ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

5
(6)

ஆரல் – 14

 

ஆரோன் ரீனாவின் கையில் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றுவிட, ரீனாவோ அது என்ன என்றுப் பார்த்தவள், சற்று அதிர்ந்தாள் .

அதற்குள் அவளுடைய தோழியோ “என்னடி நடக்குது இங்க.. ஆரோன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் போல இருக்கு..” என்று அவளை கிண்டல் செய்ய அவளோ,

“ஹேய் சும்மா இருடி..” என்று வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டாள்.

இங்கு ஆரோனுக்கோ சொல்ல முடியவில்லை. அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்தது.

ரீனா என்ன சொல்வாள் என்று.. தனக்கு ஓகே சொல்வாளா..? இல்லை தன்னை தவறாக எண்ணிக் கொள்வாளா..? இனி தன்னிடம் பேசுவாளா பேச மாட்டாளோ..? என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவனுடைய நண்பர்களோ,

“டேய் என்னடா ஏன் உனக்கு இப்படி வேர்க்குது..” என்று கேட்க,

அவனோ “என்னனு தெரியலடா நீங்க எல்லாரும் சொல்லவும் நானும் ஒரு ஆர்வத்துல அவகிட்ட கொண்டு போய் கொடுத்துட்டு வந்துட்டேன். இப்ப அவ என்ன நினைப்பான்னு யோசிச்சா தான் ரொம்ப பயமா இருக்குடா..” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு வாரம் கடந்தது.

ரீனா அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

அதே நேரம் அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அதை கண்டுக் கொண்ட ஆரோனுக்கோ சற்று கவலை இருந்தாலும் அவளுக்கு தன் மேல் விருப்பம் இல்லையோ.. என்று நினைத்தவன், அவள் பின்னே செல்வதையே நிறுத்தி விட்டான்.

இப்படி இருக்க அந்த வார விடுமுறை நாளில் அவர்கள் செல்லும் டியூசன் சென்டருக்கு பக்கத்தில் ஒரு பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் இருந்தது.

அங்கு ஆரோன் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்க, அந்த நேரம் ரீனா ஆரோனின் தோழி ரூபாவின் வீட்டிற்கு வருகைத் தந்திருந்தாள்.

அவனுக்காகவே அவன் கிளாஸ்மேட் ரூபாவிடம் நட்பு பாராட்டினாள் ரீனா.

அவன் இங்கு இருப்பான் என்று தெரிந்து கொண்டு தான் ரூபாவை பார்க்க வேண்டும் என்ற சாக்கில் அவனை பார்க்க வந்துவிட்டாள்.

ஆரோன் அங்கு நண்பர்களுடன் விளையாடிவிட்டு கை கால்களை கழுவ வந்த பொழுது ரீனா அவன் அருகே வந்து “ஹாய்‌ஆரோன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள்.

அவனோ விரைப்பாகவே “என்ன பேசணும்..” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் அவளுக்கு அவள் பேச வந்ததே மறந்துப் போனது.

சட்டென கண்களில் கண்ணீர் துளிர்க்க “இல்ல ஒன்னும் இல்ல..” என்றவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

இவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ‘ஆவலாக வந்தாள். பேசணும் என்றாள். தான் என்ன என்று கேட்கவும் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறாளே..’ என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அப்பொழுது அவன் அருகே வந்த ரூபா “டேய் என்னடா சொன்ன அவகிட்ட அழுதுகிட்டே போறா..” என்றாள்.

“ஏய் என்னப்பா சொல்ற நான் அவ கிட்ட எதுவும் சொல்லல.. என்னன்னு தான் கேட்டேன் அதுக்காவா அழுதுகிட்டு போறா..” என்றான்.

