காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️

5
(2)

நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள பாராங் கல்லின் மீது தனது ஜேக்கெட்டை முகத்தின் மேல் வெயிலுக்காக போர்த்திக் கொண்டு தன்னை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தவனின் துயிலைக் கலைக்குமாறு யாரோ ஒருத்தி பாறைக்கு அந்தப் பக்கமாக அழுது கொண்டிருக்க அவள் புலம்பலை காது கொடுத்துக் கேட்கலானான்.

“ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்ன பொருத்த வரைக்கும் நான் என் மனசாட்சிக்கு நியாயமாதான் நடந்துக்குறேன். ஆனால் எனக்கு நடக்குற எதுவுமே நியாயமா இல்லையே. முதல்ல அந்த கடவுள் என்கிட்ட இருந்து உறவுகளை பறிச்சிக்கிட்டான். அதுக்கு பிறகு எனக்கு எல்லாமாவே இருந்த என் அப்பா அம்மாவ பறிச்சிக்கிட்டான். அதுவும் பத்தாம என்னோட வாழ்க்கையையும் பறிச்சிக்கிட்டான். நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு இப்படி தண்டனை?” என்று தன் இரு கைகளுக்குள்ளும் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் யூவி.

அழுகை சத்தத்தை கேட்டவன் அவள் யாரென்பதை அறிய கல்லின் அந்தப் பக்கமாக சென்று தன் ஜேக்கட்டை தோளில் போட்டுக் கொண்டவாறு அவளை நோக்கினான். அவள் இவன் வந்திருப்பது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள். அவன் அவள் அழுவதைப் பார்த்து சிறிது நிமிடம் அமைதியாக இருந்திருந்தாலும் அதன் பிறகு பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

அதில் திடுக்கிட்டு அவனை நோக்கினாள் யூவி. அவன் இவள் அழுவதைப் பார்த்து கோரமாக சிரித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் ஒரே நொடியில் அவன் முகம் கொடூரமாக மாறி அவள் அருகில் நெருங்கியவன் அவள் கைகளைப் பிடித்து இழுக்க ஒரே இழுவில் அவன் அருகில் நெருங்கினாள்.

“நிறைய பேர் அழுது பார்த்திருக்கேன். ஆனால் நீ அழும் போது எனக்கு அதுல கிடைக்கிற கிக் இருக்கே.”என்று உச்சிக் கொட்டிக் கொண்டு

“வேற எதுலையும் கிடைக்க மாட்டேங்குது. அதுக்கு என்ன ரீஸன்னே தெரில.”  என்று அவள் அருகே வந்தான்.

“வட் அ சீப் கேரக்டர் யூ ஆர்? அடுத்தவங்க துக்கத்துல சந்தோசம் காண்ற உனக்கு எல்லாம் உணர்வுகளை பத்தி என்ன தெரியும்?” என்று அவள் கடுகடுத்தாள். அவள் மனதில் அவன் அவ்வளவு கீழ் இடத்தில் இருந்தான்.

“இஸ் இட்? சரி சொல்லிக் கொடு. உனக்கு உணர்வுகளை பத்தி நல்லா தெரியும் தானே? அப்போ எனக்கு சொல்லிக் கொடு. டீச் மீ.” என்று கத்திக் கொண்டே அவள் அருகில் நெருங்க அதில் பயந்தவள் தன் அடிகளையும் பின்னால் எடுத்து வைத்தாள்.

“டீச் மீ ஹவ் டூ வெல்யூ பீலிங்க்ஸ்.” என்று கத்தியவனின் கத்தலில் பாறையின் முடிவிற்கே சென்றவள் கால் தடுமாறி விழப் போக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவன் சேர்ட்டை பிடித்து இழுத்ததும் அவனுமே சேர்ந்து நீரினுள் விழுந்தான்.

நீரினுள் வீழ்ந்தவள் நீச்சல் தெரியாமல் மூச்சுத் திணறி தள்ளாடிக் கொண்டிருக்க நீரே அவளை மேலே தள்ளத் தொடங்கியது. அதில் எப்படியோ மூச்சுத் திணறலோடு அவன் கழுத்தை கைகளால் வளைத்துப் பிடித்தாள்.

அவன் அதில் எரிச்சலாகி “ஏய்… இடியட்… லூசா உனக்கு? அறிவில்லை? நீதான் விழுந்து தொலைக்கிறேன்னா என்னையும் ஏன் இழுத்த?” எனக் கேட்டான் அழுத்தமாக.

“சாகுறன்னா ரெண்டு பேருமே சேர்ந்து சேத்துப் போயிடலாம். அதுக்காகத்தான் இழுத்தேன். மரியாதையா என்னக் காப்பாத்து. இல்லன்னா உன்னயும் தப்பிக்க விடமாட்டேன்.” எனக் கூறியவாறே தப்பிக்க வழி இருக்கிறதா என தேடினாள். இப்படியே இருவருக்குள் நெருக்கம் தொடர்ந்திட அவன் அவள் ஈரம் கசிந்த உதடுகளில் பார்வையை செலுத்தினான்.

அவள் நாம் தாழ்ந்து மூழ்கி விடுவோமோ என்கின்ற பயத்தில் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவன் ஆண்மையோ சற்றுத் தள்ளாட்டம் கொண்டது.

