காத்திருப்பு : 06
சூர்யா தட்டை தட்டிவிட்டுச் சென்றதும் என்ன செய்வது என்று மதி குழம்பி நிற்கையில் குமாரும் சாப்பிடாமல் தட்டில் கைகழுவி விட்டு எழ
“என்னங்க நீங்களும் சாப்பிடாம எந்திரிக்கீங்க?”
“என்னோட புள்ள சாப்பிடாம போறான் எனக்கு சாப்பாடுதான் கேடு” என்றவாறு கீர்த்தியை முறைத்து விட்டு போனார்.
(ஏனோ அவருக்கு கீர்த்தியைப் பிடிக்கவில்லை.)
“sorry aunty என்னால தானே சூர்யாவும் uncleம் சாப்பிடாம போனாங்க really sorry aunty”என்று நடித்தாள்
“ஐயோ அப்பிடி இல்லம்மா உனக்கு எதுவும் தெரியாது அதனால நீ கேட்ட அத விடுமா நீ சாப்பிடுமா”
“இல்ல aunty எனக்கு வேண்டாம் நீங்க வதனா எங்க? என்ன நடந்தது என்று சொல்லுங்க aunty ”
“கொஞ்சமாவது சாப்பிடுமா நான் சொல்றன்.”
“முதல்ல நீங்க சொல்லுங்க aunty பிறகு சாப்பிடலாம்”
“இங்க வேணாம் வா தோட்டத்தில போய் பேசுவம்.”
“வாங்க”
“வதனா இப்ப இங்க இல்லம்மா அவங்க வீட்டிலயும் இல்லை எங்க போனான்னே தெரியல” கண்கலங்கினார் மதி.
“அப்போ நீங்க தேடலையா aunty?”
“இல்லமா ”
“ஏன் சூர்யா தேடிருப்பானே?”
“அவனும் தேடல நீங்களும் தேடக்கூடாது என்று சொல்லிப்போட்டான்மா அதயும் மீறி தேடினா நானும் உங்களுக்கு இல்லாமலே போயிருவன் என்று சொல்லிட்டான்”
( ஓ சூர்யா இவ்வளவு கோபமாவா இருக்கான் வதனாமேல ஏன் கீர்த்தி இவ்வளவு நாளா இங்க வராம இருந்த வந்திருந்தா எப்போவோ உன்னோட வேலை முடிஞ்சிருக்குமே. இப்பவும் நேரம் போகல சீக்கிரம் உன்னோட வேலையத் தொடங்கு”என மனதில் நினைத்தாள்.)
“அதுக்குப் பிறகு சூர்யா யார்கூடவும் பேசுறதே இல்லை என்னோடயும் கொஞ்ச நாளாத்தான் கதைக்கிறான் கீர்த்தி. ”
“எல்லாம் சரியாயிரும் aunty”
“சரிமா எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பேசுறன் மா”
“ok aunty நான் என்னோட பிரண்ட்ஸ்ஸ பாத்திட்டு வாரன் bye aunty”
“கவனம் கீர்த்தி” என்றவாறு வீட்டினுள் சென்றார்.
சாமிமலை சந்திரா வீடு………..
ஆதியை அணைத்தவாறு தூங்கிய சந்திரா தூக்கம் கலைந்து எழுந்தாள். குளித்து விட்டு வந்து சமைக்க ஆரம்பித்தாள். சமையல் முடியும் நேரம் ஆதி அவளைத் தேடினான்.
“அம்மா…..அம்மா சீக்கிதம் வாம்மா”
“ஆதி அம்மா இங்க இருக்கன்” என்றபடி வந்து ஆதியைத் தூக்கினாள்.
(ஆதி கண்விழிக்கும் போதும் தூங்கும் போதும் அவள் ஆதியின் அருகிலே இருக்க வேண்டும் இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவான்.)
ஆதியைத் தூக்கி தட்டிக் கொடுத்தாள்.(“வது நான் தூங்கும் போதும் கண்விழிக்கும் போதும் நீ என் கூடவே இருக்கணும் சரியா? என்ன விட்டு நீ எங்கயும் போகக் கூடாது சரியாடா?”) ஆதி அவனது தந்தையைப் போன்றவன். குணத்தில் மட்டுமல்ல உருவத்திலுமே. அதுமட்டுமல்ல அவனது கண்கள் இரண்டும் சூர்யாவின் கண்களைப் போலவே இருக்கும். அதனால்தான் வாசுவுக்கு அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.)
“அம்மா tea வேணும்மா”
“முதல்ல குளிப்பம் அப்புறம் tea குடிப்பம் வா” மகனை குளிக்க வைத்துக்கொண்டிருக்கும் போது அழைப்புமணி ஒலித்தது.
மகனை தூக்கி வந்து கட்டிலில் விட்டுவிட்டு வந்து கதவைத் திறந்தாள்.வாசு நின்றுகொண்டிருந்தான்.
“உள்ள வாங்கண்ணா ”
“என்னம்மா எங்க குட்டி? சமையல் முடிஞ்சா?”
“ஆமாண்ணா சமையல் முடிஞ்சிது.ஆதிய இப்பதான் குளிப்பாட்டினன் இருங்கண்ணா கூட்டித்து வாறன்.”
“ஆதி வாசு மாமா வந்திருக்காரு “என்றவள் ஆதிக்கு உடை போட்டுக் கூட்டி வந்தாள்.
“மாமா ”
“குட்டி நல்ல தூங்கமா?”
“ஆமாம் மாமா தொம்ப நல்லா தூங்கினன்”
“நல்லம்டா குட்டி”
“வாங்கண்ணா சாப்பிட”
“வாறன்மா”என்றவன் ஆதியைத் தூக்கினான்.
சந்திரா சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
“என்னம்மா வாசம் தூக்குது”
“அண்ணா இருந்த காய்கறிய வைச்சி சமைச்சன் அண்ணா கொஞ்சம் adjusted பண்ணி சாப்பிடுங்க ”
“ரொம்ப நல்லாருக்குமா சாப்பாடு நீயும் ஆதியும் உக்காருங்க சேந்து சாப்பிடலாம்.”
“இல்லண்ணா நீங்க முதல்ல சாப்பிடுங்க நாங்க அப்புறம் சாப்பிடுவம்.”
“தனியா சாப்பிட முடியாதும்மா வா நீயும் உக்காரு”
“சரிணா ” என்றவள் வாசுவுடன் சாப்பிட அமர்ந்தாள். இருப்பினும் அவளுக்கு சாப்பிட மனம் வரவில்லை. ஆதிக்கு மட்டும் உணவூட்டினாள்.
“ஏன் மா நீ சாப்பிடல ?”
“தெரியலண்ணா சாப்பிட பிடிக்கல”
(எப்பிடி பிடிக்கும் அதான் அங்க சூர்யா சாப்பிடலயே )
உணவு உண்டு முடிந்ததும்
“சந்திரா வீட்டுக்கு எதுவும் வாங்க இருக்காமா?’
“ஆமாண்ணா ஏன் அண்ணா ?”
“நானும் கொஞ்ச பொருட்கள் வாங்கணும் நீயும் வாம்மா evening போய் வாங்கித்து வருவம்.”
“சரி அண்ணா போவம்”
“நான் இப்ப கம்பனி வேலையா வெளில போறன் நான் வந்ததும் போலாம் சரியா?”
“சரிணா பத்திரமா போயித்து வாங்க”
“சரிமா bye குட்டி”
“bye மாமா ”
N.S.K கம்பனி………..
மலையகத்தில் கம்பீரமாய் நின்றது அந்த பல மாடிகளைக்கொண்ட N.S.K கம்பனி. அதைப் பார்த்த வண்ணம் “ஏன் சூர்யா sir இந்தக் கம்பனிய வாங்கினார?” என்று யோசித்தபடியே வந்த வாசு எதிரில் வந்தவரை மோதினான். தான் மோதியதில் சற்று தடுமாறிய நபரைப் பார்த்தவன் இமைக்க மறந்தான்.
அழகே உருவாக நின்றிருந்தாள் ஒருத்தி. குளிரில் சிவந்திருந்தன அவளது உதடுகள். நீண்ட கூந்தல் காற்றினால் அவளது வதனத்தைப் பார்த்தது. அவளையே ரசித்திருந்தவன் அவளது குரலிலே சுயநினைவடைந்தான்.
“யார் நீ கண்ண திறந்து வைச்சித்தே தூங்குறியா?”
“இ..ல்…ல…”
“என்ன ஒழுங்கா பேச வராதா?”
“ஐயோ இல்லங்க பேசுவன்”
“இடிச்சியே ஒரு sorry கேட்டியா? மேனஸ் தெரியாத ஆளா இருக்கியே.”
“hello எங்களுக்கு மேனஸ் பற்றி தெரியும் sorry உங்க மேல மோதினத்துக்கு”
“திமரப் பாரு பொறுக்கி”
“ஏய் யாருடி பொறுக்கி”
“டி போட்டு பேசாத ”
“அப்பிடித்தான் டி பேசுவன் நீ என்னடிடிடிடிடிடிடி பண்ணுவ?”
“ஓ அப்பிடியா நீ டி போட்டு பேசினா நான் டா போட்டி பேசுவன்டாடாடாடா”
இவர்களது சண்டை நடக்கும் போது அங்கு வந்த ஒரு பெண் ” ஏய் சந்தனா என்னடி இங்க பிரச்சன ஒரு fileல விட்டுத்து பொயித்தன். அத தனியா எடுக்க வரணுமே என்று உன்ன கூட்டித்த வந்தன் பாரு என்ன சொல்லணும்டி”
“ஏய் நான் ஒண்ணும் நீ கூப்பிட்டதுக்காக வரல .திங்கள் யாரோ புது எம்டி வராராம் அதுக்கான வேலை கொஞ்சம் இருந்தது
அத செய்யத்தான் வந்நனான்”
“சரிவாடி போலாம்”
“சரி வாடி” என்றவள் சூர்யாவைப் பார்த்து “இன்னொரு தடவ உன்ன பாத்தன் நீ செத்தடா”
“சரிதான் போடி ” என்றவன் manager றூமுக்குச் சென்று file ஐ கொடுத்தான்.
மதுரா இல்லம்……….
சாப்பிடாமல் தனது அறைக்கு வந்த சூர்யா கதவை தாழிட்டுவிட்டு சோபாவில் கண்களை மூடியபடி அமர்ந்தான். அவனது விழிகளில் இருந்து கண்ணீர் கன்னத்தில் வடிந்தது.
“ஏன் வது என்ன விட்டு போன?”
“என்ன விட்டுப்போக உனக்கு எப்பிடிடி மனசு வந்தது?”
“நீ இல்லாம கஸ்ரமா இருக்குடி”
“உன்னோட அத்தான்ட வந்திரு கண்ணம்மா” என்றவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். தேற்றுவார் யாருமின்றி அழுதபடி உறங்கினான். அவனது நித்திரையைக் கலைக்கும் விதமாக அவனது போன் ஒலித்தது. போனை எடுத்த சூர்யா
“hello who is this(யாரது)?”
“sir நான் S.R புடவைக் கம்பனியில இருந்து பேசுறன். sir “என்றவன் சொன்ன தகவலைக் கேட்ட சூர்யா அந்தக் கம்பனியை நோக்கி விரைந்து சென்றான்.
சூர்யா அவசரமாக கம்பனிக்குச் செல்ல காரணம் என்ன?
காத்திருப்புக்கள் தொடரும்……….
❤️❤️❤️
Thanks ma😊