ஆரல் 29
போலீஸ் அங்கு வந்து நிற்க அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு சிலரோ,
“எப்பவும் சினிமால தான் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் போலீஸ் வருவாங்க அப்படின்னா நாவல்ல கூடவா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் போலீஸ் வருவாங்க..” என்று ஒருவர் கேட்க, மற்றொருவரோ,
“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றவங்கதான் போலீஸ் அப்படி இருக்கும்போது அவங்க எப்படி சீக்கிரம் வருவாங்க..” என்று சொல்ல ஜீப்பில் இருந்து இறங்கி வந்த அந்த போலீஸ் அதிகாரியின் காதிலும் விழ அவரோ அந்த நபர்களை நோக்கி திரும்பியவர்,
“என்ன சொன்னிங்க..” என்று கேட்க அதற்கு அவர்களோ,
“இல்ல சார் நாங்க ஒன்னும் சொல்லல.. நல்ல வேலை சரியான நேரத்துக்கு போலீஸ் வந்துட்டாங்க அப்படின்னு சொன்னோம்..” என்று மழுப்பி விட அவரோ ஒன்றும் சொல்லாமல் பல்லை நரநரவென கடித்து விட்டு அவ்விடம் விட்டு நேராக ஆரோனின் அருகே சென்றார்.
அவர் தங்கள் அருகே வரவும் ஷாம் “சார் நாங்க ஆல்ரெடி உங்களுக்கு எல்லா டீடைல்ஸும் கொடுத்திருக்கோம்.. இப்போ இதோ இந்த திமிங்கலத்தை உசுரோட வச்சிருக்கோம்..
இவனுக்கு இதுக்கப்புறம் சட்டரீதியா தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு..” என்று சொன்னான்.
அந்த ப்ரொபசர் சிவப்பிரகாசத்தின் லேப்டாப் மூலமாக பல பெண்களின் வாழ்க்கை இவர்களால் சீரழிந்து இருக்கிறது என்ற ஆதாரத்தை போலீஸிடம் ஒப்படைத்து இருந்தான் ஆரோன்.
அதன் பிறகு சிவப்பிரகாசத்தை தன் கையால் கொன்றதை அவன் தெரிவித்து இருக்க அவரோ, “எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு இந்த இடத்துல ஒரு போலீஸ் அதிகாரியா யோசிக்காம ஒரு பொண்ணுக்கு அப்பாவா யோசிச்சு நான் சொல்றேன்.. உங்களுக்கு எந்த தண்டனையும் பைல் பண்ண மாட்டேன்.. ஒரு கல்வி கற்றுக் கொடுக்கிற குருவா இருந்துகிட்டு இப்படி ஒரு கேவலமான வேலைய செஞ்ச இவன் உயிரோடு இருப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.. அவனை கொன்னு நீங்க புண்ணியம் தான் பண்ணி இருக்கீங்க..” என்றவர் அவனை தட்டிக் கொடுத்திருந்தார்.
இப்பொழுது லால் திவாரியை அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அந்த போலீஸ் அதிகாரியோ, “மன்னிச்சிடுங்க சார் வர்றதுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிட்டு.. இல்லனா நாங்க சீக்கிரமாவே வந்து இருப்போம். வர வழியில ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சு.. அதை கிளியர் பண்ணிட்டு வர்றதுக்குத் தான் கொஞ்சம் லேட் ஆயிருச்சு சார்..” என்று தாங்கள் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பை வேண்டினார் அந்த உயர் அதிகாரி.
ஆரோனோ,
“பரவால்ல சார்.. அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க இவனை கூட்டிட்டு போங்க..” என்று திவாரியை ஒரு உதை விட்டான் ஆரோன்.
பின்பு அந்த போலீஸ் அதிகாரியோ லால் திவாரியையும் அவனுடைய அடியாட்களையும் ஜீப்பில் அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார்கள்.
அதன்பின்பு ஷாம் ஆரோனை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு அவனுடைய குடும்பத்தின் அருகில் வர அவர்கள் அனைவரும் அவனை சூழ்ந்துக் கொண்டார்கள்.
ஆனால் அவனுடைய கண்களோ தன்னைச் சுற்றி இருக்கும் குடும்பத்தில் யாராவைத் தேடிக் கொண்டிருந்தன.
