காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️

5
(2)

வந்த முதல் நாளே இவ்வளவு மேசமாக செல்ல, ஆதவன் உன் பணி முடிந்துவிட்டது என்றால் கிளம்பு. நான் என் பணியைத் தொடர வேண்டும் என்று மதியை அயல் நாட்டிற்கு துரத்திவிட அனைவரது துயிலும் கலைந்தது.

யூவி எழுந்து யன்னலை எட்டிப் பார்க்க பனி சூரிய வெளிச்சத்தை மறைத்தருந்தது. மணியை கடிகாரத்தில் பார்த்தாள். 05:15 எனப் பல்லைக் காட்டியது.

“15 நிமிசம் லேட்டா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டு எங்கு குளிப்பது என்று யோசித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் அபியை நோக்கி

“எங்கடி குளிக்கிறது?” எனக் கேட்க அவளோ தூக்கக் கலக்கத்தில்

“எங்கேயாவது போய் குளிடி. என்ன டிஸ்டர்ப் பண்ணாத.” என கூறிட அவளைக் கால்களால் எட்டி உதைத்தவள்

“கும்பகர்ணி. காலையில 5 மணிக்கு மேல தூங்கினா விளங்கிடும்.” என எரிச்சலாக கூறிட

“திரிஷ்டி சுத்திப் போட்டு வீட்ட விளங்க வெச்சிடலாம். இப்போ என்னத் தூங்க விடுறீயா?” என உலர

“ச்சேய்… எல்லாமே என் தலையெழுத்து.” எனக் கூறிக் கொண்டாள்.

ஓம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

என்று யாரோ காயத்ரி மந்திரத்தை தெளிவாக மெல்ல மெல்ல அழகாக உச்சரிக்கும் சத்தம் கேட்டிட வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். ஆதிதான் நடு முற்றத்தில் வேஷ்டியை ஏதோ சொதப்பலாக இடுப்பில் சொருகிக் கொண்டு வெற்று உடம்போடு மரக்குற்றியில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை சத்தமாக கூறிக் கொண்டு கண்களை மூடி அருகில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் நீரை எடுத்து தலையில் ஊற்றி குளித்துக் கொண்டிருந்தான். அருகில் சிவாக் குச்சிகள் இருந்தன. அத்துடன் அருகில் தூத் பேஸ்ட்டும் கூடவே இருந்தது.

“காலையிலேயே யார் முகத்துல முழிக்கக் கூடாதோ, அவன் முகத்துலேயே முளிச்சிட்டேன். ச்சே… எல்லாம் என் நேரம். ஆனால் தூத் பேஸ்ட் இல்லையே. அதோ அவன் பக்கத்துல இருக்கு. பேசாம பூனை மாதிரி பதுங்கி போய் சுட்டுட வேண்டியதுதான்.” என்று திட்டம் தீட்டியவள், மெல்ல பூனை போல பதுங்கிச் சென்று அவன் அருகில் இருந்த சிவாக் குச்சி ஒன்றை எடுக்க அடுத்த நிமிடம் அவள் தலை தண்ணீர் இருந்த பாத்திரத்தினுள்ளே இருந்தது.

அவன் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் காதுகள் நுன்னிப்பாக இருந்தது. இவள் முனுமுனுத்ததும், காலடிச் சத்தமும் மிக எளிதாக காதுகளுக்கு எட்டிட தானாய் வலையில் வந்து சிக்கினாள் யூவி.

அவன் கைகள் அவள் பின்னங்கழுத்தை பிடித்து தண்ணீர்ப் பாத்திரத்துள்ளே அமுக்க, அவள் சுவாசிக்க இடமின்றி தலையை அடித்து துடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் நிலை தடுமாறவே இல்லை. முன்னால் நேராக கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வது போல் உட்கார அவனது வலது கை மாத்திரம் அவள் தலையை தண்ணீரினுள் புதைத்துக் கொண்டிருந்தது. யூவி நீரின் அடியில் சுவாசிக்க முடியாமல் மூஞ்சுத் திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அவள் நாசிக்குள்ளும் காதிற்குள்ளும் நீர் ஏறி அடைத்துக் கொண்டிருந்தது. அவளை ஒரே அடியில் கொல்லக் கூடாது. தினம் தினம் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ உடனே அவள் தலையை வெளியில் இழுக்க அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போன்ற உணர்வு.