“டேய் அவ உன்ன பாக்க தாண்டா வந்தா.. ரொம்ப நேரமா உன்ன தான் பாத்துட்டு இருந்தா.. ஆனா, நீ என்ன சொன்னேன்னு தெரியல அழுதுகிட்டே போய்ட்டா டா..” என்று ரூபா சொல்ல இவனுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

சட்டென ஒரு முடிவுக்கு வந்தான்.

இன்று இரவு அவளைக் காண அவள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று.

அதேபோல அன்று இரவு ஷாமை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்குச் சென்று விட்டான்.

ஷாமோ சற்றுத் தள்ளி நிற்க வைத்துவிட்டு இவன் மட்டும் அன்று போல இன்றும் அவள் அறையில் ஜன்னல் கதவைத் சற்று தயக்கத்துடனே தட்டினான்.

எங்கே அவன் அன்று போல் இன்றும் கத்தி அவள் தந்தையை அழைத்து விடுவாளோ என்று நினைத்து.

ஆனால் அவன் எண்ணத்திற்கு மாறாக இவனுக்காகவே காத்திருந்தது போல ஜன்னல் கதவைத் திறந்தாள் ரீனா.

இவனுக்கோ ஆச்சரியம்.

“என்ன ரீனா நான் வருவேன்னு எனக்காக காத்துகிட்டு இருந்தியா..?” என்று கேட்க,

அவளோ “ஆமா எனக்குத் தெரியும் நீ வருவேன்னு.. அன்னைக்கு வந்ததும் நீ தானே..” என்றாள் ரீனா.

இவனுக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“அப்புறம் எதுக்குடி அன்னைக்கு கத்துன..” என்று கேட்க,

“ ம்ம் நடு ராத்திரியில ஒரு பொண்ணோட ஜன்னல் கதவை யாராவது தட்டுனா.. கத்தாம என்ன பண்ணுவாங்க..” என்றாள்.

“சரி சரி அதெல்லாம் விடு.. உனக்கு நான் லவ் லெட்டர் கொடுத்தேனே அதுக்கு என்ன பதில்..” என்றான். அவளோ அமைதி காத்தாள்.

“ஏய் பதில் சொல்லு..” என்று மீண்டும் கேட்டான்.

“ நாளைக்கு ஸ்கூலுக்கு வா சொல்றேன்..” என்றாள்.

“ஏன் இப்பவே சொன்னா என்ன..” “அதெல்லாம் முடியாது நான் நாளைக்குத் தான் சொல்லுவேன்..” என்றாள்.

அவனோ,

“நீ சொல்லலனா நான் இங்கிருந்து போக மாட்டேன்..” என்றான்.

“ நீ இப்ப போகலைன்னா நான் கத்தி எங்க அப்பாவ கூப்பிடுவேன்..”

“ஓஓ கூப்பிடு.. வரட்டும் உங்க அப்பாவ பார்த்தா எனக்கு ஒன்னும் பயம் இல்லை..” என்றான் ஆரோன்.

அவள் கூப்பிட மாட்டாள் என்ற தைரியம் அவனுக்கு அதிகமாகவே இருந்தது.

“ ப்ளீஸ் ஆரோன்.. இப்ப நீ கிளம்பு கண்டிப்பா நாளைக்கு நான் ஸ்கூல்ல சொல்றேன்..” என்றாள்.

அவனோ ஒரு மனதாக “சரி..” என்று அங்கிருந்து கிளம்பினான்.

ஷாமோ பாவம் அவன் விட்ட இடத்தில் இருந்த ஒரு தூணை பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

இவனோ அவன் அருகில் வந்தவன் சட்டென அவன் தோளில் தட்ட பதறி அடித்து எழுந்தவன்,

“அம்மா பேயி.. பேயி..” என்று கத்த ஆரோனோ சட்டென அவன் வாயைப் பொத்தி,

“டேய் கத்தி காட்டி கொடுத்திடாதடா..நான் தான்..” என்று சொல்ல அவனுடைய கையைத் தட்டி விட்டவன்,