இதையம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்து. லப்டப் பதி கிடைக்காததால் அவள் இதழினை பலூனாக மாற்றிக் கொண்டான். தொடர்ந்து அவள் இதழ்களில் நீடித்திருந்த முத்தத்தில் அவள் கண் முழி வெளியில் வந்துவிடும் அளவுக்கு கண்களை விரித்து விரித்து பார்க்க ஒரு பக்கம் இவனை விட்டால் நீரில் அமிழ்ந்து இறந்து விடுவோம் என்ற பயமும் இன்னொரு பக்கம் இவன் செய்யும் செயல் அவனை கண்டம் துண்டமாக வெட்டிப் போடும் அளவுக்கும் கோபத்தை உண்டாக்க அவன் நெஞ்சில் கைகளால் அடித்து அவனை விலக்கிட்டதும்தான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் ஆதி. உடனே விரைந்து  அவளை விட்டு நகர்ந்து தலையைக் கோதியபடி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர முற்பட்டான்.

அவன் செயலில் எரிச்சலை உணர்ந்தவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு எப்படியோ தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் “டேய் லூசு… தனியா விட்டுட்டு போறியேடா. நில்லுடா. காப்பாத்துடா. நான் உன்னை விட மாட்டேன்” எனக் கத்தியவாறே அவன் சேர்ட்டைப் பின்னால் இருந்து இழுத்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஏய்… விடப் போறியாடி இல்லையா? லீவ் மீ… லீவ் மீ…” அவளை கோபமாக தள்ளிவிட்டு சிட்டாய்ப் பறந்து விட்டான் ஆதி.

அவள் எப்படியாவது தப்பித்தால் போதுமென்று கடினப்பட்டு வெளியில் வந்துவிட்டாள். போகும் வழி முழுக்க “தான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம்?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமலே தலையைப் பிய்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ஆதி. அனைவரும் “பல்லவி பல்லவி.” என்று கத்தியவாறு இருக்க பல்லவியின் அப்பா  சிவனேசன் ஆதியைக் கண்டதும் கோபத்தில் ஓடிவந்து அவன் சட்டைய பிடித்து

“என் பொண்ணு உனக்கு என்னடா பண்ணா? அவ மனச இப்படி சொல்லி கஸ்டப்படுத்திட்டியே. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விடமாட்டேன்டா.” என்று அவனது சட்டையைப் பிடித்துக் கத்திக் கொண்டிருந்தார். அவரைப் பிடித்துத் தள்ளி விட்டவன்

“இந்த சேர்ட்ல கை வெக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க. இப்போ என்ன? உங்க பொண்ணு கதவை திறக்கனுமா?” என்று கேட்டவாரே கதவின் அருகில் சென்று காலால் ஒரே உதை உதைக்க இத்தனை பேர் தட்டியும் உடையாத கதவு உடைந்து படாரென்றது. உள்ளே அழுது கொண்டிருந்த பல்லவியைப் பார்த்து அனைவரும் “பல்லவி” என்று கூச்சலிட்டுக் கொண்டு அவளை சமாதானம் செய்தனர்.

ஆதி ஏதோ டீவியில் மூவி பார்த்துக் கொண்டிருப்பது போல் நாற்காலியை இழுத்துப் போட்டு கையை கன்னத்தில் வைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் அவளை சமாதானம் செய்ய நாற்காலியில் இருந்து சடாரென எழுந்தவன் அவர்கள் முன் நின்று “த ட்ராமா வோஸ் வெரி குட். பல்லவிக்கு ஒஸ்கார் அவார்டே கொடுத்துடலாம். என்னாமா நடிக்கிறா? வாட் எ பேர்போமன்ஸ். கண்ணீரே வராம அழுறாளே.” என்று கை தட்டிச் சிரித்தான். அதில் கோபத்தை தனதாக்கிக் கொண்ட பாட்டி

“டேய் நிறுத்துடா. நீ பண்ற அத்தனையையும் சகிச்சிக்கிட்டு நாங்க போக முடியாது. நீ இவ கழுத்துல தாலி கட்டுறன்னா தாலி கட்டுற. அவ்வளவுதான்.” என்று கத்தினார்.

“ஸ்டுப்பிட் விலேஜ் பீப்பிள். சொல்றத புரிஞ்சிக்க முடியாதவங்க. ஐம் ஓல்சோ ரெடி டு பேஸ் வட்ஸ் ஹேப்பனிங்க்.” என்று அழுத்தவாறு விசிலடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

உள்ளே சென்று உடைகளை மாற்றி விட்டு தனது லேப்டோப்பின் மேலே இருந்த அந்த தடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து அதனுள் இருந்த ஒரு மயிலிறகை எடுத்துக் கொண்டு அந்த புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவாறு “எங்க இருக்க? என்ன பண்ற? எப்படி இருக்க? உன் பெயர்? ஊர்? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எதுவுமே தெரியல. ஆனால் ரொம்ப டோர்சர் பண்ற. யாரும்மா நீ? நானும் எவ்ளோ தடவை உன் முகத்தை பாக்கலாம்னு ட்ரை பண்றேன். ஆனால் சுத்தம்…” என்று அந்த மயிலிறகிடம் பேசிக் கொண்டே அதனை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு தூங்கலானான்.

