தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4

4.9
(23)

அத்தியாயம் – 4

 

அவள் நேரே சென்றது என்னவோ  வருணின் கார் அருகே தான். 

 

கார் அருகே சென்ற பின் தான் வருணிடம் காரின் திறப்பை வாங்கிக் கொண்டு வராதது உரைக்க, ஒரு பெரு மூச்சுடன் அப்படியே  காரில் சாய்ந்து நின்றாள்.

 

அவளையே பின் தொடர்ந்து வந்த காஷ்யபன் அவள் வருணின் காரில் நிலத்தை பார்த்து கொண்டே சாய்ந்து நிற்பதை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டு சற்று மறைவாகத் தள்ளி நின்றான்.

 

வருணோ, தேஜாவிடம்   “பெருசா உன்னை பெஸ்ட் ப்ரெண்ட்னு சொன்னா! பார்த்தியா இப்போ கிஃப்ட்னு சொன்னதும் கழட்டி விட்டுட்டு  போறா” என ஒரு மென் சிரிப்புடனேயே தேஜாவுடன் கதைத்துக் கொண்டே காரின் அருகே வந்து இருந்தான்.

 

“ஹரிஅப் வருண்” என்றாள் ஆழினி.

 

“ஹே… கொஞ்சம் பொறுமையா இரு ஆழினி” என்றாள் தேஜா.

 

ஒருவழியாக காரைத் திறந்து அவளுக்காக தான் வாங்கி வந்து இருக்கும் அந்த பரிசைக் கொடுத்தான்.

 

கண்கள் மின்ன அதை வாங்கிக் கொண்டாள்.

 

ஆம், அது “Canon EOS 350D” வகை கேமரா தான்.

 

அதை தன் மார்போடு அணைத்தவள் கண்களை மூடித் திறந்தாள்… அவ்வளவு பூரிப்பு அவளின் முகத்தில்…….

 

அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்த காஷ்யபனின் பார்வை, அவள் அணைத்து இருந்த அந்த கேமராவின் மேல் வன்மமாக படிந்தது.

 

இப்போது அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது…வருணை அவளுக்கு முன்னரே தெரிந்து இருக்கின்றதென…

 

மேலும், கிட்கேட், ஒயின் சாக்லேட்கள் என அவளுக்கு கொடுத்தவன் “ உன் ப்ரெண்ட் தேஜாவுக்கும் குடுத்து சாப்பிடு” என்றான் வருண்.

 

“அதை நீ சொல்லத் தேவையில்லை நானே கொடுப்பேன்” என்றாள்.

 

“ஆமா…இப்போ நல்லா பேசு அதான் நீ கேட்டது கிடைச்சுறிச்சே” என வருண் சொல்ல…..

 

ஹி ஹி ஹி என சிரித்து வைத்தவள் “மீ பாவம் அப்படி எல்லாம் சொல்லப் படாது” என்றாள் ஆழினி.

 

ஆழினியின் கையில் இருந்த கேமராவை வாங்கிய தேஜா “இந்த பிராண்ட் தான் இங்கேயே இருக்கே சோ இதை நீ  இங்க வாங்கி இருக்கலாமே” எனக் கேட்டாள்.

 

“என்ன தான் இருந்தாலும் UK ல இருக்கது ஸ்பெஷல் தானே” என்றாள் ஆழினி.

 

“கடவுளே! என தலையில் அடித்துக் கொண்டவள் நீ இப்படியே உலறிட்டு இரு  நான் வீட்டுக்கு போகணும் ஆழினி லேட்ஆகிறிச்சு” என்றவள் கிளம்பத் தயாரானாள்.

 

“தேஜ்” என்றான் வருண்.

 

செல்லப் போன தேஜா திடுக்கிட்டு விழித்த அதே கணம் ஆழினியோ, அதிர்ச்சியில் வாயில் கையை வைத்து இருந்தாள்.

