காத்திருப்பு : 02
இன்றைய நாள் அவளுக்கு அதிர்ச்சியைத் தரப்போகிறது என்பதை அறியா பேதை அதிகாலை நேரத்திலே அலாரச் சத்தமது கேட்டவாறே எழுந்தாள். வதனா மணியினைப் பார்த்தாள் 5.00ஐ காட்டியது.
தனது வேலைகளை இப்போது ஆரம்பித்தால் தான் செய்யலாம் இல்லையென்றால் ஆதி(ஆதவன்) எழுந்தால் வேலை செய்ய விடமாட்டான். காரணம் தாயை தொல்லை செய்வதல்ல. தாயாருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அதிக வேலை வைத்திடுவான். அந்த மாயக் கண்ணன்.
குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு சுவாமி அறையில் சுவாமியை தியானித்துவிட்டு கழுத்தில் தவழும் தாலியை எடுத்து அதில் குங்குமம் வைத்து விட்டே தனது நாளாந்த வேலையைச் செய்ய ஆரம்பிப்பாள். சமையல் அறக்குள் நுழைந்து தனது வேலையை ஆரம்பித்தாள். வேகமாக சமைத்து விட்டு பார்த்தால் மணி 6.00ஆகி விட்டுருந்தது. மகனை எழுப்புவதற்காக சென்றாள்.
“கண்ணா….. கண்ணா….. எழும்புடா நேரமாகி விட்டது”.
“எழும்படா செல்லம்” என்று செல்லம் கொஞ்சியவாறே மகனை எழுப்பினாள்.
தாயின் நன்கு சத்தம் கேட்டதும் குமுத வாய் திறந்து கண்ணால் சிரித்தான் மகன். மகனை வாரியணைத்தாள் வதனா.
“அம்மா இன்னைக்கு ஸ்கூல் இருக்காமா சொல்லுமா” என்று தாயின் தாடையை பூ விரல்களால் பற்றியபடி வினவினான்.
” ஆமாண்டா கண்ணா இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதனால இன்னைக்கு மட்டும் ஸ்கூல் போயிட்டு வரணுமாம் என் செல்லம்.” எனச் சொல்லியபடியே மகனை குளிப்பாட்டுவதற்கு தூக்கிச் சென்றாள்.
மகனை குளிப்பாட்டடும் வதனா நாம் நாயகனைப் பார்க்கலாம்.
மதுரா இல்லத்தில் வீடே அமைதியாக இருந்தது. வாழும் சூழல் எத்தகைய இயந்திரமானதோ அதே போன்று மதுரா இல்லத்தினரும் இருந்தனர். பெயருக்கு உண்டு உறங்கி வாழ்கின்றனர்.
இவர்களது வாழ்க்கை என்று உயிர்ப்புடன் இருக்கும் என்பது விதி மட்டுமே அறிந்த இரகசியம்.
ஹாலில் வந்தமர்ந்தவாறே சமையலறையில் இருக்கும் மனைவிக்கு குரல் கொடுத்தாார் குமார்(நித்தியகுமார்).
” மதிம்மா (பாணுமதி) …. மதிம்மா…. ”
“என்னங்க” என்றவாறு கையில் கோப்பியுடன் வந்தார்.
“தேவி போன் பண்ணினாமா உன்னோட ஏதோ பேசணுமாம் என்று சொன்னாள்.”
” ஓ.. அப்படியாங்க நான் பேசுறன் கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு பேசுரன் அவள் பேச வாய தொறந்தா மூடமாட்டாள். பிறகு சூர்யாக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுக்க முடியாது. அவன் அதுக்கும் கத்துவான்” என்று சொல்லியபடி எழுந்தவரிடம்
” உலகத்திலே பொண்டாட்டி விட்டுட்டு போனா நேரத்திற்கு நல்லா சாப்பிடுறவன் உன் பிள்ளயாத்தான்டி இருப்பான். ”
“அம்மா நான் நல்லா சாப்பிடறது என்ன தேடி வரப்போற என் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கதான் என்று உன் புருஷன்ட சொல்லுமா” என்று கூறியவாறு உடற்பயிற்சி செய்து வியர்வை நிரம்பிய கட்டுடலோடு வீட்டினுள் வந்தான் சூர்யா.
” நீ ஏன்டா வதனாவை தேடக் கூடாது தேடினா கிடைப்பாள்டா சோலையூர தவிர வேறு உலகம் தெரியாதவள் அவள். இந்த நாட்டில எங்க எப்படியெல்லாம் கஸ்ரப்படுறாளோ என் தங்கம் மாமா…. மாமா… என்று என்ன சுத்தி வந்த பொண்ணு” எனச் சொல்லி கண்ணீர்விட்டார் குமார்.