“ ஏண்டா நீ தான் லவ் பண்ற.. இந்த நடு ராத்திரியில பேய் மாதிரி சுத்து.. என்ன ஏண்டா தூக்கத்திலிருந்து எழுப்பிட்டு வந்து இப்படி உயிரை வாங்குற.. இதுக்கு அப்புறம் நான் வரமாட்டேன். உனக்கு வேணும்னா நீ தனியா போ..” என்று ஷாம் சொல்ல, “டேய் டேய் அடங்குடா இப்ப நீ எனக்கு ஹெல்ப் பண்ணா உனக்கு நான் ஹெல்ப் பண்ண போறேன்..” என்று ஆரோன் சொல்ல, நண்பர்கள் இருவரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.

மறுநாள் விடிந்ததும் அவசர அவசரமாக கிளம்பினான் ஆரோன்.

ரீனாவின் பதிலுக்காக அவன் அன்று சீக்கிரமாகவே ஸ்கூலுக்குச் சென்று விட்டான்.

இன்று பார்த்து அவனுக்கு ஃப்ரீ பீரியட் கிடைக்கவே இல்லை.

மாலை வரை காத்திருந்து காத்திருந்து கடுப்பாகினான் ஆரோன்.

ஒரு வழியாக மாலை வந்ததும் அவளைத் தேடி அவனுடைய கிளாஸ்க்குச் சென்றவன் வழக்கமாக அவள் அருகே சறுக்கிக் கொண்டு வந்தவன்,

“ஹேய் சொல்லு சொல்லு..” என்று கேட்டான்.

அவளோ “என்ன சொல்லணும்..?” என்றாள்.

“ஹேய் இங்க பாரு ரீனா.. என்ன டென்ஷன் பண்ணாம ஒழுங்கா சொல்லு..” என்றான்.

அவளோ தனக்குள் சிரித்தவள், “என்ன சொல்லணும் எனக்கு நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல..” என்றாள்.

அவனோ சட்டென அவளுடையக் கையைப் பிடித்தவன்,

“உனக்கு நான் லவ் லெட்டர் கொடுத்ததுக்கு நேத்து நீ என்ன சொன்ன.. நாளைக்கு ஸ்கூலுக்கு வந்ததும் பதில் சொல்றேன்னு சொன்னேன்ல.. இப்போ என்ன சொல்லணும்னு கேக்குற..” என்று கேட்க,

அவளோ அவன் சட்டென இப்படி கையைப் பிடிப்பான் என்று எதிர்ப்பார்க்கதவள் அவனிடம் இருந்து தன் கையை எடுத்து கொண்டு “இங்க பாரு ஒரு பொண்ணுக்கு நீ லவ் லெட்டர் கொடுத்ததுக்கு அவ எதுவுமே உனக்கு சொல்லல… அப்புறம் நடுராத்திரி அவ வீட்டுக்கு வந்த.. அப்பவும் உன்ன அவ மாட்டி விடல.. இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..” என்று மீண்டும் அவனிடம் கேட்கவே, அவனுக்கோ அந்த நேரம் அவள் என்ன செய்கிறாள் என்று தெரியவே இல்லை.

அவனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது போல இருந்தது. அவளிடம் இருந்து குழப்பத்துடனே எழுந்து வந்தவன், நண்பர்களிடம் அவள் சொன்னதைக் கூற அவர்களோ அவனை ஏற இறங்க பார்த்தவர்கள்,

“டேய் நீ இவ்ளோ ஒரு மரமண்டையா இருப்பேன்னு நாங்க நினைக்கவே இல்ல.. அவள் உனக்கு ஓகே சொல்லி இருக்காடா.. உனக்கு இது கூடவா புரியல..” என்று கேட்க,

“என்னடா சொல்லுற..” அவனுக்கோ சந்தோஷம் தாங்கவில்லை.