 

“ஹேய் கூல் இதுல என்ன ஷாக் ? தேஜானு லாங் ஆஹ் கூப்பிடுறதுக்கு பதிலாக தேஜ்னு கூப்பிட்டால் என்ன தப்பு?” என வருண் கேட்டான்.

 

“ஓஹோ சாருக்கு, தேஜா என்ற பெயர் லாங் ஆஹ் இருக்கா? சரிதான் கலிகாலம் கலிகாலம்” என தலையில் அடித்துக் கொண்டாள் ஆழினி.

 

அசடு வழிந்த வருண் தேஜாவைப் பார்க்க, அவள் தான் இன்னும் அவன் தேஜ் என்று கூப்பிட கணமே சிலையாக நின்றவள் இன்னுமே உணர்வுக்கு வரவில்லையே….

 

இதுவரை யாருமே அவளை பெயரைச் சுருக்கி இப்படி கூப்பிட்டதே இல்லை… அதனாலேயே இந்த அதிர்வு அவளுக்கு தோன்றி இருந்தது மட்டுமல்லாது அவனின் இந்த பிரத்தியேகமான அழைப்பு அவளை சிலிர்க்கவும் செய்து இருந்தது.

 

தேஜாவை உலுக்கிய ஆழினி, “ ஷார்ட் நேம் தேஜ்” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்….

 

வலுக்கட்டாயமாக சிரித்த தேஜா, கதையை மாற்றும் பொருட்டு “நான் போறேன் டி கொஞ்சம் என்டரன்ஸ் வரையும் வா” என்றாள்.

 

“ ஐயோ வெயிட் டி என சொன்ன ஆழினி வருணைப் பார்த்து,  நாங்க  ஃபாரஸ்ட் டிரிப் ஒன்னு போக பிளான் பண்ணி இருந்தோம்…. நீயும் வரியா?” என்று கேட்டாள்.

 

 “வாட்? ஃபாரஸ்ட் டிரிப் ஆஹ்? என அதிர்ந்த வருண், அவளை கூர்ந்து பார்த்தவன் யார் யார் போறது?” என கேட்டான்.

 

அவனின் குரல் வேறுபாட்டை உணராத ஆழினியோ, தன் வலக் கையில் ஒவ்வொன்றாக விரலை மடக்கி   “ நான், தேஜா அண்ட் இன்னொரு 3 ப்ரெண்ட்ஸ் என உற்சாகமாக கூற….

 

“ சோ 5 பேர் அதுவும் கேர்ள்ஸ் போகப் போறீங்க?” என அவன் கேட்க….

 

“ ஆமா, பட் இன்னும் எந்த ஃபாரஸ்ட்ன்னு  கன்பார்ம் பண்ணல” என்றாள் ஆழினி.

 

“ உங்க ரெண்டு பேர் வீட்டுலயும்  ஃபாரஸ்ட் போக ஓகே  சொல்லிட்டாங்களா?” என அவன் அடுத்த கேள்விக் கணையை தொடுக்க….

 

“ எங்க கூட ஒரு ஜென்ட் சார் உம் டீச்சர் ஒராளும் வர்றாங்கனு பொய்  சோ வீட்டுல அப்ரூவ் ஆகிறிச்சு என்றவள் யூ நோ வருண் இப்படி ஒரு ஐடியாவை குடுத்ததே நான் தான்” என்றாள் சிரித்துக் கொண்டே…..

 

அவள் சொல்வது அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த வருண், அவளை ஓங்கி அறைந்து இருந்தான்.

 

தேஜா அதிர்ச்சியில் உறைய, ஆழினியோ, கண்கலங்க ஒற்றைக் கன்னத்தை பிடித்துக் கொண்டே ஒரு விம்மலுடன், “என்னை ஏன்டா அறைஞ்ச ?” என கேட்க….

 

கோபத்தில் பற்களை கடித்த வருண்,     “உன்னை கொல்லாமல் விட்டேனேனு சந்தோஷப்படு என்றவன் தொடர்ந்து லூசு மாதிரி யார் துணையும் இல்லாமல் ஃபாரஸ்ட் போகப் போற… அதுவும் உன்னோட நாலு பேரை வேற கூட்டிட்டு வேற… அங்க போய் ஏதாச்சும் ஆச்சுனா என்னடி பண்ணுவ?” என அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டான்.