அவள் விழிகளில் நீர் உள்ளே சென்று சிவப்பாக மாறி காட்சியளிக்க அவனை முறைத்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தாள். கண்களை மூடி இருந்தவன் ஏதோ ஒன்றை சாதித்த சந்தேசத்திலும் சிரிப்பிலும் மெல்ல தன் கண்களைத் திறந்து யூவியை நோக்கினான்.

“இன் திஸ் பியூடிபுள் மோர்னிங், வட் அ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ். காலையிலேயே இப்படி என் முன்னாடி வந்து நின்னு ஒரு அழகான சீன க்ரியேட் பண்ணிட்ட. செம்ம. எப்படி இருந்துச்சு? இன்னும் ட்ரை பண்றீயா?* என்று அவளைக் கேட்க பதில் வர முன்பே மீண்டும் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் அவளது தலையை தாழ்த்தி

“டிக்… டிக்… வன். டிக்… டிக்… டூ…. டிக்… டிக்… த்ரீ” என்று அவள் துடித்துக் கொண்டிருக்கும் நொடிகளை எண்ணி அவள் பாதி உயிரை எடுத்து விட்டான்.

அவள் மூச்சுத் திணறி மயக்க நிலையை அடைய முன்னர் “டிக்… டிக்… ஹன்ரட்” என்று எண்ணியவோறே சட்டென்று அவள் தலையை வெளியே இழுக்க அவளுக்கு இதற்கு மேல் முடியாமல் துடித்தே போய் விட்டாள். அவன் அவளது கழுத்தைப் பிடித்திருந்த கையை தவிர்த்து மற்ற கையை நீட்டி சோம்பல் முறித்து தன் உடம்பை ஒரு முறுக்கு முறுக்கி விட்டுக் கொண்டே

“காலையிலேயே அமர்க்களமா இருக்கே. இன்னைய நாள் எனக்கு சாதகமா இருக்கோ?” என்று கூறிக் கொண்டே அவள் தலையை இழுத்து தன் மடியில் போட்டு விட்டான். அவளோ அவன் மடியில் தன் தலையை வைத்து அதிர்ந்து அவன் கண்களை நோக்கியிருக்க, அவன் தன் மடியில் தலை வைத்து கிடப்பவளின் அருகில் மிக நெருக்கமாக வந்து அவள் கண்களை நோக்கிக் கொண்டே

“இதே மாதிரி… இல்ல… இல்ல… இதை விட பல மடங்கு சித்திரவதைய நீ தினம் தினம் அனுபவிக்க வேண்டி இருக்கும். என் கால்ல விழுந்து கெஞ்சினன்னா, ஏதோ பாவம் சின்னப் பொண்ணு தெரியாம பண்ணிடுச்சுன்னு விட்டுர்ரேன்.” என்று கூறிட அவன் தலைமுடியில் இருந்து கொட்டும் நீர்த் துளிகள், அவள் முகத்தில் விழ அவள் இதயம் வெடித்துச் சிறதும் அளவு வேகமாக துடித்தது. அவள் கொஞ்ச நிமிடம் மெய் சிலிர்த்து அவன் கண்களில் தன் காதலைத் தேடலானாள். அவள் மிகவும் அமைதியாக அவன் பேச்சுக்கு எதிர்வினை காட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டே இருக்க அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு எழுந்தது.

“நான் என்ன? கேட்டேன்?” என்று கத்தியவாறு அவன் கால்களை வைத்து காயத்தை உண்டாக்கிய அவள் கைகளிடையே தன் கைகளைக் கோர்த்து இன்னும் இறுக்கிட ஏற்கனவே வெந்த காயத்தில் இன்னும் வலி எடுக்க

“ஆ… அம்மா…” என்று கதறியவாறே கண்ணீருடன் நிஜ உலகத்திற்குத் திரும்பினாள்.

“நீ நினைக்கிற மாதிரி என்னை உன்னால கெஞ்ச வைக்க முடியாது. நான் உன்னோட ஸ்லேவ் எல்லாம் இல்லை. நீ சொல்றத கேட்டு உன் கால்ல விழனுமா? தப்பு பண்ண உனக்கே இவ்ளோ ஆணவம் இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கனும். என்கிட்ட நல்லா நடந்துக்கிட்டா நானும் நல்லா நடந்துப்பேன். மோசமா நடந்துக்கிட்டா நானும் மோசமாதான் நடந்துப்பேன். எதை எனக்கு கொடுக்குறாங்களோ அததான் நானும் திருப்பி கொடுப்பேன். மொத்ததுல கிவ் ரெஸ்பெக்ட் என்ட் டேக் ரெஸ்பெக்ட். சோ… நடக்காததை நினைச்சு கனவு காணாம நடக்குறத பத்தி யோசி.’ என்று அவள் தைரியமாக உரைத்தாள்.

