காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 02

5
(2)

யூவி கல்லை எடுத்து எறிந்த வேகத்தில் கார் கண்ணாடி தாரு மாறாக வெடித்து சிதறியது. பல கற்களை வைத்து அவன் கார் கண்ணாடியை பதம் பார்த்து விட்டாள் யூவி.

 

அதில் பற்றி எரிந்தது என்னவோ ஆதியின் கோபம்தான். காரைத் ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டு கீழே இறங்கி யூவியை நோக்கி படு கோபத்துடன் அழுத்தமாக நடந்து வந்தான். 

 

“ஹ்ம்… சேத்த அடிச்சிட்டு ஒரு சோரி கூட சொல்லாம போறான். ஆளையும் மூஞ்சையும் பாரு. இவன் நடையிலேயே தெரியிது எவ்ளோ திமிரு பிடிச்சவன்னு.” என்று ஆதியை வாய்க்குள் மென்று துப்பினாள் யூவி.

 

அவன் அவள் அருகில் வந்து நின்று கூலிங் க்ளாஸை கழட்டி அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு நிற்க அவள் என்னமோ அதைப் பொருட்படுத்தாமல்

 

“அறிவில்லை? இடியட்..  நீ பாட்டுக்கு சேத்த அடிச்சிட்டு சாதாரணமா போவ… அதைப் பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா? படிச்சவன் தானே நீ? முட்டாள் மாதிரி நடந்துக்குற? பேசிக் மேனஸ் கூட தெரியாதா உனக்கு?” என்று அவன் இருக்கும் மனநிலை கூட தெறியாமல் அவனிடம் கத்திக் கொண்டிருந்தாள். ஏற்கனவே வெயில் மண்டையைப் பிளக்க அவளும் கடுப்பேற்றியதில் தலைக்கேறியது அவன் கோபம். 

 

“பளார்…” அடுத்த கனம் விட்டான் ஒரு அறை. காது கொய்ங்க் என்றது.  நிலைதடுமாறி சுழன்று போய் சட்டென்று காரின் மேல் மோதி திணறி நின்றாள்.

 

“வாட்? என்ன சொன்ன? என்ன சொன்ன? நான் உன்கிட்ட சோரி கேட்கணுமா? இந்த ட்ரஸ் இல்லன்னா வெற ட்ரஸ். வாங்க பணம் இல்லன்னா…” என்று திமிராக கூறியவன் தன் போக்கெட்டில் இருந்த பணக்கட்டுக்களை எடுத்து அவள் முகத்தில் விட்டெரிந்தவன் விரலால் வியர்வையை துடைத்து அவள் மீது எறிந்து விட்டு

 

“ஸ்டுப்பிட்.” என்ற திட்டியவன் கூலிங் கிளாஸை போட்டுக் கொண்டு சென்றுவிட்டான். அவன் போய் அறை மணித்தியாலத்தை தாண்டியும் யூவி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பிடித்து வைத்த சிலை போல் கன்னத்தில் கை வைத்து நின்றிருந்தாள்.

 

அவளை இதுவரை யாரும் கைநீட்டி அடித்ததில்லையே. அவள் அடிக்கவும் விட்டதில்லை. ஆனால் இன்று இவ்வாறு ஒரு பெயர் ஊர் தெரியாத ஒருவனிடம் இதை சற்றும் கூட எதிர் பார்க்காதவள் ஆடித்தான் போய் விட்டாள். இவ்வாறு ஒரே இடத்தில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிலையாய் நின்றவளை முகம் கழுவிவிட்டு வந்து பார்த்த அபி

 

“இவ ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கா?” என்று புலம்பியவாறு 

 

“யூவி… யூவி…” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

 

அவளின் உலுக்களில் நினைவு திரும்பிய யூவி “ஹ்ம்… ” என்று பாவமாய் பார்க்க

 

“என்னாச்சுடி? ஏன் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று அவள் முகத்தை ஆராய்ந்தாள் அபி.

 

“அதுவா? என்னை ஒருத்தன் அடிச்சிட்டான்டி.” என்று சினுங்கியவாறே கன்னத்தைத் தேய்த்தாள் வேகமாக.