ரீனா அவனை லவ் பண்ணுகிறாள் என்று தெரிந்ததும் அங்கேயே துள்ளிக் குதித்தான்.

அந்த காலங்களில் ஸ்கூலில் லவ் பண்ணுகிறார்கள் என்பது ஒரு பெரிய விடயம்.

ஒரு கெத்து என்று கூட கூறுவார்கள். அதனால் அவனுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

ரீனா அவள் தோழிகளோடு வீட்டிற்குச்‌ செல்லும் போது அவளுடைய கையைப் பிடித்து, அவளை மட்டும் தனியாக அங்கு பிடித்துக் கொண்டவன்,

“ஏய் ரீனா அப்போ உனக்கு ஓகேவா..” என்று கேட்க,

தலை குனிந்தவாறே “ம்ம்..” என்று மட்டும் சொன்னாள்.

அவனோ, “என்னடி ம்ம் மட்டும் சொல்ற..” எங்க,

அவளோ மெலிதாக புன்னகைத்தவள், “ம்ம்..பிடிச்சிருக்கு..” என்று சொன்னாள் ரீனா.

 

ஆரல் -15

 

மூன்று வருடங்கள் கடந்ததன.

இப்பொழுது ஆரோனும், ரீனாவும் ஒரே கல்லூரியில் தான் பயின்றார்கள்.

அவர்கள் இருவரும் தங்களுடைய காதலைப் பகிர்ந்ததன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்.

இந்த மூன்று வருடங்களில் ஆரோன் இரவு வரும் பழக்கத்தையும் மாற்றவில்லை.

தினமும் இரவு அவளுடன் சிறிது நேரமாவது பேசிவிட்டு சென்றால்தான் மறுநாள் பொழுது அவனுக்கு நல்லபடியாக விடியும் என்று நினைப்பவன்.

இன்றும் அதேபோல அவளைக் காண நடு இரவு சென்றான்.

இந்த மூன்று வருடங்களில் ஒன்று மட்டும் மாறுபட்டு இருந்தது.

நடு இரவு தன்னுடைய நண்பர்கள் யாரையாவது அழைத்து செல்பவன் இப்பொழுது எல்லாம் தனியாவே அவளைச் சென்று பார்த்துவிட்டு வருவான்.

இன்றும் அதே போல நள்ளிரவு ரீனாவைப் பார்ப்பதற்கு அவன் சென்றிருந்தான்.

சரியாக மணி 11:59 இருக்கும் சமயம் அவளின் ஜன்னல் கதவு தட்டப்பட்டது.

அவளும் அவனுக்காகவே காத்திருந்தவள், ஜன்னலைத் திறந்து விட அவனும் சட்டென அவளுடைய அறைக்குள் குதித்து விட்டான்.

உள்ளே நுழைந்ததும் சரியாக மணி 12:00 என்று காட்ட அவளை இறுக்கி அணைத்தவன்,

“விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே மை டியர் ஹனி..” என்று அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான்.

அவளும் புன்னகையோடு அவனுடைய வாழ்த்தை ஏற்றுக் கொண்டவள், அவனுடைய ஈரம் பதிந்த முத்தத்தையும் ஏற்றுக் கண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

அவன் வெறும் நெற்றி முத்தத்தோடு நிற்கவில்லை.

அவளுடைய கண்கள், மூக்கு, கன்னம், காது, கழுத்து என முத்தமிட்டவன், இறுதியாக அவளுடைய கண்ணைப் பார்த்து இமை சிமிட்டியவன் சட்டென அவளுடைய செம் மாதுளை இதழை கவ்விக் கொண்டான்.

அவளோ அவனுக்கு ஏற்றாற் போல் தன்னுடைய உடலை வளைத்து அவனுடைய முத்தத்தில் ஐக்கியமானாள்.

இது அவன் வழக்கமாக கொடுக்கும் ஒன்றே.