அதை கேட்டு கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்து நசுக்கியதில் கழுத்து எலும்புகள் வலிக்க “ஆ…” வென்று கத்தினாள். தன் மடியில் படுத்துக் கிடப்பவளை கேசத்தைக் கோதிவிட்டபடியே

“நோட்டட். அந்த வார்த்தைய நான் நோட் பண்ணிக்கிட்டேன். ஸ்லேவ்… வாவ். வட் என் அமேஸிங்க் வேர்ட். கேட்கும் போதே அப்படியோ தலைக்குள்ள ஏறுது. நான் டிஸைட் பண்ணிட்டேன். நீ என்ன கேட்ட? நான் உன் ஸ்லேவான்னா? இன்னும் 72 ஹவர்ஸ். அதாவது 3 நாள்ள உன்ன என் ஸ்லேவா மாத்திக் காட்றேன். இது நடக்கும். இந்த ஆதிஷேஷ கார்த்திக்கேயன் நடத்திக் காட்டுவான். நான் நினைச்சது எல்லாத்தையும் இது வரைக்கும் நடத்திக் காட்டிருக்கேன். அதே மாதிரி உன்னை என் ஸ்லேவா மாத்தி என் காலுக்கு கீழ வெக்கிறேன். எப்படி? எப்படி? காலுக்கு கீழ.” என்று கோபத்தின் உச்ச கட்டத்தில் கத்திட இவன் கத்திய கத்தலில் பயந்து போய் பால் காய்ச்சிக் கொண்டிருந்த மகாலக்ஷ்மி

“கார்த்திக்…” என்று கத்திக் கொண்டு முற்றத்தை நோக்கி ஓடி வந்தார்.

அதில் தன்னிலை உணர்ந்த யூவி அவனை விட்டு விலகி அமர்ந்து “நீ நினைக்கிறது கனவுலையும் நடக்காது. பாக்கலாம் இந்த மூனு நாளைக்குள்ள என்னத்த கிழிக்கிறன்னு?” என்று கேட்டாள் அவளுக்கு உரிய திமிரில்.

இவள் அவன் அருகில் அமர்ந்திருப்பதை கண்ட மஹாலக்ஷ்மி திரும்பவும் அவளை ஏதோ செய்து விட்டானோ என்று பதறிக் கொண்டு யூவியிடம் ஓடி வந்தார்.

“என்னாச்சும்மா? யூவி ஏன் இப்படி நனைஞ்சிருக்க? ஏதாவது பிரச்சினையா? இவன் ஏதாவது பண்ணாணா?” என்று பதற்றமாக அவனை முறைத்துக் கொண்டு கேட்க அவள் இல்லை என்றவாறு தலையாட்டிவிட்டு

“இல்லை ஆன்டி நான் குளிக்கலாம்னு வந்தேன்.” என்று கூறிவிட்டாள். அதில் இன்னும் அதிர்ச்சி அடைந்தவர்

“என்னமா? நனைஞ்சிருக்க? அப்படின்னா இங்கேயா குளிச்ச? இவன்தானே இங்க உட்கார்ந்து குளிப்பான்.” என்று புருவம் உயர்த்தி வினவினார். அவன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை அலட்சியமாக பார்த்து டவளை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

யூவி “இல்லை ஆன்டி நான் சும்மா இங்க தூத் பேஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன் அதுதான். கால் தடக்கி தண்ணில விழுந்துட்டேன்.” என்று கூறி சமாளித்து விட்டு சில நேரம் கேப் விட்டு விட்டு

“சரிங்க ஆன்டி நான் பின்னால போய் குளிச்சிக்கிறேன்.” என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். அனைவரும் அவரவர் வேலையை செய்திடவ யூவி குளித்து விட்டு தன்  தலைமுடியை துவட்டிக் கொண்டு வந்தாள்.