 

“அட ராமா… என்னடி இது? இப்படி சிவப்பா மாறிடுச்சு. அவன் மனிசனா இல்ல மிருகமா? இப்படி அடிச்சிருக்கான்? யாருடி அவன்? அவன் பேரு தெரிஞ்சா சொல்லு. அப்பாக்கிட்ட சொல்லி தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடலாம். உன் மேலயே கை வைப்பானா அவன்?” கோபமாக கொந்தளித்தவள் ஒரு நிமிட யோசனையில்

 

“ஆனால் எனக்கு ஒரு டவுட்டு. எதுக்காக அவன் இப்படி பண்ணான்? நீ ஏதாச்சும் பண்ணியா?” என்று தன் சந்தேத்தை அவள் பக்கம் திருப்பி அபி முறைக்க

 

“சத்தியமா அவன் யாருன்னே எனக்கு தெரியலடி.” என்று ஆரம்பித்து நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடித்து விட்டாள் யூவி. 

 

“இப்படி அடிக்கிறான்னா… அவன் யாரா இருப்பான்?” என்று வானத்தைப் பார்த்து உதட்டில் விரல்களை வைத்துக் கணக்குப் போட்டுக் கொண்டாள் அபி.

 

“அவன் யாரா இருந்தாலும் அவன் சாவு என் கையிலதான். என்னையே அடிச்சிட்டானா அவன்? அவனை நான் சும்மாவே விட மாட்டேன். இடியட்.” என்று சொல்லிக் கொண்டே அவன் எறிந்த பணக் கட்டை எடுத்து போக்கெட்டினுள் வைத்துக் கொண்டாள் யூவி.

 

அதைப் பார்த்து மிரண்டு போன அபி “இப்போ ஏன்டி அதை எல்லாம் எடுத்து உன் போக்கெட் உள்ள போட்டுக்கிட்ட?” என்று புருவத்தை தூக்கி வார்த்தைகளை இரப்பர் போல இழுத்துக் கொண்டே கேட்க

 

“அவன் என்னை எப்படி பணத்தை விட்டு அசிங்கப்படுத்தினானோ, அதே மாதிரி நானும் அவனை அசிங்கப்படுத்தனும்ல? அதுக்குத்தான்.” என்று தன் முகபாவனையை வன்மமாக மாற்றிக் கொள்ளவும் அதனைப் பார்த்து அபி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வைத்து விட்டாள்.

 

அதில் கடுப்பானவள் அபியை முறைக்க அவள் அமைதியாக வாயை மூடிக்கொண்டு காரில் ஏறி யார் அவன் என்று போகும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வீட்டிற்கு போனாள்.

 

மிகவும் பிரம்மாண்டமாக அமையப் பெற்ற தன் தந்தையின் வீட்டைப் பார்த்ததும் யூவியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.

 

“என்னடி வீட்டைப் பாத்ததுக்கே இப்படி அழுற? உள்ள வந்தா ஒப்பாரியே வெச்சு காட்டிக் கொடுத்து காரியத்தை கெடுத்துடுவ போலருக்கே.” என்று பாவமாக முகத்தை தொங்க விட்டபடி கேட்டாள் அபி.

 

‘அதெல்லாம் ஒன்னும் இல்லடி. இந்த வீட்டுல எங்கப்பா எவ்ளோ சந்தோசமா இருந்திருப்பாரு இல்ல? ஆனா… அவர் செத்துட்டாரா? இல்ல உயிரோட இருக்காரான்னு கேட்க கூட யாருக்குமே தோனலல்ல?” என்ற யூவியின் சந்தோசமான முகம் சோகத்தைத் தளுவிக் கொண்டது.

 

“நடந்தது நடந்துருச்சுடி. விடு. அதைப் பத்தி கவலைப்படாத. இனிமேல்தான் நீ சந்தோசமா இருக்கணும்.” என ஆறுதலாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அபி.

