள்.
இவர்கள் குடும்பம் கிராமம் என்று சாதரணமாக எடைப் போட்டாளா அல்லது ஏதோ ஒரு நம்பிக்கையா என்பது அவளுக்குத்தான் தெரியும்! சாதாரணமாக எண்ணி இவளும் மோனாவும் மட்டுமே வந்திருந்தனர்.
உதயரகசியா காரிலிருந்து இறங்கியவள் தன் பர்பெர்ரி கூலர்ஸை மிடுக்குடன் கழட்டி அரண்மனையை பார்த்தாள்.
வர்ண ஜாலங்களில் வண்ண விளக்குளால் மின்னிக் கொண்டிருந்த அவ்வரண்மை வீட்டை அதன் ஆதிகால கட்டமைப்பை ஒரு நொடி ரசிக்கத்தான் செய்தது இரசனைக்காரியின் விழிகள்…!
ஹனி டீயூவ் கலரில் ப்ளேசர் சூட் அணிந்திருந்தவள் கிட்டன் ஹீல்ஸ் என்ற வகை ஷுவை வெளியே கழட்டிவிடாமல் ஓயிலாக தனக்கென்ற அவளின் கேட் வாக்கில் ‘டொக் டொக்’ என்ற சத்தத்துடன் உள்ளே செல்ல…
சென்றவளை வேலையாட்கள் ஊரார்கள் மங்கையர் பெரியோர் சிறியோர் என அனைவரும் ‘நம்ம சின்னம்மா எம்புட்டு அழகா இருக்காங்க… வெள்ளாவில வச்சி வெளுத்தாப்ல…ரோஸ் கலர்ல … நம்ம சின்ன ராசாவுக்கு ஏத்த ஸோடி ப்போய் ‘ , என்று குதூகலித்து நாளை கல்யாணத்தில் இருவரையும் ஒன்றாக பார்பதிற்காக குஷியாக காத்திருந்தனர்.
“ஹலோ மிஸ்டர்.ருத்ரவே…………ம்” , என்ற ரகசியாவின் இதழ் வழி வந்த மீதி சொற்கள் ருத்ரனின் முரட்டு இதழின் மேல் முடிவு பெற்றிருந்தது…
(என்னய்யாஆஆ நடக்குதுஉஉஉ இங்கஹஹஹ)
சொப்பனம்
என்று
மட்டுமே
நீயாகிவிட்டாயே…!
உன்னை
உன் காதலை
தேடி எனைப்
பித்தம்
கொள்ள வைக்க
சபதம்
எடுத்தாயா
யட்சினி…?!
(கல்யாணமா…!? நம்ம சண்டகோழிஸ்கா…?!
ஆல் டைப் ஆஃப் விருந்து அவைலபிலா…?! அப்றமென்ன அல்லாரும் கிளம்பிடுவோம் செல்லாக்குட்டிஸ்ஸ்ஸ் மறக்காம கிஃப்ட்டோட ஹிஹிஹி)