 

வருண், ஆழினியை  அறையும் போதே அதிர்ந்த காஷ்யபன், வருண் அடுத்துப் பேசியதைக் கேட்டவன் இதழ்கள் வன்மையாக புன்னகைத்துக் கொண்டன.

 

“சாரி…. வருண் நீயும் வரியா?” எனக் கன்னத்தைப் பற்றிக் கொண்டே சிறு பிள்ளை போல கேட்க…

 

“அடிங்…. நான் என்ன சும்மா இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கியா? எனக்கு பிசினஸ் கமிட்மென்ட்ஸ் இருக்கு ஆழினி என்றவன் தொடர்ந்து நான் வர முடியாது… நீயும் போகாத அவ்ளோ தான்” என்றான் முடிவாக வருண்.

 

“வாட்? நான் போவேன்… நீ வராட்டி போ” என்றாள் ஆழினி. 

 

மறுபடியும் வருணுக்கு கோபம் கிளர்ந்து எழ “ஏய்” என்று கொண்டே அவன் ஆழினியிடம் வர, இருவருக்கும் இடையில் குறுக்கே பாய்ந்த தேஜா  “சாரி சார் நாங்க போக மாட்டோம்” என்றவள் ஏதோ சொல்ல வந்த ஆழினியின் வாயை தன் கைகளால் பொத்திப் பிடித்து வருணிடம் ஒரு தலை அசைப்புடன் ஆழினியை இழுத்துக் கொண்டு சென்று இருந்தாள்.

 

ஆழ்ந்த பெரு மூச்சொன்றை வெளி விட்டவன் “சாரி ஆழினி” என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

ஆழினியை ஹோட்டல் நுழைவாயிலின் அருகில் இழுத்து வந்த தேஜா, “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு? அவர் தான் சொல்றாரே யார் சப்போர்ட்டும் இல்லாமல் தனியா போக வேணாம்னு… நீ ஏன் எதிர்த்து பேச போற டி? என சொன்னவள் தன்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் ஆழினியின் கன்னத்தை மென்மையாக பற்றி வலிக்குதா?” எனக் கேட்டாள் சற்று தழைந்த குரலில்….

 

“ப்ப்பாஹ்…சுகமா இருக்கு” என்று விட்டு தேஜாவை முறைத்தவள் மறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

 

அவளின் பதிலில் மென் புன்னகை தோன்ற “ஹேய் இங்க பாரேன் டி” என அவளை பற்றி திருப்பினாள் தேஜா.

 

தேஜாவின் பக்கம் அவள் திரும்பினாலும் அவளின் முகம் தரையையே வெறித்துக் கொண்டு இருக்க, அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வலிந்துக் கொண்டே இருந்தது.

 

“அழாத ஆழினி” என்றவள் அவளை அணைத்துக் கொண்டாள்.

 

ஒருவாறு தன்னை மீட்டுக் கொண்டு தேஜாவின் அணைப்பில் இருந்து விலகி வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள் “ஐ அம் அல்ரைட் தேஜா” என்றவள் தன் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவர் கந்தனுக்கு கால் பண்ணியவள் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருமாறு பணித்து விட்டு அழைப்பை துண்டித்து இருந்தாள்.

 

“இப்போதைக்கு இந்த டிரிப் கதையை ஒத்தி வைப்போம்…உன் கன்னம் நல்லா சிவந்துப் போய் இருக்கு சோ முகத்தை கழுவிட்டு கொஞ்சம் மேக்கப் பண்ணிக்கோ” என்றாள் தேஜா.

 

“ஓகே” என்றாள் குரல் தளு தளுக்க….