மஹாலக்ஷ்மி “ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைக்கிறேன். சீக்கிரமா வாம்மா.” என்று கூப்பிட ஒரு புன்னகையுடன் சரி என்றவாறு தலையாட்டிக் கொண்டு உள்ளே சென்றவள் மீண்டும் திரும்பி வந்து நிற்க மகாலக்ஷ்மி அவளை பிடித்து இழுத்து உட்காரவைத்து பரிமாரினார்.

அவள் “போதும் போதும் ஆன்டி.” என்று கூற அவர் இன்னும் வைத்துக் கொண்டே போனார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆதி வந்து அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையை அவளது நாற்காலியின் மேல் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள யூவியின் இதயம் ஒவ்வொரு நொடிக்கும் முந்தைய நொடியை விட அதிகமாய் துடிக்க ஆரம்பித்தது.

பயத்தில் அருகில் உட்கார்ந்திருந்த ஆதியை மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் கண்கள் சிவக்க அவளைப் பார்த்து “என்னமா? சாப்பிடு சாப்பிடு நல்லா சாப்பிடு. எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட் நீ. உன்னை இவங்க சரியாவே கவனிக்கல போலயே.” என்று கூறிக் கொண்டு இன்னும் நிறைய மீன்களை எடுத்து அவள் தட்டின் மீது வைத்து விட்டு

“சாப்பிடு.” என்று மேசையில் தன்  கையை வைத்து தன் தலையைத் தாங்கிய நிலையில் அவள் புறம் அவள் சாப்பிடுவதைப் பார்த்தவாறு கூறியவனை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

இதை கவனித்தவன் அனைவரது பக்கமும் பார்வையைத் திருப்பி “இந்த வில்லேஜ் பீப்பிள்ஸ் கிட்ட எனக்கு பிடிக்காதது என்ன தெரியுமா? என்ன நடந்தாலும் வாய பொளந்துட்டு பாக்குறது. இங்க என்ன ஸோவா நடக்குது? எல்லாரும் உங்க தட்டைப் பார்த்து சாப்பிடுறீங்களா?” என்று கத்திட அனைவரது கண்களும் அவரவர் தட்டை நோக்கியது.

இவன் யூவியை பார்த்திட அவள் கட்டு இட்ட கைகளால் மேசையில் நகத்தால் ஏதேதோ கோலம் இட்டுக் கொண்டிருந்தாள்.

“ஹோ… உன் கையில அடிபட்டிருக்கு இல்ல? சரி அப்போ நானே ஊட்டி விடுறேன்.” என்று கூறிடவே பல்லவி அதிர்ந்து கண்களை விரித்துக் கொண்டு விழித்தாள்.

அதை விட யூவி ஒரு நிமிடம் சுயநினைவு அற்றுப் போனாள். அவன் அவள் தட்டில் தன்னால் கொட்டப்பட்ட மீன்களின் முற்களை மட்டும் வேறாகப் பிரித்து எடுத்து அவளிடம் நீட்டி “சாப்பிடு…” என்று அவள் முகத்திற்கு நேராக கூறிட அவள் திருதிருவென்று விழித்தாள்.

அதில் கோபமானவன் அவள் தாடையை பிடித்து நசுக்கி அவள் வாய்க்குள் ஒவ்வொரு முற்களையும் வைத்து அடைக்க அவளோ முற்கள் தொண்டைக் குழியில் இறங்கி வலியைத் தர வலியில் “ஹா… ஹா…” என்று திணறித் தவித்தாள்.

என்னதான் ஆதியை அவமானப்படுத்திய விடயத்தில் யூவியின் மேல் கோபமாக இருந்தாலும் அவன் இப்படி அவளை தண்டிப்பது என்ற பெயரில் சித்திரவதை செய்வதை பாட்டியால் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.

கோபத்தில் அவர் “கார்த்திக்… நிறுத்துடா. உனக்கு என்ன பைத்தியமா? அந்த பொண்ணு எப்படிடா முள்ளை சாப்பிடுவா?” என்று கத்திட

தன் விடயத்தில் அவர் தலையிட்டதில் கடுப்பானவன் “சாப்பிடனும். சாப்பிட வெப்பேன்.” என்று அருகில் இருந்த தண்ணீர் சொம்பை தட்டிவிட அதுவோ தூணில் பட்டு உருக்குலைந்து போனது.