படுத்திருந்தவனின் மனக் கனவில் வந்தது நீர்வீழ்ச்சியில் யூவியுடனான இதழ் முத்தம்தான். அதில் திடுக்கிட்டு எழுந்தவன் “தான் எதற்காக அப்படி செய்தோம்?” என்ற சந்தேகத்திலேயே இருந்தான். ஆனால் அவனுக்கு தான் அவளது கண்களில் கண்ட காதலின் பாதிப்பினாலேயே இப்படி மெய் மறந்து ஒரு காரியத்தை செய்து விட்டோம் என்கிற விடயம் புரியவில்லை.

நியாயமாகப் பார்த்தால் அவன் குணத்திற்கு தான் இப்படி செய்து விட்டோமே என்கின்ற கோபம் அவன் மீதே வந்திருக்க வேண்டும். அப்படி வராததுக்கு காரணம் அவள் தன்னவள் என்று அவனது உள்ளுணர்வுகள் கோபத்தை உண்டாக்கவில்லையோ என்னவோ.

திடீரென அவன் சிந்தனைகளைக் கலைக்குமாறு ஆதியின் அறைக்கதவை உரிமையோடு திறந்து கொண்டு உள்ளே வந்த ரித்தேஷ் கதவை மீண்டும் அடைத்துக் கொண்டான். வந்த வேகத்தில் “சேர்…” என்று அழைக்க

“நீ வந்தத யாரும் பாக்கலல்ல?” என்று கேட்க

“இல்ல சேர். நான் சுவரால குதிச்சுதான் வந்தேன். யாரும் பாக்கல.” என்றான் மரியாதையுடன்.

“சரி. சிட் தெயார்.” என நாற்காலியைக் காட்டிவிட்டு விடயத்தை கூற ஆரம்பித்தான்.

“காவ்யா சாவு சாதாரணமா நடந்த சூசைட் இல்லை. அது ஒரு ப்ளேன்ட் மேர்டர்.” என்று கூறினான் தெளிவாக.

“சேர்… அதுதான் தெரிஞ்ச விசயமாச்சே. அத கண்டு பிடிக்க தானே நீங்க இங்க வந்திருக்கீங்க? ஆனால் ஏதாவது ஹின்ட் கிடைச்சதா?” என்று வினவினான் ரித்தேஷ்.

“இந்த வீட்டுல இருக்குறவங்களுக்கும் காவ்யா சாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. எனக்கு கிடைச்ச விசயங்களை வெச்சி பார்க்கும் போது காவ்யாவ தனி ஒருத்தன் கொன்னுருக்க மாட்டான். நிறைய பேர். நிறைய பேர் அவ சாவுக்கு பின்னாடி இருக்காங்க.” என்று கூறிட

“என்ன சேர் சொல்றீங்க? இது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அதிர்ந்து போய் கேட்டான் ரித்தேஷ்.

“பொய்ன்ட் நம்பர் வன். காவ்யா ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை. சத்யா செத்த பிறகே அவ தைரியமா இருந்தா. அப்படியானவ காரணமே இல்லாம சூசைட் பண்ண எல்லாம் மாட்டா.”

“செகன்ட் பொய்ன்ட் அவ சாகுறதுக்கு ஒரு நாள் முன்னாடி எனக்கு கோல் பண்ணி ஆதி டக்குன்னு வா. நான் ஒரு விசயத்தை கண்டு பிடிச்சிருக்கேன். ஆனால் முக்கியமான விசயம் உடனே கிளம்பி வான்னு சொன்னா. ஆனால் அடுத்த நாளே கோல் பண்ணி வராதன்னு சொன்னா. திரும்ப வான்னு சொன்னா… அவ அவளோட முடிவுல எப்போவுமே உறுதியாவே இருப்பா. ஆனால் அன்னைக்கு ஏன் மாத்தி மாத்தி பேசினான்னு எனக்கு கூட டவ்ட்டா தான் இருந்திச்சு. அடுத்த நாள் அவ செத்த அன்னு அவ செத்து போன நேரத்துக்கு எனக்கு கோல் பண்ணிருந்தா. ப்லைட் டேக் ஆனதால நான் அவ கோல அட்டென்ட் பண்ணல. அப்போ நான் யூ. எஸ் இருந்து இங்க வரதுக்கு இடையிலதான் என்னமோ நடந்திருக்கனும்.”

“தேர்ட் பொய்ன்ட் அவ சொன்ன மாதிரி அவ ரூம்ல எந்த டொக்யூமன்டும் இல்ல. அந்த டொக்யூமன்ட்ஸ் எங்க போச்சு?”

“போர்த் பொய்ன்ட் அவ லெப்ட் ஹேன்டட். சோ அவ ஹேன்ட் கட் பண்ணா ரைட் ஹேன்டதான் கட் பண்ணிருக்கனும். ஆனால் எப்படி லெப்ட் ஹேன்ட கட் பண்ணிக்கிட்டா?”