 

“சரிடி. இப்படியே வெளில நிக்கிறதா ஐடியாவா? இல்ல உள்ள போகலாமா?’  என்று வேடிக்கையாக யூவியை திசை திருப்புவற்காக கேட்க

 

“இனிமேல் பாரு. இந்த வீட்டுல இருக்குற சின்ன மீன் பெரிய மீனுன்னு அத்தனையையும் என் கால சுத்தி சுத்தி வர வைக்கிறேன். நான் இல்லாம எதுவுமே இந்த வீட்டுல நகராதபடி பண்ணிக் காட்றேன்.” என்று இடுப்பில் கையைக் வைத்தவாறு நெஞ்சை நிமிர்த்தி வீர சபதம் போட்ட அவளை மேலும் கீழுமாக பார்த்த அபி

 

“நீ நினைக்கிறது எல்லாம் நடக்காது. ஏன்னா வீட்டுல ரெண்டு தலை இருக்கு. சோரி. ஒரு தலை இங்க இருக்கு. மத்த தலை வெளில இருக்கு. அதனால பிரச்சினை இல்லை. அது ரெண்டுக்கும் தான் பாட்டிய அசைக்க முடியும். அதுலயும் வெளிநாட்டுல இருக்குற அந்த பெரிய தலை இருக்கே… அது பாட்டி சொல்றத கூட கேட்காது. அதை மடக்குறதுக்காக பாட்டிதான் கெஞ்சி கூத்தாடணும். தான் நினைச்சததுதான் நடக்கும்னு திரியும். உன்னால எல்லாம் முடியாது.” அபி அவளிடம் உறுதியாய் கூறினாள் ஆதியை நினைத்து.

 

“அப்படியா? அப்போ பெட்டா? இன்னும் அஞ்சு நாளையில. எப்படி எப்படி? இன்னும் அஞ்சே நாளையில பாட்டிய என்ன? இந்த மொத்த வீட்டையே என் கால்ல விழ வெக்கிறேன்.” என்று சொடக்குப் போட்டு ஸ்டைலாக சொன்னாள் ஏதோ ஓர் உந்துதலில்.

 

“சரி. அதையும்தான் பாக்குறேன். இப்போ உள்ள போகலாமா?” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் வீடெங்கும் எதிரொலித்தது. 

 

குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்து விளையாடிக் கொண்டிருக்க அவர்களில் ஒருத்தி தெரியாமல் அபியின் காலில் தடுமாறி விழ அப்போதுதான் யார் வந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டது குழந்தை. 

 

“அபி அக்கா வந்துட்டாங்க…” என்று அந்த ஐந்து வயதுக் குழந்தை நிவேதிதா சத்தமாக கத்த அதே சமயம் எதிரே கதிரையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் பார்வதி பாட்டி. 

 

அவருக்கு தேனீரை எடுத்து வந்து கொடுத்தார் அவர் மகள் மகாலக்ஷ்மி.

 

குழந்தை “அபி அக்கா வந்துட்டாங்க…” என்று கூறியவாறே ஓடி வர தடுமாறி விழப் போனவனைப் பிடித்துக் கொண்டான் விக்ராந்த்.

 

“குட்டிமா… பாத்து விளையாடுங்க. விழுந்தா அடி பட்டுடும்ல?” அவன் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சினான்.

 

“பாட்டி… நான் கோலேஜ் போய்ட்டு வரேன்.” என்று மறு பக்கம் புன்னகையோடு பாட்டியிடம் கூறி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் பல்லவி.

 

அப்போதுதான் அபியும் யூவியும் உள்ளே நுழைந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த மகாலக்ஷ்மி “என்னடி… எக்ஸேம் எல்லாம் நல்லா பண்ணியா? இல்லை அரியர்ஸ் வெச்சிருக்கிறியா?” என்று புன்னகையுடன் கேட்டார்.

 

“அதெல்லாம் நல்லா பண்ணேன்மா.” என்ற அபியின் முகத்தில் சட்டென கவலை குடி கொண்டது. அபியின் குரல் கேட்டதும் வெளியே வந்தார்கள் அந்த வீட்டிலிருந்த அனைவரும்.

 

யூவியைக் கண்டவுடனே “யாரு இது?” என்று அவளை பார்த்து கேட்டார் பாட்டி அதிகார குரலில்.