“நான் கொடுக்கறததான் அவ சாப்பிடணும். சோ… நான் பண்றத யாரும் எதுவும் கேட்க கூடாது. நீங்களும்… நீங்களும் கூட கேட்கவே கூடாது… கொட் இட்?” என்று வீடே அதிரும்படி கத்திட எல்லாரும் இவன் செய்கையில் ஆடித்தான் போனார்கள்.

மகாலக்ஷ்மி தன் தாயிடம் குரலை உயர்த்தி மரியாதையில்லாமல் கத்தும் மகனை “என்னடா? ஏன்டா இப்படி இருக்கற? பெரியவங்கன்ன மரியாதை சுத்தமா இல்லை. தான் பண்றது தான் சரின்னு கர்வமா சுத்திக்கிட்டு இருக்கற? வெளியில வளர்ப்பு சரியில்லைன்னு என்ன தானடா பேசுவாங்க.” என்று அவன் சட்டையைப் பிடித்துக் கத்தினார்.

“மா… நான் தான் சொன்னேனே. எனக்கு நான் பண்றது தான் சரி. என் விசயத்துல தலையிட்டதாலதான் இவளுக்கு இந்த நிலமை. அதே மாதிரி யாரு தலையிட்டாலும் அவங்களுக்கும் இதே நிலமைதான். பல்லவிய கல்யாணம் பண்ணிக்கணும்னா… நான் பண்றது எல்லாம் பாத்துட்டு சும்மாதான் இருக்கணும்.” என்று சுத்தமாக அன்பு இல்லாத வார்த்தைகளை மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் அவன் சொல்லி விட்டு எழும்ப நாற்காலி அவன் வேகத்தில் பின்னால் வேகமாகச் சென்று சுவரில் இடித்து தன் கால்களை உடைத்துக் கொண்டது.

“எல்லாம் அவன் அக்கா கொடுத்தது. அவள சொல்லனும்.” என்று முனுமுனுத்த பாட்டி தனது காரியத்தை சாதிக்க சற்று அமைதி காத்தார். அவன் நகரப் போக தான் பேச வந்த விடயத்தை பேசாமல் விட்டுவிட்டோமே என எண்ணி அவனை அழைத்தார் பாட்டி.

“டேய்… நில்லுடா ஒரு நிமிசம்.” என்றிட தான் வைத்த அடியை மேலும் நகர்த்தாமல் அதே இடத்தில் நின்றவாறே “என்ன?” என்று கேட்டான்.

“சரி. நாங்க எதுவும் கேட்கல. வந்து உட்கார்ந்து சாப்பிட்டுட்டு போ. பசி தாங்கமாட்ட.” என்று கூறிட அவன் பின்னால் திரும்பி ஒரு நாற்காலியை வேகமாக இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான். மகாலக்ஷ்மி யூவியை இழுத்து தன் பக்கம் நிறுத்தி வைத்துக் கொண்டார்.

அவள் கண்கள் கண்ணீரை பரிசாகத் தர மனதோ அவனைப் பற்றி கேவலமான எண்ணத்தை உருவாக்கிக் கொண்டது. அவனுக்கு உணவை எடுத்து வைக்க. சாப்பிட தட்டில் கையை வைத்தான். இதுதான் சமயம் என்று தன்னுடைய முடிவை அவனிடம் தெரிவித்தார் பாட்டி.

“டேய். உங்கண்ணணுக்கும் மீராவுக்கும் எப்படியாது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன். அதனால நேத்து தான் நல்ல நாள கலண்டர்ல தேடினேன். வார மாசம் பௌர்ணமி அன்னைக்கு ரொம்ப நல்ல நாள். அன்னைக்கே கல்யாணத்தை பண்ணலாம்னு நினைக்கிறேன். நீயும் மூனு வருசத்துக்கு பிறகு இப்போதான் வந்திருக்க. இப்போ போனா மறுபடியும் நீ வர மூனு என்ன? முப்பது வருசம் ஆனாலும் ஆகிடும். அதனாலதான் உன்னோடதும் பல்லவியோடதும் கல்யாணத்தை இவங்க கல்யாணத்துக்கு கூடவே பண்ணிடலாம்னு முடிவு பண்ணிருக்கன். அதனால நாளைக்கே நல்ல விசயத்தை தள்ளிப் போடாம நிச்சயம் பண்ணிடலாம்.” என்று சொல்ல பல்லவிக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்தது. ஆனால் ஆதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