“பிப்த் பொய்ன்ட். அவ ஏன்  சூசைட் லெட்டர்ல என்ன யூ. எஸ் போகணும்னும்… இன்னும் நாலு வருடத்துக்கு இந்த கன்ட்ரிலயே இருக்கக் கூடாதுன்னு சத்தியம் பண்ண சொன்னா? அப்டின்னா, அந்த கொலைகாரனுக்கு நான் இங்க இருக்கக் கூடாதுன்னு ஒரு ஆசை. ஆனால் நான் காவ்யா செத்து இன்னும் நாலு வருடம் முடியல. அதற்கு முன்னாடியே இங்க வந்திருக்கேன். சோ அவனுக்கு என்னால ஒரு தொல்லை இருந்துட்டே இருக்கும். சோ அவன் கண்டிப்பா என்னை தேடி வருவான்.”

“சிக்ஸ்த் பொய்ன்ட். இந்த சூசைட் லெட்டர்ல இருக்குறது அவளோட ஹேன்ட் ரைட்டிங் மாதிரி இல்ல. அவளோட கொலேஜ் நோட்ஸை எடுத்துப் பார்த்தேன். இந்த எழுத்துக்கும் அந்த எழுத்துக்கும் ரொம்ப டிப்ரன்ட்ஸ். சோ இதுலயே தெரிது இது ப்ளேன் பண்ண ஒரு மேர்டர்னு. இந்த லெட்டர்ல இருக்குற கையெழுத்து யாரோடதுன்னு கண்டு பிடிச்சா மொத்த கொலைகாரனுங்களையும் பிடிச்சிடலாம்.” என்று தன் மொத்த திட்டத்தையும் அவனிடம் கூறினான்.

“நீங்க அதுக்கு இந்த வீட்டுல இருக்குறவங்க கூட நல்லா நெருங்கிப் பழகணும் சேர். சொல்றன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க அவங்க சொல்றத கேட்கணும். அப்போதான் உங்க மேல சந்தேகம் வராது.” என்ற தன் யோசனையைக் கூறிவிட்டுச் சென்றான்.

அவன் அந்த கொலைகாரன் யாரென்று யோசித்துக் கொண்டே வெளியில் வர எதிரில் வந்தவனை கவனியாமல் பல்லவி தன் புத்தகங்களை சரி செய்தவாறே வர ஆதிக்கும் எதிரில் வந்தவளை தன் யோசனை மறைத்துவிட இருவரும் ஒருவர் மேல் ஒருவர் முட்டிக் கொண்டனர்.

அவன்தான் மரமாய் தடுமாறாமல்தான் நின்றிருந்தான். அவள்தான் கீழே விழுந்து விட்டாள். அவளது புத்தகங்களில் இருந்த குறிப்புப் பேப்பர்கள் பறக்க அனைத்தையும் பாய்ந்து பாய்ந்து எடுத்தாள் பல்லவி. அவள் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்க அவனுமே கீழே மன்டியிட்டு அவற்றை எடுத்துப் பார்த்தான்.

அப்போதுதான் ஒன்றைக் கவனித்தவன் பல்லவியின் எழுத்து காவ்யாவின் தற்கொலைக் கடிதத்தில் இருந்த எழுத்தைப் போலவே இருக்க அவசரமாக ட்ரௌசரினுள் இருந்த காவ்யாவின் தற்கொலைக் கடிதத்தை பல்லவி அறியாதவாறு எடுத்து அவள் நோட்டில் வைத்து ஒப்பிட்டு பார்த்ததும் இரண்டு எழுத்துக்களுமே ஒன்றாக இருந்தன.

அடுத்த நிமிடம் பல்லவியுடன் பாட்டியின் முன்னாள் நின்றிருந்தான். அனைவரையும் விசில் அடித்து கூப்பிட வீட்டிலுள்ள அனைவருமே இவன் எதற்கு இப்போது இப்படி செய்கிறான் என்ற சந்தேகத்தில் அங்கு குவிந்தனர். என்ன நடக்கின்றது என புரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க

“நான் பல்லவிய கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம் தெரிவிக்கிறேன். நாளைக்கே கல்யாணம்னு சொன்னா கூட நான் ரெடி. ஏன்? இப்போ தாலிய கட்ட சொன்னா கூட கட்டுறேன். எவ்வளவு சீக்கிரமா கல்யாண ஏற்பாட பண்ணணுமோ அதை பண்ணிடுங்க.” என்று கூறி விட்டான்.

இவன் பல்லவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றதும் அத்தனை பேரும் சந்தோச வெள்ளத்தில் திளைத்திருந்தார்கள். ஆனால் இவனின் தந்திரப் புத்தியை யாரும் அறிய மாட்டார்கள். பல்லவி தான் கண்ட கனவு நினைவாவது என்று தெரிந்ததும் புமியிலேயே இல்லை. வீட்டில் அனைவருக்கும் பல்லவி பிடித்தவளாக இருக்க அவள் வெட்கப்படுவதை பார்த்து அனைவரும் அவளை கிண்டல் செய்து அவளை துரத்தி விளையாடினார்கள். அவளும் சந்தோசமாக வீட்டை சுத்தி ஓடித் திரிந்தாள். அவர்கள் கிண்டல் செய்வதில் இன்னும் வெட்கப்பட்டவள்,

“பாட்டி பாருங்க. எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பண்றாங்க.” என்றதும்,

அவளை தானும் கிண்டல் செய்யும் முகமாக “இப்போவே நிறைய வெட்கப்படாதடி. மிச்சம் மீதி வை. கல்யாணத்தன்னைக்கு தேவைப்படும்.” என்று கூறி அவருமே கட்சியில் சேர்ந்து கொண்டார்.