அவனுடைய அம்மாவிற்கு பின்னாடி யாரா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்ததற்கு பின்பே அவன் திருப்தியுற்றான்.
அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு புறப்படலாம் என்று கிளம்ப அப்பொழுது யாரா அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.
“உங்க எல்லார்கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லணும் நான் இங்கே இருந்து கிளம்புறேன்..” என்று சொல்லவும் அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
ஆரோனோ அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
உடனே ஆரோனுடைய அம்மா அவள் முன்னே வந்து,
“என்னம்மா சொல்ற இங்க இருந்து போறியா..? எங்களை விட்டுட்டு நீ எங்க போற..?” என்று கேட்க அவளோ,
“இல்ல ஆன்ட்டி எனக்கு இங்க இருக்கிறதுக்கு உரிமை இல்லை.. என்ன இந்த பிரச்சினையில இருந்து காப்பாற்றினதுக்கு அப்புறம் இங்கிருந்து போறதா வாக்கு கொடுத்திருந்தேன்.. அதனால இனி என்னால இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன்..” என்று சொன்னாள்.
ஆரோனை தவிர மற்ற அனைவருமே அவளை இங்கிருந்து போக வேண்டாம் என்று எவ்வளவோ வற்புறுத்தினார்கள்.
ஆனால் அவள் யார் சொல்வதையும் கேட்கவே இல்லை.
அவளுடைய பார்வை முழுவதும் ஆரோனிடமே நிலைத்திருந்தது. அவனும் அவளுடைய பார்வையை நேருக்கு நேராக சந்தித்தாலும் ஒரு வார்த்தை அவனுடைய வாயிலிருந்து உதிர்க்கவில்லை.
அதுவே அவளுக்கு மேலும் சங்கடமாக இருந்தது.
பின்பு அவள் ஒவ்வொருவரிடமும் இருந்து விடைபெற்று இறுதியாக ஆரோனின் அருகில் வர அவளுடைய மனமோ,
‘ப்ளீஸ் ஆரு என்னை இங்கிருந்து போக வேண்டாம்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க.. எனக்கு அதுவே போதும் காலம் எல்லாம் உங்களுடைய காலடியில் கிடப்பேன்.. ஆனால் உங்களுடைய இந்த அமைதி என்ன கொல்லாம கொல்லுது என்னோட இந்த வாழ்க்கையை உங்க கூட வாழ ஆசைப்படறேன்.. என்ன போக வேண்டாம்னு சொல்லுங்க.. ஆரூ ப்ளீஸ்..’ என்று தன் மனதிற்குள் போராடியவள், இறுதியாக அவனின் முன்னே வந்து அவனுடைய கண்களை பார்த்தவாறே,
“சார் இதுவரைக்கும் நீங்க எனக்கு பண்ணின எல்லா உதவிக்கும் நன்றின்னு ஒரு வார்த்தைகளால் சொல்லிட முடியாது நீங்க பண்ணி இருக்கிறது அவ்வளவு பெரிய உதவி.. கொடுத்த வாக்கை நீங்க காப்பாத்தும் போது உங்களுக்கு கொடுத்த வாக்கை நானும் காப்பாத்தணும் இல்ல.. அதுதானே முறை..” என்றவள் கண்களில் கண்ணீர் வழிய,
“நான் போறேன் சார்..” என்று சொல்ல அவனுடைய குடும்பத்தில் இருந்த அனைவரும் அவனிடம், “யாராவை இங்கிருந்து போக வேண்டாம்னு சொல்லு..” என்று எவ்வளவோ வற்புறுத்தினார்கள். ஆனால் அவன் அவர்கள் சொல்வதை காதில் கூட வாங்காதவாறே அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.
“சரி போ..” என்று அவன் சொல்ல அவ்வளவுதான் யாரா முற்றிலுமாக உடைந்தாள்.
தான் சிறிதளவு கூட அவனுடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா..? என்று நினைத்தவளுக்கோ விம்மி வெடித்தது அழுகை.
அவன் முன் வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தவள், சட்டென திரும்பி ஒரு எட்டு வைக்க இவனோ அவளுடைய கையைப் பிடித்து சுண்டி இழுக்க, அவள் திரும்பிய வேகத்திற்கும் இவன் அவனை நோக்கி இழுத்த வேகத்திற்கும் வெடுக்கென திரும்பியவள், அந்த திடகாத்திரமான ஆடவனின் மேல் பூக் குவியலாக மோதினாள்.