கோபம் உச்ச எல்லையைத் தாண்ட அவன் சடாரென்று எழுந்து, “யாரைக் கேட்டு இப்படி ஒரு காரியத்தை பண்ணுவீங்க?” என்று தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ப்ளேட்டில் கையை ஓங்கி குத்திட அது அவன் குத்தியதில் உடைந்து சல்லி சல்லியாக நொருங்கி மேலே பறந்தது. மேசையில் வைத்திருந்த கறிகள் அனைத்தும் பாத்திரத்தை விட்டு வெளியே வந்துவிட்டன. ஆதி சொன்ன வார்த்தையில் பல்லவி மொத்தமாக அதிர்ந்து போய் விட்டாள்.

கண்ணாடிச் சிதல்கள் கையிலுள்ளே ஏறி இரத்தம் சரசரவென்று அருவி போல் கொட்ட அது எதையும் கணக்கெடுக்காதவன், இன்னும் கோபத்தை குறைத்துக் கொள்ள முடியாமல் மேசையில் இருந்த அனைத்துப் பாத்திரங்களையும் தட்டிவிட அனைத்தும் நொறுங்கிப் பறந்தன. அவனின் கோபம் எல்லையை மீறிச் செல்லவோ விஜயன் தன் மகனைத் தடுத்தி நிறுத்தி

“இப்போ என்னதான்டா உன் பிரச்சினை? சும்மா சும்மா எல்லாரையும் கஸ்டப்படுத்திட்டு இருக்க? தோளுக்கு மேல வளர்ந்த பையன் தோழன்னு சொல்லுவாங்க. அதனால தான் நீ இந்த பொண்ணை இவ்ளோ படுத்தியும் பேசாம இருக்க வேண்டி வந்துச்சு. இனிமேல் ஏதாவது பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன். முதல்ல ஒரு விசயம் பிடிக்கலன்னா சைக்கோ மாதிரி நடந்துக்குறத நிறுத்திட்டு ஒழுங்கு மரியாதையா அமைதியா அடங்கி பேசு.” என்று கூறி அதட்டினார்.

“அத விடுங்க. அவன் கையில ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் கட்டு போட்டு விடுங்க.” என்று பாட்டி பதற்றத்தில் கத்தினார்.

மகாலக்ஷ்மி உடனே சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவன் கையை பிடிக்க, அவன் திமிர் அடங்காமல் தோள் பட்டையை உலுக்கி

“என்ன விடுங்க…” எனக் கத்தி அவர் கையை தள்ளி விட்டான்.

“கொஞ்சம் நேரம் சும்மா இருடா.” என்று விட்டு அவன் கைகளை கட்டாயப்படுத்தி இழுத்து வைத்து மருந்தை கட்டி விட்டார் விஜயன்.

இவை அனைத்தையும் பார்த்த பல்லவியின் கண்களிலிருந்து இருந்து கண்ணீர் வழிந்தது. அவனைப் பிடித்து அமரவைத்து “உன் பிரச்சினை என்ன கார்த்திக்?” என்று அவனிடம் அமைதியாக வினவினார் விஜயன்.

அதில் அவரை முறைத்துக் கொண்டே “எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. வேணும்னா அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. எனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோனுதோ, அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் இந்த வீட்டுல என் கல்யாணத்தை பத்தி யாரும் பேச கூடாது. எனக்கு 30+ ஆகுற வரை யாரும் என் கல்யாணத்தை பத்தி பேச கூடாது.” என்று அவன் முகத்தில் வார்த்தைகளை விட்டெரிந்தான்.

இதில் கார்த்திகாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர “என்னடா? அது வரைக்கும் எங்க பொண்ணு பல்லவி உனக்காக காத்துக்கிட்டு இருக்கணுமோ? உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோனுறது? எங்க பொண்ண எப்போ உன் கையில ஒப்படைக்கிறது?” என்று சத்தமாக அவன் முன்னாள் கத்திக் கேட்டார்.

“நான் சொன்னேனா? இவ என்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு? எனக்காக காத்துட்டு இருக்கனும்னா இருக்கட்டும். இல்லன்னா வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கட்டும். ஐ டோன்ட் கெயார் எபௌட் இட்.” என்று தீர்வாக கூறிவிட்டான். அவன் கார்த்திகாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசியதில் பாட்டியின் கோபத்திற்கு ஆளானான் ஆதி.