இளகத் துடித்த மனதை அடக்கியபடி உடல் விறைத்து நின்ற சூர்யா “அம்மா….” எனக் கர்ச்சித்தான்.
“என்ன விட்டுபோன அவளே என்னைத் தேடி வருவாள். நிச்சயமா நான் அவளை தேடமாட்டன். இந்த பிரிவு என்ன விட அவளுக்கு அதிகம் வலிக்கும்.அந்த வலி இன்னொரு தடவை என்ன விட்டு போக விடாது அதனாலதான் நான் தேடல தேடயும்மாட்டன்.. எங்க காதல் உண்மையானதாக இருந்தா அவளே என்கிட்ட வருவாள்.” என்ற சூர்யா கம்பனிக்குச் செல்ல தயாராகச் சென்றான்.
குமாரும் தோட்டத்தினுள் செல்ல மதி சமையலறை சென்றார்.
“அம்மா தோச நல்லா இருக்குமா..” என கைகளில் அபிநயம் பிடித்தான் ஆதி(ஆதவன்)
(எப்பிடிடி இவ்வளவு நல்லா சமைக்கிறா உன் சமையலுக்கு நான் அடிமை வது.)என காதில் விழுந்த குரலிலே கட்டுண்டு இறந்தகாலத்தில் இருந்தவளை
“அம்மா…………….” என்ற பிஞ்சுக்குரல் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.
“என்ன ஆதி?”
“அம்மா ஏன் மா ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்லடா கண்ணா”
“அப்பாவ நினச்சியாமா? கவலபடாதமா அப்பா சீக்கிரம் வந்து நம்மளை கூட்டிடு போயிருவாரு” என தேற்றிய மகனை கட்டியணைத்து முத்த மழை பொழிந்தாள் வதனா.
ஆம் வதனா ஆதிக்கு தந்தையை பற்றி சொல்லியபடியே வளர்த்தாள். அவள் வீட்டை விட்டு வரும்போது சூர்யாவின் போட்டோ ஒன்றையும் எடுத்து வந்திருந்தாள். அதனை ஆதிக்குக் காட்டி அப்பா என்றழைக்க பழக்கப்படுத்தியிருந்தாள். அப்பா நம்மள கூட்டிடுபோக வருவாரு என்று சொன்னதன் விளைவே ஆதி வதனாவை தேற்றியது.
சற்று அமைதியான வதனா மகனுக்கு மீதி தோசையை ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு தயாராகி மகனை ஸ்கூலுக்கு போவதற்கு தயாராக்கியவாறே தனது அறிவுரையை தொடர்ந்தாள்.
“பாடத்த கவனிக்கணும்”
” டீச்சர் சொல்றத கேக்கணும்”
“யாரோடையும்…… “என்று கூற வந்தவளை தன் கையைக்காட்டி நிறுத்தி
“சண்டை போடக்கூடாது”
“யார்மீதும் கோபப்படக்கூடாது”
“மிச்சம் வைக்காம சாப்பிடணும்”
“அம்மா வராம யார் வந்து கூப்டாலும் போக கூடாது…”என மீதியை சலிச்சபடி கூறினான்.
வதனா “சரியா சொன்னடா கண்ணா”
“பின்ன என்னம்மா நான் நேர்சரி போனதில இருந்து இதத்தான் சொல்றீங்க அம்மா”
ஆதி சூர்யாவையே நன்கு உரித்தாற்போல பிறந்தவன். சூர்யா போன்றே கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிடுவான் ஆதி.
சூர்யாவின் அக் குணத்தால் பாதிக்கப்பட்ட வதனாக்கு ஆதியும் அப்படிக் கோபப்பட்டால் நல்லதல்ல என்றே “கண்ணா எப்பவும் கோபப்படக்கூடாது கோபப்பட்டாலும் பேசுறதை பார்த்துப் பேசுடா” என்று தினமும் கூறுவாள்.
“அம்மா என்ன சாப்பாடு?” என்றவாறு படிகளில் இறங்கிவந்த மகனை வைத்த கண் எடுக்காமல் இவன் வாழ்க்கை இப்படியே போயிருமா? என பார்த்தபடி இருந்த தாயினருகில் வந்து கையசைத்து தாயை தன்னிலை பெறச்செய்தான்.
“அம்மா நேரமாயித்து சீக்கிரம்… என்ன சாப்பாடு அம்மா?”
“தோசையும் சம்பலும்டா கண்ணா”
“ம் வைங்க அம்மா ” எனச் சொன்னான்.
சாப்பிட்டு முடிந்ததும்.அம்மா நான் கம்பனிக்கு போயிட்டு வாறன்” என கூறிவிட்டுச் சென்றான் சூர்யா.