இவை அனைத்திலும் உள்ளே கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் வெளியில் அதனைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று ட்ரௌசரினுள் இருந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸ்மைலி பந்தை கசக்கி தன் கோபத்தை தனித்துக் கொண்டான் ஆதி. பாட்டி இனிப்பை அள்ளிக் கொண்டு வந்து ஆதியின் வாயில் திணித்து

“என் பேரனுக்கு நல்ல புத்திய கொடுத்துட்ட கடவுளே. என் நம்பிக்கை வீணாகல.” என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.

அவனுக்கு இனிப்பை உண்டாலும் அது கசப்பான சுவையையே தந்தது. சிரிக்க மனது வராமலே சிரித்துக் கொண்டிருந்தான். தன் திட்டம் நிறைவேறியதை நினைத்து ஒருபக்கம் சந்தோசமாக இருந்தாலும் அவள் தன் தாய் போல் இருந்த அக்காவின் சாவுக்குக் காரணமாகியதை நினைத்து  கோபம் தலைக்கேற அதில் கண்ணும் மண்ணும் தெரியாமல் அந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் சென்று,

“பல்லவி…” என்று அண்ட சராசரமே அதிரும்படி கத்தியவனின் விழிகள் கோபக் கனலை கக்க அதன் சூட்டில் கண்கள் கண்ணீரை வெளியிட்டது. பல்லவியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவன் கொலை வெறியில் தன் கண்களால் பஸ்பம் செய்திருந்தாலும் அவன் போக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து பல்லைக் கடித்துக் கொண்டவாறே எரித்து சாம்பலாக்கினான்.

“எனக்கு இந்த உலகத்திலையே பிடிக்காதது நம்பிக்கை துரோகம். ஆனால் அதை நீ எனக்கே பண்ணிட்டல்ல? உனக்கு நரகம்னா என்னன்னு காட்டுறேன். நீ என்ன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழனும்னு நினைக்கிறல்ல? ஆனால் ஏன்டா அப்டி ஒரு ஆசை நம்ம மனசுல வந்திச்சின்னு நீ தினம் தினம் துடிக்கணும். இது காவ்யா மேல சத்தியம்.” என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

இங்கு நடப்பது அனைத்தும் விசித்திரமான உணர்வை யூவியினுள் உருவாக்க தனது அறையில் தலையைத் தேய்த்துக் கொண்டவாறு ஏதோ யோசனையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

“என்னடி? இப்படி உட்கார்ந்து ஏதோ மலையப் பிடிக்கிற மாதிரி யோசிச்சிட்டு இருக்க? ஹ்ம்?” என்று அவள் அருகில் கால்கள் இரண்டையும் மடித்து கட்டிலில் அமர்ந்து கொண்டு கைகளால் கோலம் போட்டுக் கொண்டே யோசனையில் மூழ்கிருக்கும் தன் நண்பியை பார்த்து வினவினாள் அபி.

“அது இல்லடி. ஆடு தானாவே வந்து தலைய கசாப்பு கடக்காரன் கிட்ட கொடுத்து வெட்ட சொல்லுதேன்னு யோசிச்சேன். ஒருபக்கம் சிரிப்பா இருந்தாலும் இன்னோரு பக்கம் பாவமாவும் இருக்குடி.” என்றாள் பல்லவியை நினைத்தவாறே.

“யார பத்திடி பேசுற? பல்லவிய பத்தியா?” என்று யூவியின் தோளில் கை வைத்தாள் அபி.

“வேற யாரப் பத்தி பேசனும்னு கேட்குறேன்? அந்தப் பொண்ணு என்னடி லூசா? இவன போய் காதலிக்கிறேன்னு சொல்றா.” என்று வாந்தி எடுப்பது போல் பாவனை செய்தாள்.

“அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு. நாம என்னடி பண்ண முடியும்?” என்று யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்றவாறு ஒரு எதிர்வினையை கொடுத்தாள் அபி.

“ஆனால் நான் விடமாட்டேன். அவங்க கல்யாணத்தை நிறுத்தனும். ஒரு அப்பாவிப் பொண்ணு அவன போல ஒருத்தன் கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறத என்னால பாக்க முடியாது. அதனால எனக்கு ஒரு ப்ளேன் சொல்லேன்.” என்றாள் ஒரு முடிவோடு.

“என்னடி? வந்தியா… இருந்தியா… சாப்டியா… தூங்கினியா… குடும்பத்தை சந்திச்சியா… போனியான்னு இருக்கனும். அத விட்டுட்டு ஏற்கனவே ஒரு பொய்ய சொல்லி அத சமாளிக்க தெரியாம சமாளிச்சிட்டு இருக்குறோம். இதுல நீ அவன் விசயத்துல தலையிட்டன்னு கடுப்புல இருக்கான். திரும்பவும் அவன் கல்யாணத்தை நிறுத்துறேன்னு ஆரம்பிச்சிடாதடி. அவளா போய் கிணத்துல விழுறேன்னு சொல்றா. ஏன்டி அவளை காப்பாத்திட்டு நீ கிணத்துல விழ நினைக்கிற?” என்று கும்பிடு போட்டாள்.