முதல் முறையாக அவன், அவர்கள் காதலித்து ஒரு வருடத்தில் முத்தம் கொடுக்கும் பொழுது அவள் மிகவும் பயந்து விட்டாள்.

அப்பொழுது அவள் சட்டென அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள், “இங்கிருந்து போ..” என்று கூறினாள்.

அவனுக்கோ தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ.. என்று நினைத்தவன், மறுநாள் அவளைச் சமாதானம் செய்தான்.

அன்றிலிருந்து அவர்களுக்கு முத்தம் பெரிய விடயமாக தெரியவில்லை.

வெகு நேரமாக அவளை இதழ் முத்தத்தில் ஆழ்த்தி இருந்தவன், தன்னுடைய கரங்களால் அவளுடைய இடையைத் தன் இடையோடு அழுந்தப் பற்றிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் அவள் மூச்சுக்காற்றுக்கு ஏங்க வேறு வழி இல்லாமல் அவளை விட்டு அவன் அவளுடைய கண்ணைப் பார்த்து,

“வர வர என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுறடி.. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல.. எப்ப உன்ன பிரியாணி போட போறேன்னு எனக்குத் தெரியல.. வேணும்ணா வரியா இன்னைக்கு உன் பர்த்டே வேற.. சின்னதா ஒரு ரிகர்சல் பார்க்கலாமா..?” என்று அவன் மேல் உள்ள கிரக்கத்தில் கேட்க அவளோ சட்டென சுதாரித்தவள்,

“இந்த கதை எல்லாம் இங்க வேண்டாம். எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான். நமக்கு தான் இந்த வருஷம் படிப்பு முடிய போகுதே.. அப்புறம் என்ன.. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ எப்ப வேணா என்ன பிரியாணி போடலாம். நான் தர தயாரா தான் இருப்பேன்..” என்று வெட்கப்பட்டுக் கொண்டே கூறினாள் ரீனா.

அவளுடைய வெட்கத்தை ரசித்தவன், தன்னுடைய கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு ஒரு குட்டி கிப்ட் பாக்ஸை அவள் கையில் கொடுத்தான்.

அவளோ அதை ஆர்வமாக வாங்கி பிரித்துப் பார்க்க அதில் ஒரு அழகான ரிங் இருந்தது.

அதை பார்த்து அவள் கண்கள் பெரிதாக விரிய, அவனோ அவள் கையில் இருந்து அதை வாங்கியவன் அவள் முன்னே முட்டிகால் போட்டு அமர்ந்து,

“என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?” என்று அழகாக தமிழில் கேட்டான்.

அவளோ அழகான ஒரு புன்னகையைச் சிந்தியவாறே அவன் முன்னே கைநீட்டி தன் தலையை ஆம் என்பது போல மேலும் கீழும் ஆட்டினாள்.

அவனோ அந்த ரிங்கைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவளுடைய பஞ்சு போன்ற கையை பிடித்தவன், மெதுவாக அவளுடைய மோதிர விரலில் அழகாக மாட்டிவிட்டு அவளுடைய கைக்கு முத்தமிட்டான்.

அவனுடைய ஒவ்வொரு செயலிலும் வெட்கப்பட்டுச் சிவந்தாள் ரீனா. மீண்டும் அவளை இழுத்து தன்னுடைய கைச்சிறைக்குள் வைத்துக்கொண்டு,

“இப்ப சொல்லுங்க பொண்டாட்டி.. இப்ப எனக்கு உரிமை இருக்கு தானே எடுத்துக்கலாமா..?” என்று கேட்க, அவளோ அவனுடைய இந்த அளவுக்கதிகமான காதலில் தன்னை தொலைக்க முன் வந்தாள்.

அந்த சமயம் அவளுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. முழுவதும் அவனுடைய அந்த காதல் காதல் காதல் காதல் அது மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அவளே முன்வந்து அவனுடைய இதழில் தன்னுடைய இதழை பொருத்தினாள்.