 

அதில் திணறிப் போன அபிநயா “நான் தான் சொன்னேனே பாட்டி என் ப்ரண்ட்டுன்னு. இவ இங்க தங்க உங்கக்கிட்ட பேர்மிஸன் வேற கேட்டேனே.” என்றாள் பவ்வியமாக குனிந்த தலை நிமிராமல். 

 

அதற்கு “ஓஹோ… அந்தப் பொண்ணு இவதானா?” என்று யூவியை அளந்து கொண்டார் பாட்டி.

 

“ஹேய் என்னடி இது? வந்தவங்கள இப்படி நடு ஹோல்ல நிக்க வெச்சி ஏதேதோ கேட்டுட்டு இருக்காங்க. இங்க என்ன ஸோவா காட்டுறோம்?” என்று அபியின் காதைக் கடித்தாள் யூவி.

 

“கொஞ்ச நேரம் சும்மா இருடி. இந்த வீட்டுக்குன்னு சில ரூல்ஸ் என்ட் ரெகுலேஸன்ஸ் இருக்கு. இப்படி ஜீன்ஸ் டீ சேர்ட் போட்டுட்டு எல்லாம் இங்க சுத்த முடியாது. பாவாட தாவணிதான். இல்லன்னா சேரி. புரியிதா?” என்று இங்கிருக்கும் நிலையைப் பற்றி தன் நண்பிக்கு எடுத்துரைத்தாள் அபி.

 

“அதெல்லாம் கட்ட முடியாதுப்பா. நான் வேணும்னா சல்வார் போட்டுக்குறேன். பாவாடை தாவணியெல்லாம் என்னால முடியாது.” என்று சலித்துக் கொண்டாள் யூவி.

 

அவள் தொடர்ந்து அபியின் காதைக் கடிக்க. “அது சரி. அப்படியே லெப்ட்ல இருந்து ஒரு சின்ன ரிவ்யூவ் சொல்றியா?” என்று யூவி கேட்க அபியும் கூறத் தொடங்கினாள்.

 

“பார்வதி. – எங்க பாட்டி. சோரி… நம்ம பாட்டி. இந்த வீட்டோட பெரியத் தலைக்கட்டு. இந்த வீட்டுல இவங்கள கேட்காம எதுவுமே நகராது. அப்படி நகர்த்துத்துக்கு ஒருத்தனால மட்டும்தான் முடிரும். ஆதிஷேஷ கார்த்திகேயன். அதாவது என் ரெண்டாவது அண்ணன்னா ரொம்ப இஷ்டம். இல்லை… பல்லவிக்காகத்தான் அவனை பிடிக்கும். அதாவது அவன் மேல சில மனஸ்தாபங்கள் இருக்கு. அவன் மேல செம்ம காண்டுல இருந்த பாட்டி மனசு மாறி அவன்கிட் பேசுறதே பல்லவிக்காகன்னும் சொல்லலாம். இல்லன்னா அவன் மூஞ்சில கூட முழிக்காது. இப்போ கூட அவன் மேல கோபம் இருந்தாலும் பல்லவி சொன்னதுக்காக அவன் மேல பாசம் இருக்குற மாதிரி ஒரு பிட் போட்டுட்டு இருக்குது பாட்டி. அதுங்க ரெண்டு பேரையும் விட எங்க அக்கா காவ்யா மேல ரொம்ப பாசம். அதே நேரத்துல கொஞ்சம் கோபமும் இருக்குதான்.”

 

“என்னதான் மத்தவங்க மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தாலும் எங்கப்பாவ இவ்ளோ வருசமா சொந்த பையன்னு கூட பார்க்காம மனசாட்சியே இல்லாம ஒதுக்கி தள்ளிருக்காங்களே அதை நினைச்சாதான் அவங்க மேல வருத்தமா இருக்கு.” அவள் உணர்ச்சி வசப்பட அவள் கையைப் பிடித்தாள் ஆறுதலாக.

 

“சிவனேசன் – பாட்டியோட மூத்த மகன். பல்லவி அப்பா. பல்லவிய எங்கண்ணன் கார்த்திக்குக்குதான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஒத்தக் கால்ல நிக்கிறாரு. அதுக்கு காரணம் சொத்து. அதுக்காக எது வேணாலும் பண்ணுவாரு.”