அவள் என்ன என்று உணர்வதற்கு முன்னரே தன்னோடு அவளை இறுக்கி அணைத்தவன், அவளுடைய இதழை முற்றுகையிட்டான்.
அதைப் பார்த்து அவனை சுற்றி இருந்த அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
சிறிது நேரத்தில் அவளுடைய இதழில் முத்தமிட்டவன் மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து விடுவித்து,
“என்னை விட்டு போறதுல உனக்கு அவ்வளவு அவசரமா..” என்று கேட்டான்.
அவனுடைய கேள்வியில் அவளோ விழித்துக் கொண்டிருக்க,
“என்னடி ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி முழிச்சிட்டு இருக்க, உனக்கு உன்னோட ஆரோனை பிடிக்கும் தானே..?” என்று கேட்க, அவளோ ‘உன்னுடைய ஆரோனை பிடிக்கும் தானே’ என்று கேட்டதும் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“சா..சார்..” இன்று அவள் இழுக்க அவனோ அழகான ஒரு புன்னகையை உதிர்த்தவன் யாராவை பார்த்து,
“எல்லாரும் இருக்கும்போது சார் தனியா இருந்தா ஆரூ அப்படி தான கூப்பிடுவ..” என்று கேட்க அவளோ தன்னுடையத் தலையை குனிந்துக் கொண்டாள்.
தன்னுடைய ஒரு கையால் அவளுடைய இடையை தன்னோடு பிடித்து இருக்கியவன் மற்றும் ஒரு கையால் அவளுடைய நாடியைப் பிடித்து தன்னை நேருக்கு நேராக பார்க்குமாறு வைத்தவன்,
“ எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா..? நீ அன்னைக்கு எங்க அக்கா கிட்ட நீ பேசுனத நான் கேட்டேன்..” என்றான்.
ஹோலி பண்டிகையின் போது அவர்கள் இருவருக்கும் பாங்க்பால் கொடுக்கப்பட்டு ஒன்றாக இருக்கும்படி பிளான் செய்த திவ்யாவோ மறுநாள் கீழே வந்த யாராவை தனியாகப் பிடித்துக் கொண்டாள்.
அவளிடம்,
“என்ன யாரா நேத்து எல்லாம் ஓகே தானே..” என்று கேட்க அவளோ,
“அப்போ நீங்க தான் இதை பிளான் பண்ணி பண்ணீங்களா அக்கா..” என்று யாரா கேட்க,
“ஆமா நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவீங்கன்னு பார்த்தா எங்க.. அவன் ஒரு பக்கம் வீஞ்சிக்கிட்டே போறான்.. நீ என்னடான்னா அவன் கிட்ட பேசுறதுக்கு கூட தயங்குற நீங்களா என்னைக்கு பேசி என்னைக்கு ஒன்னு சேர்றது அதான் இப்படி பண்ணுனேன்..” என்றாள் திவ்யா.
“ஐயோ அப்படி எல்லாம் இல்ல அக்கா.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அவருக்கு ரீனாவ தான் ரொம்ப பிடிக்கும்.. ரீனா எவ்வளவு கொடுத்து வச்சவங்க தெரியுமா அவருடைய காதல் கிடைக்கிறதுக்கு.. இப்படி ஒரு காதலை நான் பார்த்ததே இல்ல அக்கா.. அவங்களோட காதல் கதையை கேட்டதுக்கு அப்புறம் எனக்கு அவர கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதுக்கப்புறம் எப்போ அவர் என் கழுத்துல தாலி கட்டினாரோ இனி என்னோட வாழ்க்கை முழுக்க அவர் கூடவே இருக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன் அக்கா.. நானும் அவரை கொஞ்சம் கொஞ்சமா விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.. ஆனா அதை அவர்கிட்ட சொல்ல தான் எனக்கு ரொம்ப தயக்கமா இருக்கு.. இப்படிப்பட்ட நேரத்துல நீங்க வேற இப்படி ஒரு பிளான் பண்ணி எங்களை ஒன்னா இருக்கும்படி பண்ணிட்டீங்க.. இப்போ சுத்தமா அவருடைய முகத்தை என்னால நேருக்கு நேரா பார்க்கவே முடியல.. அவரு எதுவும் சொல்லிடுவாரோ என்னனு எனக்கு பயமா இருக்கு அக்கா..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளுடையத் தலையை ஆதரவாக தடவிய திவ்யாவோ
“என் தம்பி அவ்ளோ ஒரு கொடூரமானவன் கிடையாது ரொம்ப நல்லவன்.. என்ன ரீனாவை அளவுக்கு அதிகமாக காதலிச்சிட்டான்.. திடீர்னு அவள் இல்லைங்குறதை அவனால ஏத்துக்க முடியல.. அதுக்காக தாலி கட்டுன உன்னை அவன் கைவிடுவான்னு நினைக்காத.. அந்தளவுக்கு அவன் மோசமானவன் கிடையாது.. என்ன அவன் உன்னை ஏத்துக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு யாரா.. உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையிலையும் கூடிய சீக்கிரம் ஒரு நல்லது நடக்கும்னு நான் நம்புறேன்..” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள் திவ்யா.
இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கும் போதே வெளியே சென்று இருந்த ஆரோன் வீட்டுக்குள் வரும் போது அத்திசை பக்கம் வந்து கொண்டிருக்க யாரா பேசியதை அனைத்தையும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
இந்த பிரச்சனையை எல்லாம் முடிந்து விட்டு அவளிடம் பேசலாம் என்று நினைத்திருக்க, ஆனால் அவளோ இன்று அனைத்து பிரச்சனையும் முடிந்த உடனே அவனை விட்டு போறேன் என்று அவனிடமே சொல்ல அதற்கு மேலும் பொறுமை இல்லாதவன் தன்னுடைய இதழ் முத்தத்தால் அவளுக்குத் தேவையான பதிலை அவன் கொடுத்து விட்டான். “என்னை யாரா இப்ப சொல்லு என்ன விட்டு நீ போறியா..?” என்று ஆரோன் தன்னுடைய புருவத்தை மேலே உயர்த்தி அவளிடம் கேட்க அவளோ,
“இல்லை..” என்று தன்னுடைய தலையை இருபுறமாக ஆட்டியவள் அவனுடைய நெற்றியில் இதழ் பதித்தாள்.
அந்த முத்தத்தை கண்களை மூடி ரசித்தவன்,
“என்னடி குழந்தைக்கு கொடுக்கிற மாதிரி நெத்தில முத்தம் கொடுக்கிற.. இங்க என்னோட லிப்ஸ்ல குடு..” என்று அவன் கேட்க அவளோ வெட்கத்தில் தலை குனிந்தவள் தங்களைச் சுற்றி ஆட்கள் இருப்பதைக் கண்களால் காட்ட, அவனோ அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் சட்டென அவளுடைய பின்னங்கழுத்தை வளைத்து பிடித்து அவளுடைய பட்டு போன்ற இதழை மென்மையாக கவ்விக் கொண்டான்.
அதை பார்த்த அனைவருமே சட்டென தங்களுடைய பார்வையை வேறு புறமாகத் திருப்பிக் கொள்ள ஷாமோ தன்னுடைய கையில் வைத்திருந்த தருணின் கண்ணை மூடியவன்,
“டேய் உன்னுடைய ரொமான்ஸை எல்லாம் வீட்ல போய் வச்சுக்கோடா.. இங்க திருவிழாவுல ஆட்களே இல்லையாக்கும் இப்படி வெட்ட வெளியில முத்தம் கொடுத்துட்டு இருக்க..” என்று கேட்க ஆரோனோ அவளுடைய இதழ்களில் இருந்து தன்னுடைய இதழ்களை பிரித்தவன் ஷாமை பார்த்து,
“இதை ஏன் நீங்க பாக்குறீங்க.. திருவிழாவை பார்க்க வந்தா திருவிழாவை மட்டும் பாருங்க..” என்றவன் மீண்டும் அவளுடைய இதழை கவ்வப்போக அவளோ அவனுடைய செயலைப் புரிந்து கொண்டவள் சட்டென தன்னுடைய தலையை குனிந்து அவனுடைய நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். அவனோ ஒரு சிறுப் புன்னகையை உதிர்த்து விட்டு அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
Semma lv proposal.
Super sis 💞