 

“4.30 மணி ஆச்சு ஆழினி நான் கிளம்புறேன் இப்போ என்றவள் தொடர்ந்து வீட்டுக்கு போய் உனக்கு மெசேஜ் போடுறேன்” என அவளை அணைத்து விடுவித்தாள் தேஜா.

 

“வெயிட் பண்ணு கந்தன் அண்ணா வருவார்… அவரே உன்னை வீட்டுல ட்ராப் பண்ணுவார்” என்றாள் ஆழினி.

 

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கந்தனும் வந்துவிட தேஜாவை அனுப்பி வைத்து விட்டு யாரும் அறியாமல் ஹோட்டலுக்குள் நுழைந்தவள் நேரே சென்றது என்னவோ, வாஷ்ரூமிற்குள் தான்.

 

தன் முகத்தையே கண்ணாடியில் வெறித்தவள் தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவினாள்…. அவளின் கன்னம் காந்தியது இருந்தும் இதழை கடித்து வலியை அடக்கிக் கொண்டாள்.

 

தன் பையில் இருந்த மேக்கப் செட்டை எடுத்தவள்… தன் இரு கன்னங்களுக்கும் சரி சமனாக இளம் சிவப்பு நிறத்திலான பவுடரை பூசியவள் ஒருவாறு மேக்கப் செய்து முடித்து கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தவளுக்கு திருப்தியே….

 

கண்ணாடியைப் பார்த்து தானாக ஒரு மென் புன்னகையை வரவழைத்தவள்… பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நேரே வந்து இருந்தாள்.

 

தொழில் துறை நண்பர்களை அனுப்பி வைத்து விட்டு, தன் பீஏ (PA) ராமிடம் இருந்து வந்த அழைப்பினை பேசிக் கொண்டு இருந்த காஷ்யபன் கண்ணில் ஆழினி தென்பட்டாள்.

 

அவளை பார்த்தவன் ஒற்றை புருவம் தானாக மேல் உயர அவனின் இதழ்கள் “நோட் பேட் (Not bad)” என உச்சரித்து இருந்தது.

 

மேடையில் ஏறி தன் பெற்றோரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டவள் இருவருக்கும் முத்தம் கொடுத்து விட்டு கீழே இறங்கி வந்து அமர்ந்து கொண்டாள்.

 

மனதில் பலவித யோசனைகள் அவளுக்கு ஒரு மூலிகையைப் பற்றி ஆராய வேண்டிய தேவையும் இருந்தது…. வருணுக்கு தெரியாமல் வேறு போக முடியாது….நான் இல்லாத போது என்னை தேடி அவன் வீட்டுக்கு வந்தால், அவனிடம் என் கதி அவ்வளவு தான் என யோசித்தவளுக்கு வேறு ஒரு வழியும் புலப்படவில்லை. 

 

ஏதோ யோசனையில் இருந்தவள் தோளில் தட்டிய லதா, “என்ன ஆழினி யோசிச்சிட்டு இருக்க?” என கேட்க…

 

திடுக்கிட்டு விழித்தவள் “ஒண்ணும் இல்லை அத்தை” என்க, அவளை ஆதுரமாக பார்த்த லதா “உன் முகமே சரி இல்லையே மா காஷ்யபன் ஏதாச்சும் சொன்னானா?” எனக் கேட்டார்.

 

அவசரமாக இல்லை என்று தலையை இரு புறமும் ஆட்டினாள்.

 

“என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு ஆழினி” என்றவர் அவளின் தலையை மிருதுவாக வருடி விட்டு சென்று விட்டார்.

 

எல்லோரும் இரவு உணவை ஹோட்டலில் முடித்து இருக்க, இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தவர்கள் இப்போது இருந்த களைப்பில் தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டனர்.

 

தனது கேமராவை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள் அதிர்ந்து நின்றவள் கண்கள் தானாகக் கண்ணீரை பொழிந்தது.

 

சத்தம் போட்டு கதறி அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு, வாயில் இரு கைகளையும் வைத்து விம்மி விம்மி அழுதவள் அப்படியே நிலத்தில் சரிந்து அமர்ந்தாள்.

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!