 

“திவ்யங்கா. – சிவனேசனோட வைப். பாட்டியோட தம்பி பொண்ணு. சிவனேசன் போட்டு கொடுக்குற ப்ளேன சரியா கச்சிதமா பண்ணி முடிக்கிறது அதுதான். ரெண்டும் ஒரே கொன்ஸப்ட். ஆள் சும்மா இல்ல. ரொம்ப டேன்ஜர். பொண்ண எங்க அண்ணன் கார்த்திக்குக்கு கட்டிக் கொடுத்து சொத்த பிடிக்க பாக்குது.” பல்லவி எரிச்சலுடன் கூற

 

“ஜாடிக்கு ஏத்த மூடியாதான் வந்து சேர்ந்திருக்கு.” என்றாள் யூவி.

 

“பல்லவி ஸ்ரீதேவி –  சிவனேசனுக்கும் திவ்யங்காக்கும் பிறந்த ஒரே பொண்ணு. எங்க அண்ணன மனசார தான் கட்டிக்கிட்டதா நினைச்சிட்டே வாழுறா. அவன் இல்லனா செத்தே போய்டுவா. அவ்ளோ லவ். போயும் போயி யார லவ் பண்றதுன்னு அவளுக்கு தெரியாம போச்சே. அதுதான் பாவம்.”

 

“ரொம்ப அழகா இருக்காங்க. சுத்திப் போடணும்டி” யூவி அன்புடன் கூற அவளை கடுப்புடன் பார்த்தாள் அபி. 

 

“கார்த்திகா – திவ்யங்காவோட சொந்த தங்கச்சி. பல்லவியோட சித்தி. இவங்களுக்கு உங்கப்பாவ கல்யாணம் பண்ணி வெக்கனும்னு தான் எல்லாரும் முடிவு பண்ணாங்க. ஆனா… அவரு உங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதுலதான் இவ்ளோ பிரச்சினையும். இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்காமலே இருக்காங்க. உங்க அப்பா அம்மா பெயர சொன்னாலே தீயா எரியும். நீதான் அதித்ய வர்மா பொண்ணுன்னு தெரிஞ்சா நம்ம கதி அவ்வளவுதான். அதனால அவங்கக்கிட்ட கொஞ்சம். இல்ல… இல்ல… நிறையவே பத்துரமா இருந்துக்க. வாய வெச்சிட்டு எதுவும் சொல்லித் தொலைச்சிடாதடி.” அவள் கண்களால் கெஞ்ச

 

“இதுதான் அதுவா… அப்போ நம்ம மெய்ன் வில்லியா? கதை ஆரம்பிச்சதே இங்க இருந்து தானா? சரி…. நெக்ஸ்ட்…”

 

“சிவராமன் –  திவ்யங்கா என்ட் கார்த்திகாவோட தம்பி. இவரும் வன் ஒப் த வில்லன் க்ரூப் மெம்பர் தான். அவரு அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்கன்னு வெளில பொண்ணு எடுத்துக்கிட்டாரு. ஆனா… இப்போ இங்க இருக்குறது சொத்துக்காக.”

 

“ஹையோ ஹையோ. எல்லாமே சொத்து படுத்துற பாடு.”

 

“அனூயா – சிவராமன் வைப். நாங்க அவங்கள கூப்பிடுறது பெக்ஸ்னுதின். என்ன தகவல் கிடைச்சசாலும் பெக்ஸ விட பாஸ்டா சொல்லிடுவாங்க. சரியான காரிய தரிசி. இதுவும் வில்லைன் டீம்தான்.”

 

“சக்தி வேல் – சிவராமன் ஸன். எங்க அண்ணன் கார்த்திக்கோட பரம எதிரி. ரெண்டு பேரையும் ஒரு மணித்தியாலம் ஒன்னா விட்டா அடிச்சிக்கிட்டு செத்துடுவானுங்க. அந்தளவு பகை. ஏதோ பிரச்சினைல ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை. எங்க அக்கா காவ்யா இல்லன்னா இவனை எப்போவோ கொன்னு சமாதி கட்டிருப்பான் கார்த்திக்.”

 

“பாத்தாலே தெரிது. இவன் எதுக்குமே உதவ மாட்டான். நெக்ஸ்ட்…”

 

“ஸ்ரீஷ்டி மஹாலக்ஷ்மி – பார்வதி பாட்டியோட பொண்ணு. எங்கம்மா. பெயர்ல மட்டும் இல்ல. குணத்துலையும் மகாலக்ஷ்மின்னே சொல்லலாம். தங்கமானவ. வாயில விரல் வெச்சா கூட கடிக்க தெரியாது. உங்கப்பாவுக்காக இன்னைக்கு வரைக்கும் ஏங்கிட்டு இருக்குற ஒரே ஒரு இதயம். என்னதான் நாங்க அவளுக்கு பசங்களா இருந்தாலும் அவளோட ரெண்டாவது பையன மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டா. கார்த்திக்னா உயிரையே விட்டுவா.” அவள் உணர்ச்சிபூர்வமாக கூறினாள்.

 

“அத்தை வில்லியா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இவங்க தலைகீழா இருக்கே. இன்ட்ரஸ்டிங்க்.”

 

“விஜயன் – எங்கப்பா. பாட்டியோட ரெண்டாவது தம்பி பையன். ரொம்ப நல்லவர். இவருக்கும் உங்கப்பாவ தள்ளி வெச்சது ஒரு பாரமாதான் இருக்கு. ஏன்னா உங்கப்பாவோட நெருங்கிய நண்பன் ஆச்சே. ‘ அவள் புன்னகைக்க

 

“பசங்களை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டாரு உங்கப்பா. அதனாலதான் நீயெல்லாம் பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்க. நெக்ஸ்ட்…”

 

“ஸ்ரீ தானியா காவ்யா – இந்த வீட்டோட இளவரசி. பாட்டிக்கு கார்த்திக் அண்ணாவ எவ்ளோ பிடிக்குமோ அந்தளவு அவளையும் பிடிக்கும். நோ… கார்த்திக்க விட அவங்களுக்கு அவளதான் பிடிக்கும். பட் அவ லைப் விசயத்துல அவ மேல கொஞ்சம் கோபம். இந்த வீட்டோட அர்த்தமே அவதான். யாழ் வாசிக்கிறதுல கெட்டிக்காரி. அவளுக்கு பாட பிடிக்காதுதான். அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. பட்… பாட்டி அவளை பிடிச்சு வெச்சு யாழ் சொல்லி கொடுத்தாங்க. அவ பாடினா இந்த வீடே கோலாகலமா இருக்கும். ஆனால் என்ன? துரதிர்ஷ்டவசமா எங்க எல்லாரையும் விட்டுட்டு போய்ட்டா.” அவள் கண்கள் சோகத்தை தழுவின. அவள் கையைப் பிடித்த யூவி

 

“யார் யார் தலைல எது எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். ஆனால்… உங்க அக்கா பெயர தெரிஞ்சோ தொரியாமலோ எங்கப்பா எனக்கு வெச்சிட்டாரு. இத வெச்சே பாட்டிய சென்டிமன்டா டச் பண்ணிடலாம் போலையே.” அவள் சிரிக்க அபியும் புன்னகைத்தாள்.

 

“விக்ராந்த் விஜயன். – எங்க மூத்த அண்ணன். அப்படியே எங்க அம்மா குணம். எங்க அம்மான்னா உயிர். ரொம்ப சாது. அப்படியோ எங்க அண்ணன் கார்த்திக்குக்கு எதிர்.”

 

“பரவால்லை. சைட் அடிக்க ஒரு ஆள் கிடைச்சிடுச்சு.” அவள் கண்ணடிக்க 

 

“ஏய்… அதுக்கெல்லாம் ஓல்ரெடி ஆள் இருக்கு. சோ ஆதி வாசி… ச்சீ… யூவி வாசி… கொஞ்சம் அடக்கி வாசி.” அபி கூறிவிட்டு அடுத்தவரை காட்டினாள்.

 

“விஷ்ணு. – பாட்டியோட கடைசி பையன். ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர். நீதி நேர்மையோட ஒரு பக்கம்.”