அவ்வளவுதான் ஆணவன் அவள் செய்த செயலைத் தன்னதாக மாற்றிக் கொண்டு அவளை தன்னுடைய காதலில் மூழ்கச் செய்தான்.

தன்னுடைய வலிமையான கைகளால் அவளுடைய இடையை இறுகப் பிடித்தவன், முத்தத்தின் வேகத்தை அதிகம் ஆக்கினான். அவளை முத்தமிட்டவாறே படுக்கையில் அவளை சாய்த்தவன் தானும் அவள் மேல் சரிந்து கொண்டு அவளுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்தான்.

அவளும் அவன் செய்வதைத் தடுக்கவே இல்லை.

அதுவே அவனை மேலும் ஊக்குவிக்க தன்னுடைய ஆடைகளையும் களைந்தவன், காதலோடு அவளுடன் கூடினான். அவளுடைய அங்கங்களை தீண்டிச் சுவைத்து அவளை இன்பத்தில் மூழ்கடித்தவன் தன்னை அவளுக்குள் புகுத்தினான்.

இருவருக்குமான முதல் கூடல் அது. அவள் சோர்ந்து படுத்துக்கொள்ள அவனோ அவள் நெற்றியில் முத்தம் வைத்து,

“இங்க பாரு.. எப்போ இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி.. அந்த உரிமையில தான் உன்னை முழுசா எடுத்துக்கிட்டேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல ஊரறிய உன் கழுத்துல தாலி கட்டி என் மனைவியா ஏத்துக்குவேன்..”

என்றவன், மீண்டும் அவளுடைய இதழில் முத்தமிட்டு அவளுடைய ஆடைகளை அவனே அவளுக்கு அணிவித்துவிட்டு தன்னுடைய ஆடைகளையும் எடுத்துக்கொண்டு அணிந்தவன்,

“சரி இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும்.. நான் கிளம்புறேன். நாம காலேஜ்ல பார்க்கலாம்..” என்றவன், அங்கிருந்து கிளம்ப போக அவளோ அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் ஆரோன் என்னை விட்டு போகாதே.. எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு..”

என்று சொல்ல அவனோ அவள் தலையை ஆதரவாக தடவியவன்,

“எனக்கு மட்டும் என்ன உன்னை விட்டு பிரியணும்னா ஆசையா இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் நாம பிரிஞ்சிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் உன்னை என் கைக்குள்ளையே பொத்தி வச்சுக்குவேன். இந்த கொஞ்ச நாள் மட்டும் நாம இப்படி தனித்தனியா தான் இருக்கணும் புரிஞ்சிக்கோடி..” என்றவன் வந்த வழியே கிளம்பி சென்று விட்டான்.

இப்படி பகலில் கல்லூரியில் சந்தித்தாலும் இரவில் அவர்கள் உடலாலும் இணைந்து அவர்களது காதல் அழகாக வளர்ந்து கொண்டிருந்தன.

பாவம் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.

ஒரு நாள் இரவு ரீனா என்றும் இல்லாமல் ஆரோனிடம் அதிகமாக இணைந்து கொண்டிருந்தாள். அவனுக்கே அது ஆச்சரியமாக இருந்தது.

என்ன இவள் என்றும் இல்லாமல் இன்று அதிகமாகத் தன்னை நாடுகிறாளே..என்று நினைத்தாலும் அவளுக்கு ஏற்றவாறே தன்னை மாற்றிக் கொண்டான்.

மீண்டும் விடியும் சமயம் அவளிடம் இருந்து அவன் கிளம்பப் போக அவளோ, “ஆரோன் என்ன மறந்திட மாட்டியே..” என்று கேட்க,

அவனோ அவள் தலையில் லேசாக கொட்டியவன்,

“என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி பேசுற.. நான் உன்னை மறந்துடுவேனா..? நான் உன்னை மறந்தால் நான் செத்ததுக்கு சமம்..” என்று அவன் சொல்ல அவளோ அவனைக் காற்று கூடப் புக முடியாதா அளவுக்கு இறுக்கமாக அணைத்தவள் அவனுடைய முகம் முழுவதும் முத்தமிட்டு இறுதியாக அவனுடைய இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.