மதி சூர்யா கடந்த மூன்று மாதங்களாக பேசும் மகனைப் பற்றி யோசித்தபடி சோபாவில் அமர்ந்தார். நட்சத்திரா பிறந்த தினத்தை மனம் நினைத்தது.
(வதனா சென்றதிலிருந்து யாருடனும் பேசாத ஆதி நட்சத்திராவுடன் மட்டுமே பேசினான் பழகினான்.தேவியின் வளகாப்பு முடிந்ததும் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் கமலேஷ். தனியாக இருக்காமல் அம்மாவுடன் இரு என்றான்.
அதனால் தேவி பிறந்தகம் வந்தாள். தேவி கமலேஷ் இருவரும் எவ்வளவு முயற்சித்தும் சூர்யா யாருடனும் பேசவில்ஸை. ஆனால் தேவியின் மேடிற்ற வயிற்றை சில நேரங்களில் பார்த்துச் செல்வான். தேவிக்கு பிரசவ வலி வந்ததாக அறிந்தவுடனே வைத்தியசாலைக்குள் நுழைந்தான். அங்கிருந்த யாரையுமே அவன் பார்க்கவில்லை. தேவியின் அறை வாசலிலே நின்றிருந்தான்.
சிறிது நேரத்தில் பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் தேவி. குழந்தையை வெளியில் எடுத்து வந்த நர்ஸ் யாரிடம் கொடுப்பது என்று பார்த்தாள். உடனே கமலேஷ் சூர்யாவிடம் கொடுக்குமாறு சொன்னான். அதிர்ந்து பார்த்த
“சூர்யாவிடம் எங்கள் குழந்தையை நீதான் முதலில் வாங்க வேண்டும் என்பது எங்கள் இருவரதும் விருப்பம்” என்றான். நர்ஸூம் சூர்யாவிடம் குழந்தையைக் கொடுத்தாள்.
தன் கைகளிலே ரோஜாப் பூ போல இருந்த குழந்தையின் ஸ்பரிசம் அவனை என்னவென்று சொல்ல முடியாத விதமாக இருந்தது. குழந்தையை பார்த்தவனின் விழியோரம் நீர்கசிந்தது. ஆசையாக குழந்தைக்கு முத்தமிட்டான். அதன் பின் கமலேஷிடம் கொடுத்தான். பின் அனைவரும் குழந்தையை பார்த்து மகிழ்ந்தனர்.
நட்சத்திராக்கு பெயர் வைத்தும் அவனே. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவன்று கமலேஷின் அருகில் சென்று “நான் உங்க குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?” எனக் கேட்டான். தன் ஆருயிர் தோழன் தன்னிடம் கதைத்தவுடன் அசைவற்றிருந்தவன் அவன் கேட்டது நினைவில் வர பளாரென அறைந்தவன்.
“அதென்னடா உங்க குழந்தை அது உனக்கும் சொந்தமடா எங்கள விட உனக்குதான் உரிமை அதிகம்.” எனக் கூறி அவனை அணத்துக்கொண்டான். சூர்யாவும் தன் நண்பனை அணைத்தான். அதன் பின்பே நட்சத்திரா என பெயரிட்டான். நட்சத்திரா சூர்யாவின் மூச்சானாள். நட்சத்திராவுக்கும் மாமா என்றால் உயிர்.
நட்சத்திராவின் நான்கு வயதின் போது ஒர் நாள் மதி சமையலறையில் மயங்கி விழுந்தார். டாக்டர் வந்து பார்த்து மனக்கவலையே இதற்கு காரணம். இப்படியே விட்டால் காட்டடைக் வர வாய்ப்பிருக்கு என்றார். தன்னால் தான் தாய்க்கு இந் நிலை என்பதை உணர்ந்த சூர்யா அதன் பிறகு தாயிடம் பேச ஆரம்பித்தான்.)
வதனா மகனை நேர்சரியில் விட்டு ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டுச்சென்றாள்.ஆபிசுக்குள் நுழைந்து தனது இடத்தில் அமர்கையிலே லதா வந்தாள். லதா அவளின் ஆபிஸ் தோழி. லதாவுக்கு குட்மோர்னிங் சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். சிறிது நேரத்தில் எம்டி அவளை அழைத்தார். கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே சென்றாள்.
கம்பனி முதலாளி வெற்றிவேல் “வாம்மா வதனா உட்காரு” என்று சொன்ன பிறகு கதிரையில் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்து சிரித்தவாறே ஒரு கடித உறையை அவளிடம் நீட்டினார். அதனை வாங்கிய வந்தனா,
” என்ன சேர் இது ? ” என கேட்க
“பிரித்துப் பாரம்மா” என்றார்.
பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.
காத்திருப்பு தொடரும்………..
❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩🤩