தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2

4.7
(29)

பேராசை – 2

 

ஓரளவு தன் கைகளிலும் கழுத்துப் பகுதியிலும் தேய்த்து கழுவி அதன் நிறம் சற்றுக் குறைந்து போக கழுவி விட்டு தான் ஓய்ந்தான்…. அவனின் வெண்ணிறத்திற்கு  தேய்த்து கழுவியதன் பயனாக அவ்விடங்கள் சிவந்தும் விட்டது.

 

ஒரு வன்மத்துடனேயே கண்ணாடியை வெறித்து தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன் ஒரு முடிவை எடுத்தவனாய் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான்.

 

திருமண நாள் விழாவுக்காக தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு  இருந்த வெண்ணிற ஷர்டையும் கருப்பு நிற கோர்ட்டையும் அணிந்தவன் அதற்கு தோதான கருப்பு நிற டையை கட்டியவன், தன் அடர்ந்த கேசத்திற்கு  ஜெல் வைத்து ஆயத்தமாகி போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் பக்கத்து அறையை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்த அதே கணம், அக் கதவினை திறந்து கொண்டு வந்தாள் ஆழினி. 

 

இருவரின் கண்களும் நேரெதிரே சந்தித்துக் கொள்ள, அனல் பறந்தது என்றே சொல்லலாம்.

 

அவளை உச்சி முதல் பாதம் வரை தன் லேசர் கண்களால் அளந்தான்.

 

நிச்சயம் அது காதலாக இல்லை…. ஓர் ஏளனப் பார்வையுடனேயே தான் அவனின் பார்வை அவளை ஊடுருவியது.

 

பாவம், அவன்  அறியவில்லை நித்தமும் அவளிடம் தான் காதல் யாசகம் கேட்டு மனதால் துன்பப்பட போவதை.

 

அவன் அருகே வந்தவள் அவனை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்தவளின் பார்வை  இறுதியாக அவன் கைகளில் நிலைக்க, அந்தோ பரிதாபம் அவள் தேடியது அவள் கண்களுக்கு புலப்படவே இல்லை.

 

அவன் தான் அவனிடம் இருந்த விலை உயர்ந்த அனைத்து சவர்க்கார கட்டிகளை பயன்படுத்தி கையே உடைந்து போகும் அளவுக்கு தேய்த்து கழுவி விட்டு தானே  ஓய்ந்தான்.

 

அது தெரியாத ஆழினியோ, அவனை சீண்டும் நோக்குடன் “ஹேப்பி மார்னிங் காஷ்… இந்த நாள் எப்படி நல்லா இருந்து இருக்கும் போலவே?” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டாள்.

 

அவளின் ஆராய்ச்சி பார்வையிலேயே உடல்  விறைக்க, “இங்க பார் என்னை காஷ்னு கூப்பிட வேணானு சொல்லி இருக்கேன்ல… நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் நான் உன்னைக் கொலை பண்ணக் கூட தயங்க மாட்டேன்” என அவன் கர்ஜித்தான். 

 

அவனின் இந்த மிரட்டல் தொணியில் உள்ளுக்குள் அரண்டாலும் தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிக் கொள்ளாமல் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவள்  “வாட் இது என்ன நியாயம்? எனக்கும் தான் என் பெயரை நாச்சினு கூப்பிட்டால் பிடிக்காது சோ  நீங்க எப்போ என்னை அப்படி கூப்பிடுறதை ஸ்டாப் பண்ணுறீங்களோ! காஷ் என இழுவையாக சொன்னவள் அப்படி கூப்பிடுறதை நிறுத்துறேன்” என்றாள் அடக்கப்பட்ட சினத்துடன்  ஆழினி.

 

“முடியாது டி என திமிராக சொன்னவன் நான் நாச்சினு தான் கூப்பிடுவேன்” என்றான்.

 

“அப்போ என்னாலையும் முடியாது காஷ்” என்றாள்.

 

அவளை எரித்து விடுவது போல் பார்த்தவன் “இதுக்கு நீ அனுபவிப்ப” என்றான் வன்மமாக காஷ்யபன்.

 

“ வில் சீ ” என்றாள் ஆழினி. 

 

ஓர் ஏளனப் பார்வையுடன், அவள் முன்னே தன் கையை திருப்பி பார்த்தவன் சுவற்றில் சாய்ந்து இருந்தவளிடம் நெருங்கி அவள் விழிகளை பார்த்து தன் ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் தன் கண்களை சுட்டி அவள் கண்களுக்கு நேரே கொண்டு சென்றவன் “ வெயிட் அண்ட் வாட்ச்” எனச் சொல்லி விட்டு ஒற்றை கையில் கார் சாவியினை சுழற்றிய படி ஸ்டைல் ஆக படிகளில் இறங்கிச் சென்றவனைப் பார்த்து அவளுக்கு உள்ளம் கொதித்தது.

 

அவளுக்கு வந்த கோபத்தில் காலைத் தரையில் ஓங்கி அடித்ததினால் அவளின் ஹீல்ஸின் அடிப்பாகம் கழன்று விட இன்னுமே அவளின் கோபம் பன்மடங்காகப் பெருகியது.

 

“ஷிட்” என்றவள் நேரே சென்று கண்ணாடியில் தன்னை ஆழ்ந்து பார்த்தாள்.

 

அவ்வளவு அழகாக இருந்தாள்…. அதில் அவளுக்கு ஒரு போதும் கர்வம் இருந்தது இல்லை.

 

இன்று அவனின் பார்வை தன் மீது ஆழ பதிந்ததை உணர்ந்தவளுக்கு ஏதோ போல இருக்க தன்னையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றவள் லதாவின் அழைப்பில் சுயத்திற்கு வந்தாள்…. “இதோ வரேன் அத்தை” என்றவள் அவசரமாக வேறு ஒரு ஹீல்ஸை போட்டுக் கொண்டு கீழே ஹாலுக்கு விரைந்தாள்.

 

“அத்தை…. அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தவளை சமையலறையில் இருந்து வந்த லதா, நேராக பூஜை அறைக்கு ஆழினியை   கூட்டிச் சென்று அங்கு முன்னரே வந்து நின்று கொண்டு சிரத்தையாக கடவுளை வணங்கிக் கொண்டு இருந்தவன் அருகில் நிற்க வைத்தார்.

 

அவள் அருகில் நிற்கவும் ஏதோ தீண்ட தகாத ஒன்றை போல அவன் அவளிடம் இருந்து சற்று இடைவெளி விட்டு நிற்க…. அவனின் செல்ல அத்தை இந்துவோ, அவனை ஆழினியுடன் சேர்த்து நிற்க வைக்க அவனோ அடக்கப்பட்ட கோபத்துடன் பற்களை நர நரவென கடித்த படி அவள் அருகில் நின்று இருந்தான்.

 

அதைக் கண்டு கொள்ளாத இந்துவும் லதாவும் சேர்ந்து இருவருக்கும் ஒன்றாக திருஷ்டி சுத்திப் போட்டனர்.

 

( என்ன தான் செய்ய இந்துவும் லதாவும் இவர்கள் இடையே நடக்கும் போரை முடித்து வைக்கத் தான் நினைக்கின்றார்கள் ஆனால், பாவம் அவர்கள் அறியவில்லை கடல் தாண்டி வாழும் ஒருவனினால் தான் காஷ்யபனின் அவளின் மீதான காதல் வெளிவந்து அந்த சண்டைக்கே முற்றுப் புள்ளி வரப் போகின்றதென)

 

அதனைத் தொடர்ந்து இந்து மற்றும் லதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஆயத்தமாகும் போது, வாக்கிங் முடித்து அப்போது தான் வீட்டினுள் நுழைந்த பிரகலாதன் மற்றும் ஜீவனை பார்த்த அவ் வீட்டின் தலைவிகள் அவர்களைக் கூப்பிட,  “ஃப்ரெஷ் ஆகிட்டு வரோம்” என்றார் பிரகலாதன்.

 

லதாவோ, “அதெல்லாம் பரவாயில்லை…. ரெண்டு பேரும் வந்து பிள்ளைங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க”  என்றார்.

 

அதன் பின் நால்வரும் தம்பதிகளாக நிற்க காஷ்யபனும் ஆழினியும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

 

“சரி…சரி இனி பங்ஷனுக்கு போகணும்… இப்பவே லேட் ஆகிறிச்சு… ரெடி ஆகணும்” என்றார் லதா.

 

“அது எப்படி அத்தை நம்ம பொண்ணும் மாப்பிள்ளையும் இன்னுமே ரெடி ஆகாமல் இருக்கப்போ நீங்க ரெடி ஆக முடியும்?” என ஆழினி லதாவைப் பார்த்துக் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டாள்.

 

அங்கு சிரிப்பு சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது.

 

“அடியே வாலு என ஆழினியின் தலையில் செல்லமாக கொட்டிய லதா, ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க… நாங்க ரெடி ஆகிட்டு வரோம்” என்று சொன்ன லதா எல்லோரையும் கிளப்பிக் கொண்டு அறைக்கு சென்று விட்டார்.

 

சாப்பாட்டு மேசையில் வந்து இருவரும் அமர, அவ் வீட்டில் பத்து வருடமாக வேலை பார்க்கும் வாணி இருவருக்கும் உணவைப் பரிமாறினார்.

 

எதிர் எதிரே அமர்ந்து இருந்தாலும் இருவருக்கும் இடையில் எந்த வித பேச்சு வார்த்தைகளும் இருக்கவில்லை.

 

கருமமே சிரத்தையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

 

என்னதான் முகத்தில் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் காஷ்யபனின் மனதிலோ வன்மத் தீ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டு தான் இருந்தது…. “இவளுக்கு ஏதாச்சும் பண்ணனுமே” என யோசித்துக் கொண்டே சாப்பிட்டவனுக்கு மூளையில் மின்னல் வெட்ட பாதி சாப்பிட்டு கொண்டு இருந்ததிலேயே எழுந்தே விட்டான்.

 

அவன் பாதியில் எழுந்தது தெரிந்தாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் அன்று தான் இட்லியை கண்டது போல அதனை ஆராய்ந்துக் கொண்டு இருந்தாள் ஆழினி. 

 

அவளை ஏளனமாகப் பார்த்தவன், “டுடே உன் டர்ன் சோ நீயே என் பிளேட்டையும் சேர்த்து கழுவு” என்றவன் அவள் பதிலையும் எதிர் பார்க்காது அவசர அவசரமாக கையைக் கழுவிக் கொண்டு இரு இரு படிகளாக தாவி ஏறியவன் அவனின் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

போகும் அவனை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தவள்… சாப்பிட்டு விட்டு அவனது பிளேட்டையும் விதியே என நொந்து கொண்டவள் கழுவி வைத்தாள்.

 

பின் நேரம் செல்ல, சோபாவில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தவள் அருகில் பேச்சு சத்தம் கேட்க, நிமிர்ந்தவள் கண்கள் பெரிதாக விரிந்தன.

 

சோபாவில் இருந்து எழுந்தவள்… “அம்மா! என்ன கோலம் இது? என இந்துவை சுற்றி வலம் வந்தவள்… ஓ மை கோட் இந்த ஆழினிக்கு வந்த சோதனையை பாரேன் என விட்டத்தைப் பார்த்து சொன்னவள்…. உங்க பக்கத்துல என்னால நிற்க கூட முடியாது போலயே, பங்ஷனுக்கு வாரவங்க எல்லாம் என்ன உங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிறிச்சு உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையானு? கேட்க போறாங்க” என்றாள் பொங்கி வந்த சிரிப்பை மறைத்த படி…

 

முகம் சிவந்த இந்துவோ, “ச்சீ போடி” என சொல்லி விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

 

அங்கு வந்த லதாவும் பிரகலாதனும் இவளின் சீண்டலில் வாய் விட்டே சிரித்து விட்டனர்.

 

சிரிப்பை கட்டுப் படுத்திய பிரகலாதனோ, “அப்போ என் ப்ரெண்ட் அழகா இல்லையா?” என்றார் ஜீவாவை சீண்டும் பொருட்டு….

 

“அப்பாவும் அழகு தான் மாமா என இழுவையாக சொன்னவள் பட் என்ன என் அம்மாவை அழகுல அடிச்சிக்க முடியாது” என்றாள்.

 

“அப்போ நான் அழகு இல்லையா?” என லதா முறுக்கிக் கொள்ள…..

ஆழினியோ, “அச்சோ மை டியர் ஸ்வீட் அத்தை மா நீங்க பேரழகு” என அவரின் கன்னம் கிள்ளினாள்.

 

ஒரே வார்த்தையில் லதாவை அவள் குளிர்வித்து இருக்க, கன்னங்கள் சிவந்த அவரும் “உனக்கு பிடிச்ச லட்டு வச்சு இருக்கேன் ஆழினிமா… இரு எடுத்திட்டு வரேன்” என்று அவர் சென்று விட்டார்.

 

“பிரகா… இங்க பாரேன் யாரை எப்படி கவுக்கலாம்னு இவள் கிட்ட இருந்து தான் கத்துக்கணும் போலடா” என்றார் ஜீவா.

 

அதன் பின் இருவரும் சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

 

ஏதோ தோன்ற பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த ஆழினியை பார்த்த ஜீவா, “ நீ உங்க அம்மாவை சுத்தி சுத்தி வந்ததுக்கு ஒரு முறையாச்சும் கோயிலை சுத்தி வந்து இருக்கியா? ஆழினி என கேட்டார் ஜீவா.

 

அப்பா என செல்லமாக முறைத்தவள், “என்ன அப்பா இப்படி சொல்லிட்டீங்க என் அம்மா தான் எனக்கு கோயில் மாதிரி உங்களுக்கு அது தெரியாதா? என்றவள் அடக்கப்பட்ட சிரிப்புடன், இருங்க நான் அம்மாகிட்ட மாட்டி விடுறேன் நீங்க கோயிலையும் அம்மாவையும் பிரிச்சு பார்க்குறீங்கனு” என அவர் தலையில் சத்தமே இல்லாமல் இடியை இறக்கினாள்.

 

பிரகலாதனோ, “ஏன்டா இப்படி வாயை குடுத்து மாட்டுற?” என்றார் சிரித்துக் கொண்டே….

 

“தயவு செய்து என்னை  அவகிட்ட கோர்த்து விட்டுறாத ஆழினி… வேணும்னா உன் அம்மாவுக்கு தெரியாமல் உன் ப்ரெண்ட்ஸ் கூட, நீ கேட்ட அந்த ஃபாரஸ்ட் டிரிப்க்கு அப்ரூவல் வாங்கி தரேன்” என்றார் ஜீவா.

 

கண்கள் மின்ன இருவரையும் எழுந்து வந்து இருவரையும் அணைத்தவள் ஆமா என இழுவையாக சொன்னவள் “இப்போ நீங்க என்கிட்ட கொஞ்சம் முதல் ஒரு கேள்வி கேட்டீங்களே அது என்ன அப்பா? எனக் கேட்டாள்.

 

“அடப்பாவி” என வாயில் கையை வைத்துக் கொண்டனர் இருவரும்…

 

“சரி சரி ஷாக் அஹ் குறைங்க… என்றவள் இருவரையும் பார்த்து என்னை ஏமாற்ற கூடாது டீலா” என்றாள்.

 

இருவரும் “டீல்” என்றனர்.

 

சமையலறையில் இருந்து எடுத்து வந்த லட்டை முதலில் ஆழினிக்கு ஊட்டி விட்ட பிறகே அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார் லதா.

 

எல்லோரும் அமர்ந்து காலை உணவை முடித்துக் கொண்டவர்கள் புறப்பட தயாராக…. அப்போது தான் யாரும் அறியாமல் ஆழினியின் அறையில் இருந்து முகத்தில் ஒரு வன்மமான புன்னகை தவிழ கீழ் இறங்கி வந்தான்.

 

“ என்னடா ரூம்ல பண்ற வா வந்து லட்டு சாப்பிடு என லதா அவனை கூப்பிட… அவன் வரும் முன்னரே, அவன் அருகே சென்ற இந்துவே லட்டை ஊட்டி விட்டார்.

 

“போதும் அத்தை” என்றான்.

 

யாருக்கு தான்… தன் அம்மா இன்னொருவர் அதுவும் தன்னை வெறுக்கும் ஒருவனுக்கு அன்பு காட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியும்? அவளுக்கு காதில் புகை வராத குறை தான்.

 

அவனைப் பார்த்து முறைத்த ஆழினி, லதாவிடம் “சரி உங்க பாசப் போராட்டத்துக்கு ஒரு எண்டு கார்ட போட்டுட்டு வாங்க இனி கிளம்பலாம்” என்றாள்.

 

அவளை கண்டு கொள்ளாத காஷ்யபன் “அப்பா செரோக்கில போவோமா?” என கேட்டான்.

 

அவன் அறிவானே! அவள் ஃபெராரி காரில் போகத் தான் விரும்புவாள் என… தெரிந்துக் கொண்டே அவன் இப்படி கேட்டு வைக்க….

 

திரு திருவென விழித்த அனைவருக்கும் இப்போது சங்கடமான நிலைமையே…

 ஆழினியின் விருப்பம் எதுவென்று தெரிந்த பிரகலாதன் “இல்லப்பா ஜீவன் ஃபெராரில வரட்டும்… நாம செரோக்கில போவோம்” என்றார்.

 

இதுவே அவனின் கோபத்தை தூண்ட போதுமானதாக இருந்தது… அது எப்படி? அவள் விருப்பத்திற்கு முதல் உரிமை கொடுப்பது என அவனுக்கு ஆத்திரம் கிளர்ந்தது.

 

இந்த நல்ல நாளில் யாரினதும் மனம் கெட்டு விடக் கூடாது என அவனின் பிடிவாதம் அறிந்த அவள்…. காஷ்யபன் ஏதோ சொல்ல வரும் முன்னரே,  “மாமா நாம செரோக்கி ஜீப்ல போகலாம்” என்றாள் ஆழினி.

 

எல்லோரும் அப்போது தான் இழுத்து பிடித்து இருந்த மூச்சை வெளியிட்டனர்.

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ்…🥰

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

7 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2”

    1. தாரதி

      வேற லெவல் ம்மா.. தலைப்பு அண்ட் கவர் பிக் ❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!