அவனுக்கோ இன்று அவளுடைய நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்தாலும் அவளுடைய காதலில் மூழ்கித் தான் போனான்.

பின்பு அவளிடம் இருந்து விடைபெற்றவன் வீட்டிற்குச் சென்று உறங்கினான்.

காலை ஒரு எட்டு மணி இருக்கும். அவனுடைய நண்பர்கள் அவனுடைய அறைக் கதவை பலமாகத் தட்டினார்கள்.

அவனோ அப்பொழுதுதான் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

கதவு தட்டு சத்தம் அதிகமாக கேட்க கண்களைக் கசக்கி கொண்டே எழுந்து வந்து கதவைத் திறந்தான்

ஆரோன்.

அங்கு அவனுடைய நண்பர்கள் நால்வரும் அவனை சோகமாகப் பார்த்தார்கள்.

பின்பு ஷாமோ அவனிடம்,

“டேய் சீக்கிரம் கிளம்பி வாடா.. கொஞ்சம் வெளியே போகணும்..” என்று கூப்பிட அவனோ,

“டேய் போடா எனக்கு தூக்கம் வருது.. நான் வரல..” என்று சொல்லி திரும்ப, ஷாமோ அவனுடையத் தோளை அழுத்தமாகப் பற்றியவன், “டேய் சொன்னா புரிஞ்சுக்கோடா.. தயவு செஞ்சு சீக்கிரம் கிளம்பி வா..” என்று அழுத்தமாகச் சொல்ல, ஆரோனுக்கோ எதுவும் புரியவில்லை.

சரி என்று உள்ளே சென்று கிளம்பி வந்தவன், அவர்களுடன் பைக்கில் கிளம்பினான்.

இடையில் வந்து கொண்டிருக்கும் போது ஷாமோ அவனிடம்,

“டேய் ரீனாவுக்கு முடிஞ்சுதுடா..” என்றான்.

இவனுக்கோ எதுவும் புரியவில்லை. “டேய் என்னடா புரியாத மாதிரி பேசுற..” என்றான் ஆரோன்.

ஷாமோ “டேய் ரீனா நம்மள விட்டு போய்ட்டா டா..” என்றான்.

அவனோ அதை நம்பவே இல்லை. “இங்க பாரு இன்னொரு தடவை பைத்தியம் மாதிரி உளறின சாவடிச்சுருவேன் உன்னை..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க ஷாமோ அவனை நேராக ரீனாவின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவ்வளவு நேரமும் ஷாமை திட்டிக்கொண்டு வந்தவன், அங்கு ரீனாவின் வீட்டின் முன்னே ஆட்களின் கூட்டம் அதிகமாக இருக்க அவனுக்கோ உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தன.

வண்டியிலிருந்து இறங்கியவன் நேராக வீட்டிற்குள் செல்ல அவளுடைய பெற்றோர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.

இவனுக்கோ சொல்ல முடியாத ஒரு உணர்வு அவனைத் தாக்கியது. அப்பொழுது அங்கே சந்தியா அழுது கொண்டே அவனிடம் வந்தவள், “அண்ணா அக்கா அக்கா நம்மள விட்டு போயிட்டா..” என்று சொல்ல அவனுக்கு பேய் அடித்தாற் போல இருந்தது

மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ரீனாவின் அருகில் செல்ல அங்கு அவளோ பெட்டில் கையில் ரத்தம் வழிய வாசலைப் பார்த்தவாறே இறந்து கிடந்தாள்.

இவனுக்கோ உலகமே இருண்டது போல அப்படியே நின்றிருந்தான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!