 

“சரஸ்வதி. – அவரோட வைப். எங்கப்பாவோட கூடப் பிறந்த தங்கச்சி. பாட்டி சொல்றத அப்படியே மண்டைய மண்டைய ஆட்டிட்டு பண்ணிடும்.”

 

“ஸ்ரீநிஸா அகல்யா – விஷ்ணு சேரோட மூத்த பொண்ணு. அவங்க இங்க இல்லை. உள்ள இருக்காங்க. அவங்க ஹஸ்பன்ட் இறந்துட்டார். அதனால வெளில வரமாட்டாங்க. டெப்ரஷன்ல வீட்டுக்குள்ளேயே இருப்பாங்க.”

 

“மீரா ஸ்ரீதேவி – எங்க மூத்த அண்ணா விக்ரம கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு. ரொம்ப அமைதி. நல்ல பொண்ணு. பெயருக்கு ஏத்த மாதிரி கிருஷ்ண பக்தை.’  என்று ஒவ்வொருவரையும் தன் நண்பிக்கு அறிமுகப்படுத்தினாள் அபி. 

 

“அட வடை போச்சே…” விக்ரமைப் பார்த்து கண் அடித்தாள் யூவி.

 

“அடிங்…” திட்டினாள் அபி.

 

இவர்கள் காதைக் கடிப்பதைப் பார்த்த கார்திகா “என்ன ஒரே காதக் கடிச்சிட்டே இருக்குறீங்க? என்ன விசயம்?” என்று கேட்டார் யோசனையோடு.

 

“இல்ல… அது. எல்லாரைப் பத்தியும் சொல்லிட்டு இருந்தேன்.” என்று அபியும் இழித்துக் கொண்டே கூறிட 

 

“சரி உங்க அப்பா பேரு என்ன?” என்று ஆதித்ய வர்மா சாயலில் நின்றிருந்தவளை பார்த்து சந்தேகமாய் கேட்டிட

 

யூவி என்னமோ தன் சொந்தங்களைப் பார்த்த சந்தோசத்தில் “ஆதித்…” என்று தன்னிலை மறைந்து கூறிவிட்டாள். 

 

அதனைத் தடுப்பதற்காக வேண்டாம் என்று அவளின் கையை இறுக்கமாக பற்றிப் பிடித்திருந்தாள் அபி. அதில் நினைவுக்கு வந்தள் திடீரென்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு

 

“அது வந்து… அது… ஆ… அதிரா. அதிரா தான் எங்கப்பா பெயர்.” என்று கூற அவள் திணரலில் இன்னும் சந்தேகம் ஏற்பட்டது.

 

“அப்போ உங்கம்மா பெயர்?” என்று அடுத்த கேள்வியை எழுப்பினார் கார்திகா. இவள் ஏதோ ஸ்வேதா என்று கூறிவிடுவாளோ என்ற பயத்தில் தானே 

 

“ஸ்வாதி. ஸ்வாதிதான் அவங்க அம்மா பெயர்.” என்று முந்திக் கொண்டாள் அபி.

 

“அவ அம்மா பெயரைக் கேட்டா நீ ஏன் பதில் சொல்லுற? அவளுக்குத் தெரியாதா? சரி பரவாயில்லை. அவங்க எங்க இருக்காங்க? என்ன பண்றாங்க?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டு யூவியை லொக் ஆக்க அபிக்கு உதறல் எடுத்தது.

 

“என்னடி? இப்படி எல்லாம் கேள்வி கேட்குறாங்க? ஒருவேளை தெரிஞ்சிடுச்சோ. நல்லா மாட்டினோம் பாரு.” என்று பயந்து கொண்டாள் அபி.

 

கார்த்திகாவின் இந்த சந்தேகம் பற்றி தெரிந்த மகாலக்ஷ்மி “வீட்டுக்கு வந்த பொண்ணுங்கள இப்படித்தானா நிக்க வெச்சு கேள்வி கேட்பீங்க அண்ணி? பாவம் பசங்க. முதல்ல போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடட்டும் விடுங்க.” என்று அவரை திட்டி விட்டு யூவியை நோக்கினார். 