“நீ என்ன சொன்னாலும் நான் என் முடிவ மாத்திக்கவே மாட்டேன். அவங்க கல்யாணத்தை நிறுத்துறோம்.” என்று வீர வசனம் பேசிக் கொண்டே எழுந்து விட்டு வெளியே சென்றாள் வீரமாக.

“இவ என்ன இப்படி சொல்றா? போச்சு போச்சு எல்லாமே போச்சு. கார்த்திக் தலையை பிடிங்கி தலைகீழா நாட்ட போறான்.”  என்று பயந்த விழிகளுடன் தனியாக புலம்பிக் கொண்டாள் அபி.

வெளியில் வந்தவள் கைகளை வேகமாக ஆட்டி திமிர் பார்வையுடன் நடந்து வர அருகே முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் “யூவி அக்கா…” என்று கத்திக் கொண்டே அவளிடம் ஓடி வந்தன.

“யூவி அக்கா, நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஏன்னா கார்த்திக் மாமாவுக்கும் பல்லவி அக்காவுக்கும் கல்யாணம் நடக்க போகுதுல்ல? அதுதான்.” என்று குழந்தைகள் கூறினார்கள்.

ஆனால் நிவேதிதா எனும் பெயர் கொண்ட நான்கு வயதான காவ்யாவின் புதல்வி மாத்திரம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கைகளைக் கட்டியவாறு அமர்ந்திருந்தாள்.

அவளை நோக்கிய யூவி “என்னங்க? நீங்க ஏன் இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்கீங்க? ஏதாவது ப்ரோப்ளமா?” என்று அவள் உயரத்திற்கு அமர்ந்து குழந்தைகள் போலவே கண்களை சிமிட்டிக் கேட்டாள்.

“ஹா… யூவி ஆன்டி. எனக்கு கார்த்திக் அங்கிள் பல்லவியை கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல. அதுதான்.” என்றாள் குழந்தை மொழியில் சினுங்கலாக.

“ஏன் உங்களுக்கு பிடிக்கல?” என்றாள் வெகுளித்தனமாக மூஞ்சை வைத்துக் கொண்டு.

“ஏன்னா கார்த்திக் அங்கிள எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் பல்லவிய சுத்தமா பிடிக்காது. உங்களை பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்சவங்க ரெண்டு பேருதான் கல்யாணம் பண்ணிக்கணும். நீங்க கார்த்திக் அங்கிள கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டாள் யாதும் அறியாப் பச்சைக் குழந்தை தலையை சாய்த்துக் அழகாக.

“நீங்க கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” எனும் வார்த்தை அவள் உள் உணர்வுகளை துளைத்தது. அவளின் நினைவுகள் நீர்வீழ்ச்சியின் அருகே அவன் கொடுத்த இதழ் முத்தத்தில் சென்று நின்றது. அந்த நிகழ்வை நினைக்க நினைக்க தேகம் சிலிர்க்க காதலின் தாக்கத்தினால் தானாகவே புன்னகை அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டது.

சரியாக அவளின் கனவுகளை கலைக்கும் படியாக நிவி அவளை உலுக்கி திரும்பவும் “சொல்லுங்க நீங்க கார்த்திக் அங்கிள கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டதும் உடலும் உயிரும் உணர்வுகளைத் தாண்டி வேறு எங்கோ பயணிக்க தானாகவே எழுந்து சிலை போல் நடந்து தன் அறைக்குச் சென்றாள்.

ஏதோ தூக்கத்தில் நடப்பது போல் நடந்து வருபவளை பார்த்த அபி, அவள் பெயரைக் கூறி “யூவி… யூவி…” என அழைக்க காது கேட்காதது போல் நடந்து சென்றாள்.

அவள் காது முழுக்க “நீங்க கார்த்திக் அங்கிள கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று நிவி கேட்ட வார்த்தைகளே மறுபடி மறுபடி எதிரொலித்துக் கொண்டிருந்தன.

“என்னாச்சு இவளுக்கு?” என்று அவள் செல்வதைப் பார்த்தவள் அவள் முன்னே வந்து நின்று கை முகத்திற்கு நேராக அசைக்க அது கூட தெரியாமல் காதல் நினைவில் தன்னை முழுதாகக் கலக்க விட்டிருந்தாள் யூவி. அபி அவள் இனிய காதல் இம்சையை நீள விடாமல் அவள் கையைப் பிடித்து இழுத்து உணர்வு பெறச் செய்தாள்.

“என்னடி? என்னாச்சு? இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?” என்று கேட்கவும்தான்

“ஹா…” என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் அதே போல் நடந்தவளைப் பார்த்த அபி உதற்றை பிதற்றிக் கொண்டாள்.