“என்னடா? இப்படித்தான் இந்த வீட்டுல ஆதித்யான்னு ஒருத்தன் இருந்தானே. அவனும் ஒருத்திய மனசுல வெச்சிக்கிட்டு கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தான். கடைசில எங்க அத்தனை பேரையும் ஏமாத்திட்டு அலள கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதே மாதிரி உன் மனசுல எவளாவது இருக்காளா?”  என்று கோபத்தில் கத்தினார்.

இதைக் கேட்டவன் அழுத்தமாக அவரைப் பார்த்து “சரி. அப்படியே வெச்சிக்கோங்க. என் மனசுல ஒருத்தி இருக்கான்னு வெச்சிப்போம். அதுல என்ன தப்பு இருக்கு? நான் மேஜர். எனக்கு பதினெட்டு வயச தான்டிடுச்சு. என்னால தனி ஆளா நின்னு யார கல்யாணம் பண்ணிக்கனும், யாரக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு டிஸைட் பண்ண முடியும். மை லைப் மை ரூல்ஸ். சோ… உங்களுக்கு இதுல எந்த முடிவும் எடுக்க ரைட்ஸ் இல்ல. அன்டர்ஸ்டேன்ட்?” என்றான் நிதானமாக.

“டேய் என்னடா உங்க அக்கா பண்ணத நீயும் பண்ண போறியா? அவ திமிரு உன்னையும் தொத்திடுச்சா? அவதான் அப்படி சொல்ல சொல்ல கேட்காம என் வாழ்க்கைய நான் பாத்துக்கிறேன்னு சொல்லி ஒரு அய்யோக்கியன கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீயும் அத பண்ணி எங்களை குழியோட புதைக்கனும்னு நினைக்கிறியா?” என்று மாறிக் கத்தினார் பாட்டி.

“எங்க அக்காவையும் மாமாவையும் பத்தி தப்பா பேச உங்க யாருக்கும் எந்த தகுதியும் இல்லை. அவ சாவுக்கு நீங்களும் காரணம்தான். அவள எவ்ளோ கஸ்டப்படுத்தினீங்க? அதுலயே அவ பாதி செத்துட்டா. அவ பெயர கூட உங்க வாயில இருந்து நான் கேட்க கூடாது.” என்று கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கையை நீட்டி பார்வதி பாட்டியையே எச்சரித்து விட்டான்.

அதில் கோபம் நீடித்த விஜயன் “என்னடா? பெரியவங்களையே கை நீட்டி பேசுற அளவு நீ போய்ட்டியா?” என அவனை அறைய கை ஓங்க அதை தன் கையால் தடுத்து அவரை தீயாய் முறைத்தான் ஆதி.

“இந்த இடத்துல வேற யாரும் இருந்தா, இன்னேரம் என் கை சும்மா இருக்காதுப்பா.” என்று அவர் முகத்தை பார்க்காமலே கூறிட அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

பாட்டி இன்னும் கோபமாக “நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது கார்த்திக். ஆனால் நான் குறிச்ச நாள்ள உனக்கும் பல்லவிக்கும் கல்யாணம். அது மட்டும் நடக்கலன்னா என்னை உயிரோடவே பாக்க முடியாது.” என்று கூறி மிரட்டினார்.

“தாலி கட்ட போறது நான்தான? இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாத்துர்ரேன்.” என்றான் அவனுக்கே உரிய கெத்தில்.

அவன் பேசிய விடயங்களில் முற்றாக மண்ணில் புதைந்து போன பல்லவி திடீரென்று அங்கிருந்து அழுது கொண்டே ஓடிவிட்டாள். அவள் ஏதாவது தவறாக யோசித்து விடுவாளோ என்ற பயத்தில் அனைவரும் அவளின் பின்னால் கத்திக் கொண்டே சென்றனர். இதை அனைத்தையும் கவனித்தும் கவனியாமலும் சென்று விட்டான் ஆதி.

பல்லவி சென்ற வேகத்திலேயே கதவை அடைத்துக் கொள்ள, அனைவரும் அவள் ஏதோ தவறான முடிவை எடுத்துக் கொள்வாள் என பயந்து கதவைத் தட்டி “பல்லவி கதவை திறமா. கார்த்திக்க சம்மதிக்க வெச்சு உன்னையும் அவனையும் சேர்த்து வெக்கிறது எங்க பொறுப்பு.” என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!