 

“நீ எதுவும் தப்பா நினைக்காதம்மா. இத உன் வீடா நினைச்சிக்கோ. உனக்கு பிடிச்சத பண்ணு. எங்க எல்லாரையும் உன் சொந்தமா நினைச்சிக்க. எது வேணாலும் தயாங்காம கேளு. சரியா?” அவர் பாசமாக கூற

 

“நீங்க சொன்னாலும் சொல்லலன்னாலும் நான் இந்த வீட்டுப் பொண்ணுதான். நீங்க எல்லாம் என் சொந்தம்தான் அத்தை.” என்று மனதில் நினைத்துக் கொண்ட யூவி

 

“சரிங்க ஆன்டி” என்று கண்ணியமாகக் கூறிவிட்டு பாட்டியை நோக்கினாள்.

 

“இப்படியே இங்க்லிஸ்காரி மாதிரி சுத்தாம போய் பாவாடை தாவணிய கட்டிக்கோ.” என்று சொன்ன பாட்டியிடம் தலையை ஆட்டியவள் அங்கிருந்து நகரப் போக 

 

“நில்லு…” என அவளை மறுபடியும் தடுத்து நிறுத்தியவர்

 

“உன் பெயர் என்ன?”என்று கேட்டார். 

 

“யூவி.” என்றாள் பணிவாக. 

 

“என்ன பெயர் இது? அழகா தமிழ்ல எத்தனை பெயர் இருக்கு? அதெல்லாம் உங்க அப்பா அம்மா கண்ணுக்கு தெரியலையா?” என்று கேட்டார் கொஞ்சம் மிதப்புடன்.

 

“இல்ல பாட்டி. என் பெயர் ஸ்ரீதானியா வியூஷிகா. அந்த முதல் ரெண்டு எழுத்து வியூவ எடுத்து அப்படியோ தலைகீழா மாத்தி செல்லமா ப்ரண்ட்ஸ் எல்லாரும் யூவின்னு கூப்பிடுவாங்க. அப்படியே வீட்டுலையும் அது கன்டினிவ் ஆகிடுச்சு.” என்று அவள் கதையைக் கூறிட அடுத்த கேள்வியாக

 

“உனக்கு பாடத் தெரியுமா?” என்றார் மெதுவாக

 

“ஹ்ம். பாட்டா? நான் நல்லாவே பாடுவேனே. என்ன பாட்டு பாடணும்னு சொல்லுங்க. பாடி அசத்திடுறேன்.” என்றாள் உற்சாகத்துடன். 

 

அதற்கு அவரும் இவள் ஏதோ பெரிய பாடகி என்று எண்ணிக் கொண்டு “சாமி பாட்டு பாடு பாப்போம்.” என்றதும் தனக்குத் தெரிந்த சாமிப் பாட்டை இழுத்து விட ஆரம்பித்தாள் யூவி.

 

 

🎶🎶🎶

 

நீ எதிர எதிர நடக்கயில…

நீ எதிர எதிர நடக்கயில… 

ஏழுமலையான் தரிசனம் டா சாமி

நீ பக்கம் பக்கம் நின்னா அந்த

பரமேஸ்வரன் போல துணை சாமி

நீ இல்லாம நான் போகும் பாதை

கல்லும் முள்ளும் குத்துதுடா

சாமி என் சாமி 

 

என் சாமி வாய்யா சாமி

மன்மத சாமி

மந்திர சாமி

போக்கிரி சாமி

 

என் சாமி சாமி

வாய்யா சாமி சாமி

 

மன்மத சாமி மந்திர சாமி

போக்கிரி சாமி

 

🎶🎶🎶

 

என்று அவளுக்கு தெரிந்த சாமிப் பாடலைப் பா

டியவாறே இன்ஸ்டா ரீல் ஸ்டெப்பை போட அனைவரும் கண்ணை உருட்டி உருட்டி யூவியையே பார்த்தார்கள். இவள் செய்வதைப் பார்த்து

 

“ஏய் மானத்த வாங்காதடி. எல்லாரும் உன்னதான் பாக்குறாங்க.” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அபி.

 

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!