வெளியில் இருந்து ஈரம் கசிய நீர் சொட்ட சொட்ட வெறிபிடித்து வெற்றுடம்புடன் நடந்து வந்தான் . அவன் உடம்பிலிருந்த காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உள்ளே வந்தவன் செயல் மகாலக்ஷ்மியை பயம் கொள்ளச் செய்யதது. ஆதி வேக வேகமாக வந்து இத்தனை வருடமாய் பூட்டி வைத்திருந்த காவ்யாவின் அறையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைக்குமாறு ஒரே உதைதான் விட்டான். அறைக் கதவு உடைந்து சிதறியது.

இதில் இன்னும் அதிர்ச்சியாகிய மகாலக்ஷ்மி “விக்ரம் அப்பா…” என்று கத்திக் கொண்டே விஜயனைத் தேடி ஓடினார். அவர் சென்று கணவரை அழைத்து வர பாட்டியும் ஆதியின் செயலில் கோபம் கொண்டு அவனை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய அவன் எதையும் பொருட்படுத்தாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.

உள்ளே சென்று அங்கிருந்த காவ்யாவின் அத்தனை புகைப்படங்களையும் எடுத்து வந்து நடு முற்றத்தில் வீசி எறிந்தான். அனைவரும் அவனின் செயலில் தள்ளாடி நின்றார்கள். அவன் பெற்றோலை எடுத்துவந்து அந்த புகைப்படங்களின் மேல் ஊற்றிக் கொண்டிருந்தான். இந்த சம்பவத்தை கண்டதும் அனைவரின் மனமும் படபடத்தது.

கோபமான விஜயன் அவனை “பளார்…” என்று அறைந்துவிட அறைச் சத்ததம் அந்த வீடெங்கும் எதிரொலித்தது. அவனை அறைந்ததும் ஒரு தீப் பார்வையை அவரை நோக்கி செலுத்தினான். அவன் பார்வையில் அவரும் சற்று நிலை தடுமாறிப் போனார்.

“டேய் கார்த்திக். போதும். இதுக்கு மேல நிறுத்தினா உனக்கு நல்லது இல்லன்னா அவ்ளோதான்.” என்றார் பாட்டி கோபமாக. எதையும் கருத்தில் கொள்ளாதவன் தீக் குச்சியைக் கொழுத்தி மகாலக்ஷ்மியை ஒரு பார்வை பார்த்தான். யூவி அருகில் நின்ற நிவியின் கண்களை மூடிக் கொண்டாள்.

கோபம், பயம், வெறுப்பு, வலி, பரிதாபம் என அத்தனை மனநிலையில் மகாலக்ஷ்மி தன் மகனை கண்டித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனை “பளார்… பளார்…” என்று மாறி மாறி படு வேகமாக அறைய ஆரம்பித்துவிட்டார்.

“டேய்… ஏன்டா இப்படி பண்ற? அவ நம்ம வீட்டு சாமிடா. இப்படி பண்ணாதடா.” என்று கத்திட அது அவன் காதுகளுக்கு எட்டியதோ உடனே அவன் செய்யும் காரியத்தை நிறுத்தி விட்டவன் மகாலக்ஷ்மியை அழுத்தமாக பார்த்தான்.

“என்ன சொன்ன? சாமியா? இந்த பாசமெல்லாம் அவ இருக்கும் போது எங்க போச்சு? அவ இருக்கும் போது அவளோட அருமை தெரியல. இப்போ வந்து சாமின்னு சொல்ற? அதுதான் அவள தலை மூழ்கிட்டு அவ என் பொண்ணே இல்லன்னு சொன்னேல்லம்மா? இப்போ வந்து பொண்ணு, சாமின்னு சொல்ற. வட் நோன்ஸென்ஸ் இஸ் திஸ்?” என்று கேட்டான் வெற்றுப் புன்னகையுடன்.

“ஏன்டா இப்படி எங்களை வார்த்தையால கொல்லுற? சரி… நாங்க அவளுக்கு பண்ணது பெரிய பாவம்தான். ஆனால் இந்த பச்சைக் குழந்தைக்கு நான் சோறு ஊட்டிவிடுறதே அவங்க அம்மா படத்தை காட்டிதான்டா. அவளுக்காக இப்படி பண்ணாதடா.” என்று அழுதார் நிவியை பார்த்துக் கொண்டே.

“ஹோ… அம்மா படத்தை காட்டிதான் சோறு ஊட்டுறியாமா? சரி… இனிமேல் அவ அவளோட அப்பா படத்தை பார்த்து சோறு சாப்பிடட்டும்.” என்றான் நிவியை கருத்தாக பார்த்து.

அவன் பேசிய வார்த்தைகள் பாட்டிக்கும் ஏனைய அத்தனை பேருக்கும் தீராத வலி உண்டாக பாட்டி “என்ன சொன்ன? அவ அப்பாவா? யாருக்கு யாருடா அப்பா? அவனைப் பத்தி பேச உனக்கு எவ்ளோ தைரியம்? அதுவும் என் முன்னாடியே. அவன் பெயரை இந்த வீட்டுல சொன்ன… உன்னை கொன்னுடுவேன்.” என்று கூறிக் கொண்டே அடிக்க கை ஓங்கிவிட்டார்.

பாட்டி மேல் அவன் வைத்திருக்கும் மரியாதையினால் அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தான். இருந்தாலும் “அப்படியா? ஏன்? ஏன் நான் அவன் பெயர சொல்லக் கூடாது?” என்று கேட்டவாறே நிவியின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன்

“உன்னோட அம்மா பெயர் என்ன?” என்று கேட்டிடு அவள் தலையை வருடினான் பாசமாக.

“காவ்யா.” என்றது குழந்தை நிதானமாக.

“சரி… உன் அப்பா பெயர்?” என்று ஆதி கேட்டதும் எதுவும் தெரியாது முழித்தாள். அவள் பார்வையே தெரியாது என்ற பதிலைக் கூறியது.

“யாராவது உன் அப்பா பெயர் என்னனு கேட்டதில்லையா?” என்றதும்

“இல்லை. எஸ்.ஆர். நிவேதிதா. அவ்வளவும்தான் எனக்கு தெரியும்.” என்றது பச்சைக் குழந்தை.
குழந்தையின் வார்த்தைகளில் வலித்தது என்னமோ அவனுக்குத்தான். இன்னும் கோபம் ஏறிட கண்கள் சிவந்தன. பாட்டியிடம் சட்டென்று திரும்பியவன்

“ஏன் பாட்டி? ஏன்? ஏன் இவ்ளோ மனிசத் தன்மையே இல்லாம நடந்துக்கிறீங்க? (அவ மைன்ட் வொய்ஸ் – நீ மட்டும் யூவிக்கிட்ட மனிச தன்மையோடதான் நடந்துக்கிறீயா? 🙄) ஒரு குழந்தைக்கு பெத்த அப்பா பெயரை சொல்லாம வளர்த்திருக்கீங்களே. உங்களுக்கு மனசாட்சி இல்ல? (உனக்கு இருக்கா?) அவன் நல்லவனோ கெட்டவனோ அது ரெண்டாவது விசயம். முதல்ல அந்த குழந்தைக்கு தான் அம்மா யாரு அப்பா யாருன்னு தெரிஞ்சிக்கிற ரைட்ஸ் இருக்கு. ஆனால் நீங்க? இவ்ளோ சீப்பா அவ அப்பாவ பத்தி எதுவுமே தெரியாம வளர்த்திருக்கீங்க? அவளுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணதுக்காக எங்க அக்கா கூட நீங்க பேசவே இல்லை. அவளுக்கு நான் சப்போர்ட் பண்ணதால என்னையும் வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிட்டீங்க. மூனு வருசமா உங்க யார் மூஞ்சையும் நான் பாக்காததுக்கான காரணம் அதுதான். தனிமை எவ்ளோ கொடூரமானது தெரியுமா? நான் அத அனுபவிச்சி இருக்கேன். ஏன்டா மனசாட்சி இல்லாம நடந்துக்குறன்னு கேட்குறீங்கல்ல? என்ன மனசாட்சி இல்லாதவனா மாத்தினதே நீங்கதானே. நீங்க பண்ண பாவம்தான் என்ன மனசாட்சி இல்லாதவனா மாத்திருச்சு. என்கிட்ட உண்மையான அன்பு காட்ட ஒருத்தி இருந்தா… அவ போய்ட்டா. அதுக்கு காரணம் நீங்கதான். அந்த கோபம்தான் என்ன இப்படி எல்லார் மேலையும் எரிஞ்சு விழ வைக்கிது. வாழ்க்கைய எவ்ளோ சந்தோசமா வாழ்ந்தேன் தெரியுமா? என்ன போல உலகத்துல எவனும் சந்தோசமா வாழ்ந்து இருக்க மாட்டான். ஆனால் என் இருபத்தொரு வயசு வரை. அதுக்கு பிறகு நான் அனுபவிச்ச தனிமைதான் என்ன இப்படி கொடூரமா மாத்திடுச்சு. இவ்ளோ நாளும் இல்லாத பாசம் இப்போ எங்க இருந்து பொத்துட்டு வழியுது பாட்டி? ஏன்னா இவள கல்யாணம் பண்ண நான் வேணும்ல? அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் நீங்க என்கிட்ட இவ்ளோ அன்பா இருக்குற மாதிரி நடிக்கிறீங்க. இல்லன்னா என்னை திரும்பி கூட நீங்க பாத்திருக்க மாட்டீங்க. எவ்ளோ செல்பிஸ் பாட்டி நீங்க?” என்று வாய்விட்டே கூறிவிட்டான். கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

புறங்கையால் கண்களைத் துடைத்து குழந்தையின் பக்கம் திரும்பியவன் “உங்க அப்பாவை பத்தி தெரிஞ்சிக்கணுமா?” என்றான் ஒரு முடிவோடு. குழந்தையுமே “ஆம்.” என வேகமாகத் தலையாட்டிட

இதுதான் சந்தர்ப்பம் என்றவன் “உங்க அப்பா பெயரு… சத்ய ராம்.” என்று கத்த அவன் குரல் அந்த வீடு முழுக்க எதிரொலித்தது.

அந்தப் பெயரைக் கேட்ட அனைவரது காதுகளுக்கும் சங்கு ஊதும் சத்தமே கேட்டது. அனைவரது ஈரல்குலையும் நடுங்கியது. அந்த பெயரைக் கேட்டால் இவர்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்ய நினைக்கும் அத்தனை பேருக்கும் நடுக்கம் பிடிக்கும்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!